Monday, March 14, 2011

எலியின் கலவரம்

எங்க ஹோட்டல்  [பஹ்ரைன்] கார் பார்க்கிங்க்ல ஒரு நூறு காராவது பார்க் செய்யலாம். அப்படி ஒரு நாள் ஒரு அறுவது கார்களுக்கு மேலாக பார்க் செய்யபட்டிருந்தது அதில் என் அரபி முதலாளியின் பி எம்  டபள்யூ காரும் பார்க் செய்ய பட்டிருந்தது. ஒரு நாள் அலறியபடி முதலாளி ஓடி வந்தான். என் காரின் ஒயர்களை எலி கட் பண்ணி விட்டது என்றான். பாருய்யா நீ ஒழுங்கா சம்பளம் குடுக்காதது எலிக்கு கூட தெரிஞ்சிருக்குன்னு சொன்னேன். என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு போனான் [ஹே ஹே ஹே நாம யாரு கேப்புல சிந்து பாடுவோம்ல] ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். இத்தனை கார்களுக்கு மத்தியில இவன் காரை மட்டும் எலி குடலை உருவி இருக்கே......!!!!???
 
இன்னொரு நாள்...
நான் : சார் இங்கே நிலவரம் கொலைவரமா மாறிகிட்டு இருக்கு எனக்கு ஒரு மாசம் லீவு தாயேன் ஊருக்கு போயிட்டு வாரேன்.
முதலாளி : [என்னை கட்டி பிடித்து கொண்டு] அப்போ நான் மட்டும் சாவனுமா....??? இல்லை நீ ஊர் போக வேண்டாம் செத்தா நாம ரெண்டு பெரும் சேர்ந்தே சாவோம். ஏன்னா நீ என் நண்பன் அல்லவா...[அவ்வ்வ்வவ்வ்வ்வ்]
நான் : நான் செத்தா என் சொந்த மண்ணில்தான் சாவேன். மும்பையில் நான் செத்தாலும் என்னை கன்யாகுமரிலதான் அடக்கம் பண்ணனும்னு என் வீட்டம்மா'கிட்டே அப்பமே சொல்லி இருக்கேன். லீவு தாயேன்...?
முதலாளி : பிசினஸ் இல்லை அதனால சம்பளமும் இல்லை [ஆறு மாசம்] போறியா....?
நான் : அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....
இதுல நண்பன்னு வேற சொல்லுறான் கொய்யால.....
 
இங்கே [பஹ்ரைன்] நிலவரம் வர வர மோசமாகிறது. பங்காளி, பாகிஸ்தானிகளை கண்ட இடத்தில் அடிக்கிறார்கள் [ஷியா பிரிவினர்] போலீஸ் வாகனம் கொளுத்த படுகிறது. போலீசையும் அடிக்கிறார்கள். சவூதி, குவைத், கத்தார் ஆர்மிகள் பஹ்ரைன் உள்ளே வந்திருக்கிறது. கடையடைப்பு நடக்க ஆரம்பித்து விட்டது.
 
இது கவிதை அல்ல..
                                                     வளைகுடாவின்
                                                     வயிற்றில் இருக்கும்
                                                     எங்கள் இளமை
                                                     நீரில் கரைந்து
                                                     கடலில் உப்பாகிறது
                                                     எங்களை நம்பி வாழும்
                                                     ஜீவன்களுக்காய்
                                                     நாங்கள் உப்பாவது
                                                     எமக்கு பெருமையே....
 
டிஸ்கி : நண்பன் "கலியுகம்" தினேஷ்'க்கு புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கிறது. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நண்பர்களே வாருங்கள் வாழ்த்துவோம்.
 
