Tuesday, July 31, 2012

உலகின் மாவீரன் வேலுத்தம்பி....!!!

நாஞ்சில் நாட்டு தமிழனின் வீரம்....!

கப்பம் கட்டச் சொன்னான் ஆங்கிலேயன். ‘‘முடியாது’’ என்று எதிர்த்தான் தளவாய் வேலுத்தம்பி.அவனை அழிக்க படையெடுத்து வந்தனர் பரங்கியர். எதிர்த்தான். போரிட்டான். எதிரிகளை ஓடஓட விரட்டினான். அந்த நாஞ்சில்நாட்டுத் தமிழனின் வீரம் கண்டு அஞ்சினர் வெள்ளையர்...



எதிர்த்துப் போரிட துணிவின்றி,சதிவலை விரித்தனர்.காட்டிக் கொடுப்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்தார்கள்.கருங்காலிகள் காட்டிக் கொடுத்தனர்.அதனால் ஒரு மாவீரனின் சரித்திரம்,துன்பியல் சரித்திரமாகிப்போனது நம் துரதிர்ஷ்டம்தான்!

ஆம்! சுற்றிவளைத்துவிட்டார்கள் கோழைகள். தன்னிடம் தோற்றோடி-யவர்கள்; அவர்கள் கையிலா சிக்குவது? தமிழனின் மானம் தடுத்தது. தன் தம்பியை அழைத்தான். தன் வாளைக்கொடுத்து தன் தலையை வெட்டச் சொன்னான்.அண்ணன் தலையை தம்பி வெட்டினானா? அதற்குமுன் யார் இந்த வேலுத்தம்பி..........? 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள தாழைக்குளம்தான் வேலுத்தம்பி பிறந்த வீர பூமி. குஞ்சு மயிற்றுப் பிள்ளை - வள்ளியம்மைக்கு 1765-ல் பிறந்த வீரக்குழந்தை அவர்.

மன்னர்களை மீறி திவான்கள் அதிகாரம் செலுத்திய காலம். திருவிதாங்கூர் மன்னராக இருந்த பலராம வர்மாவிடம் திவானாக இருந்தார் சங்கரன் நம்பூதிரி.

வேண்டுமென்றே அளவுக்கு அதிகமான வரிகளைப் போட்டு மக்களை துன்புறுத்தியவர்.ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்ட,மக்களை கொடுமைப்-படுத்தி வரி வசூலித்தவர்.மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.

இங்கிருந்துதான் உதயமானது வேலுத்தம்பியின் புரட்சி வரலாறு. ஆயுதம் தாங்கிய ஒரு படையைத் திரட்டி, மன்னருக்கு எதிராக கலகம் செய்தார். வேலுத்தம்பியின் எதிர்ப்பில் நியாயம் இருந்தது.அதனால் மன்னர் பணிந்தார்.உண்மையறிந்து நம்பூதிரியை நாடு கடத்தினார்.வேலுத்-தம்பியை திவானாக நியமித்தார்.

வேலுத்தம்பி ‘தளவாய்’ என்கிற பதவிக்கு வந்ததும், திருவிதாங்கூர் அரசின் வருமானம் குறைய ஊழலே காரணம் என்று கண்டுபிடித்தார்.



அதனை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டுவந்தார்.ஊழல் செய்தவர்களின் விரல்களையும் கைகளையும் வெட்டினார்.களவு செய்தவர்களின் கால்களை வெட்டினார். இதனால் ஊழல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. வேலுத்தம்பியின் தாயின் வீடு என்பதற்காக குறைத்து வீட்டுவரி வசூலித்த அரசு ஊழியரின் விரல்களைத் துண்டித்ததோடு,அதற்கு சம்மதித்த தன் தாயையே தண்டித்து பலரை அச்சம் கொள்ளச் செய்தவர் வேலுத்தம்பி.

இவரது இந்த ஊழல் ஒழிப்பை மக்கள் ஆதரித்தனர். ஆனால் அதிகாரிகள் எதிர்த்தனர். அவரை வீழ்த்த சதிவேலை நடந்தது. தங்கள் வஞ்சகத்தை வேலுத்தம்பிக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டனர்.அவரைப் பழிவாங்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர் ஊழல் அதிகாரிகள்.

இந்த சமயம், திருவிதாங்கூர் ஆட்சிக்கு பிரிட்டிஷார் வரி விதித்தனர். அதைக் கட்ட முடியாது என்று மறுத்துவிட்டார் வேலுத்தம்பி. கோபம் கொண்ட வெள்ளையர், கப்பத்தை இரட்டிப்பாக்கி எட்டு லட்சம் ரூபாயை அபராதமாக கட்ட நிர்ப்பந்தித்தனர்.அதுவுமில்லாமல் நாட்டின் வருமானத்தில் 80 சதவிகிதத்தை வரியாகக் கட்ட ஆணையிட்டனர்.

ஆரம்பத்தில் வேலுத்தம்பிக்கு உதவுவது போல் வந்த கர்னல் மெக்காலே என்ற வெள்ளை அதிகாரியின் நாடகம்தான் இவ்வளவும்.கப்பம் கட்டாவிட்டால் மன்னரையும் தளவாய் வேலுத்தம்பியையும் சிறைபிடிக்கப் போவதாக அச்சுறுத்தினான். தானே மன்னராக மெக்காலே நடக்க ஆரம்பித்துவிட்டான்.

அதை எதிர்த்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதப் புரட்சிக்குத் தயாரானார் வேலுத்தம்பி. அவரது புரட்சியைக் கண்டு அண்டை நாட்டு மன்னர்களும் ஜமீன்தார்களும்கூட அஞ்சினர்.
வெள்ளையர் படை திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்தது.அவர்கள் நோக்கம் வேலுத்தம்பியைக் கொல்வது. இதை அறிந்த தளவாய் கொச்சியில் உள்ள பிரிட்டிஷ் கட்டடத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றினார்.

அரண்மனையில் மெக்காலேயைக் கொல்ல நெருங்கினார். அங்குள்ள அரண்மனை கழிவறைக்குள் ஒளிந்து, தப்பினான் மெக்காலே.இதனால் மெக்காலேவுக்கு வேலுத்தம்பி மேல் கோபம் அதிகமானது.அவரை உடனே கொல்ல உத்தரவிட்டான்.வேலுத்தம்பியைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசும்,பதவியும் தருவதாக தண்டோரா போட்டான்.

1806 டிசம்பர் 30 ஆம் தேதி ‘குண்டறை’ என்னும் ஊரில் மக்கள்முன் அவர் நிகழ்த்திய வீர உரை,மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக வீறுகொண்டு எழச் செய்தது. ‘குண்டறைப் பிரகடனம்’ என்ற புகழ்பெற்ற இந்த உரையைக் கேட்டு மக்கள் வெள்ளம் போருக்குத் தயாரானது. ஏறத்தாழ ஒரு வருடம் இடைவிடாது போரிட்டும் வேலுத்தம்பியை அடக்கமுடியவில்லை வெள்ளையரால்.இனியும் வேலுத்தம்பியை விட்டுவைத்தால், கிழக்கிந்திய கம்பெனியை முற்றிலும் அழித்துவிடுவார் என பயந்தனர். இதனால் மைசூரில் இருந்தும், சென்னையில் இருந்தும் 1809-ல் கர்னல் லோகர் என்ற கொடூர அதிகாரியின் தலைமையில் பெரும்படை கொண்டு வரப்பட்டது.

பீரங்கிகளும் துப்பாக்கிகளும் இதுவரை இல்லாத அளவு உபயோகப்படுத்தப்பட்டன. கர்னல் லோகர் உதயகிரி கோட்டையைக் கைப்பற்றி போரில் வெற்றி பெற்றதாக அறிவித்தான்.

