Monday, December 29, 2014

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் தொடர் 2...!

முதல் பாகத்தை கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் !
http://nanjilmano.blogspot.in/2014/12/blog-post.html

நண்பர்கள் ஹோட்டல் ரூமில் இருக்கும் போது காற்று வர லேசாக ஜன்னலை திறந்து வைத்திருந்தோம், அப்படியே அவர்கள் போனதும், தெரியாமல் ஜன்னலை அடைக்காமல் தூங்கி விட்டோம், சென்னை கொசு பற்றி தெரிந்தும்...அப்பாடா என்னா கடி என்னா கடி...! 

அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி [[கொசு தொல்லை]] வெளியே வந்து நின்று கொண்டிருந்தேன் மும்பையில் இருந்து வந்த களைப்பு வேற, நாளைய புரோகிராம் எல்லாம் சிவா, பால கணேஷ் அண்ணன், கே ஆர் பி செந்தில் அண்ணன் மற்றும் ஸ்கூல் பையன் சரவணனும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சரி எப்படியும் பத்து பதினோரு மணி ஆகிவிடும் நன்றாக தூங்கி விடலாம் என்று போயி தூங்கினதுதான் தெரிஞ்சிது, காலை ஏழரை மணிக்கே மெட்ராஸ் பவன் சிவா வந்து கதவை தட்ட...

எழும்பி பரபரவென்று குளித்து முடித்துவிட்டு கிளம்புமுன் சிவா பல விஷயங்களை எனக்கு சொல்லிக் கொண்டிருந்தார், "வாங்க மனோ பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு சாப்புட்டுட்டு வருவோம்" என்றதும் போனோம்.

"இந்தியன் குளம்பியகம்" என்று போர்டு இருந்துச்சு, என்னய்யா பெயர் இது என்றேன், காப்பி கடையை இப்படியும் சொல்வதுண்டு என்று சொன்னார் சிவா...!

சாப்பாடு சூப்பராக இருந்தது, கணேஷ் அண்ணன் வர கொஞ்சம் லேட் ஆகும் என்பதால், சிவா அருகில் இருக்கும் அவர் வீட்டுக்கு அழைக்கவே, நான் டவுசர் போட்டிருந்ததால் துணி மாற்றி செல்லலாம் என்றேன், இல்லை மனோ அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க லேட்டாதான் வருவாங்க என்றதும் அவர் வீட்டிற்கு சென்றேன்.

கொஞ்சநேரம் அளவளாவி விட்டு வெளியே வந்ததும், அப்படியே நடக்கலாம் வாங்க மனோ என்று அவர் கூட்டி சென்றது சென்னையின் உயிர்நாடியான மவுண்ட் ரோடு, கிளீனாக இருக்கிறது ஆனால் தூசு ரொம்ப இருக்கிறது, எதிரில் ஒய் எம் சி ஏ காம்பௌண்டையும் காட்டி தந்தார் பச்சை பசேல் என்று இருக்கிறது !
சென்னை மவுன்ட் ரோடும், எதிரில் ஓய் எம் சி ஏ'யும், அருகில் மெட்ராஸ் பவன்"சிவாவும் நானும்.

கணேஷ் அண்ணன் ரெடி என்றதும், அப்படியே காலை சென்னை பித்தன் "தல" வீட்டிற்கு போவதாக பிளான் போட்டிருந்தார்கள், சிவா நான் ஹோட்டல் போயி பேன்ட் சர்ட் மாற்றிட்டு போகலாம் என்றதும் சிவா, "அண்ணே மனோ ட்ரெஸ் குறைவா போட்டுருக்காராம் அதனால ஹோட்டல் போயி துணி மாற்றி ரெடியாகுறோம் நீங்க ஹோட்டல் வந்துருங்க"

நாங்கள் ஹோட்டல் வந்து சேரவும் கணேஷ் அண்ணனும் வந்துவிட்டார், மனோ ட்ரெஸ் குறைச்சல் என்று இழுக்குமுன் "இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்" என்று டைமிங் பஞ்ச் சொல்ல சிரித்து அப்படியே கிளம்பினோம், சிவாவுக்கு தல வீட்டிற்கு போக வழி சொல்லி குடுத்து விட்டு அண்ணன் கிளம்பினார் புல்லட்டில் எங்களுக்கு முன்பாக.

அடையாறு பக்கம் என்பதால் எப்பவோ படித்த அந்த ஆலமரத்தை தேடினேன் அம்புடல, குறிப்பிட்ட இடத்தில் கணேஷ் அண்ணன் காத்திருக்க ஆட்டோவில் போயி இறங்கினோம்.

