Wednesday, September 29, 2010

சொன்னா நம்புங்க...... நம்ம மத்திய அமைச்சர் பிரபுல் பாட்டீலை அமெரிக்காவின் சிகாகோ ஏர்போர்ட்ல தடுத்து வச்சி பலமா விசாரிச்சுருக்கு அமெரிக்கன் போலீஸ்!  ஏ நானும் மினிஸ்டர்தான் நானும் மினிஸ்டர்தான் என்று வடிவேலு கணக்கா அலறிபார்த்தும் பலனில்லாமல், இந்தியா தூதரக அதிகாரிகள் [லேட்டாக] வந்து காப்பாற்றி இருக்கிறார்கள்!!!
    நம்ம கமல்'ஹசன்'யே இந்த போலீஸ் பயங்கரமா விசாரிச்ச கதையும், நான் ஒரு நடிகன் என்று நடித்து காட்டியும் நம்ப மறுத்த போலீஸ்தான் இந்த போலீஸ்!!!
       சரி விஷயத்துக்கு வருவோம். இந்த அமைச்சர் முறையாக தான் அமெரிக்கா வருவதை முன்பே ஏன் இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்க வில்லை? தெரிவித்து இருந்தால் முன்பே இந்திய அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்து இருப்பார்களே....
      அடுத்து, ஒரு அமைச்சர் ஏன் களவாணித்தனமாக அமெரிக்கா செல்ல வேண்டும்???[[ஏதோ உள் குத்து இருக்கா]]
       இப்போது அவமானப் பட்டது பிரபுல் பாட்டீலா அல்லது அவரை தேர்ந்தெடுத்த இந்திய மக்களா???
       இதுக்கெல்லாம் பதில் என்னன்னா............நம்ம பிரதமர் அங்கே போய் நல்லா விருந்து தின்னுட்டு, பயந்து பம்மி நுனி சீட்ல உக்காந்துட்டு, அமெரிக்காகாரன் சொல்ற இடத்திலே எல்லாம் ஒப்பு வச்சிட்டு வந்தா எவன் நம்மள மதிப்பான்????


       இது இதோட முடியப் போவதில்லை இன்னும் அவமானங்கள் தொடரத்தான் போகிறது!!!!  இப்பிடி களவாணித்தனமாக போனால்......!!??
                                                   நாஞ்சில் மனோ
     

1 comment:

  1. ஐ...இங்கயும் நான் தான் முதல் கமெண்ட்....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!