Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, October 12, 2016

அம்மா உங்களுக்கு என்னம்மா ஆச்சு ?


எங்கள் ஊரில், ஸ்கூல் போயிட்டு வார பாதையில ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே, திறந்த இசக்கியம்மன் கோயில் ஒன்று இருக்கு, அந்தப்பக்கம் ஆளுங்க போக வரவே பயப்படுவாங்க...ஆனாலும் அந்த வழியாக போயித்தான் ஆகவேண்டும்...பெரிய காடு...இப்போ சிட்டி ஆகிருச்சு.

ஆலமரத்தின் கீழே சின்ன சின்ன சிலைகளாக இருக்கும், நடுவில் ஒரு பெரிய பயங்கரமான நாக்கை தள்ளிக்கொண்டு சிவப்பு சேலையில் ஒரு பெண்ணின் சிலை...

ஒருநாள், விவரம் தெரியாமல் பள்ளி விட்டு வரும்போது, அந்த சிலையிலுள்ள வளையல்கள் காற்றில் ஆடுவதைக் கண்டு, ஆச்சர்யப்பட்டு,  எல்லாம் உருவிகிட்டு வீட்டுக்கு கொண்டு வந்து விளையாடிகிட்டு இருந்தேன்.

எங்கம்மா, இத எங்கே இருந்து கொண்டு வந்தேன்னு கேக்க, சொன்னதும், என்ன நடந்துச்சுன்னே [அடி] தெரியல...அப்புறம் கண்ணைத் தொறந்தப்போ அம்மா இடுப்புல இருக்கேன் அதுவும் அந்தக் கோவில் பக்கத்துல...

அம்மாவுக்கும் உள்ளேப் போகப் பயம்...அந்த ஆலமரத்தடியில் வளையல்களை வீசிவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓட...நாமதான் அம்மா இடுப்புல இருக்கோமேன்னு, பின்னாடி ஏதும் துரத்திக்கிட்டு வருதான்னு பார்த்தா...ஒருத்தருமில்லே...

அம்மா, ஓடாதம்மா பின்னால யாருமே வரலைன்னு சொன்னேனா ? மறுபடியும் கண்ணைக்கட்டிருச்சு [அடிதான்] அப்புறம் கண்ணைத் தொறந்து பார்த்தா, எங்கப்பாரு மடியில இருக்கேன்...

"பயத்துக்கே பயத்த காட்டிட்டியே செல்லம்,நீதாம்டா என் சிங்கக்குட்டி"ன்னு கொஞ்சுறாரு, அம்மா கடுகடுன்னு இருந்தாங்க, இப்பத்தான் புரியுது அது எங்கம்மாவைப் பார்த்து அப்பாரு சொல்லிருக்காருன்னு...

என்னா ஓட்டம்டா...

Friday, August 26, 2016

ஒரு கொலையால் வந்த திகில் அனுபவம்...!


நெல்லையில் இருந்து இரவு லேட்டாக நாகர்கோவில் வந்து கொண்டிருந்தேன், நாகர்கோவில் நெருங்க நெருங்க பயணிகளிடம் படபடப்பும் பயமும் பற்றிக் கொண்டது...

இந்து தலைவர் ஒருவரை [ராமகோபாலன் அல்லது ராஜகோபாலன்னு, சரியா நினைவில்லை 1993 or 1994 ] கொன்று [கொலை] விட்டார்கள், கண்டன போஸ்டர்கள், கடையடைப்பு, பஸ் மறியல் என்றாகிவிட...

குளத்து பஸ்டாப்பபில் வந்து இறங்கினேன், ஊர் போகும் பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட, பஸ் நிலையத்தில் தங்குவதோ, ஆட்டோ பிடித்து ஊர் போவதோ முடியாத நிலையாகிவிட்டது...

சரி, ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கலாமென்றால், அவர்களும் ரூம் தரமுடியாது என்று கதவை சாத்த...
குளத்து பஸ்நிலையத்திலிருந்து எல்லா பஸ்களும் டெப்போ நோக்கி கிளம்பி போயி, பஸ்நிலையம் அம்மணமாக நின்றதை அன்றுதான் பார்த்தேன் !

அப்படியே மேலேறி, தைரியமாக அண்ணா சிலையருகே வந்து நின்றேன், மணி நடுநிசியை தாண்டி இருந்தது...ஒரு வாகனத்தையும் காணோம் மொத்தமாக வெறிச்...

பயம்.... பயம்... கலவர பயம்...திடீரென ஒரு கேரளா பஸ், ஆகாயத்தில் பறந்து வருவது போல வந்து நின்றது, திருவனந்தபுரம் டூ நாகர்கோவில் டூ கன்னியாகுமரி போகும் பஸ்...
மனிதாபிமானம் உள்ள டிரைவர், கண்டக்டராக இருந்திருக்கலாம்..."பேடி இல்லாத்தவர் மாத்திரம் வரு வரு, டைரக்ட் கன்னியாகுமரி போகுன்னு" என்று கத்தினார் கண்டக்டர்...நமக்கு அப்போ மலையாளம் தெரியாதா, கன்னியாகுமரி போகுன்னு"ன்னு சொன்னது மட்டும் புரிய, பயத்தோடு ஏறி அமர்ந்தேன்...

ஹைவேயில் பஸ் காற்றில் பறந்தது என்றுதான் சொல்லவேண்டும்...சாலையோரம் உற்று பார்க்கவே பயம், கல்லெறி விழும் என்ற பயத்தில், ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட...

இடையில் பஸ் நிறுத்தப்படலாம், தாக்கப்படலாம் என்ற பயத்திலும், அப்படியே கலவரக்காரர்கள், நிறுத்தி நீ எந்த மதம் என்று கேட்டால் என்ன சொல்லவென்று, நான் தேர்ந்தெடுத்தப் பெயர் "ராம்குமார்" 

பஸ் கன்னியாகுமரி பஸ்நிலையம் செல்லுமுன், கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேசன் முன் நிற்க, அலறியடிச்சு கீழே இறங்கினேன் [குதித்தேன்] பஸ் சிட்டாக பறந்துவிட்டது...

போலீஸ்டேசன் விளக்குகள் ஒன்றுமில்லை, நகராட்சி விளக்குகளுமில்லை, கும்மிருட்டு, கடலலையின் இரைச்சல் எப்போதும் நான் கேட்பதை விட, கோரமாக இருந்தது...

ஊருக்கும் போக முடியாது, என்ன செய்ய என்று யோசிக்க...நண்பன் ஒருத்தன் அங்கே ஒரு லாட்ஜில் வேலை செய்வது நினைவுக்கு வர, பம்மி பம்மி நடந்து சென்றேன்...

லாட்ஜ் விளக்குகள் அணைக்கப்பட்டு, பேய் பங்களா போன்று காட்சி அளிக்க இன்னும் திகில், நண்பன் இல்லையென்றால் என்ன செய்வது ? கண்டிப்பாக கலவரக்காரனென்று போலீஸ் தூக்கி விடுவார்கள்...

மெல்லமாகப் போயி, பலமுறை கதவைத்தட்டியும், ஒரு சத்தமும் இல்லை...ரொம்ப நேரத்துக்குப் பிறகு, இங்கே ரூமில்லை மரியாதையாக போயிரு இல்லன்னனா போலீஸைக் கூப்பிடுவேன்னு, பீதியினில் கூடிய சத்தம்தான் வந்தது.

அதே அதே நண்பனின் குரல்தான்..."லேய் மக்கா நான்தான் மனோ வந்துருக்கேன்"ன்னு சொன்னதும், படாரென கதவு திறக்கப்பட்டு, இரண்டு கரங்கள் என்னை உள்ளே இழுத்து கதவை சாத்தியது.

"ஏலேய் நீ இந்த சாமத்துல இங்க என்னலே பண்ணுத ஊரே கலவரமாயி கெடக்கு ?"

விஷயத்தை சொன்னதும், அடப்பாவி நீ உயிரோடே வந்ததே பெரிய விஷயம், வா வந்து சாப்பிடு என்று சாப்பாடு தந்து, ஜலபுல ஜங் பண்ணிட்டு, "இன்னும் ரெண்டு மூன்றுநாள் நமக்கு ஊர் போகமுடியாது மக்கா, இங்கேதான் இருக்கணும், பஸ், ஆட்டொ, டாக்சி ஒன்னும் வராதுன்னு சொல்லி தூங்கவச்சான்.
அடுத்தநாள் காலம்பரமே எழும்பி, பீச் போயி, தரிசனங்கள் பண்ணிட்டு, வந்தேன், போலீஸ் பாதுகாப்புகள் பலமாக இருந்தது, பகல்ல பயமில்லை, பக்கத்து ஊர்தானேன்னு மனம் ரிலாக்ஸ் ஆச்சு...

ஆனாலும் அந்த சாமத்தில் நாகர்கோவில் குளத்து பஸ்நிலையத்தில் தனியாக நின்றது, இப்போதும் திகிலாகத்தான் இருக்கிறது...!

