Sunday, November 20, 2011

நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!

நடிகர் சிரிப்பு திலகம்' சிவாஜி ஆர் சந்தானம் அவர்களை தெரியாத தமிழர்கள் கிடையாது, அபூர்வ சகோதரர்கள் படம் மூலம் "தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க" என்ற வார்த்தை பேச்சு, அன்றைய, இன்றைய மக்களிடையே மிகவும் பாப்புலராக பேசப்படுகிறது, இப்பவும் நாம் நண்பர்களிடம் இப்படி சொல்லி கலாயிப்பது உண்டு, இவர் எப்போதுமே என்னை கவர்ந்தவர்....!!! அவர் பாடி லேங்க்வேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும்....!!!ரெண்டு நாளைக்கு முன்னாடி, நாஞ்சில்மனோ வலைத்தளத்துக்கு உங்களை பேட்டி எடுக்கலாமா என்று கொஞ்சம் பயத்துடனே கேட்டேன், எடக்குமடக்கா கேட்டுராதீங்கப்பா என சொன்னபடியே உடனே சம்மதித்தார், எந்த ஒரு பந்தாவோ பாவ்லாவோ இல்லாமல், மனுஷர் அநியாயத்துக்கு எளிமையா இருக்கிறார்....!!! [[மிக்க நன்றி சார்]]


இனி, நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், சந்தானம் சிவாஜி அவர்களின் பதில்களும்....

௧ : உங்கள் முதல் படம் எது சார்...?

      உதவி இயக்குநராக “ பண்ன்ரீர் புஷ்பங்கள் ”
   நடிகனாக : எனது முதல் படமான பன்ன்ரீர் புஷ்பங்களில்யிருந்து நடித்து கொண்டு


   வருகிறேன் . என்னை ஒரு நடிகனாக பிரபலம் ஆக்கியது “ஆபூர்வ சகோதரர்கள்’

௨ : நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிச்ச சினிமா எது சார்...?

   பிரதாப் போத்தன் இயக்கிய “மீண்டும் ஒரு காதல் கதை”

௩ : உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்...?

   எல்லோரையும் பிடிக்கும்...


௪ : இப்போதைய தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, உங்கள்
பார்வையில் சொல்லுங்கள்...?

   நல்லாவும் இருகிறது , பயமாவும் இருகிறது....௫ : உங்களை கவர்ந்த நடிக, நடிகைகள் யார் யார்....?

நடிகர் திலகம் , மக்கள் திலகம் , என். எஸ்.கே , மார்ல்ன் பிராண்டோ ,
அல்பாச்சினோ , ராபர்ட் டி நிரோ , டஸ்டின் ஹாஃப்மன் , கமல்ஹாசன்,
ரஜினிகாந்த், முத்துராமன், பிரபு, கார்த்திக் (முத்துராமன்)
விமல் , விதார்த் மற்றும் இன்றைய புதுமுக நடிகர்கள் இயல்பாக இருக்கிறது
இவர்களின் நடிப்பு
பத்மினி , கே.ஆர்.விஜயா , கண்ணாம்பாள். ரேவதி , அஞ்சலி, அனன்யா...

அபிநயா,   பாவனா , மற்றும் இன்றைய புதுமுக நடிகையர்கள் (இயல்பாக
இருக்கிறது இவர்களின் நடிப்பு)


௬ : உங்கள் முதல் காதல் அனுபவம் [[மாட்னாருய்யா ஹி ஹி]]....?

[[மாட்டலைய்யா ஹி ஹி]]....உண்டு...ஆனால் தோல்வி அடைந்தது ...கல்லூரி
 படிக்கும்போது...


௭ : உங்கள் நகைச்சுவையை விரும்பி ரசிப்பவர்கள் நாங்கள், ஆனால் தற்போது
உங்களை அதிகமாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே...?

       யாரும் கூப்பிடுவதில்லை ......


௮ : மதிப்புக்குரிய நகைச்சுவை நடிகர் ஜனகராஜை நீங்கள் சந்திப்பது உண்டா...?

