Sunday, May 13, 2012

வாசம் வீசிய வசந்த விழாவில் பதிவர்கள் அட்டகாசம்...!!!

ஆபிசரின் வீட்டு கல்யாண விழாவில் பதிவர்களின் சந்தோஷங்களை அழகாக போட்டோ எடுத்து தள்ளிவிட்டார் வீடியோ கிராபர் விஜயன், இன்று அவர் எடுத்த படங்களும் எனக்கு தோன்றிய காமெடி கும்மி கமெண்டுகளும் சந்தோஷமா பாருங்க.....!!!


நம் பதிவர்கள் எல்லார் பெயரும் உங்களுக்கு தெரியும் என்பதால் ஜாலியாக கலாயித்து இருக்கேன் ஹி ஹி....


 நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்.....

 மாப்பிளை மாப்பிளை என்னையும் சென்னைக்கு கூட்டிட்டு போயி சுத்தி காட்டுங்க, அங்கே எனக்கு பலரையும் தெரியும், அவங்க நம்மளை கோவிலுக்கு எல்லாம் கூட்டிட்டு போவாங்க...

 கூட்டத்துல எவம்லேய் அது உத்து பாக்குறது எனக்கு பல பல அரசியல்வாதிகளையும் நல்லாவே தெரியும் என்பது இப்பவாவது புரிஞ்சாலெய் - ஆபீசர்.

 வாங்க வாங்க வரிசையா எவ்வளவு அழகா போஸ் குடுத்துட்டு இருக்காங்க அவங்க முகத்தை எடுக்காத போட்டோ கிராபர் ஒழிக [[499]]

 கவுசல்யா : ஜோதி அத்தான் ஜோதி அத்தான் பிடிங்க பிடிங்க இவர்தான் ஆபீசர் அண்ணாவையும் மனோ'வையும் நடு ராத்திரி போன் போட்டு டார்ச்சர் குடுக்குற ஆளு.....

கருண் : ஆஹா.............அடி பலமா விழும் போல இருக்கே டேய் சவுந்தர் ஓடுறதுக்கு வாசல் ஜன்னல் எல்லாம் எங்கே இருக்குன்னு பாருடா....

 நக்ஸ் : சத்தியமா ராத்திரி போன் பண்ணினது நான் இல்லீங்க என்னை விட்டுருங்க, ஆனால் என்கிட்டே ஐம்பது சிம் கார்டு இருக்கு அதை மாத்தி மாத்தி போட்டு பேசுவேன்னு நான் யாருகிட்டேயும் சொல்லலீங்கோ..

சிபி : ச்சே இப்பிடி கால்ல விழுந்து என்னை மாதிரியே தப்பிச்சிட்டாரே...

கருண் : நல்லவேளை அடி விழலை ஸ்ஸ்ஸ் அபா....

 துபாய் ராஜா : ச்சே மனோ அண்ணன் ரொம்ப டெரரா அருவாளோட இருப்பார்னு நினைச்சா இம்புட்டு சாப்டா இருக்காரே ஒரு வேளை மிருகம் உள்ளே தூங்கிகிட்டு இருக்குமோ ம்ம்ம்ம் ஆபீசருகிட்டே ரகசியமா கேட்டுரவேண்டியதுதான்.

 சிபி : அய்யய்யோ பிள்ளை பிடிக்கிறவன் வந்துருக்கான் ஒடுங்க ஒடுங்க.....

மனோ : டேய் காத்தாதேடா ராஸ்கல் அது என் பொண்ணுதான்.

 சிபி : ச்சே கேமரா காலை வாரிப்புடுச்சே கொய்யால..

 கருண் : ஆஹா நானாத்தான் நெல்லைக்கு வசமா வந்து மாட்டிகிட்டேனா போலீஸ்'காரன் சவுந்தர் கூட இருக்கான்னு தைரியமா வந்தேனே அந்த பயபுள்ளை திகிலடிச்சாப்புல நிக்குறானே...

 சிபி : தைரியம் இருந்தா என் தம்பி மேல கை வையுங்கடா பார்ப்போம்..

மனோ : ஆமா ஆமா வாங்கலேய் தைரியம் இருந்தா எங்க அண்ணன் மேல கை வையுங்கலேய் பார்ப்போம்.

 வெடிவால்'வடிவேல் : ச்சே செத்த சும்மா இருங்கப்பா நானும் வந்துட்டேம்ல....

 சிபி : அண்ணன் வாரார் பராக் பராக் பராக் ஏலேய் வழி விடுங்கலேய் பராக் பராக் பராக்....

