Tuesday, May 27, 2014

வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு இந்தியனின் அவலம் !

நேற்று இரவு பத்தரை மணி இருக்கும் நானும் பரோக்கோ அம்மிணியும் டியூட்டில இருந்தோம், சும்மா தமாஷ் பேசிட்டே விளையாடிகிட்டு [[டேய் டேய்]] இருந்தோம் அன்றைய தினத்தின் சீரியஸ் மேட்டர் தெரியாமல்...
நான் ஆபீஸ் உள்ளே இருந்தேன்..."மனோஜ்... யாருன்னு தெரியல வந்து பாரு"
வெளியே வந்தேன் அவன் தனது அடையாள அட்டையை காட்டினான், lmra [[

Labour Market Regulatory Authority]] செக்கிங் என்றான், " ஓகே உன் அடையாள அட்டையை காண்பி என்றான், அம்மிணி அட்டையும் கொடு என்றான், பத்து செக்கண்டுக்குள்ளே இருபது முப்பது சிஐடி மற்றும் யுனிபார்ம் அணிந்த போலீஸ் மற்றும் சிவில் டிரெஸ்சில் அதிகாரிகள்...


நாம யாரு [[காலு கடகட]] அந்த அடையாள அட்டையைதான் அன்னிக்கே டிஸ்கோ'ல தொலச்சிட்டோமே [[அதெல்லாம் மேட்டர் இல்ல]]

"என்னிடத்தில் அடையாள அட்டையின் காப்பி'தான் இருக்கு அடையாள அட்டை இன்னும் எனக்கு கிடைக்கலை [[உண்மைதான் நான் தொலைத்தது பழையது]] தரவா ?"

"எஸ் நோ பிராப்ளம் குடு"

ரெய்டு வந்தவர்கள் ஹோட்டலின் நாலா  பக்கமும் செக்கிங் செய்து ஸ்டாப் ஆட்களை பிடித்து ரிஷப்சனில் கொண்டு வந்து அவர்கள் தம் அடையாள அட்டையை வைத்து விசா இருக்கிறதா இல்லையா என செக் செய்ய...

என்னுது மாத்திரம் ஒரிஜினல் இல்லாமல் ஜெராக்ஸ் காப்பி, அப்பவே எனக்கு டவுட்டு ஆக ஆரம்பிச்சிருச்சு, ஒவ்வொரு அடையாள அட்டைகளா சரி பார்த்து திருப்பி கொடுக்க ஆரம்பித்தார்கள்...
நடுவுல நாலைந்து போலீஸ் இடுப்பிலும் கையிலுமா கைவிலங்குகள் வச்சிகிட்டு பயமுறுத்திகிட்டே அங்கிட்டும் இங்கிட்டுமாக உலவ...பயம் இன்னும் கூடிருச்சு !

அட்டையை எல்லாருக்கும் குடுத்துகிட்டு வயர்லெஸ்சில் ஒருத்த மாத்திரம் விசா இல்லாமல் இருக்கான் என்று சொல்ல...பதில் தூக்கிட்டு வா...நான்கு அதிகாரிகள் பேப்பரில் அரபியில் என்னவெல்லாமோ எழுத துவங்க, அம்மிணி கீழே என் கையை கோர்த்து பிடிச்சுட்டு அழ ஆரம்பிக்க...[[அதுவே அரபிகளுக்கு கடுப்பாகிருச்சு]]

"உன் விசா காலாவதி ஆனது உனக்கு தெரியுமா ?" அதிகாரி

"என் விசா காலாவதி ஆகலைன்னு உனக்கு தெரியுமா ?"

"சிஸ்டத்தில் என்ன காட்டுதுன்னு பார் ?"

"அது உங்க சிஸ்டத்தின் தகராறு, என் பாஸ்போர்ட்'ல டிசம்பர் வரை விசா இருக்கு"

மறுபடியும் மேலதிகாரியை தொடர்பு கொள்கிறான் வாக்கிடாக்கியில்...

