Saturday, December 29, 2012

அப்பாடா இனி ஒருவருஷம் இவன் தொல்லை இருக்காது...!


வலைப்பதிவுகளில் அழகான தரமான எழுத்து நடையில் எழுதி வந்த சில கன்னியாகுமரி மாவட்டம் பதிவர்கள்  [[தமிழ் தெரிந்த மலையாளிகள் ]] எழுதுவதை சுத்தமாக நிறுத்திவிட்டார்கள்...!?

நான் பதிவுலகம் வந்த புதிதில்,மிகவும் பிரபலமாக இருந்த பதிவர் ஒருவரை சிலர் "நீ மலையாளி நாயர்தானே" என்று கிண்டலும் கோபமுமாக கமெண்டியதால், வெறுத்து போயி கிளம்பி விட்டார்கள்.
அவர்களின் தமிழ் எழுத்துகளுக்கு நான் ரசிகனாக இருந்தேன், கவிதைகள் புரியும் விதத்தில் அழகாக புனைவார்கள், சாடல் கோபம் கிண்டல் காதல் கல்யாணம் என்று வெரைட்டியாக நகைச்சுவை கலந்து எழுதி வந்தார்கள், வாசிக்க வாசிக்க ரசனையாக இருக்கும்...!

நம்மாளுகளுக்கு ஒருத்தன் நல்லா இருந்தாலே அவன் பூர்வீகத்தை தோண்டி [[நோண்டி]] பார்க்கும் குணம் எங்கிருந்து வந்துச்சோ தெரியல...!

தமிழை விரும்பிப் படித்து எழுதும் மற்ற மாநில நண்பர்களை எனக்கு மிகவும் பிடிக்கும், காரணம் எனக்கு மலையாளம் கற்று தந்த மலையாளி நண்பன் மோகன்சி, நான் மலையாளம் படிக்க ஆர்வமாக இருந்தேனோ இல்லையோ ஆனால் அவன் மிகவும் ஆர்வமாக மலையாளம் எழுத வாசிக்க கற்று தந்தான்.
அவர்கள் மொழியை நான் படிப்பதை அவர்கள் பெருமையாகவே கருதுகிறார்கள், எங்கே போனாலும், மலையாளிகள் அவர்கள் மொழியில் பேசுகிறார்கள், மராட்டியர்களும் அப்படியே....!

இந்தமுறை நான் ஊர்[[மும்பை]] போனபோது, எங்கள் ஏரியா கீரைத் தோட்டத்தில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து போனதையடுத்து, போலீஸ் விசாரனை ஆரம்பம் ஆனது, கீரைத்தொட்டத்தில் எங்கள் நண்பர்களே அதிகமாக அங்கே கொட்டம் அடிப்பதால், நண்பர்கள் மீது போலீஸ் பார்வைவிழ....

நண்பன் கிருஷ்ணா போலீஸ் இன்ஸ்பெக்டருடன் மராட்டியில் பேசி விஷயத்தை அவர்களுக்கு புரியவைத்ததுடன், சம்பந்தம் இல்லாத எங்கள் நண்பர்களையும் விசாரணையில் இருந்து காப்பாற்றினான்.

இவன் பேசிய மராட்டியை ரசித்த போலீஸ்காரர்களுக்கு அது பெருமையாக இருந்தது, ஒரு தமிழன் அழகாக மராட்டி பேசுகிறானே என்ற ஒரே காரணத்துக்காகவே எங்கள் நண்பர்களை போலீஸ் சுற்றி வளைக்காமல் விட்டது என்றே நான் மனதில் நினைத்துக்கொள்வேன்.

ஆம் அவர்கள் மொழியை அடுத்தவர்கள் பேசுவது அவர்களுக்குப் பெருமையாகவே இருக்கிறது.

இனி ஒருவாரத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம் சொல்றேன் பாருங்க....

எங்க ஹோட்டல் ரிசர்வேஷனை செக் பண்ணும்போது, சென்னையில் இருந்து சுப்பிரமணி அய்யர் என்ற பெயரில் ஒருவர் வருவதாக பார்த்தேன்...
அவரும் வந்தார் கூடவே ஒரு மலையாளி டாக்சிகாரன், என் முன்னிலையில் மலையாளியோடு அழகாக தமிழ் பேசினார்,  நான் தமிழில் பேசியபோதோ அண்ணாச்சி ஆங்கிலத்தில்தான் பேசினார், நான் எவ்வளவோ அவரைத் தமிழ் பேசவைக்கவேண்டும் என்று நினைத்தேனோ அவ்வளவு ஆங்கிலத்தில் டாக்கினார்...முடியாமல் போடாங்கொய்யா என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

ஸோ ஏன் நம்மாளுங்க இப்படி இருக்கிறார்கள்...? தமிழ் வாழனும் வாழனும் என்று வெறும் காற்றை ஊதினால் இப்படிதான் இருக்கும்.

தமிழ் நல்லா வாழும்டேய் போங்க...

தமிழ் எழுதுவோரை வாழ்த்துவோம், தமிழை நேசிப்பவரை நாமும் நேசிப்போம் அதுவே தமிழனுக்கு அழகு...!
----------------------------------------------------------------------------------------

இந்த வருஷம் சிறந்த எழுத்தாளர், சிந்தனை[!]யாளர், இணையதள போராளி, இணையத் தளபதி, இப்பிடியெல்லாம் விருது தரப்போறதாக தினமலர், குங்குமம், ஆனந்தவிகடன், குமுதம், சிபி, பன்னிகுட்டி, டெரர் குரூப் இன்னும் பலர் அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது [[சரி சரி விடுங்க விடுங்க]] 
அவனவன் கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்டுறான்னா நீ கண்ணுக்குள்ளே காலையே விட்டு ஆட்டுறியேன்னு கல்லை தூக்கிறாதீக...

இனி இந்த வருஷம் முழுவதும் பதிவு எழுதவே கூடாதுன்னு தீர்மானம் பண்ணிருக்கேன்,  அடுத்த வருஷம் எழுதுறேன் போதுமா...? சந்தோஷமா...? 

Sunday, December 23, 2012

பெண்மையை அடுப்பங்கறையில் அடைத்துவிடாதீர்கள்...!


வெண்ணிலா என்று ஒரு தோழி[[பெயர் மாற்றப்பட்டுள்ளது]], கவிதைகள் புனைவதில் வல்லவர், சிரிப்புகள் கொளுத்தி போடுவதில் மொத்த மனசும் ரிலாக்ஸ் ஆகிவிடுமளவுக்கு சொந்தமாக ஜோக் எழுதிய அந்த சகோதரியை அவர்கள் வீட்டய்யா எழுத விடாமல் தடுத்ததை அடுத்து, அவர்கள் வேறு பெயர்களில் வந்தாலும் கண்டுபிடித்து தர்க்கங்கள் நடந்ததால்....இப்போது பிளாக், பேஸ்புக் வாசிப்பதோடு சரி, எழுத முடியாதபடி பண்ணி விட்டார்கள். 
அவர்கள் ஒருநாள் சாட்டில் வந்து அழுதுவிட்டு போனதோடு சரி, ஆளையே காணவில்லை, "எங்கிருந்தாலும் உங்கள் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருப்பேன்னு சொல்லிட்டு போனாங்க", அதுதான் கடைசி....!

அவங்களைப்போல நிறையபேர் இருக்காங்க, ஆபீசில் வேலை செய்யும்போது வாசிக்கலாம், ஆனால் எழுத முடியாது [[டைப்பிங் சத்தம்]] வீட்டிலோ நெட் கனெக்ஷன் கிடையாது, அவர்கள் என்னசெய்வார்கள்.?

உலகம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு முதன்முதலாக இணைய உலகில் நாம் வரும்போது, எல்லாவற்றையும் தெரிந்துகொண்டா வந்தோம்...? நான் மூன்று வருடங்கள் இணையதளம் வாசித்தபின்பே நண்பர்கள் உதவியுடன் இணையத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன்.
மனம் திறந்து உண்மைகளை எழுதமுடியாதபடி மனதிற்குள் புழுங்கும் மனித[[ஷி]]ர்களுக்கு, நம்மை போன்றோர்களின் சுதந்திரமான எழுத்துக்களை பார்த்து, சற்றே ஆறுதல் அடைவார்கள் என்றே நினைக்கிறேன். 

காரணம், அவர்களின் மொத்த குடும்பங்களும் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருப்பார்கள், சின்னதாக ஒரு எழுத்து மாறிவிட்டாலும் குடும்பத்தில் பஞ்சாயத்தை கூட்டி விடுவார்கள், அம்புட்டு கெடுபிடிகள் உள்ளவர்களையும் நான் அறிவேன்.