டிஸ்கி : அருமை தங்கை "கவியரசி" கல்பனா ராஜேந்திரனின் "அப்பா" என்ற கவிதை என் நெஞ்சில் ஈரமாய் எப்போதும் இழையோடுகிறது. நேரமிருந்தால் படித்து பாருங்கள். பின்னூட்டம் இட வருவார். அவர் லிங்க் அதில் இருக்கும்.
                                                    

88 comments:

  1. //நண்பன் "கலியுகம்" தினேஷ்'க்கு புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கிறது.//


    எமது நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்கள் வலைப்பூவின் தலைப்பின் கீழ் இருக்கும் குட்டி தேவதை யார்?

    ReplyDelete
  3. //"கவியரசி" கல்பனா ராஜேந்திரன் பின்னூட்டம் இட வருவார். அவர் லிங்க் அதில் இருக்கும்.//

    "கவியரசி" கல்பனா ராஜேந்திரன்..

    "கவியரசி" கல்பனா ராஜேந்திரன்...

    "கவியரசி" கல்பனா ராஜேந்திரன்...

    எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...

    ReplyDelete
  4. //நிலவரம் வர வர மோசமாகிறது. பங்காளி, பாகிஸ்தானிகளை கண்ட இடத்தில் அடிக்கிறார்கள் [ஷியா பிரிவினர்] போலீஸ் வாகனம் கொளுத்த படுகிறது. போலீசையும் அடிக்கிறார்கள். சவூதி, குவைத், கத்தார் ஆர்மிகள் பஹ்ரைன் உள்ளே வந்திருக்கிறது. கடையடைப்பு நடக்க ஆரம்பித்து விட்டது//

    நானும் எங்க அரபிகிட்ட பிட்ட போட்டுவிடேன் எப்ப எஸ்ச்கேப் ஆக்கலாம்ன்னு தான் பாக்கறன்

    ReplyDelete
  5. // தாயேன்//


    புரியலைங்க..

    ReplyDelete
  6. என்ன இது கமேன்ட் மாடுரேசன் உங்களையும் யாராவது மிரட்டினார்களா!

    ReplyDelete
  7. இப்பதாங்க பிளாக்கு அழகா இருக்கு..

    ReplyDelete
  8. என்னங்க கமாண்ட்ஸ் .. உங்க approval வாங்கனுமா..

    ReplyDelete
  9. /////
    நண்பன் "கலியுகம்" தினேஷ்'க்கு புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கிறது. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நண்பர்களே வாருங்கள் வாழ்த்துவோம்.//////


    நல்லாயிருக்கட்டும்..

    ReplyDelete
  10. நிலவரம் கலவரம் - கொலைவரம்....எலிக்கு சாகாவரம்? !!

    இந்திய சகோதரர்களுக்காக ப்ரார்த்தனை செய்து கொள்கிறேன்!

    ReplyDelete
  11. கொஞ்சம் பார்த்து பத்திரமா இருங்க சார் ...
    நண்பருக்கு இனிய வாழ்துக்கள் ....

    ReplyDelete
  12. பாத்து பத்திரமா இருங்க சார்..அந்தக் கவிதை ரொம்பவே மனதை டச் பண்ணிவிட்டது.

    ReplyDelete
  13. கவனமா இருங்க தொரை.. வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும். பாகிஸ்தானியை அடிக்கிறார்கள், உள்ளூர்ல இருந்தா பாம், வெளியூர்ல அடி, பாவம் இப்டி ஒரு கொடுமையா??

    //எங்கள் இளமை
    நீரில் கரைந்து
    கடலில் உப்பாகிறது
    எங்களை நம்பி வாழும்
    ஜீவன்களுக்காய்
    நாங்கள் உப்பாவது
    எமக்கு பெருமையே....//

    ReplyDelete
  14. // நண்பன் "கலியுகம்" தினேஷ்'க்கு புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கிறது.//

    ஹி..ஹி ...கால் நாட்டியாச்சு ..இனி கிடா வெட்டு தான் ...வாழ்த்துக்கள் தினேஷ்

    ReplyDelete
  15. நிலைமை விரவில் சீராகி அமைதியான வாழ்க்கைக்கு நீங்கள் திரும்பப் பிரார்த்திக்கிறேன்!take care!

