Monday, April 4, 2011

நட்பின் அழகு

நான் மும்பையில் நண்பர்களோடு இருந்த சமயம். அப்போது மும்பையிலிருந்து நினைத்த உடன் ஊர் செல்லமுடியாது காரணம் வறுமையும், சம்பள குறைவும் பாடாய் படுத்தும் [[இப்போல்லாம் சர் சர்ன்னு பிளேன்ல போயிட்டு வர்றானுக]]  அப்படி நண்பர்கள் யாராவது ஊர் போனால் ஒரே  கொண்டாட்டமா இருக்கும். நண்பனை கும்பலா போயி ரயிலேத்தி கட்டிபிடிச்சி அழுதுட்டுதான் அனுப்புவோம். அப்படி வறுமையில் இருந்த ஒரு நாள் நண்பன் ஒருவன் ஊர் போகும் நாள் வந்தது. வழக்கம் போல சந்தோசம்.

 ஊருக்கு போகும் நண்பன் தாராவியில் இருந்து நேரே வீ டி [[விக்டோரியா டெர்மினல் என்ற பெயர் அப்போது இப்போ சத்ரபதி சிவாஜி டெர்மினல்]] ஸ்டேசனுக்கு வந்துவிடுவதாகவும் எங்களை நேரே அங்கேயே வந்து விடுமாறும் சொல்லி இருந்தான். நாங்கள் மூன்று  பேர். நான், கணேஷ், புலிக்குட்டி [[நான் வச்ச பெயர்தான் நிஜ பெயர் மாரியப்பன்]] கிளம்ப தயாரானோம் ஆனால் என்னிடமோ புலிகுட்டியிடமோ காசில்லை என கணேஷிடம் சொன்னோம். அவன் நான் பார்த்து கொள்கிறேன்னு சொல்லவும் கிளம்பினோம் சந்தோசமாக.

 மரோல் டூ அந்தேரி வரை பஸ்ஸில், அந்தேரி டூ சத்ரபதி சிவாஜி ஸ்டேஷன் டிக்கெட்டெல்லாம் கணேஷ்தான் எடுத்தான். ஸ்டேஷன் போயி நண்பனை சந்தோசமாக வழி அனுப்பினோம். திரும்பும் போது அந்தேரி ஸ்டேஷனில் இறங்கி மரோல் போகும் பஸ் நிலையம் போகும் வழியில் கணேஷ் என்னிடம் மூன்று ரூவாய் தந்து நீங்கள் ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க நான் அந்தேரியில் என் நண்பன் ஒருவனை பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்லவும் சரியென்று நாங்கள் பஸ் ஏறி வந்து கொண்டிருந்தோம்...

 அப்போது சக்கலா தர்பன் தியேட்டர் பக்கமுள்ள பெரிய சிக்னலில் பயங்கர டிராஃபிக் ஜாம் ஆகிவிட பஸ் நகர முடியவில்லை. ஒரு அரை மணி நேரம் ஆகி இருந்தது. வேடிக்கை பார்த்து கொண்டிருந்த புலிக்குட்டி என்ன தட்டி மனோ அங்கே பார் அங்கே நடந்து வருவது கணேஷ்'தானே என்றான் நானும் பார்த்தேன் அது கணேஷே'தான் நண்பனை பார்க்க போனவன் இங்கே எதுக்கு வருகிறான் என்ற ஆச்சர்யத்துடன் பஸ்சை விட்டு இறங்கினோம்.

என்ன கணேஷ் நண்பனை பார்க்காமல் இங்கே வந்துட்டு இருக்கே என கேட்டேன். நண்பன் வீட்டுக்கு போனேன் மக்கா அவன் வீட்டுல இல்லை அதான் திரும்பிட்டு இருக்கேன் என்றான். அப்போ சரி வா பஸ்ஸில் ஏறலாம் என்றேன் அவன் வேண்டாம் என மறுத்தான் எங்களை போக சொன்னான். அட வாடா கழுதை என நானும் புலிக்குட்டியும் கண்டிப்புடன் பஸ்சுக்குள் இழுக்க....அப்போதான் சொன்னான் காசு இல்லை மக்கா தீர்ந்துடிச்சு என்றான். மனசுக்கு கஷ்டமாக சரி மூவருமே நடந்தே போவோம்னு நடந்தோம்.