நான் எழுதுவதை என் மொத்த குடும்பத்தினரும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள், சுதந்திரமானது மற்றவர்களின் சுதந்திரத்தை பரிக்காவண்ணம் நாம் இருப்பது மிகவும் முக்கியம்.
இன்றைக்கு உலகம் கைகளுக்குள் அல்ல, விரலிடுக்கில் வந்துவிட்டது,  இணையம் மூலமாக எல்லாவற்றிர்க்கும் தீர்வு சொல்கிறார்கள், மருத்துவமா, ஆன்மீகமா, தாம்பத்தியமா, விவாகரத்தா, ஏன் எதற்கு எப்படி என்று அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது சமூக வலைத்தளங்களில்....

பெண்கள், அவர்கள் மனைவியாக இருக்கட்டும் சகோதரிகளாக இருக்கட்டும், எழுத வாசிக்க அனுமதியுங்கள் அவர்கள் சுதந்திரத்தின் எல்லைகளை அவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர்வதாயின் பிரசினைகளே இல்லை என்பதே உண்மை...
ஆக்டிவேட்டாக இல்லை என்பதற்காக, உங்களை தொல்லைகள் செய்யாமல் இருப்பவர்களை பதிவுலகத்திலோ, பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலோ  பிளாக் செய்து முடக்கி விடாதீர்கள், தொல்லைகள் செய்பவர்களை உடனே பிளாக் செய்யுங்கள் அதில் நியாயமுண்டு...!

நான் எப்போவோ எங்கேயோ படித்த ஒரு கதையுண்டு...

புது மணத்தம்பதிகள் சந்தோஷமாக தேன்நிலவு முடித்துவிட்டு பஸ்சில் ஊர் திரும்புகிறார்கள், பஸ்சில் தன்னோடு பிரயாணம் செய்த ஒரு குழந்தையோடு அந்தப்பெண் கொஞ்சி குலாவியபடி வருகிறாள்...

இவர்கள் ஊர் வந்ததும் பஸ்சில் இருந்து இருவரும் இறங்குகிறார்கள், கொஞ்சதூரமே போன பஸ்மீது மலையில் இருந்து உருண்டு வந்த பெரியகல் விழுகிறது, பஸ்சில் பயணித்த யாவருமே இறந்து போகிறார்கள்...
கணவன் சொல்கிறான் "அப்பாடா நாம இங்கேயே இறங்கினபடியால் தப்பித்தோம்" என்று சந்தோஷமாக சொல்கிறான்.

ஆனால் அந்த பெண்ணின் கண்ணோட்டமோ வேறாக இருந்தது..."நாம இங்கே இறங்கினபடியால்தானே எல்லாரும் செத்துபோனாங்க, நாம இங்கே இறங்கலைன்னா ஐந்து நிமிஷத்தில் பஸ் அந்த இடத்தை தாண்டி போயிருக்குமே, எல்லாரும் நலமாக இருந்திருப்பார்களே..." என்று கதறி அழுகிறாள்...

அதுதான் பெண்மை, அவள்தான் பெண்...பெண்கள் நாட்டின் கண்கள் என்று குருடாக இருக்காமல், பெண்கள் நமது கண்கள் என்று போற்றுவோம்....

மனதின் தோன்றல்கள் தவறு இருப்பின் மன்னிக்க....

Monday, December 17, 2012

நன்றி மறப்பது நன்றன்று, ஒரு குமுறல் ரிப்போர்ட்...!

வாழ்க்கையில் பல விஷயங்களை நாம் கண்டுகொள்வதில்லையா, இல்லை நமக்கென்ன நம்ம வேலை முடிஞ்சுதா போயிகிட்டே இருப்போம் என்ற மனநிலையா என்னவென்று புரியவில்லை எனக்கு, சில விஷயங்களை சொல்கிறேன் சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்கப் பார்ப்போம்...?
விமானத்தில் பயணம் செய்த நாம், பத்திரமாக தரை இறங்கியபின், விமானத்தை விட்டு இறங்கும்போது அந்த விமான ஒட்டிக்கோ அல்லது விமான பணிப்பெண்ணுக்கோ நன்றி சொன்னதுண்டா...? அவர்கள் முகங்கள் நமக்கு நியாபகம் இருப்பதுண்டா...?
தொலைதூர ரயில்களில் பயணம் செய்யும்போது, அந்த ரயிலில் எத்தனை ரயில் ஓட்டுனர்கள் இருந்தார்கள், எத்தனை பேர்கள் மாறி வந்து ரயிலை இயக்கினார்கள், பத்திரமாக ஊர் வந்து இறங்கியபின் அவர்களுக்கு நன்றி சொன்னதுண்டா [[மனதிலாவது]] அவர்கள் முகங்கள் நியாபகம் இருப்பதுண்டா...?
டவுன் பஸ்ஸாக இருக்கட்டும், தொலைதூர பேருந்தாக இருக்கட்டும், மாட்டுவண்டியைவிட கேவலமாக ஓட்டுறானே பேசாம நடந்து போயிறலாமோ என்று கிண்டல் பேசும் நாம், பத்திரமாக ஊரில்போயி இறங்கும்போது அந்த ஓட்டுனருக்கு நன்றி சொன்னதுண்டா...? அவர் முகம் நமக்கு நியாபகம் இருப்பதுண்டா...?

ஆட்டோக்காரனை திட்டிக்கொண்டே ஊர்வலம் போகும் நாம், டிப்பர் லாரிக்கும், தண்ணி லாரிக்கும் நம்மை தப்புவித்து கொண்டு சேர்த்தமைக்கு, அவனுக்கு நாம் நன்றி சொன்னதுண்டா...? அவன் முகம் நியாபகம் உண்டா...?
அறுவடை நாட்களில் அதிகாலையில் உறக்கம் களைந்து வந்து, உங்கள் வயல்களை அறுத்து உங்கள் களஞ்சியங்களில் சேர்த்த உழைப்பாளிகளுக்கு நாம் நன்றி சொன்னதுண்டா...? அவர்கள் ஏழைமுகம் நம் நியாபகத்தில் இருப்பதுண்டா...?
பசியாக ஹோட்டலில் சாப்பிடப்போனால், அவன் பசியையும் பார்க்காது நமக்கு அன்பாக உணவு பரிமாறிய சர்வருக்கு நாம் நன்றி சொன்னதுண்டா..? அவன் முகம் நமக்கு நினைவிருப்பதுண்டா...? அங்கே அதே சமையலை சமைத்து தந்தவரின் முகங்களை நாம் பார்த்ததுண்டா...? அந்த ஏழைப்பட்ட மனிதனுக்கு நாம் நன்றிகள் சொன்னதுண்டா...?
நாற்றத்தைப் பொருட்படுத்தாது, ஒரு குவாட்டரை உள்ளே தள்ளிவிட்டு, நம் வீட்டு கழிவறைகளை சுத்தம் செய்பவனுக்கு நாம் நன்றி சொன்னதுண்டா...? பேரூந்து நிலையங்களின் கழிவறை குறைகளை சொல்லும் நாம், அங்கே கழுவி சுத்தம் செய்பவருக்கு நன்றி சொன்னதுண்டா...? அவர்கள் ஏழைமுகம் நமக்கு நினைவிலுண்டா...?

கண்ணில்லாமலும், காலில்லாமலும் தன வயிற்றை கழுவ, ஊனமுற்றோர்கள் நடத்தும் டெலிபோன் பூத்களில் போன் செய்யும் நாம் அவர்களுக்கு நன்றிகள் சொன்னதுண்டா...? அவர்கள் ஊனமுகம் நமக்கு நினைவிலிருப்பதுண்டா...?

அதிகாலையில் நம் வீடுகளில் இட்டுப்போகும் நியூஸ் பேப்பர் பையனுக்கு நன்றி சொன்னதுண்டா, அவன் கஷ்டனிலைகளை நாம் அறிந்ததுண்டா...?
ரயில் பிரயாணங்களில் [[தூர]] நம்மோடு ராணுவ உடையில் சேர்ந்துவரும் நாட்டின் எல்லைகாக்கும் வீரர்களின் கரம்பற்றி நாம் நன்றிகள் சொன்னதுண்டா...? அவர்கள் அமர இருக்கைகள் கொடுத்ததுண்டா...? அவர்களை தனிமைப் படுத்தாமல் அவர்களோடு அளவளாவியதுண்டா..? அவர்கள் குழி விழுந்த கன்னங்கள் நினைவிருப்பதுண்டா...?

பணம் கொடுத்தாச்சு, வேலை முடிஞ்சிருச்சு, இதே இப்போதைய மனிதனின் சுயநலமாக போய்விட்டதின் அர்த்தம் என்ன...? அன்பு.... பாசம்.... நேசம்.... அறம்... மனிதநேயம்...உதவிக்கரம்...பண்பு..பொறுமை...நன்றி மறவாமை இதெல்லாம் எங்கேய்யா போச்சு இந்த உலகத்துல....? இந்த எழவுக்காவது உலகம் அழிஞ்சிபோகட்டும் என்றே தோன்றுகிறது...!