 ஜோதிராஜ் : எலேய் எவம்லேய் என்னை இம்புட்டு கருப்பா போட்டோ எடுத்தது, நான் மனோ'வை விடவும் வெள்ளை தெரியுமா இரு இரு நெல்லை பக்கம் வறாமலையா இருக்கப்போறே அன்னைக்கு இருக்குலேய் உனக்கு வெள்ளாவி...

 சிபி : ஹலோ யாரு நான் நான்தாம்டா நீ யாரு...? என்னாது சண்முகபாண்டி அருவாளோட வந்துட்டு இருக்கானா..? யாரு மனோ ஸ்கெட்ச் போட்டு கொடுத்தானா ஆஹா விக்கி பணம் கொடுத்தானா...? ஆஹா செய்யுறதையும் செஞ்சிபுட்டு எப்பிடி நழுவுறான் பாரு மனோ மூஞ்சியை பாருங்கய்யா அப்பாவியா நடிக்கிறான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

 என்னையெல்லாம் எதுக்குன்னே போட்டோ எடுக்குறிங்க கொலைவெறியோட ஒரு கும்பல் என்னை துரத்திகிட்டு இருக்குறது உங்களுக்கு தெரியுமா...?


 யோவ் எதுக்குய்யா எல்லா போட்டோவிலையும் முக்கிகிட்டே நிக்குற மசல் விடுய்யா........?

 ராஜா : இம்புட்டு வளத்தியா நிக்குறவன் கூட எதுக்குய்யா போட்டோ எடுக்குறீங்க முதல்ல சிபி'யை கீழே உக்கார சொல்லுங்க....

 அய் சுரேஷ் சிரிச்சுட்டார்....!

 சம்பத் : ஆஹா கியூ'ல நிப்பாட்டி வச்சிருக்காங்களே அடிப்பாயிங்களோ...?

 பிரகாஷ் : ஈஈஈஈஈஈ சிரிச்சுட்டேன் போதுமா...?

சம்பத் : ஹா ஹா ஹா ஹா நானும் சிரிச்சுட்டேன் போதுமா..?

சிபி : நானும் சிரிக்கப் போறேன்...

மனோ : அய்யய்யோ ஒடுங்கலேய் ஒடுங்கலேய்...

 சுரேஷ் : ஆஹா மனோ அண்ணாச்சியை திவானந்தா அரெஸ்ட் பண்ணிட்டாரு அய் ஜாலி ஜாலி இனி பிரியா ச்சே ஃபிரியா போட்டோ எடுக்கலாம்...

 திவானந்தா : எலேய் இங்கிட்டு நிக்குரவிய எல்லாரும் நம்ம ஆளுங்கதான் நல்லா சாப்பாடு போட்டு அனுப்புங்க [[சைகை காட்டுகிறார்]]

 யோவ் நக்ஸ் அண்ணே முகத்தை இங்கிட்டு திருப்பும்ய்யா....

 ஆஹா அப்பாவை ஆபீசர் அடிப்பாரோ........[[என் மச்சினன் குடும்பம்]]

 சவுந்தர் : அப்பாடா இதை குடுத்தா கண்டிப்பா ஆபீசர் பெல்ட்டுக்கு தப்பிச்சிரலாம், ஆமா என் பின்னாடி யாருய்யா என்னை உரசிகிட்டே நிக்குறது...?

 சிபி : டேய் சவுந்தர் எவ்வளவு நேரம்ய்யா போஸ் குடுப்பீங்க நீயும் கருனும், இடத்தை காலி பண்ணுங்கய்யா நானும் நானும் போஸ் குடுக்கணும்.


 ஆபீசர் : இவன்தான் மாப்பிளை காப்பி பேஸ்ட் பண்ணும கில்லாடி தகர டப்பா, ரெண்டு பேர் இவனை அடிச்சி காய்ச்சி தொங்க விட்டுட்டு இருக்கானுக உங்களுக்கு எப்பல்லாம் யாரையும் அடிக்கணும்னு தோணுதோ அப்ப சொல்லுங்க இவனை அனுப்பி வைக்கிறேன் அடிச்சி அடிச்சி விளையாடுங்க.....

மாப்பிளை : ஆஹா எங்க மாமான்னா சும்மாவா, மாமா மாமா இப்பவே இவனை எனக்கு அடிக்கணும் போல இருக்கே...

சிபி : அடப்பாவமே குடும்பமா சேர்ந்து அடிச்சிருவாங்களோ.....

 கருண் : டேய் ஆபீசர் பெல்டை உருவியாச்சு...

சம்பத் : ஆமாய்யா கவனிச்சிதான் இப்பிடி ஓடிட்டு இருக்கேன்.

பிரகாஷ் : ஆஹா அடி பலமா விழுமோ...?