கயவர்கள் காட்டிக் கொடுக்க, மண்ணடி என்ற ஊரிலுள்ள பகவதி அம்மன் கோயிலில் பதுங்கியிருந்த வேலுத்தம்பியை எதிரிகள் நெருங்கிவிட்டனர்.

ஆங்கிலேயரிடம் பிடிபட அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. எதிரியின் கையில் சாவதைவிட,தன் சகோதரனின் கையில் சாவதை வீரமாக நினைத்தார்.

தன் தம்பியிடம் தன் வாளைக் கொடுத்து தன் கழுத்தை வெட்டச் சொன்னார். சகோதரன் மறுத்துவிட்டான். வேறு வழி இல்லை. தன் கழுத்தைத்தானே வாளால் வெட்டி வீர மரணம் எய்தினார்.அப்போது அவருக்கு வயது 44.வீரமரணமடைந்த வேலுத்தம்பியின் உடலைத் தூக்கிப்போய் கழுவில் ஏற்றி, தங்கள் வெறியை தணித்துக்கொண்டனர் வெள்ளையர்.

தம்பியைக் கைது செய்து தூக்கிலிட்டனர். அவரது அரண்மனையை உழுது ஆமணக்கை விதைத்தனர்.அவரது குடும்பத்தார் பலரை அந்தமானுக்கு நாடு கடத்தினர்.தாய்நாட்டிற்காக வீரமரணமெய்திய வேலுத்தம்பியின் நாட்டுப் பற்றைப் பறைசாற்ற உள்ள ஒரே சாட்சி அவர் வாழ்ந்த வீடுதான். அவர் பயன்படுத்திய ஆயுதங்கள்,கலைப் பொருட்கள் இன்றைக்கும் அவரது வீரத்தைப் பாடிக் கொண்டு இருக்கின்றன.ஆனால் தமிழகஅரசு கண்டுகொள்ளாததால் அந்தவீடு பொலிவிழந்து கொண்டே வருகிறது. அரசு கவனிக்குமா?


டிஸ்கி : முழுப்பெயர் வேலாயுதன் செண்பகராமன் தம்பி.[[இவரது இன்னுமொரு முழுப்பெயர் : இடப்பிரபு குலோதுங்க கதிர்குலத்து முளப்படை அரசரான இறையாண்ட தாளக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன் ஆகும்.


டிஸ்கி : கேரளாவின் தலைநகரில், அதுவும் கேரளா சட்டசபையின் முன்பு வேலுத்தம்பி தளவாயின் திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது என்பது ஆச்சர்யமான விஷயம்.....இந்த தீரமும் தியாகமும் இப்போதுள்ள மலையாளி சேட்டன்களுக்கு எங்கே தெரியப்போகுது...?!!!




டிஸ்கி : தளவாயின் மரணத்திற்கு திருவிதாங்கூர் அரசனின் பங்கும் துரோகமும் உண்டு என்றும் சொல்லப்படுகிறது, உனக்கு பின்னால் பெரும் படைகளை அனுப்புகிறேன் நீ முதலில் போய் யுத்தம் செய் என்று சொன்ன அரசன், தன் வாக்கை காப்பாற்ற வில்லை....! ஆம்...படைகளை அனுப்பவில்லை....அப்புறம் என்ன ஆங்கிலேயனுக்கு அடிவருடினான் கேரளா அரசன்...!


நன்றி : http://nermai-endrum.blogspot.com/2011/02/blog-post_1062.html


Monday, July 30, 2012

சசிகலா தன் கணவரோடு கோலாலம்பூர் சுற்று பயணம்.....!

இரவில் தலையணை மட்டுமே

அறிந்த கண்ணீர் இன்று 

பகலில் குமுறலாக 

வெளியரங்கம் ஆயிற்றே...!


தனிமை சில நேரம் சுகம்

சில நேரம் கொடுமை

இதை உணர்வது 

தலையணை மட்டுமே...!


உறவுகளை பிரிந்து 

அனாதையான நாடோடிகளின்

வாழ்க்கை துணையும்

தலையணை மட்டுமே.....!

-----------------------------------------

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றாலும் இப்படிதான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களின் நிலைமை பரிதாபமாக இருந்தாலும், நாளைய வெற்றி உனக்கே....!
----------------------------------------

சித்திரத்தில் சத்திரம் வரையலாம், சத்திரத்தில் சித்திரம் வரைய முடியாது...! [[சத்திரக்காரன் பிச்சிபுடுவான் பிச்சி]]
----------------------------------------
மதுரைக்கு வழி வாயில் இருக்கு.....

அப்போ வாயிக்கு வழி மதுரையில் இருக்குதா...?
-----------------------------------------
கும்பகர்ணனை யாராவது நேரில் பார்த்துண்டா....? ஆனால்....... நானும் ஆபீசரும், விஜயனும், கவுசல்யா ஜோதிராஜ், ஜோதிராஜ், திவானந்தா சுவாமிகள், ரூபினோ மேடம் எல்லாரும் பார்த்து இருக்கிறோம்....!

முகமூடி கொள்ளைக்காரன் இல்லை இது, நம்ம ஆபீசர்தான் கேரளாவுக்கு கோழிகளை கடத்துபவர்களை விரட்டி பிடிக்க போயிட்டு இருக்கார்.
-----------------------------------------
நம்ம ஆபீசர் அவருடைய செல்போனை யாரிடம் பேச கொடுத்தாலும் துடைத்துதான் கொடுப்பார், அந்த நல்ல பழக்கம் அவருடன் இருந்த எங்கள் எல்லாருக்குமே தொத்திகிச்சு...!!!


----------------------------------------
ராத்திரி சரக்கடித்து விட்டு வந்த நண்பன், "மனோஜ் நான் இப்பவே சாம்பார் வைக்கப்போறேன்" 

"யோவ் அதான் கறி கூட்டு எல்லாம் இருக்கே போயி சாப்புட்டு தூங்கு"

"இல்லை நான் இப்பவே "ஸ்ஸ்ஸ்சாம்பார்" வைக்கப்போறேன்"

"எப்பிடியும் நாசமாப்போ நான் தூங்கப்போறேன்"

அடுத்தநாள் காலையில் அவன் வேலைக்கு போக.....மத்தியானம் சாப்பாட்டுக்கு "அந்த" சாம்பாரை சூடு பண்ணி வச்சுட்டு குளித்துவிட்டு [[இப்போ குளியல் நேரம் மத்தியானம் ஆகிருச்சு]]

 பிளேட்டில் சாதம், கத்தரிக்காய் கூட்டு, தயிரும் எடுத்து வைத்து விட்டு சாம்பாரை ஊற்றினேன்......காய்கறிகளும் அது கூட என்னமோ ரவுண்டா நீளமா கிடப்பதை பார்த்தேன், என்னடா சாம்பார்ல என்னமோ புதுசா போட்டுருக்கானேன்னு பார்த்தால்.....கொய்யால அது "ஆட்டு குடல்" அவ்வ்வ்வ்வ்.....ஒடுலேய் மனோ ஓடு....! [[டேய் பிக்காளி, சரக்கடிச்சா கண்ணுமாடா தெரியலை உஎஜ்ப்ஹ்ஞ்ஸ்ட்க்க்ஜ்ஸ்க்ஷ்ந்ஸ்ந்;கன்சல்...]]

-------------------------------------------------------------
ஹை ஹை ஹை ஹை டாஸ்மாக்கை மூடப்போறாங்களாம், வெட்டி பிளாக்கர்ஸ் என்னமோ சைலண்டா பிளான் பண்ணிட்டு இருக்குறதா  பன்னிகுட்டி மீது தலைவைத்து உறங்கும் "பன்னிகுட்டி"ராம்சாமியின் ரகசிய தகவல் அறிக்கை [[எளவுதுறை ச்சே உளவுத்துறை]]  கசிந்து உருகி உள்ளது...!


