Wednesday, August 24, 2011

அந்தபிரிவின் நேரம் செத்துப்போகாதா.....!!!

இன்பமான நாட்களை கடந்து
கடல் கடக்கும் நாள் வந்தது
மனதில் பாரமா இல்லை
சந்தோசமா தெரியவில்லை......


நாளும் தோளிலும்
நெஞ்சிலும் தூங்கிய
செல்லமகள் என்னை
தேடும் அந்நேரம் என்மனம்.....


ஏங்கி தவிக்கும்
நேரம் நோக்கி மணித்துளிகள்
நகர்வதை பார்த்து
குளத்தில் கல்லாய் மனசு......


கனவுகள் நனவாகாமல் கலைந்து
மறுபடியும் கடல்
என்னை அழைக்கிறது
வா என்னை கடந்து செல் என.....


சிலகாலம்
என் உயிர் நண்பர்களே
என் உயிர் உற்றார்களே
உங்களை விட்டு பிரிகிறேன் அழுகையோடு.....


என்னதான் சந்தோசமாக
விடுமுறை கழிந்தாலும்
உறவைப்பிரிந்து செல்லும்
அந்தபிரிவின் நேரம்
செத்துப்போகாதா........!!!!

38 comments:

  1. சோகமான பிரிவு. மனதிர்க்கு வேதனையாக இருக்கு.

    ReplyDelete
  2. அண்ணே கவலைப்படாதிங்க அண்ணே நாங்களெல்லாம் இங்க இருக்கோம் இல்ல கடவுள் மேல பாரத்தைப்போடுங்க அண்ணே கண்டிப்பா அனைவரும் கூடிவாழும் நேரம் வரும்... எல்லாம் யாருக்கா குடும்பத்தைக்காக்க தானே அண்ணே ....

    ReplyDelete
  3. பயபுள்ள வோட்காவோட உக்காந்து இருந்திருக்குமோ டவுட்டு!....ஏன்னா அப்போத்தானே இப்படி யோசிப்பாரு!

    ReplyDelete
  4. சீக்கிரமா திரும்பி வாங்கோ அண்ணா

    ReplyDelete
  5. இன்ட்லியில் இணைச்சாச்சு

    ReplyDelete
  6. விக்கியின் கருத்தோடு ஒத்து போகிறேன்.. ஹி...ஹி...

    ReplyDelete
  7. பிரிவு எப்போதும் சோகம்...

    சோகத்தில பெரிய சோகம் புத்திர சோகம்

    அதை விரிக்க வார்த்தைகள் போதாது

    இனி யாரையும் பிரியாமல் இருக்கும் நிலை வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  8. யோவ் உமக்கு கவிதை எழுதவெல்லாம் வருமா இல்லை பிரிவு வரும்போது கவிதையாய் வந்து கொட்டுமா? உண்மையிலேயே மிக அருமையான கவிதை. இதை நீர் காப்பி அடித்திருந்தாலும் பொருத்தமே !!!!

    ReplyDelete
  9. பிரிவும், சோமபானமும் சேரும்போது கவிதை உருவாகிறது என்ற அறிஞர் ஜியோக்யூட்ரசின் கூற்று உண்மைதான் போலும்!
    அருமை! :-)

    ReplyDelete
  10. உள்ளத்து உணர்வுகளை
    மிகத் தெளிவாக உணர்த்தும்
    அருமையான கவிதை
    கவிதை தொடரவும்
    சோகம் தொடராது இருக்கவும் அருளுமாறு
    ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  11. உறவைப்பிரிந்து செல்லும்
    அந்தபிரிவின் நேரம்
    செத்துப்போகாதா........!!!!//

    ஒவ்வொரு பயணத்திலும் வரும் அந்த சோகம்.

    ReplyDelete
  12. அட எங்க போறீங்க இங்கதான, சீக்கிரமே அடுத்த விடுமுறைக்கு வாங்க, வரும்போது லேப்டாப்போடு :-)

    ReplyDelete
  13. நான் கவலையோடு இருப்பதை என் அண்ணா மனோ எப்படி கண்டு கொண்டார் நேற்று வந்த பயணம் மனதில் இருப்பதை அழகான கவிதை ஆக்கியிருக்கிறீர்கள் மனசு வருத்தமாக இருக்கின்றது!

    ReplyDelete
  14. இது தவிர்க்க முடியாதது!அடுத்த விடுமுறை பற்றி இப்போதே நினைக்க ஆரம்பித்து விடுங்கள்!

    ReplyDelete
  15. பிரியும் தருணங்கள் மறக்கமுடியாதவை தான், நானும் உணர்ந்துள்ளேன். சீக்கிரம் உங்கள் குடும்பத்துடன் ஒன்றிணைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நல்லா இருக்குய்யா!

    ReplyDelete
  17. அண்ணன் ஃபீலிங்ஸ்ல இருக்காரு, என்னண்ணே பண்றது,நம்ம பொழப்பு அப்ப்டி கெடக்கு....., சீக்கிரமா மீண்டு வாங்க.....