சுரேஷ் : யோசனையாக' ச்சே மனோ அண்ணாச்சி அப்பவே சொன்னாங்களே தெரியாம வந்து மாட்டிக்கிட்டேனே...

 எங்கள் [[நம்ம]] குடும்பம்....!!!

 சம்பத் : எல்லாரும் அடி வாங்கியாச்சா இதுல போட்டோ வேறயா நான் முகத்தை காட்டமாட்டேனே...

 சிபி கேமராவில் போட்டோ எடுக்கும் விஜயன், கலவரமாக சம்பத்.

 ஆஹா அநியாயத்துக்கு சிபி வெள்ளையா இருக்கானே...

 நக்ஸ் : ஆபீசர் ஆபீசர் எங்களை அடிக்கனும்னா தனியா ரூமுக்குள்ளே கூட்டிட்டு போயி அடிங்க நாலுபேர் முன்னாடி அடிச்சிராதீங்க...


 பிரகாஷ் : ஏய் ஏய் பிடி பிடி மனோ அண்ணன் அடிவாங்காம தப்பிச்சு ஒடுறாரு...

ஆபீசர் : தம்பி நீ என் பக்கத்துல வந்து நில்லு சின்னபிள்ளைங்களை நான் ஒன்னும் செய்யமாட்டேன்.

 நக்ஸ் : ஆபீசர் நீங்க வாங்கி தந்தது பத்தாது இன்னும் வேணும் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணுங்க...

சுரேஷ் : எந்த இடத்துல வந்து என்ன கேக்குறதுன்னு தெரியாம கேட்டு நமக்கும் சேர்த்து அடிவாங்கி தர முடிவு பண்ணிட்டாரே நாய்நக்ஸ்...


 ஆபீசர் : எவ்ளோ வேணாலும் வாங்கி தாரேன் சாப்பிடுங்க போதுமா...

 சிபி : போய்யா போ சீக்கிரம் அருவா எடுக்க ஒருத்தன் ரூமுக்குள்ளே ஓடிட்டு இருக்கான்.

 அண்ணே எதுக்கு அண்ணே இப்பிடி தள்ளாடுறீங்க.

 ஏய் ஏய் ஐயாம் ஸ்டெடி.....

 ஜோசபின் மற்றும் அவர் பையனுடன் சிபி, நக்ஸ்.


 ஹா ஹா ஹா ஹா நாங்க அடியும் வாங்கிட்டு வாங்காதது போல சிரிப்போமே சிரிப்போமே...

 விஜயன் : பின்னாடி மனோ நிக்குறாரு அவருக்கு தெரியாம ஒரு போட்டோ எடுத்துருவோம்.

 மனோ : என்னாது உமன் காலேஜ் பக்கத்துல விஜயன் பைக்கை அடிக்கடி பார்க் பண்ணுறாரா...? இருங்க ஆபீசருகிட்டே போட்டு குடுக்குறேன். [[விஜயன் குடும்பமும் என் குடும்பமும்]]

 விஜயன் குழந்தை மோனிஷா, அர்ஜூன், என் குழந்தை ஜோய், மோசஸ்..

 பிரபு கிருஷ்ணா : அக்கா அக்கா மரக்கன்று கொடுப்பதோடு நிறுத்தாமல் இனி மாமா'கிட்டே சொல்லி ஆயிரம் கேஸ் சிலிண்டரும் இலவசமா குடுப்போமா அக்கா...

 பிரபு கிருஷ்ணா : ஒரு ஆளுக்கு ஒரு மரக்கன்றுதான் தருவோம், தகராறு பண்ணாதீங்க அப்புறம் எங்க ஜோதிராஜ் மாமா'வை கூப்புட்டுருவேன் ஆமா...

 மரக்கன்று கொடுப்பதில் பிஸி...

 பிரபு கிருஷ்ணாவுடன் விஜயன்.


 ஆல்பர்ட் : ச்சே எம்புட்டுதான் நானும் மேக்கப் போட்டு பாக்குறேன் மச்சான் மாதிரி வெள்ளையா போட்டோவே வரமாட்டேங்குதே....?

 என்னல்லாமோ தாறதா சொல்லிட்டு இப்பிடி சின்ன ஐஸ்கிரீமை கொடுத்து என்னை அமுல்பேபி ஆக்கிட்டாங்களே...

பந்தியிருப்போர்......


டிஸ்கி : படங்களுக்கு மிக்க நன்றி விஜயனுக்கு....!!!

20 comments:

  1. மறுபடியும் நிகழ்ச்சிகளை மனத்திரையில் கொண்டு வந்த பதிவு!

