Friday, September 30, 2011

சிரிப்பு என்பது பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!!


தாத்தாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
பாட்டியை பார்த்தால் ஒரு சிரிப்பு


அப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
அம்மாவை பார்த்தால் ஒரு சிரிப்பு

அண்ணனை பார்த்தால் ஒரு சிரிப்பு
தம்பியை பார்த்தால் ஒரு சிரிப்பு

அக்காளை பார்த்தால் ஒரு சிரிப்பு
தங்கையை பார்த்தால் ஒரு சிரிப்பு

பெரியம்மாவை பார்த்து ஒரு சிரிப்பு 
பெரியப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 


சித்தியை பார்த்தால் ஒரு சிரிப்பு
சித்தப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 

அத்தையை பார்த்தால் ஒரு சிரிப்பு
மாமா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

அத்தை மகனை பார்த்தால் ஒரு சிரிப்பு 
அத்தை மகளை கண்டால் ஒரு சிரிப்பு 

நண்பனை கண்டால் ஒரு சிரிப்பு 
நண்பியை கண்டால் ஒரு சிரிப்பு 

காதலியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
காதலனை பார்த்தால் ஒரு சிரிப்பு 

குழந்தையை பார்த்தால் ஒரு சிரிப்பு
கடும் முதியோரை பார்த்தால் ஒரு சிரிப்பு

மனைவியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
கணவனை பார்த்தால் ஒரு சிரிப்பு 


கலைஞரை பார்த்தால் ஒரு சிரிப்பு \
அம்மா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு

கனிமொழி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
ஆ ராசா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

சு சுவாமி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
டி ராஜேந்தரை பார்த்தால் ஒரு சிரிப்பு 

வடிவேலை பார்த்தால் ஒரு சிரிப்பு
விஜய்காந்தை பார்த்தால் ஒரு சிரிப்பு

சோனியா காந்தியை [[இந்த பெயரை உச்சரிக்கவே எனக்கு வாந்தி வாந்தியா வருது]] பார்த்தால் ஒரு சிரிப்பு
மன்மோகன் சிங்[டி] யை பார்த்தால் ஒரு சிரிப்பு 


கவுண்டமணியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
செந்திலை [[சிபி அல்ல]] பார்த்தால் ஒரு சிரிப்பு  

ஆபீசரை பார்த்தால் ஒரு சிரிப்பு [[பயம்தான்]]
சிபி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

கோமாளி'செல்வாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
இம்சை அரசனை பார்த்தால் ஒரு சிரிப்பு

கவுசல்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
சித்ரா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

கல்பனாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
வானதியை பார்த்தால் ஒரு சிரிப்பு 

சீனா அய்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
ரத்தனவேல் அய்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 

தமிழ்வாசியை பார்த்தால் ஒரு சிரிப்பு
ஜெயந்தை பார்த்தால் ஒரு சிரிப்பு

நிரூபனை பார்த்தால் ஒரு சிரிப்பு
விக்கி "தக்காளி"யை பார்த்தால் ஒரு சிரிப்பு

வேடந்தாங்கலை பார்த்தால் ஒரு சிரிப்பு 
கவிதைவீதி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு


நாய்நக்ஸ்'நக்கீரனை பார்த்தால் ஒரு சிரிப்பு
சத்ரியனை பார்த்தால் ஒரு சிரிப்பு

சிரிப்பு போலீசை பார்த்தால் ஒரு சிரிப்பு
டெரர் பாண்டியனை பார்த்தால் ஒரு சிரிப்பு

பன்னிகுட்டியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
ஜெயலானியை பார்த்தால் ஒரு சிரிப்பு

காட்டானை பார்த்தால் ஒரு சிரிப்பு
வெளங்காதவனை கண்டால் ஒரு சிரிப்பு


ரமணி குருவை பார்த்தால் ஒரு சிரிப்பு
சென்னை பித்தன் தல'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

ஸ்ரீ நிசி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
சசிகுமாரை பார்த்தால் ஒரு சிரிப்பு

ஐ ரா ரமேஷை பார்த்தால் ஒரு சிரிப்பு
மகேந்திரனை பார்த்தால் ஒரு சிரிப்பு

சூர்யா ஜீவாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
ஜீ'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

மேனகா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு
அக்கா'கோமதியை பார்த்தால் ஒரு சிரிப்பு

வெங்கட் நாகராஜை பார்த்தால் ஒரு சிரிப்பு 
கோகுலை பார்த்தால் ஒரு சிரிப்பு


கூகுளை பார்த்தால் ஒரு சிரிப்பு
பிளாக்கரை பார்த்தால் ஒரு சிரிப்பு

பேஸ்புக்'கை பார்த்தால் ஒரு சிரிப்பு
பஸ்'சை பார்த்தால் ஒரு சிரிப்பு

டுவிட்டரை பார்த்தால் ஒரு சிரிப்பு
கூகுள் பிளஸ் பார்த்தால் ஒரு சிரிப்பு.......