------------------------------------------------------------
அடிக்கடி என் பிளாக்கை ஹேக் செய்பவன் யார்....? 

மனசாட்சி : டேய் நாதாரி...... நீயே பாஸ்வேர்டை மறந்துட்டு எங்களை டார்ச்சர் பண்ணுறியா...? எகிப்து மந்திரவாதியை கூட்டிட்டு வந்து அந்த மொராக்கோ பார்ட்டிக்கு சூனியம் வச்சிருவேன் ஜாக்கிரதை.


[[நான் என்ன சொன்னேன், இவரு என்னா சொல்லுதாரு..? பிரியல]]
-------------------------------------------------------------
போட்டோகிராஃப் எக்ஸ்பிஷனுக்கு சென்னை போன விஜயன், மூன்று நாளாக மயக்கம்.......? பின்னே "கிழக்கே போகும் ரயில்" ராதிகாவை பார்த்தே ஆவேன்னுட்டு இப்போ போயி மேக்கப் இல்லாமல் பார்த்தால் சும்மாவா..?!


[[வாய்யா வா....... நீரு சென்னைக்கு வராமலா போவீரு, அன்னிக்கு மேக்கப் இல்லாத சுகன்யாவை காட்டி என்ன பண்ணுறேன் பாரு - மெட்ராஸ்பவன் சபதம்.
------------------------------------------------------------
சந்துல சிந்தும், சிந்துல சந்தும் பாடிட்டு இருந்தவன் எல்லாம் வந்து பேஸ்புக்கை நாறடிச்சாச்சு, இனி என்னவெல்லாம் நடக்கப்போகுதோ...? இங்கே இருந்துட்டு ஒபாமாவுக்கு சவால் விடுறாயிங்கப்பூ....!
-----------------------------------------------------------
சசிகலா தன் கணவரோடு கோலாலம்பூர் சுற்று பயணம்.....!

யோவ்....நான் சொன்னது நடிகை சசிகலாவை...ச்சே நம்மாளுங்க முழுசா படிக்காமலேயே உடனே மேலே மோட்டுவளையை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களே...?!
-----------------------------------------------------------
என் நண்பன் ஒருத்தன் போனில்.....

"நேற்று நல்லா சரக்கடிச்சிட்டு வந்தேன் மக்கா"

"டேய் நேற்றுதான் உனக்கு லீவு இல்லையே...வீட்டில சம்மதிச்சாங்களா..?"

"ஆமாடா...... ஒரு முக்கிய [[நல்லா முக்கு முக்கு]] மீட்டிங் இருந்துச்சு, வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க ஆனால்...?"

"என்ன ஆனால் சொல்லு..?"

"சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேம்டா....வீட்டம்மா சாப்புட்டியாய்யா"னு கேட்டாப்புல இருந்துச்சு, அப்புறமா அழகா அணைச்சு பிடிச்சு பெட்ல கொண்டு போயி படுக்க வச்சாங்க, பெட் கொஞ்சம் தொட்டில் மாதிரி இருக்காப்ல தெரிஞ்சுது, ஆங்...... சரக்கடிச்சதுனால அப்பிடி இருக்குன்னு நினைச்சிட்டே தூங்கிட்டேன்........காலையில எழும்பி பார்த்தா......... டேய்.... நான் "பாத்டப்புல" கிடக்கேண்டா....மண்டையெல்லாம் வீங்கி போயி இருக்கு, உடம்பெல்லாம் வலிக்குது....வீட்டம்மா லேசா கள்ள சிரிப்பு சிரிச்சுட்டு இருக்கா எனக்கு ஒன்னுமே பிரியல மக்கா....?! [[ஹா ஹா ஹா ஹா செத்தான்டா சேகரு]]

Sunday, July 29, 2012

விஜயன் வாங்கி தந்த சிக்கன் கடாய்....!

லீவுக்கு ஊர் வந்தபோது "முதன் முதலாக" விஜயனை நாகர்கோவிலில் சந்திக்க போனபோது, மத்தியானம் ஆனபடியால் வாங்க சாப்பிட்டுட்டு போகலாம்னு வற்புறுத்தி என்னையும் "மாப்பிளை"ஹரீஷையும் அழைத்து சென்றார் விஜயன், நான் என்னவோ முகலாய குடும்ப வாரிசுன்னு நினைச்சாரோ என்னவோ ஒரு ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாராண்ட் கூட்டி சென்றார்.


போயி உட்கார்ந்ததும் என்னய்யா சாப்பிடலாம்னு மெனு'வை பார்க்கும் போதே, பிரியாணி சாப்பிடலாம்னு தோணவே மூவரும் ஓகே சொன்னாலும், விஜயனுக்கு மனசு கேக்கலை, வேற என்ன வேணும் மனோ ஆர்டர் பண்ணுங்க'ன்னு சொல்லிட்டே இருந்தார், சரி ஓகே மக்கா ஒரு சிக்கன் கடாய் சொல்லுங்கன்னு சொன்னதும் ஆர்டர் செய்தார்.

பிரியாணி வந்தது, சாப்பிட்டுட்டு இருக்கும் போதே சிக்கன் கடாய்'யும் வந்தது, சிக்கன் கடாய் எப்படி இருக்கும்னு எனக்கு தெரிந்ததால் விஜயனிடம் கேட்டேன், இதாய்யா சிக்கன் காடாய்...? தெரியலையே என்றார். சர்வரிடம் கேட்டேன் இது சிக்கன் கடாய்"யா...? ஆமா சார் இதுதான் "இங்கே" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்...! சிக்கன் கடாய் கொஞ்சம் ட்ரை"யாக சின்ன சின்ன பீஸாக இருக்கும், ஆனால் இங்கே சிக்கன் லெக் பீஸை முழுசாக "கறிக்குள் போட்டு" கறியாகவே தந்தார்கள்....அட கொய்யால....!!!

பிரியாணியும் நல்லாயில்லை, எப்பிடியோ சாப்பிட்டுட்டு [[அண்ணாச்சி பழம் ஜூஸும் குடிச்சுட்டு]] வெளியே வந்து விஜயனை அன்பாக கடிந்து கொண்டேன், சாப்பாடும் சரியில்லை பில்லும் ரொ.....ம்....ப அதிகம், சின்ன ஹோட்டலுக்கு போயிருக்கலாமே அங்கே சாப்பாடும் நல்லா இருக்குமே மட்டுமில்லாது இலையிலும் சாப்பிடலாமேன்னு சொன்னேன். 

பாவம் விஜயன் முதன் முதலா அடியேனை பார்த்து மிரண்டுட்டார் போல ஹி ஹி [[அவர் அன்பு ரொம்ப பெருசுய்யா]] அப்புறம்தான் மீன்கறி சாப்பாடு ஸ்பெஷல் மெஸ்சை கண்ணில் காட்டினார், அதை நான் பலமுறை சொல்லி இருக்கேன் இல்லையா...? 

சரி சிக்கன் கடாய் எப்படி இருக்கும் போட்டோ கீழே.....

விஜயன் கூட்டிப்போன ரெஸ்டாரண்டில் பரிமாறப்பட்ட சிக்கன் கடாய் கீழே.........[[இது சிக்கன் கடாய் இல்லை, சிக்கன் கறி]] அந்த சர்வர் சொன்னதை நல்லா கவனிங்க..."இங்கே இதுதான் சார் சிக்கன் கடாய்" ஸோ சிக்கன் கடாய் சாப்பிட விரும்புபவர்கள் "முகல்" ஹோட்டலுக்கும் அல்லது பஞ்சாபி ஹோட்டலுக்கும் போவது நல்லது அங்கே "இங்கே இதுதான் சார் சிக்கன் கடாய்" என்று சொல்லமாட்டார்கள்.