இல்லை அவனை தூக்கு என்றே பதில் வருகிறது.
இவ வேற என் கைய பிடிச்சிகிட்டே சுத்தி வருது, தட்டவும் முடியல மொத்த போலீசும் எங்கள் முன்பில் [[அவளை பயங்காட்டினானுகளோ]] "

"இப்போ நான் என்ன செய்ய சொல்லு ? மேலிட உத்தரவு உன்னை கைது செய்கிறேன் இந்த எல்லா பேப்பர்களிலும் ஒப்பிடு "

"நோ நான் ஒப்பிட முடியாது எங்கள் ஹோட்டல் ஜெனரல் மானேஜரின் உத்தரவு எனக்கு வேண்டும், கூப்பிடுகிறேன் அவர் முன்னிலையில் ஒப்பிடுகிறேன்"

"நாங்கள் போலீஸ்...நாங்கள் சொன்னால் சொன்னதை நீ கேட்க வேண்டும் [[இந்தியாவுக்கு கிடச்ச கவுரவம் இதுதான், இதே அரபிகள் என்றால் இப்படி [அரபி நாடுகள்] பேச மாட்டார்கள் !]]"

"என்ன வேணாலும் செய்துக்கோ நான் ஒப்பிட முடியாது"

"சரி உன் ஆபீஸ் கதவை திற"

அம்மிணி அரபியில் பயங்கரமாக ரூல்ஸ் பேச ஆரம்பித்து விட்டாள்..."பொம்பளைங்க இருக்கும் இடத்தில் போலீஸ் உள்ளே வரக்கூடாது" என்று கத்த போலீஸ் சற்று பின் வாங்கினாலும் என்னை விடுறதாக இல்லை...

"மிஸ்டர் துரைராஜ் மனாசே [[நாந்தேன்]] நீ வெளியே வா"

"மனோஜ் நீ வெளியே போகாதே"ன்னு இவள் என்னை பிடித்து வைத்துவிட்டு முதலாளிக்கு போன் செய்ய [[முதலாளி மற்றும் ஜி எம் எல்லாருக்கும் இதற்கிடையில் ரகசிய தகவல் கொடுத்து விட்டேன்]] முதலாளி என்ன சொல்லிருப்பார்ன்னும் எனக்கு தெரியும்]] என்னை இவள் வெளியே விடவே இல்லை.

அந்த சூழ்நிலையில் [[யுத்தகளம் போல இருந்துச்சு]] என்ன செய்ய ? அவளை தள்ளிவிட்டு நானே வெளியே வரவும் கையில் விலங்கு பூட்ட விலங்கை கையருகே கொண்டு வரவும், போலீசின் வயர்லஸ் அலறவும் "டோன்ட் டச் டூ ஹிம்" ஒரு அதிகாரி விலங்கு போலீசை தள்ளி விட்டான்.

"காட் வித் யூ மேன் தப்பித்து விட்டாய்"

"என்னை படைச்சவன் என் கூடவே இருக்கான்னு எனக்கு தெரியும் ஆனால் நீ வ்ராங்காக வந்திருக்கிறாய், உன் சிஸ்டத்தை சரியாக செக் செய்" என்றேன்...தோல்வியின் முறைப்பில் சென்றான் அதிகாரி...
போலீஸ் போனதும் மொத்த முதலாளி மற்றும் மானேஜர்கள் வந்து விட்டார்கள், "ஏம்யா போலீஸ்தானே கடைசியில வரும் இங்கே நீங்க கடைசியா வந்துருக்கீங்க"ன்னு சொன்னதும் முதலாளி சிரிச்ச சிரிப்பு இருக்கே அவ்வவ்...

இதோ இப்பவும் நேற்று நடந்த சம்பவம் மற்றும் என் முகபாவனையை கிண்டல் செய்து கொண்டிருக்கிறாள் அம்மிணி...அம்மே....

நேற்று மிகவும் மனதை வலிக்க செய்த நாள், இந்தியன் என்பதற்காக வெட்கபட்ட நாள் என்றும் சொல்லலாம் பின்னே விசா இருந்தும் இல்லை என்று சொன்னால் ? வாழ்க இந்தியன் எம்பஸி மற்றும் அம்பாசிடர் !!!!!!!!