மனசுக்கு வலியான தருணம் அது. கணேஷிடம் கேட்டே விட்டேன் ஏண்டா எங்களை பஸ் ஏத்தி விட்டுட்டு நீ நடந்தாய் என நான் சீறவும், கணேஷ் சொன்னான் மக்கா என் கையில் இருந்தது மூனரை ரூவாய் அந்தேரி டூ மரோல் பஸ் டிக்கெட் ஒரு ஆளுக்கு ஒன்னரை ரூவாய் பஸ்சுல போனா ரெண்டு பேருதான் போக முடியும் அதான் மூணு ரூவாயை உங்கள்ட தந்துட்டு அம்பது பைசாவுக்கு பீடி வாங்கி [[எப்பவும் சிகரெட் குடிக்கிற ஆளு]] வலிச்சிட்டு நான் நடந்து போகலாம்னு பொய் சொன்னேன்னு சொன்னான்...

 என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய்.....நட்பு அன்பு பாசம் என் நண்பனிடம் கொட்டி கிடந்துருக்கு....இப்பவும் நினச்சா கண்ணீர் கொட்டும் எனக்கு. இப்போது ஆயிரம் ரூவாய் நோட்டு தாள்கள் பறக்கிறது கைகளில் ஆனால் அந்த நாளின் வறுமையிலும் நட்பு உயிரோடு இருந்துள்ளதை நினைக்கும் போது மனம் உவகை கொள்ளத்தான் செய்யுது.

அப்புறம் நான் பஹ்ரைன் வந்துவிட்டேன். லெட்டரில் தொடர்பில் இருந்தேன். கொஞ்சநாள் கழித்து ஊர் போவதாக கடிதம் எழுதி அவன் ஊர் அட்ரசும் தந்தான். நான் எல்லோர் அட்ரசையும் ஒரு சின்ன டைரியில் எழுதி வச்சிருந்தேன். லீவில் மும்பை வந்தபோது டைரியை மறந்துவிட்டேன். மும்பையில் பெய்த கண மழையில் டைரியும் காணாமல் போனது. தொடர்பு அருந்தே போச்சு. இப்போ என்ன செய்கிறான் எங்கே இருக்கிரான்னே தெரியவில்லை. என் மனசுமட்டும் அவனை தேடிகொண்டிருக்கிறது.  ஆனால் அவன் ஊர் அம்பாசமுத்திரம் பக்கம் கோபாலசமுத்திரம்னு அட்ரஸ் எழுதுன நியாபகம் இருக்கு முழுப்பெயர் கணேஷ் மூப்பனார்.  இந்த முறை லீவுக்கு வரும்போது வலைதள நண்பர்கள் மூலமாக அவனை கண்டுபிடித்து விடுவேங்குற நம்பிக்கை இருக்கு...

டிஸ்கி : போட்டோவில் இருப்பது ஜூனியர் மனோ'வின் நட்பு வட்டம். அவருக்கும் இன்னும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் சார் எப்பவும் பிசியாம் ஹா ஹா ஹா.....

79 comments:

  1. உண்மையில் நெகிழ்வான சம்பவம் பாஸ்.. என்னால் அம்பாசமுத்திரம் வரை உதவ முடியாது என நினைக்கிறேன்.. இருந்தாலும் என் நட்பு வட்டாரங்கள் மூலம் ஏதாவது செய்ய முடியுதா என்று பார்க்கிறேன்..

    உயிருக்குயிரான நண்பர்கள் இப்படி பிரியும்போது வேதனை தான்.. சீக்கிரமே கிடைப்பார்.. உங்க நண்பர்னு சொல்றதால ஒரு ஐடியா.. இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இருப்பாரான்னு பாக்கலாமா.?

    ReplyDelete
  2. //சொஜ்ஜி....//

    அய்யே! எனக்கு பிடிக்காது.. எனக்கு பஜ்ஜி மட்டும் தான்..

    ReplyDelete
  3. சிறந்த நண்பன்
    நிச்சய்ம் தொடர்புகொள்ள முயற்சியுங்கள்

    ReplyDelete
  4. அவன் ஊர் அம்பாசமுத்திரம் பக்கம் கோபாலசமுத்திரம்னு அட்ரஸ் எழுதுன நியாபகம் இருக்கு முழுப்பெயர் கணேஷ் மூப்பனார். இந்த முறை லீவுக்கு வரும்போது வலைதள நண்பர்கள் மூலமாக அவனை கண்டுபிடித்து விடுவேங்குற நம்பிக்கை இருக்கு...