பாருங்க நண்பர்களே ஒரு மனிதன் எத்தனை பேருக்கு எத்தனை விதமாக சிரித்து வைக்கிறான் என்று, யோசிச்சா ஒன்னுமே புரியலை....!!!

டிஸ்கி : ம்ஹும் இன்னும் நிறைய இருக்கு, நீங்க குனிஞ்சி கல்லை கில்லை எடுத்துரைப் புடாதே, அதான் விட்டுட்டு போறேன்.....

குடியிருக்க வீடில்லை, லேப்டாப் இருக்கு, இந்தப்படம் சந்தோஷமா வேதனையா....???  கண்டிப்பா பதில் சொல்லிட்டு போங்க....


தமிழகம் ஒளிர்கிறது குடிசைக்குள்......!!!! வாழ்க ஆட்சியாளர்கள்......!!!!!

வேதனை டிஸ்கி : யாழ்பாணத்தில் பெருகி வரும் விபச்சாரம்....!!! எனக்கு அனுப்பப்பட்ட மெயில், இந்திய நேரம் இரவு ஒன்பது மணிக்கு பதிவு வெளியிடப்படும்.








Thursday, September 29, 2011

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்....!!!!

ஒரு ஊரில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார், அவர் அமைதியாக இருக்க விரும்புகிறவர் சத்தம் கொஞ்சம் கூட பிடிக்காது. ஆனால் அவர் வீட்டு முற்றத்தில் வந்துதான் சிறுவர்கள் சத்தம் போட்டு விளையாடுவார்கள்.


பெரியவருக்கோ கோபம் கோபமாக வந்தாலும் அடக்கிகொள்வார். ஏதும் சொன்னால் அவர்கள் வீட்டில் போயி வத்தி வைத்து விடுவார்களே என பயந்தார். தீவிரமாக நம்ம கோமாளி செல்வா மாதிரி யோசித்தார்.


அடுத்தநாள், சிறுவர்கள் விளையாடி முடித்ததும், அவர்களை அழைத்தார். ஒரு பத்து ரூபாயை அவர்கள் கையில் கொடுத்து, நீங்கள் இங்கே வந்து விளையாடுவது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது, எனவே தினமும் நன்றாக விளையாடுங்கள் என்றார்.

அடுத்தநாளும் இதே போல சொல்லி பணம் கொடுத்தார். சிறுவர்களுக்கோ தாங்கொணா மகிழ்ச்சி, கடையில் போயி மிட்டாய் வாங்கி தின்று விட்டு சந்தோசமாக விளையாடினார்கள்.

இது தினமும் தொடர்ந்தது.....

ஒருநாள் திடீரென பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். சிறுவர்களும் இன்று இல்லைன்னா நாளை தருவார் என விளையாடி சென்றனர். சுத்தமாக பணம் கொடுப்பதை பெரியவர் நிறுத்தவே....

சிறுவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர், டேய் தாத்தா இப்பல்லாம் காசு தர்றதே இல்லை அப்புறம் எதுக்கு நாம அங்கே விளையாடப்போகனும்...?? வாங்க இனி நாம வேற இடத்துக்கு போகலாம்னு கிளம்பினார்கள். பெரியவர் மனசுக்குள் சிரித்துக்கொண்டே, தன் தந்திரத்தை எண்ணி சந்தொசப்பட்டுக்கொண்டார்.

நீதி : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்.

டிஸ்கி : இது சின்னபிள்ளையில எங்கயோ கேட்டதோ, படிச்சதோ ஞாபகம் இல்லை.

ஆச்சர்யமான, நட்சத்திரங்களின் அரிதான படம், நண்பன் ரவிகுமார் பேஸ்புக்ல சுட்டது...!!!!



Wednesday, September 28, 2011

சாட்டிங்கில் பதிவரை மிரட்டிய பிரபல பதிவர்...!!!!