அடுத்தநாள் செய்திகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொலை செய்திகள் வந்து கொண்டிருந்தன...!


Sunday, August 14, 2016

மஞ்சக்காமாலைக்கு ஒரு மரணம் வராதா ?


கல்யாணமான புதிது...நல்லா சாப்பிட்டுக்கிட்டு இருந்த எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை, பசியும் இல்லை...

வீட்டம்மா அவள் அம்மாவிடம் சொல்ல, அவங்களும் வந்து ருசியா சமைச்சு தந்தாலும், சாப்பாடு இறங்கவில்லை, கவலையான அவர்கள் என்னெல்லாமோ கைமருந்து கொடுத்து என் வயிறை அதகளமாக்கினார்கள்.

ஆனாலும் சரியாகவில்லை, அப்போ எதேச்சையாக இதைக் கேள்விப்பட்ட உறவினர் ஒருவர், மஞ்சகாமாலை இருந்தாலும் சாப்பிட மனசு இருக்காதென்று சொல்ல, இரவு சிறுநீரில் சோற்றை இட்டு, காலையில் பார்த்தால் மஞ்சளாக இருக்க...

மும்பையில் எங்கள் ஏரியாவில் [அந்தேரி கிழக்கு] கோல்டோங்கிரி என்ற இடத்தில் ஒரு மூதாட்டி, காசுக்காக இல்லாமல் ஒரு தொண்டாகவே மருந்து கொடுப்பதாக சொல்ல கேள்விப்பட்டு...அங்கே போனோம்.

போனது சாயங்கால வேளையாக இருந்த படியால் அந்த பாட்டி, நாளைக்கு காலை சூர்ய உதயத்திற்கு முன்பு வரவேண்டுமென்று சொல்ல...

அடுத்தநாள் சென்றோம் அதிகாலையில்...கியூ இருந்தது...

உக்கார வச்சு, மூக்கில் [நாம படிக்கும்போது நிப்பில்ல இங்க் ஊத்துவோமே பென்னில்] நிப்பிள் வச்சு மருந்தை உறுஞ்சி உள் மூக்கில் ஊற்றுகிறார், சுர்ரென்று பிடிக்கும், மூன்று நான்கு முறை ஊற்றி விட்டு, கொஞ்சூண்டு குடிக்க சுடவச்ச நெய் தருகிறார்...முடிந்தது.

ஒருமணி நேரம் கழித்து சோடா வாங்கி குடிக்க சொல்கிறார், அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து வந்து காட்ட சொல்கிறார், என்ன...சோடா குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கினதும், சற்று நேரத்திற்கெல்லாம் தும்மல் வர ஆரம்பிக்கிறது...

தும்மலோடு மூக்கில் சளி வர தொடங்க...அப்பிடியே கொஞ்ச நேரமானதும், மூக்கில் சொறிச்சல் மாதிரி வர ஆரம்பிக்கும், சீந்த சீந்த மஞ்சள் மஞ்சளாக சளி கொட்டிக்கிட்டே இருக்கும், கடுப்பாக இருக்கும், மூக்கு காந்தும்...

நாலைந்து மணிநேரம் கழிச்சு அப்பிடியே நார்மல் ஆகி, படிப்படியாக குறைந்து, அப்புறம் லேசாக சளி கட்டியாக போக ஆரம்பிச்சு ஸ்டாப் ஆகிரும், பத்தியம் கிடையாது, அன்று முழுவது புளிப்பு மட்டும் சாப்பிடக்கூடாது, வேற என்ன வேணாலும் சாப்பிடலாம்.

இரண்டுநாள் கழித்து போனதும், ஆளைப் பார்த்ததுமே பாட்டி [நோயின் தன்மையை] கண்டு பிடிச்சிருது, மறுபடியும் அதே மருந்தை ஊற்ற, மறுபடியும் சளி பிச்சிகிட்டு மஞ்சள் மஞ்சுளா கொட்டுச்சு...

மறுபடியும் போனோம், இப்போ குணமாக்கிருச்சுன்னு சொல்லுச்சு பாட்டி...

ஆக, முத்திப் போச்சுன்னா ஆறேழு தடவை மருந்து ஊத்தவேண்டி வரும், எங்கள் குடும்பம் மற்றும் சுற்று வட்டார ஏரியா மக்கள் யாவரும் போயி பயன் பெரும் இடமது, பாட்டியின் கணவர் உயிரோடு இருந்தபோது செய்த தொண்டு, இறக்கும் தருவாயில்தான் இந்த மருந்தின் பார்முலாவை கிழவிக்கு சொல்லிக் கொடுத்தாராம்.

அதேப்போல பாட்டியும் மரிக்கும் தருவாயிலதான், சொந்த மகனுக்கு கூட சொல்லிக் குடுக்காம மருமகளுக்கு பார்முலாவை சொல்லி கொடுத்துட்டு இறந்து போயிருக்கு...!

பாட்டி மருமகள்தான் இப்போ அங்கே டாக்டர், நாம் கொடுக்கும் காசை வாங்கி கொள்கிறார்கள்...!

என் அனுபவம்...பசிக்காமல், சாப்பிடப் பிடிக்காமல் வயிறு எப்போதுமில்லாமல் ஒரு புது மார்க்கமாக தெரிய வந்தால், உடனே மஞ்சக்காமாலை வைத்தியரையும் மறக்காமல் சென்று பாருங்கள்.
-------------------------------------------------------------------------------------------
[[கேரளா நண்பனின் அக்காள் மகனுக்கு மஞ்சகாமாலை முற்றி, வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள், இனி மரணம்தான் என்று...

யாரோ ஒருவர், சாவக்கிடந்தாலும் "பாபநாசம்" கொண்டுபோ பிழைக்க வைத்துவிடுவார்கள் என்று உறுதியாக சொல்ல...
அப்போதே காரில் தூக்கிப்போட்டு பாபநாசம் விரைந்து வந்து, மருந்து கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
பாபநாசம் பஸ்நிலையத்தின்  அருகில் யாரிடம் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள் வழி.
சிம்பிள் மருத்துவம் இருந்தும், மனிதர்கள் விழிப்புணர்வு இல்லாமல் மரணத்தை தழுவுவது மனதுக்கு சஞ்சலமாக இருக்கிறது.]]

கவிஞர் நா முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.


Friday, April 15, 2016

சாப்பிடும் விதமும் ஒரு கலைதான்...!!!

ஹோட்டல்ல போயி, சதீஷ் சங்கவி ஸ்டைல்ல [[ஒருநாளும் அப்பிடி சாப்பிட்டதில்லை]] ரெண்டு பரோட்டா வாங்கி, பீஸ் பீஸா பிளேட்டில் பிச்சிப் போடும்போதே, அருகில் இருந்தவன் ஒரு மாரியா என்னைப் பார்த்தான் 

[[அதெல்லாம் வெக்கமேப் படப்டாதுன்னு சங்கவி சொல்லிட்டாப்ல]]
ஒரு சிக்கன் சுக்கா'வும் ஆர்டர் பண்ணினேன், கொஞ்சூண்டு சால்னா தந்தான் ஒரு சின்ன பிளேட்ல, இது போதாது இன்னும் ஒரு பிளேட் கேட்டேன் [[ஆக்சுவலி இன்னும் ரெண்டு பிளேட் சால்னா வேணுமா இருந்துச்சு, சங்கவி கணக்குப்படி]] தந்தான்.
பிச்சிப்போட்ட பரோட்டா மீது தோசை மாதிரி சால்னாவை ஊற்றி ஊறவச்சேன்...பக்கத்துல இருந்தவன் மெல்ல இருக்கை நுனிக்கு வந்துவிட்டான்.
எப்பிடியும் சிக்கன் சுக்கா ரெடியாகி வர பத்து நிமிஷமாவது ஆகும், ஊற வைத்த பரோட்டா முன்பு, ராம்தேவ் மாதிரி கண்களை மூடிவாறு அமர்ந்திருந்தேன், லேசா கண்விழித்துப் பார்த்தபோது, பக்கத்திலிருந்தவனைக் காணோம்.
ஆஹா...இனி ஃபிரியா சாப்பிடலாம் என நினைத்தபோதே, என்னருகில் வந்தமர்ந்த இன்னொருத்தன், என் நிலைமை "கண்டு" அடுத்த டேபிளுக்கு ஓடினான்.
சுக்கா சிக்கன் வரவும், பரோட்டாவும் சால்னாவில் நன்றாக ஊறிவிட்டது, அங்கிட்டும் இங்கிட்டுமா லேசா பரோட்டாவை கிளறி விட்டு, ஒவ்வொரு பீஸா சாப்பிடலாம்ன்னா...நன்றாக ஊறி விட்டதால் சாதம் ரேஞ்சிக்குத்தான் வாரி சாப்பிட முடிஞ்சுது, ஏற்கனவே உக்காந்து ஜெர்க்காகி அடுத்த டேபிளுக்கு ஓடினவன் என்னையே பார்த்துட்டு இருக்காப்டி இருந்துச்சு, சடேர்ன்னு திரும்பி முறைத்தேன், அப்புறம் அவனைக் காணவே இல்லை.
ஊறவச்ச பரோட்டா சால்னா இதமாக தொண்டையில் இறங்குச்சு, புதிய ருசி, பரோட்டா மீது இருந்த வெறுப்பும் மாறிப்போச்சு...முன்பு பரோட்டா கண்டாலே ஓடிப்போயிருவேன்...
இனி பரோட்டா அடிக்கடி சாப்பிடனும், சும்மாயில்லை போல, எங்க ஊர் பதி"யில இப்பவும் "பரோட்டா சாமியார்"ன்னு ஒருத்தர் இருக்கார் !!
சாப்பாடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம், சாப்பிடும் விதமும் ஒரு கலைதான் இல்லையா...சங்கவி"க்குத்தான் நன்றி சொல்லணும்.