விஜயன் கூட பலமுறை சாப்பிடும் போதும் அவரை கவனித்த ஒரு விஷயம் என்னான்னா, நாகர்கோவில் மற்றும் நானும் அவரும் சுற்றுலா செல்லும் போதும் அவர் சாப்பிடும் ஸ்டைலும், திருநெல்வேலி போனால் அவர் சாப்பிடும் ஸ்டைலும் வித்தியாசமாக இருக்கும்...!!!

நாகர்கோவிலில் அவர் சாப்பிடும்போது விரைவாக சாப்பிட்டுட்டு முதல்லயே எழும்பிருவார், அதே திருநெல்வேலியில் ஆபீசர் கூட சாப்பிடும் போது மெதுவாக ரசிச்சு சாப்பிடுவார்...! என்னான்னு கவனித்தேன்.....பாவி.... நாகர்கோவிலில் என்னை பில் கொடுக்க விடாமல் இருப்பதற்க்குதான் அந்த வேகம்னு புரிஞ்சி போச்சு, எம்புட்டோ சொல்லியும் என்னை பில் கொடுக்க விடவே மாட்டார்...!

அதே வேளையில் நெல்லையில் இவர் பாச்சா பலிக்கவில்லை ஹே ஹே ஹே ஹே அங்கே ஆபீசர் பெல்ட்டோடு இருப்பதால் அய்யா அடங்கி பயந்து பர்ஸை வெளியே எடுக்காமல்  மெதுவா ரசிச்சு சாப்புடுறதை கவனித்து ரசித்தேன்...!

ஆனால் ஒரு கெட்ட பழக்கம் என்னான்னா சாப்பிட்டதும் ஜூஸ் குடிக்கனும்னு சொல்லுவார் அவ்வ்வ்வ்வ்வ்வ்.....!
-------------------------------------------------------------------------

படித்ததில் பிடித்தது....!


Thursday, July 26, 2012

நான் சைத்தான் என்றால் நீயும் சைத்தானே.... சரிதான் போடி...!

முன்பு ஒரு நாள் [[பஹ்ரைன்]] நான் சிட்டியில் தங்கி வேலை பார்த்த சமயம்.......என் ரூம் இரண்டாவது மாடியில் இருந்தது, அங்கிருந்து கொஞ்சம் நடந்து ரோட்டில் வந்து நின்றால் எங்கள் கம்பெனி கார் வரும், அதில் ஏறி வருவதும் போவதுமாக இருந்த நேரம்...


அப்போது, நான் ரூமில் இறங்கி கீழே வரும்போதெல்லாம் ஒரு பஹ்ரைனி பெண் என்னை கடந்து நடந்து போவதுண்டு [[பர்தா போட்டிருப்பாள்]] என்னை பார்த்ததும், நான் வலது பக்கமாக வந்தால் இடது பக்கமாக துப்புவாள், நான் இடது பக்கமாக போனால் வலது பக்கமாக துப்புவாள். இது எப்போதும் நடக்கும் தொடர் சம்பவம் என்பதாலும், அர'பி'ச்சி என்பதாலும் அவர்கள் அப்படி செய்தால் கண்டுக்க கூடாது என்ற நண்பர்களின் அறிவுரைப்படி நான் கண்டு கொள்வதில்லை,என்றாலும் என் மனதில் உறுத்தி கொண்டுதான் இருந்தது...!

இது தொடர்கதையாக நடக்கும் போதே ஒரு நாள் என்னோடு ஃபிரன்ட் ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பஹ்ரைனி நண்பியிடம் பயந்து பயந்து இதை சொல்லிவிட்டேன்.

அவள் "ஓ அப்பிடியா...? ஓகே நாளை காலை நீ டியூட்டி வரும் ஒருமணி நேரம் முன்பே நான் உன் ரூமுக்கு வந்து விடுகிறேன், வந்து அவளை நாலு கேள்வி கேக்குறேன் பாரு" என்று கர்ஜிக்க.....

"அம்மாடியோ நீ என் ரூமுக்கா....? வேண்டாம் தாயே வேற வினையே வேண்டாம் அக்கம் பக்கம் இருக்கும் மலையாளிகள் வயிறு எரிஞ்சி என்னை கொளுத்தியே விடுவார்கள் மட்டுமல்ல உன் மாப்பிளை வேற பெட்ரோல் பாம்ப் எரிஞ்சிட்டு ஜெயிலில் இருக்குறான்னு வேற சொல்லிட்டு [[ஷியா]] இருக்கிறாய், நீ என் ரூமிற்கு வந்தது அவனுக்கு தெரிஞ்சா கேஸ் சிலிண்டரையே கொளுத்தி ரூமுக்குள்ளே எறிஞ்சிருவான் ஆளை விடு தாயே"ன்னு அலறுனதை பார்த்து வெடி சிரிப்பு சிரித்தாள்...!

"சரி, எனக்கு இதை மட்டும் சொல்லு, ஏன் எங்களை பார்த்தால் இப்படி துப்புகிறார்கள் உங்கள் நாட்டு காரர்கள் சொல்லமுடியுமா...?  பிளீஸ்" பல நாட்கள் மழுப்பியவாறே கழண்டு கொண்டே இருந்தாள், நானும் அவள் கஷ்டத்தை புரிந்து கொண்டு அப்படியே விட்டுவிட்டேன்.

என்ன நினைத்தாளோ ஒருநாள் அவளே என்னை கேட்டாள்...."மனோஜ், இன்னைக்கும் அந்த கிழவி உன்னை பார்த்து துப்பினாளா..?"

"ஏய் நில்லு நில்லு....அவள் கிழவின்னு உனக்கு எப்படி தெரியும்...? அவள் பர்தா போட்டிருப்பதால் என்ன வயசென்று எனக்கே தெரியல, உனக்கெப்படி அவள் கிழவி என்று தெரியும்...?" என கேட்டேன்.

"[[பலமாக சிரிக்கிறாள்]] இப்போ காலம் மாறிடிச்சு மனோஜ்.....இப்படி துப்புவர்கள் கண்டிப்பாக கிழவியாகதான் இருக்கவேண்டும் காரணம் அவர்களுக்கு உலகம் தெரியாது"

"சரி.....அதைவிடு துப்புவதின் காரணம் சொல்லு...?"

"சைத்தானை பார்த்தால் துப்பிவிடு என்று முன்னோர்கள் சொன்னதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், ஸாரி மனோஜ் நான் ஃபிராங்கா சொன்னதுக்கு"

"ஓ....இட்ஸ் ஓகே....இதுதான் மேட்டரா...? கொய்யால பாகிஸ்தான், பங்களாதேஷ், சிறிலங்கா, இந்தியா மக்களை கண்டால் இவர்களுக்கு சைத்தானாக தெரிகிறார்களா....? அடங்கொன்னியா...."

"ஸாரி மனோஜ், இதுக்கு உனக்கு ஒரு பரிகாரம் சொல்லுகிறேன் அப்படியே செய்து பார்த்துவிட்டு என்ன நடந்துச்சுன்னு என்கிட்டே சொல்லனும், இல்லைன்னா நான் நேரே உன் ரூமுக்கே வந்துருவேன்" என சொல்லி காதில் சொல்லி தந்தாள் அந்த சூத்திரத்தை...! [[நான்கு நாள் டைமும் தந்தாள்]]

நான்கு நாட்களுக்கு அப்புறம்......

"என்ன மனோஜ்...? சொல்லு மேட்டர் சக்சஸ்தானே...?"

"ஹா ஹா ஹா ஹா எஸ் எஸ் சக்சஸ்" என்று கட்டை விரலை காட்டினேன்.

என்னய்யா......உங்களுக்கும் சூத்திரம் தெரியனுமா.....? சொல்றேன்.