என் மனதில் தோன்றிய வேதனைகளை உங்களோடு பகிர்ந்துகொண்டேனே தவிர யாரையும் புண்படுத்த அல்ல, மன்னிக்கவும்...! 

Thursday, December 6, 2012

கேரளாவுக்கு தமிழக தலைவர்கள் கிடுக்கிப்பிடி...!

நடைபயிற்சி மேற்கொள்வது எப்படி...?


பத்து நிமிஷத்தில் டாஸ்மாக் கடை பூட்டிவிடும் என்றால், சரக்கு வாங்க எப்படி யாருக்கும் தெரியாமல் [[ஓடமுடியாது]] வேகமாக நடப்பமோ அவ்வண்ணம் தினமும் அரைமணி நேரம் நடந்தால் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் உண்டாகும்...!
-----------------------------------------------------------
டாக்டர் : "இம்புட்டு சுகரும், பிரஷரும் இருக்குற நீ ஐ சி யூல இருக்க வேண்டியவன்  ஆச்சே எப்பிடிய்யா நடமாடிட்டு திரியுதே...?"

பேஷன்ட் : "அதான் டாக்டர் எனக்கும் புரியல, உங்க செக்கிங் மெஷின் நல்லா ஒர்க் ஆகுதா இல்லையான்னு இன்னும் பத்துபேரை செக் பண்ணிட்டு சொல்லி அனுப்புங்க அப்புறமா வாறன் வர்ட்டா...."[[நான் இல்லைங்கோ]]
-----------------------------------------------------------
நண்பர் ஒருவர் :"குளிர் காலத்துல ஆறுமாசம் குதேபியாவுல [[பஹ்ரைன்]] இருந்து சல்மானியா ரோடு வழியா வாக்கிங் போ, போகிற வழியில் நிறைய வேப்பமரங்கள் நிக்குது அதின் இலைகளை பறிச்சு தின்னுட்டு தினமும் நடய்யா சுகர் காணாமப்போயிரும்...
அடுத்து, சூடு காலத்துல சுகர் லோ ஆகிருச்சுன்னா, மனாமா மெரீ னா பீச் ஹைவே வழியா வாக்கிங் போ, போகிற வழியில் நிறைய பேரீச்சம் மரம் நிக்குது, அதன் பழங்களை பறிச்சு சாப்புட்டுட்டே தினமும் நடய்யா சுகர் லெவல் ஆகிரும்..."
நானும் முதலில் சொன்ன இடத்துக்கு முதல்நாள் வாக்கிங் போனேன், கொய்யால ஒரு வேப்பமரத்துலேயும் ஒரே ஒரு இலைகூட இல்லை அங்கே...!

ரெண்டாவது சொன்ன இடத்துக்கும் சூடு நேரம் பார்த்துப் போனேன், அங்கே பேரீச்சம் மரமெல்லாம் பனைமரம் உயரத்துக்கு நிக்குது, எப்பிடி பறிக்கமுடியும்...?! சின்ன மரத்துல இருக்குற ஒன்னையும் காணோம்...!

ஆக...அம்புட்டு சுகர் அண்ணாச்சிங்க இருக்காயிங்க போல இங்கே, ஏன்ய்யா பச்சைபுள்ளையை இப்பிடி அலையவைக்குறீங்க...?
---------------------------------------------------------

எங்கள் கேரளாவில் விவசாயம் பரிவர்த்தனைகள் செய்ய மக்களுக்கு பிடிக்கவில்லையா அல்லது அரசாங்கத்துக்கு பிடிக்கவில்லையான்னு தெரியவில்லை ஆனால், கேரளாவில் 42 நதிகள் இருக்கிறது [[சரியான்னு தெரியலை]] அதன் நீர்கள் வேஸ்டாகவே ஓடுகிறது, அந்த தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை...
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதால் எங்களுக்கு அங்கேயுள்ள விவசாயிகள் அரிசியும் காய்கறிகளும், பூக்களும் தருகிறார்கள் சொல்ப பணத்திற்கு, தமிழர்கள் கடும் உழைப்பாளிகள் என்பது மறுக்கமுடியாத உண்மை.....!!!

ஒரு மெத்தபடித்த அரபியிடம் பேசிய ஒரு சேட்டனின் உள்ளான அபிப்பிராய கருத்து இது...!
இதைத்தானேய்யா கேரளா பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சக்கரியாவும் எழுதியும் சொல்லியும் வருகிறார்...!
------------------------------------------------------------

அடுத்தும் காங்கிரஸ் கூட்டணியே நடுவில் ஆட்சி அமைக்கும் என்ற பேச்சுகள் வயிற்றில் புளியை கரைக்கிறது, பா ஜா க'வில் மக்களை கவர்ந்த ஸ்டார் தலைவர்கள் இல்லை என்பதே இவற்றிற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது...!!

கிழவர்  பொல்லாதவர்தான் போல ம்ம்ம்ம் பயங்கரமாக அரசியல் கணிப்பு கணிச்சிருக்கார்....!
-------------------------------------------------------------

சாட்டிங்கில்....

"அண்ணே, பேஸ்புக்ல போட்டோ அப்லோட் ஆகமாட்டேங்குது என்ன செய்யனும்...?"

"கம்பியூட்டரை கீழே தூக்கிப்போட்டு நாலுமிதி மிதிக்கவும்..."
[[கீழே பர்சனலா அவன் சொன்னது]]
"ஓ அப்பிடியா அண்ணே, எங்கே போனாலும் மும்பை வந்துதானே ஆகனும், அன்னைக்கு வச்சுக்குறேன்"

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.....
-------------------------------------------------------------

முல்லைப்பெரியார் மேட்டரில் கேரளாவுக்கு சரியான கிடுக்கிபிடிபோட்டு செமையா முட்டுகட்டை போட்டே வைத்துள்ளார்கள் நம் தமிழக தலைவர்கள், வைகோ அண்ணன் உட்பட, இது கேரளா நண்பர்கள் பேச்சில் நன்றாகவே தெரிகிறது...!
என்னதான் தமிழக தலைவர்களை நாம் திட்டினாலும், இதற்காக வாழ்த்தையும் சொல்ல கடமைபட்டுள்ளோம் நிச்சயமாக...!
------------------------------------------------------------

பாராளுமன்றம் கேன்டீனில் சாப்பிடவாவது ஒருமுறை எம் பி ஆகிவிட வேண்டும்...! அம்புட்டு விலை குறைவாம்...!

மீன்கறி சாப்பாடு வெறும் பதினேழு ரூபாய்...! [[விஜயன் கவனத்திற்கு]]
------------------------------------------------------------

வரிகளை மரியாதையா கொடுக்காதவனேல்லாம் இன்னைக்கு தலைவனும், நேதாக்களுமாக இருந்து தேசியம் பேசுவதுதான் ஆச்சர்யமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது...! சரத்பவாருக்கு கோடிக்கணக்கில் வரிபாக்கி இருக்கிறதாம்...!

[[பக்கி நீ நல்லாயிருடே...அவனுக்கு சுகந்த ஒயின் குடிக்ககொடு, நாடு உருப்படும்]]

Sunday, November 25, 2012

பதிவர்கள் வர்க்கமும் ஆளும்வர்க்கமும் காமெடி கும்மி...!

கோபலலிதா : இங்கே இந்த மீட்டிங்கை அவசர அவசரமாக கூட்டியதின் காரணங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், நான் மறுபடியும் ஒருமுறை சொல்லிவிடுவதே நல்லது என்று போடாநாடு மீது சத்தியமாக சொல்லிக்கொல்[ள்]கிறேன், 
டிமுக ஆட்சியிலும் எங்கள் ஆட்சியிலும் எத்தனையோ யானைகளும், பானைகளும், யாகங்களும் செய்தும்..... "கரண்டு" வந்தபாடில்லை டமிழகத்துக்கு, கடைசி முயற்சியாக கேரளா கோடாங்கியையும் வரவைத்து உறுமி அடித்துப் பார்த்தும் பிரயோசனமில்லாமல் போன படியால்தான்  பிரபல[!] பதிவர்களாகிய உங்களை அழைத்து ஐடியா கேக்க தோணியது, அமைச்சர்களை விட பதிவர்களிடம் நிறைய ஐடியாக்கள் இருப்பதாக அறிந்தே இந்த கூட்டத்தை கூட்டியுள்ளேன். இனி உங்கள் எண்ணங்களை சொல்லலாம்.

பொ.செல்வம் : மம்மா...டினகரனை கட்சியை விட்டே தூக்கினால்தான் டமில் நாட்டுக்கு மின்சார விமோசனம் கிடைக்குமென்று செங்கல் கோட்டையன் சொல்லசொன்னார்...என்று சொல்ல, மம்மா முறைக்கிறார்..

பசிகலா : அக்கா அக்கா...நான் வேணா மைசூர் போயி சொல்லமாடன் சாமிக்கு கிடாவெட்டி போட்டு குடும்பமாக மங்களம் பாடிவிட்டு வந்துறட்டுமா..? கரண்டு உடனே  வந்துரும்...