சௌந்திர பாண்டியன்னு ஒரு ஆளாய்யா இருக்காயிங்க பதிவரா...?? ஓராயிரம் பேர் இருக்காயிங்க, சாட் பண்ணிட்டு, நான் யாருன்னு உனக்கு தெரியுமா, என்னை யாருன்னு உனக்கு தெரியுமான்னு என்னை காலி பண்ணுறாயிங்க. இந்த பெயர்ல பொம்பளைங்க வேற பேஸ்புக்ல வந்து பல்பு குடுக்குறாங்க!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிபி செந்தில்குமாருக்கும், கே ஆர் பி செந்திலுக்கும் வித்தியாசம் தெரியாம, சிபி மூதேவி'கிட்டே வாங்குன பல்பு இன்னும் கிர்ர்ர்ர் ஏத்திக்கிட்டே இருக்கு, அடுத்து நிரூபன்னு நினச்சி, கூர்மதியன்கிட்டே பல்பு வாங்கி இருக்கேன், இன்னும் பல அனுபவங்கள் இருக்கு...


இப்பிடி கைபிள்ளை கோலத்துல உக்காந்து இருக்கும் போது, நேத்து சௌந்திர பாண்டியன்னு சாட்டுக்கு அழைப்பு வருது, இவர்கிட்டே இதுக்கு முன்னாடியும் பல்பு வாங்கியிருக்கேன், இதே பெயர்ல உள்ள மற்ரவிங்க கிட்டேயும் இவர்னு நினச்சு திட்டு வாங்கி இருக்கேன் அதான் உஷாரா சாட் பண்ணுவோம்னு நினைச்சா, கீழே படியுங்க நாங்க பண்ணுன சாட்டிங்கை....


யோவ் சாட்டிங் பண்ணும் போது அடைமொழி சொல்லி சாட் பண்ணுங்கைய்யா முடியல.....

soundar:  அப்புறம் எப்படியிருக்கிங்க?

 me:  நல்லா இருக்கேன் மக்கா சொல்லுங்க

 soundar:  முதல்ல நான் யாருன்னு தெரியுதா... ? அப்புறம் யாருன்னு கேட்க கூடாது...?

 me: யாருன்னு தெரியவில்லை  ஹி ஹி....

 soundar:  யாருடைய பதிவுக்கும் நான் இன்னிக்கு போகல கொஞ்சம் வேலை மனோ.... யாராவது சண்டை போட்டுகிட்டாங்களா...?

me:  ஆயிரம் சௌந்தர் பாண்டியன் இருக்காயிங்க அதுல நீங்க எந்த பாண்டின்னு சொல்லுங்க கன்பீசா இருக்கு ஹி ஹி..

 soundar:  முதல்ல அந்த பட்டியல கொடுங்க...
நான் கிளம்புறேன்...

me:  எழ கே இருக்காரு
கவிதை இருக்காரு
டெரர் இருக்காரு
இதே பேர்ல பொம்பளைங்க பேஸ்புக்ல வந்து வேற என்னை கலாயிக்கிறாங்க முடியல, அண்ணே அண்ணே நீங்க எந்த சௌந்தர்..?

 soundar:  வார்த்தை வசமிருந்தும் “கவிதை“  எழுதவில்லை..... அவளுக்கு கவிதை பிடிக்காதாம்....!!!

 me:  கவிதைவீதி மக்கா'வா?


 soundar:  உனக்கு சாட்ல வர்றவிங்க வரலாறு புவியியல் எல்லாம் சொல்லிட்டுதான் வரனுமா... இப்படி பண்ணா எப்படி மக்கா....???
என்னை அறிமுகம் செய்துக் கொள்ள புதுசு புதுசா கவிதை எழுத வேண்டியிருக்கு....

me:  ஏன்?

soundar:  இது என்ன ஏன்....?
[[ஹி ஹி]]

 me:  ஹி ஹி சொல்லுங்கய்யா எப்பிடி வேலையெல்லாம் முடிஞ்சிருச்சா?
பதிவுலகில் எனக்கும் விக்கிக்கும்தான் சண்டை...

 soundar:  இன்னிக்கு பரவாயில்லை.. வேலையெல்லாம் நல்லாவே முடிஞ்சிருக்கு.

me:  கரன் என்னா பண்ணிட்டு இருக்கார்?

