Wednesday, May 30, 2012

ஒரு வேஷ்டி கேட்டதுக்கு இம்புட்டு அக்கப்போரா....?



அதிகாலையில் எங்க [[மும்பையில்]] குருவிகளில் பாடல்களும் குயில்களின் கானங்களும் காக்கைகளின் இறைச்சலுமாக மனரஞ்சிதமான காலையாக இருக்கும். இப்போ சுத்தி சுத்தி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும், பில்டிங்கா வந்ததில் இருந்து இவைகளை வல்லுசா கானவே இப்போது, ஆனால் தெரு நாய்கள் பெருகிவிட்டது, அவைகளுக்குள் எல்லையையும் பிரித்து வைத்து உள்ளது, இவைகளின் அலறலில்தான் அவனவன் எழும்புகிறான் [[கடியும் வாங்குறான்]] எங்க ஏரியாவில்....!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்மாளு மாநகராட்சி தேர்தலில் [[சிவசேனா]] ஜெயிச்சதும் எங்க ஏரியாவில் சுத்தமாக கொசு இல்லை, நிம்மதியாக உறங்க முடிகிறது, மாநகராட்சிகாரங்க இப்போ எல்லாம் வீட்டுக்குள்ளே வந்து மருந்தடிக்கிறாங்க, இல்லன்னா தெருவுல மருந்தடிச்சு கொசுவை வீட்டுக்குள் அனுப்புவாங்க....!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------

பிள்ளைகள் கம்பியூட்டரை ஆபரேட் பண்ணும் போது கவனமாக வாட்ச் பண்ணனும்ன்னு சொன்னேன் வீட்டம்மாகிட்டே, தப்பா புரிஞ்சிகிட்டாளோ என்னமோ பயபுள்ளை என்னை கடுமையா வாட்ச் பண்ணுது.[[ச்சே என்ன உலகமோ போங்க]]
-------------------------------------------------------------------------------------------------------------------------------

காலையிலே சீக்கிரம் [[ஆறு மணிக்கு]] எழும்ப சொல்லி பக்கத்து வீட்டுக்காரி தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, விட்டா கதவை உடைச்சி வீட்டுக்குள்ளே புகுந்து என்னையும் வீட்டம்மாவையும் விழுந்து கடிச்சிருவாளோன்னு பயமா இருக்கு [[எல்லாம் ஒரு பாசம்தான்]] ஆனாலும் நான் எட்டு மணிக்குதான் எழும்புவேன் ஹி ஹி...!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------

நாகர்கோவில் போயி விஜயனிடம் எனக்கு ஒரு வேஷ்டி வேணும் வெளிநாடு கொண்டு போகன்னு சொன்னதும் சாவியை எடுத்துகொண்டு ஓடி வந்தார், ஆஹா ஏற்கனவே இவர் சைக்கிள் சிட்டிகுள்ளே படுபயங்கரமா ஓடும், இப்போ என்ன நடக்கபோகுதொன்னு நடுங்கிட்டு பின்னாடியே நானும் ஓடினேன், அப்பாடா சைக்கிள் இல்லை ஸ்கார்பியோ கார் அடடடா தப்பிச்சென்னு ஏறி உக்காந்தேன்.


பயபுள்ளை நேரே நெல்லையில கூட்டிட்டு போயி நம்ம ஆபீசர் முன்னாடி நிப்பாட்டிருச்சு, ஆஹா விஜயன் பலமா நம் சொம்பை நசுக்க பிளான் பண்ணியாச்சு ஒரு வேஷ்டி வாங்கனும்னு சொன்னதுக்கா இம்புட்டு பெட்ரோல்[!] போட்டு, இம்புட்டு தூரம் கொண்டு வரணும்னு மனசுக்குள் அழுதேன்.


ஆபீசர் கோபமாக ஒரு முறைச்சல் காட்ட, விஜயன் காதை பிடிச்சுட்டு குந்த வச்சி உக்காந்துட்டாரு, என் கால்கள் கட கடவென நடுங்கியதை பார்த்து ஆபீசர் சிரிக்கவே விஜயனும் நானும் நார்மல் ஆனோம்.

