Monday, August 26, 2013

தலைநகரில் பதிவர் சந்திப்பு ஒரு அலசல்...!

திடீரென நம்ம வெள்ளைக்காரன் ஜாக்சன் துரை நம்ம சென்னை பதிவர்கள் சந்திப்பை அறிந்து மொத்தமாக வரி வட்டி குஸ்தி ச்சே ச்சீ கிஸ்தி எல்லாம் மொத்தமாக வாங்கி செல்லலாம் என்று உள்ளே வந்து ஒவ்வொரு பதிவர்களையும் மிரட்டினால் என்ன பதில் கிடைக்கும்னு பார்ப்போமா ? [[அடிக்கவெல்லாம் வரப்புடாது ஆமா ]]

ஜாக்சன் துரை : "எனக்கா எண்ணிக்கை தெரியாது அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் விளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் கொடுக்கவில்லை, வெகு காலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை...?

ஜாக்கி சேகர் : ம்ம்ம்ம்ம்ம்.....கொஞ்சம் வெளியே வந்தீங்கன்னா கொஞ்சம் வசதியாக இருக்கும் வாறீங்களா சார் ? ரெண்டுபேரும் வெளியே போகிறார்கள், பைக் சீரும் சத்தம் கேட்கிறது அப்புறம் சத்தமே இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து மாநாட்டு உள்ளே வருகிறார் ஜாக்கி அண்ணன்.

ரகசியமாக மெட்ராஸ் பவன் சிவா காதில் கேட்கிறார் "அண்ணே என்ன ஆச்சு ?

"கொய்யால கையை நீட்டி நீட்டி பேசினாம்ய்யா அவன் பேசுன தமிழும் புரியல அதான் கூவம் ஆத்துல கொண்டு போயி தள்ளிட்டு வந்துட்டேன்"

சிவா அப்பிடியே பம்மி மேசைக்கு அடியில் ஒளிகிறார்.
----------------------------------------------------------------------------------

உணவு உலகம் ஆபீசர் : மனசுக்குள் "அடடா வெள்ளைக்காரன் வம்புக்கு வந்துட்டானே பெல்டை வேற மறந்து வச்சிட்டு வந்துட்டோமே, திவானந்தா வாரேன்னு சொல்லியும் வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டோமே....."

"சார் கொஞ்சம் என் கூட வரமுடியுமா ?" பாந்தமாக பாத்ரூம் அழைத்து செல்கிறார்........ஒரு சத்தத்தையும் காணோம்....கொஞ்சநேரம் கழித்து இருவரும் வெளியே வருகிறார்கள்.

சத்தமே காட்டாமல் வெள்ளைக்காரன் மெதுவாக வெளியே செல்கிறான். ஆபீசர் வந்து அவர் இருக்கையில் அமர, சிபி அண்ணன் மெதுவாக ஆபீசரிடம் கேட்க...

"அது ஒன்னும் இல்லை சிபி, பட்டுன்னு பாக்கெட்டில் வச்சிருந்த பிச்சுவா நியாபகத்துக்கு வந்துச்சு அதான் பாத்ரூம் கூட்டிட்டு போயி இடுப்புல ஒரு சொருவு சொருவுனேன் அதான் சத்தம் காட்டாம போறான்..."

சிபி அண்ணன் ஆபீசரை ஏற இறங்க பார்த்துவிட்டு, "ஏம்யா ஏன் இந்த கொலைவெறி"ன்னு அழுதுகிட்டே மேடைக்கு ஓடுகிறான்.
--------------------------------------------------------------------
மெட்ராஸ் பவன் : "ஹா ஹா ஹா ஹா ஹா...."

ஜாக்சன் : "என்ன மேன் இப்பிடி சிரிக்குறே...?"

மெட்ராஸ் : "என்கிட்டேவா ?"