Tuesday, May 13, 2014

நடிகர்களும் தெய்வம் போலாகலாம்...!


கேப்டனை அன்னைக்கு ஓடி ஓடி போயி ரசிச்சவிங்க எல்லாம் இப்போ கிண்டல் பண்ணுறாங்க, ஒரு பெண்ணின் வாழ்கையை காப்பாற்றியவர் அவர், என்ன ஆச்சர்யமா இருக்கா ?

கேப்டனின் அதி தீவிர ரசிகை, கேப்டன் போலீசாக நடித்து உச்சத்தில் இருந்த நேரம், அந்த ரசிகைக்கு மாப்பிளை பார்க்க, பெண்ணோ எனக்கு போலீஸ் மாப்பிளைதான் வேண்டும் என்று ஒத்தைக்காலில் [[?]] நிற்க...


ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே பொண்ணை கட்டி கொடுத்தனர், அந்த மாப்பிளை போலீசுக்கு தலை வேதனை சொறியும் பெண் வருகிறதுன்னு தெரியாமல் மாட்டிக் கொண்டார்.

"எதற்கும் கேப்டனையே உதாரணமாக" காட்டி காட்டி நம்ம நிஜ போலீஸை அலற விட்டுருக்கு, பொறுத்து பொறுத்து நொந்த மாப்பிளை போலீஸ்...கஷ்ட்டப்பட்டு கேப்டன் அப்பாயிண்ட் மென்ட் வாங்கி வாம்மா கேப்டனை நேரில் சந்திக்கலாம்ன்னு சொல்ல, குஷியாகிட்டாங்க.


கேப்டனிடம் போனதும் அட்வைஸ் பண்ணி இருக்கார், "நாங்க எல்லாம் நடிகர்கள், உன் மாப்பிளைதான் உண்மையான நிஜ ஹீரோ, வா வந்து சூட்டிங் பார்த்துட்டு போ அப்பத்தான் உனக்கு புரியும்"ன்னு சூட்டிங் ஸ்பாட் கூட்டிப் போனாராம்.


பொண்ணும்  மதி தெளிஞ்சி போனாளாம் !
=================================================================
நம்ம தல அஜித், வீட்டில் அல்லாமல் வெளியே சென்றால் கிளாசில் தண்ணீரோ, ஜூஸ், மற்றும் டீ வகையறாக்களை சாப்பிடும் போது, இடது கையால்தான் குடிப்பாராம், அடுத்தவர்கள் வலது கையால் குடிப்பதால் அவர்கள் வாய் வைத்து குடித்த இடம் மாறிவிடுமாம், எம்புட்டு கழுவினாலும் சிலருக்கு அது அலர்ஜிதான் போல, தல"யும் உஷார் இப்போ நானும் உஷார் அடுத்து நீங்களும் உஷார் !

இன்னுமொரு ஆச்சர்ய செய்தி...

தல கூடவே அசிஸ்டென்ட்டாக இருந்தவன், தல"யின் மிகவும் விசுவாசமுள்ள நண்பன், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், ஆனால் பெண் வீட்டார் பெண் தர மறுப்பதாகவும் சொல்லி அழ...

தல நேரடியாகவே சம்பந்த பட்ட வீற்றிடம் நேரடியாக போயி பெண் கேட்க, வீட்டார் சந்தோசமாக சம்மதித்து விட்டார்கள் !

பண விஷயங்கள் எல்லாம் அவனை நம்பிதான் எல்லாம் நடக்குமாம், பணம் கையாடல் நடக்கிறது என்று பலமுறை மற்றவர்கள் தல"க்கு சொல்லியும் அவன் மீது இருந்த நம்பிக்கையில் இவர்கள் பொறாமை கொண்டு பொய் சொல்கிறார்கள் என்றே ரொம்ப நாள் எதையும் செக் பண்ண வில்லையாம் !
மற்றவர்கள் கோள் மூட்ட மூட்ட அம்மி நகர்ந்தது, ஏகப்பட்ட கையாடல்கள், இதற்கிடையே அவனின் கல்யாண பத்திரிக்கையும் வந்தது, 

கல்யாணத்தன்னைக்கு அங்கே சென்று மணமக்களை வாழ்த்தி விட்டு மணமகன் கிப்ட்டாக கையில் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு தல வந்துவிட்டாராம்.

