Friday, February 24, 2012

நாசமாபோன ரயில் பயணம்....!!!

வாழ்க்கையில் முதல் முறையாக ஏசி கோச் ரயில் பயணம், ஆனால் இனி ஜென்மத்துக்கும் அதில் கூடியவரை போக கூடாதுன்னு முடிவு பண்ணிவிட்டேன்....!

அதிகமதிகமாக முதியோர்களே பிரயாணம் செய்வதால் அவர்களுக்கு நாம் இடைஞ்சலா இருக்கிறோமோ என்ற ஃபீலிங், காலை பாத்ரூம் போனால் அவர்களே லைனில் இருக்கிறார்கள் அதுவும் பெண் தாய்மார்கள், நான் செக்கண்ட் கிளாஸ் கொச்சுக்கு ஓடிவிட்டேன்..!

அடுத்து என் அருகில் பிரயாணம் செய்த ரயில்வே ஊழியர்களின் இடைவிடாத சோமபானம் வாசம், ஏசி கோச் என்பதால் ஒரே துர்நாற்றம் எல்லா பயணிகளையும் முகம் சுளிக்க வைத்ததும் அல்லாமல் நாற்றம் அதிகம் என்பதால் தூங்க முடியவில்லை..!

மும்பை டூ சோலாப்பூர் வரை பயணம் செய்த என் வாசகர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது, திருவனந்தபுரத்தில் விஞ்ஞானியாக இருக்கிறாராம், பெயர் சோமு நன்றி நண்பா, நான் லேப்டாப் வச்சி டைப் பண்ணிட்டு இருந்ததை பார்த்து நீங்க பிளாக் எழுத்தாளரா என கேட்டார், பெயர் நாஞ்சில்மனோ'தானே என்றார் ஆமாம் என்றேன், ஓ பிரோஃபைலில் கண்ணாடி போட்டுட்டே இருப்பீங்களே என்றார் [[அவ்வ்வ்வ்வ்வ்வ்]]

சோலாப்பூர் தாண்டியதும் கொஞ்சம் கொள்ளையர்கள் பயம் வந்தாலும், சக பயணி திகிலூட்டி கொண்டே இருந்தார், அவரும் குடும்பமாக வந்துட்டு இருந்தார்...!!![[நல்லவேளை தப்பிச்சோம் இல்லைன்னா அதுக்கும் ஒரு பதிவு வந்திருக்கும் ஹி ஹி]]

ஆனந்தவிகடன் படிக்கும்போது சிபியின் ஒரு ஜோக் வந்ததை படித்து சிரித்தேன் அது கீழே உங்கள் பார்வைக்கு...

ஊழல்வதிகளுக்கு கட்சியில் இடம்'இல்லைன்னு அறிக்கைவிட்டது தப்பாபோச்சு!'

'ஏன் தலைவரே...?

'கட்சியில் இருக்கிற எல்லாரும் போன் பண்ணி என்னை நீக்கியாச்சான்னு ? னு கேக்குறாங்க!

ரயில் தர்மாவரம் தாண்டியாச்சு ஆந்திராவில் ரயில் ஓடிட்டு இருக்கு, சேலம்  அப்புறம் ஈரோடு பார்ப்போம் நண்பர்களை பார்க்க முடியுதான்னு.

கூடங்குளம் போயி நண்பன் கூடல்பாலா'வையும் அண்ணன் உதயகுமார் அவர்களையும் பார்க்கலாம்னு நானும் கவுசல்யாவும் போனில் பேசி வைத்துள்ளோம், கண்டிப்பாக போக மனம் தீர்மானித்து உள்ளது.

பார்க்கலாம் நண்பர்களே, மெட்ராஸ் பவன் சிவகுமாரும், அண்ணன் நக்கீரனும் சென்னை வரலைன்னா அருவாள் கன்பார்ம்'னு சொல்லி பயம் காட்டுராயிங்க பார்க்கலாம் முடிந்தவரை வரப்பார்க்கிறேன்...!

17 comments:

  1. மக்கா வணக்கம்

    பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அடுத்து என் அருகில் பிரயாணம் செய்த ரயில்வே ஊழியர்களின் இடைவிடாத சோமபானம் வாசம், ஏசி கோச் என்பதால் ஒரே துர்நாற்றம்//

    உங்களுக்கு கொடுத்தாங்களா?இல்லையா?

    ReplyDelete
  4. சோலாப்பூர் தாண்டியதும் கொஞ்சம் கொள்ளையர்கள் பயம் வந்தாலும்//

    அருவா இருக்க பயம் ஏன்?

    ReplyDelete
  5. நீண்ட நாள் இடைவெளியில் பதிவு, வாங்க அண்ணே வாங்க...

    ReplyDelete
  6. நல்லபடியா பயணம் அமைய வாழ்த்துகள்

    ReplyDelete
  7. எலேய் அந்த கொண்டு போன சரக்கு காலி ஆயிருச்சா ஹிஹி!

    ReplyDelete
  8. சென்னைக்கு வரும் அண்ணனுக்கு Z+ பிரிவு பாதுகாப்பும், அம்பாசடர் கார் மேல் சுற்றும் செவப்பு வெளக்கும் தயார் நிலையில் உள்ளதென்பதை..

    ReplyDelete
  9. எந்த கம்பார்ட்மெண்டுன்னு சொன்னா அந்த லேப்டாப்பை திருட சொல்லி இருப்பேனே ...வடைப்போச்சே ..!! இம்சை தாங்க ..:-))))

    ReplyDelete
  10. இன்னும் ஊருலதானா ...ஜமாய்ங்க :-))

    ReplyDelete
  11. மக்களே,
    வணக்கம்..
    வாங்க வாங்க தமிழ்நாட்டுக்கு..
    எத்தனை நாட்கள் இருப்பீங்க..?? தமிழநாட்டுல..
    பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் மக்களே..

    ReplyDelete
  12. சென்னை வாங்கண்ணா, சந்திப்போம்.

    ReplyDelete
  13. வாங்க தல நல்ல இருக்கிங்களா ?

    ReplyDelete
  14. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்கின்றோம்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!