வேஷ்டி வேணுமா வாங்க ஒரு கடைக்கு போவோம், ஏற்கனவே பத்து வேஷ்டி ஆர்டர் பண்ணியிருக்கேன் எனக்கு, உங்களுக்கு ஒன்னு இருக்கான்னு கேட்டு பார்ப்போம் வண்டியை எடுங்க போலாம்னார். அந்த கடைக்கு போனதும் கடை உரிமையாளர் எழும்பி பாவியாக ச்சே ச்சீ பவ்யமாக எழும்பி நின்றார் ஆபீசரை பார்த்து.


வடை ஊழியர் ஸாரி கடை ஊழியர் உள்ளே ஓடிப்போயி ஆபிசரின் பத்து வேஷ்டிகளை கொண்டு வந்தார், எல்லாமே தங்க சரிகை பட்டை தரித்தவை, ஸ்பெஷலாக ஆர்டர் செய்து பண்ணப்பட்டது என்பதை புரிந்து கொண்டோம், அப்புறம் கடை முதலாளி காதில் என்னமோ சொன்னார் ஆபீசர்.

கொஞ்சநேரத்தில் முதலாளி மெரூன் கலர் சரிகை பட்டை வைத்த ஒரு வேஷ்டியை கொண்டு ஆபீசர் கையில் கொடுத்து விட்டு இன்னொரு பொருளையும் அதன் மீது வைத்து கொடுத்ததை ஆபீசர் எனக்கு தரவும், திரும்பி பார்த்த விஜயன் அந்த பொருளை பார்த்ததும், நெல்லை ஜங்க்சனில் குய்யோ முய்யோ என்று தலைதெறிக்க இறங்கி ஓடினார். ஆமாம் அந்த பொருளின் பெயர் "பெல்ட்", மனோ என் கண்ணையே உன்கிட்டே ஒப்படைக்கிறேன் அதில் நான் ரத்தகரையைதான் பார்க்கவேண்டும் என்று ஆபீசர் கோபமாக சொல்லவும்........

அய்யோன்னு அலறினேன், என்னப்பா ஆச்சு, தண்ணி வேணுமா, இல்லை மோர் எடுத்து தரட்டுமா ஏதும் கனவு கினவு கண்டீங்களா என்று என் வீட்டம்மா கேட்கவும்தான் தெரிஞ்சது அய்....."கனவு" [[யப்பா இப்பெல்லாம் ஆபீசர் கனவுலையும் வந்து மிரட்டுறாருய்யா]]
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விக்கி உலகம் விக்கிக்கு இன்னைக்கு கல்யாண நாள் வாருங்கள் நண்பர்களே அவனையும், அவன் குடும்பத்தையும் வாழ்த்துவோம்....!!! [[இன்னைக்கு அவன் பதிவுக்கு ஒரு தலைப்பு வச்சிருக்கான் பாருங்க, எனக்கு கண்ணெல்லாம் தண்ணியா ஊத்துது]]

Tuesday, May 29, 2012

அரண்மனையாம் அரண்மனை ம்ஹும்....!!!

பத்பனாபபுரம் அரண்மனையை நாங்க சந்தோஷமா திரும்பியபோது என் மனதில் தோன்றிய சில கேள்விகள் சில, அரண்மனையில் நிறைய இடங்களில் தளங்கள் தற்போது செய்யப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. அரண்மனையை பார்க்க உள்ளே போகிறவர்கள் [[சிறுபிள்ளைகள் இருந்தால் கண்டிப்பாக]] குடிநீர் கண்டிப்பாக கையில் வைத்து கொள்ளுங்கள், உள்ளே ஒரு சொட்டு குடிநீரும் கிடையாது, அம்புட்டு பெரிய அரண்மனையில் தண்ணீர் இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது....!!!



