Tuesday, July 22, 2014

நீர் என்னை காண்கிற தெய்வம் !

நேற்று ரூம் இருக்கா என்று கேட்டு ஹோட்டல் நிலவரம் பற்றி அம்மிணியிடம் விசாரித்து கொண்டிருந்த ஒரு இந்தியர்...நான் எட்டி பார்த்தபோது எங்கயோ பார்த்த நியாபகம் பட்டென்று நியாபகம் வரவில்லை...
 

அவருக்கு தெரியாமல் நானும் எனக்கு தெரியாமல் அவரும் உற்று பார்த்துக் கொண்டோம், பிடி கிடைக்கவில்லை....அப்புறம் லேசா நியாபகம் வந்து போயி மெதுவா...

"மிஸ்டர் ஷா..." என்று மெல்ல அழைத்தேன்.

"எஸ் யூ....?"

"ஐயம் மனோஜ், பிஃபோர் வொர்க்கிங் ஃபால்கன் இண்டர்நேசனல் ஹோட்டல்"

"வாவ் மை காட்...மனோஜ் ஹவ் ஆர் யூ ?"

"நலம் சார் நீங்க எப்டி இருக்கீங்க எங்கே இருக்கீங்க ?"

"நான் அதே ஹோட்டலில்தான் இருக்கேன் மனோஜ், நீ இம்புட்டு உசரத்துக்கு வருவேன்னு எனக்கு முன்பே தெரியும் உன் கண்களின் பிரகாசம் அதை உணர்த்தியது உண்டு எனக்கு, காட் பிளஸ் யூ..."

காபி ஷாப்பில் போயி காப்பி குடித்தவாறே பரஸ்பரம் விசாரித்து விடை பெற்றார்.


பனிரெண்டு வருஷம் பின்னோக்கினேன்...அதாங்க பிளாஷ் பேக்...

ஃபாலகன் இன்டர் நேசனல் இரண்டு நட்சத்திர ஹோட்டல்...நாப்பது ரூம்ஸ்...ஒரு ஆங்கில டிஸ்கோ...ஒரு இந்தியன் டிஸ்கோ...ஒரு அரபி டிஸ்கோ...ஒரு பார்...காபி ஷாப் வித் ரூம் சர்வீஸ்...

அனைத்து கேரளா நடிக நடிகைகளும் கேரளா விவிஐபிகளும் வந்து போன இடம்...நான் ரூம் சர்வீஸ் வெயிட்டர்...ஷா சார் ஆல் ஹோட்டல் இன்சார்ஜ் !

தெய்வ அனுகிரகத்தால் இன்று நான் நான்கு நட்சத்திர ஹோட்டலின் இன்சார்ஜ், ஷா சார் இப்பவும் அங்கே அதே பதவியில்...!

 பதிமூன்று மணி நேரம் வேலை, லீவில்லாமல் இரண்டு வருஷம் வேலை பார்த்துட்டு லீவுக்கு ஊருக்கு போனபோது ஐந்துநாள் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கின போது கேலி செய்தனர் குடும்பத்தினர், நம்ம உழைப்பு அவங்களுக்கு எங்கே தெரியப் போகுது ஆனால் நம்மை படைத்த தெய்வம் நம் உழைப்பை காணுகிறான் !

காலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது இல்லையா !

கண்ணீரோடு என்னை படைத்தவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்...

Sunday, July 20, 2014

பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் !

காய்கறி வாங்க மார்கெட்டுக்கோ அல்லது மளிகை கடைக்கோ போனது கிடையாது, அப்பிடியே போனாலும் அம்மா கூட அல்லது வீட்டம்மா கூட டைம்பாஸ் ஆக போறது உண்டு, அவிங்க என்ன எடுக்குறாங்களோ வாங்குறாங்களோன்னு பராக்கு பார்ப்பதோடு சரி...


இடையில் நண்பர்கள் போன் வந்துச்சுன்னா ஒரே ஓட்டமா ஓடிருவேன்.


ஒருநாள் சும்மா பார் போயிட்டு திரும்பும் போது மார்கெட் களை கட்டி இருக்க, சும்மானாச்சும் ஏதாவது காய்கறி வீட்டுக்கு வாங்கி போகலாம்னு கிளம்பினேன்.