Sunday, April 10, 2016

வாயில் வடை சுடும் சில ஐ டி ஆளுங்க...!!!

வாயில் வடை சுடும் சில ஐ டி ஆளுங்க...
இன்டர்நெட் ரூம் கனெக்டிங் பிரசினையை பார்க்க சொன்னா...நெட்'காரனைக் கூப்பிடு அங்கேதான் பிரசினை'ன்னான், அடேய்...டவுன்லோட் ஸ்பீடு அளவுக்கும் மீறி இருக்கும்போது...எப்பிடிடா நெட்'காரன் பிரச்சினையா இருக்கப்போகுது ?ன்னு கேட்டா...கூலா போயி உக்காந்துகிட்டு...ஊருக்கு போன்ல பொண்டாட்டிக்கு போன் போட்டு..."பால் குடுத்தியா ?"..............."
"...டி கழுவினியா ? அய்யயோ சின்ன பிள்ளையாச்சே கழுவப்டாது, டிஷு வச்சி தொடைக்கணும்.."
நாறுமேன்னு பதில் வந்துருக்கும் போல, கெக்கேபிக்கேன்னு சிரிக்கான்...
"தம்பி இங்கே தங்கியிருக்கும் ஹோட்டல் விருந்தாளிகள் என்னை பேதி போக வச்சிருவாயிங்க, பிளீஸ் வந்த வேலையை முதல்ல கவனி..."
"அதான் சொன்னேன்ல நெட்'காரன் கனெக்ஷன் பிரச்சினைன்னு..."
நிறைய வாயால வடைசுட்டு அவன் கிளம்பும்போது...வடிவேலு வாய்சில்..தம்பி...உன்னை தப்பா வேலைக்கு சேர்த்துருக்காயிங்க எதுக்கும் நல்ல சீனியராப் பார்த்து கொஞ்சநாள் அசிஸ்டெண்ட் வேலை செய்யப்பாரு"ன்னு சொன்னதுக்கு, அதே மனோபாலா பதில்தான் பார்வையில்..."எனக்குத்தெரியும் போடா"
சரி போகட்டும்ன்னு வேறோருத்தனைக் கூப்பிட்டேன்...அவனும் அவனால முடிஞ்சளவு வாயில வடை சுட்டான்...இவன் கொஞ்சம் வித்தியாசமா சொன்னான்ய்யா...கம்பெனி டெக்னிகல் பிராப்ளம்'ன்னான்...[[சம்பளம் பிரச்சினையா இருக்குமோ ?]]
அவனும் போயி உக்காந்துகிட்டு ஏதோ ஒரு நாதாரிக் கூட போன்ல கடலை போட்டுட்டு இருந்தான்...
"தம்பி வந்த வேலையைக் கவனியுங்களேன் பிளீஸ்"
"அதான் சொன்னேன்ல கம்பெனி டெக்னிகல் பிராப்ளம்ன்னு ?"
"இல்லியே...இந்த வயர் கனேக்ஷன்ல்லதானே பிரச்சினை போல இருக்கு ?"
என்னை மேலேயும் கீழேயும் பார்த்தான்...போகும்போது..."தம்பி...உன்னை தப்பா...." "தெரியும் போடா " மூவ்மெண்டேதான்...
என்ன செய்ய...? இன்னொருத்தனைக் கூப்பிட்டேன்...வந்தான், பார்த்தான்...ரோசிச்சான்..."ஒரே ஒரு" வயரை கழட்டினான்...இன்னொரு இடத்தில் மாட்டினான், அந்த வயரை இங்கே மாட்டினான்...பிராப்ளம் சால்வ் !!!
"தம்பிக்கு எந்த ஊரு ?"
"நீங்க தமிழா சார் ? எப்பிடி சார் நான் தமிழ்ன்னு கண்டு பிடிச்சீங்க ?"
"அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டி வச்சிருக்கே"
"நான் மதுரை சார், உங்களை மலையாளி"ன்னு நினைச்சிட்டேன்" [[அவ்வ்வ்வவ்]]
நம்மாளுங்க நல்ல உத்திரவாதமாத்தான் வேலை செய்யுறாங்க ம்ம்ம்ம்...முதல்ல நான் கூப்பிட்ட ரெண்டு பேரும் மலையாளிங்க...அவங்க வாங்குற சம்பளம், 60 ஆயிரம் ரூபாய், நம்மாளு வாங்குற சம்பளம், 30 ஆயிரம் ரூபாய்...!
இனி முதல் பாராவை மறுபடியும் படியுங்க.

Thursday, April 7, 2016

அமேரிக்கா பணமா கொக்கா !



முன்பு மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம், காலை எட்டு மணி முதல் மூன்று மணி வரை பிளேன் வரத்துப் போக்கு ரொம்ப குறைவாக இருக்கும், அந்த நேரத்தில் வேலைகள் இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் தூங்கலாம் என்று, ட்ரான்சிட் பயணிகள் தூங்கும் இடத்துக்குப் போயி, ஏர்போர்ட் பாஸை கழட்டி பாக்கெட்டுல வச்சிகிட்டு தூங்குவது உண்டு, ஏர்போர்ட் மேனேஜர் செக்கிங் வந்தால் நாங்களும் பயணிகள் என்று போய்விடுவார்.

அன்று [[எப்போவும்]] வழக்கம்போல தூங்குனப்போ, ஏசி குளிர் கொஞ்சம் கூடுதலா இருந்ததால ரெண்டு கையும் குளிர்ல நடுங்கியதும், ஏதாவது இடுக்குகுள்ள கைவிரல்களை சொருகலாம்ன்னு தூக்கத்திலேயே பெட்டில் தடவிய போது, ஒரு இடுக்கில் கைபோனது...

உள்ளே என்னமோ இருக்குபோலன்னு  உணர்ந்தாலும், தூக்கத்தில் தூங்கிவிட்டு எழும்பி போயி முகம் கழுவிகிட்டு இருக்கும்போதுதான், அந்த நினைவு  வந்துச்சு...திரும்பவும் ஓடிப்போயி கைவிட்டுப் பார்த்தால் ஏதோ பேப்பர் சுருட்டுனாப்ல இருக்கவே, வெளியே எடுத்தேன்...அமெரிக்கன் டாலர் மாதிரி தெரியவே...எடுத்து விரித்துப் பார்த்தேன்...ஆத்தி...மூன்று நூறு டாலர் நோட்டுகள்...

அப்போது டாலர் ரேட் 33 ரூபாய்...ஆக மொத்தம் கிடைத்தது 9900 ரூபாய்...

அப்புறம் எங்கே உக்காந்தாலும் இந்தப்பழக்கம் தொத்திகிச்சு, ஏர்போர்ட் என்பதால் அதுவும் செக்கியூரிட்டி செக்கிங் [[முன்பு, இப்போ பிச்சிபுடுவான் மிலிட்டிரிக்காரன்]] நடக்கும் முன்பு பயணிகள் ஆசுவாசமாக அமரும் இடம் என்பதாலும், அடிக்கடி இப்படி காசு கிடைப்பதுண்டு, பென்"கள் நிறைய கிடைக்கும், மலையாளிகள் அதிகம் போகையில் நம்ம ரூபாய் வெளிநாட்டில் செல்லுபடி ஆகாதுன்னு [[அப்போ]] இப்படி ஒளித்து வைத்து செல்வதுண்டு...!

சரி அன்னிக்கு கிடைச்சுதே டாலர், அதை என்ன செய்தாய்ன்னு கேக்குறீங்களா ?

இலவசமா கிடைத்ததை இலவசமாக கொடு பாலிசிதான்...மூன்று மணி நேரத்தில் மும்பை லேடீஸ் நடன பாரில் நண்பர்களோடு என்ஜாய்...பத்தாயிரம் [[அப்போ]] காலி...!

எங்க அண்ணன் இப்பவும் என்னைப் பார்த்து கவலையும்  வேதனையுமாக சொல்லும் டையலாக் "உனக்கு பணத்தோட அருமை இன்னும் தெரியவில்லை மனோ"

இப்போல்லாம் அப்பிடி முடியுமா ஆத்தே...?!!! [[இது கல்யாணத்துக்கு முந்தி நடந்தது சாமிங்களா, போட்டுக் குடுத்துராதீக]]

குடிசையில் பிறந்து வளர்த்தவனே இப்பிடின்னா குபேரனின் பிள்ளைங்க...? ஸ்ஸ்ஸ் அபா...சோடா பிளீஸ்...

