Saturday, March 30, 2013

ரஜினிகாந்தை ஏன் இப்போது பலருக்கும் பிடிக்காமல் போனது...?


உன்னை நீ நேசிப்பது போல பிறனையும் நேசி என்று சொல்லி மனிதனின் மனம் மாற செய்த இயேசு, இன்று உயிர்த்தெழுந்த தினம்.

யாவருக்கும் நாஞ்சில்மனோ'வின் இனிய ஈஸ்டர் தினம் வாழ்த்துக்கள்...

இயேசு சொன்னது போல இனி முதல் நாம், நம்மைப் போல பிறரையும் நேசிப்போம்.
---------------------------------------------------------------------------
காலையிலேயே [[2 am]] முகமறியா தம்பி ஒருவன் சாட்டிங்கில் வந்து அலறி ஓடியே விட்டார்....?

"அண்ணே கன்னியாகுமரி எப்பிடி இருக்கு...?"

"கன்னியாகுமரி எப்பவும் இருக்குற இடத்தில் அப்பிடியேதான் இருக்கு, நான்தான் வெளியே போயிட்டேன்..."

இந்த பதிலுக்கு அப்புறம் ஆளைக் காணவே இல்லை, மருத்துவாமலைக்கு ஓடிட்டாரோ என்னமோ ஹி ஹி...
----------------------------------------------------------------------------
கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்த [[இலங்கை கிரிக்கெட் வீரர்கள்]] அனுமதிக்காவிட்டால் என்ன, கேரளா இருக்கே....நான் சூனியா பூந்தியின் செருப்பை நக்குறவன் ஆச்சே எனவே கேரளாவில் தாராளமாக நடத்தலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் உம்முன சுண்டி....

ஒ அப்போள்  கூடங்குளம் அணுமின் நிலையமும் கேரளா கொண்டு போகான் அனுகிரகம் செய்யனே என்றே பொன்னு சாரே....
---------------------------------------------------------------------------
மாணவ செல்லங்களின் இந்த அருமையான போராட்டத்தை, இனி வரும் தேர்தலுக்கு லாவகமாக பயன்படுத்தி, தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்து கொடுக்க புத்தியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து, ஆனால் தற்கொலை போன்ற எண்ணங்களை அவர்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டியதும் நம் கடமை.

தன்னைக் கொல்வதால்  விடிவு கிடையாது, அகிம்சையாக போராடி, புத்தியாக ஈழம் மலரச் செய்யவேண்டும், அவசர புத்தி கூடவே கூடாது என்பதை மாணவர்கள் நன்றாக உணரவேண்டும்.
------------------------------------------------------------------------------
இலங்கையில் இருக்கும் எழுபது சதவீதம் சிங்களர்கள் வட இந்தியர்கள் - இலங்கை அமைச்சர் அறிக்கை

#அடங்கொய்யால இப்பவாவது ஒத்துகிட்டியே சரி சரி அப்போ நீ இலங்கைக்கு வந்தட்டி  வருத்தட்டிதானே...? உடனே கிளம்பு உன் நாட்டுக்கு...வரலாறு உன் வாயாலேயே வெளியே வந்துருச்சு பாரு...! ஒண்டவந்தப் பிடரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்.
------------------------------------------------------------------------------
படம் எடுத்தா படமா [[சினிமா]] எடுங்க, பாம்பு படம் எடுத்தாப்புல படம் எடுத்து எங்களை ஓடவைக்காதீங்க சொல்லிப்புட்டேன்" எங்க அண்ணாச்சி பாலபிரஜாதிபதி அடிகளார் அடிக்கடி சொல்லும் வாக்கியம் இது...!

மணிரத்தினம் படங்களும் இப்போ அப்படி வருவதைப்பார்த்தால் பயமா மட்டும் இல்லை பேதி ச்சே பீதியாவும் இருக்கு...!
---------------------------------------------------------------------------
மாணவர்கள் சப்போர்ட் வேண்டும் தனக்கு என்பதை லேட்டாக புரிந்து கொண்டு வந்து வாண்டடாக சவுண்ட் கொடுத்த ரஜினிக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள், காரணம் மாணவர்கள் இப்போது புது இரத்தத்தோடும் உலக அறிவோடும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்பதை ரஜினி போன்ற டடிகர்கள் ஸாரி நடிகர்கள் உணரவேண்டும்.