    உண்டு

௯ : இப்போது காமெடியில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து
உங்கள் கருத்து...?

திறமைசாலி....!!!


௰ : எப்படி இருக்கிறது உங்கள் சினிமா வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும்...?

இரண்டும் இரு துருவங்கள்...


௧௧ : அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறீர்களா...?

அரசியலில் இடுபாடு கிடையது.௧௨ : அணு உலைகள் பற்றி கருத்து சொல்ல முடியுமா...?

நான் சொல்வதை கேட்கவா போகிறார்கள்...?


௧௩ : தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?

தங்கத்தையும் வாங்கும் நம்ம மக்களுக்கு இது ஒன்றுமில்லை...௧௪ : உங்களுக்கு மிகவும் பிடித்த டைரக்டர் பற்றி சொல்லுங்க சார்...?

டைரக்டர் சி.வி ஸ்ரீதர் ......புதுமை விரும்பி, இளமை, புதிய பரிமாண கதைகள்

யாரும் பார்த்திராத ஷாட்ஸ், பல புதுமுக நடிக நடிகைகளின்,அந்த
காலக்கட்டதில் தைரியமாக அறிமுக படுத்தியவர், , பாடல்கள் எடுக்கும் திறமை
நிறைய அவரைப்பற்றிஅடுக்கிக்கொண்டே போகலாம்..அவருக்கு தாதா சாஹப் பால்கே
விருது கொடுக்காம்ல் போனது எனக்கு வருத்தம்...!௧௫ : கடைசி கேள்வி [[அவ்வ்வ்வ் அடிக்க வராதீங்க சார்]] உங்களுக்கும்
அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டா...?
[[ஒடுலேய் மனோ ஓடு அண்ணன்கிட்டே அடி வாங்குமுன்]]

 ஹா ஹா அடிக்க மாட்டேன்...அந்த எண்ணமெல்லாம் கிடையாது.....


டிஸ்கி : மிக்க நன்றி சிவாஜி சந்தானம் சார்......!!!

நன்றி : எனது போட்டோவை கார்ட்டூன் ஆக்கிய நண்பன் "வீடு" அவர்களுக்கு....

79 comments:

 1. பேட்டி எடுக்கற அளவு பெரிய ஆள் ஆகிட்டியா? அடங்கோ

  ReplyDelete
 2. அண்ணே நீங்க பெரிய ஆளுதான்.. பேட்டியெல்லாம் எடுக்கிறீங்க

  ReplyDelete
 3. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி வணக்கம் ஹி ஹி//

  அண்ணே வணக்கம் அண்ணே...

  ReplyDelete
 4. சி.பி.செந்தில்குமார் said...
  பேட்டி எடுக்கற அளவு பெரிய ஆள் ஆகிட்டியா? அடங்கோ//

  டேய் அண்ணே உன் அளவுக்கு நான் ஒர்த் இல்லை அண்ணே...

  ReplyDelete
 5. பதிவுலகில் ஒரு நடிகரை நேரடியாக பேட்டி எடுத்து போட்டதை நான் இன்றுதான் படிக்கின்றேன்

  தெய்வமே நீங்க எங்கையோ போயிட்டீங்க.


  ஆமா நீங்க வெளிநாட்டில் தானே இருக்குறீங்க் இந்தியாவில் இருக்கும் இவரை தொலைபேசியிலா பேட்டி கண்டீங்க அல்லது இந்தியா வந்த போது எடுத்த பேட்டியா

  ReplyDelete
 6. மதுரன் said...
  அண்ணே நீங்க பெரிய ஆளுதான்.. பேட்டியெல்லாம் எடுக்கிறீங்க//

  ஹா ஹா ஹா ஹா சிவாஜி சாருக்குத்தான் நன்றி சொல்லணும்...

  ReplyDelete
 7. K.s.s.Rajh said...
  பதிவுலகில் ஒரு நடிகரை நேரடியாக பேட்டி எடுத்து போட்டதை நான் இன்றுதான் படிக்கின்றேன்

  தெய்வமே நீங்க எங்கையோ போயிட்டீங்க.