ஜாக்சன் கலவரமாகிறான்..."மாட்டை கொட்டையில கட்டினியா, என்வீட்டு எருமை மாடை மேச்சியா, எங்க வீட்டு நாயிக்கு இறைச்சி வாங்கி அவிச்சி வச்சியா மானம் கெட்டவனே, இங்கே கூடியிருக்கும் எங்கள் பதிவர் கூட்டம் உங்கள் பறங்கியர் தலைகளை பதிவாக போட்டு விடுவார்கள் ஜாக்கிரதை" என்று கர்ஜிக்க...

ஜாக்சன் தனது இடுப்பில் இருந்த வாளை சிவா கையில் கொடுத்துவிட்டு காலில் விழுகிறான்.

சிவா மனதில் "அடடா மேடையில் பேசவேண்டிய டயலாக்கை இவன்கிட்டே சொல்லிட்டோமே"
----------------------------------------------------------------------

சென்னைபித்தன் : "ஸ்ஸ்ஸ்ஸ் அபா.....என்றபடி, "இங்கே பாரு ஜாக்சன் உனக்கும் தலையில் முடி வெள்ளை எனக்கும் வெள்ளை, அதனால நாம அப்பிடி இப்பிடி கொஞ்சம் விட்டு குடுப்போம், வா உனக்கு ஒரு கப் மூலிகை டீ  வாங்கி தாரேன் நீயும் இனி என்னைப்போல எப்பவும் இளமையாக இருக்கலாம் என்ன ?

அப்பிடியே கடற்கரைக்கு கூட்டிட்டு போயி மூலிகை டீ வாங்கி கொடுக்குறார், மூலிகை டீ இனிக்கும் என நினைத்த வெள்ளைக்காரன் ஒரு மடக்கு குடித்துவிட்டு ஓடிப்போயி கடலில் குதிக்குறான்.

தல மனசுல "எங்கிட்டெயெவாடா"
----------------------------------------------------------------------

தீதும் நன்றும் பிறர் தர வரா : "சோதனைமேல் சோதனை சோத்துப்பானைக்கு வேதனை.......என்னப்பா வரி வட்டி திரை கிஸ்தின்னு சொல்லிட்டே போறே, நான் எழுதும் கவிதைக்கும் வரியா ? " என்று வெள்ளைக்காரனை ஒரு சுற்று சுற்றிவிட்டு முறைக்கிறார்.

குரு என்னமோ சூன்யம் வச்சிட்டாருன்னு பயந்து நோ நோ சொல்லிட்டே ஓடுறான் ஜாக்சன்.
---------------------------------------------------------------------

புலவர் ராமானுசம் : "கவிதையால அறம்பாடி பரங்கியரை அழிச்சிருவேன் ராஸ்கோலு ஓட்ரா இங்கிருந்து" என்று கம்பெடுக்க...ஜாக்சன் எஸ்கேப்.
--------------------------------------------------------------------

மதுமதி : இங்கே பாரு ஜாக்சன், ரூம் போட்டு வச்சிருக்கேன், சாப்பாடு பண்ணி வச்சிருக்கேன், பாயாசமும் இருக்கு, வேண்டியதை சாப்புட்டுட்டு போ சரியா ?"

"சாப்பாட்டு மேடை எங்கே ?"

"அதோ அங்கே"

சாப்பாட்டு வாசலில் காவலுக்கு இருக்கும் ஆரூர் மூனா, இது நம்ம பதிவர்  ஜாதி சனம் மாதிரி இல்லையே என்று ஜாக்சனை புரட்டி எடுத்து அவன் மீது உட்கார வெள்ளைக்காரன் நசுங்கி போனான்.

மதுமதி மனதில் "சூப்பரா கோர்த்து விட்டோம்ல ஹி ஹி"
--------------------------------------------------------------------

கே ஆர் பி செந்தில் : பொருங்க பொருங்க பொருங்க கோவப்படாதீங்க எசமான், உங்க வரி வட்டி குட்டி எல்லாம் தாரேன் என்னை ஒன்னும் பண்ணிராதீக, அதுக்கு முன்னால என்னுடைய ஒரு வேண்டுதலை நீங்கள் கேட்கணும்."