Thursday, March 10, 2016

கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் என்பது யாதெனில்...!


பெண் போல கொண்டை வைத்திருந்த நண்பனுக்கும், ஆம்பிளை மாதிரி கிராப் வச்சிருந்த பிலிப்பைனி பெண்ணுக்கும், வேலை செய்யுமிடத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட...[[அவனுக்கு ஊர்ல கல்யாணமாகி குழந்தைகள் இருக்கு]]
சேர்ந்தே வசித்தார்கள் இங்கே...எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு, பத்து வருஷமா...
நேற்று திடீரென அவனைப் பார்க்க நேர்ந்தது...முடியெல்லாம் வெட்டி ஆம்பிளையாகிருந்தான்[!]...
"என்னப்பா உன் ட்ரேட் மார்க் முடிக்கு என்னாச்சு வெட்டிட்டே?"
"சலூன்ல செட்டிங் பண்ண சொன்னா, எசகு பிசகா பண்ணுனதுல மொத்த முடியையும் எடுக்க வேண்டியதா போச்சு, அதான்..."
"சரி, மே [[மேரி'யை நாங்கள் மே என்று கூப்பிடுவோம்]] எப்பிடி இருக்காள் நலமா ?"
"அதையேன் கேக்குற அது முடிஞ்சிபோச்சு, அவ இப்போ வேற ஆள்கூட செட்டில் ஆயிட்டாள்"
"உன்னை மிகவும் லவ் பண்ணுனாளேடா..."
"ஆமாடா நானும்தான் காதலிச்சேன், ஆனா அவ இந்த ம...ர காதலிச்சிருக்கா...முடியை வெட்டிட்டு ரூமுக்குப் போனதும், ரூமுக்குள்ளேயே விடம்மாட்டேன்னு ஒரே சண்டை..."
"அப்புறம் ?"
"அப்புறமென்ன அப்புறம், நானும் ஒதுங்கிட்டேன்..."
ரெண்டுபேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிட்டு இருந்தபோது, அவள் இவன் தலைமுடியைப் பற்றியே சிலாகித்தாள், இவனும் ஆண் பெண் கலந்த அந்த தலை முடியைப் பற்றியே சிலாகிப்பான்...[[பயபுள்ளைங்க ஒரு மார்க்கமாத்தேன் இருந்துருக்காங்க]]
ஆக...ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி இப்பிடித்தான் உருவாகிருக்கு...
இந்த டேஸ்'க்குத்தாண்டா என்னை விரும்பிருக்கான்னு அவன் மலையாளத்துல சொன்ன ஸ்லாங் கேட்டு இன்னமும் சிரிச்சிட்டு இருக்கேன்...


Sunday, March 6, 2016

கிரிக்கெட் என்னைப் போடா வெண்ணை என்றது !


இந்தியா - பங்களாதேஷ் கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ வெளில எங்கேயும் [[கடைகளுக்கு]] போயிறாதேன்னு நண்பர்கள் சொல்வதுண்டு இங்கே...[[பஹ்ரைன்]]
[[நமக்குதான் கிரிக்கெட்"ன்னா வேப்பங்காய் ஆச்சே...]]
அது தெரியாம நேற்று பெங்காலி லாண்டரி கடையிலப் போயி மூன்று நாளைக்கு முன்பு கொடுத்த துணிமணிகளைக் கேட்டேன்...
ரெடியாக இல்லை என்றான்...ஒரே நாள்ல ரெடியாகிருமே, நான் கொடுத்து மூன்று நாளாச்சே...என்றேன்...பத்து நாளானாலும் முடிஞ்சா தருவேன் இல்லைன்னா தரமாட்டேன், என்ன செய்யனுமோ செய் போ என்றான் கோபமாக...
எனக்கு கண்ணைக்கட்டிருச்சு பிரஷர் ஏறிடுச்சி...விட்டுருவோமா என்ன...?
பேசாம திரும்பி வந்துட்டேன்.
அப்புறமாத்தேன் தெரிஞ்சுது, நான் அங்கே போன நேரம்தான் இந்தியா ஜெயிச்சிருக்கு அவ்வவ்...
இப்பிடித்தான் முன்பு ஒருமுறை பெங்காலி ஹோட்டல்ல போயி சாப்புட்டுகிட்டு இருந்தேன், பெங்காலிங்க கூட்டமா இருந்து டீவில மேட்ச் பார்த்துட்டு இருந்தாங்க...
இந்தியா - பங்களாதேஷ் மேட்ச்...நான் ஒருவன்தான் இந்தியன், பாதி சாப்புட்டுகிட்டு இருக்கும்போதே...பங்களாதேஷ் ஜெயிச்சிருச்சு, அம்புட்டுப் பேரும் என் பக்கமா எழும்பி நின்னு கைத்தட்டி சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கே, அசடு வழிந்த வண்ணம் சீக்கிரமா கை அலம்பிவிட்டு வெளியேறின சம்பவமும் உண்டு !
நீதி : இடம் பொருள் ஏவல் தெரிஞ்சி செயல்படனும்.


Wednesday, March 2, 2016

அம்மா"ன்னா அம்மா"தாம்லேய்...!!!

"உடம்பெல்லாம் சேத்துப்புண்ணா இருக்குலேய் தம்பி...வாயேன் ஆஸ்பத்திரி போயிட்டு வருவோம்"

"போம்மா அங்கே போனா ஊசி போடுவாங்க நான் வரமாட்டேன்"

"டாக்டர்கிட்டே அம்மா சொல்லுதேன் ஊசி வேண்டாம்ன்னு வா மக்ளே "

"நீ போ நான் வரமாட்டேன்"

மிரட்டினாலும் மசியவில்லை, ஓடி பிடிக்க வந்தாலும் சிட்டாக பறந்து விடுவேன், ஆஸ்பத்திரி பக்கம் வந்தும் அம்மாவுக்கு டிமிக்கி குடுத்து ஓட்டம்.

ஒருநாள்...

"எலேய் தம்பி...பூலாங்குளத்துல [[எங்க ஊர் குளம்]] போயி குளிச்சிட்டு வருவோம் உன் சேக்காளிங்களை கூட்டிட்டு வா..."

சந்தோஷமாக குளத்துக்கு குளிக்கப்போனேன், குளத்துக்குள்ளே அம்மா என்னைப் பிடிச்சி வச்சிகிட்டு அம்மா பக்கத்துலேயே நின்னு குளி என்ன மக்ளே, பிள்ளைக்கு நீச்சல் தெரியாதுல்லா, அம்மா உன்னை பிடிச்சுக்குவேனாம், நீ அம்மா கூட விளையாடுவியாம் சரியா..."

"அம்மா...மீன் கடிக்குதும்மா...கடிக்குதும்மா..."

"அது உன்கூட விளையாடுது மக்ளே ஒன்னும் செய்யாது, நீ அம்மாகூட விளையாடு..." என்று இறுக்கி பிடித்துக்கொள்ள, நான் அலற...கொஞ்சம் நேரத்துக்குப் பிறகு...

"சரி மக்ளே நீ கரைக்கு போயிரு"

கரைக்கு வந்து பார்த்தா...உடம்பெல்லாம் ரத்த விளாறு.... "நீயெல்லாம்  அம்மாவாடீ..."ன்னு திட்டிகிட்டு வந்துட்டேன்.

ரெண்டே நாள்ல மொத்த சேத்துப் புண்ணும் ஆறிப்போச்சு...

"அம்மா அம்மா புண்ணெல்லாம் ஆறிப்போச்சு பாரு ?"

''புண்ணு ஆறனும்ன்னு ஆஸ்பத்திரி கூப்பிட்டா, ராஸ்கோலு விளையாட்டா காட்டுனே ? அதான் குளத்துக்கு கூட்டிட்டுப்போயி வைத்தியம் செஞ்சேன்"


எந்தவிதமான புண்கள் இருந்தாலும், குளத்து மீன் ஆற்று மீன்கள் கடித்தால் குணமாகிவிடும் என்பது நம்ம அம்மாக்களுக்கு தெரிஞ்சிருக்கு, நம்ம பொண்டாட்டிக்கு ??

அம்மா"ன்னா அம்மா"தாம்லேய்...!!!


Monday, February 29, 2016

நீ கொடுத்தால் நான் வேண்டாமென்றா சொல்வேன் கண்ணே...!

காலையில டியூட்டிக்கு வரும்பாதையில் ஒரு லிப்டன் டீக்கடை இருக்கு, டீ நல்ல மணமாக இருக்குமென்பதால், ஒரு டீ ஆர்டர் பண்ணி குடித்துக்கொண்டிருந்தேன்...


என்னை மலையாளி என்று நினைத்து இரு தமிழர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்...