முதலிரவில் மற்றது நடக்குமுன் அந்த கிப்ட் பார்சலைதான் ஆர்வமுடன் திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி கூடவே இன்பமும்...

ஆம் கவருக்குள் இருபது லட்சம் ரூபாயும் ஒரு பேப்பரில் "வேறே வேலை தேடிக்கொள்" என்றிருந்ததாம் !

அதான் தலைக்கு இம்புட்டு மாஸ் போல இல்லையா ?!

Sunday, May 11, 2014

அனுபவங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் !

வேலை மட்டுமே செய்தாலே போதும் என்று இருந்து விடாதீர்கள், ஏதாவது பிடித்த இசை பயிலுங்கள், அப்புறம் பாருங்கள் உங்களுக்கு உத்தியோக உயர்வும், உற்சாகமும் மனதில் அள்ளிக் கொண்டு வரும், அதற்கு நான் கியாரண்டியும், என் அனுபவமும் கூட...!


சாதாரண வெயிட்டராக ஆரம்பித்த வாழ்க்கை, என்னை இன்று ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலின் மேனேஜராக்கியது அந்த இசை பயிலல்தான் !

நான் பயின்றது கேசியோ என்னப்படும் கீபோர்டு பிளே...என் மகனுக்கும் ஈசியாக கற்று கொடுத்து விட்டேன் எங்கள் சர்ச்சில் அவன்தான் இப்போது கீபோர்டு பிளேயர், மகளுக்கு விரல் நீளம் இன்னும் பத்தவில்லை இனிதான் அவளுக்கும் கற்று கொடுக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------

120 தினார் [[இருபதாயிரம் ரூபாய் கிட்ட இருக்கும்]] கொடுத்து புதிதாக ஒரு மொபைல் வாங்கினான் பங்களாதேஷ் பெங்காலி ஒருத்தன், ஒருநாள் மேல் சட்டை பாக்கட்டில் போனை வைத்திருந்தவன் பாத்ரூமில் குனியும்போது போன் தண்ணிக்குள் விழுந்து விட, கலவரமானவன்.....

போனை எடுத்துக்கொண்டு போயி மைக்ரோ ஓவனில் வைத்து சூடாக்க, திறந்து பார்த்தபோது அது உருகிபோயி இருக்க...என்னை கூட்டிட்டு போயி காட்டினான் பாருங்க...

நான் அவன் கையைப் பிடித்து என் கண்களில் ஒற்றிக் கொண்டு "கீப் இட் அப் நீ எங்கியோ போயிட்டே, உன் அறிவுக்கு நீ எங்கேயோ இருக்க வேண்டியவன்" என்று சொல்லி அவன் கால் சுண்டு விரலை பிடித்து வணங்க...

அவன் "ங்கே...." நானும் "ங்கே..." 

ஏண்டா எனக்குன்னே வாறீங்க ?
------------------------------------------------------------------------------------------------------


பத்து வருஷம் முன்பு [[மும்பையில்]] புதிதாக வந்த [[வாங்கின]] கேனடிக் ஹோண்டாவை எடுத்துட்டு பந்தாவா புது சட்டை போட்டு கூலிங்கிளாஸ் வச்சிட்டு பந்தா பண்ண ரோட்டுல போயிட்டு இருந்தேன்...

அந்த நேரம் பார்த்து டவுசர் போடாத காக்கா ஒன்னு ஆயி பண்ணிருச்சு என்மேல, பைக்கை நிறுத்தி, காக்காவை திட்டிக்கிட்டே துடச்சிட்டு இருந்தேன்...

திடீர்ன்னு அங்கே வந்த போலீஸ் லைசன்ஸ் இத்தியாதிகளை கேட்க...எல்லாம் இருந்துச்சு லைசன்ஸ் தவிர...