soundar:  விக்கிகூட சண்டையா... சரி இதை சொல்லுங்க நான் யார் பக்கம் நிக்கனும்...?
[[அடப்பாவி]]

me:  ரெண்டுபேர் பக்கமும், ஏன்னா விக்கி நம்ம நண்பனாச்சே ஹே ஹே ஹே ஹே...[[இந்தியா'வுல தக்காளியும், சிபி'யும், நாஞ்சிலும், ஆபீசரும் கே ஆர் விஜயனும்  சந்திக்கும் அந்நாள் பூகம்பம் வந்தாகூட ஆச்சர்யபடுவதுக்கில்லை எழுதி வச்சுக்கோங்க]]

soundar:  கரண் மாரியார் வீட்க்கு போயிருக்கார்.. நெல்லூர்...
அப்படியிருந்தா சண்டை சூடு பிடிக்காதுங்க....[[அப்போ சண்டை போடணும்னு முடிவே பண்ணிட்டியா ஹி ஹி]]

 me:  ஒரே மாமியார் வீட்டு சாப்பாடுதான் போல ஹ ஹா ஹா ஹா ஹா......
சண்டை எதுக்குய்யா சிபி ஸ்டைல்ல கால்ல விழுந்துர வேண்டியதுதான் ஹா ஹா ஹா...

soundar:  ரைட்டு...
அப்புறம் ஒரு நல்ல தலைப்பு கொடுங்க.. கவிதை எழுத...

me: சாப்பிட்டாச்சா? தலைப்பா ம்ம்ம்ம்ம்ம்ம்....

me:"............................... "சுந்தரி" எப்பூடி? [[சென்சார்]]

 soundar:  நான் என்ன கில்மா கவிஞரா... என்னை காலிபண்றதுக்கு ஐடியா கொடுக்கிறீங்க...?

me:  இதுதான்யா சிபி ஸ்டைல் ஹா ஹா ஹா ஹா ஹா...
விவசாய பூமிகள் பிளாட்டாக மாறுதே அதுக்கு சவுக்கடி கொடுக்குறா மாதிரி கோபக்கவிதை வித்தியாசமா, புலவனின் அறம் போல உக்கிரமா இருக்கணும்...

soundar:  கண்டிப்பாக இந்த கருத்தை மையப்படுத்தி ஒரு கவிதை இந்த வாரத்தில்...
 
me:  படிக்கிறவன் நெஞ்சில ஆணி பாயணும்
முகத்துல சப்புன்னு அடிச்சாமாதிரி இருக்கணும்...

 soundar:  பொதுவாக கோவத்தை நான் கவிதையில் அதிகம் பயன்படுத்தியதில்லை... கண்டிப்பாக இந்த கருத்துக்காக ஒரு புதிய பரிமாணத்திற்கு செல்கிறேன்....
8.15 எனக்கு பஸ்...[[அவசரத்துல இருக்காரு போல ஹா ஹா ஹா ஹா]]
நன்றிகள்..

me:  கவிஞனுக்கு கோபமும் அழகுதான் தெரியுமா?

soundar:  உண்மை....வணக்கம்...

me:  குட் நைட் மக்கா பார்த்து போங்க..

கவிதைவீதி, பீதியாகி பஸ்சுக்கு ஓடுகிறார்.....


கன்யாகுமரி மாவட்டம்....!!!


கன்னியாகுமரி மாவட்டம், (ஆங்கிலம்: Kanyakumari district) தமிழ் நாட்டின்மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். முப்பதொன்று
இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும்வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறது. முந்தைய பல
2006 டிசம்பர் 26 அன்று தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளை கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் நாசத்துக்கு உள்ளாக்கியது.






மக்கள் வகைப்பாடு

2001 - வது ஆண்டின் கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மொத்த மக்கள் தொகை 1,676,034 ஆகும். இதில் 65.27% நகர் புற மக்கள் தொகையாகும்.

வரலாறு

கன்னியாகுமாரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்னியாகுமரி அம்மன்பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது. என்னும் தேவதையை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது
இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை (வயலை) உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு. தற்போது அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின்சேரர்கள்வசம் வந்ததாகத் தெரிகிறது.

ஆட்சிப்பகுதியாக இருந்து பின்
தற்போது கல்குளம்விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு, சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட (வேனாடு) திருவிதாங்கூர் மன்னர்கள் நாஞ்சில் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளை கைவசப்படுத்திக்கொண்டனர். வீர கேரள வர்மாவால் துவங்கப்பட்ட இக் கைப்பற்றுக்கொள்கை அவரின் பின்காமிகளால் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டு கி.பி.1115 -ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது.


ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேனாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராக படையெடுத்தனர். இதன் விளைவாக கன்னியாகுமரி, 1609- ஆம் ஆண்டு மதுரைவிஸ்வநாத நாயக்கரின்ரவி வர்மாமார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேனாடு கடும் உள்நாட்டு குழப்பங்களை சந்தித்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டை தாக்கினார்.

குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றிகொண்ட போதிலும் சந்தா சாகிபுவை சமாளிக்க முடியாததால் போர்களத்தை விட்டு பின்வாங்க வேண்டியிருந்தது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேனாட்டை 1947 வரை அவர்களே ஆண்டுவந்தனர். வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது.

பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. அதன் பிறகு 1956 - 1961 ஆகிய ஆண்டுகளுக்குள் அதன் ஆளுமைதமிழகத்தின் மற்ற மாவட்டங்களின் பாணியில் தமிழகத்துடன் இணைந்தது.

புவியியல்

இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் மற்றும் சிறந்த வாய்க்கால் விவசாயம் ஆகியவற்றின் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம்ரப்பர்மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல்வாழைதென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும்மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன.


இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது. என அறியப்பட்டது. பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து
மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில்பவழப்பாறைகளின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பால வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறந்ததாக இருக்கிறது.




தட்பவெப்ப நிலை

கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர்டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 249 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வேனில் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில்அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.


ஆறுகள்

இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணிவள்ளியார்பாழார் ஆகியன.

தாவர மற்றும் விலங்கு வகைகள்

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.

இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றிகாட்டுப் பன்றிபல்லி வகைகள், பல இன கொக்குநாரைநீர்க்கோழிமலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.


மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள்மான்கள்சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள்காட்டு எருமைகரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர்பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.



இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலைஅசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்ஷூக்களினால் மருத்துவ மற்றும்ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது,அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.


மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமானஅகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில்அகஸ்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால்,அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது.


மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்ம சாஸ்திரத்திலும்அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணிவர்ம சாஸ்திரம் ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையைபயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

பண்பாடு

தமிழ்மலையாளம் ஆகிய மொழிகள் இம்மாவட்டத்தின் முக்கியமாக வழக்கத்திலுள்ளவை.

சமயம்

இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கணிசமான சதவிகிதத்தில் உள்ளனர். மேலும் சில இஸ்லாமியப் பெரும்பான்மை மண்டலங்களும் இங்கு உண்டு. இம்மாவட்ட கிறிஸ்தவர்களின் சதவிகிதம், அவர்களின் தேசிய சதவிகிதத்தை விட அதிகம். மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ பணிப்பரப்பாளர்கள்ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர்.


 இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.

இம்மாவட்டத்தின் மக்கள் சாதிமத இன, வேறுபாடுகளின்றி பழகுகின்றபொழுதும் இங்கு 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது.மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த இக்கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக பரவியதாகத் தெரிகிறது. இக்கலவரத்தில் ராஜாக்கமங்கலம்ஈத்தாமொழிபிள்ளைத்தோப்புநாகர்கோவில்ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

பொருளாதாரம்

தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம்


[தொகு] முக்கிய பயிர்வகைகள்

  1. அரிசி - 400 ச.கி.மீ
  2. தென்னை - 210 ச.கி.மீ
  3. ரப்பர் - 194.78 ச.கி.மீ
  4. மரவள்ளிக்கிழங்கு - 123.50 ச.கி.மீ
  5. வாழை - 50 ச.கி.மீ
  6. பருப்பு - 30 ச.கி.மீ
  7. முந்திரி - 20 ச.கி.மீ
  8. பனை - 16.31 ச.கி.மீ
  9. மாம்பழம் - 17.70 ச.கி.மீ
  10. புளி - 13.33 ச.கி.மீ
  11. கமுகு - 9.80 ச.கி.மீ
  12. பலா - 7.65 ச.கி.மீ
  13. கிராம்பு - 5.18 ச.கி.மீ


கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்

குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர்

ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள இல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும், நேந்திரம் பழம்செந்துளுவன்ரசகதளிபாளயம்கொட்டான்துளுவம்மட்டி, உட்பட பல வகையானவாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜாஜெவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

கல்வி

கல்வியறிவு விகிதத்தில் (100%) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.