  ஆமா நீங்க வெளிநாட்டில் தானே இருக்குறீங்க் இந்தியாவில் இருக்கும் இவரை தொலைபேசியிலா பேட்டி கண்டீங்க அல்லது இந்தியா வந்த போது எடுத்த பேட்டியா//

  குறுஞ்செய்தி மூலம்...

  ReplyDelete
 8. அட சாமி பேட்டியெல்லா எடுக்குதுப்பா...

  ReplyDelete
 9. எனக்கும் இவரை மிகவும் பிடிக்கும் பாஸ்...விவேக்கின் படம் ஒன்றில் கூட விவேக்கிடம் சொல்வார் தெய்வமே நீங்க எங்கையோ போய்ட்டிங்க என்று அப்ப விவேக் சொல்வார் ஏண்டா நீ இன்னும் போலிஸ்ல இருந்து ரிட்டயர் ஆகலையா இப்படி பேசி பேசி எத்தன ஆப்பிசரை காலி பண்ணிட்ட என்று.

  மிகவும் எளிமையான நகைச்சுவை நடிகர்..அபூர்வ சகோதரர்களில் இவர் நடிப்பு காலத்தால் மறக்கமுடியாதது

  ReplyDelete
 10. மனோ நீங்க எங்கேயோ போயிட்டிங்க...

  உண்மையில் அந்த வசனத்தை மறக்கமுடியாத வரை சந்தானம் சாரும் மனதில் இருப்பார்...

  ReplyDelete
 11. சிறப்பான பேட்டி.. யதார்த்தமான கேள்வி பதில்கள்..


  வாழ்த்துக்கள்...


  கார்டூன் படத்தில் கூட அந்த கண்ணாடியை கழட்ட மாட்டீரா..?

  ReplyDelete
 12. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  அட சாமி பேட்டியெல்லா எடுக்குதுப்பா...//

  அருவாவுக்கு வேலை வந்துருச்சோ....

  ReplyDelete
 13. K.s.s.Rajh said...
  எனக்கும் இவரை மிகவும் பிடிக்கும் பாஸ்...விவேக்கின் படம் ஒன்றில் கூட விவேக்கிடம் சொல்வார் தெய்வமே நீங்க எங்கையோ போய்ட்டிங்க என்று அப்ப விவேக் சொல்வார் ஏண்டா நீ இன்னும் போலிஸ்ல இருந்து ரிட்டயர் ஆகலையா இப்படி பேசி பேசி எத்தன ஆப்பிசரை காலி பண்ணிட்ட என்று.

  மிகவும் எளிமையான நகைச்சுவை நடிகர்..அபூர்வ சகோதரர்களில் இவர் நடிப்பு காலத்தால் மறக்கமுடியாதது//

  மிகவும் எளிமையானவர்...!!!

  ReplyDelete
 14. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  மனோ நீங்க எங்கேயோ போயிட்டிங்க...

  உண்மையில் அந்த வசனத்தை மறக்கமுடியாத வரை சந்தானம் சாரும் மனதில் இருப்பார்...//

  நிச்சயமாக....

  ReplyDelete
 15. தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?

  தங்கத்தையும் வாங்கும் நம்ம மக்களுக்கு இது ஒன்றுமில்லை...////////
  /////////

  ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார் .......

  ReplyDelete
 16. தெய்வமே நீங்க எங்கையோ போயிட்டீங்க.....

  ReplyDelete
 17. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  சிறப்பான பேட்டி.. யதார்த்தமான கேள்வி பதில்கள்..


  வாழ்த்துக்கள்...


  கார்டூன் படத்தில் கூட அந்த கண்ணாடியை கழட்ட மாட்டீரா..?//

  நம்மளை வரையிறவிங்களும் கண்ணாடியோடுதான் வரையிறாங்க பாருங்க....

  ReplyDelete
 18. அஞ்சா சிங்கம் said...
  தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?

  தங்கத்தையும் வாங்கும் நம்ம மக்களுக்கு இது ஒன்றுமில்லை...////////
  /////////

  ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார் .......//

  சும்மா நச்............