அந்த அரபிச்சி வலது பக்கமாக துப்பும் போது நான் இடது பக்கமாக துப்பினேன், அவள் இடது பக்கமாக துப்பிய அன்று நான் வலது பக்கமாக துப்பினேன்..........இதுக்கு அர்த்தமென்ன...? என் நண்பியிடமே கேட்டேன்....அவள் சொன்னாள்...."நான் உனக்கு சைத்தான் என்றால் நீயும் எனக்கு சைத்தான்" என்று பொருளாம்.....ரெண்டே நாளில் கிழவி என்னை பார்த்தால் அப்புறம் துப்புவதே இல்லை....!

என்னங்கடா உலகம் இது...?

Wednesday, July 25, 2012

விவசாய வாழ்வும் என் அம்மாவும்....!

எனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்.......

நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் திரும்பினாலும் ஒன்றாகவே போய் வருவோம், எங்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் நடுவில்தான் அவன் வீடு, பள்ளி போகும் போதும் திரும்பும் போதும் அவன் வீட்டில் இருந்து சற்று விளையாடிவிட்டே செல்வது வழக்கம்.


மகேஷின் அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், எப்போ போனாலும் யய்யா தம்பி சாப்புடுய்யா சாப்புடுய்யான்னு கொஞ்சும், ஆனாலும் நான் சாப்பிட்டதில்லை, இதை என் அம்மாவிடம் அவர்கள் சொல்லக்கேட்டு என் அம்மா பெருமிதம் அடைவதை பார்த்திருக்கிறேன்.


ஒருநாள் பள்ளி விட்டு வரும்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்த படியால் மகேஷின் அம்மா என்னை மழை நிக்கட்டும் தம்பி அப்புறமா போகலாம், இருட்டுச்சுன்னா நானே உன்னை கொண்டு வீட்டில் விடுகிறேன் என சொல்லவும், அங்கேயே இருந்தேன் மழை நிற்பதற்காக.....


சற்று நேரத்தில் நண்பனின் இரு தம்பிகளும் தங்கையும் பள்ளியில் இருந்து வந்ததும், அம்மா சாப்பாடு கொடு என நண்பனின் அம்மாவை நச்சரிக்க தொடங்கினார்கள், அம்மாவுக்கோ சங்கடமாக போய்விட்டது காரணம் என்னை வைத்துகொண்டு அவர்களுக்கு உணவு கொடுக்க முடியாது, எனக்கு தந்தாலும் நான் சாப்பிடமாட்டேன், எனவே பிள்ளைகளை அதட்டி கொண்டிருந்தார்கள்.

எனக்கும் நல்ல பசி போதாததுக்கு அங்கே மணம் பரப்பி கொண்டிருந்த இறைச்சி கறி வேறு இன்னும் ஆசையை தூண்டிக்கொண்டிருந்தது, கண்டுக்காமல் இருந்தாலும் பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்காததாலும், மழை நிற்கிற நிலையில் இல்லை என்பதாலும், மகேஷின் அம்மா என்னிடம் யய்யா கொஞ்சோல சாப்புடுய்யா என பாசமாக கேட்கவும், சரி சொல்லிவிட்டேன்.


அந்த அம்மா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை, தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து எனக்கும் இறைச்சி சாப்பாடு பரிமாறினார்கள், நன்றாக சாப்பிட்டேன்....கொஞ்ச நேரத்தில் மழை நிற்கவே, அதுக்கிடையில் என் அம்மாவும் என்னை தேடி வந்துவிட்டார்கள். இருவரும் கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பினோம்.


வீட்டுக்கு வந்ததும் ஊரில் உள்ள மற்ற நண்பர்களோடு விளையாட போய்விட்டேன், இரவு ஆனதும் அம்மாவின் அழைப்பு சத்தம் கேட்டு வீட்டுக்கு ஓடி வந்தேன், அப்பா வியாபார விஷயமாக தூத்துக்குடி போயி இருந்தார். வீட்டுக்கு வந்ததும், எலேய் தம்பி வா சாப்பிடலாம்னு அம்மா கூப்பிடவும், அம்மா நான் சாப்டாச்சு என்று சொன்னேன்.


"எங்கலேய் தம்பி சாப்பிட்டே...?" 

"மகேஷ் வீட்டுல"

"என்னாது மகேஷ் வீட்டுலையா...? எலேய் இங்கே வா"

"என்னம்மா"

"கையை காட்டுலேய் தம்பி"  என் கையை மோந்து பார்த்த அம்மா ஒன்னும் சொல்லவில்லை மாறாக சாப்பாடு பாத்திரங்கள் [[ பானை, சட்டிகள்]] மூடப்பட்டன உடனே...! என்னை வீட்டுக்கு வெளியே கூட்டிப்போன அம்மா...."எலேய் தம்பி இங்கினையே நில்லு"னு சொல்லிட்டு உள்ளே போனார்கள், நான் பேந்த பேந்த முழித்தபடி நின்றிருந்தேன்.


வெளியே வந்த அம்மா கையில் தண்ணீர் வாளியும் குடம் குடமாக தண்ணீரும் வெளியே வந்தது "என்னம்மா இது...?" சித்த பொறுலேய் மக்ளே" என்று சொன்ன அம்மா........என் டிரஸ்ஸை கூட கழட்டாமல் அம்புட்டு தண்ணீரையும் என் மீது ஊற்றினார்கள். எனக்கு ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருந்தேன்.


அப்புறம் என் துணியை எல்லாம் கழட்டி விட்டு தன் முந்தானையால் துவட்டி விட்டு வேறு துணி மாட்டி விட்டாள். நான் ஒன்னும் புரியாமல் அழுது கொண்டே கேட்டேன் "ஏம்மா இவ்ளோ தண்ணி என் மேலே ஊத்துன...?" "இல்லப்பா தம்பி உன் உடம்புல அழுக்கு இருந்துச்சுப்பா அதான் அம்மா கழுவி விட்டேன்" என்று சொன்னாலும் எனக்கு என்னமோன்னு டவுட் இருந்து கொண்டே இருந்தது, அம்மா கோபமாக இருக்கும்போது ஒன்னுமே பேசமாட்டேன், அம்மா நார்மல் ஆகிட்டா அம்மாவும் எனக்கு குழந்தைதான் எனக்கு சரிசமமாக விளையாடுவாள் என்னோடு...!

அப்புறம் ஒருநாள் இரவு அம்மாவுடன் படுத்து இருக்கும் போது, அம்மா என் முடிகளை கோதிவிட்டு கொண்டு இருக்கும் போது கேட்டேவிட்டேன் [[அம்மா கோபப்படும் பல புரியாத விஷயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்வது இங்கேதான்]] "அம்மா எதுக்கும்மா அன்னிக்கு என்மேல அவ்ளோ தண்ணி ஊத்துன...? அம்மாவின் பதில்.....


"எலேய் தம்பி, அவங்க வீட்டுல மாட்டிறைச்சிதான் சாப்பிடுவாங்க நாம சாப்பிடமாட்டோம் தெரியுமில்ல...?"

"எனக்கு எப்பிடிம்மா தெரியும் அவங்க என்ன இறைச்சி வச்சிருக்காங்கன்னு, சரிம்மா இனி எங்கேயும் சாப்பிடமாட்டேன் சரியா..?"

"தெரியும்ய்யா உனக்கு தெரியாதுன்னு, அதான் அம்மா உன்னை அடிக்கலை புரியுதா...?"

"சரிம்மா நாம ஏன் மாட்டிறைச்சி சாப்பிடமாட்டோம்னு சொல்லும்மா"

"மக்ளே......மாடு நமக்காக உழைத்து போடும் தெய்வம் மாதிரி, அது நமக்கு உழைத்து போடும் அளவுக்கு மனுஷன் ஒருத்தனும் உழைக்க முடியாது, அது நம்மை போன்ற விவசாயிகளுக்கு தெய்வம் போல உழைச்சு போடுது, உழைக்கும் சாமியை யாராவது சாப்பிடுவாங்களா சொல்லு பாப்போம்..?"