கல்லூரிகள்

  1. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் - 12
  2. சுயநிதி கல்லூரிகள் - 4
  3. Colleges for special education -8
  4. தொழில் கல்லூரிகள் - 20


குமரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள்

  1. மழலையர் பள்ளிகள் - 83
  2. ஆரம்ப பாடசாலைகள் - 413
  3. நடுநிலைப் பள்ளிகள் - 147
  4. உயர் நிலைப் பள்ளிகள் - 121
  5. மேல் நிலைப் பள்ளிகள் - 120
  6. மொத்தம் 884


சுற்றுலா தலங்கள்


Tuesday, September 27, 2011

சுப்புலட்சுமி சொன்ன இந்த இல்லற சூத்திரம்!


''புயல், வெள்ளம், பூகம்பம்னு இயற்கை சீற்றங்களால மக்கள் பாதிக்கப்படறப்போ, பணம், பழைய ஆடைகள்னு கொடுத்து உங்கள்ல பெரும்பாலானவங்க உதவி செஞ்சிருப்பீங்க. அப்படி ஒரு பேரிடியால அத்தனையையும் இழந்து, ஒரு காலத்துல அந்த உதவியை எதிர்பார்த்து கை நீட்டி நின்ன நாங்க, இன்னிக்கு ஐந்து பணியாளர்கள், ஆயிரத்தி ஐந்நூறு கஸ்டமர்கள்னு வளர்ந்து நிக்கறோம் எங்க கார்மென்ட்ஸ் தொழில்ல. இந்த முன்னேற்றத்துல எந்த மேஜிக்கும் இல்ல. உழைப்பு... உழைப்பு... உழைப்பு மட்டும்தான்!''
- நிதானமான பேச்சு சுப்புலட்சுமி கமலேஷுக்கு.
 சுப்புலட்சுமியும் கமலேஷும் காதல் தம்பதி. இந்தத் திருநெல்வேலிப் பெண், குஜராத்காரரான கமலேஷை திருமணம் செய்து, பல தடுமாற்றங்களுக்குப் பின் வாழ்க்கையில் காலூன்றியபோது... குஜராத்தில் நிகழ்ந்த அந்த மாபெரும் பூகம்பம் சில நொடிகளில் அவர்களின் உயிரை மட்டும் விட்டுவிட்டு... வீடு, கார், தொழில், சேமிப்பு என அவர்களின் அத்தனை வருட உழைப்பின் பலனையும் சிதைத்துவிட்டது. அதிலிருந்து மீண்டு, இன்று பெரம்பூரில் 'கல்கி பொட்டீக்' என்ற கடைக்கு அவர்கள் முதலாளி ஆகியிருக்கும் கதை, இன்னுமோர் தன்னம்பிக்கை அத்தியாயம் நமக்கு!

''சென்னை எத்திராஜ் காலேஜ்ல நான் பி.ஏ. படிச்சிட்டிருந்தப்போ, கமலேஷ் ஏ.எம். ஜெயின் காலேஜ்ல பி.காம். படிச்சிட்டிருந்தாரு. ஒரே ஏரியாவுல வீடுங்கறதால... நட்பு, காதல்னு முன்னேறி, கல்யாணம் முடிச்சோம். சின்னதா ஒரு வாடகை வீட்டுக்குக் குடி போனோம். எங்களோட பி.ஏ., பி.காம் இதுக்கெல்லாம் சொல்லிக்கற மாதிரி எந்த வேலையும் கிடைக்காததால, சொந்தமா தொழில் செய்ய முடிவெடுத்தோம்.

மாமியார் வீடும் சென்னையிலதான். அவங்க வீட்டுக்குப் போகும்போதெல்லாம் நான் கத்துக்கிட்ட நார்த் இண்டியன் உணவு அயிட்டங்கள செஞ்சு, வீடு வீடா சப்ளை செய்ய ஆரம்பிச்சோம். நான் ஒரு சப்பாத்தி தேய்க்கறதுக்குள்ள... இவரு நாலு சப்பாத்தி தேய்ச்சுக் கொடுக்கற ஸ்பீடும் சப்போர்ட்டும் கைகொடுக்க,

அந்த கேட்டரிங் பிஸினஸ் நல்லாவே பிக்-அப் ஆச்சு. முதல் குழந்தை சிராஜ் பிறந்தான். இவரோட ஃப்ரெண்ட்ஸ§ங்க நிறைய பேர் குஜராத்துல இருந்ததால, 'இங்க வந்து சவுத் இண்டியன் உணவுகள் செஞ்சா தடதடனு முன்னேற்றம் இருக்கும்டா'னு கூப்பிட, நாங்களும் குடும்பத்தோட குஜராத்துக்கு ஷிஃப்ட் ஆனோம்!'' என்ற சுப்புலட்சுமி, கமலேஷைப் பார்க்க, அவர் தொடர்ந்தார்...

