எங்க
ஊர்ல சாமி பதி பக்கமா ரொம்ப நாளா ஒரு முஸ்லீம் அண்ணாச்சி டீக்கடை நடத்திட்டு
இருந்தார், எனக்கு நியாபகம் தெரிந்த போது, காலையில் தோசையும் சாயங்காலம்
பருப்பு வடையும் ரொம்ப பேமஸ் அங்கே சமைப்பதோ அந்த அண்ணாச்சியின் மனைவி,
வெளியே முகமே காட்டமாட்டார்கள், நான் சிறுவனாக இரிருந்தபோது ஓடிப்போயி
அவர்கள் மடியில் அமர்ந்து கொள்வதுண்டு, தோசை பிய்த்து அவர்கள் வாயில்
ஊட்டும் ருசியோ ருசி, அப்பா காலம் தொட்டு இப்போது என் குழந்தைகள் காலம் வரை
நாங்க ருசியாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு பார்சல் வாங்கி வருவது
வழக்கம்.
என் பொண்ணுக்கு அங்கே சாப்பிடுவது என்றால் அலாதி
பிரியம், தம்பி தூங்கி எழும்புரதுக்கே பத்து மணி ஆகிவிடும் என்பதான் நானும்
மகளுமாக போவதுண்டு, அந்த அண்ணாச்சிக்கு ஹிந்தி நல்லா தெரியும் என்பதாலும்,
நாங்கள் மும்பைவாசிகள் என்பதாலும் என்மீது அவருக்கு சற்றே கரிசனையும் பாசமும் உண்டு.Tuesday, April 29, 2014
என்று தணியும் இந்த மதவெறி ?
Subscribe to:
Post Comments (Atom)
மனிதம் மரித்துதான் விட்டது!
ReplyDeleteஏன் இந்த வெறி......
ReplyDeleteநீங்கள் சொல்வது போல வெளி மாநிலங்களுக்கு/நாட்டிற்கு வந்து பழகினால் தான் இவர்களுக்குப் புரியும் போல.....
நாம் தலை முழுக வேண்டியது தான் - வேறு வழியில்லை...
ReplyDeleteஇப்போ பேஸ்புக்கில் ஒரு கூட்டம் இதை தானே செய்து கொண்டுள்ளது.. வருந்த வேண்டிய விஷயம்
ReplyDeleteமக்கா இந்த கிழடுங்கதான் இப்பிடி கோணகிழி பண்ணிட்டு இருக்கானுக// அவங்க மட்டுமா நாசமா போனவீங்க
ReplyDeleteநீங்கள் சொல்வது போல வெளி மாநிலங்களுக்கு/நாட்டிற்கு வந்து பழகினால் தான் இவர்களுக்குப் புரியும் போல
ReplyDeleteஉண்மை தான் பாஸ். வெளி ஊர்ல இருக்கிறவங்களுக்குதான் அந்த வலி தெரியும், தமிழ் பேசற யாரையாவது பாக்க மாட்டமாங்கிற ஏக்கம்...
ReplyDeleteஇந்த மதப்பேய் பிடிச்சி ஆட்டாத ஆட்களே இல்லை என்பதுபோல் ஆகிவிட்டது. எங்களுடைய இளம் வயது காலங்களில் இப்படியொரு நிலையை எங்கும், குறிப்பாக நம் தமிழகத்தில் கண்டதே இல்லை. இனி என்னவெல்லாம் காண வேண்டியுள்ளதோ தெரியவில்லை.
ReplyDeleteமனித நேயம் இருக்கா?
ReplyDeleteஎந்த மதமாக இருந்தாலும் என்ன அவனவனுக்குப் பிடித்த சாமியைக் கும்பிட்டு விட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான் இதற்காக இன்னும் எத்தனை காலங்களுக்குத் தான் மனிதம் மறந்து செயல்படுவார்களோ மத வெறி பிடித்த பெயரிலிகள் ! தங்களின் பகிர்வினைக் கண்டு உள்ளம் கொதிக்கிறது சகோதரா இவர்கள் மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி .
ReplyDeleteஇப்படி வெறி பிடித்து அலைபவர்களை என்ன வென்று சொல்லுவது? அவர்களை நாம் தலை முழுக வேண்டியதுதான்!
ReplyDeleteஅநியாயம்ணே.
ReplyDeleteஅருமையான ஆக்கம்!
ReplyDeleteஅண்ணாச்சி நலமா பார்த்து ரொம்ப நாளாச்சு!ஹீ சலாம் பாய்!
Deleteமனிதத்தைத் துறக்கச் சொல்லும் எந்த மதமும் மதமே அல்ல
ReplyDeleteதமிழகத்திலும் மத நல்லிணக்கம் சிதைந்து வருவது வருத்தத்திற்குரியது.
ReplyDeleteமதசகிப்பு இல்லாமல் போவது வருத்தம் தரும் விடயம் அண்ணாச்சி! பாய் தோசை தந்தார் அப்புறம்!ஹீ
ReplyDeleteஆனால் எல்லாத்துலேயுமே பாதிக்க படுவது நடுத்தர வர்க்கம் தான்.
ReplyDelete