"அதான் உன் மீது தண்ணீர் ஊற்றி பிரேயர் பண்ணினேன், இனி எங்கே போனாலும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்னய்யா...?"

"சரிம்மா" [[ ம்ம்ம்ம் நாடோடி வாழ்க்கைக்கு வந்தபின்பு இதையெல்லாம் மறந்து ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன எல்லாம் சுவாக......ஸாரி அம்மா]]

இப்போதும் மும்பையில் இருந்து ஊர் வரும்போது ராத்திரி வெளியே [[என் வீட்டம்மா இருந்தாலும்]] போய் விட்டு சாப்புட்டுட்டேன்னு சொன்னால், கண்டிப்பாக அம்மா கேள்வி கேட்பாள், எலேய் தம்பி மாட்டிறைச்சி சாப்பிடலைதானே தம்பி...? 


என்னதான் அம்மா கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்தாலும், இந்து விவசாய குடும்பத்தில் பிறந்த அந்த சுபாவம் அம்மாவுக்கு இன்னும் மாறவில்லை கால்நடைகள், பறவைகள் மீது அம்மாவுக்கு அம்புட்டு பாசம்...! எனக்காக அம்மா கோழி வளர்த்து வைப்பது உண்டு, லீவுக்கு நான் வரும்போது, அதோ அந்த கோழிதான் உனக்காக வளர்த்துட்டு இருக்கேன்னு சொன்னாலும் நான் வேண்டாம் என்று சொல்லுவேன் என்று தெரிந்தே அம்மா அப்படி சொல்வது உண்டு.

இந்தமுறை அம்மா அதே டயலாக்கை சொல்ல....என் பையன் கேட்டுவிட்டான்....ஓடி விரட்டி பிடித்து பாட்டி இப்பவே இதை எனக்கு குழம்பு வச்சு தாங்கன்னு பாட்டியை பிடித்து கொண்டான்.....எப்பா எப்பிடியோ சமாளித்து அன்னிக்கு ஹோட்டலில் இருந்து அவனுக்கு கோழி கறி வாங்கி கொடுத்து சமாளித்தேன்.

அம்மாவுக்கு மாடு, ஆடு, கோழிகள் என்றால் அம்புட்டு பிரியம் அவைகள் மீது.....இந்த தள்ளாத வயதிலும் ஆடு, கோழிகள் வளர்ப்பது உண்டு, ஆட்டுக்கும், கோழிகளுக்கும் அம்மாவின் பாஷை புரியும், அம்மாவுக்கும் அவைகளின் பாஷை புரியும்.

ஆட்டுக்கு அடிபட்டால் காயத்திருமேனி எண்ணெய் போட்டு தடவி விடுவாள், ரெண்டு நாளைக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெயும் தடவி தேய்த்து விடுவாள், எனக்கு இப்போதும் அது ஆச்சர்யமாக இருக்கும்...! ஆட்டு குட்டிகளுக்கு அம்மா கையால் கஞ்சி எடுத்து வாயில் ஊட்டினால்தான் சாப்பிடும், நாங்கள் ஊர் போனால் என் மகள் கையால் மட்டுமே சாப்பிடும் அந்த குட்டிகள், வேறு யார் கொடுத்தாலும் சாப்பிடாது...!

இப்போதும் மாட்டிறைச்சி சாப்பிட்டாலோ, பார்த்தாலோ என் அம்மாவின் நினைவு வந்து போகும்.........அந்த குளிரில் குடம் குடமாக தலையில் ஊற்றப்பட்ட தண்ணீரும்....!

Sunday, July 22, 2012

குடி குடும்பத்தையும் கெடுக்கும்....!

எழுதனுமா வேண்டாமா.......இல்ல.....எழுதனுமா வேண்டாமான்னு பலநாட்கள் நான் யோசிச்சு யோசுச்சு, எழுதிருவோம்னே மனசாட்சி சொன்னதால் இவைகளை சொல்கிறேன் உங்களுக்கும் கண்டிப்பாக இந்த அனுபவங்கள் இருக்கலாம் அதை பின்னூட்டத்தில் பகிரலாம்.....இதனால ஒருத்தன் திருந்தினாலும் அது இந்த பதிவுக்கு வெற்றிதான்.[[இது வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கும், உள்நாட்டில் குடும்பத்தை பிரிந்து வேலை விஷயமாக வெளி மாநிலங்களில் இருப்பவர்களுக்கும்]]

ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன்.....

சிலகாலங்களுக்கு முன்பு [[பஹ்ரைன்]] என்னோடு ஒரு நண்பன் ரூமில் தங்கி இருந்தான்.....பகலில் வேலைக்கு போகும் போதும் இடையில் கிடைக்கும் சாப்பாட்டு நேரத்திலும் ஆபீசியல் விஷயம் இல்லாமல் வேறு யாருக்கும் அவன் போன் பண்ணி நான் பார்த்ததில்லை....!


ரொம்ப டீசண்டாக இருப்பான், எல்லாரிடமும் நல்லா பேசி பழகுவான்.....ஆனால் டியூட்டி முடிந்து ரூம் வந்ததும் அவனுக்கு சரக்கு வேணும், நான் ஹோட்டலில் முக்கியமான பொறுப்பில் இருப்பதால் சரக்கு ஃபிரியாக ரூமுக்கே வந்து விடும் என்பதால் அவனுக்கு செலவு இல்லாமல் போனது, ரூம் வந்ததும் துணிகளை மாற்றி கொண்டு உடனே சரக்கடிப்பான்....டேய் மெதுவா குடிய்யா எல்லாமே உனக்குத்தானே இருக்கு பைய்ய குடின்னு சொன்னாலும் சர்ர்ர்ர்ர் என குடித்து விட்டு செல்போனை கையில் எடுத்து கொண்டு வெளியே போய்விடுவான்.

இது தொடர்கதையாக இருக்கவே ஒருநாள் இவனை பின் தொடர்ந்து போனேன் ஸாரி முதலில் ஒரு பெங்காலி பையனை அனுப்பினேன்...அவனும் போய்விட்டு வந்து சொன்னான் பாய் அவன் என்னமோ சத்தமாக போனில் பேசுகிறான் ஊருக்கு போன் பேசுகிறான்னு நினைக்கிறேன் என்று சொல்லவும், நானும் விட்டு விட்டேன்.

பின்னும் பலநாட்கள் இது தொடர்ந்தது, என்னன்னா இவன் போன் பேசிட்டு ரூம் வந்ததும் அவன் போன் அலறும் மறுபடியும் வெளியே போவான்...வருவான்.....மறுபடியும் போன் அலறும்....... வெளியே போவான் வருவான்.....சிலநேரங்களில் போனை சைலண்ட் செய்து கட் பண்ணுவான்....ஆக எனக்கு தூங்க முடியாது...!

நடுராத்திரியும், அதிகாலையிலும் போன் வந்து கொண்டே இருக்கும்.....இவன் மட்டையாகி இருப்பான்....! அடுத்தநாள் பகலில் ஒரு சத்தமும் இருக்காது, அப்படியே போன் வந்தாலும் இவன் எடுக்காமல் கட் பண்ணுவதை பார்த்து இருக்கிறேன்.

அப்படிதான் ஒரு நாள் [[ஓணம் திருநாள்னு நினைக்கிறேன்]] சரக்கடித்துவிட்டு வெளியே கிளம்பினவனை மடக்கி பேசி என்னோடு அமரவைத்து மங்களம் பாடினேன்.....மூனு பெக் உள்ளே போனதும், என்னோடு பெசிக்கொண்டிருந்தவன் திடீரென போனை எடுத்தான்...!