    வலை விடு தூதா... ஆனாலும் மனோ நட்புக்குள் தான் எத்தனை அழகு...விரைவில் கிடைப்பார் உங்கள் நண்பர்...

    ReplyDelete
  5. போட்டோவில் இருப்பது ஜூனியர் மனோ'வின் நட்பு வட்டம். அவருக்கும் இன்னும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் சார் எப்பவும் பிசியாம் ஹா ஹா ஹா.....

    ஏழுபேரில் யார் உங்கள் விட்டம்...

    ReplyDelete
  6. இதுல 'ஜூனியர் மனோ' யாருங்?

    ReplyDelete
  7. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்பா......

    ReplyDelete
  8. இதுதான் நட்பு!படிக்கும்போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது மனோ!அவரை விரைவில் நீங்கள் சந்திக்க இறையருள் புரியட்டும்!

    ReplyDelete
  9. //தம்பி கூர்மதியன் said...
    உண்மையில் நெகிழ்வான சம்பவம் பாஸ்.. என்னால் அம்பாசமுத்திரம் வரை உதவ முடியாது என நினைக்கிறேன்.. இருந்தாலும் என் நட்பு வட்டாரங்கள் மூலம் ஏதாவது செய்ய முடியுதா என்று பார்க்கிறேன்..

    உயிருக்குயிரான நண்பர்கள் இப்படி பிரியும்போது வேதனை தான்.. சீக்கிரமே கிடைப்பார்.. உங்க நண்பர்னு சொல்றதால ஒரு ஐடியா.. இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இருப்பாரான்னு பாக்கலாமா.?//

    பணக்காரனாதான் இருப்பான் அவன் மனசுக்கு...

    ReplyDelete
  10. //தம்பி கூர்மதியன் said...
    //சொஜ்ஜி....//

    அய்யே! எனக்கு பிடிக்காது.. எனக்கு பஜ்ஜி மட்டும் தான்..//

    சும்மா தின்னு மக்கா....

    ReplyDelete
  11. //Speed Master said...
    சிறந்த நண்பன்
    நிச்சய்ம் தொடர்புகொள்ள முயற்சியுங்கள்//

    கண்டிப்பாக....

    ReplyDelete
  12. // நட்பு அன்பு பாசம் என் நண்பனிடம் கொட்டி கிடந்துருக்கு....இப்பவும் நினச்சா கண்ணீர் கொட்டும் எனக்கு///


    நீ நன்பேண்டா.....பாசக்கார புள்ள மனோ வால்க,வால்க.:)))

    ReplyDelete
  13. //ரேவா said...
    அவன் ஊர் அம்பாசமுத்திரம் பக்கம் கோபாலசமுத்திரம்னு அட்ரஸ் எழுதுன நியாபகம் இருக்கு முழுப்பெயர் கணேஷ் மூப்பனார். இந்த முறை லீவுக்கு வரும்போது வலைதள நண்பர்கள் மூலமாக அவனை கண்டுபிடித்து விடுவேங்குற நம்பிக்கை இருக்கு...

    வலை விடு தூதா... ஆனாலும் மனோ நட்புக்குள் தான் எத்தனை அழகு...விரைவில் கிடைப்பார் உங்கள் நண்பர்... //

    நன்றி ரேவா...

    ReplyDelete
  14. உங்கள் நண்பரை கூடிய விரைவில் சந்திக்க எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. படத்தில் வலமிருந்து மூன்றாவதாக நிற்பவந்தானே ஜூனியர் மனோ?
    அதான் முகமே சொல்லுதே!

    ReplyDelete
  16. //ரேவா said...
    போட்டோவில் இருப்பது ஜூனியர் மனோ'வின் நட்பு வட்டம். அவருக்கும் இன்னும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் சார் எப்பவும் பிசியாம் ஹா ஹா ஹா.....

    ஏழுபேரில் யார் உங்கள் விட்டம்...//

    இடமிருந்து வலமாக ஐந்தாவது வலமிருந்து இடமாக மூன்றாவது...

    ReplyDelete
  17. //ராஜகோபால் said...
    இதுல 'ஜூனியர் மனோ' யாருங்?//


    இடமிருந்து வலமாக ஐந்தாவது வலமிருந்து இடமாக மூன்றாவது...