  ReplyDelete
 19. சசிகுமார் said...
  தெய்வமே நீங்க எங்கையோ போயிட்டீங்க.....//

  நான் இங்கேதாம்யா இருக்கேன்....

  ReplyDelete
 20. நல்ல பேட்டி..

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. மக்கா டெம்ப்ளேட் சூப்பர்..

  ReplyDelete
 22. பேட்டி கலக்கல்...

  மக்கா. நீங்க எங்கையோ போயிட்டீங்க.

  ReplyDelete
 23. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  நல்ல பேட்டி..

  வாழ்த்துக்கள்...//

  மிக்க நன்றி...

  ReplyDelete
 24. * வேடந்தாங்கல் - கருன் *! said...
  மக்கா டெம்ப்ளேட் சூப்பர்..//

  இதை உருவாக்கி தந்த நண்பனுக்கு நன்றி....

  ReplyDelete
 25. வேடந்தாங்கல் - கருன் *! said...
  பேட்டி கலக்கல்...

  மக்கா. நீங்க எங்கையோ போயிட்டீங்க.//

  ஹி ஹி வாத்தி.....

  ReplyDelete
 26. பேட்டி எளிமை அதே நேரத்தில் பதில் மிக எளிமை .. இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணே ...

  ReplyDelete
 27. ம் ம் கேள்விகள் அசத்தல் பதில்கள் அதைவிட அருமை அண்ணே

  ReplyDelete
 28. அருமையான பேட்டி மக்களே...
  கார்ட்டூன் சும்மா அசத்தலா இருக்குது....

  ReplyDelete
 29. பேட்டியெல்லாம் தூள் கிளப்பறீங்க! இவர் சந்தான பாரதியின் சகோதரர் என நினைக்கிறேன்.
  அடுத்தது யார்?

  ReplyDelete
 30. அண்ணாச்சி சிவாஜிசந்தானம் என் பேஸ்புக் நீண்டநாள் நண்பர் அவரும் ஓவியர் அதபற்றி கேள்வி கேட்காம விட்டுட்டிங்களே....

  பதிவருக்கு பதில் கூறிய சிவாஜி அண்ணனுக்கு நன்றி

  ReplyDelete
 31. //தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?//

  தங்கத்தை வாங்கும் மக்களுக்கு இது ஒன்றுமில்லை...

  பதில் இது போல் இருந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் பேட்டி

  ReplyDelete
 32. வணக்கம் மனோ அண்ணா,
  பேட்டி கலக்கலாக இருக்கு!
  வலையுல வரலாற்றில் முதன் முறையாகத் திரையுலக நட்சத்திரத்தினைப் பேட்டியெடுத்திருக்கிறீங்க!

  வாழ்த்துக்கள்!
  இன்னும் கொஞ்சம் ஆழமாக வழமையான பாணியிலான சுய விபரக் கேள்விகளை விடுத்து பிற விடயங்களையும் அலசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

  பிங் கேலரில் டெம்பிளேட் மின்னுது!
  யார் டிசைனிங் பண்ணியிருக்கார்?
  என் ப்ளாக்கிற்கும் டெம்பிளேட் டிசைன் பண்ண ஆள் தேவை அண்ணா!

  ReplyDelete
 33. ஆய் நம்ம வீடு அண்ணரோட கை வண்ணமா கார்ட்டூன்!
  கலக்கலா இருக்கே!

  ReplyDelete
 34. அரசன் said...
  பேட்டி எளிமை அதே நேரத்தில் பதில் மிக எளிமை .. இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணே .//

  நன்றி அரசன்.....

  ReplyDelete
 35. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  ம் ம் கேள்விகள் அசத்தல் பதில்கள் அதைவிட அருமை அண்ணே//

  ஹா ஹா ஹா ஹா ரைட்டு...

  ReplyDelete
 36. மகேந்திரன் said...
  அருமையான பேட்டி மக்களே...
  கார்ட்டூன் சும்மா அசத்தலா இருக்குது...//

  அருவாதான் பயமா இருக்கு....