    ReplyDelete
  16. தினேஷ்க்கு ஆள் செட் ஆகிடுச்சு.. ரமேஷ் தான் பாவம்

    ReplyDelete
  17. //பாரத்... பாரதி... said...
    உங்கள் வலைப்பூவின் தலைப்பின் கீழ் இருக்கும் குட்டி தேவதை யார்?//

    என் செல்ல குட்டி மகள்...

    ReplyDelete
  18. வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கபோய் இப்போது வருத்தப்படும் இந்தியர்களுக்கு என் வருத்தங்களை பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  19. //ராஜகோபால் said...
    //நிலவரம் வர வர மோசமாகிறது. பங்காளி, பாகிஸ்தானிகளை கண்ட இடத்தில் அடிக்கிறார்கள் [ஷியா பிரிவினர்] போலீஸ் வாகனம் கொளுத்த படுகிறது. போலீசையும் அடிக்கிறார்கள். சவூதி, குவைத், கத்தார் ஆர்மிகள் பஹ்ரைன் உள்ளே வந்திருக்கிறது. கடையடைப்பு நடக்க ஆரம்பித்து விட்டது//

    நானும் எங்க அரபிகிட்ட பிட்ட போட்டுவிடேன் எப்ப எஸ்ச்கேப் ஆக்கலாம்ன்னு தான் பாக்கறன்//

    சீக்கிரம் கிளம்புங்க.......

    ReplyDelete
  20. >>ஒரு நாள் அலறியபடி முதலாளி ஓடி வந்தான்.

    முதலாளிக்கே இம்புட்டு மரியாதையை தர்றீங்களே...

    ReplyDelete
  21. //பாரத்... பாரதி... said...
    // தாயேன்//


    புரியலைங்க..//

    தாருங்களேன்........

    ReplyDelete
  22. >>>எங்கள் இளமை
    நீரில் கரைந்து
    கடலில் உப்பாகிறது

    சொந்த நாட்டை விட்டு வந்த நாட்டில் செட்டில் ஆகும் அனைவருக்கும் இது பொது

    ReplyDelete
  23. //ராஜகோபால் said...
    என்ன இது கமேன்ட் மாடுரேசன் உங்களையும் யாராவது மிரட்டினார்களா!//

    கொலை மிரட்டல்...

    ReplyDelete
  24. >>>அருமை தங்கை "கவியரசி" கல்பனா ராஜேந்திரனின் "அப்பா" என்ற கவிதை என் நெஞ்சில் ஈரமாய் எப்போதும் இழையோடுகிறது. நேரமிருந்தால் படித்து பாருங்கள். பின்னூட்டம் இட வருவார். அவர் லிங்க் அதில் இருக்கும்

    அவங்க வர்றது எப்போ..? நீங்களே லிங்க் குடுத்துடுங்க

    ReplyDelete
  25. //கவிதை வீதி # சௌந்தர் said...
    இப்பதாங்க பிளாக்கு அழகா இருக்கு..//

    மனுஷனுக்கு லொள்ளை பாருங்க ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  26. //கவிதை வீதி # சௌந்தர் said...
    என்னங்க கமாண்ட்ஸ் .. உங்க approval வாங்கனுமா..//

    ஒரு வாரம் பொறுங்க பிளீஸ்...
    பயங்கர மிரட்டல்...

    ReplyDelete
  27. /middleclassmadhavi said...
    நிலவரம் கலவரம் - கொலைவரம்....எலிக்கு சாகாவரம்? !!

    இந்திய சகோதரர்களுக்காக ப்ரார்த்தனை செய்து கொள்கிறேன்!//

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  28. வளைகுடாவின்
    வயிற்றில் இருக்கும்
    எங்கள் இளமை
    நீரில் கரைந்து
    கடலில் உப்பாகிறது
    எங்களை நம்பி வாழும்
    ஜீவன்களுக்காய்
    நாங்கள் உப்பாவது
    எமக்கு பெருமையே....//

    இது நிச்சயமாய் கவிதை. வலிகளை வார்த்தைகளில் அடக்கிக் கண்ணீரை விழிகளில் வர வைத்து விட்டீர்கள்.அருமை.
    நிஜங்களின் சொல்லோவியமாக கவிதை உள்ளது.