    ReplyDelete
  18. //சென்னை பித்தன் said...
    இதுதான் நட்பு!படிக்கும்போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது மனோ!அவரை விரைவில் நீங்கள் சந்திக்க இறையருள் புரியட்டும்!//

    நன்றி தல....

    ReplyDelete
  19. //கக்கு - மாணிக்கம் said...
    // நட்பு அன்பு பாசம் என் நண்பனிடம் கொட்டி கிடந்துருக்கு....இப்பவும் நினச்சா கண்ணீர் கொட்டும் எனக்கு///


    நீ நன்பேண்டா.....பாசக்கார புள்ள மனோ வால்க,வால்க.:)))//

    அரிசிமூட்டை வாழ்க'ன்னு சொல்லாமல் விட்டீரே ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  20. //இளங்கோ said...
    உங்கள் நண்பரை கூடிய விரைவில் சந்திக்க எனது வாழ்த்துக்கள்.//

    நன்றி இளங்கோ..

    ReplyDelete
  21. //கக்கு - மாணிக்கம் said...
    படத்தில் வலமிருந்து மூன்றாவதாக நிற்பவந்தானே ஜூனியர் மனோ?
    அதான் முகமே சொல்லுதே!//

    கரிக்ட்டு மக்கா.....ஒன்பதாவது படிச்சிட்டு பரீட்சை பிசியில இருக்கார் இப்போ....

    ReplyDelete
  22. ஒரு அன்பை புரிந்து கொள்ள வறுமை சூழ்நிலை உதவியிருக்கிறது. உங்கள் ஆழ் மனம் உங்கள் நண்பனை தேடித்தரும் . வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  23. //சாகம்பரி said...
    ஒரு அன்பை புரிந்து கொள்ள வறுமை சூழ்நிலை உதவியிருக்கிறது. உங்கள் ஆழ் மனம் உங்கள் நண்பனை தேடித்தரும் . வாழ்த்துக்கள் மனோ.//

    நன்றி சாகம்பரி....

    ReplyDelete
  24. அரிசி மூட்டை,தடியன்,குண்டு மனோ வாழ்க வாழ்க.
    போதுமா??

    ReplyDelete
  25. மனோ அண்ணா ...திடிர்ன்னு அண்ணா ன்னு கூப் பிடுறேன்னு பார்க்குறீங்களா ...தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ..நான் இருக்கேன்ல ...வாங்க கோவில்பட்டில இருந்து ஒரே அழுதது ...தம்பி கார் வச்சிருக்கேன் ..பக்கத்துல தான் கோபாலசமுத்திரம் ..என்னோட சொந்தகாரங்க நிறைய பேர் இருக்காங்க ...போய் தூக்கி போட்டு கொண்டுவந்திருவோம் ....கவலைய விடுங்க ...

    ReplyDelete
  26. //கக்கு - மாணிக்கம் said...
    அரிசி மூட்டை,தடியன்,குண்டு மனோ வாழ்க வாழ்க.
    போதுமா??//

    அடபாவி நீர் இன்னுமா போகலை அவ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  27. // இம்சைஅரசன் பாபு.. said...
    மனோ அண்ணா ...திடிர்ன்னு அண்ணா ன்னு கூப் பிடுறேன்னு பார்க்குறீங்களா ...தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ..நான் இருக்கேன்ல ...வாங்க கோவில்பட்டில இருந்து ஒரே அழுதது ...தம்பி கார் வச்சிருக்கேன் ..பக்கத்துல தான் கோபாலசமுத்திரம் ..என்னோட சொந்தகாரங்க நிறைய பேர் இருக்காங்க ...போய் தூக்கி போட்டு கொண்டுவந்திருவோம் ....கவலைய விடுங்க ...//

    அட்ரா சக்கைன்னானாம் நன்பேண்டா அசத்திட்டீங்க மக்கா. நான் வர்றேன் நண்பன் கணேஷை தூக்குறோம்....

    ReplyDelete
  28. நல்ல பகிர்வு,,.. அதனால கும்மாம போறேன்

    ReplyDelete
  29. //கவிதை வீதி # சௌந்தர் said...
    நானும் வந்திட்டேன்..
    //

    வாங்கோ வாங்கோ....