சிபி [பதிவர்] : ஆமா உடனே வாயை பொளந்துரும்....பசிகலா வெறியாக அண்ணனை பார்க்க, டேபிளுக்கு கீழே பம்முகிறான்.
பக்கி : ஒன்று செய்யலாம் மம்மா, கேமரூன் காட்டுக்குள்ளே இருக்கும் காட்டுவாசிகளை போடாநாடு அழைத்து வந்து, கும்மாகுத்து நடனம் ஆடச்செய்து, பாம்பில் ஊறவைத்த ஒயின் கொடுத்து தீக்கொளுத்த சொல்வோம், உடனே கரண்டு பப்பரப்பான்னு வந்துரும்.

பக்கத்தில் அமர்ந்திருந்த சிபி ஓங்கி ஒரு கொட்டு கொடுக்க, பக்கி கலவரமாகிறான்.

பவர் அமைச்சர் : மம்மா, இது வேற்காடு ஏழுமுகத்தின் சதி என்றே நினைக்கிறேன், என்னை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதபடி தாங்கள் என்னிடம் பேசுவதுபோல மிமிக்கிரி செய்து என்னை செயல்படமுடியாதபடி செய்வதாக எனக்கு ரகசிய தகவல் வந்துருக்கு....இதை சப்பிரமனியன் சுவாமி சொல்லசொன்னார்.
நாஞ்சில்மனோ : அடிங்"கொய்யா"ல"....என்று எழும்பவும், பக்கி டேபிளுக்கு கீழே காலால் ஒரு மிதி கொடுக்க, கலவரமாகி பயத்துடன் நடுங்கியவாறு மெதுவாக, மம்மா..... அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா "கொய்யா" மரத்துல இருந்து கரண்டு எடுக்கலாம்னு நினைக்கிறேன் காரணம் இணையதளங்களில் "கொய்யா" என்று சொன்னதுமே பலர் ஷாக் ஆகிறார்கள், எதுக்கும் பப்துல் கலாமிடம் சொல்லி விஞ்ஞானிக்க சொல்லவும்.

பன்னி குட்டி : கோடாங்கியும் சரி, சொல்லமாடனும் சரி, யானையும் சரி, பானையும் சரி, போடாநாடும் சரி, கொய்யாவும் சரி இவைகளால் கரண்டை கொண்டு வரமுடியாது ஆனால்...
கோபலலிதா : ஆனால் என்ன ஆனால்...? சொல்லுங்க சொல்லுங்க மிஸ்டர் பன்னி.....நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.

நாஞ்சில்மனோ : நாசமாபோச்சுபோ....

பன்னி குட்டி : மனோவை முறைத்தவாறே....மம்மா, அந்த கோடாங்குளம் பணு உலையை திறந்தோம்னா கரண்டு வெடிச்சிரும்..... ச்சே ச்சீ.... கிடைச்சிரும் என்பது என் தாழ்மையில்லாத கருத்துன்னு சொல்லமாட்டேன்னு சொல்லி........ சொல்லாம இருக்கமாட்டேன்.

சரிப்பு போலீஸ் : எட்றா அந்த அருவாளை...

பம்சை அரசன் பாபு : தம்பி அடங்கு, பெரியவிங்க பேசிட்டு இருக்கோம்ல...? 

"பலியுகம்" தினேஷ் : பலாயி போலாயி கோலாகி நொந்து கொசு வந்து கோடியில் ஆடி படியில் வெந்து காலரா போலரா தைங் தக்கா தை ஆடியது...

பரசன் : வேகமாக எழும்பி வந்து தினேஷ் காலில் விழுகிறார் [[கோபலலிதா முறைக்கிறார்]] தெய்வமே...நீங்க இம்புட்டு நாளும் எங்கே இருந்தீக....? கரண்டே வேண்டாம்டா சாமீ ஆளை விடுங்க...என்று தலைதெறிக்க வாசலை நோக்கி ஓடுகிறார்.
கே ஆர் விஜயன் : இங்கே கூடியிருக்கும் அமைச்சர்களால் வாயே திறக்கமுடியாமல் இருக்கிறார்களே இதற்கும் கரண்டுக்கும் என்ன சம்பந்தம், இவர்களை ஏன் மம்மா அவர்கள் அழைத்து இருக்கிறார்கள் என்ற காரணம் புரியாமல் யோசித்து கொண்டே இருக்கிறேன்.

பக்கி : யோவ் இதென்ன உம்ம நாகர்கோவில் ஆபீஸ்ன்னு நினைச்சீரா..? "கொய்யால"ன்னு அந்த நாதாரிப் பயலை என்னைக்கோ திட்டுனதை மனசுல வச்சிகிட்டு கொய்யாவுல இருந்து கரண்டுன்னு போட்டு குடுக்குறான் ஓய்...

ஒழுங்கா பியட்னாம் போயி சேருவேனா இல்லை பாஸ்போர்ட்டை புடுங்கிட்டு ஆப்பு அடிப்பானுகளான்னு ஆடிப்போய் இருக்கேன், ஐயோ என் ஆபீஸ்ல ஐந்தாவது வந்து சேர்ந்த அந்த ஸ்டெனோ காத்து இருக்குமே...
பன்னி குட்டி : ஆமா இவரு பெரிய கவர்னரு, டேய் அங்கே இருக்குறதே நாலே நாலு இந்தியாக்காரனுக, அதுகளும் பச்சைபாம்பை பிடிச்சி தின்னுட்டு டவுசரோட அலையுறானுக...இங்கே வேலூர்ல கொஞ்சநாள் இருந்துட்டுப் போய்யா...

கோபலலிதா : பதிவர்கள் என் பொறுமையை சோதிக்க வேண்டாம்...அமைச்சர்கள் போலவே அமைதியாக இருங்கள், பஜயகுமார் குண்டாந்தடியோடும், பளர்மதி மீன் வாலோடும் வாசலில் இல்லை என்பதை இங்கே நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

கே ஆர் விஜயன் தன் இரு செருப்பையும் கழட்டி கக்கத்தில் வைத்துக்கொள்கிறார்.

ரகசியமாக நாஞ்சில்மனோ காதில்...

"மக்கா, நிலைமை சரியில்லை போல தெரியுது ஓய், அன்னைக்கு எருமைநாயக்கன்பட்டியில் நடந்த அதே களேபரம் இங்கேயும் நடக்கும்னு தோணுது எதுக்கும் பேப்பர் அருவாளை சுருட்டி தூரப்போட்டுட்டு, செருப்பை கழட்டி கையில் வைத்துக்கொள்ளும் ஒய்"
சிபி : மம்மா அவர்களே, உங்கள் அமைச்சர்கள் யாவரும் தனிமையில் மொட்டைமாடியில் நின்று வீரவசனம் பேசுகிறார்களே ஒழிய, எங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவே தயங்குகிறார்களா அல்லது பசிகலா'வுக்கு பயப்படுகிறார்களா என்றே தெரியவில்லை, கரண்டு என்னாச்சுன்னு பதிவர்கள் கேட்டா...

வேலூரை தெரியுமா? பாளையங்கோட்டையை தெரியுமா? புழல் தெரியுமா? ஏன் அந்தமானைக் கூடத்  தெரியுமா என்று கேட்கிறார்கள்...?

பக்கி : மனசுக்குள்' இன்னையோட இவன் செத்தான்டா...அப்பாடா இனி ஒரு நாளைக்கு பத்து பதிவு போட்டு தமிழனை கொல்ல ஒருத்தன் பிறந்துதான் வரனும் ஸ்ஸ்ஸ் அபா தப்பிச்சுதுடா பதிவுலகம்...சத்தமாக, ஆங்.... சிபி அண்ணன் என்ன சொல்றான்னு எனக்கு கேக்கவே இல்லை மம்மா, அவன் யாருன்னே எனக்குத் தெரியாது, ஆனால் நாஞ்சில்மனோ அவனுக்கு பினாமின்னு கே ஆர் விஜயன் சொல்ல சொன்னாரு.

கே ஆர் விஜயன் : ஆஹா......எருமைநாயக்கன்பட்டியேதான்....
பம்சை அரசன் பாபு : கொய்யாவில் இருந்து "கரண்ட்" என்பது நல்ல விஷயமே மம்மா அவர்களே, டரர் குரூப்பிடம் மற்றும் நாஞ்சில்மனோ நண்பர்களிடமும்  சொன்னால் கொய்யாக்களை அமோகமாக விளைவிப்பார்கள் என்பது என் கருத்து..

பன்னி குட்டி : ஆஹா சொந்த செலவுலேயே தம்பி சூனியம் வைக்குறானே...சத்தமாக, கொய்யா என்பது என்ன...? அதனூடே 'ல' சேரும் போதுதான் ஷாக் அடிக்கிறது என்பது என் தாழ்மையில்லாத கருத்து.