    முதலாளியின் காருக்கு எலி கடித்ததை நம்ப முடியாமல் தான் உள்ளது. அவ்வளவு பல சாலி எலியோ?
    சகோதரம், மிகவும் கவனமாக பாதுகாப்பாக இருங்கோ.

    ReplyDelete
  29. //FOOD said...
    நல்லாத்தான் சொல்லீட்டு வந்தீங்க. இறுதி வரிகள் சோகத்தில் ஆழ்த்தின. பத்திரமாய் இருங்கள் நண்பரே!

    March 14, 2011 3:38 AM
    FOOD said...
    மனோவின் இடத்தில் யாரிந்த தேவதை?

    March 14, 2011 3:40 AM
    FOOD said...
    கலியுகம் தினேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//


    நன்றி ஆபிசர்.....
    போட்டோவில் இருப்பது என் மகள்...

    ReplyDelete
  30. /அரசன் said...
    கொஞ்சம் பார்த்து பத்திரமா இருங்க சார் ...
    நண்பருக்கு இனிய வாழ்துக்கள் ....//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  31. //வசந்தா நடேசன் said...
    கவனமா இருங்க தொரை.. வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும். பாகிஸ்தானியை அடிக்கிறார்கள், உள்ளூர்ல இருந்தா பாம், வெளியூர்ல அடி, பாவம் இப்டி ஒரு கொடுமையா??//

    என்னத்தை சொல்ல போங்க....

    ReplyDelete
  32. //இம்சைஅரசன் பாபு.. said...
    // நண்பன் "கலியுகம்" தினேஷ்'க்கு புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கிறது.//

    ஹி..ஹி ...கால் நாட்டியாச்சு ..இனி கிடா வெட்டு தான் ...வாழ்த்துக்கள் தினேஷ்//

    ஹா ஹா ஹா ஹா.......ஒரு அடிமை சிக்கிருச்சி...

    ReplyDelete
  33. //சென்னை பித்தன் said...
    நிலைமை விரவில் சீராகி அமைதியான வாழ்க்கைக்கு நீங்கள் திரும்பப் பிரார்த்திக்கிறேன்!take care!//

    நன்றி சென்னை காதலரே....

    ReplyDelete
  34. மக்கா பாஸ்போர்ட்ட வாங்கி வெச்சிக்குங்க, தயாரா இருங்க... கவனமா இருங்க....!

    ReplyDelete
  35. Your comment will be visible after approval.

    ஏன்யா......... யாரவன் இந்த வேல பாத்தது........? சொல்லு மக்கா இப்பவே போயி போட்டுத்தள்ளிடலாம்!

    ReplyDelete
  36. தினேசு சிக்கிட்டாரா................? அப்பாடா இனி கவியரங்கத்துல இருந்து கொஞ்ச நாளு தப்பிச்சுக்கலாம்.........

    ReplyDelete
  37. //சி.பி.செந்தில்குமார் said...
    தினேஷ்க்கு ஆள் செட் ஆகிடுச்சு.. ரமேஷ் தான் பாவம்//

    அவருக்கும் செட் ஆகிரும்....

    ReplyDelete
  38. //சி.பி.செந்தில்குமார் said...
    வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கபோய் இப்போது வருத்தப்படும் இந்தியர்களுக்கு என் வருத்தங்களை பதிவு செய்கிறேன்//

    வேற என்ன செய்ய மக்கா...

    ReplyDelete
  39. //சி.பி.செந்தில்குமார் said...
    >>>எங்கள் இளமை
    நீரில் கரைந்து
    கடலில் உப்பாகிறது

    சொந்த நாட்டை விட்டு வந்த நாட்டில் செட்டில் ஆகும் அனைவருக்கும் இது பொது//

    சரிதான் மக்கா...