பணம் கொடுத்து தப்பலாம்ன்னா...பந்தா பண்ண வந்த வேகத்தில், பர்சும் எடுக்க மறக்க...

சாவியை புடுங்கிட்டு கேவலமா அனுப்புச்சு போலீஸ்....வீட்டுக்கு போயி விஷயத்தை சொன்னதும் வீட்டம்மா தரையில உருண்டு உருண்டு சிரிக்குது...ஸ்ஸ்ஸ் அபா...
-----------------------------------------------------------------------------------------------
புத்தாண்டு [[விஷூ]] அன்று மலையாளி நண்பர்கள் வற்புறுத்தி விருந்துக்கு அழைக்க, அன்றைக்கு எனக்கு லீவாக இருந்ததால் நானும் சென்றிருந்தேன்.
பூஜையோடு ஆரம்பம் ஆனது கச்சேரி, இதுல விஷேசம் என்னன்னா சாமிக்கு பூஜை செய்தது சானாவாஸ் என்னும் முஸ்லீம் நண்பன்...!


காய்கறி சலாட் மற்றும் ஃப்ரூட் சலாடுகளும், சிக்கன் சோசேஜ் வறுத்தது, காய்கறிகளுடன் முட்டை அடித்து கலக்கி வறுவல் செய்தும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, ஒருத்தன் [[நண்பன்தான்]] நகத்தை அடிக்கடி கடித்துக் கொண்டிருக்க...


இன்னொரு நண்பன் அவனை நகத்தை கடிக்காதே கடிக்காதே என்று சொல்ல, அவனும் மறுபடியும் மறுபடியும் நகத்தை கடித்து துப்ப, ஆவேசமான நண்பன் எழும்பி அவனை விளாசி தள்ளிவிட்டார். [[நகத்தை கடிக்குறவனை நம்ப கூடாதாம், அவன் சிந்தனையே கெட்டதாக இருக்குமாம்]] 

அப்புறம் என்ன...ரெண்டு டீமாக பிரிந்து அடிச்சிகிட்டாங்க, நாட்டாமை நான் கண்ணை மூடிகிட்டு உக்காந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.
சண்டை முடிந்து மறுபடியும் ரெண்டு லார்ஜ் உள்ளே போனதும் அவனவன் உக்காந்து அழ ஆரம்பிச்சிட்டாணுக, ஒருத்தன் கால்ல ஒருத்தான் மாறி மாறி விழுந்து மன்னிப்பு கேட்பதும் கட்டி பிடிப்பதும் அல்லாமல், சம்பந்தமே இல்லாத [[நான்தான் சண்டைக்கே போகலையே]] என் கால்லயும் வந்து விழுந்தானுக.

எனக்குன்னா மண்டையை பிச்சிக்கனும் போல இருக்கவே, ஓடிப்போயி ஒரு செடி தொட்டியை தூக்கி எரிந்து என் கோபத்தைக் காட்ட...அப்புறமாதான் அடங்கினார்கள்.

கொய்யால பார்ட்டி நடத்துற இடத்துல வந்து ஒப்பாரி வச்சிகிட்டு ஏன்ய்யா ஏன் ?

Monday, May 5, 2014

மச்சம் வந்தால் நல்லதாம் அப்போ மரு வந்தால் ?

கழுத்துல ஒரு ரெண்டு மூன்று  மரு இருந்து தொல்லை பண்ணிகிட்டே இருந்துச்சு, பெண்களின் தலை முடி வைத்து கட்டினால் உதிர்ந்து விடும் என மனைவி சொல்ல...அக்கா பொண்ணுங்க எல்லாம் ஆளாளுக்கு முடியை பிடுங்கி கட்ட...
டைட் பண்ணும் போது முடி அறுந்து விடும், மறுபடியும் கட்டுவார்கள் அறுந்து விடும், அப்போது அங்கே வந்த மனைவியின் தோழி, பெண்கள் கூந்தல் முடி அல்ல, குதிரை முடி வைத்து கட்ட வேண்டும் என்று சொல்ல...


