Monday, December 6, 2010

ஓவர் சீனும் ஓகே சீனும்

[[ஆபீஸ்ல வேலை இல்லாம போரா இருக்கு மக்கா, அதான் இந்த கதைய சுட்டுருக்கேன் நீயும் அனுபவிடே  மக்கா ]]
ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்த்ச்சி, ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது  தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருக்க, திருடனை பார்த்த நாய் குறைக்காமல் கம்முன்னு சும்மா இருந்திச்சு.
சரியா சோறே போடுறது இல்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குறைக்கவில்லை. அதை பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குறைச்சு முதலாளிய  எழுப்புவான்னு  பாத்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த ஆரம்பிச்சிது.
சத்தம் கேட்டதும் திருடன் ஓடி விட்டான்.
சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திரிச்ச சலவை தொழிலாளி ஒரு கட்டைய எடுத்து பளார்னு கழுதை தலையில ஒரே அடி கூறு கெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதைய திட்டி விட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபீஸ்ல என்ன வேலை கொடுத்துருக்கோ அதை மட்டும்தான் செய்யணும்,
ஓவரா ஸீன் போட்டா இப்படித்தான்.

இந்த கதை மற்றொரு கோணத்தில்.....
கழுதை கத்தியதும் எழுந்த சலவை தொழிலாளி, கழுதை சும்மா கத்தியிருக்காது காரணமாத்தான் கத்தியிருக்கும் என்று எழும்பி பார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியது என புரிந்து கொண்டான்.
அடுத்த நாள் கழுதைக்கு வகை வகையான சாப்பாடு போட்டான்.
நாயை கண்டு கொள்ளவே இல்லை.
கழுதையோட ஆர்வக் கோளாறும், விசுவாசமும் முதலாளிக்கு பிடித்து விட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யுறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதைய செய்ய வைத்தான். நாய் செய்து  கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல் சுமத்தப் பட்டது, நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதைய பார்த்து சிரித்து கொண்டிருந்தது, வேலை செய்து அலுத்து போன கழுதை இப்போது வேறு வேலைக்கு C V [அப்ளை] அனுப்பிகிட்டு இருக்கு..........

நீதி : ஆபீஸ்ல ஓவரா ஸீன் போட்டா இப்படியும் நடக்கலாம்.
[[அட மக்கா....... கவர்மெண்ட்லதான் இப்பிடின்னா, உங்க ஆபீஸிலும் இப்படியா.....]]
[எங்கயோ படிச்சது, எழுதிய நண்பருக்கு நன்றி]

5 comments:

  1. வடை வடை ..! nan than first

    ReplyDelete
  2. //வடை வடை ..! nan than first//


    வடை இதோ வாங்கிட்டு வாரேன்....

    ReplyDelete
  3. second one is suitable to me, now it is 9.00 pm in ksa, 7.30 pm everybody left i am only working.

    ReplyDelete
  4. //நீதி : ஆபீஸ்ல என்ன வேலை கொடுத்துருக்கோ அதை மட்டும்தான் செய்யணும்,
    ஓவரா ஸீன் போட்டா இப்படித்தான்.///

    ஹி ஹி ஹி ..!!

    ReplyDelete
  5. //i am only working.//
    ஐயோ பாவம்.....:]]

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!