    ReplyDelete
  30. //சி.பி.செந்தில்குமார் said...
    நல்ல பகிர்வு,,.. அதனால கும்மாம போறேன்//

    அப்பாடா தப்பிச்சென்....

    ReplyDelete
  31. //என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய்.....நட்பு அன்பு பாசம் என் நண்பனிடம் கொட்டி கிடந்துருக்கு....//

    நான் சென்னைக்குப் போன புதிதில் மூர்த்தி என்ற கும்பகோணத்து ந்ண்பர் திருவல்லிக்கேணியில் தங்க இடமும் கொடுத்து,சாப்பாட்டுக்கு காசும் கொடுத்து உதவி செய்தார்.

    வாக்காளர் அட்டை முதற்கொண்டு தேடிவிட்டேன்.இன்னும் தேடிக்கொண்டே இருக்கின்றேன்.

    ReplyDelete
  32. உண்மையில் நெகிழ்வான சம்பவம் மாப்ள ....

    ReplyDelete
  33. உன்கிட்ட இருந்து இதுபோன்ற பதிவை நான் எதிர்பார்க்கவில்லை..
    நன்பேண்டா ....

    ReplyDelete
  34. நல்ல நண்பர். சில நட்புகள் வாழ்க்கை முழுக்க மறக்க முடியாமல் இருக்கும். சிலதுகளை எப்படா கழட்டி விடலாம் என்று தோணும். நல்ல பதிவு, மனோ.

    ReplyDelete
  35. ரயில்வே ஸ்டேசனில் கட்டிபிடித்து அழுவது மும்பையில் மட்டுமே பார்க்க முடிந்த பாசம் ............
    நானும் அங்கு தான் பிறந்து வளர்ந்தேன் என நண்பர்கள் அனைவரும் தாராவி ஏரியாதான் ...................
    கிட்டத்தட்ட அனைவரும் ஒரே விபத்தில் இறந்து விட்டார்கள் விநாயகர் சதூர்த்தியில் கடலோடு கரைந்து விட்டார்கள் ..................

    ReplyDelete
  36. //ராஜ நடராஜன் said...
    //என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய்.....நட்பு அன்பு பாசம் என் நண்பனிடம் கொட்டி கிடந்துருக்கு....//

    நான் சென்னைக்குப் போன புதிதில் மூர்த்தி என்ற கும்பகோணத்து ந்ண்பர் திருவல்லிக்கேணியில் தங்க இடமும் கொடுத்து,சாப்பாட்டுக்கு காசும் கொடுத்து உதவி செய்தார்.

    வாக்காளர் அட்டை முதற்கொண்டு தேடிவிட்டேன்.இன்னும் தேடிக்கொண்டே இருக்கின்றேன்.///


    உண்மையான நட்பு பூக்கள் இப்பிடித்தான் தொலைந்து விடுகிறது.....!!!!

    ReplyDelete
  37. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    உன்கிட்ட இருந்து இதுபோன்ற பதிவை நான் எதிர்பார்க்கவில்லை..
    நன்பேண்டா ....//

    நன்றி வாத்தி....

    ReplyDelete
  38. //vanathy said...
    நல்ல நண்பர். சில நட்புகள் வாழ்க்கை முழுக்க மறக்க முடியாமல் இருக்கும். சிலதுகளை எப்படா கழட்டி விடலாம் என்று தோணும். நல்ல பதிவு, மனோ.///

    நன்றி வானதி....

    ReplyDelete
  39. //அஞ்சா சிங்கம் said...
    ரயில்வே ஸ்டேசனில் கட்டிபிடித்து அழுவது மும்பையில் மட்டுமே பார்க்க முடிந்த பாசம் ............
    நானும் அங்கு தான் பிறந்து வளர்ந்தேன் என நண்பர்கள் அனைவரும் தாராவி ஏரியாதான் ...................
    கிட்டத்தட்ட அனைவரும் ஒரே விபத்தில் இறந்து விட்டார்கள் விநாயகர் சதூர்த்தியில் கடலோடு கரைந்து விட்டார்கள் ..................//

    என்னய்யா புது குண்டை தூக்கி போடுறே தாராவி'ல எந்த இடத்துல...? எப்போ..?