    ReplyDelete
  40. ////இது கவிதை அல்ல..//////

    பார்ரா.............?

    ReplyDelete
  41. //நிரூபன் said...
    வளைகுடாவின்
    வயிற்றில் இருக்கும்
    எங்கள் இளமை
    நீரில் கரைந்து
    கடலில் உப்பாகிறது
    எங்களை நம்பி வாழும்
    ஜீவன்களுக்காய்
    நாங்கள் உப்பாவது
    எமக்கு பெருமையே....//

    இது நிச்சயமாய் கவிதை. வலிகளை வார்த்தைகளில் அடக்கிக் கண்ணீரை விழிகளில் வர வைத்து விட்டீர்கள்.அருமை.
    நிஜங்களின் சொல்லோவியமாக கவிதை உள்ளது.

    முதலாளியின் காருக்கு எலி கடித்ததை நம்ப முடியாமல் தான் உள்ளது. அவ்வளவு பல சாலி எலியோ?
    சகோதரம், மிகவும் கவனமாக பாதுகாப்பாக இருங்கோ//

    மிகவும் நன்றி மக்கா.....

    எலி பலசாலியா இல்லை சம்பளம் கிடைக்காத கோபத்துல எவனோ போட்ட ஆட்டையா தெரியவில்லை ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  42. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    மக்கா பாஸ்போர்ட்ட வாங்கி வெச்சிக்குங்க, தயாரா இருங்க... கவனமா இருங்க....!//

    சரி மக்கா நன்றி....

    ReplyDelete
  43. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    Your comment will be visible after approval.

    ஏன்யா......... யாரவன் இந்த வேல பாத்தது........? சொல்லு மக்கா இப்பவே போயி போட்டுத்தள்ளிடலாம்!//

    கொஞ்சம் பொறுமையா இருப்போம் மக்கா....ஒரு ரெண்டு மூணு நாள்....

    ReplyDelete
  44. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    தினேசு சிக்கிட்டாரா................? அப்பாடா இனி கவியரங்கத்துல இருந்து கொஞ்ச நாளு தப்பிச்சுக்கலாம்.........//

    அப்பாடா பார்ரா பன்னிகுட்டிக்கு சந்தோஷத்தை....

    ReplyDelete
  45. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////இது கவிதை அல்ல..//////

    பார்ரா.............?//

    ஹா ஹே ஹா ஹே ஹா......

    ReplyDelete
  46. ஜீவன்களுக்காய்
    நாங்கள் உப்பாவது
    எமக்கு பெருமையே.//
    சூப்பர்

    ReplyDelete
  47. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ஜீவன்களுக்காய்
    நாங்கள் உப்பாவது
    எமக்கு பெருமையே.//
    சூப்பர்//

    ஹே ஹே ஹே ஹே நன்றி மக்கா....

    ReplyDelete
  48. காக்டெயில் பதிவாக உள்ளது. என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  49. சம்பளமும் இல்லை [ஆறு மாசம்]//

    அச்சோ பாவம்

    ReplyDelete
  50. Your comment will be visible after approval//

    என்ன இது ???

    அட கொடுமையே !!

    உங்க ப்ளாக் யாரோ பாம் வச்சுட்டாங்க போல ஓடியந்துருங்க

    ReplyDelete
  51. நண்பன் "கலியுகம்" தினேஷ்'க்கு புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கிறது. //

    வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  52. அருமை தங்கை "கவியரசி" கல்பனா ராஜேந்திரனின் "அப்பா" என்ற கவிதை என் நெஞ்சில் ஈரமாய் எப்போதும் இழையோடுகிறது.//


    ஹ ஹ ஹ ஹா ..

    நான் ஏதோ கிறுக்கினேன் .. அது இவ்வளவு விளம்பரமா

    ReplyDelete
  53. March 14, 2011 2:53 AM
    பாரத்... பாரதி... said...
    //"கவியரசி" கல்பனா ராஜேந்திரன் பின்னூட்டம் இட வருவார். அவர் லிங்க் அதில் இருக்கும்.//

    "கவியரசி" கல்பனா ராஜேந்திரன்..