நான் எப்போ வருவேன் எப்பிடி வருவேன் என்ற டையலாக் எல்லாம் இனி நடக்காது, இணையதளங்கள் உங்களை சும்மாவும் விடாது..!

ரஜினியை நான் ரசித்த, ரசிகனாக இருந்த காலம் அவரை புரியாத அறியாத காலம்...மேலே போட்டோ பாருங்க...! இப்போ அவர் பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னு...!
----------------------------------------------------------------------------
கூட வேலை பார்க்கும் ஒரு மலையாளி மானேஜர், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைத் தவிர்த்து மற்ற எல்லா டிப்பாட்மெண்ட் உள்ளேயும் மூக்கையும் காலையும் நீட்ட, கடும் பின் விளைவுகள் வந்த வண்ணம் இருக்கு அவனுக்கு....

நான் அப்பவே அவனிடம் சொன்னேன், உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய் மற்றவர்களின் வேலைகளுக்குள் செல்லாதே, அது உனக்குத்தான் வெளியில் போன ஓணானை வேஷ்டிக்குள் விட்ட கதையாக இருக்கும் என்று சொல்லியும் கேட்கவில்லை.

இப்போது பிளட் ஃப்ரஷர் அதிகமாகி செக்கப் செய்து கொண்டு பேய்முழி முழித்துக்கொண்டிருகிறான் ரூமில்....

சொன்னாக் கேக்கணும்...வேறென்னத்தை சொல்ல...?

15 comments:

  1. ஹை நான் பர்ஸ்ட் , வேண்டுகோளை ஏற்று பதிவிட்டதற்கு நன்றி .
    திருந்தாத ஜென்மங்கள் (மலையாளிகள்) இவர்களைப்பற்றி சொல்லி ஏன் நேரத்தை வீணாக்குகிரிர்கள் .(நல்ல மலையாளிகளும் இருக்கிறார்கள் )

    ReplyDelete
  2. ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சிக்கும் குடும்ப உறவுகளுக்கும்!

    ReplyDelete
  3. தற்கொலையும் அதுக்கு தூண்டுதலும் கொடுப்பதும் ஈழம் தராது என்பதை புரியவைக்க வேண்டும் மாணவசமூகத்திற்கு

    ReplyDelete
  4. ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கலக்கு மனோ....


    கன்னியாகுமரியில் நீ இருந்தாதான் அது எப்படியிருக்குன்னு கேட்கனும்...
    நீயில்ல அப்போ அதுவும் நலமே...

    ReplyDelete
  6. ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துக்கள்...

    உங்கள் தளத்திற்கு Google chrome மூலம் வர முடியவில்லை... காரணம் : udanz

    கருத்திட்ட வரும் நண்பர்களுக்கு :

    நண்பர்களின் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லையா...? udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (??????) இவைகளை இணைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? உங்கள் விருப்பம்...

    தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... எப்படி...? :-

    மேலும் விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan

    அன்புடன் DD
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
  7. மாமு....என்ஜாய் பண்ணவும்.......

    நான் வர...ஜூலை மாதம் ஆகும்....

    ReplyDelete
  8. hai makkaa...
    இனிய ஈஸ்டர் தினம் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. நல்லாருக்கு மனோ.

    ReplyDelete
  10. நேற்று நான் போட்ட கமெண்ட்டை காக்கா தூக்கிட்டு போயிடுச்சோ!

    ReplyDelete
  11. ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. என்ன ரஜினியை யாருக்கும் பிடிக்கலையா??கலக்கல் மனோ!

    ReplyDelete
  13. காலம்தாழ்ந்த வாழ்த்துகள் மனோ அண்ணே!
    சூப்பர் கலக்கல்!(உங்களுக்குச் சொல்லியா தரணும்!)

    ReplyDelete
  14. எனக்கு ஒரு சந்தேகம்ங்கோ....
    அந்த மலையாளி மனேஜர பத்தி எழுதுனது உங்களோட வயித்துஎரிச்சல் மாதிரி தெரியுதே...???

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!