பேச்சு அப்படியே அரசியல் பக்கமா போச்சு...காதை  கூர்மையாக்கினேன்...

அதிமுக, திமுக, எல்லாம் வேஸ்ட்டு, வெள்ளப்பாதிப்புல இவங்க உடனே வந்து செயல்படவோ, மக்களுக்கு உதவவோ செய்யவேயில்லை, கடைசியில்தான் வந்தாங்க, வந்தாலும் ஒன்னும் உருப்படியா செய்யல ஆனால்...

த மு மு க கட்சிகாரங்க ஆரம்பத்துல இருந்து கடைசிவரை ஓடி ஓடி உதவினார்கள், சாப்பாடு, தண்ணீர், துணிமணிகள் என்று அவர்கள் உதவியதை மக்கள் நன்றியோடு மனதில் வைத்திருக்கிறார்கள்...

கண்டிப்பாக சென்னை, அதிமுக'வுக்கோ திமுக'வுக்கோ சாதகமா இருக்காது'ன்னு சாதாரணமா பேசிட்டு இருக்காயிங்க !

சரி இவங்க ஊர் எந்தப்பக்கம்ன்னு காதைக் கொடுத்தா...முதுகுளத்தூர்...!

//திமுக..... ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் குடுக்குற நியூஸ் இன்னிக்கு இவங்க பார்க்கலை போல\\

//அடுத்து அதிமுக என்னவெல்லாம் குடுக்கப் போகுதுன்னு பார்ப்போம்\\


Tuesday, February 23, 2016

கணவன் மனைவி 18+...

நேற்றிரவு...


தினம்தோறும் பலமணி நேரமாக இரவு வீட்டம்மாகூட போன் பேசிகிட்டு இருப்பார் பக்கத்து ரூம் மலையாளி சேட்டன், என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும், சமையல் எல்லாம் அவர்தான் பண்ணித்தருவார், என்னை எதுவுமே செய்ய விடமாட்டார். [[தெரிஞ்சாதானே]] 

இங்கே மணி இரவு பத்து என்றால் ஊரில் மணி இரவு பனிரெண்டரை, அதுவும் கேரளா கிராமங்களில் ஏழு எட்டு மணிக்கே ஆளரவம் இருக்காது தூங்கிவிடுவார்கள்...

இவர் வீட்டம்மா தூங்காமல் அப்பிடி என்னதான் பலமணி நேரமா பேசுறாங்கன்னு கேக்க [[ஒட்டுதான்]] ஆசையாகிருச்சு நேற்று...

"காம்பௌண்ட் கேட்டை மூடினாயா ?"

"..........."

"ஸ்கூட்டரை கவர் போட்டு மூடினாயா ?"

".........."

"மெயிண்டோர் கதவை பூட்டியாச்சா ?"

"பிள்ளைங்க ரூம் கதவையெல்லாம் சாத்திட்டியா ?"

"அப்பா அம்மா தூங்கியாச்சா ?"

"கியாஸ் பூட்டுனியா ?"

"நம்ம ரூமுக்கு வந்துட்டியா ?"

"கதவை தாழ்பாள் போட்டுட்டியா ?"

"பெட்ஷீட் தலையணை எல்லாம் கிளீனா இருக்கா ?"

"................."

அப்புறம் எல்லாமே 18+ ங்கோ...கொய்யால எனக்குத்தூக்கமே போச்சு...

வெளிநாட்டு மனித வாழ்க்கையின் விநோதங்களில் இதுவும் ஒன்று...

நண்பர் ஒருவர் சொன்னார், ஒற்றைத் தலையணை வாழ்க்கை சரியானதல்ல"வென்று...சரிதான் !

Monday, August 18, 2014

பாசம் என்பது யாதெனில்...!

நானும் நண்பனும், நண்பனின் அண்ணனும் என் அண்ணனும்...
ஒரு நன்னாளில் [[அப்போ]] ராத்திரி சரக்கு வாங்கி வந்து பாழடைந்த பங்களாவில் வெள்ளாவி ஆரம்பிக்க...ஆரம்பம் முதலே அந்த அண்ணன் தம்பிங்கதான் பேசிட்டே இருந்தாங்க, இவன் அவனை புகழ்றான் அவன் இவனை புகழ்றான்...

எங்க அண்ணன் எனக்கு கண்ணை காட்டிட்டானா...ஆட்டம் முடியுற வரைக்கும் பாசத்தை பொழிஞ்சுட்டு போனாங்க...

அடுத்தநாள் மத்தியானம் நாகர்கோவில்ல போயி ஒரு சினிமா பார்த்துட்டு பைக்கில் வரும் வழியில் வடக்கு தாமரை குளம் பக்கமாக பைக்கில் வந்த நண்பனின் அண்ணன்காரன் என்னை நிறுத்தும் படி சைகை காட்டினான்,

மண்டை வாயிலெல்லாம் ரத்த காயம்...

"அவனெல்லாம் ஒரு மனுஷனாடே ?"

"யாருண்ணே ?"

"ஒங் கூட்டுகாரன், [[தம்பி]] நேற்று ராத்திரியே அவன் பொண்டாட்டிகிட்டே போட்டு குடுத்துட்டான், அவ வந்து என் பொண்டாட்டி கூட மல்லுக்கு நிக்கா ?"

"சரி என்னத்த போட்டு குடுத்தான் ?"

"ட்வ்க்ப்வ்க்ட்ப் எஹெஹ் எப்ஜ்வேர் ஜெப்ப்கே"

"ஓகே ஓகே திட்டாதீங்க..."

"அவனை கொல்லாம விட மாட்டேன் போயி சொல்லிரு" போயிட்டார்.
சரி அண்ணன்காரனுக்கே இப்பிடி மண்டை வீங்கி இருக்கே தம்பிகாரனை போயி பார்ப்போம்ன்னு போனா...அங்கேயும் செம் பிளட்...மண்டை வீங்கி காயங்களுடன்..அவனிடம் கேட்டாலும் அண்ணன்காரன் சொன்ன அதே டையலாக்..."அவன் ஒரு மனுஷனாடே ?"

கடைசிவரை ரெண்டு பயபுள்ளையும் உண்மையை சொல்லல.

எங்க அண்ணன்கிட்டே வந்து கேட்டேன் என்னாச்சுன்னு "சின்னவன் அவன் பொண்டாட்டிகிட்டே எங்க அண்ணன் உங்க குடும்பத்தை "..." இப்டி திட்டினான்னு சொல்ல, காலையிலேயே பொண்டாட்டியும் பொண்டாட்டியும் சேலையை கிழிச்சு, இவனுகளையும் கட்டி உருள வச்சிட்டாங்க..."

"மரியாதையா நீ மும்பைக்கு பெட்டியை கட்டு போலீஸ் கீலிஸ் வந்துச்சுன்னா வெளிநாட்டு காரன்னு உன்னை பிடிச்சு வச்சு காசை புடுங்க போறானுக"

எனக்கு அண்ணனும் நண்பனும் எங்க அண்ணன்தான், சுள்ளான் மாதிரிதான் இருப்பான் ஆனாலும் பக்கத்துல நிக்க பயமா இருக்கும், படார் படார்ன்னு அடிச்சிருவான், இப்பவும்...

கல்யாணம் கட்டி குழந்தை பிறந்து குழந்தை சைக்கிள் படிச்சிட்டு இருக்கும் போது [[மும்பையில் இருந்து ஊர் போனபோது]] ஒரு சண்டையை விலக்கு பிடிக்க போனபோது, "எலேய் போவாத போவாத"ன்னு சொல்லியும் கேக்காம போனதுக்கு...

எங்க மாமியார் மனைவி முன்னிலையில் எனக்கு அடி விழுந்துச்சு பாருங்க, ரெண்டு பேரும் மிரண்டு போயிட்டாங்க, இம்புட்டுக்கும் மும்பைல நம்ம ஏரியாவையே அடங்க வச்ச இவனான்னு இப்பவும் சொல்வாங்க ஹி ஹி...

என்னமோ அண்ணன் அடிச்சா எனக்கு வலிக்கிறதே இல்லை, சின்ன பிள்ளையில இருந்து பழக்கமாகிருச்சு, சின்ன பிள்ளையில எங்கே போனாலும் என் கையை பிடிச்சுதான் கூட்டிட்டு போவான், என்னைவிட மூன்று வருஷம் மூத்தவன்.

ஆனால் எங்க அக்காவை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது, விவரம் தெரியும் வரையில், அவனுக்கும் மூத்தவள் அக்கா..அக்காவை என்னை தொடவே விடமாட்டன், அடிதான்...!

எப்பவும் அண்ணன் கூடவே இருக்கணும் போல இருக்கு, ஒரு கவலை இல்லாமல் அவன் கூட இருக்கலாம்...

ஐ மிஸ் யூ அண்ணே...

Tuesday, July 22, 2014

நீர் என்னை காண்கிற தெய்வம் !