'ராத்திரிலதான் அங்க சௌத் இண்டியன் சாப்பாட்டுக்கு வரவேற்பு. இரவு எட்டு மணிக்குள்ள எல்லா வீட்டுக்கும் சப்ளை பண்ணிடுவோம். பகல்ல நிறைய நேரம் இருந்ததால, மார்க்கெட்ல புதுசா வர்ற புராடக்ட் பத்தி சர்வே எடுத்துக் கொடுக்கற வேலையையும் ஆரம்பிச்சோம். ரெண்டு பிஸினஸ§ம் மளமளனு பிக்-அப் ஆச்சு. கீழ் தளத்துல ஆபீஸ், மேல் தளத்துல வீடு. 45 பேரை வேலைக்கு வெச்சிருக்கற அளவுக்கு லட்சங்கள்ல கொழிச்சது எங்க வருமானம். மகிழ்ச்சியோட உச்சத்துல நாங்க இருக்க, அடுத்ததா எங்க பொண்ணு ருஷாலி பிறந்தா...'' என்றவர், அதன் பிறகு தங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிப்போட்ட அந்த துயர சம்பவத்தைச் சொல்லத் தொடங்கும்போது அவரின் குரல் பதற்றமாகிறது...

''2001 ஜனவரி 26-ம் தேதி காலையில குடியரசு தின விழாவுக்காக எங்க பையனோட ஸ்கூலுக்கு குடும்பத்தோட போயிட்டிருந்தப்போ, கார்ல ஒருவித நடுக்கத்தை உணர்ந்தோம். சில நிமிஷங்கள்ல ஊரே சுடுகாடாகிப்போய்க் கிடக்க, ஓடிப்போய் எங்க வீட்டைப் பார்த்தா... செங்கல் குவியல்தான் மிஞ்சியிருந்துச்சு. உயிருக்கு உயிரா பழகின பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் மண்ணோட மண்ணா புதைஞ்சிருந்தாங்க. சாப்பாடில்ல, தூக்கமில்ல, அழக்கூட திராணியில்ல. நாலு நாள் நடு ரோட்டுல புழுதிலயே கிடந்தோம். 'முறைப்படி கட்டப்படாத பில்டிங்'னு சொல்லி எந்த நஷ்டஈடும் எங்களுக்கு கிடைக்கல. நிவாரணப் பொருட்களை வாங்கி பசியாத்திக்கிட்ட எங்க கையில அப்ப இருந்தது அஞ்சு ரூபாய் மட்டும்தான்!''
- குரல் கரகரக்கிறது கமலேஷுக்கு.
மறுபடியும் சென்னை... உறவுகள், நண்பர்கள் அடைக்கலப்படுத்த, மீண்டும் ஆதியிலிருந்து தொடங்க முடிவெடுத்திருக்கிறார்கள் இந்தத் தம்பதி.
''அதே கேட்டரிங் பிஸினஸ்தான். என் கணவோரட சகோதரர், நண்பர்கள் கொடுத்து உதவின பணம்தான் மளிகை வாங்க மூலதனம். 'எப்படியெல்லாம் இருந்தோம்'ங்கற சுயபச்சாதாபத்தை தூக்கிப் போட்டுட்டு, 'எப்படியும் எழுந்துடுவோம்'ங்கற நம்பிக்கையோட உழைச்சோம். முதல்ல டிபன் மட்டும்தான் போட்டோம். ஒரே மாசத்துக்குள்ள 50 ரெகுலர் கஸ்டர்மர்ஸ் கிடைக்க, மூணுவேளை சாப்பாடுனு முன்னேறினோம். ஒரு நிமிஷம்கூட நாங்க ரெண்டு பேரும் 'ஹப்பா'னு அலுப்பா உட்கார மாட்டோம். நண்பர் ஒருத்தர் எங்களுக்காக லோக்கல் சேனல்ல விளம்பரம் செஞ்சார். இப்படி எங்கள சுத்தி இருந்த நல்ல உள்ளங்கள் கை கொடுக்க, நாலஞ்சு வருஷத்துல பிஸினஸ் ஸ்திரமாகியிருந்தது'' எனும் சுப்புலட்சுமிக்கு, அடுத்து காத்திருந்திருக்கிறது ஒரு ஸ்பீட் பிரேக்கர்.

