Monday, May 5, 2014

மச்சம் வந்தால் நல்லதாம் அப்போ மரு வந்தால் ?

கழுத்துல ஒரு ரெண்டு மூன்று  மரு இருந்து தொல்லை பண்ணிகிட்டே இருந்துச்சு, பெண்களின் தலை முடி வைத்து கட்டினால் உதிர்ந்து விடும் என மனைவி சொல்ல...அக்கா பொண்ணுங்க எல்லாம் ஆளாளுக்கு முடியை பிடுங்கி கட்ட...
டைட் பண்ணும் போது முடி அறுந்து விடும், மறுபடியும் கட்டுவார்கள் அறுந்து விடும், அப்போது அங்கே வந்த மனைவியின் தோழி, பெண்கள் கூந்தல் முடி அல்ல, குதிரை முடி வைத்து கட்ட வேண்டும் என்று சொல்ல...


ஒருநாள் நல்ல மப்பில் நண்பர்களுடன் காரில் போகும்போது கட்டிப்போடப்பட்ட ஒரு குதிரை நிற்க, நண்பர்களிடம் விஷயத்தை சொன்னதும் கார் ரிவர்சில் வந்தது, இப்போ குதிரைகிட்டே போயி முடி தான்னு கேக்கவா முடியும் ?


எனக்கு பயம், நான் மாட்டேன் என்று சொல்லி விட்டேன், நமக்கு நண்பனுகளுக்கா பஞ்சம் ? ராஜூ நான் போறேம்டான்னு போன வேகத்துல குதிரைகிட்டே மிதி வாங்கிட்டு அதே வேகத்துல கார்ல வந்து விழுந்தான்...
கார் பறக்க...நண்பன் ஆத்தே"ன்னு உக்கார...அவன் மிதி வாங்கினதா முக்கியம் ச்சே முடி போச்சேன்னு நாங்கள் அங்கலாயிக்க...சக்சஸ் என்று கத்தினான் திடீர்ன்னு, என்னடான்னு பார்த்தால் அவன் கையில குதிரை முடி...!


மிதியோடு சேர்த்து வாலில் முடியை பிடிங்கிட்டான், அன்றோடு அவன் பெயர் "முடி புடுங்கி" ஆகிப்போனது, நண்பேண்டா !


அந்த முடியை கட்டி ஒவ்வொரு மரு'வா விழுந்துருச்சு, இதை மருவில் கட்டியதும், பிளட் சர்குலேஷன் நிக்குறதுனால அழுகி காய்ந்து நமக்கே தெரியாமல் உதிர்ந்து விடுகிறது !
-----------------------------------------------------------------------------------------

 வெளியே இருந்து நல்லா சரக்கடிச்சுட்டு ஒரு அரபி எங்க ரிஷப்சன் வந்து நின்னுகிட்டு, அம்மினிங்ககிட்டே "எனக்கு உங்க ஹோட்டல் ரூம் மினி பார்'ல இருந்து ரெண்டு பாட்டல் சிவாஸ் ரீகல் வேணும்"


"சர் அது ஹோட்டல் ரூம்ல தங்குறவங்க மட்டும்தான் யூஸ் பண்ணமுடியும் "

"இல்லை உங்க மானேஜரை கூப்புடு, முதீர் முதீர் என்று அலற [[ முதலாளியையும் மானேஜரையும் இவர்கள் இப்படிதான் அழைப்பார்கள்]] நான் வெளியே வந்ததும் சந்தோஷமானவனாக...
 "நீ இந்தியாவா ?" [[ஏன் பார்க்க அப்பிடி தெரியலையோ அவ்வவ்]]

"ஆமாம் சொல்லுங்க சர்"

"எனக்கு ரூமில் இருக்கும் மினி பார்'ல இருந்து ரெண்டு பாட்டல் வேணும்"

"நோ...உனக்கு என்ன சாப்பிட வேணுமோ அது இங்கே இருக்கும் பாரில் கிடைக்கும் நீ அங்கே போயி குடிக்கலாம் சாப்பிடலாம் என்று கண்டிப்பாக சொல்லி வழி காட்ட கொஞ்சமாக பின்வாங்கி பயந்தவன் சொன்னான் பாருங்க...

"வல்லா...நீ ஒரிஜினல் இந்தியன் இல்லை, நீ டூப்ளிகேட் இந்தியன்..."ன்னு சொல்லிகிட்டு கூலாக போறான்.

என் பின்னாடி நிக்குறது எனக்கு முதுகுல ரெண்டு போட்டுகிட்டு நின்னு சிரிக்குது...

ஏன்டா  எனக்குன்னே வாறீங்க.....[[நாம மனசுல பலமா சிரிச்சு ரசிச்சுகிட்டு, முகத்தை வெறப்பா வச்சிகிட்டு நிக்க வேண்டி இருக்கு ஸ்ஸ்ஸ்ஸ் அபா]]

15 comments:

  1. யானை முடியால் மரு போகும் என்று கேள்விப்பட்டுள்ளேன்... ம்... எப்படியோ...!