    "கவியரசி" கல்பனா ராஜேந்திரன்...

    "கவியரசி" கல்பனா ராஜேந்திரன்...

    எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...//

    உள்ளேன் ஐயா

    ReplyDelete
  54. //பலே பிரபு said...
    காக்டெயில் பதிவாக உள்ளது. என்ன சொல்வது என்று தெரியவில்லை.//

    அப்பிடியா.....

    ReplyDelete
  55. //கல்பனா said...
    Your comment will be visible after approval//

    என்ன இது ???

    அட கொடுமையே !!

    உங்க ப்ளாக் யாரோ பாம் வச்சுட்டாங்க போல ஓடியந்துருங்க //

    ஆமா மக்கா பஹ்ரைன்லதான் பாம் போடுரானுங்கனா....பிளாக்லயும் போட்டுருவாணுக போல ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  56. நாஞ்சிலார், அதெப்படி எலி அவரின் காரை மட்டும் கடிக்கும். நீங்க தான் எலி பிடிச்சு காரில் விட்டீங்களா???
    மேலே இருக்கும் குட்டி யார்??? அழகோ அழகு.
    தினேஷ்குமார், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  57. தலைப்பு படம் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  58. //March 14, 2011 7:45 AM
    vanathy said...
    நாஞ்சிலார், அதெப்படி எலி அவரின் காரை மட்டும் கடிக்கும். நீங்க தான் எலி பிடிச்சு காரில் விட்டீங்களா???
    மேலே இருக்கும் குட்டி யார்??? அழகோ அழகு.
    தினேஷ்குமார், வாழ்த்துக்கள்.//

    சத்தியமா நான் எலியை பிடிச்சி விடலை அவ்வ்வ்வ்வ்வ்....

    படத்தில் இருப்பது என் செல்லக்குட்டி மகள்...

    ReplyDelete
  59. //Rathnavel said...
    தலைப்பு படம் அருமையாக இருக்கிறது.//

    நன்றி ஐயா.....
    உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தேன். நீங்க இன்னும் பதில் போடலையே ஐயா....

    ReplyDelete
  60. நண்பன் "கலியுகம்" தினேஷ்'க்கு புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கிறது.

    வாழ்த்துகள் சகோ
    கல்பனா பக்கம் சென்று வருகின்றேன்.

    ReplyDelete
  61. வழக்கம் போல லேட்டு சார்...ஹி ஹி...
    நண்பர் கலியுக தினேஷுக்கு கலிகாலம் ஆரம்பிச்சுடுச்சா? சரி வாழ்த்துகள் சொல்லிகறேங்க...
    கலவர பூமியில காத்து வாங்கிட்டு இருக்கீங்க...அட நீங்க வேல பாக்கறது இல்லைல அதை தான் காத்து வாங்கிட்டு இருக்கீங்கன்னு சொன்னேன்.
    இவ்ளோ ரணகளத்துலையும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குது ஹ்ம்ம்...அட கிளுகிளுப்புன்னு நான் சொன்னது சம்பளத்தை...

    ReplyDelete
  62. மக்கா சீக்கிரம் வந்து சேரு அப்பு. பார்த்து பத்திரமா இரு

    ReplyDelete
  63. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    Your comment will be visible after approval.

    ஏன்யா......... யாரவன் இந்த வேல பாத்தது........? சொல்லு மக்கா இப்பவே போயி போட்டுத்தள்ளிடலாம்!.............../////////////

    /////////////////////



    எவனோ லைன்ல இருக்கான் அவன்தான் பிரச்சனை பண்றான் அவன இறக்கி விட்ட சரியாய்டும் ..........