கோபலலிதா : அப்போ "ல" என்ற வார்த்தையில் கரண்ட் இருக்குறதா சொல்றீங்களா மிஸ்டர் பன்னி..?

சின்னவீடு சுரேஷ் : அவருக்கு அம்புட்டு அறிவு பத்தாதுங்  மம்மா, நான் சொல்லுறேனுங்.....இப்போ ஒரு நாயை பாருங்...அப்பிடியே குனிஞ்சி கல்லெடுத்தா நாய் ஷாக் ஆகுதா இல்லையா..? அந்த கல்லு'இந்த "ல" இருக்கு பாருங்க அதான் "ல"வுல கரண்டு இருக்குன்னு சொல்றோமுங்...

கோவை டைம் : அடிங்கொய்யால....மனதுக்குள், டாஸ்மாக் கடையை நாரடிச்சுட்டு வந்து பேசுறப் பேச்சப்பாரு....?


பளர்மதி : மம்மா நான் உள்ளே வரட்டுமா சத்தம் கேட்டாப்ல இருக்கு என்று மீன்வாலை சுருட்ட...சிபி அண்ணன் சுவற்றோடு பல்லிபோல ஓட்டுகிறான்.
பேய் நக்ஸ் பக்கீரன் : மம்மா, பாவம் பயபுள்ள கரண்டு இல்லாம கஷ்டப்படுவானேன்னு நினச்சி விசாரிக்கப் போனை போட்டா, இந்த நாஞ்சில்மனோ போனை எடுக்கவேமாட்றான் மம்மா...இவனுக்கு கரண்டு ஒரு கேடா? [[யோவ் அண்ணே, சரக்கடிச்சா மட்டும் தம்பிக்கு போனா பிச்சிபுடுவேன்பிச்சு]]

சென்னை பவன் : சென்னை பட்டணத்திலே அதுவும் மம்மா பக்கத்தில் நாங்கள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு கவலையேது, மஞ்சாசிங்கம் பாரில் ஏறி சட்டையை கழட்டினால் கரண்டும் நாணும்...கண்ணாடியை சற்று மூக்கில் தூக்கி வைக்குறார் விரலால்...
பன்னி குட்டி : அதென்னடா கொக்காமக்கா வந்ததுல இருந்தே பாக்குறேன் மினிஸ்டர்ங்க ஒரு பயலும் வாயே திறக்கமாட்றானுக, பன்னி குட்டிபோட்ட கணக்கா...? பிச்சிபுடுவேன் பிச்சி, மம்மா இருக்காங்களேன்னு பம்மிட்டு இருந்தா ஓவரா சீனைப் போடுறானுக கம்னாட்டிக பேசாம இருந்து, கொய்யா...ஐயோ மம்மா மன்னிச்சு, பவர் இல்லாத கடுப்புல ஒவ்வொருத்தனுக்கும் பவர்ஸ்டார் படங்களின் டிவிடி"யை பார்சல் அனுப்பி வலுக்கட்டாயமாக பாக்க வச்சிப்புடுவேன் ஜாக்கிரதை.

கோபலலிதா : மிஸ்டர் பன்னி.... கூல்....இப்போ பிரச்சினை கரண்டை பற்றினது...

பன்னி குட்டி : மெதுவாக...ஆமா, இதுக்கு பேசாம சுடுகாட்டுல போயி குடும்பம் நடத்தலாம், சத்தமாக....ஒ...மம்மா...கொய்யா"இருந்து தாராளமா கரண்டு எடுக்கலாம் கேன் யு அப்ரூவல் பிளீஸ்...

பலேசியா சில்வி டீச்சர் : அய்யோடா..."ல"வுல கரண்டா...? நாங்க இங்கே மலேசியாவுல 'ல' போட்டுதான் பேசுவோம்'லா....மேடம், "ல"வுல சத்தியமா'லா கரண்டு'லா இருக்கு'லா....

நாஞ்சில்மனோ : நாசமாபோச்சுபோங்க இனி அங்கேயும் கரண்டு இல்லாம போயிரும் அவ்வ்வ்வ்...

பக்கி : யாருடா அங்கே அழுவுறது..? வாயி'ல' குத்திப்புடுவேன், அய்யூ இங்கேயும் 'ல"வா?

அமைதியாக இருக்கும் சாப்பாடு உலகம் கோபமாக எழும்பும்முன், அவர் பாடிகாட் திவானந்தா சுவாமிகள் எழும்பி உருட்டுகட்டையால் பக்கியை ஒரு போடுபோடுகிறார்... அண்ணன் சைலண்ட் ஆகிறான்.
சிபி : ஆக...... கி'ல்'மா என்றாலும் பதிவுலகம் ஷாக் ஆகிறது ஸோ அதிலும் 'ல' இருக்கிறது என்பதை தாழ்மையாக மம்மாவின் காலை பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

பன்னி குட்டி : நாதாரி என்னை உள்ளே தூக்கி போட்டுறாதீங்கன்னு கெஞ்சுறதை எப்பிடி நாசூக்கா சொல்லுறான் பாரு....உருப்பட்டுரும் நாடு கொய்யாமக்கா ச்சே ச்சீ கொக்காமக்கா...
கோபலலிதா : 'ல'வில் கரண்டு இருப்பதாக சொன்ன பதிவர்களுக்கு எனது அரசு வரிவிலக்கு[!] அளிக்க சட்டம் கொண்டுவரும், இனி யாருமே பதிவர்கள் கூட 'ல' என்பதை யூஸ் பண்ணக்கூடாது, மீறுபவருக்கு பவர்ஸ்டார் படத்தை தனியாக அமர்ந்து தியேட்டரில் பார்க்கவைக்கப்படுவர் கதற கதற..... 'ல'வில் கரண்டு இருப்பதை கண்டுபிடிக்க பப்துல் கலாம் தலைமையில் குழு அமைக்கப்படும் என்பதை தெரிவிப்பதோடு.....

கே ஆர் விஜயன் : மெதுவாக மனோவிடம், எலேய் மக்கா அழுகுன பழச்சாறு நாற்றம் வந்தாப்புல இருக்கே பார்த்தீரா ஓய்..?

நாஞ்சில்மனோ : அட ஆமாய்யா....

விஜயன் கலவரமாகிறார் செருப்பை இறுக பிடித்துக்கொள்கிறார்...

வெளியே கலவரமான சத்தம் கேட்கிறது....வாசலில் நின்ற பளர்மதியும் பஜெயகுமாரும் வாந்தியெடுக்க வாசலைவிட்டு ஓடுகிறார்கள்....

வேகமாக தள்ளாடியபடி உள்ளே வருகிறார் கப்பல் "கேப்டன்"........ அரங்கம் மொத்தமும் டாஸ்மாக் வாடை பரவுது....

"டாய்......ராஜாக்கலு வந்துலு..... டாய்..... ராஜாக்கலு போயிலு....நீயாலு எனக்கு சம்பளம் தாறேலு...? நான் இங்கேலு  ஒரு புதிர் கட்சியாலு  இருந்தும்லு  என்னைக்கேக்காமலு  எப்பிடிலு கூட்டம்லு நடத்தலாம்லு...? 

ஏய்....கேட்டுக்கலு....'ல'...'லு'...'லி' தெலுங்குலு...கரண்டை 'ல"வுல இருந்து எடுக்க விட்டுருவேனாலு பார்ப்போமாலு..."என்று பாட்ட'லை' சுழட்ட....

விஜயன் செருப்பை மனோ மீது எறிந்துவிட்டு அவன் தோளில் மிதித்து ஜன்னல் எட்டிப்பிடித்து தாவி ஓடுகிறார், சிபி....ஒரே ஜம்பில் பக்கி இடுப்பில் ஏறி உட்கார, பக்கி ஓடமுடியாமல் தடுமாறி கீழே விழுகிறான்...சின்னவீடு உடம்பை தூக்கி ஓடமுடியாமல் நின்று கதகளி ஆடுகிறார்...பன்னி, கேப்டனுக்கு தட்டாமாலை காட்டி அவரை கிர்ர்ர்ராக்கி விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்...

சில்வி டீச்சர் ஹேன்ட் பேக்கை தோளில் போட மறந்து [[பயந்து]] தலையில் மாட்டிக்கொண்டு ஏர்போர்ட் நோக்கி ஓடுகிறார்....சென்னை பவன், மஞ்சாசிங்கம் இவரை தள்ளிட்டு ஓடிய வேகத்தில் காணமல் போன கண்ணாடியை தரையில் தேடுகிறார்...

சாப்பாட்டு உலகம் மெதுவாக எழும்பி வந்து கேப்டன்  முன்பு நின்று அலட்டிக்காமல் ஒரு லுக் விட, கேப்டன் தள்ளாடியபடி சற்று பின்வாங்குகிறார், சாப்பாடு உலகம் பின்னாடியே வந்த திவானந்தா சுவாமி கேப்டனை விரலைக்காட்டி, நாக்கை ரெண்டாக மடித்துக்காட்டி பயமுறுத்துகிறார்....
எதுக்குமே அசையாமல் அமர்ந்திருக்கும் கோபலலிதாவை பார்த்து, சாப்பாடு உலகம் சொல்கிறார்....