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா. என்னது ஆயிரம் காஸ் சிலிண்டர் தருவதா?

    அருமையான சந்திப்பாக அமைந்தது அண்ணா. உங்களை எல்லாம் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. நிறைய பதிவர்களைப் பார்த்ததில் மிக்க சந்தோசம்.உங்கள் நையாண்டியும் சூப்பர்.

    ReplyDelete
  4. மனோ நீ சத்தியமா உறுப்பிடமட்டே......

    உன் ப்லோக்குக்கு தீயை வைக்க....

    போடோவா போட்டு கொல்லுறியே......

    ReplyDelete
  5. என்ன மக்கா ஒரே படமாகீது.....பதிவரா இருக்காங்க.....நையாண்டி.. தூக்கல்.

    நடத்து மக்கா நடத்து..... ம்ம்

    ReplyDelete
  6. மனோ தம்பி...அசத்திட்டீங்க....நீங்க நல்லா வருவீங்க...தம்பி!

    ReplyDelete
  7. உன் ப்லோக்குக்கு தீயை வைக்க....

    போடோவா போட்டு கொல்லுறியே.//

    hahaha..

    ReplyDelete
  8. அண்ணனை அப்படி எல்லாம் திட்டாதீங்க
    போட்டோ கட்டுரை போடும் மனோ அண்ணன்
    வாழ்க

    ReplyDelete
  9. மனோ! கமெண்ட் சூப்பர்! நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க அடிச்சு ஆடுங்க.....!

    ReplyDelete
  10. போட்டோவுக்கு வார்த்தைகளால் உயிர்கொடுத்த தலைவர் மனோ வாழ்க ..!

    ReplyDelete
  11. மக்கா.... போடோஸ் அசத்தல்...

    உங்க கமென்ட் நச்...

    ReplyDelete
  12. மக்கா மகிழ்ச்சியான தருணங்கள்.. நன்றி..

    ReplyDelete
  13. நிகழ்ச்சி நன்றே நடைபெறவேண்டுமென்ற பரபரப்பில் அன்று இருந்த நான், இன்று படங்களையும், அதற்கேற்ற கமெண்ட்களையும் பார்த்து ரசித்தேன். பதிவர்களை விழாவில் பார்த்த நிறைவு இன்றடைந்தேன். நன்றி மனோ.

    ReplyDelete
  14. //சிபி : அய்யய்யோ பிள்ளை பிடிக்கிறவன் வந்துருக்கான் ஒடுங்க ஒடுங்க.....

    மனோ : டேய் காத்தாதேடா ராஸ்கல் அது என் பொண்ணுதான்.//
    மனோ, பொண்ணு உங்க பொண்ணுதான், ஆனா பிள்ளை பிடிக்கறவன் கையில மாட்டி, காப்பாத்துங்க, காப்பாதுங்கன்னு அபயக்குரல் கொடுப்பது கேட்குதே.

    ReplyDelete
  15. கமெண்ட்கள் நச்னு இருக்கு..... சிபி+உங்களுக்கும் கறுப்பு கண்ணாடி மிஸ்ஸிங்...

    ReplyDelete
  16. சரியாக ஒரு நாள் வித்தியாசத்தால் என்னால் இந்த நன்னாளில்
    எல்லோருடனும் கலந்துகொள்ள முடியாது போனது நண்பரே...
    படங்களை பார்க்கவே மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது
    வாழ்க மணமக்கள்...

    ReplyDelete
  17. போட்டோஸ் மற்றும் அதற்கான கருத்துக்களும் அருமை.

    ReplyDelete
  18. படங்கள் அனைத்தும் கலக்கல் !

    ReplyDelete
  19. அன்பின் சங்கரலிங்கம் - திருமணம் நடந்த நாளன்று சிங்கப்பூரில் இருந்தோம். அதனால் கலந்து கொள்ள இயல்வில்லை - பிறகொரு சந்தர்ப்பத்தில் நெல்லை வரலாமென்றிருந்தோம் - வாய்ப்பு கிடைக்க வில்லை. படங்கள் வெளியிட்டு ஓராண்டிற்குப் பின்னர்தான் இப்பக்கம் வருகிறேன். படங்கள் எடுத்த விஜயன் - கருத்து (????) கூறிய மனோ - தங்கள் குடும்பத்தார் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. அன்பின் மனோ - இன்றைய வலைச்சர அறிமுகம் வாயிலாக இங்கு வந்தேன். அடுத்து என்ன நிகழ்வு நெல்லையில் ??? எப்பொழுது சந்திக்கலாம் அனைத்து நண்பர்களையும் .... மதுரைப்பக்கம் வரும் வாய்ப்பு உள்ளதா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!