    ReplyDelete
  64. ///டக்கால்டி said...
    வழக்கம் போல லேட்டு சார்...ஹி ஹி...
    நண்பர் கலியுக தினேஷுக்கு கலிகாலம் ஆரம்பிச்சுடுச்சா? சரி வாழ்த்துகள் சொல்லிகறேங்க...
    கலவர பூமியில காத்து வாங்கிட்டு இருக்கீங்க...அட நீங்க வேல பாக்கறது இல்லைல அதை தான் காத்து வாங்கிட்டு இருக்கீங்கன்னு சொன்னேன்.
    இவ்ளோ ரணகளத்துலையும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குது ஹ்ம்ம்...அட கிளுகிளுப்புன்னு நான் சொன்னது சம்பளத்தை...//

    அட கொக்கா மக்கா ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  65. //எல் கே said...
    மக்கா சீக்கிரம் வந்து சேரு அப்பு. பார்த்து பத்திரமா இரு//

    முயற்ச்சி பண்ணிட்டு இருக்கேன் மக்கா....

    ReplyDelete
  66. //அஞ்சா சிங்கம் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    Your comment will be visible after approval.

    ஏன்யா......... யாரவன் இந்த வேல பாத்தது........? சொல்லு மக்கா இப்பவே போயி போட்டுத்தள்ளிடலாம்!.............../////////////

    /////////////////////



    எவனோ லைன்ல இருக்கான் அவன்தான் பிரச்சனை பண்றான் அவன இறக்கி விட்ட சரியாய்டும் ..........//

    அட ஆமாய்யா.....

    ReplyDelete
  67. தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். வாழ்த்துக்கள் சார்.
    மேல போட்டேவில இருக்கிர பொண்ணு உங்க பொண்ணா சார்..

    ReplyDelete
  68. ரெண்டுநாளா நான் வெளியூர் போயிருந்தேன்.. அதனாலதான் வரமுடியல...

    ReplyDelete
  69. ஆமா, பக்ரைன்க்கு சவுதி படையை அனுப்புதுன்னு கேள்விபட்டேன் உண்மையா?

    ReplyDelete
  70. பத்திரமாய் இருங்கள் நண்பரே!

    ReplyDelete
  71. //வேடந்தாங்கல் - கருன் said...
    தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். வாழ்த்துக்கள் சார்.
    மேல போட்டேவில இருக்கிர பொண்ணு உங்க பொண்ணா சார்..

    March 15, 2011 12:11 AM
    வேடந்தாங்கல் - கருன் said...
    ரெண்டுநாளா நான் வெளியூர் போயிருந்தேன்.. அதனாலதான் வரமுடியல...

    March 15, 2011 12:13 AM
    வேடந்தாங்கல் - கருன் said...
    ஆமா, பக்ரைன்க்கு சவுதி படையை அனுப்புதுன்னு கேள்விபட்டேன் உண்மையா?//

    சவூதி, கத்தார்,குவைத் ஆர்மிகள் வந்துள்ளன...

    படத்தில் இருப்பது என் செல்லகுட்டிதான்....

    ReplyDelete
  72. //சே.குமார் said...
    பத்திரமாய் இருங்கள் நண்பரே!//

    மிக்க நன்றி மக்கா...

    ReplyDelete
  73. மச்சி ஒரே பிஸ் பிஸ் ஓட்டு மட்டும்தான் போட்டேன் மன்னிச்சிக்க ஹி ஹி!

    ReplyDelete
  74. சரியான ஆளா தான் இருக்கான்.செத்து போகலாம்னு சொல்றப்ப நண்பர்களாம்.. காசு குடுன்னு கேட்டா இல்லையாம்.போயா போ.. நாசமா போய்கோ நமக..

    ReplyDelete
  75. //மதுரை பொண்ணு said...
    சரியான ஆளா தான் இருக்கான்.செத்து போகலாம்னு சொல்றப்ப நண்பர்களாம்.. காசு குடுன்னு கேட்டா இல்லையாம்.போயா போ.. நாசமா போய்கோ நமக.//


    வீச்சருவாளை எடுத்துட்டு வாங்க மக்கா....