நீங்க நல்லா இருப்பீங்க மேடம்..... நல்லா இருக்கனும்... கரண்டைப்போல..வாழ்க வாழ்க....!

டிஸ்கி : சும்மா தமாஷா நினச்சுக்கோங்க ஹி ஹி....

டிஸ்கி : என் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி...

Tuesday, November 20, 2012

அப்பாடா இம்புட்டுதான்ய்யா மருத்துவம்...!

சேனா தலைவர் பால்தாக்கரேயை பலர் தம் தம் பிளாக்கில் போட்டுத்தாக்கினாலும், ஒன்றே ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளவேண்டிய காரியமும் உண்டு அது...?

நிழல் உலக தாதாவின் ஆட்சி மும்பையில் படராமல், வேர்விடாமல் தடுத்ததில் பால்தாக்கரேக்கு அதிகமான  பங்கும் உண்டு என்பது மறுப்பதற்கு இல்லை, இல்லைன்னா நம்ம டாக்டர் அப்துல்கலாம் இந்தியா 2020ல்  வல்லரசு ஆகி இருக்கும் என்று சொல்லிருக்கமுடியாது, இந்தியா "பல்லரசு" ஆகி பல்லை காட்டியிருக்கும்....அதாவது மும்பை முற்றும் நிழல் உலக கும்பல் கைகளின் கக்கத்துக்குள் போயிருக்கும்...!

@பண முதலைகளுக்கும், அரசியல் வியாபாரிகளுக்கும், நிழல் உலகத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஆளும் வர்க்கத்திற்கும், ஆளாதவர்க்கத்திர்க்கும் தீராத தலைவலியாக மாறியிருப்பது சமூக இணையத்தளங்கதானாம்...!

@நஷ்டம்...நஷ்டம் என்று அலறும் விஜய் மல்லையா, மான்யமாக பெறப்போகும் பணம் யாருடையது..? காங்கிரஸ் கட்சியின் "@#$%%^" சம்பாதிச்சு வைத்ததா? மக்களின் பணம்ய்யா மக்களின் பணம்...!

@திடீரென குளிகாலம் ஆரம்பித்ததால் பஹ்ரைனில் ஸ்வெட்டர்களின் விலை தாருமாறாகிவிட்டது மலையாளி சேட்டன்களின் புண்ணியத்தில், ஒரே பிராண்ட் கடைக்கு கடை விலையை மாத்தி மாத்தி சொல்லி விக்குரானுக...!!!

@முகரம் பண்டிகையால் பஹ்ரைனுக்கு வரும் சுற்றுலா பயணிகள்[!!!] எண்ணிக்கை ககககககணிசமாக குறைந்துள்ளது. [[கலவரம் காரணம் அல்லது பயம்]]

@போன வருஷம் பிளாக் எழுதிய கணிசமான பிளாக்கர்ஸ் இந்த வருஷம் அட்ரஸே இல்லாமல் போனதன் மர்மமும் புரியவில்லை, ஏனென்றும் விளங்கவில்லை...!

@இந்தியன் முஜ்ராக்களில் நேப்பாள் பெண்களின் வருகை அதிகமாக இருக்கிறது, இருபது வயசுக்குட்ப்பட்ட பெண்கள், பார்க்க மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது [[பஹ்ரைன்]]


@தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்.

நன்றி : சிவகுமார் சித்தமருத்துவம்

@வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

@தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகி[கனா]யாகவே இருக்கலாம்.


நன்றி : பாட்டி வைத்தியம்.

Monday, November 19, 2012

வெளிநாட்டில் வாழும் சிறகொடிந்த ஏமாளிகள்...!

வளைகுடா நாட்டில் சில குரூரமான புத்திசாலி[!] அண்ணன்களை கொண்ட பங்களாதேசி நண்பர்களின் கதைகளை கேட்கும்போது கண்ணில் ரத்தக் கண்ணீரே வந்துவிடும் அளவுக்கு சோகம் நிறைந்ததாக இருக்கிறது...!

உதாரணத்திற்கு, நான்கு அண்ணன் தம்பிகள் கொண்ட கஷடப்பட்ட குடும்பத்தில், வங்கியில் லோனும் அங்கே இங்கே கடனும் வாங்கி மூத்தவனை வெளிநாடு அனுப்புகிறார்கள் பெற்றோர்கள், அவன் இங்கே வந்து கடுமையாக உழைக்கிறான்.
உழைத்து, கடன்களை கொடுக்காமல் அடுத்து ஒரு தம்பியை வெளிநாடு அழைத்துக்கொள்கிறான், அந்த தம்பியின் சம்பாத்தியம் கொண்டு குடும்பத்திற்கு பணம் அனுப்பிவிட்டு இவன் சம்பாத்தியத்தை புத்தியாக சேமிக்கிறான்...

கேட்டால் நான் உங்களுக்காகவே சேமிக்கிறேன் என்று பொய் சொல்லுகிறான், பாவம் பெற்றோரும் நம்பிவிடுகிறார்கள், அடுத்தும் ஒரு தம்பியை வெளிநாடு வரவைக்கிறான்...!

அவன் சம்பாத்தியத்தையும் சேர்த்து வைத்துகொண்டு இவன் ஊர் செல்கிறான் விரும்பிய பெண்ணை மணம் முடிக்கிறான், மறுபடியும் திரும்பி வெளிநாடு வந்து, கடைசி தம்பியையும் வெளிநாடு வரவைத்துவிட்டு, இவன் குரூரபுத்தியை காட்டுகிறான்...!
அதாவது எப்படியும் ஏழெட்டு வருஷம் ஆகிவிட, தம்பிகள் பணத்தில் நிலம் பூமி கடைகள் என்று எல்லாமே இவன் பெயரில் [[ஏமாற்றி]] வாங்கிக்கொள்கிறான்.

எல்லாம், தம்பிகளே நான் உங்களுக்காகவே செய்கிறேன் என்று தெய்வ சத்தியமும் பண்ணுகிறான், கடைசியில்..சரி இனி நான் ஊர்போய் கடைகளை பார்த்துக்கொள்கிறேன், அங்கே பிஸினஸ் வளர்ந்ததும், ஒவ்வொருத்தனாக ஊருக்கு உங்களை அழைத்து எல்லா தம்பிகளுக்கும் கடைகள் வைத்து தருகிறேன் என்று ஊர் செல்கிறான்.

மூன்று தம்பிகளின் மாதம் வருமானமும், ஊரில் கடைகளின் வருமானமும் அண்ணனை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது, இடையில் இன்னொரு தம்பிக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறான்....!
கல்யாணம் முடிந்தது தம்பி வெளிநாடு வந்துவிட, தம்பியின் மனைவியின் மூலம் அண்ணனின் பல கோல்மால்கள் வெளியே தெரிய வருகிறது, கடுப்பான தம்பிகள் அண்ணனிடம் கேள்வி கேட்க....

அதற்குள் தன்னைப் பலப்படுத்திக்கொண்ட அண்ணன், தம்பிகளை மிரட்டுகிறான்..."என்னா செய்யமுடியுமோ செய்துக்கோ போடா" பரதேசியாக போன தம்பிகளுக்கு உள்ளூரில் பலமாக காலூன்றிய அண்ணனிடம் நியாயம் கேட்க திராணி இல்லாமல் போகிறது...! மனதுக்குள் அழுகிறார்கள்...

இனி அடுத்த இரண்டாவது அண்ணன் வருகிறான், எப்பா ஒன்னும் கவலைப்படாதீக அண்ணன் நான் இருக்கேன்ல அவன்தான் ஏமாத்திபுட்டான், இனி எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கண்ணீர் வடிக்கிறான், அவனை நம்பி தம்பிகள் சம்பளங்கள் கிம்பளங்களை கொடுக்கிறார்கள்...!
இனி அடுத்த தம்பிக்கு கோலாகலமாக திருமணம் நடக்கிறது, அதற்குள் இளைய அண்ணன் ஊரில் கடைகண்ணிகள் வாங்கி ஸ்டெடி ஆகிவிடுகிறான், மறுபடியும் அதே ஏமாற்றம், தம்பி பொண்டாட்டி வந்து கேள்விகள் கேட்க...."உங்களால் என்னா செய்யமுடியுமோ செஞ்சிக்கோங்க" டயலாக் வருகிறது அடுத்த அண்ணனிடமிருந்தும், தம்பிகள் ஏமாறுகிறார்கள்...!

அதற்குள் தம்பிமார் வயதும் கூடிவிட, கல்யாணம் ஆஸ்திகள் ஏதும் செய்யமுடியாமலும் ஊரில் ஆதரவு இல்லாமலும் போகின்றனர் தம்பிகள்...! கோபத்திலும், இயலாமையிலுமாக யாரையும் நம்பாமல் வாழ்கின்றனர் தம்பிகள்...!