    ReplyDelete
  40. MANO நாஞ்சில் மனோ said... என்னய்யா புது குண்டை தூக்கி போடுறே தாராவி'ல எந்த இடத்துல...? எப்போ..?.............////////////////////

    ///////////////////////////////////
    தாராவி 90 feet road ஒன்பதாம் நம்பர் தெரு போலிஸ் ஸ்டேஷன் பின்புறம் காமராஜர் ஸ்கூல் தெரியும் அல்லவா .............

    ReplyDelete
  41. தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  42. தங்களுக்கு ஒரு E-mail-லில் வந்துள்ள கடிததத்திற்கு பதில் சொல்லுங்கள் நண்பரே..

    ReplyDelete
  43. மனோ, என் சொந்த ஊர் அம்பாசமுத்திரம் தான். நிச்சயம் உதவுகிறேன் நண்பரே!சின்ன ஊர்தான், சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்.
    எங்க ஊர் பசங்க பாசக்கார பசங்க!

    ReplyDelete
  44. இன்னும் எறும்பு, துபாய் ராஜா போன்ற பல பதிவர்கள் அம்பாசமுத்திரம் தான். கவலை படாதே சகோதரா!

    ReplyDelete
  45. //அஞ்சா சிங்கம் said...
    MANO நாஞ்சில் மனோ said... என்னய்யா புது குண்டை தூக்கி போடுறே தாராவி'ல எந்த இடத்துல...? எப்போ..?.............////////////////////

    ///////////////////////////////////
    தாராவி 90 feet road ஒன்பதாம் நம்பர் தெரு போலிஸ் ஸ்டேஷன் பின்புறம் காமராஜர் ஸ்கூல் தெரியும் அல்லவா .............//


    எப்பிடி இறந்தார்கள் கூட்ட நெருக்கத்துலா....??
    என் ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பா....

    ReplyDelete
  46. இப்போது ஆயிரம் ரூவாய் நோட்டு தாள்கள் பறக்கிறது கைகளில் ஆனால் அந்த நாளின் வறுமையிலும் நட்பு உயிரோடு இருந்துள்ளதை நினைக்கும் போது மனம் உவகை கொள்ளத்தான் செய்யுது.



    .... It is a blessing!!! நீங்கள் விரைவில் உங்கள் நண்பரை கண்டு பிடிக்க என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  47. //பாட்டு ரசிகன் said...
    தங்களுக்கு ஒரு E-mail-லில் வந்துள்ள கடிததத்திற்கு பதில் சொல்லுங்கள் நண்பரே..//

    அடபாவி இந்த அநியாயம் வேற பண்ணுறீங்களா அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  48. //FOOD said...
    மனோ, என் சொந்த ஊர் அம்பாசமுத்திரம் தான். நிச்சயம் உதவுகிறேன் நண்பரே!சின்ன ஊர்தான், சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்.
    எங்க ஊர் பசங்க பாசக்கார பசங்க!//

    தம்பி இம்சை அரசன் பாபு'வும் வர சொல்லி இருக்கார் நாமெல்லாரும் சேர்ந்தே போயி நண்பனை கண்டு பிடிச்சிரலாம்....

    ReplyDelete
  49. //Chitra said...
    இப்போது ஆயிரம் ரூவாய் நோட்டு தாள்கள் பறக்கிறது கைகளில் ஆனால் அந்த நாளின் வறுமையிலும் நட்பு உயிரோடு இருந்துள்ளதை நினைக்கும் போது மனம் உவகை கொள்ளத்தான் செய்யுது.



    .... It is a blessing!!! நீங்கள் விரைவில் உங்கள் நண்பரை கண்டு பிடிக்க என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!//

    நன்றி சித்ரா...

    ReplyDelete
  50. மூழ்காத ஷிப்பே பிரெண்ட் ஷிப்தான் மக்கா..........அழியாத கோலங்கள் மனதில் அல்லவா!

    ReplyDelete
  51. //விக்கி உலகம் said...
    மூழ்காத ஷிப்பே பிரெண்ட் ஷிப்தான் மக்கா..........அழியாத கோலங்கள் மனதில் அல்லவா!//


    ஆமாய்யா....