அடுத்து இங்கே [[வெளியே]] ஒரே ஒரு பாத்ரூம்தான் இருக்கு அதிலும் தண்ணீர் கிடையாது, பணியாளர்களில் சிலர் மிகவும் ரஃபாக நடந்து கொண்டார்கள், சில பல அறைகளில் மேலே செல்ல ஏணிப்படிகள் இருக்கிறது, அங்கே சென்று பார்க்க தடை இருக்கிறது சரி அங்கே என்னா இருக்குன்னாவது சொல்லலாம், ஆனால் கைடுகள் அதைபற்றி சொல்லவே இல்லை [[அவிங்களுக்கும் தெரியாதோ]]

வெளியே செருப்பை பாதுகாக்கும் இடத்தில் ஒரு அம்மா பணிவாக எல்லார் செருப்புகளையும் திருப்பி கொடுத்து கொண்டிருந்தார்...!

கடைசியாக நாங்கள் அரண்மனையை விட்டு திரும்பும்போது என் அண்ணன் மகன் ஜோஷ்வா கேட்ட ஒரு கேள்விக்கு கேரளா டூரிசம் போர்டு பதில் சொல்லியே ஆகணும். "இவ்ளோ பெ.........ரீ.........ய...... அரண்மனையில ஒரே ஒரு பாத்ரூமா....?" பாவம் அவன் கஷ்டம் அவனுக்கு என்று சொல்லி சிரித்தோம். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------


பெட்ரோல் விலையேற்றம் எதிரொலி, மும்பையில் பெட்ரோல் திருட்டு நடக்கிறது, என் நண்பனின் பைக்கிலேயே திருடியுள்ளார்கள். சில பல பேர் பைக்கை உருட்டி கொண்டு போகிறார்கள், பாவமாக இருக்கிறது காரணம் பைக்கில் பெட்ரோல் இருக்கு என நினைத்து ஏமாறுகிறார்கள், எனவே பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது பெட்ரோல் இருக்கா களவு போயிருச்சான்னு கவனித்து வண்டியை எடுங்கள்....!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------


என் மீது உள்ள ஊழல் புகாரை நிரூபித்தால் நான் பொது வாழ்க்கையை விட்டே போய்விடுகிறேன் - மன்மோகன் சிங்.

# யோவ் முதல்ல நீயி தேர்தல்ல நின்னாய்யா ஜெயிச்ச கொய்யால, பொது வாழ்க்கயாம் பொது வாழ்க்கை மானம் கெட்ட வாழ்க்க, என் நாலு ஏக்கர் நிலத்தை வித்து தாரேன் லஞ்சம் கொடுத்தாவது இந்த ஆளை வெளியே தள்ளுங்கன்னு மக்கள் பேசுறாங்க.....!!!

------------------------------------------------------------------------------------------------------------------------------


பிரணாப் முகர்ஜிதான் ஜனாதிபதி வேட்பாளர் காங்கிரஸ் தலைமை முடிவு.

# அடுத்த ரப்பர் ஸ்டாம்ப்.....!!!

-------------------------------------------------------------------------------------------------------------------------


பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை.

# நல்லா பாத்தீங்களா அது ஆயிரம்வாலா பட்டாசா இருக்கும் பார்த்து சொல்லுங்க...?

-----------------------------------------------------------------------------------------------------------------------


இன்னொரு சோகம் என்னன்னா நம்ம பக்கி ச்சே விக்கி இன்னைக்கு பேஸ்புக்கை நாரடிச்சுட்டு இருக்கான் முடியல.....

Monday, May 28, 2012

வாஸ்து படி பலா மரத்தால் செய்யப்பட்ட தூண்...!!!

நண்பன் மனசாட்சி ஒரு வாரம் லீவில் ஊர் வந்து, ஒரு மினி பதிவர் சந்திப்பை கோயம்புத்தூரில் நடத்தி இருக்கிறார், நண்பர்கள் வீடு'சுரேஷுடனும், நண்பன் இரவுவானம் சுரேஷும் சேர்ந்து போனில் பேசி நலம் விசாரித்தார்கள், வாழ்க வளமுடன் மிக்க நன்றி மக்கா....!!!

சரி வாங்க இன்றையோடு இந்த தொடர் முடியுது, அரண்மனை போட்டோக்களை பார்ப்போம் வாருங்கள், விஜயனுக்கு நன்றி சொல்லுங்க....!!!