அப்படியே ஊர்வந்து கல்யாணம் செய்தாலும் இவர்கள் இவர்களுக்கு வருமானம் இல்லாமல் மறுபடியும் வெளிநாடு வர, குழந்தையும் பிறக்க, ஊருக்கு போகமுடியாமலும் தவிக்கும் பெங்காலிகள் ஏராளம்...!

கண்ணீர்களை அவர்கள் எப்படி மறைத்து வைத்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது...!
ஆக இவர்கள் அப்புறமாக யாரையும் நம்பவே மாட்டார்கள், மூத்த அண்ணன் கூட இருக்கும்போது, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அண்ணன் வருவதை கண்டதுமே மரியாதையாக சைக்கிளை விட்டு கீழே இறங்கி நடந்துவரும் தம்பிகள், இம்புட்டு பிரசினை நடந்தபின்பு அதே அண்ணனை காறி துப்புவது இங்கே வாடிக்கையாக இருக்கிறது...!

இருவது வருஷம், பதினைந்து வருஷம், பத்து வருஷமாக ஊர் போகமுடியாமல் போகும் பெங்காலிகளை பார்க்கும்போது மனது ரணமாக வலிக்கிறது...!
மேலே நான் சொன்னது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமே...! வளைகுடா நாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும் என நினைக்கிறேன்.

நம்ம தமிழ் அண்ணாச்சிகளும் ஒரு சிலர் ஊர் போகாமல் அல்லது ஊர் போகமுடியாமலும் இருந்ததை முன்பு நான் பார்த்ததுண்டு...ஆனால் அவர்கள் குடும்ப நிலவரம் தெரியவில்லை. 

டிஸ்கி : படங்கள் கூகுள் உதவி 

Sunday, November 18, 2012

தமிழன் என்று சொல்லடா நீ சாதித்தும் காட்டடா...!

புதிய கம்பெனியில் நான் வேலைக்கு சேர்ந்ததும் எனக்கு கம்பெனி ரூம் தந்தார்கள், அங்கே என்னோடு பணி புரியும் அடுத்த செக்சன் ஆட்களும் தங்கியிருப்பதால், அவர்களில் சிலர் என் ரூமிற்கும் அடிக்கடி வந்துபோவதுண்டு.

அதில் ஹோட்டலில் ஒரு முக்கிய பொஷிசனில் இருக்கும் சேட்டனும் ஒருவர், நான் லேப்டாப்பில் இருந்துகொண்டு பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும், பிளாக்கிலுமாக அளவளாவியது கண்டு அவருக்கும் பேஸ்புக் ஆசை தொற்றிக்கொள்ள...

டியூட்டியில் இருந்துகொண்டே [[டியூட்டியில்]] அவரும் பேஸ்புக் அக்கவுன்ட் ஒப்பன் பண்ணி தங்கள் நண்பர்களோடு அளவளாவினார், ஆனால் சேட்டனுக்கு "மலையாளத்தில்" டைப் பண்ணும் மேட்டர் தெரியவில்லை, அதற்காக என்னை அவர் ஆபீசுக்கு அழைத்து, பேஸ்புக்கில் என்னென்ன செய்யலாம் என்று கேட்டதை எல்லாம் எனக்கு தெரிந்தவரை சொல்லிக்கொடுத்தேன்.
அப்படியே மலையாளம் டைப்புவதை சொல்லிக்கொடுத்தும், மலையாளம் ஆஃப்சன் இருப்பதையும் எப்படி டைப் செய்யவேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்தேன், அதுதான் எனக்கும் "அன்பான" வினையாக போயிற்று.

அதுவரை டியூட்டியில் பேஸ்புக்கில் விளையாடியவருக்கு, டியூட்டி முடிந்தும் அதில் விளையாட ஆசை வந்துவிட, என் ரூமில் வந்து என் லேப்டாப்பை கேட்டு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்...!

இவருக்கு ஒரு குணமுண்டு, காலையில் பாத்ரூம் போனதில் இருந்து இவர் உறங்கும்போது காணும் கனவுகள் வரை மனைவியுடன் பெரிய கதையாக சொல்லி அருகில் இருப்பவர்களை ஓடவைப்பது வழக்கம்.[[அவ்வ்வ்வவ்வ்வ்]]

நானும் தெரியாமல் பேஸ்புக் வீடியோ சாட்டிங்கை காட்டிகொடுத்துவிட, எனக்கு கொலைகொலையா முந்திரிக்கா கதையாகிவிட்டார். நாள்தோறும் என் ரூமிற்கு வந்து அவர் குடும்பத்தோடும் நண்பர்களோடும் வீடியோ சாட்டிங்கில் பேசி, என் உறக்கத்தையும், என் சாட்டிங், பேஸ்புக், டுவிட்டர், பிளாக் விளையாட்டை கெடுக்கத் தொடங்கிவிட்டார், எனக்கோ தர்ம சங்கடமாகப்போனது.
சொல்லவும் முடியவில்லை, வயதுக்கு மூத்தவர் வேறே, நல்லமனுஷனும் கூட....வருத்தப்பட்டுருவாரேன்னு நினச்சி சில நேரங்களில் இவர் டியூட்டி முடியுமுன்னே நான் ரூமுக்கு ஓடிப்போயி கதவை பூட்டிக்கொண்டு விடுவேன்.

ஆனாலும் இவரும் எனக்குமுன்பே ஓடிவர ஆரம்பித்துவிட்டார், அப்புறம்தான் ஒருநாள் சொன்னேன் நீங்களும் ஒரு லேப்டாப் புதுசாக வாங்கினால் என்னவென்று, இல்லை மனோஜ் எனக்கு லேப்டாப் யூஸ் பண்ணத் தெரியாது....ஐயோ சாதா நீங்கள் கம்பியூட்டர் ஆபரேட் பண்ணுவது போலதான் லேப்டாப்பும் என்று சொல்லி விளக்கினேன்.

அம்புட்டுதான்..... சம்பளம் வாங்கியதும் என்னையும் கூட்டிக்கொண்டு லேப்டாப் கடைக்கு போயேவிட்டார், என் நண்பன் விண்ணரசன் எனக்கு லேப்டாப் வாங்கித்தந்த அதே கடைக்குக் கூட்டிப்போயி, hp கம்பெனி லேப்டாப் ஒன்று வாங்கினோம்.
லேப்டாப் வந்தாச்சு சரி, இன்டர் நெட் கனெக்ஷன் வேணுமே..? zain கம்பெனிக்கு போனால் அங்கே இவர் பாஸ்போர்ட் கேட்க, இவரிடம் இல்லை, எங்கள் கம்பெனியிடம் அதற்க்கு அப்ளை செய்தாலே கிடைக்கும்.

பாஸ்போர்ட்டும் நெட் கனெக்ஷன் டிவைசும் கிடைக்க ரெண்டு நாளாகிவிட, என்பாடு பெரிய போராட்டமாகிவிட்டது, டிவைஸை கொண்டுவந்து மாட்டினவர் என்ன செய்தாரோ தெரியல, நெட் கனெக்ஷன் புட்டுகுச்சு.

மறுபடியும் எனக்கு தலைவலி தொடங்க, என்னை தூங்கவிடாமல் படுத்திவிட்டார், நெட் கனெக்ஷன் என்ன பிரசினைன்னு பல நண்பர்கள், எங்கள் ஹோட்டலுக்கு வரும் டெக்னீஷியன்கள் என்று யாரையும் இவர் விடவில்லை, ஒருத்தனும் இவருக்கு சரியானபடி சொல்லி கொடுக்கவில்லை.
நடுவில் என்னையும் போட்டு உருட்ட ஆரம்பித்தார், எனக்கோ மனசு கேக்கவில்லை, அவருக்கு என்ன மனைவி பிள்ளைகள் கூட எப்பவும் பேச ஆசையாக இருக்கிறாரே என்று சொல்லி, 

குடும்பத்தை ஊரில் இருந்து கொண்டுவந்து ஒருவாரமே ஆன நண்பன் விண்ணரசனுக்கு [[மனசே இல்லை பாவம் அவன்]] போன் போட்டு விஷயத்தை சொன்னேன், அதுக்கு என்ன அண்ணா நான் நாளை காலையிலேயே உங்க ரூமிற்கு வந்து செய்து கொடுத்துவிடுகிறேன் கவலைவேண்டாம் என்றான்.