''யூட்ரஸ் பிரச்னையால எனக்கு உடம்புக்கு சரியில்லாமப் போக, முன்ன மாதிரி வேலைகள் பார்க்க முடியாமப் போயிடுச்சு. என்னோட கைப் பக்குவமும், அவரோட கூட்டு உழைப்பும்தான் எங்க வெற்றிக்கு காரணங்கறதால, அவரால தனியா சமையலை கவனிக்க முடியாம, ரொம்பச் சிரமப்பட்டார். 'இனி இந்த பிஸினஸ் சரிப்பட்டு வராது'ங்கற நிலமை வந்தப்போ, 'டெய்லரிங் யூனிட் வைக்கலாம்'னு முடிவு பண்ணினோம். ஆனா, எங்க ரெண்டு பேருக்குமே தையல் தெரியாது'' என்ற சுப்புலட்சுமியை நாம் ஆச்சர்யமாகப் பார்த்தோம். கமலேஷ் பேசினார்...

''நான் ஒரு பஞ்சாபி லேடிகிட்ட டெய்லரிங் கத்துக்கிட்டேன். குஜராத், பாம்பேனு போய் வெரைட்டியா, சீப்பா மெட்டீரியல் வாங்கிட்டு வந்து தைக்க ஆரம்பிச்சேன். சுடிதார், பிளவுஸ்னு டிரெண்டியா, அளவு கச்சிதமா இருந்த அந்த ஆடைகளுக்கு பெண்கள்கிட்ட ரொம்பவே வரவேற்பு. கஸ்டமர்கள் குவிஞ்சாங்க. சுப்புலட்சுமி கடையையும் கஸ்டமர்களையும் பார்த்துக்கிட்டாங்க. நான் டெய்லரிங் யூனிட்டை கவனிச்சுட்டேன். நம்பிக்கை தர்ற மாதிரி வருமானம் வர, பேங்க்ல 5 லட்சம் லோன் வாங்கி, 5 டெய்லர்களை வெச்சு கடையை விரிவுபடுத்தினோம்.
என் மனைவி புதுப் புது ஐடியா சொல்ல, நானும் அதைக் கிரியேட்டிவ்வா தைச்சேன். இப்ப 1,500 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க எங்ககிட்ட!'' என்று சந்தோஷப்படும் கமலேஷின் மகன் தற்போது பி.டெக் படிக்க, மகள் எட்டாவது படிக்கிறார்.
 ''கீழ விழுந்தப்போவெல்லாம்... 'இதுவும் கடந்து போகும்'னு நாங்க எழுந்தது, அயராது உழைப்பு, நல்ல நட்புகள்ங்கற காரணங்களோட... ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து போனா இவரும், இவர் துவண்டு போறப்போ நானும் ஆத்மார்த்த ஆறுதலா இருந்ததும் முக்கிய காரணம்!''
- தொழிலிலும் அவர்களை ஜெயிக்க வைத்திருக்கிறது சுப்புலட்சுமி சொன்ன இந்த இல்லற சூத்திரம்!
நன்றி : அவள் விகடன் 


Monday, September 26, 2011

மகனுக்கு, அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

குலமகனாய் திருமகனாய்
ஊருக்கு உழைக்கும் உத்தமனாய் 
நீ வளர வேண்டும்.....

நாட்டில் நடக்கும் 
அக்கிரமங்களை தட்டிகேட்கும் 
வீரனாக வளர வேண்டும்....

தைரியத்தை 
அரணாக நீ பூண்டு
வெற்றி வாகை சூடவேண்டும்...

அன்பால் பாசத்தை
பேணிகாத்து அனைவருக்கும்
உரியவனாக நீ வாழவேண்டும்....

தெய்வத்திற்கு பயந்து
நியாயம் செய்
நன்மையை பெற்றுக்கொள்....

அன்புக்கு அடிமையாய்,
அதிகாரத்துக்கு
நெஞ்சை நிமிர்த்து...

மும்பை என்பது 
நமக்கு போர் பூமி, மறந்து விடாதே
"கொஞ்சம்" ரௌத்திரம் பழகு....


என் அன்பு மகன் மோசஸ் ராஜ்'க்கு இன்று பிறந்தநாள்....!!!!


நெஞ்சார உன்னை வாழ்த்தி மகிழுகிறேன்.......வாழ்க வளமுடன் சுகமுடன்....


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!