தக்காளி கிலோ 20 ரூபாய் 


வெங்காயம் கிலோ 20 ரூபாய் 


கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய் 


முருங்கைக்காய் கிலோ 40 ரூபாய் 


கோவைக்காய் கிலோ 30 ரூபாய் 


வெள்ளரிக்காய் கிலோ 35 ரூபாய் 


மிளகாய் 5 ரூபாய்க்கு மட்டும் 


உருளை கிழங்கு கிலோ 20 ரூபாய் 


வெண்டைக்காய் கிலோ 30 ரூபாய் 


இஞ்சி ஐந்து ரூபாய்க்கு மட்டும் 


எலுமிச்சை பழம் ஒன்று இரண்டு ரூபாய் 


கறிவேப்பிலை ஓசி

ஆப்பிள் கிலோ 140 ரூபாய் 


பப்பாளி பழம் ஒன்று 60 ரூபாய் 


சீத்தாப்பழம் கிலோ 80 ரூபாய் 


வாழைப்பழம் டஜன் 50 ரூபாய் 


மாம்பழம் கிலோ 80 ரூபாய் 


இம்புட்டையும் வாங்கியாச்சா...இனி ஒன்னரை கிலோ மீட்டர் நடந்தாதான் வீட்டுக்கு போகமுடியும் ஆட்டோகாரங்க பக்கத்துல என்பதால் வரமாட்டாங்க, எனக்கு இத்தனையும் தூக்கிட்டும் போக முடியாது.


சுத்து சுத்தி பார்த்தேன் யாராவது வெட்டியா இருக்கானான்னு, ஒருத்தன் அம்புட்டான், தம்பி இதை தூக்கிட்டு வந்தியன்னா அம்பது ரூபாய் தாரேன் வாறியான்னு கூப்பிட்டேனா அவனோ...


"அட போய்யா இருநூறு ரூபாய் தந்தியன்னா வாறன் அதுவும் இப்பவே தரனும்"ன்னு சொல்ல வேற வழியே இல்லாம போச்சா...


அவனை கூட்டிகிட்டே வீடு பக்கத்துல வந்ததும் அவனிடம் இருந்து எல்லாவற்றையும் பிடுங்கி நான் தலையிலும் கையிலும் வைத்து விட்டு அவனை போக சொல்ல...ஒரு மாதிரி என்னை பார்த்து விட்டு சென்றான்.


வீட்டுக்கு நான் வந்த கோலத்தை பார்த்த வீட்டம்மாவுக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம், என் மகள் ஐஈஈ என்று பைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்து பார்க்க...


வீட்டம்மா முகத்தில் வழிந்த சந்தோசம் பார்க்கணுமே அப்படியே பூரித்து போனாள், "எப்பா என்னால நம்பவே முடியல நீங்களா வாங்கிட்டு தூக்கிட்டு வந்தீங்க ?!"


சாயங்காலம் வீட்டம்மாவின் மராட்டி தோழி வீட்டுக்கு வந்தபோது "எடி எம்மாப்பிளை காய்கறி பழம்ன்னு நிறைய வாங்கி தூக்கிட்டே வந்துருக்கார் எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை" என்று இவள் சொல்ல...


"ஆங்...வாங்கிட்டு வந்தான்னு சொல்லு தூக்கிட்டு வந்தான்னு சொல்லாத கூட ஒரு ஆளு சுமந்துகிட்டு வந்தான்" [[பலமாத்தான் வாட்ச் பண்ணுறாங்க போல]]
அப்புறமென்ன வாயிலேயே அடி விழுந்துச்சு, "அய்யோ இனி மார்கெட்டுக்கு நான் தனியா போகணுமே"ன்னு மராட்டிகாரி புலம்பிகிட்டே போனாள்.


இப்போவெல்லாம் ஊருக்கு போனால் ஆர்டர் வந்துரும் அத்தான் இன்னிக்கு இது இல்லை அது இல்லைன்னு வாங்கிட்டு வர சொல்லிருவாங்க, நமக்கும் ஒரு வகையில வசதியா போச்சு, பின்னே அந்த கேப்ல ஸ்மல் இல்லாத சரக்கா சாத்திட்டு வந்துருவொம்ல்ல, எங்கே போனேன்னு கேக்க முடியாதே.


இந்த தடவை ஊருக்கு [[கன்னியாகுமரி]] போன போது இதே போல அம்மாவுக்கு காய்கறி வாங்கிப் போனேன் [[முதல் தடவை]] அம்மாவுக்கு கண்ணுல நீரா கொட்டிருச்சு "எலேய் மக்ளே தம்பி....... நீயாலேய் வாங்கிட்டு வந்தே"ன்னு ஆர்வமா பைகளை பிரிச்சு ஆச்சர்யமாக பார்த்தாங்க...


