Sunday, November 11, 2012

நடு தண்டவாளத்துல கிடத்தி வச்சிட்டு சிரிக்க சொல்றாயிங்க...!

@சற்றே குளிர்ந்தாலும் உறைந்தால் அதுவே உண்மையான தேங்காய் எண்ணெய்...!

@வித விதமான பட்ஷனங்கள் இருந்தாலும், மனமிருந்தால் மட்டுமே சாப்பிடமுடியும்...!

@கோழிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.

@இந்தியர்களின் பெருமான்மையையும் ஒற்றுமையையும் பிரிடிஷாருக்கு காட்டவே, திலகர் கணபதி தினத்தை பெரும் விழாவாக அறிமுகப்படுத்தினார்...!

@எம்புட்டுதான் மனசு கஷ்டத்தில் இருந்தாலும், அவ்வேளைகளில் சிலரின் நடைமுறைகளையும் அவர்களின் டென்ஷன்களையும் பார்க்கும்போது மனம்விட்டு சிரித்து விடுகிறேன், இது எனக்கு மட்டுமா இல்லை உங்களுக்கும் இப்பிடித்தானா...?
@நம்ம ஹோட்டல் சாப்பாட்டில் கைவைத்துவிடாதே ராஜா, இதோ நான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் பழங்களை சாப்பிடு வயிற்றுக்கு நல்லது, என்று சொல்லும் உடன்வேலைப் பெண்களின் அன்பு சிலவேளை அம்மாவின் நியாபகத்தை நினைவுப் படுத்தி கண்ணில் கண்ணீர் வந்து விடுகிறது...!

@வாக்கிடாக்கியில் தமிழில் "அண்ணா காப்பாத்து அண்ணா"ன்னு அலறியவனுக்கு [[தமிழன்]] இனி வயர்லெஸ்சில் ஆங்கிலம் தவிர வேற்று மொழி பேசக்கூடாது என்று வார்னிங் லெட்டர் கொடுத்தும், நானிருக்கும் தைரியத்தில் நைட் டியூட்டியில் இருக்கும்போது தமிழில் பாட்டுபாடி எல்லாரையும் கலவரப்படுத்தி, என்னையும் சிரிக்க வைத்துவிடுகிறான், என்னாத்தை சொல்லி ஆக்சன் எடுக்கன்னே தெரியலை அவ்வ்வ்வ்....!

@தகுந்த நேரத்தில் செய்யும் உதவியே தர்மம் எனப்படும், தண்ணியில் சாகக்கிடக்கிறவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட அவனை முதலில் தூக்கிவிடுவதே தர்மம் எனப்படும், அதுவே நம்மை காக்கவும் செய்யும் இல்லையா...!
@மெக்கானிக்கும், டெய்லரும், சலூன்காரனும் எளிதில் ரவுடியிசம் கற்றுகொள்கிறார்கள்...!

@எங்கள் நாடு தனக்குதானே பாம் வைத்து அந்தப் பழியை அடுத்த நாட்டின் மீது போட்டுவிடும் பழக்கம் உண்டு என்று என் பாகிஸ்தான் நண்பன் [[முன்னாள் இன்டெலிஜென்ஸ் இன்ஸ்பெக்டர்]] அடிக்கடி சொல்வதுண்டு என்று சொல்லியும் நம்பாத நண்பர்களும் உண்டு...!
@டுவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமியின் தளத்திற்கு போயி நலமா என்று [[விளையாட்டாக]] கேட்டதுக்கு, நலமே, நீங்க இருப்பது மும்பையிலதானே"ன்னு அவர் கேட்டதுக்கு நான் எடுத்த ஓட்டம்....ம்ம்ம்ம்ம்ம்....இன்னும் நிக்கவே இல்லை ஓடின்டே இருக்கேன் அவ்வ்வ்வ்...! [[இதான் வேலிக்குள்ளே போற ஓணான் கதை சொன்னாயிங்களோ நம்மாளுங்க]]
@ரெண்டு வருஷம் கழித்து லீவில் ஊருக்கு போன நண்பன், மனைவி வீட்டில் உள்ள தென்னைமரங்கள் இன்னும் வளராமல் நிற்பதை கண்டு, தரையை நன்றாக கொத்தி, உப்பு பொட்டாசியம் இன்னும் அவனுக்கு தெரிந்த உரம் வகைகளை கலந்து தென்னைக்கு போட்டுவிட, ரெண்டே நாளில் அவனை மனைவி ஊரில் இருந்து இவன் அம்மா ஊருக்கு விரட்டி இருக்கிறார்கள், ஒன்னுமே புரியாமல் மனைவியிடம் வடிவேலு கணக்கா அழுது கரைந்து கேட்க....கொய்யால இவன் தென்னைக்கு மருந்து வச்ச அடுத்தநாளே அந்த ஊரில் உள்ள கோழிகள் அனைத்தும் செத்துபோச்சாம் [[மருந்தை தின்னகோழிகள்]]