 அரண்மனை வாசல் டிக்கெட் பரிசோதனை நடக்கிறது.

 மகாராஜா மலாய்திய ச்சே உலாத்திய இடத்தில் நாஞ்சில் மகாராஜா....

 அரண்மனை உள்பிரகாரம், இதை வெளியே இருந்து பார்க்க முடியாது...!!!

குதிரை விளக்கு தொங்குகிறது....!!!

 ஒரே கல்லால் ஆன ராஜா உறங்கும் கட்டில், வெளிநாட்டுக்காரன் அன்பளிப்பு இது...!

 சைனாக்காரன் கொடுத்த வெகுமானம்.

 மரவேலைப்பாடுகள்.


 மகாராஜாவும், விருந்தாளிகளும், மந்திரிகளும் உட்கார்ந்து அரட்டையடிக்கும் இடம்...!


 பெரிய கல்லால் ஆன படிகள்....!!!

 ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் ஆச்சர்யமான இடம் இது, இதை பார்த்துட்டு மிஸஸ் நாஞ்சில்மனோ மிரண்டு நிற்கும் காட்சி....!!

 அதே சாப்பாட்டு ஹால்...!!




 நாஞ்சில் மகாராஜா, மகாராணியுடன்....!!

 அறுபத்தி நான்கு வகையான சித்திர வேலைப்பாடுகள் பற்றி கைடு விளக்குறார்.


 கோபுரம்..
 சந்தனம் செடி.

 சிறிய சிறிய வழிகள்....!




 மகாராஜாவின் கட்டில்.




என்னா லுக்கு இது....? [[யோவ் உமக்கு போட்டோ எடுக்க வேற எதுவுமே கிடைக்கலையாக்கும்???]]

எல்லாமே தேக்கு மரவேலைப்பாடுகள் ஆனால் இது ராஜாவின் பூஜை அறையில் இருக்கும் நான்கு தூண்களில் ஒன்று இது, இந்த தூண்மட்டும் பலா மரத்தால் வாஸ்து படி செய்யப்பட்டது...!!!

முற்றும்.


Sunday, May 27, 2012

சூப்பர்ஸ்டார் பெயர்தான் என் பெயரும்....!!!

எலேய் இந்தியா வல்லரசு ஆகிருச்சிலேய் மக்கா.....பின்னே பெட்ரோல் இம்புட்டு விலை ஏறியும் புலம்பிகிட்டே பெட்ரோல் போட்டுவிட்டு போகும் நம் மக்கள் கையில் பணமில்லை ஏழை நாடுன்னு எவம்லேய் சொன்னது கொய்யால....? எம்புட்டு ராக்கெட்டும், சேட்டிலைட்டும் அனுப்புரானுங்க கொய்யா இந்த பெட்ரோலுக்கு ஒரு மாற்று ஏன் கண்டுபிடிக்கலைன்னு தீவிரமா யோசிச்சா, இங்கேயும் அமெரிக்கா நாதாரி கையும், நம்ம இந்திய "கை"யும் இருந்து தொலச்சிகிட்டு இருக்கு ஸ்ஸ்ஸ் அபா விக்கி நீ தப்பிச்சிட்டேடா.....!!!

சரி வாங்க நாம நம்ம கடமையை பார்ப்போம்......

பத்பநாபபுரம் அரண்மனை போட்டோக்கள்....!!!

 வரிசையாக ராஜாக்களின் ஓவியங்கள்.

 இளவரசிகளும் அவர்களின் தோழிகளும் அமர்ந்து அரட்டையடிக்கும் ஊஞ்சல்...!

 இளவரசிகள், மகாராணிகள் உலவும் இடம் [[கீழே]] மேலே இருந்து மகாராஜா பார்த்து ரசிக்கும் இடம்...!!

 அதே அதே பன்னிகுட்டி நேற்றைக்கு கேட்டாரே அந்தபுரம் எங்கேன்னு, நான் நினைக்கிறேன் கீழே இது பக்கத்துலதான் எங்கேயோ அந்தப்புரம் இருக்கும்னு, அந்த அறையை பூட்டி வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன், ராஜாக்களின் லீலைகள் வெளியே தெரியகூடாதுன்னு நினைச்சிருக்கலாம். [[விஜயன் நெஞ்சத்தில் ஒரே விம்மல்]]

 மரங்களால் ஆன சித்திரவேலையை பாருங்கள் சூரியவெளிச்சம் சும்மா லைட்டிங் செட் பண்ணுன மாதிரியே இருக்குதுல்ல....!!!