  ReplyDelete
 37. சென்னை பித்தன் said...
  பேட்டியெல்லாம் தூள் கிளப்பறீங்க! இவர் சந்தான பாரதியின் சகோதரர் என நினைக்கிறேன்.
  அடுத்தது யார்?//

  அப்பிடியா....? அடுத்தது பார்ப்போம், பிரபலங்கள் சிக்குராங்களான்னு...

  ReplyDelete
 38. veedu said...
  அண்ணாச்சி சிவாஜிசந்தானம் என் பேஸ்புக் நீண்டநாள் நண்பர் அவரும் ஓவியர் அதபற்றி கேள்வி கேட்காம விட்டுட்டிங்களே....

  பதிவருக்கு பதில் கூறிய சிவாஜி அண்ணனுக்கு நன்றி//

  ஓவியரா...? இப்போதானேய்யா ஒன்னொன்னா தெரியுது அவரைப்பற்றி...!!!

  ReplyDelete
 39. suryajeeva said...
  //தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?//

  தங்கத்தை வாங்கும் மக்களுக்கு இது ஒன்றுமில்லை...

  பதில் இது போல் இருந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் பேட்டி//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 40. நிரூபன் said...
  வணக்கம் மனோ அண்ணா,
  பேட்டி கலக்கலாக இருக்கு!
  வலையுல வரலாற்றில் முதன் முறையாகத் திரையுலக நட்சத்திரத்தினைப் பேட்டியெடுத்திருக்கிறீங்க!

  வாழ்த்துக்கள்!
  இன்னும் கொஞ்சம் ஆழமாக வழமையான பாணியிலான சுய விபரக் கேள்விகளை விடுத்து பிற விடயங்களையும் அலசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

  பிங் கேலரில் டெம்பிளேட் மின்னுது!
  யார் டிசைனிங் பண்ணியிருக்கார்?
  என் ப்ளாக்கிற்கும் டெம்பிளேட் டிசைன் பண்ண ஆள் தேவை அண்ணா!//

  டெம்பிளேட் டிசைன் பண்ண வானத்திலிருந்து கந்தர்வன் வந்திருந்தான் ஹி ஹி, மோகினியா இருந்துருந்தா எம்புட்டு நல்லதா இருந்துருக்கும், ஹி ஹி...

  அப்புறம், பேட்டி விரிவா எடுக்க அனுபவம் இல்லை, இனிதான் பயிற்சி எடுக்கணும்...

  ReplyDelete
 41. நிரூபன் said...
  ஆய் நம்ம வீடு அண்ணரோட கை வண்ணமா கார்ட்டூன்!
  கலக்கலா இருக்கே!//

  சிபி'யையும் வரஞ்சிருக்கார்....!!!

  ReplyDelete
 42. அடேங்கப்பா அடேங்கப்பா என்னன்னு சொல்றது ஹிம்....பெரியவளா ஆயிடேகே - பெரிய பெரிய பேட்டியெல்லாம் எடுகிரிகே வாழ்த்துக்கள் மனோ சார் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. ஆமா அருவா எதுக்கு - எடுக்கு மடக்கா? என்ன ஒரு மிரட்டல்

  ReplyDelete
 44. அண்ணே நீங்க பெத்த ஆளுண்ணே..நடதுங்கன்னே!

  ReplyDelete
 45. பதிவுலகில் ஒரு நடிகரை நேரடியாக பேட்டி எடுத்து போட்டதை நான் இப்பொழுதுதான் படிக்கின்றேன்.வித்தியாசமான முயற்சி.இனியும் நிறைய பேட்டி எடுத்து பகிருங்கள்.காண காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 46. மனசாட்சி said...
  அடேங்கப்பா அடேங்கப்பா என்னன்னு சொல்றது ஹிம்....பெரியவளா ஆயிடேகே - பெரிய பெரிய பேட்டியெல்லாம் எடுகிரிகே வாழ்த்துக்கள் மனோ சார் வாழ்த்துக்கள்//

  நான் பச்சை புள்ளையா, சிவாஜி சாருக்குத்தான் பெரிய மனசு...!!!