"சரி சொல்லு சொல்லு"

"பக்கத்துலதான் ஒரு தியேட்டர்ல "தலைவா" படம் ஓடிட்டு இருக்கு ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்துருவோம் வாங்க"

படத்தில் சின்ன டாக்டரை திரையில் பார்த்தும் வெள்ளைக்காரன் மயங்கி கீழே விழுகிறான்.

கே ஆர் பி மனதில் : அப்பாடா நல்லவேளை சுறா பார்க்கலை, பார்த்துருந்தா செத்து கித்து தொலைஞ்சிருப்பான் "
---------------------------------------------------------------------

சி பி செந்தில்குமார் : "எதுக்குய்யா இப்பிடி கூட்டத்து  நடுவுல வந்து மானத்தை வாங்குறே ? கூப்ட்டு விட்டியன்னா உன் வீட்டுக்கே வந்து பாத்திரம் பண்டமெல்லாம் தேச்சு தந்து உன் கால்ல விழுந்துருப்போம்ல ?"

ஜாக்சன் : உன்னை நினைத்து நான் பெருமை படுகிறேன், உடனே வீட்டுக்கு வந்து சேர், புதிதாக நான்கு எருமை மாடுகள் வாங்கி இருக்கேன் சோப்பு போட்டு குளிப்பாட்ட வேண்டும்"

அண்ணன் மனதில் "ஆஹா கொஞ்சம் ஓவரா கூவிட்டோமோ"
---------------------------------------------------------------------

 காணாமல் போன கனவுகள் : "யோவ் மச்சான்.........எங்க அண்ணனுக்கு போனைப் போடுங்க, இங்கே ஒருத்தனுக்கு வட்டி பட்டி எல்லாம் வேணுமாம் ஒடனே வண்டியை பூட்டி வீச்சறுவாளை எடுத்துட்டு வரசொல்லுங்க"

ராஜி போட்ட சத்தத்தில் வெள்ளைக்காரன், இங்கே பாம் வச்சிருப்பாங்களோ என்ற நடுங்களில் ஓடுகிறான் ஏர்போர்ட் நோக்கி.

ராஜி மனதில் "ம்ஹும் நான் யாரு தங்கச்சி தெரியுமாலேய்"
---------------------------------------------------------------------

அஞ்சா சிங்கம் : வெளக்குமாரு வெளங்கிருச்சு போ, உன் பரங்கி தமிழில் தீயை வைக்க, டேய் வெள்ளைக்காரா என் பெயர் கஞ்சா சிங்கம் இல்லைடா டுபுக்கு, அஞ்சா சிங்கம், நான் மும்பை தாராவியையே அலறவச்சவன் தெரியுமா ? வேண்ணா கொஞ்சம் கஞ்சா தாரேன்"னு சொல்லிவிட்டு சுண்ணாம்பு தடவுன தம்பாக்கு கொடுக்க வெள்ளைக்காரன் ஒரே ஓட்டமா ஓடுறான்.

சிங்கம் மனதில் "இவன் ஓடுறதை பார்த்தால் பிளேன் வீல்லயே போயி விழுந்துருவானோ "
------------------------------------------------------------------

திண்டுக்கல் தனபால் : இந்தாப்பாரு உனக்கு வட்டி தரலைன்றதுக்காக உன் பதிவுக்கு வந்து கமெண்ட் லைக் எல்லாம் என்னால் போடமுடியாது, ஒன்னு செய் எங்க அண்ணன் சிபி இப்போ மேடைக்கு பேச வருகிறார், அவர் பேச்சை கேட்டுவிட்டு அப்புறமா பேசுவோம் ஓகே"

சிபி அண்ணன் மேடைக்கு பேச வந்ததும் பயங்கர கைதட்டல் சத்தம் வர, பலமான மழை பெய்யுதுடோய் என்று ஓடுகிறான் ஜாக்சன்.