 மகாராணி துயிலும் கட்டில்....!!!

 மர வேலைப்பாடுகள் நிறைந்த கேலரி.


 மகாராணியின் பாத்ரூம், இங்கேயும் மரவேலைப்பாடுகள், ஆமாம் உள்ளே இருந்து வெளியே பார்க்கலாம் ஆனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாது...!!!

 இது மகாராஜாவின் பாத்ரூம்...!! இரு பாத்ரூமும் அருகருகேதான் உள்ளது...!


 இரண்டு பாத்ரூம்களுக்கு முன்பாக, மகாராஜாவும், இளவரசனும்....!

 சற்று ரிலாக்ஸாக குழந்தைகள்....!


 அரண்மனை மாடம்..! இம்புட்டு தூரம் கூடவே சுத்திட்டு, இந்த இடத்தில் வைத்துதான் என் மகன் மோசஸ் விஜயன் மனைவியிடம் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி, 'ஆண்டி உங்க பெயர் என்ன..?' விஜயன் மாடத்தில் இருந்து கீழே குதிக்க ரெடியாக........... ஆனால் அவங்க அசரவே இல்லை "என் பெயர் நம்ம சூப்பர் ஸ்டார் பெயர் தெரியுமோ" என சொல்ல, என் மகன் ங்கே ங்கே நானும் ங்கே ங்கே, ஏன்னா எனக்கும் அவங்க பெயர் தெரியாது...!!

 அரண்மனை உள்ளே பிரமாண்டம், பாதுகாப்பு கோபுரம்....! [[மோசஸ் அண்ட் மோனிஷா [[பூ]]குட்டி....!

அர்ஜூனும், ஜோய்குட்டியும் சண்டைக்கு ரெடியாயாச்சு.


 போருக்கு ஆயுதங்கள் சேர்த்து வைத்திருக்கும் ஆயுதக்கிடங்கு....!

 யுத்தத்திற்கு ரெடி ஆயாச்சு, வெற்றிவேல் வீரவேல்'ன்னு அலறிய என்னை போட்டோ எடுத்துவிட்டார் விஜயன் [[பாவிங்க அருவாள் கிடங்கை ச்சே ச்சீ ஆயுதகிடங்கை பார்த்ததுமே வீரம் வந்துருச்சு ஹி ஹி]]

 தரையில் நீங்கள் பார்ப்பது வித்தியாசமான மலர்களாலும் சுண்ணாம்பு, முட்டை, கருப்பட்டிகளால் செய்யப்பட்ட சைனிங் தரை சும்மா ஜில்லுன்னு இருக்கு பாதங்களுக்கு.

 இதுதானய்யா ஆச்சர்யம், சூரிய வெளிச்சம் என்னமா ஜாலம் காட்டுது, அரண்மனை உள்ளே இருந்து நீங்கள் வெளியே பார்க்கலாம் ஆனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க இயலாது, அப்பிடியான மரவேலைபாடுகள்...!

 இது அம்பாரி முகப்பு, ராஜாக்கள் பொது மக்களுக்கு தரிசனம் கொடுக்கும் இடம்னு அர்த்தம்.


 அம்பாரி முகப்பில் எங்கள் இளவரசி...

 போரில் திப்புசுல்தான் கொல்லப்பட்டு உடலை எடுத்து செல்லும் ஓவியம், அர்ஜூனும், ஜோஷ்வாவும்.

 மகாராஜாவாக மார்த்தாண்ட வர்மன் முடிசூட்டும் ஓவியம்...!!!

 ஓவியங்கள் வைக்கபட்டு இருக்கும் அறை, எம்புட்டு நீளம் பாருங்க...?!!!

ஓவியங்களை ரசிக்கும் மக்கள் கூட்டம்....!!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!