என் முன்னிலையில் ஊருக்கு போன் பண்ணினான், மனைவின்னு நினைக்கிறேன் பாவிமகன் எம்புட்டு கெட்ட வார்த்தையில் திட்டனுமோ அம்புட்டு போட்டு திட்டுகிறான், அவள் குடும்பம் இதை கேட்கும் பட்சத்தில் தூக்கு போட்டுதான் செத்து இருக்கும் அம்புட்டு திட்டு....!

டேய் நல்ல நாளும் அதுவுமா ஏண்டா இப்பிடி பேசுறேன்னு கேட்டதுக்கு, நீ சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாதுன்னுட்டு வெளியே [[ரூம் பக்கத்தில்]] நின்னு திட்டிட்டு இருந்தான். 

எல்லாநாளும் வெளியே போன் பண்ண போனவனுக்கு குளிர் விட்டுபோச்சு, அதிலிருந்து தைரியமாக ரூமில் இருந்தே போன் பேச ஆரம்பித்து திட்டி கொண்டிருந்தான்......இவன் அம்மாவையும் அப்பாவையும் தம்பியையும் கூட விடாமல் ஏசிட்டு இருந்தான்.

உதாரணம் : இவன் : ஹலோ என்ன பண்ணிட்டு இருக்கே...? [[யோவ் சுகநலம் விசாரிக்கப்புடாதா..?]]

மனைவி : சாப்புட்டுட்டு இருக்கேன்.

இவன் : ஏண்டி என்னைவிட உனக்கு சாப்பாடுதான் முக்கியமா.....?  தே.............மவளே.......அப்பிடியே வெளியே வந்து என்னோடு பேசுடி....௩௯துக்[இவன்[ஓயஜிஎஜோவ்ன்ப்;க்ஜ்ன்கேம்;ல.....[[பாவம் சாப்பாட்டை விட்டுட்டு வெளியே வந்துருக்கும் போல]]


இவன் : ஹ்க்வ்ன்வுஹோரிஜ்கிஎரோத்;பசப்.....என்னை சாப்புட்டியான்னு கேட்டியாடி நீ.......ஜ்வ்ட்விவொவ்வ்வ்வ்ப்வ்ஜ்வொஇவ் என் சம்பாத்தியத்தைதானடி திங்குறே க்ன்ஜ்ப்வ்ன்ச்ட்ன்வ்ன்ப்வ்க்'ல்க்வ்.....

எதிமுனையில் அழுகை சத்தம்.......

இவன் : அம்மாகிட்டே குடுடி க்ன்ஜ்த்வ்வ்ஜ்ட்ப்வ்து'வ்ப்ட்வ் மவளே....

அம்மா : நல்லா இருக்கியாப்பா...?

இவன் : ட்ச்ப்ஜ்ன்த்வ்ஜ்ன்;ஜ்ச்ன்வ்ச்ன்வ்க்ச்வ்ஸ் மக்களே நீ எப்பிடி பட்டவள்னு எனக்கு தெரியாதா ஜ்ப்ம்வ்ச்ல்வ்ன்சல்வ்ச்வ்ன்....போனை உன் மாப்பிளைகிட்டே [[அப்பா]] குடு......


அப்பா : [[பயத்துடன்]] சுகமா இருக்கியாப்பா....?

இவன் : பட்டி கழிவ............மோனே.........நீ மட்டுமாடா தண்ணி அடிப்பே கொய்யால நானும் அடிப்பேண்டா ஜ்ஹொஇவ௮௬௯ய்தெர்கொஇ.....

எதிர்முனை போனை கட்டாக்க....இவன் தொடர்ந்து போன் அடிக்க அங்கே யாரும் போனை எடுக்காமல் ஆத்திரம் ஆகிறான்......பக்கத்து வீட்டுக்கு போனை அடித்து போனை அவன் பொண்டாட்டிக்கு கொடுக்க சொல்லி.....திட்டோ திட்டுன்னு திட்டுகிறான்......![[ஊரே சிரிச்சிருக்கும்]]

எனக்கோ ஒன்னும் புரியலை......கோவம் வேற வந்துகிட்டே இருக்கு, இது பலநாட்கள் தொடர்ந்தது நான் எவ்வளவோ சொல்லியும் இவன் கேட்கவே இல்லை.....சரக்கடிச்சதும்தானே இவன் போன் பண்ணுகிறான்னு தெரிஞ்சதும் சரக்கு ஒன்னும் ரூமில் வராமல் நான் தடை செய்தேன், ஆனாலும் வெளியில் இருந்து காசு கொடுத்து வாங்கி சரக்கடிக்க ஆரம்பித்தான்.


ஒருநாள் அவன் மனைவி வீட்டைவிட்டு விட்டு உன் குழந்தையையும் நீயே வைத்துகொள் என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டுக்கு ஓடியே விட்டாள்...ஆனாலும் இவன் தன்னுடைய அம்மாவுக்கு போன் பண்ணி டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தான் தினமும், மனைவி வீட்டில் விஷயம் தெரிந்து போனை குளோஸ் பண்ணி வைத்து விட்டார்கள்.

அடுத்து ஒருநாள் இவன் தம்பிக்கு போன் பண்ணுவதை கவனித்தேன்....

இவன் : ஹலோ தம்பியா...? டேய் நீ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே சிங்கப்பூர்ல இருந்து அஞ்சே வருஷத்துல கோடி கணக்குல பணம் உனக்கு எப்பிடி வந்ததுன்னு எனக்கு தெரியும்டி.....ந்ட்ன்வ்கட்ம்க்ட்ன்ப்க்ட்ப்ம்ப்ள்ட்ம்'ப்க்ல்ட்ச்ல்க்ப் களவாண்ட பணம்தானே அது...? நான் இப்பவே போலீஸ்ல சொல்லப்போறேன் பாக்குறியா...?


தம்பி : போடா உன்னால் ஆனதை பாத்துக்கோ இனி மறுபடியும் எனக்கு போன் செய்தே ந;சவ'க்வ்னத்வாடக்ஜ்வல்ச்ன்வக்ன்வ் கொன்னேபுடுவேன்...

இவன் : டேய் நாயப்பயலே நீ மட்டும்தான் தண்ணி அடிப்பியா கொய்யால நானும் குடிச்சிருக்கேண்டா நாயே....

தம்பி : நாய்பயலே [[பச்சை பச்சையா திட்டிக்கிறாங்க]] இருடா உன்கூட பேசணும்னா அரை பாட்டல் அடிச்சாதான் முடியும் இரு....[[போய் பாட்டலில் இருந்து கிளாசில் சரக்கு ஊற்றப்படுகிறது...குடித்து முடித்துவிட்டு]] ஆங் இப்போள் பறைடா பட்டி.....

இவன் : ௯௬௭ய்த்வ்க்ஸ்ட்வ்ப்ம்  ன்ல்க்ச்ட்ன்ப்க்ச்ட்வ்......இருடா நீ மட்டும்தான் வீட்டில் வாங்கி வைத்து [[ஸ்டாக்]] குடிப்பியா கொய்யால நானும் வச்சிருக்கேன் இருடா [[இவனும் கிளாசில் சரக்கை ஊற்றி குடிக்கிறான்]] 

அய்யோ அய்யோ என்னா சத்தம் என்னா சத்தம்......பொறுக்க முடியாமல் சத்தம் போட்டேன். போனை கட் பண்ணினான் ஆனாலும் தம்பியின் போன் இரவு முழுவதும் அலறிக்கொண்டே இருந்தது, இவன் வழக்கம் போல மட்டை....!