கணேஷ் அண்ணன், அவர் எழுதிய சிரிப்பு யாணம் மற்றும் சிறுகதைகள் அடங்கிய இரண்டு புஸ்தகம் பரிசளித்து விட்டு தல வீட்டுக்கு அழைத்து சென்றார் அங்கே.....

தொடரும்.....

Friday, December 26, 2014

H2o குறும்படம் விமர்சனம் !

லிபியாவில் பூமிக்கடியில் நீள நதியாக நல்ல தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்த அமேரிக்கா மற்றும் மேலை நாடுகள், குறி வைத்து கத்தாபி என்ற சர்வாதிகாரியை கொன்றதை நாமறிவோம், இன்னும் பல நாடுகளை குறி வைத்து காய் நகர்த்தி வருவதையும் நாமறிவோம்.

அடுத்த உலக யுத்தம் என்றால் அது தண்ணீருக்காகவே இருக்கும்.

அஞ்சாசிங்கம் செல்வின்  இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த குறும்படமும் அதைதான் சொல்கிறது !
மகேஷ், மெட்ராஸ் பவன் சிவகுமார் மற்றும் ஆரூர் மூனா, ஷூட்டிங் ஸ்பாட்.

பாலைவனத்தில் தளர்வாக நடந்து வரும் நாயகன்...தாகத்தால் ஒளித்து வைத்திருக்கும் தண்ணீர் பாட்டலை யாரும் பார்கிறார்களா என்று பயந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ஒரு மூடி தண்ணீர் மட்டுமே குடித்துவிட்டு ஒளித்து வைக்கிறான்.
நானும் ஆரூர் மூனாவும்...

தண்ணீர் களவாணிகள் அதை பார்த்து பிடித்து நாயகனை மிரட்ட, நாயகனோ இவர்கள் பணம் காசுக்காக தன்னை வளைத்து மிரட்டுகிறார்கள் என்று நினைத்து மொபைல், பர்ஸ், லேப்டாப் என கழற்றி வைக்க...

தண்ணீர் களவாணிகள் லேப்டாப் பேக்கை திறந்து பார்த்தாலும் தண்ணீர் இல்லை, நாயகன் பேன்ட் பின்னாடி தண்ணீரை ஒளித்து வைத்திருப்பதை இன்னொரு தண்ணீர் கள்ளன் கண்டு பிடிக்க...
காட்சியை விளக்கும் டைரக்டர் செலவின்.

இடுப்பில் இருக்கும் தண்ணீரை வலுகட்டாயமாக பிடுங்கி எடுத்து அடுத்த தண்ணீர் கள்ளனிடம் கொடுக்க, நாயகன் அந்த தண்ணீர் பாட்டலை பிடுங்கி ஓட முயல...

தண்ணீர் கள்ளனில் ஒருத்தன் நாயகனை சுட்டு கொல்ல...தண்ணீர் பாட்டலை கெட்டியாக பிடித்துக் கொண்டே நாயகன் உயிரை விடுகிறான்.
முதல்ல இந்தாளைதான் போட்டு தள்ளனும்...கேமரா மேன் விமல்...

வில்லன்களுக்கு காசு பணம் முக்கியமில்லை தண்ணீர் மட்டுமே முக்கியம் என்பதாக முதல் பாகம்...[[இதுல மேலே நான் சொன்ன கத்தாபி கதையும் பொருந்தும்]]

திடீர் என நாயகன் கட்டிலில் இருந்து அதிர்சியாக எழும்ப...மேலே சொன்னது கனவாக தெரிய..... லைட்டை போட்டு விட்டு தண்ணீர் பாட்டலை தேட பாட்டல் அங்கே இருக்கிறது.
கதறி கதறி பழவேற்காடு தீவுக்குள் நடந்துவரும் வெங்கடேஷ் மற்றும் மெட்ராஸ் பவன்.

கட்டிலை விட்டு கீழே கால் வைத்ததும் கீழே தண்ணீர், அலட்சியமாக பாத்ரூம் பைப் தண்ணீரை திறந்து வைத்து விட்டதை நினைத்து பைப்பை அடைத்து வைத்துவிட்டு பாட்டல் தண்ணீரை கொஞ்சம் குடித்து விட்டு தூங்குகிறான் நாயகன்.

படத்தை கொஞ்சம் உறிச்சா...

ஒளிப்பதிவு சூப்பர்...[[இதில் மெட்ராஸ் பவன் சிவாவின் பங்கும் உண்டு என்பது ஆச்சர்யம்]]

ஆரூர் மூனா நிஜமான வில்லனாகவே அசத்தி இருக்கிறார்.

செல்வினின் இயக்கமும் நடிப்பும் அருமை...!

இசை இன்னும் அருமை...