    ReplyDelete
  76. இவ்வளவு களேபரத்திலும் சிரிப்பாய் ஒரு பதிவு. சந்தோஷமாய் ஒரு கல்யாணம். சோகமாய் ஒரு கவிதை. எப்படி மக்கா?? மனம் நெகிழ்கிறது. கவனமா இருந்துங்க. பிரார்த்திக்கிறேன்!

    //நண்பன் "கலியுகம்" தினேஷ்'க்கு புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கிறது.//


    எனது நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  77. Your comment will be visible after approval.

    ReplyDelete
  78. சும்மா ரவுசுக்கு...ஹி ஹி !!!
    எவனோ பண்றதுக்கு முன்னாடி நானே பண்ணிக்கிறேன்...

    ReplyDelete
  79. எப்படி இவ்வளவு சீரியஸான விஷயத்தைக் கூட
    நகைச் சுவை உணர்வோடு உங்களால் சொல்லிப்போக முடிகிறது
    கலவரத் தகவல் மனதை சங்கடப்படுத்துகிறது
    லீவு கிடைக்கவும் நிலைமை சீரடையவும் பிரர்த்திக்கிறோம்

    ReplyDelete
  80. //எங்கள் இளமை
    நீரில் கரைந்து
    கடலில் உப்பாகிறது
    எங்களை நம்பி வாழும்
    ஜீவன்களுக்காய்
    நாங்கள் உப்பாவது
    எமக்கு பெருமையே....//

    கவிதை அருமை! வளைகுடா நாடுகளில் கண்ணீருடன் போராட்ட வாழ்க்கை நடத்தும் அத்தனை மனிதர்களின் வலியும் இந்தக் கவிதையில் தெரிகின்றது!

    ReplyDelete
  81. //எம் அப்துல் காதர் said...
    இவ்வளவு களேபரத்திலும் சிரிப்பாய் ஒரு பதிவு. சந்தோஷமாய் ஒரு கல்யாணம். சோகமாய் ஒரு கவிதை. எப்படி மக்கா?? மனம் நெகிழ்கிறது. கவனமா இருந்துங்க. பிரார்த்திக்கிறேன்!

    //நண்பன் "கலியுகம்" தினேஷ்'க்கு புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கிறது.//


    எனது நல்வாழ்த்துக்கள்...//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  82. //டக்கால்டி said...
    Your comment will be visible after approval.

    March 15, 2011 4:25 PM
    டக்கால்டி said...
    சும்மா ரவுசுக்கு...ஹி ஹி !!!
    எவனோ பண்றதுக்கு முன்னாடி நானே பண்ணிக்கிறேன்...//

    எனக்கு மிரட்டல் விட்ட டகால்டி நீர்தானா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  83. //Ramani said...
    எப்படி இவ்வளவு சீரியஸான விஷயத்தைக் கூட
    நகைச் சுவை உணர்வோடு உங்களால் சொல்லிப்போக முடிகிறது
    கலவரத் தகவல் மனதை சங்கடப்படுத்துகிறது
    லீவு கிடைக்கவும் நிலைமை சீரடையவும் பிரர்த்திக்கிறோம்///

    நன்றி குருவே.....

    ReplyDelete
  84. //மனோ சாமிநாதன் said...
    //எங்கள் இளமை
    நீரில் கரைந்து
    கடலில் உப்பாகிறது
    எங்களை நம்பி வாழும்
    ஜீவன்களுக்காய்
    நாங்கள் உப்பாவது
    எமக்கு பெருமையே....//

    கவிதை அருமை! வளைகுடா நாடுகளில் கண்ணீருடன் போராட்ட வாழ்க்கை நடத்தும் அத்தனை மனிதர்களின் வலியும் இந்தக் கவிதையில் தெரிகின்றது!//

    நன்றி மேடம்....

    ReplyDelete
  85. பார்த்து பத்திரமாய் இருங்கள்.

    ReplyDelete
  86. பத்திரமா இருங்க சகோ..

    ப்ளாக் இப்பத்தான் ரொம்ப அழகா இருக்கு :-)))

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!