  ReplyDelete
 47. மனசாட்சி said...
  ஆமா அருவா எதுக்கு - எடுக்கு மடக்கா? என்ன ஒரு மிரட்டல்//

  கண்ணாடியும் அருவாளையும் மறக்காம கையில குடுத்துர்றாங்க....

  ReplyDelete
 48. விக்கியுலகம் said...
  அண்ணே நீங்க பெத்த ஆளுண்ணே..நடதுங்கன்னே!//

  நீ என்னை சாட்ல திட்டுனதை சொல்லவா ஹி ஹி...

  ReplyDelete
 49. ஸாதிகா said...
  பதிவுலகில் ஒரு நடிகரை நேரடியாக பேட்டி எடுத்து போட்டதை நான் இப்பொழுதுதான் படிக்கின்றேன்.வித்தியாசமான முயற்சி.இனியும் நிறைய பேட்டி எடுத்து பகிருங்கள்.காண காத்திருக்கிறோம்.//

  மிக்க நன்றி ஸாதிகா.....

  ReplyDelete
 50. அண்ணே அப்புடியே யாராவது நடிகை??? எங்க வயசுக்கு எடுங்க உங்க வயசுக்கு கே.ஆர்.விஜயா, சரோஜா தேவி மாதிரி எடுக்காதீங்க. ஹி ஹி ஹி

  ReplyDelete
 51. நீங்க நடத்துங்க ராசா.

  ReplyDelete
 52. சிறப்பான கேள்விகள்... தெளிவான பதில்கள்.. அருமை மனோ சார்... பதிவுலகில் ஒரு நடிகரை நேரடியாக பேட்டி எடுத்து போட்டு நீங்க எங்கையோ போயிட்டிங்க... வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 53. இந்த கீழ உள்ள கமெண்டை பலரும் போடபோறாங்கன்னு உங்களுக்கு எழுதும்போதே தெரிஞ்சிருக்குமே!!
  "தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க.."

  ஆனாலும் சும்மா சொல்லகூடாது..சபாஷ் மனோ அண்ணா

  ReplyDelete
 54. //இப்போது காமெடியில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து
  உங்கள் கருத்து...?

  திறமைசாலி....!!!///

  பழம்பெரும் நடிகர் சந்தானத்தின் வாயாலேயே நம்ம தலைவர் சந்தானத்தை திறமைசாலி என சொல்ல வைத்த அண்ணன் நாஞ்சில் மனோவிற்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்

  ReplyDelete
 55. உருப்படியான விஷயம் செய்திருகிங்க

  ReplyDelete
 56. இன்று ஒரு வரலாறு படைத்திட்ட
  அன்பு மனோ, ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 57. அருமையான பேட்டி. அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
 58. வலைப்பூவின் டெம்ப்ளேட் சும்மா நச்.

  ReplyDelete
 59. Prabu Krishna said...
  அண்ணே அப்புடியே யாராவது நடிகை??? எங்க வயசுக்கு எடுங்க உங்க வயசுக்கு கே.ஆர்.விஜயா, சரோஜா தேவி மாதிரி எடுக்காதீங்க. ஹி ஹி ஹி//

  அருவாள் படம் போட்டும் புள்ளங்க பயப்பட மாட்டேங்குதே....

  ReplyDelete
 60. சத்ரியன் said...
  நீங்க நடத்துங்க ராசா.//

  உங்க கவிதை இன்னைக்கு அசத்தல்...!!!

  ReplyDelete
 61. சிநேகிதி said...
  சிறப்பான கேள்விகள்... தெளிவான பதில்கள்.. அருமை மனோ சார்... பதிவுலகில் ஒரு நடிகரை நேரடியாக பேட்டி எடுத்து போட்டு நீங்க எங்கையோ போயிட்டிங்க... வாழ்த்துக்கள் சார்//

  மிக்க நன்றி....

  ReplyDelete
 62. மொக்கராசு மாமா said...
  இந்த கீழ உள்ள கமெண்டை பலரும் போடபோறாங்கன்னு உங்களுக்கு எழுதும்போதே தெரிஞ்சிருக்குமே!!
  "தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க.."