தனபால் மனதில் "ச்சே தப்பிச்சிட்டானே, சிபி அண்ணன் பேச்சை கேட்டாம்னா செத்தே போயிருவான்லா நினைச்சேன்"
----------------------------------------------------------------

கே ஆர் விஜயன் : "சார் நான் ரொம்ப அமைதியானவன், கோவம் வந்துச்சுன்னா சிபி அண்ணன் மாதிரி பம்முற ஆளு நானில்லை ஆமா"

ஜாக்சன் " ஒ கோவமும் வருமா உனக்கு ?"

"கொஞ்சம் வெளியே வரமுடியுமா ?"

"ஒ ஷுவர் "

ஓங்கி மண்டை முடியை விஜயன் பிடிக்க அது அவர் கையோடு வந்து விடுகிறது, உஷாராகி வெள்ளையன் சட்டை காலரை பிடித்து ஒரு பைக்கை மட்டும் அவனை சுத்தவிட்டு அடி பின்னி விடுகிறார்.

விஜயன் மனதில் " மனோ மட்டும் இந்த சீனை பார்த்தாருன்னா நம்மகிட்டே சீனே காட்டி இருக்க மாட்டார்"
-------------------------------------------------------------------

 இம்சை அரசன் பாபு : "ஓ....அது நீங்களா அண்ணே, உங்களைத்தான் அண்ணே இம்புட்டு நாளும் தேடிகிட்டு இருக்கேன்"

"குட் பாய்"

"என்னாது குட் பாயா எங்க சிவாஜி கணேசன்கிட்டே வந்து வட்டி கேட்டது நீதானே ?"
என்று பின்னால் கைவிட்டு அருவாளை எடுத்து வீச, ஜாக்சன் குனிந்து தப்பிக்க பதிவர் கூட்டம் வந்து இம்சை அரசனை பிடித்து ஆசுவாசப்படுத்துகிறது.

இம்சை அரசன் மனதில் "மனோ அண்ணன் தந்த அட்டை அருவாளுக்கு இவ்வளவு வேல்யூ இருக்கா கி கி கி கி..."
-----------------------------------------------------------------

 மங்குனி அமைச்சர் : "ஏம்யா ஏன் ? இம்புட்டுபேர் ரவுண்டு கட்டியும் போதாதா உனக்கு ? அதான் வட்டியும் முதலுமா குடுத்துட்டாங்களே ?"

"சூரியன் அஸ்தமிப்பது இல்லை"

"உனக்கு நேரம் சரியில்லை"  என்று ஒரு ஸ்ப்ரே குப்பியை வெளியே எடுத்து வெள்ளையனை சுத்தி பங்க்லி பங்கா பங்க்லி பங்கா என்று பாட....அலறி ஓடுகிறான்.

மங்குனி மனதில் "நாங்களே ஒவ்வொரு ஊரா கலாயிச்சி காலி பண்ணிட்டு இருக்கோம் எங்கிட்டேவா ?"
------------------------------------------------------------------

சின்னவீடு சுரேஷ் : சரி வாய்யா வாய்யா வா உக்காரு முதல்ல, நான் ஒரு சின்ன கதை சொல்றேன் அதைக் கேட்டுட்டு அப்புறமா உன் டயலாக்கை சொல்லு."

"என்ன சின்னவீடு கதையா ஜொல்லு ஜொல்லு"

"வழியுறத பாரு ? சரி கதைக்கு போவோம், ஒரு ஊர்ல ஒரு போஸ்ட், அதோடு கதை லாஸ்ட்" வெள்ளைக்காரன் சுற்றி முற்றி பார்க்குறான். எஸ்கேப்.

சுரேஷ் மனதில் "இருந்த இடத்தில் இருந்தே கோயம்புத்தூரை ஆட்சி செய்யிறவிங்க நாங்க என்கிட்டேவா?" என்று எழும்ப முடியாமல் குலுங்கி சிரிக்குறார்.
---------------------------------------------------------------

 கோவை நேரம் ஜீவா : பனங்கள்ளும் குடல் கறியும் சாப்புட்டுட்டு இருக்கும்போது எதுக்குய்யா வம்புக்கு வாறே ? சிங்கப்பூர்லயும் வெள்ளையாத்தான் இருக்கானுக நீயும் வெள்ளையாத்தான் இருக்க ?