    உங்களுக்கென்னே... முகராசி...!?

    ReplyDelete
  2. இனி ஒரு தடவை மீண்டும் குதிரை முடிக்கு அடங்காது போனால் சகோதரர் திண்டுகல் சொல்லுறத கேளுங்கள் நாங்களும் யானை முடி பிடுங்கப் போன செய்தியை அறியும் ஆவலுடன் காத்திருப்போம் சகோதரா :)

    ReplyDelete
  3. ஹலோ மனோ உங்களை யாரு மேனேஜரா போட்டது.? அந்த அரபிக்காரன் கேட்டது பாட்டில் அதாவது மினி பாரில் இருக்கும் வாட்டர் பாட்டிலை... ஆனா நீங்க நினைச்சது சரக்கு பாட்டிலை அதனாலதான் அந்த அரபி வல்லா...நீ ஒரிஜினல் இந்தியன் இல்லை, நீ டூப்ளிகேட் இந்தியன்..."ன்னு சொல்லிகிட்டு கூலாக போறான்.


    தமிழகத்தில் அம்மா டாஸ்மாக்கை திறந்து வைச்சாலும் வைச்சாங்க அதனால் இந்த தமிழ் புள்ளைகளுக்கு பாட்டில் என்றாலே சரக்கு பாட்டில்தான் நினைவுக்கு வருது போல

    ReplyDelete
  4. பதிவை படிக்கும் போதே குபீர் என்று சிரிப்பு வெடிதான்! குதிரை முடியில் இப்படி ஒரு அதிசயமா!

    ReplyDelete
  5. குதிரை முடிக்கு இப்படி ஒரு பயன்பாடா

    ReplyDelete
  6. ரெண்டு குதிரை படத்தில இருக்கே, அந்த குதிரை முடியா! அவ்வ்வ்வ்

    ReplyDelete
  7. முதல் பாதியில் இருக்கும் விஷயம் தெரியாதது...2ஆம் பாதியை படித்ததும் செம சிரிப்பு.....

    ReplyDelete
  8. உண்மையான இந்தியன் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்துவிடுவான் அதாவது சம்திங்கை வாங்கிக்கொண்டு!. அதனால்தான் உங்களை அப்படி சொலலியிருக்கிறான்.

    ReplyDelete
  9. The plant image shown on top AMMAN PACHARISI - The milk come out while plucking leaves is good treatment for moles,white warts ( Paalunni )....This cheap medicine plant best for wart treatment, i have treated my kid's wart with zero cost and saved a huge cost of laser surgery recommended by allopathy doctors

    ReplyDelete
  10. குதிரை முடி பிடுங்கிய கதை ஜூப்பருங்கோ!

    ReplyDelete
  11. குதிரை முடி கட்டுவது பற்றி கேள்விப்பட்டதுண்டு...

    இரண்டாவது விஷயம் செம! :)))

    ReplyDelete
  12. மருவிற்கு நல்லதொரு வைத்திய குறிப்பு! நன்றி!! இருந்தாலும் குதிரையிடம் போய் உதை வாங்கியிருக்கத் தேவையில்லை!! டாக்டரிடம் சென்றால் ஓரிரு நிமிடங்களில் மருந்து தடவி மருவை தீய்த்து விடுவார்!

    ReplyDelete
  13. நாங்கள் இனி குதிரை அருகே எக்காரணத்திற்காகவும் செல்லமாட்டோம். தங்களுடைய அனுபவம் எங்களுக்கு உதவுகிறது. நன்றி.

    ReplyDelete
  14. அப்படியா குதிரைமுடியும் கட்ட முடியுமா. அதற்க்கு அடியும் வாங்கவேண்டுமா

    ReplyDelete
  15. நாஞ்சில் நண்பரே!...

    என் பெயர் மகாராஜன்...நான் உங்கள் வலைப் பதிவினை படித்து வருகிறேன்...பல தடவை ஏதாவது விமர்சனம் எழுதலாமா என்று நினைப்பேன்..அப்புறம் யோசித்து விட்டு விடுவேன்..(உங்களுக்கு என்னை தெரியாதே) எனக்கும் குமரி மாவட்டம் தான்... வில்லுக்குறி....நன்றாக எழுதுகிறீர்கள்..நம்ம ஊர் பேச்சு வழக்கில் படிக்கும் போது நன்றாக இருக்கிறது...நிறைய எழுதுங்கள்....

    மருவுக்கு குதிரை முடியோ யானை முடியோ தேடி கஷ்டப்பட வேண்டாம்..நம்ம நாகர்கோயில் ல கோபாலாசான் மருந்து கடை யில காலாணி களிம்பு னு இருக்கு 40 ரூபாய் தான். நான் பயன் படுத்தியிருக்கிறேன்.. அத காலாணி மற்றும் மருவுக்கும் பயன் படுத்தலாம்...ஒரு தடவை போட்டால் போதும் இரண்டு மூன்று நாட்களில் காய்ந்து உதிர்ந்து விடும்.. நன்றி

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!