ஒருநாள் நல்ல மப்பில் நண்பர்களுடன் காரில் போகும்போது கட்டிப்போடப்பட்ட ஒரு குதிரை நிற்க, நண்பர்களிடம் விஷயத்தை சொன்னதும் கார் ரிவர்சில் வந்தது, இப்போ குதிரைகிட்டே போயி முடி தான்னு கேக்கவா முடியும் ?


எனக்கு பயம், நான் மாட்டேன் என்று சொல்லி விட்டேன், நமக்கு நண்பனுகளுக்கா பஞ்சம் ? ராஜூ நான் போறேம்டான்னு போன வேகத்துல குதிரைகிட்டே மிதி வாங்கிட்டு அதே வேகத்துல கார்ல வந்து விழுந்தான்...
கார் பறக்க...நண்பன் ஆத்தே"ன்னு உக்கார...அவன் மிதி வாங்கினதா முக்கியம் ச்சே முடி போச்சேன்னு நாங்கள் அங்கலாயிக்க...சக்சஸ் என்று கத்தினான் திடீர்ன்னு, என்னடான்னு பார்த்தால் அவன் கையில குதிரை முடி...!


மிதியோடு சேர்த்து வாலில் முடியை பிடிங்கிட்டான், அன்றோடு அவன் பெயர் "முடி புடுங்கி" ஆகிப்போனது, நண்பேண்டா !


அந்த முடியை கட்டி ஒவ்வொரு மரு'வா விழுந்துருச்சு, இதை மருவில் கட்டியதும், பிளட் சர்குலேஷன் நிக்குறதுனால அழுகி காய்ந்து நமக்கே தெரியாமல் உதிர்ந்து விடுகிறது !
-----------------------------------------------------------------------------------------

 வெளியே இருந்து நல்லா சரக்கடிச்சுட்டு ஒரு அரபி எங்க ரிஷப்சன் வந்து நின்னுகிட்டு, அம்மினிங்ககிட்டே "எனக்கு உங்க ஹோட்டல் ரூம் மினி பார்'ல இருந்து ரெண்டு பாட்டல் சிவாஸ் ரீகல் வேணும்"


"சர் அது ஹோட்டல் ரூம்ல தங்குறவங்க மட்டும்தான் யூஸ் பண்ணமுடியும் "

"இல்லை உங்க மானேஜரை கூப்புடு, முதீர் முதீர் என்று அலற [[ முதலாளியையும் மானேஜரையும் இவர்கள் இப்படிதான் அழைப்பார்கள்]] நான் வெளியே வந்ததும் சந்தோஷமானவனாக...
 "நீ இந்தியாவா ?" [[ஏன் பார்க்க அப்பிடி தெரியலையோ அவ்வவ்]]

"ஆமாம் சொல்லுங்க சர்"

"எனக்கு ரூமில் இருக்கும் மினி பார்'ல இருந்து ரெண்டு பாட்டல் வேணும்"

"நோ...உனக்கு என்ன சாப்பிட வேணுமோ அது இங்கே இருக்கும் பாரில் கிடைக்கும் நீ அங்கே போயி குடிக்கலாம் சாப்பிடலாம் என்று கண்டிப்பாக சொல்லி வழி காட்ட கொஞ்சமாக பின்வாங்கி பயந்தவன் சொன்னான் பாருங்க...

"வல்லா...நீ ஒரிஜினல் இந்தியன் இல்லை, நீ டூப்ளிகேட் இந்தியன்..."ன்னு சொல்லிகிட்டு கூலாக போறான்.

என் பின்னாடி நிக்குறது எனக்கு முதுகுல ரெண்டு போட்டுகிட்டு நின்னு சிரிக்குது...

ஏன்டா  எனக்குன்னே வாறீங்க.....[[நாம மனசுல பலமா சிரிச்சு ரசிச்சுகிட்டு, முகத்தை வெறப்பா வச்சிகிட்டு நிக்க வேண்டி இருக்கு ஸ்ஸ்ஸ்ஸ் அபா]]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!