Monday, November 19, 2012

வெளிநாட்டில் வாழும் சிறகொடிந்த ஏமாளிகள்...!

வளைகுடா நாட்டில் சில குரூரமான புத்திசாலி[!] அண்ணன்களை கொண்ட பங்களாதேசி நண்பர்களின் கதைகளை கேட்கும்போது கண்ணில் ரத்தக் கண்ணீரே வந்துவிடும் அளவுக்கு சோகம் நிறைந்ததாக இருக்கிறது...!

உதாரணத்திற்கு, நான்கு அண்ணன் தம்பிகள் கொண்ட கஷடப்பட்ட குடும்பத்தில், வங்கியில் லோனும் அங்கே இங்கே கடனும் வாங்கி மூத்தவனை வெளிநாடு அனுப்புகிறார்கள் பெற்றோர்கள், அவன் இங்கே வந்து கடுமையாக உழைக்கிறான்.
உழைத்து, கடன்களை கொடுக்காமல் அடுத்து ஒரு தம்பியை வெளிநாடு அழைத்துக்கொள்கிறான், அந்த தம்பியின் சம்பாத்தியம் கொண்டு குடும்பத்திற்கு பணம் அனுப்பிவிட்டு இவன் சம்பாத்தியத்தை புத்தியாக சேமிக்கிறான்...

கேட்டால் நான் உங்களுக்காகவே சேமிக்கிறேன் என்று பொய் சொல்லுகிறான், பாவம் பெற்றோரும் நம்பிவிடுகிறார்கள், அடுத்தும் ஒரு தம்பியை வெளிநாடு வரவைக்கிறான்...!

அவன் சம்பாத்தியத்தையும் சேர்த்து வைத்துகொண்டு இவன் ஊர் செல்கிறான் விரும்பிய பெண்ணை மணம் முடிக்கிறான், மறுபடியும் திரும்பி வெளிநாடு வந்து, கடைசி தம்பியையும் வெளிநாடு வரவைத்துவிட்டு, இவன் குரூரபுத்தியை காட்டுகிறான்...!
அதாவது எப்படியும் ஏழெட்டு வருஷம் ஆகிவிட, தம்பிகள் பணத்தில் நிலம் பூமி கடைகள் என்று எல்லாமே இவன் பெயரில் [[ஏமாற்றி]] வாங்கிக்கொள்கிறான்.

எல்லாம், தம்பிகளே நான் உங்களுக்காகவே செய்கிறேன் என்று தெய்வ சத்தியமும் பண்ணுகிறான், கடைசியில்..சரி இனி நான் ஊர்போய் கடைகளை பார்த்துக்கொள்கிறேன், அங்கே பிஸினஸ் வளர்ந்ததும், ஒவ்வொருத்தனாக ஊருக்கு உங்களை அழைத்து எல்லா தம்பிகளுக்கும் கடைகள் வைத்து தருகிறேன் என்று ஊர் செல்கிறான்.

மூன்று தம்பிகளின் மாதம் வருமானமும், ஊரில் கடைகளின் வருமானமும் அண்ணனை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது, இடையில் இன்னொரு தம்பிக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறான்....!
கல்யாணம் முடிந்தது தம்பி வெளிநாடு வந்துவிட, தம்பியின் மனைவியின் மூலம் அண்ணனின் பல கோல்மால்கள் வெளியே தெரிய வருகிறது, கடுப்பான தம்பிகள் அண்ணனிடம் கேள்வி கேட்க....

அதற்குள் தன்னைப் பலப்படுத்திக்கொண்ட அண்ணன், தம்பிகளை மிரட்டுகிறான்..."என்னா செய்யமுடியுமோ செய்துக்கோ போடா" பரதேசியாக போன தம்பிகளுக்கு உள்ளூரில் பலமாக காலூன்றிய அண்ணனிடம் நியாயம் கேட்க திராணி இல்லாமல் போகிறது...! மனதுக்குள் அழுகிறார்கள்...

இனி அடுத்த இரண்டாவது அண்ணன் வருகிறான், எப்பா ஒன்னும் கவலைப்படாதீக அண்ணன் நான் இருக்கேன்ல அவன்தான் ஏமாத்திபுட்டான், இனி எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கண்ணீர் வடிக்கிறான், அவனை நம்பி தம்பிகள் சம்பளங்கள் கிம்பளங்களை கொடுக்கிறார்கள்...!
இனி அடுத்த தம்பிக்கு கோலாகலமாக திருமணம் நடக்கிறது, அதற்குள் இளைய அண்ணன் ஊரில் கடைகண்ணிகள் வாங்கி ஸ்டெடி ஆகிவிடுகிறான், மறுபடியும் அதே ஏமாற்றம், தம்பி பொண்டாட்டி வந்து கேள்விகள் கேட்க...."உங்களால் என்னா செய்யமுடியுமோ செஞ்சிக்கோங்க" டயலாக் வருகிறது அடுத்த அண்ணனிடமிருந்தும், தம்பிகள் ஏமாறுகிறார்கள்...!