அவனுக இப்பிடி புட்டி ச்சே வட்டி கேட்டதில்லையே ? சரி வா பனங்கள்ளு கொஞ்சம் குடி என்று கொடுக்க, ஒரு மடக்கு குடித்தான் புளிப்பை பார்த்து ஓடுகிறான் தலைதெறிக்க.
--------------------------------------------------------------
டிஸ்கி : சென்னை பதிவர்கள் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்று பதிவர்கள் யாவரும் மனநிறைவோடு சென்று மகிழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே வாழ்க வளமுடன் சுகமுடன்...!

20 comments:

  1. பாவம் ஜாக்‌ஷன் இப்படிபட்ட இம்சைகள்லாம் இங்க இருக்குன்னு தெரிஞ்சுக்காம வந்து மாட்டிக்கிட்டாரு!!

    ReplyDelete
  2. கலக்கல் ......அப்படியே நம்ம வீடு திரும்பல் மோகன்குமார் ஜாக்சன் துரைகிட்ட விளிம்பு நிலை வெள்ளைக்காரன் பேட்டி எடுத்த கதையை சொல்லாமல் விட்டுடீங்க .

    ReplyDelete
  3. பதிவர் மாநாட்டுக்கு இப்படி கூட நாடகம் போடலாம் போலிருக்கிறதே! வித்தியாசமான, கலக்கலான‌ கற்பனை!

    ReplyDelete
  4. செம ரகளை அண்ணே!!

    ReplyDelete
  5. //சிபி அண்ணன் ஆபீசரை ஏற இறங்க பார்த்துவிட்டு, "ஏம்யா ஏன் இந்த கொலைவெறி"ன்னு அழுதுகிட்டே மேடைக்கு ஓடுகிறான்.//
    சிபியை ஏன் இப்படி கொலையா கொல்றீங்க! ஹா ஹாஹா

    ReplyDelete
  6. மிகவும் ரசித்தேன்
    இப்பிடியெல்லாம் யொசிக்க மனசு
    ஃப்ரீயா இருக்கணும்
    மூளையில் அதிக சரக்கிருக்கணும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வித்யாசமா சிந்தித்து பதிவு போட்டிருக்கீங்க. அசத்தலா இருக்கு மனோ

    ReplyDelete
  8. சென்னைப்பதிவர் சந்திப்பு சூடு பிடிக்கத்தொடங்கிருச்சு!

    ReplyDelete
  9. வித்தியாசமான கற்பனை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நகைச்சுவை மிளிரும் கற்பனை அருமை! நன்றி!

    ReplyDelete
  11. ஹா... ஹா.. இப்படி எத்தன பேரு கிளம்பிட்டிங்க...? நகைச்சுவை சிரிக்க வைத்தது. சென்னை பதிவர் சந்திப்பு களை கட்டுது...

    ReplyDelete
  12. சிரிப்பு வெடிதான் பதிவாளர்கள் சகிதம் !:))))

    ReplyDelete
  13. கலக்கிட்டீங்க மனோ!வளமான கற்பனை! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  14. சிரிப்பு சரவெடிதான்....

    ReplyDelete
  15. ஒவ்வொன்னும் சிரிச்சி சிரிச்சி படிச்சேன்...

    ReplyDelete
  16. இன்தமிழ் திருவிழா
    செந்தமிழ் தேவியின்
    புத்திரர்கள் கூடும்
    பெருந்திரள் திருவிழா...
    விழா சிறக்கட்டும்...
    மனமார்ந்த வாழ்த்துகள்..
    ===
    ஜாக்சன் துரை சட்னியாகிவிட்டார்
    ஹா ஹா ஹா

    ReplyDelete
  17. அன்பின் மனோ - பாவம் ஜாக்சன் - இருந்தாலும் பதிவர் சந்திப்புக்கு வரேன்னு சொல்லி இருக்கான் போல - நலலாருக்க்கு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. அண்ணே...
    கலக்கிட்டிங்க...
    அருமை...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!