  ஆனாலும் சும்மா சொல்லகூடாது..சபாஷ் மனோ அண்ணா//

  ஆமாம்ய்யா அந்த வார்த்தை பிரயோகம் வரலாற்றில் நிற்கும் வசனமாக்கும்...!!!

  ReplyDelete
 63. மொக்கராசு மாமா said...
  //இப்போது காமெடியில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து
  உங்கள் கருத்து...?

  திறமைசாலி....!!!///

  பழம்பெரும் நடிகர் சந்தானத்தின் வாயாலேயே நம்ம தலைவர் சந்தானத்தை திறமைசாலி என சொல்ல வைத்த அண்ணன் நாஞ்சில் மனோவிற்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்//

  சரி அப்போ பிளாங் செக் அனுப்பி தாருங்க....

  ReplyDelete
 64. என் ராஜபாட்டை"- ராஜா said...
  உருப்படியான விஷயம் செய்திருகிங்க//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 65. FOOD said...
  இன்று ஒரு வரலாறு படைத்திட்ட
  அன்பு மனோ, ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆபீசர்.....

  ReplyDelete
 66. FOOD said...
  அருமையான பேட்டி. அதிகம் ரசித்தேன்.//

  நீங்கள் இன்னும் ரசிக்கும் படி, ஒரு அழகான நடிகையின் பேட்டி விரைவில்......

  ReplyDelete
 67. FOOD said...
  வலைப்பூவின் டெம்ப்ளேட் சும்மா நச்.//

  இந்த பாராட்டு, இதை வடிவமைத்த நண்பனையே சாரும், பெயர் போடவேண்டாம்னு சொல்லிட்டார்....!!!

  ReplyDelete
 68. புதிய சட்டையில் மனோ பேட்டியெல்லாம் போடறாரு.... அவங்க கிட்ட அருவாள வீசிட்டார் போல...

  ReplyDelete
 69. நன்றி : எனது போட்டோவை கார்ட்டூன் ஆக்கிய நண்பன் "வீடு" அவர்களுக்கு....///


  அருவாள தலைகீழா பிடிச்சா எப்பிடி தலையை சீவ முடியும்?

  ReplyDelete
 70. laptop மனோ அண்ணே...

  அவரை பேட்டி எடுத்து "தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க"

  ReplyDelete
 71. ///MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips [Reply To This Comment]

  மொக்கராசு மாமா said...
  //இப்போது காமெடியில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து
  உங்கள் கருத்து...?

  திறமைசாலி....!!!///

  பழம்பெரும் நடிகர் சந்தானத்தின் வாயாலேயே நம்ம தலைவர் சந்தானத்தை திறமைசாலி என சொல்ல வைத்த அண்ணன் நாஞ்சில் மனோவிற்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்//

  சரி அப்போ பிளாங் செக் அனுப்பி தாருங்க....
  ///

  அக்கவுண்டும் பிளாங்தான் பரவால்லையா?

  ReplyDelete
 72. நீங்க நடத்துங்க தலை ....
  கலக்கல் ....:)))))))))))))))))

  ReplyDelete
 73. பேட்டி நல்லா இருக்கு வாழ்த்துக்கள். அவர் காமெடியை பல படங்களில் பார்த்து ரசித்திருந்தாலும் இன்று வரை அவர் பெயர் தெரியாது. இன்றுதான் தெரிந்து கொண்டேன். பல தகவலகளை தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
 74. இதப்பாருடா!இந்த மனோ பெடியன் (கமெண்டை பாத்தாவது கிழவன்ட மனசு குளிரட்டும்) கிட்டையும் இவ்வளவு நாளும் ஏதோ ஒழிச்சிருந்திருக்கு.

  இந்த நகைச்சுவை நடிகரை தெரியும். ஆனால் பெயர் தெரியாது.

  பேட்டி பிரமாதம் ப்ரதர்.

  ReplyDelete
 75. நல்ல பேட்டி மனோ... வாழ்த்துகள் :)

  ReplyDelete
 76. மிக ப்ரொஃபஷனலான பேட்டி மனோ ! பாராட்டுக்கள் !

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!