அதற்குள் தம்பிமார் வயதும் கூடிவிட, கல்யாணம் ஆஸ்திகள் ஏதும் செய்யமுடியாமலும் ஊரில் ஆதரவு இல்லாமலும் போகின்றனர் தம்பிகள்...! கோபத்திலும், இயலாமையிலுமாக யாரையும் நம்பாமல் வாழ்கின்றனர் தம்பிகள்...!

அப்படியே ஊர்வந்து கல்யாணம் செய்தாலும் இவர்கள் இவர்களுக்கு வருமானம் இல்லாமல் மறுபடியும் வெளிநாடு வர, குழந்தையும் பிறக்க, ஊருக்கு போகமுடியாமலும் தவிக்கும் பெங்காலிகள் ஏராளம்...!

கண்ணீர்களை அவர்கள் எப்படி மறைத்து வைத்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது...!
ஆக இவர்கள் அப்புறமாக யாரையும் நம்பவே மாட்டார்கள், மூத்த அண்ணன் கூட இருக்கும்போது, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அண்ணன் வருவதை கண்டதுமே மரியாதையாக சைக்கிளை விட்டு கீழே இறங்கி நடந்துவரும் தம்பிகள், இம்புட்டு பிரசினை நடந்தபின்பு அதே அண்ணனை காறி துப்புவது இங்கே வாடிக்கையாக இருக்கிறது...!

இருவது வருஷம், பதினைந்து வருஷம், பத்து வருஷமாக ஊர் போகமுடியாமல் போகும் பெங்காலிகளை பார்க்கும்போது மனது ரணமாக வலிக்கிறது...!
மேலே நான் சொன்னது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமே...! வளைகுடா நாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும் என நினைக்கிறேன்.

நம்ம தமிழ் அண்ணாச்சிகளும் ஒரு சிலர் ஊர் போகாமல் அல்லது ஊர் போகமுடியாமலும் இருந்ததை முன்பு நான் பார்த்ததுண்டு...ஆனால் அவர்கள் குடும்ப நிலவரம் தெரியவில்லை. 

டிஸ்கி : படங்கள் கூகுள் உதவி 

15 comments:

  1. இப்படியெல்லாம் நடக்குமா! ஆச்சர்யமாகத்தன் இருக்கிறது.சொந்த தம்பிகளை இப்படி ஏமாற்றியது வேதனைக்குரியது.எப்படியெல்லாம் கேவலமாக நடந்துகொள்கிறார்கள் மனிதர்கள்.

    ReplyDelete
  2. nallavangalum irukkaaka ....


    intha maathiri -
    naathaarikalum ullaarkal ...

    ReplyDelete
  3. ஒவ்வொருத்தரின் மனதில் எத்தனை வேதனைகள்...

    எல்லாம் பாழாப் போகும் பணத்திற்கு...

    ReplyDelete
  4. யாருக்கும் விழிப்புணர்வே இல்லை...

    ReplyDelete
  5. உலகெங்ககும் மனித உருவத்தில் சில மிருகங்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன அதில் சிலதான் நீங்கள் கண்ட மனிதர்கள்

    ReplyDelete
  6. பணம் மனித மனங்களை மாற்றிவிடுகிறது. என்ன செய்ய!

    ReplyDelete
  7. ஆமாம் மக்கா, கொடுமையா இருக்கு... என்ன சொல்றது ஹிம்....

    ReplyDelete
  8. அண்ணா,அக்கா என்ற மூத்தவர்கள் தியாகம் செய்தது 40 வருடங்கள் முன்பு,இப்போ மூத்தவர்கள் ஏமாத்த தொடங்கி விடுகிறார்கள்.

    ReplyDelete
  9. சத்தியமான உண்மையை சொன்னீர்கள் அமுதா...!

    ReplyDelete
  10. நல்லவர்களும் இருக்கிறார்கள்....ஆனால் அது ஒரு சில இடத்தில் மட்டும் தான்.........


    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  11. நலமா ! மனோ! முதலில் பாசத்தை காட்டி பின் மோசம் செய்யும் உறவுகள் உறவுகள் இங்கேயும் உண்டு!

    ReplyDelete
  12. Reversal of this also happens
    ie elder brother sends money and younger brothers in india settles down with land and business.
    -surya

    ReplyDelete
  13. யோவ்வ்வ்வ்வ் மனோ இன்னுமா பதிவு எல்லாம் போடுறீங்க....??????????

    ReplyDelete
  14. வெளிநாட்டில் வாழ்வது மிக வேதனையான வாழ்க்கை தான்...

    ReplyDelete
  15. இப்படியும் சில
    பதர்கள் இருக்கிறார்கள்
    மக்களே..

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!