நேற்று ரூம் இருக்கா என்று கேட்டு ஹோட்டல் நிலவரம் பற்றி அம்மிணியிடம் விசாரித்து கொண்டிருந்த ஒரு இந்தியர்...நான் எட்டி பார்த்தபோது எங்கயோ பார்த்த நியாபகம் பட்டென்று நியாபகம் வரவில்லை...
 

அவருக்கு தெரியாமல் நானும் எனக்கு தெரியாமல் அவரும் உற்று பார்த்துக் கொண்டோம், பிடி கிடைக்கவில்லை....அப்புறம் லேசா நியாபகம் வந்து போயி மெதுவா...

"மிஸ்டர் ஷா..." என்று மெல்ல அழைத்தேன்.

"எஸ் யூ....?"

"ஐயம் மனோஜ், பிஃபோர் வொர்க்கிங் ஃபால்கன் இண்டர்நேசனல் ஹோட்டல்"

"வாவ் மை காட்...மனோஜ் ஹவ் ஆர் யூ ?"

"நலம் சார் நீங்க எப்டி இருக்கீங்க எங்கே இருக்கீங்க ?"

"நான் அதே ஹோட்டலில்தான் இருக்கேன் மனோஜ், நீ இம்புட்டு உசரத்துக்கு வருவேன்னு எனக்கு முன்பே தெரியும் உன் கண்களின் பிரகாசம் அதை உணர்த்தியது உண்டு எனக்கு, காட் பிளஸ் யூ..."

காபி ஷாப்பில் போயி காப்பி குடித்தவாறே பரஸ்பரம் விசாரித்து விடை பெற்றார்.


பனிரெண்டு வருஷம் பின்னோக்கினேன்...அதாங்க பிளாஷ் பேக்...

ஃபாலகன் இன்டர் நேசனல் இரண்டு நட்சத்திர ஹோட்டல்...நாப்பது ரூம்ஸ்...ஒரு ஆங்கில டிஸ்கோ...ஒரு இந்தியன் டிஸ்கோ...ஒரு அரபி டிஸ்கோ...ஒரு பார்...காபி ஷாப் வித் ரூம் சர்வீஸ்...

அனைத்து கேரளா நடிக நடிகைகளும் கேரளா விவிஐபிகளும் வந்து போன இடம்...நான் ரூம் சர்வீஸ் வெயிட்டர்...ஷா சார் ஆல் ஹோட்டல் இன்சார்ஜ் !

தெய்வ அனுகிரகத்தால் இன்று நான் நான்கு நட்சத்திர ஹோட்டலின் இன்சார்ஜ், ஷா சார் இப்பவும் அங்கே அதே பதவியில்...!

 பதிமூன்று மணி நேரம் வேலை, லீவில்லாமல் இரண்டு வருஷம் வேலை பார்த்துட்டு லீவுக்கு ஊருக்கு போனபோது ஐந்துநாள் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கின போது கேலி செய்தனர் குடும்பத்தினர், நம்ம உழைப்பு அவங்களுக்கு எங்கே தெரியப் போகுது ஆனால் நம்மை படைத்த தெய்வம் நம் உழைப்பை காணுகிறான் !

காலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது இல்லையா !

கண்ணீரோடு என்னை படைத்தவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்...

Sunday, July 20, 2014

பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் !

காய்கறி வாங்க மார்கெட்டுக்கோ அல்லது மளிகை கடைக்கோ போனது கிடையாது, அப்பிடியே போனாலும் அம்மா கூட அல்லது வீட்டம்மா கூட டைம்பாஸ் ஆக போறது உண்டு, அவிங்க என்ன எடுக்குறாங்களோ வாங்குறாங்களோன்னு பராக்கு பார்ப்பதோடு சரி...


இடையில் நண்பர்கள் போன் வந்துச்சுன்னா ஒரே ஓட்டமா ஓடிருவேன்.


ஒருநாள் சும்மா பார் போயிட்டு திரும்பும் போது மார்கெட் களை கட்டி இருக்க, சும்மானாச்சும் ஏதாவது காய்கறி வீட்டுக்கு வாங்கி போகலாம்னு கிளம்பினேன்.


தக்காளி கிலோ 20 ரூபாய் 


வெங்காயம் கிலோ 20 ரூபாய் 


கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய் 


முருங்கைக்காய் கிலோ 40 ரூபாய் 


கோவைக்காய் கிலோ 30 ரூபாய் 


வெள்ளரிக்காய் கிலோ 35 ரூபாய் 


மிளகாய் 5 ரூபாய்க்கு மட்டும் 


உருளை கிழங்கு கிலோ 20 ரூபாய் 


வெண்டைக்காய் கிலோ 30 ரூபாய் 


இஞ்சி ஐந்து ரூபாய்க்கு மட்டும் 


எலுமிச்சை பழம் ஒன்று இரண்டு ரூபாய் 


கறிவேப்பிலை ஓசி

ஆப்பிள் கிலோ 140 ரூபாய் 


பப்பாளி பழம் ஒன்று 60 ரூபாய் 


சீத்தாப்பழம் கிலோ 80 ரூபாய் 


வாழைப்பழம் டஜன் 50 ரூபாய் 


மாம்பழம் கிலோ 80 ரூபாய் 


இம்புட்டையும் வாங்கியாச்சா...இனி ஒன்னரை கிலோ மீட்டர் நடந்தாதான் வீட்டுக்கு போகமுடியும் ஆட்டோகாரங்க பக்கத்துல என்பதால் வரமாட்டாங்க, எனக்கு இத்தனையும் தூக்கிட்டும் போக முடியாது.


சுத்து சுத்தி பார்த்தேன் யாராவது வெட்டியா இருக்கானான்னு, ஒருத்தன் அம்புட்டான், தம்பி இதை தூக்கிட்டு வந்தியன்னா அம்பது ரூபாய் தாரேன் வாறியான்னு கூப்பிட்டேனா அவனோ...


"அட போய்யா இருநூறு ரூபாய் தந்தியன்னா வாறன் அதுவும் இப்பவே தரனும்"ன்னு சொல்ல வேற வழியே இல்லாம போச்சா...


அவனை கூட்டிகிட்டே வீடு பக்கத்துல வந்ததும் அவனிடம் இருந்து எல்லாவற்றையும் பிடுங்கி நான் தலையிலும் கையிலும் வைத்து விட்டு அவனை போக சொல்ல...ஒரு மாதிரி என்னை பார்த்து விட்டு சென்றான்.


வீட்டுக்கு நான் வந்த கோலத்தை பார்த்த வீட்டம்மாவுக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம், என் மகள் ஐஈஈ என்று பைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்து பார்க்க...


வீட்டம்மா முகத்தில் வழிந்த சந்தோசம் பார்க்கணுமே அப்படியே பூரித்து போனாள், "எப்பா என்னால நம்பவே முடியல நீங்களா வாங்கிட்டு தூக்கிட்டு வந்தீங்க ?!"


சாயங்காலம் வீட்டம்மாவின் மராட்டி தோழி வீட்டுக்கு வந்தபோது "எடி எம்மாப்பிளை காய்கறி பழம்ன்னு நிறைய வாங்கி தூக்கிட்டே வந்துருக்கார் எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை" என்று இவள் சொல்ல...


"ஆங்...வாங்கிட்டு வந்தான்னு சொல்லு தூக்கிட்டு வந்தான்னு சொல்லாத கூட ஒரு ஆளு சுமந்துகிட்டு வந்தான்" [[பலமாத்தான் வாட்ச் பண்ணுறாங்க போல]]
அப்புறமென்ன வாயிலேயே அடி விழுந்துச்சு, "அய்யோ இனி மார்கெட்டுக்கு நான் தனியா போகணுமே"ன்னு மராட்டிகாரி புலம்பிகிட்டே போனாள்.


இப்போவெல்லாம் ஊருக்கு போனால் ஆர்டர் வந்துரும் அத்தான் இன்னிக்கு இது இல்லை அது இல்லைன்னு வாங்கிட்டு வர சொல்லிருவாங்க, நமக்கும் ஒரு வகையில வசதியா போச்சு, பின்னே அந்த கேப்ல ஸ்மல் இல்லாத சரக்கா சாத்திட்டு வந்துருவொம்ல்ல, எங்கே போனேன்னு கேக்க முடியாதே.


இந்த தடவை ஊருக்கு [[கன்னியாகுமரி]] போன போது இதே போல அம்மாவுக்கு காய்கறி வாங்கிப் போனேன் [[முதல் தடவை]] அம்மாவுக்கு கண்ணுல நீரா கொட்டிருச்சு "எலேய் மக்ளே தம்பி....... நீயாலேய் வாங்கிட்டு வந்தே"ன்னு ஆர்வமா பைகளை பிரிச்சு ஆச்சர்யமாக பார்த்தாங்க...


சிம்பிளான சில சந்தோஷங்களை அவர்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம் என்ற உண்மை அப்படியே முகத்தில் அறைந்து விட்டது !

Tuesday, June 24, 2014

பத்து கேள்வியும் ஈசியா இருக்கே பரிசில் கிடைக்குமா ?