@பிங்க் கலர் பெண்களுக்கு ஃபேவரிட் என்றால், ஆண்களுக்கு...? எனக்கு ஜெர்மன் சிகப்பு பிடித்தமான கலர்...!

@வெட்கம் பெண்களுக்கு அழகென்றால், கோபமும் அழகுதான், நாம் எட்டி நிற்கும்போது...!

@கையில் காசு இருந்தால் என்றைக்கும் தீபாவளியே....ஒரு நண்பனின் வாதம்...!

@நிறைய பேசினால் உன் விலையை நீயே களைகிறாய்...!

@எட்டப்பனுக்கும் தொண்டைமானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை பெயர்களைத் தவிர...!
@கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் ஊர் நடுவே ஓடும் நதியின் பெயர் பழையாறு இல்லை "பாழாறு" என்னப்படும், அதாவது சுசீந்திரத்தில் இருந்து இந்நதி கடலில் கலக்கும் இடம்வரை "பாழாறு" என்றே அழைக்கப்படுகிறது, எங்க ஊர் பெருசுகள் சொன்னது...! [[இதுக்கு ஒரு தனிக்கதையும் உண்டு பிரிட்டிஷார் காலத்தில்]]
@என்னையாடா சமூகவலைத்தளங்களில் கிண்டல் பண்ணுறீங்க கொய்யால, என் படத்தை மட்டும் பார்த்துட்டு உயிரோடு வெளியே வந்துருங்க பார்ப்போம் வெறியில் பஜய் சபதம்...! [[அண்ணா நான் இல்லீங்ணா...]]

22 comments:

  1. ////வெட்கம் பெண்களுக்கு அழகென்றால், கோபமும் அழகுதான், நாம் எட்டி நிற்கும்போது////

    பக்கத்தில போனா
    வெட்டி போடுவாங்க வெட்டி....

    ReplyDelete
  2. அது தெரிஞ்சிதானே புலவரே நாம எட்டியே நிக்குறது.

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை... பல உண்மைகள்...

    முக்கியமாக : என்னதான் மனசு கஷ்டமாக இருந்தாலும் மனம் விட்டு சிரிப்பது... இது ஒன்று இருந்தால் போதுமே...

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன் said...
    அனைத்தும் அருமை... பல உண்மைகள்...

    முக்கியமாக : என்னதான் மனசு கஷ்டமாக இருந்தாலும் மனம் விட்டு சிரிப்பது... இது ஒன்று இருந்தால் போதுமே...//

    ஹா ஹா ஹா ஹா அதே அதே மக்கா...!

    ReplyDelete
  5. //நடு தண்டவாளத்துல கிடத்தி வச்சிட்டு சிரிக்க சொல்றாயிங்க...! //

    என்ன பண்றது மக்கா.....ஹிம்

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. எல்லாமே ரசிக்க வைத்தன. அதிலும் குறிப்பா... அந்த சுப்ரமணிய சாமி மேட்டர் ஹா... ஹா... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete

  8. ///வித விதமான பட்ஷனங்கள் இருந்தாலும், மனமிருந்தால் மட்டுமே சாப்பிடமுடியும்.///.
    மனமிருந்தால் மட்டுமல்ல உடம்பில் சுகர் இல்லாமல் இருந்தாதான் சாப்பிடமுடியும்

    ReplyDelete
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் அண்ணா!

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நால்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. கலக்கல்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  14. இன்பம் பொங்கும் திருநாளாக இந்நாள் என்றும் மலர உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரரே ...........

    ReplyDelete
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே

    ReplyDelete
  16. எல்லாருக்கும் எனது இனிய தீபநாள் வாழ்த்துகள்....

    ReplyDelete
  17. எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!