    ReplyDelete
  52. உங்கள் நண்பரை கூடிய விரைவில் சந்திக்க எனது வாழ்த்துக்கள். நல்ல நட்பு வட்டம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே

    ReplyDelete
  53. உன்னதமான நட்பு. உங்கள் நண்பரை விரைவில் கண்டுபிடிப்பீங்க மக்கா

    ReplyDelete
  54. font size is appearing very small. check it

    ReplyDelete
  55. //தோழி பிரஷா said...
    உங்கள் நண்பரை கூடிய விரைவில் சந்திக்க எனது வாழ்த்துக்கள். நல்ல நட்பு வட்டம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே//

    நன்றிங்க....

    ReplyDelete
  56. //எல் கே said...
    உன்னதமான நட்பு. உங்கள் நண்பரை விரைவில் கண்டுபிடிப்பீங்க மக்கா//

    மிக்க நன்றிய்யா...

    ReplyDelete
  57. மனோ......இது விளையாட்டு அல்ல. சில வரிகள் மனம் விட்டு எழுதியவுடன் ,எழுதியதற்கே எத்தனை விதமான பின்னூடங்கள்? உண்மையில் நாம் ஆனைவரும் ஒரே உணர்வுடன்தான் உள்ளோம். ஆனால் நாம் நிறைய காரணிகளால் பிரிந்து சிதைந்து போய் உள்ளோம்.
    ஜாதி, மதம், காலம்இனம், ஆண், பெண் மற்றும் இடம் போன்றவைகளை நான் இங்கே குறிப்பிட வில்லை. ஆனால் வேறு என்ன நம்மை பிரித்தாள்கிறது?? யாராவது சொல்லுங்கள்.

    ReplyDelete
  58. //கக்கு - மாணிக்கம் said...
    மனோ......இது விளையாட்டு அல்ல. சில வரிகள் மனம் விட்டு எழுதியவுடன் ,எழுதியதற்கே எத்தனை விதமான பின்னூடங்கள்? உண்மையில் நாம் ஆனைவரும் ஒரே உணர்வுடன்தான் உள்ளோம். ஆனால் நாம் நிறைய காரணிகளால் பிரிந்து சிதைந்து போய் உள்ளோம்.
    ஜாதி, மதம், காலம்இனம், ஆண், பெண் மற்றும் இடம் போன்றவைகளை நான் இங்கே குறிப்பிட வில்லை. ஆனால் வேறு என்ன நம்மை பிரித்தாள்கிறது?? யாராவது சொல்லுங்கள்.//

    உள் உணர்வுக்குள் இருப்பதை வெளியே எழுத சொல்ல தெரியவில்லை....

    ReplyDelete
  59. நான் மும்பையில் நண்பர்களோடு இருந்த சமயம்.//

    படத்திற்கேற்றாற் போல இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்பு என்று ஒரு அடை மொழியியும் போட்டிருக்கலாமே:-))))

    ReplyDelete
  60. மனதை நெருட வைக்கும் பதிவு. ஒரு உண்மைச் சம்பவத்தை அழகாகப் பதிவாக்கியிருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வெகு விரைவில் கிடைப்பார் என வாழ்த்துகிறேன்.

    மனோ இன்றைய பதிவால் மனதை கலங்கச் செய்து விட்டீர்கள் சகோ. அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  61. .நீங்கள் இயல்பாக சொல்லிப்போவதுபோல்
    சொல்லிப்போனாலும்
    படித்து முடிக்கையில்
    இயல்பாக இருக்க முடியவில்லை
    உறுதியாக
    . இம்முறை
    உங்கள் நண்பர்களை சந்திப்பீர்கள்
    வாழ்த்துக்களுடன்...����

    ReplyDelete
  62. நாஞ்சில் மனோ சார் உலகிலேயே நட்பை விட பெரிய உரவு எதுவும் கிடையாது சார், நானும் இதுபோல அனுபவ பட்டிருக்கேன் சார்.

    உண்மைவிரும்பி,
    மும்பை.

    ReplyDelete
  63. //நிரூபன் said...
    மனதை நெருட வைக்கும் பதிவு. ஒரு உண்மைச் சம்பவத்தை அழகாகப் பதிவாக்கியிருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வெகு விரைவில் கிடைப்பார் என வாழ்த்துகிறேன்.

    மனோ இன்றைய பதிவால் மனதை கலங்கச் செய்து விட்டீர்கள் சகோ. அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.//

    நன்றி நிரு....