பத்து கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லுங்க இல்லைன்னா கனவுல வந்து கண்ணை குத்திருவேன்னு ஏஞ்சல் மேடம் சொன்னதால, உண்மையாவே கனவுல வந்துறப்பிடாதே அதான் உடனே பதில் சொல்லிட்டேன்.


1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?


கலைஞர் போல [[அவரது குணமல்ல குடும்பம்]] கொண்டாடுவேன்.

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
கப்பல், ரயில் மற்றும் விமானம்...... ஹி ஹி......சரி விடுங்க...கிட்டார் இசை மற்றும் டிரம்ஸ் அப்புறம் பெண்களின் மனசு !

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

பெண்களுடன் பணி புரிவதால் சிரிப்புக்கு பஞ்சமில்லை, எனக்கு சிரிப்பு வந்தால் இழவு வீட்டுலேயும் சிரிச்சு தொலைச்சிருவேன், சீரியஸான இடங்களுக்கு போனால் ஒன்று என் அக்காள் என் கூட இருந்து கவனிச்சுப்பாங்க, இல்லைன்னா வீட்டம்மா.

சிரிச்சு செமையா வாங்கி கட்டியிருக்கேன் !

விழுந்து விழுந்து சிரிச்சதுன்னா நம்ம விஜயன் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டது, அதாவது....

மலேசிய அரசாங்கம் புதுசா ஒரு ரூல்ஸ் கொண்டு வந்துருக்காம் "முஸ்லீம் அல்லாதோர் அல்லா என்று சொல்ல கூடாதாம்" அதுக்கு விஜயன் பதில்..."செத்தாண்டா மலையாளிகள்" என்று...ஏன்னா ஒரு நாளைக்கு எந்த மலையாளியாக இருந்தாலும் சராசரி நூறு தடவையாவது அல்லா [[இல்லை]] என்ற வார்த்தையை பிரயோகிப்பார்கள்...

மலேசியாவின் தண்டனை தெரியும்தானே ?


4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?


இங்கே [[பஹ்ரைன் மற்றும் மும்பை]] பவர்கட் இருப்பது இல்லை அப்படியே ஊரில் இருந்தாலும் வெளியே காற்று வாங்க மற்றும் தோப்பு காட்டில் சிறிய வேலைகள் செய்துவிட்டு லேஸா மப்பும் ஏத்திகிட்டு வர வேண்டும்.


5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 


ஆஆ...முப்பத்தி ஒன்பதுதானே தாண்டியிருக்கு அவ்வ்வ்வ்....
என்னைப்போல நாடோடியாக வாழாதீர்கள், அருகில் தாய் தந்தை ஆதரவும் அன்பும், மனைவி பிள்ளைகளின் அன்பு இல்லாமல் அப்பா வாழ்ந்து விட்டேன் [[இருக்கிறேன்]] நீங்கள் அப்படி இல்லாமல் சேர்ந்தே வாழுங்கள்.


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?


ஏழ்மை மற்றும் நோய்கள் !


7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பலரிடமும் கேட்பதுண்டு அதில் என் மனதை அசைத்த ஒரு அட்வைஸ் விஜயன் மற்றும் நம்ம ஆபீசரும் சொன்னது, "மனோ எப்போதும் ஒருப்போல இருக்காது நாலு காசு சேர்த்து வைக்கனும் நமக்கு வயசாகிட்டு இருக்கு என்பதை நினைவு கொள்ள வேண்டும்" என்றதுதான், உஷாரா இருக்கேன் ஆண்டவர் கிருபையில்...!


8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

கேள்வியே இல்லை தூக்கிப்போட்டு மிதிதான்...[[பயந்துராதீக]]


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

இதில் சொல்வதற்கு என்ன இருக்கு ? நண்பனுக்கு நண்பனின் மனசு நன்றாகவே தெரியும் கட்டிபிடிக்கும் பொது ஆறுதலாக உணர்வான்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

சத்தம் காட்டாமல் நண்பர்களுக்கு போன் போட்டு வர செய்து பாட்டல் பற பற...சாப்பாடு நற நற...அப்புறம் வீட்டம்மா வந்து தர தர அவ்வ்வ்வ்....

தொடர ஆசைப்படுபவர்கள் தொடரலாம்.

Monday, June 16, 2014

நம்மை ரசிக்கும் ரசனை மிகுந்த சில ரசிக நண்பர்கள் !


ஆயிரம் தினார் [[ஒன்னரை லட்சம் ரூபாய்]] நஷ்ட ஈடு கிடைத்திருக்கிறது பாகிஸ்தான் நண்பனுக்கு, இன்னும் கூடுதல் கிடைக்க வாய்ப்பு இருந்தும் ஒரு அரபி நம்மளை இளக்காரமாக பார்த்து இது போதும் என்றே பேச்சை நிப்பாட்டினான் !

நான் மூவாயிரம் தினார் எதிர் பார்த்தேன் !

சென்ற பதிவின் தொடர்ச்சி.
---------------------------------------------------------------------------------------------------




ஞா ங இப்பவும் எழுத தெரியாத நண்பன், படிக்கும்போது மிரட்டலோடு என் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பான், நான்தான் எழுதி கொடுப்பேன்....மக்குன்னா மக்கு அப்பிடி ஒரு மக்கு, சாப்பாடுன்னா அடிச்சிபிடிச்சு சாப்புடுவான், மொத்த வாத்தியார்களும் தங்கள் தங்கள் வீட்டு கோபத்தை தாங்கிய உடம்பு !

இவன் உருப்படமாட்டான்னு எழுதியே வச்சிட்டோம் ?

இப்போ அவன் எங்க ஊருக்கு ஹீரோ !

ஆம் அவன் மனைவி எங்க ஊருக்கு வார்டு மெம்பர் !

இந்த தடவை லீவுக்கு ஊருக்கு வந்த பொது, அம்மாவுக்கு சீனி, அரிசி [[நல்ல அரிசி]] வாங்கி குடுக்க நானும் ராஜகுமாரும் ரேஷன் கடைக்கு போனபோது அவன் அங்கே நின்று ரேஷன் கடை ஆளை பார்த்து சொன்னான் "அண்ணே இவன் என் பால்ய சிநேகிதன் பார்த்து போடுங்க" அவ்வ்வ்வ்....

அவன் மனைவியை இன்னும் நான் பார்க்க வில்லை [[என்னை தெரியும் என்று ராஜகுமாரிடம் சொன்னாளாம் கூடுதல் விசாரிக்க வில்லை [[மூன்றே நாள்தான் ஊரில் இருந்தேன்]] அடுத்தமுறை போயி பார்த்தே ஆகவேண்டும்]]

பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும், அழகாக இவனை செதுக்கி இருக்கிறாள் !

சில பெண்மை அழகில்லாத ஆண்மையை அழகாக்கி விடுகிறதை நிறைய இடங்களில் காண்கிறேன், மனைவியாக மட்டும் இல்லை தோழி, மற்றும் அக்காள் தங்கைகள்...!

[[ஆஆ...அதுக்குள்ளே ரெண்டு வருஷம் ஆகிருச்சா ? ஆபீசர், சுதன் மற்றும் நான், மலரும் நினைவுகள்...!]]

சில ஆண்களும்...ஒரு முறை ஊருக்கு போயி விஜயனை பார்த்துவிட்டு பக்கத்தில் துணிக்கடையில் வேலை செய்யும் நண்பனையும் பார்க்க போனபோது, எனக்காக ரெண்டு சட்டை செலக்ட் செய்து தந்தார் விஜயன்.

அத்தான் ஆஹா சூப்பர் செலக்ஷன் என்று சொல்ல, இது விஜயன் செலக்ஷன் என்று சொன்னேன் "அதானே பார்த்தேன்"னு உறுமிகிட்டு போச்சு சீவலப்பேரி...

சரி பஹ்ரைன் வரை இந்த ரெண்டு சட்டயும் வருமான்னு சந்தேகமா இருந்துச்சு என் மகன் பார்த்த பார்வையில்...

வெளிநாடு வந்துதான் கவனித்தேன் அந்த ரெண்டு சட்டையும் மிஸ்ஸிங் அவ்வ்வ்வ்....

[[அந்த ஒரு சட்டை]]\

ஒரு சட்டை என் குடும்பமும் விஜயன் குடும்பமும் பத்மநாதபுரம் அரண்மனை மற்றும் திற்பரப்பு அருவிக்கு போகும் போது போட்டுருப்பேன் பதிவு போட்டுருக்கேன், இன்னொன்னு நம்ம ஆபீசர் மகள் பிருந்தா கல்யாணம் அன்று காலையில் போட்டிருப்பேன் !

[[ஆபீசர் மகள் கல்யாண நாள் அன்று கல்யாண மண்டபத்துக்கு வெளியே வேடந்தாங்கல் கருண் நான் சிபி அண்ணன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், அந்த இன்னொரு சட்டை]]

எல்லாரும் பாராட்டிய செலக்ஷன், இனி ஊர் போனால் விஜயனைதான் தூக்கிட்டு போகணும் துணி வாங்க, என்னையே அழகாக போட்டோ எடுத்து மிகவும் சொல்லி ரசிப்பார் நண்பர்களிடம்...!