விமர்சனம் சிம்பிள்...h2o..."super"

படத்தை காண கீழே இருக்கும் லிங்கை கிளிக் பண்ணவும்.

https://www.facebook.com/selwin.anand/posts/10204838450374292

வலைத்தளம் பதிவர்கள் இப்போது குறும்படம் பக்கமாக மேலே வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது !

Saturday, December 20, 2014

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் !


அண்ணே தி நகர் அருணா ஹோட்டல்ல ரூம் போட்டு வச்சிருக்கேன், நேரே அங்கே போயிருங்க நாங்கல்லாம் அங்கே வந்துருதொம்ன்னு ஸ்கூல்பையன் மற்றும் மெட்ராஸ் பவன் சிவாவும் சொல்ல, ஆட்டோ விரைந்தது அருணாவை நோக்கி ச்சே அருணா ஹோட்டலை நோக்கி...
அங்கே ரிஷப்சனில் நாஞ்சில்மனோ பெயர்ல ரிசர்வேஷன் இருக்கா பாருய்யான்னு சொன்னதும் மேலே கீழே பார்த்துட்டு இல்லை சார்ன்னு சொல்லிட்டான் [[பெரிய அவமானம் அவ்வவ்..]]


அப்புறம் சரவணன்னு [[ஸ்கூல்பையன்]] இருக்கா பாருய்யான்னு சொன்னதும் ஆமா சார்ன்னு சொல்லி ரூம் தந்தான் ஸ்ஸ்ஸ் அபா நம்ம பெயருக்கு இப்பிடி வல்லமை இல்லாம போச்சே..

தி நகர் அருணா ஹோட்டலில் ரூம் போட்டதும், மெட்ராஸ் பவன் மற்றும் ஸ்கூல் பையன் போன்கள் வந்த வண்ணமே இருந்தன, ரெண்டு பேரும் மற்ற நண்பர்களுக்கு தகவல் கொடுத்த வண்ணம் இருக்க...

கே ஆர் பி செந்தில் அண்ணனுக்கு அஞ்சாசிங்கம் செல்வின் எதேயாச்சையாக போன் செய்து "அண்ணே நான் ஒரு குறும்படம் எடுக்கிறேன் அதில் வில்லன் ரோலுக்கு நம்ம நாஞ்சில்மனோ அண்ணன் மாதிரி ஒரு அருவா கேரக்டர் இருக்கு அண்ணனை மாதிரி அருவா பார்ட்டி ஒரு ஆள் வேணுமே" என்று கேட்க...

"மாதிரி என்ன மாதிரி ஒரிஜினலே இங்கேதான் இருக்கார்" என்று சொன்னதாக சொல்லி நம்மளையும் வில்லனா நடிக்க வச்சதை அப்பாலிக்கா சொல்றேன்.
நான், மெட்ராஸ் பவன் சிவா, ஸ்கூல் பையன் சரவணன் மற்றும் கே ஆர் பி செந்தில் அண்ணன்.

ஹோட்டலுக்கு என்னை பார்க்க வந்த சிவா, சரவணன், கே ஆர், பி செந்தில் அண்ணன், மற்றும் பால கணேஷ் அண்ணன், ரெண்டே நாள்தான் சென்னையில் தங்குவதாக சொன்னதால், நான்கு பேரும் எனது [[அவர்களது]] புரோகுராம்களை மாற்றினார்கள்.

பதிவர்கள் யாவருக்கும் ஒரு மீட்டிங் வேடியப்பன் அண்ணன் வைப்பதாக இருந்ததை அடுத்த நாளே வைக்கும்படி கேட்டு, மற்ற எல்லா பதிவர்களுக்கும் தகவல்கள் தந்து கொண்டிருந்தார்கள்.

நன்றாக மகிழ்சியாக அளவளாவி விட்டு அடுத்தநாள் சந்திப்பதாக கலைந்தோம்.

ரொம்பநாள் நண்பர்கள் போல கட்டி பிடித்து அன்பு கொண்டதை பார்த்துக் கொண்டிருந்த நண்பன் மகேஷ் அசந்து போனான் "எப்பிடிண்ணே இது ? ஒருகாலும் பார்க்காம இப்பிடி அன்னியன்னியோமாக இருக்கீங்க எல்லாரும் ?" என்று கேட்டான், "பொறு தம்பி இன்னும் இருக்கு" என்றேன்.

ஆஆ...ன்னு வாய் பிளந்து மல்லாக்க படுத்தவன்தான் அடுத்தநாள் காலையில் மெட்ராஸ் பவன் சிவா வந்து எழுப்பிய பின்தான் எழுந்தான் !

தொடரும்....


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!