    ReplyDelete
  64. //Ramani said...
    .நீங்கள் இயல்பாக சொல்லிப்போவதுபோல்
    சொல்லிப்போனாலும்
    படித்து முடிக்கையில்
    இயல்பாக இருக்க முடியவில்லை
    உறுதியாக
    . இம்முறை
    உங்கள் நண்பர்களை சந்திப்பீர்கள்
    வாழ்த்துக்களுடன்...����//

    மிக்க நன்றி குரு...

    ReplyDelete
  65. //எனது கவிதைகள்... said...
    நாஞ்சில் மனோ சார் உலகிலேயே நட்பை விட பெரிய உரவு எதுவும் கிடையாது சார், நானும் இதுபோல அனுபவ பட்டிருக்கேன் சார்.

    உண்மைவிரும்பி,
    மும்பை.//

    வாங்க வாங்க உண்மை விரும்பி சார். நீங்க மும்பையில எங்கே இருக்கீங்க...?
    நான் மரோல்'லில் இருக்கிறேன். வேலை பஹ்ரைனில்...

    ReplyDelete
  66. அசத்தல் நட்பு மக்கா..... கண்டுபிடிச்சி தொடருங்க உங்க நட்பை...!!

    ReplyDelete
  67. //கக்கு - மாணிக்கம் அண்ணே நாமெல்லாம் ஏதோ ஒரு வட்டத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோமோ?? அதை விவரனையாய் சொல்லத் தெரியவில்லை!! ஆனாலும் முகம்பார்க்க முடியாத நிறைய மக்களின்
    பாசங்கள் வலைபூக்களில் இதுபோல மிகுந்து காணப் படுகிறது. யார் கை நீட்டி அழைத்தாலும் குழந்தையாய் போய் அவர்களோடு ஒட்டிக் கொள்கிறோம்.//

    ReplyDelete
  68. //என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய்.....நட்பு அன்பு பாசம் என் நண்பனிடம் கொட்டி கிடந்துருக்கு....இப்பவும் நினச்சா கண்ணீர் கொட்டும் எனக்கு// இதுபோன்ற மனம் கனத்துப்போன நட்பின் நினைவுகள் எல்லோர் மனங்களிலும் புதைந்து கிடக்கும். இதே போன்ற தேடல்களும் நிச்சயம் இருக்கும்.

    ReplyDelete
  69. எப்பவும் சிரிப்பான மனோ சாருக்குள், இப்படி ஒருவரா? நெகிழ வைத்து விட்டீர்கள் மனோசார், கண்டிப்பாக உங்கள் நண்பரை கண்டுபிடித்து விடுவீர்கள்...

    ReplyDelete
  70. //எம் அப்துல் காதர் said...
    அசத்தல் நட்பு மக்கா..... கண்டுபிடிச்சி தொடருங்க உங்க நட்பை...!!//

    கண்டிப்பாக மக்கா...

    ReplyDelete
  71. //aranthairaja said...
    //என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய்.....நட்பு அன்பு பாசம் என் நண்பனிடம் கொட்டி கிடந்துருக்கு....இப்பவும் நினச்சா கண்ணீர் கொட்டும் எனக்கு// இதுபோன்ற மனம் கனத்துப்போன நட்பின் நினைவுகள் எல்லோர் மனங்களிலும் புதைந்து கிடக்கும். இதே போன்ற தேடல்களும் நிச்சயம் இருக்கும்.//


    வாங்க வாங்க வருகைக்கு மிகவும் நன்றி....

    ReplyDelete
  72. //இரவு வானம் said...
    எப்பவும் சிரிப்பான மனோ சாருக்குள், இப்படி ஒருவரா? நெகிழ வைத்து விட்டீர்கள் மனோசார், கண்டிப்பாக உங்கள் நண்பரை கண்டுபிடித்து விடுவீர்கள்...//

    மிக்க நன்றி மக்கா...

    ReplyDelete
  73. நெகிழ வைத்த பதிவு மக்கா.... எப்படியும் நண்பரை கண்டுபிடிச்சிடலாம், கவலைப்படாதீங்க, கண்ண் தொடைங்க, இதுக்குப் போயி சின்னப் புள்ளயாட்டம் கண்ண கசக்கிக்கிட்டு.....!

    ReplyDelete
  74. அந்தப் படத்துல உங்க ஆளு எங்க? நம்ம கக்கு அண்ணே சொல்ற மாதிரி வலமிருந்து மூணாவாது ஆளா?

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!