சிம்பிளான சில சந்தோஷங்களை அவர்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம் என்ற உண்மை அப்படியே முகத்தில் அறைந்து விட்டது !

Thursday, July 10, 2014

போலீஸின் கொசு மருந்தடித்தல் !

ம்ம்ம் இன்னைக்கு "கும்கி" படம் பார்த்தேன்....செங்கோவி ஸ்டைல்ல படத்தை உரிச்சா...

கிளைமாக்ஸ்ல யானை செத்துரும்ன்னு யானை லாரியை விட்டு இறங்க மறுக்குறப்பவே  தெள்ள தெளிவா தெரிஞ்சிருது.

எங்கப்பனை குடிக்க வச்சே கொன்னது நீதானென்னு சொன்னதில் இருந்தே தம்பி ராமய்யாவின் காமெடி அவுட்டே.

ஹீரோ எப்பவுமே சீரியஸாவே இருக்கார், அந்த கேரக்டராகவே மாறி இருக்கார் விக்ரம் பிரபு.

ஹை பண்ணு மாதிரி பொண்ணு.... [[கதாநாயகி]] கொஞ்சம் நடிக்கவும் செய்யுது.

"அய்யய்யோ" பாட்டு செம மெலடி ரொம்ப நாளைக்கு பிறகு காதுக்கு இனிமை.
காமெரா சான்சே இல்லை கண்ணுக்கு குளிர்ச்சியோ குளிர்ச்சி, அதுவும் அந்த அருவியின் மேலிருந்து கேமரா...எனக்கே தலை சுற்ற அப்பப்பா !

மூன்று வில்லன், ஒன்று காட்டு யானை அடுத்து அந்த கிராம தலைவரும் கிராமமும், இன்னொன்னு ஃபாரஸ்ட் அதிகாரிகள்.

ஆக மொத்தத்தில் காதல் தோல்வி [[கிளைமாக்ஸ் சொதப்பல்தான், காதலர்களை பாரம்பரியத்தை மீறி கிராமத்தை காத்த யானைக்காகவும், ஹீரோவின் நண்பன் மற்றும் மாமாவுக்காக அனாதையான ஹீரோவுக்கு ஊர் தலைவரின் பொண்ணை சேர்த்து வைத்திருக்கலாம், ம்ஹும் அதானே நம்ம சினிமா பண்பாடு ?]]

விமர்சனம் சிம்பிள்...."யானை"
---------------------------------------------------------------------------------------------------

அப்பிடியே போனா எப்பிடி இதையும் படிச்சுட்டு போங்க...


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், போலீஸ், உளவுத்துறை போன்றவைகள் குற்றவாளிகளை வலைவீசி பிடிக்கும் விதத்தின் பெயர் என்ன தெரியுமா ?
"கொசு மருந்தடித்தல்"

தெருவுல மருந்தடிச்சா கொசு வீட்டுக்குள்ளே வந்து ஒளித்துக் கொள்ளும், வீட்டுக்குள்ளே மருந்தடித்தால் கொசு வெளியே ஓடிவிடும் !

அப்படிதான் இவர்களும் பத்திரிக்கைகளுக்கு நியூஸ் கொடுப்பார்கள், பெரும் குற்றம் செய்தவன் எவனும் பத்திரிக்கை பார்க்காமல் இருக்க மாட்டான் இல்லையா ?

"இதோ குற்றவாளியை சுற்றி வளைத்து விட்டோம் [[புரளிதான்]] என்றால் குற்றவாளி கலங்கிய குளத்தின் மீனாவான், ஒரே அமுக்கு...
அப்புறம்...

குற்றவாளி தன் முகத்தில் மாற்றம் கொண்டு வந்துவிட்டான் அவனை கண்டு பிடிக்க மிக சிரமமாக இருக்கிறது என்றால், குற்றவாளி பக்கத்தில் இருக்கிறான் என்று அர்த்தம், அவனும் சந்தோஷமாக வெளியே வருவான் ஒரே அமுக்கு...

அப்புறம்...?

அப்புறம் என்ன அப்புறம் ? என்கவுண்டர்தான் அப்புறம் !
கூட்டி கழிச்சு பாருங்க நான் சொல்றது சரியான்னு ?

ரகசியத்தை சொல்லிப்புட்டேனோ ஆபீசர் அவ்வ்வ்வ்....

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!