இப்படி இருக்க ஒருநாள் என் நண்பர்கள் என்னை பார்க்க வந்ததால் ஒளித்து வைத்திருந்த சரக்கை எல்லாம் கொண்டு வந்து வைத்து நண்பர்களை எந்த பிராண்ட் வேணுமோ எடுத்து சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு இவனையும் சாப்பிட சொன்னேன் [[என் போதாத காலம்]]

நண்பர்களோடு ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போதே இவனையும் பேச்சுக்கு இழுத்து இவன் போன் பண்ணாமல் பார்த்து கொண்டாலும், மூனு பெக் உள்ளே போனதும் போனை அடித்தே விட்டான் ஊருக்கு........!

திட்டோ திட்டு...... அலறல பேச்சு......நெஞ்சில் அடித்து அடித்து சபதம் வேறு....... எகிறு எகிறுவென எகிறினான்....நண்பர்கள் மிரண்டு விட்டார்கள். அவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ஊருக்கு திட்டோ திட்டுன்னு திட்டிகிட்டே வெளியே போய் விட்டான்....நண்பர்களும் வேதனையோடு போனார்கள்....எப்பிடிடா இவன்கூட தங்கி இருக்கேன்னு ஆச்சர்யப்பட்டுட்டே போனார்கள்.

அவன் வரும்வரை காத்திருந்தேன், வந்தான்.....நாலு அப்பு அப்பினேன், காலில் விழுந்தான் ஆனாலும் மனசு கேட்கவில்லை...உன்னிடம் எத்தனை நாள் சொல்லி இருக்கேன் ௮௯௮௬த௯௩-ய்த௨து௩௦திதி௩ தண்ணி அடிச்சுட்டு ஊருக்கு போன் பேசாதேன்னு கேட்டியா கொய்யால இப்பவே ரூமை காலி பண்ணு இல்லைன்னா உன்னை கொன்னே போட்டுருவேன்னு கத்தி விட்டு...போன் பண்ண வேண்டியவிங்களுக்கு [[மேலிடம்]] செய்தி சொல்லி உடனே செக்யூரிட்டி வந்து அவனை வேறு இடத்திற்கு மாற்றினார்கள்...! [[எம்புட்டுதான் பொறுக்க முடியும் எனக்கும் காலையில் டியூட்டி போகனுமா வேண்டாமா]]

கொஞ்சநாள் கழித்து வேறே கம்பெனிக்கு போனவன் அதும் பிடிக்காமல் ஊர் போய்விட்டான், அநேகம் நாள் கழித்து அவன் ஊர்காரன் ஒருவனை கண்டபோது இவனை பற்றி விசாரித்தேன், இவன் இப்போது ஊரில் பஸ்சில் கண்டக்டராக [[அரசு பஸ் இல்லை]] வேலை செய்வதாகவும் [[இவன் அக்கவுண்டன்ட்]] மனைவி இவனை பிரிந்து வேறு கல்யாணம் கட்டி கொண்டதாகவும்...ஊரில் நாயை விட கேவலமாக திரிவதாகவும் சொன்னான், அன்று இரவு துக்கத்தில் எனக்கு தூக்கமே வரவில்லை...!


தப்போ ரைட்டோ எனக்கு தெரியாது....இப்போ அல்ல......... எப்போதுமே என் நண்பர்களுக்கு நான் சொல்வது, வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் தண்ணி அடித்து விட்டு ஊருக்கு போன் பேசாதீர்கள் என்பதே....நண்பர்களாக நம்மை புரிந்து கொள்பவனா இருந்தா பரவாயில்லை...ஆனால் சொந்த பந்தங்களுக்கு போன் பண்ணவே கூடாதுன்னு சொல்வேன் காரணம், நாம் இங்கே கஷ்டப்பட்டு உழைக்கிறோம் அது யாருக்கு நம் குடும்பத்துக்குதானே...?

நான்தான் உழைத்து உங்களுக்கு சாப்பாடு போடுகிறேன் என்ற திமிர் வரும்போது, தண்ணி வேற உச்சத்தில் இருக்கும் வேளையில் அவர்கள் நல்லபடியாக பேசினாலும் உனக்கு வேறுமாதிரி தெரியும் ஸோ வார்த்தைகள் தடிக்கும் ஆனால் அடுத்தநாள் நீ மறந்து போவாய்.....நீ பேசிய வார்த்தைகள் அவர்களை கொல்லும்.....உன் மதிப்பும் போகும் என்பதே....ம்ம்ம்ம் எவன் கேட்கிறான்...?

இவன் மட்டுமில்லை இன்னும் அநேகரை நான் பார்த்ததுண்டு, சரக்கடிச்சதும்தான் பொண்டாட்டி ஞாபகம் வரும் இவனுகளுக்கு, அவளை வம்புக்கு இழுத்து திட்டுவதை நான் கண்டு மனம் நொந்து போவதுண்டு....!

இன்னும் சிலர் உண்டு ரெண்டு பெக் அடித்து விட்டு செல்லமா செல்லம் என்று கொஞ்சி விட்டு......... சுதி ஏற ஏற வெறி பிடித்து திட்டுவதையும் பார்த்திருக்கிறேன்...!

வெளிநாட்டில் குடும்பத்தை பிரிந்திருக்கும் நண்பர்களானாலும் சரி குடும்பத்தோடு இருப்பவர்கள் ஆனாலும் சரி, தயவு செய்து தண்ணி அடித்துவிட்டு ஊருக்கு போன் பேசாதீர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------

இன்னுமொரு முக்கியமான விஷயம் சொல்லுகிறேன், குடும்ப பொறுப்புள்ளவர்கள் கவனிக்கவும்...........

ஊரில் தன் மகன் குடித்து விட்டு ஊதாரியாக சண்டை போட்டு கலவரம் பண்ணுகிறான் என்று நினைத்து, வெளிநாடு அனுப்பிவிட்டால் திருந்திவிடுவான் என நினைத்து ஒரு [[அநேக]] தந்தை தன் மகனை பஹ்ரைன் அனுப்பினார் ஆனால் அவனோ........?

ஒருநாள் நான் என் ரூமில் இருந்து டீவி பார்த்து கொண்டிருக்கும்போது வெளியே பலமான சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது......பக்கத்து ரூமில் ஏதோ பார்ட்டி நடக்கிறது என நினைத்தேன். ஆனால் சிரிப்பு பலமாக கேட்கவே வெளியே வந்தேன்....

அங்கே அந்த மகன் தனியாக குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு பலமாக தனியாக சிரித்து கொண்டிருந்தான்......அருகில் சென்ற நான் என்னய்யா என்னாச்சு தனியா உக்காந்து சிரிச்சுட்டு இருக்கேன்னு கேட்டேன்....இன்னும் பலமாக சிரித்தான்.....!

அண்ணே.....என் அப்பன் ரொம்ப நல்லவன் அண்ணே....... ரொம்ப நல்லவன்.......ஏன்னா நான் ஊருல குடிச்சுட்டு ஜாலியா திரிஞ்சேன் அதுக்கு என் அப்பன் தந்த தண்டனையை பாருங்க அண்ணே.....குவாட்டர் குடிச்சுட்டு திரிஞ்ச என்னை பாட்டல் பாட்டலா குடிக்கும் இடத்துக்கு அனுப்பினதும் அல்லாமல் வகை வகையான குட்டிகளை ருசிக்கவும் அனுப்பி இருக்கான் அண்ணே.....போங்க போயி என் ரூமுக்குள்ளே பாருங்க அண்ணே என்றான்.

நானும் அதிர்ச்சியாக ரூமை திறந்து பார்த்தேன்.....ரஷ்யன் அழகிகள் மூன்று பேர் அட்டகாசமாக உள்ளே தண்ணி அடித்து கொண்டிருந்தனர்.....! சின்ன பையன் ச்சே நொந்து போனேன்...!


பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் கொஞ்சமாவது திருந்த வேண்டும் எனில் பஹ்ரைன், துபாய் அனுப்பாதீர்கள், சவூதி அரேபியா அனுப்புங்கள் ஏதாவது பலன் கிடைக்கலாம்...!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!