Tuesday, June 10, 2014

வன்மமே உனக்கு ஒரு வன்மம் வராதா ?

உண்மையாக மனசுக்கு பட்டதை ஓப்பனாக சொல்வது என்னுடைய மனசு, அதனாலேயே பல துன்பங்களையும் அனுபவிச்சிருக்கேன், உதாரணம் மும்பையில் ஒரு தாதாவை வாய் நாறுதுன்னு சொன்னதில் இருந்து என்ன நடந்திருக்கும்னு உங்க யூகத்துக்கே விட்டுருதேன்...

பாகிஸ்தான்....

தொன்னூறு சதவீதம் இந்தியர்கள் வெறுக்கும் ஒரு நாடு...

 அந்த நாட்டின் வரலாறு என்ன ?

அவர்கள் யார் ?

அவர்கள் தம் அன்பு என்ன அவர்கள் தம் பண்பு என்ன ?

கலாச்சாரம் ? மனம் கொண்டது மாளிகை அதற்குள் போவது மனிதம் இல்லை..!

நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது என்ன அவர்களைப் பற்றி ?
வரலாறு பாடத்தில் நம் தலைமுறைகளுக்கு என்ன சொல்லப்படுகிறது ?
அசோகர் ரோட்டுல மரம் நட்டார்ன்னு தெரியும், எதுக்கு நட்டார்ன்னு தெரியாது, அசோகர் சக்கரவர்த்தின்னு தெரியும், எதுக்கு சக்கரவர்த்தின்னு தெரியாது ! அவர் எந்த நாடு முதல் எந்த நாடு வரை ஆண்டார்ன்னு உங்க பிள்ளைங்ககிட்டே கேளுங்க ?

எனக்கு பாகிஸ்தான் நண்பர்களை ரொம்ப பிடிக்கும், என்ன பந்தமோ புரியலை என்னை பார்த்ததும் அவர்களுக்கும் பிடித்து விடும், என் கூட மலையாளி தமிழ் மற்றும் இந்திய நண்பர்கள் இருந்தால் பாகிஸ்தானியை கண்டதும் சைடில் ஒதுங்குவது உண்டு, அவன் அவர்களை மைண்ட் செய்யாமல் என்னை வந்து கட்டி பிடிப்பதும்  உண்டு...!

"மும்பைல பாம் வச்சா முதல்ல எனக்கு சொல்லிருய்யா ஏர்போர்ட் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை தாண்டிதான் என் பிள்ளைங்க ஸ்கூல் போகணும்" என்று நான் ஜாலியாக சொல்வதை ஏற்று சிரிக்கும் பாகிஸ்தானி நண்பர்கள், மற்ற இந்தியர்கள் இப்படி சொன்னால் அடி நிச்சயம் !

 பாகிஸ்தான் ஆண்கள் மட்டுமில்ல....பத்து வருஷம் முன்னாடி பாகிஸ்தான் முஜ்ரா என்னப்படும் நடன அழகி ஷக்கீனா என் உயிர் தோழியாக இருந்தாள், அன்புன்னா அப்பிடி ஒரு அன்பு, மனோஜ் என்று பெயரை உச்சரிக்கும் போதே உருகி விடுவாள் !

சரி அதெல்லாம் போகட்டும் விஷயத்திற்கு வருவோம்.....

முந்தாநாத்து நான் டியூட்டியில இல்லை, எங்க ஸ்டாஃப் எல்லார்கிட்டேயும் டேமேஜர் சொல்வது...... கெஸ்ட் இஸ் ஆல் வேய்ஸ் ரைட்.....நான் சொல்வது...லெப்ட்டு ரைட்டு பார்த்து நட...அடிச்சம்ன்னா திருப்பி அடி, அடி வாங்கிட்டு என் முன்னாடி வராதே குடுத்துட்டு வான்னு சொல்றது நம்ம நாட்டாமை மனசு...!

செக்கியூரிட்டி பாகிஸ்தானி, மூனாவது மாடி டிஸ்கோவில் களவாண்ட ஒரு அரபியை லிஃப்டில் போட்டு சாத்த...லிஃப்ட் கீழே வரவும், ரிஷப்சனில் அடி நடக்க...அரபிக்கு நல்லா அடி குடுத்துருக்கான்...[[கேமராவில் பார்த்தேன்]]
பரஸ்பரம் அடி...

அப்பிடியே விட்டாலும் ஓகே....இதுலதான் நம்ம ஆளு ரெண்டுபேர் உள்ளே புகுந்தது, அதுவும் மலையாளி...... சொல்லவா வேணும் ? இன்னும் மற்ற அரபி செக்கியூரிட்டிகள், பற்றி கூலராக மலையாளிகள்...... செய்ததை கேமராவில் பார்த்து ஆடிப்போனேன்...!

சண்டை என்பது யாதெனில்...

நண்பன் தப்பே செய்திருந்தாலும் அவனை அடித்தவனை ஏன்னு கேக்காமல் அடித்து நொறுக்குவது என் நண்பர்கள் பாலிஸி...! அதே போல வேலை செய்யும் இடத்திலும் அந்நியன் தாக்கும் போது அவனை தூக்கிப்போட்டு மிதிப்பது தப்பில்லை ஆனால்...

 இந்த இரண்டு மலையாளி நண்பர்களும் செய்தது என்ன தெரியுமா ?
பாகிஸ்தான் நண்பனை கட்டியாக பிடித்து வைத்து அரபிக்கு முன்பாக நிப்பாட்ட....பீஸ் பீஸ் ஆகிவிட்டான், மூக்கில் நாலஞ்சி குத்து பொன்னாசி உடைந்து மூக்கு பெயர்ந்து போனது, ரத்தம் வந்தபின்தான் இவர்கள் பிடியை விட்டார்கள்...!

பத்தே நிமிஷத்தில் நடந்து முடிந்து போலீஸ் கேஸும் ஆகிவிட...அரபி இப்போ ஜெயிலில்...

அடுத்தநாள் நான் டியூட்டிக்கு வரும்போது என் முன்னிலையில் இவர்கள் பேசினார்கள்..."அவனே கொறச்சி கூடுதலா இருன்னு, பிடிச்சி கொடுத்தல்லே மோனே...அவன்ற அடப்பு தெற்றி போயல்லோ ஹா ஹா ஹா ஹா..." [[அவனுக்கு ரொம்ப அகங்காரம் அதான் பிடிச்சி குடுத்தொம்ல கொய்யால]]

 எனக்குள் இருந்த மிருகம் வெளியே..."ப்ப்ப் எர்க்வெஹ்வ்ர்ஹ் ஜ்ர்க்ர்க் உஎஜெர்ஹ்ஜ்ர் இஈஹ்ஜெர் ஜவே உவ்வ் உஈரெர்ஜ்ட் ஈஜ்ட்ட்ஜ்ஜ்ற்ற்...."

இதோ இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இப்பவரை அவனுகளை காணவே இல்லை !

ரெண்டுநாள் லீவு முடிந்து [[ட்ரீட்மென்ட்]] என்னிடத்தில் வந்தவன் சொன்னது, "பரஸ்பரம் சண்டை வந்தால் ஒருத்தன் அவனை பிடிக்க வேண்டும் இன்னொருத்தன் என்னை பிடிக்க வேண்டும், இவனுக ரெண்டு பேரும் சண்டை என்னும் பெயரில் என்னை பிடித்து அவனுக்கு வாய்ப்பு கொடுத்ததின் நோக்கமென்ன மனோஜ் ?" [[என்னிடத்தில் பதில் இல்லை]]

 இப்படியும் வன்மமா...? தன் ஜென்ம சுபாவத்தை சில இடங்களில் காட்டும் சில மலையாளிகளை நான் மன்னிப்பதே இல்லை !

இனி மறுபடியும் முதல்லே இருந்து படியுங்க....

இப்போ அரபி ஜெயில்ல ஒன்னு களவு கேஸ் ரெண்டு இவன் மூக்கில் குத்திய கேஸ், சவூதி எம்பஸி பேச்சு வார்த்தைக்கு வந்தாலும் [[பணம்தான்]] நான் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை காரணம் அடுத்த வாரம் அவனுக்கு மூக்கில் ஆபரேஷன் இருக்கு.

காசு கிடைத்தால் எங்களுக்கும் பங்கு வேண்டும், என்று இப்பவே மலையாளிகள்  ரெண்டு பேரும்  கொடி பிடிக்க..."மனோஜ் நல்ல டீல்ல பணம் வந்துச்சுன்னா பாதி நீ எடுத்துக்கோ ஓகே ?"

"நீ ரத்தம் சிந்திய காசு எனக்கு எதுக்குடா ? என் பிள்ளைங்களுக்கு அது சாபமாக மாறிவிடும் வேண்டாம்" என்றேன்

"அப்போ இவனுக ? "

என்னிடம் பதிலில்ல, தெரிஞ்சா சொல்லுங்க....

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!