ஆனாலும் சேட்டன் நம்பவில்லை, ம்ஹும் நான் பார்க்காத ஆளா, டெக்னீஷியனா..? ஒரு தமிழன் வந்து எனக்கு நெட் கனெக்ஷன் செய்து தருவதா நாங்கள் என்ன அம்புட்டு அறிவில்லாதவர்களா என்ற தொனியில்தான் அவர் பேச்சும் இருந்தது...! நான் கண்டுகொள்ளவில்லை.
அடுத்தநாள் விண்ணரசன் ஓடோடி வந்தான், லேப்டாப்பை செக் பண்ணினான், டிவைஸை குத்தினான், வேலை செய்யவில்லை, நேரே zain கஸ்டமர் சர்வீசுக்கு போனைப்போட்டான் விசாரித்தான், பத்தே நிமிஷம் நெட் ஒப்பன் ஆனது, அண்ணா நான் கிளம்புறேன்னுட்டு நன்றிகளை எதிர்பார்க்காமல் ஓடிப்போனான் அவன் வீட்டுக்கு...!

சேட்டன் பிளந்த வாயை மூடமுடியாமல் நின்றிருந்தார்....!

"ஹலோ என்னாச்சு சேட்டா?"

"எடே, பல மலையாளி பன்னாடை பரதேசிங்க எல்லாம் பெரிய பெரிய டெக்னீஷியன்னுட்டு பீலா விட்டுட்டுதான் திரியுறானுக போல, ஐந்து நட்சத்திர ஹோட்டல் டெக்னீஷியங்க கூட வந்து பார்த்துட்டு, ஒன்னும் தெரியலைன்னுட்டு போனானுக, இவன் வந்தான் பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் முடிச்சுட்டு போயிட்டானே"ன்னு மூக்கில் விரலை வைக்க....!

நான் ஒன்றும் சொல்லாமல் போயி தூங்கிவிட்டேன்.
நான் டியூட்டியில் இருக்கும்போது [[ரெண்டுபேருக்குமே ஒரே நேரம்தான் வேலையும்]] என்னிடம் வந்தவர் சொன்னார், "உலகத்துலேயே கம்பியூட்டர் கில்லாடிங்க தமிழனுகதான்னு என் கேரளா நண்பர்கள் பலபேர் பலமுறை என்னோடு சொன்னதுண்டு, ஆனால் நான் அதை நம்பவில்லை, இன்றைக்குத்தான் நேரில் பார்த்தேன், எஸ்.... தமிழன் கில்லாடிகளுக்கெல்லாம் கில்லாடிகளே ஒத்துக்கொள்கிறேன்" என்றாரே பார்க்கலாம்...!

காலரை [[டை கட்டியிருந்தாலும்]] ஒருமுறை தூக்கிவிட்டுக்கொண்டேன்...!

ஸ்பெஷல் நன்றி : விண்ணரசனுக்கு...

Sunday, November 11, 2012

நடு தண்டவாளத்துல கிடத்தி வச்சிட்டு சிரிக்க சொல்றாயிங்க...!

@சற்றே குளிர்ந்தாலும் உறைந்தால் அதுவே உண்மையான தேங்காய் எண்ணெய்...!

@வித விதமான பட்ஷனங்கள் இருந்தாலும், மனமிருந்தால் மட்டுமே சாப்பிடமுடியும்...!

@கோழிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.

@இந்தியர்களின் பெருமான்மையையும் ஒற்றுமையையும் பிரிடிஷாருக்கு காட்டவே, திலகர் கணபதி தினத்தை பெரும் விழாவாக அறிமுகப்படுத்தினார்...!

@எம்புட்டுதான் மனசு கஷ்டத்தில் இருந்தாலும், அவ்வேளைகளில் சிலரின் நடைமுறைகளையும் அவர்களின் டென்ஷன்களையும் பார்க்கும்போது மனம்விட்டு சிரித்து விடுகிறேன், இது எனக்கு மட்டுமா இல்லை உங்களுக்கும் இப்பிடித்தானா...?
@நம்ம ஹோட்டல் சாப்பாட்டில் கைவைத்துவிடாதே ராஜா, இதோ நான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் பழங்களை சாப்பிடு வயிற்றுக்கு நல்லது, என்று சொல்லும் உடன்வேலைப் பெண்களின் அன்பு சிலவேளை அம்மாவின் நியாபகத்தை நினைவுப் படுத்தி கண்ணில் கண்ணீர் வந்து விடுகிறது...!

@வாக்கிடாக்கியில் தமிழில் "அண்ணா காப்பாத்து அண்ணா"ன்னு அலறியவனுக்கு [[தமிழன்]] இனி வயர்லெஸ்சில் ஆங்கிலம் தவிர வேற்று மொழி பேசக்கூடாது என்று வார்னிங் லெட்டர் கொடுத்தும், நானிருக்கும் தைரியத்தில் நைட் டியூட்டியில் இருக்கும்போது தமிழில் பாட்டுபாடி எல்லாரையும் கலவரப்படுத்தி, என்னையும் சிரிக்க வைத்துவிடுகிறான், என்னாத்தை சொல்லி ஆக்சன் எடுக்கன்னே தெரியலை அவ்வ்வ்வ்....!

@தகுந்த நேரத்தில் செய்யும் உதவியே தர்மம் எனப்படும், தண்ணியில் சாகக்கிடக்கிறவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட அவனை முதலில் தூக்கிவிடுவதே தர்மம் எனப்படும், அதுவே நம்மை காக்கவும் செய்யும் இல்லையா...!
@மெக்கானிக்கும், டெய்லரும், சலூன்காரனும் எளிதில் ரவுடியிசம் கற்றுகொள்கிறார்கள்...!

@எங்கள் நாடு தனக்குதானே பாம் வைத்து அந்தப் பழியை அடுத்த நாட்டின் மீது போட்டுவிடும் பழக்கம் உண்டு என்று என் பாகிஸ்தான் நண்பன் [[முன்னாள் இன்டெலிஜென்ஸ் இன்ஸ்பெக்டர்]] அடிக்கடி சொல்வதுண்டு என்று சொல்லியும் நம்பாத நண்பர்களும் உண்டு...!
@டுவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமியின் தளத்திற்கு போயி நலமா என்று [[விளையாட்டாக]] கேட்டதுக்கு, நலமே, நீங்க இருப்பது மும்பையிலதானே"ன்னு அவர் கேட்டதுக்கு நான் எடுத்த ஓட்டம்....ம்ம்ம்ம்ம்ம்....இன்னும் நிக்கவே இல்லை ஓடின்டே இருக்கேன் அவ்வ்வ்வ்...! [[இதான் வேலிக்குள்ளே போற ஓணான் கதை சொன்னாயிங்களோ நம்மாளுங்க]]
@ரெண்டு வருஷம் கழித்து லீவில் ஊருக்கு போன நண்பன், மனைவி வீட்டில் உள்ள தென்னைமரங்கள் இன்னும் வளராமல் நிற்பதை கண்டு, தரையை நன்றாக கொத்தி, உப்பு பொட்டாசியம் இன்னும் அவனுக்கு தெரிந்த உரம் வகைகளை கலந்து தென்னைக்கு போட்டுவிட, ரெண்டே நாளில் அவனை மனைவி ஊரில் இருந்து இவன் அம்மா ஊருக்கு விரட்டி இருக்கிறார்கள், ஒன்னுமே புரியாமல் மனைவியிடம் வடிவேலு கணக்கா அழுது கரைந்து கேட்க....கொய்யால இவன் தென்னைக்கு மருந்து வச்ச அடுத்தநாளே அந்த ஊரில் உள்ள கோழிகள் அனைத்தும் செத்துபோச்சாம் [[மருந்தை தின்னகோழிகள்]]

@பிங்க் கலர் பெண்களுக்கு ஃபேவரிட் என்றால், ஆண்களுக்கு...? எனக்கு ஜெர்மன் சிகப்பு பிடித்தமான கலர்...!

@வெட்கம் பெண்களுக்கு அழகென்றால், கோபமும் அழகுதான், நாம் எட்டி நிற்கும்போது...!

@கையில் காசு இருந்தால் என்றைக்கும் தீபாவளியே....ஒரு நண்பனின் வாதம்...!

@நிறைய பேசினால் உன் விலையை நீயே களைகிறாய்...!

@எட்டப்பனுக்கும் தொண்டைமானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை பெயர்களைத் தவிர...!
@கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் ஊர் நடுவே ஓடும் நதியின் பெயர் பழையாறு இல்லை "பாழாறு" என்னப்படும், அதாவது சுசீந்திரத்தில் இருந்து இந்நதி கடலில் கலக்கும் இடம்வரை "பாழாறு" என்றே அழைக்கப்படுகிறது, எங்க ஊர் பெருசுகள் சொன்னது...! [[இதுக்கு ஒரு தனிக்கதையும் உண்டு பிரிட்டிஷார் காலத்தில்]]
@என்னையாடா சமூகவலைத்தளங்களில் கிண்டல் பண்ணுறீங்க கொய்யால, என் படத்தை மட்டும் பார்த்துட்டு உயிரோடு வெளியே வந்துருங்க பார்ப்போம் வெறியில் பஜய் சபதம்...! [[அண்ணா நான் இல்லீங்ணா...]]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!