    ReplyDelete
  18. மக்கா. தலைப்பும் , கவிதையும் அருமை..

    ReplyDelete
  19. வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் கொடுமை இது என்ன செய்ய தலை எழுத்து.

    ReplyDelete
  20. பிரிவு என்பது குடும்பத்திற்கு உழைத்திட எனும் ஒரே ஆறுதல்தான் உங்கள் சோகங்களை துடைத்திடும்.

    ReplyDelete
  21. மனோ, எந்த நம்பர் இப்ப பயன்படுத்திறீங்க? வோடஃபோன் எண் எப்ப போட்டாலும் சுவிட்ச் ஆஃப்தான். ????

    ReplyDelete
  22. ஹ்ம்..... நல்லக் கவிதை சார்...

    ReplyDelete
  23. விக்கியுலகம் said...
    பயபுள்ள வோட்காவோட உக்காந்து இருந்திருக்குமோ டவுட்டு!....ஏன்னா அப்போத்தானே இப்படி யோசிப்பாரு!//

    எனக்கும் அதே டவுட்டு தான்//
    ஆனா சூப்பருங்க!

    ReplyDelete
  24. பிரிவு கஷ்டம்தான்...அதை ஒவ்வொரு வருஷமும் செய்வது கொடுமை...

    ReplyDelete
  25. மாப்பிள உனக்கு நான் ஓட்ட போட்டுட்டு இத எழுதுறன்... இப்பிடி இளமைக்காலங்களில் மனைவி பிள்ளைகளை விட்டு வெளிநாட்டில் கஷ்டப்படுவது எவ்வளவு துயரம்... ஏன் நீங்க மனைவி பிள்ளைகளோடு உவ்விடம் இருக்க முடியாதா? அதற்குறிய நல்ல வழிகளை பார்கலாமே.. அப்படி இல்லாவிடில் இப்பயணம்தான் இங்கு வருவது கடைசிமுறை என்று எண்ணி நன்றாக கல்லாவை கட்டுங்கள் உங்களின் பதிவுகளில் நான் பார்த்தவரை உங்கள் ஊர் மிகவும் செழிப்பான இடம் போல் தெரிகிறது அங்கு கொஞ்ச நிலங்களை வாங்கிப் போடுங்கள் .. எதிர்காலம் இயற்கை விவசாயத்துக்கு நல்ல சந்தை இருக்கிறது உங்கு நீங்கள் குடும்பத்தை பிரிந்து கஷ்டப்படுவதையும் விட நல்ல வருமானத்தையும் மகிழ்ச்சியான வாழ்கையையும் அனுபவிக்கலாம்... மத்திய கிழக்கு நாடுகளில் ஏன் அஸ்ரேலியாவில் கணனி பொறியியளாளர் கூட இந்தியாவுக்கு வந்து மேம்படுத்தப்பட்ட விவசாயம் செய்கிறார்கள்...

    உங்களுக்கு விவசாயத்தில் நாட்டம் இல்லை என்றால் காசை உழைத்து கொண்டு வந்து இந்தியாவில் வியாபாரம் செய்யுங்கள்.. எதிர்காலத்தில் வளைகுடா நாடுகள் மட்டுமல்ல இங்கேயும் பிரச்சனைகள் வரும் நானும் இப்போதே தயாராகின்றேன்...

    மாப்பிள இதை தப்பாக எடுக்காதே எனக்கும் கிட்டத்தட்ட உன்ர வயசுதான் அதன் வலிகள் புரிவதால் சொல்கிறேன் இத்தனைக்கும் குடும்பத்தோடு இங்கு இருந்தும் கூட...

    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  26. மாப்பிள பாத்தீங்களா பன்னிகுட்டி சுருக்கமா நச்சுன்னு சொல்லிட்டார் இதுதானையா காட்டானுக்கும் படிச்சவங்களுக்கும் இடையில வாற வித்தியாசாம்..??

    ReplyDelete
  27. பிரிவு என்பது உலக அனுபவங்களை கற்றுக்கொள்ள தானே ? கொஞ்சம் ஓவரா பேசிட்டேனோ ?

    ReplyDelete
  28. அண்ணே... உங்கள் பிரிவு கஸ்ரமாத்தான் இருக்கு..

    ReplyDelete
  29. என்ன செய்வது பணம் படத்தும் பாடு.

    ReplyDelete
  30. டிரையினை தூக்கி டிராக்ல வைக்கிற வரைதான் .கஷ்டம் அப்புறம் காலம் அதே வேகத்துல ஓடிடும் . இதென்ன புதுசா..:-) :-(

    ReplyDelete
  31. சரியா சொன்னிங்க ஜெய்லானி பாய் அனுபவம் பெசுதோ?

    ReplyDelete
  32. கண்கள் பனிக்கின்றன மனோ!நெஞ்சில் தூங்கிய செல்ல மகள்??????வேதனை,கூடிய விரைவில் சம்பாதித்து ,இங்கேயே வந்து செட்டில் ஆகுங்க!!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!