Thursday, July 10, 2014

போலீஸின் கொசு மருந்தடித்தல் !

ம்ம்ம் இன்னைக்கு "கும்கி" படம் பார்த்தேன்....செங்கோவி ஸ்டைல்ல படத்தை உரிச்சா...

கிளைமாக்ஸ்ல யானை செத்துரும்ன்னு யானை லாரியை விட்டு இறங்க மறுக்குறப்பவே  தெள்ள தெளிவா தெரிஞ்சிருது.

எங்கப்பனை குடிக்க வச்சே கொன்னது நீதானென்னு சொன்னதில் இருந்தே தம்பி ராமய்யாவின் காமெடி அவுட்டே.

ஹீரோ எப்பவுமே சீரியஸாவே இருக்கார், அந்த கேரக்டராகவே மாறி இருக்கார் விக்ரம் பிரபு.

ஹை பண்ணு மாதிரி பொண்ணு.... [[கதாநாயகி]] கொஞ்சம் நடிக்கவும் செய்யுது.

"அய்யய்யோ" பாட்டு செம மெலடி ரொம்ப நாளைக்கு பிறகு காதுக்கு இனிமை.
காமெரா சான்சே இல்லை கண்ணுக்கு குளிர்ச்சியோ குளிர்ச்சி, அதுவும் அந்த அருவியின் மேலிருந்து கேமரா...எனக்கே தலை சுற்ற அப்பப்பா !

மூன்று வில்லன், ஒன்று காட்டு யானை அடுத்து அந்த கிராம தலைவரும் கிராமமும், இன்னொன்னு ஃபாரஸ்ட் அதிகாரிகள்.

ஆக மொத்தத்தில் காதல் தோல்வி [[கிளைமாக்ஸ் சொதப்பல்தான், காதலர்களை பாரம்பரியத்தை மீறி கிராமத்தை காத்த யானைக்காகவும், ஹீரோவின் நண்பன் மற்றும் மாமாவுக்காக அனாதையான ஹீரோவுக்கு ஊர் தலைவரின் பொண்ணை சேர்த்து வைத்திருக்கலாம், ம்ஹும் அதானே நம்ம சினிமா பண்பாடு ?]]

விமர்சனம் சிம்பிள்...."யானை"
---------------------------------------------------------------------------------------------------

அப்பிடியே போனா எப்பிடி இதையும் படிச்சுட்டு போங்க...


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், போலீஸ், உளவுத்துறை போன்றவைகள் குற்றவாளிகளை வலைவீசி பிடிக்கும் விதத்தின் பெயர் என்ன தெரியுமா ?
"கொசு மருந்தடித்தல்"

தெருவுல மருந்தடிச்சா கொசு வீட்டுக்குள்ளே வந்து ஒளித்துக் கொள்ளும், வீட்டுக்குள்ளே மருந்தடித்தால் கொசு வெளியே ஓடிவிடும் !

அப்படிதான் இவர்களும் பத்திரிக்கைகளுக்கு நியூஸ் கொடுப்பார்கள், பெரும் குற்றம் செய்தவன் எவனும் பத்திரிக்கை பார்க்காமல் இருக்க மாட்டான் இல்லையா ?

"இதோ குற்றவாளியை சுற்றி வளைத்து விட்டோம் [[புரளிதான்]] என்றால் குற்றவாளி கலங்கிய குளத்தின் மீனாவான், ஒரே அமுக்கு...
அப்புறம்...

குற்றவாளி தன் முகத்தில் மாற்றம் கொண்டு வந்துவிட்டான் அவனை கண்டு பிடிக்க மிக சிரமமாக இருக்கிறது என்றால், குற்றவாளி பக்கத்தில் இருக்கிறான் என்று அர்த்தம், அவனும் சந்தோஷமாக வெளியே வருவான் ஒரே அமுக்கு...

அப்புறம்...?

அப்புறம் என்ன அப்புறம் ? என்கவுண்டர்தான் அப்புறம் !
கூட்டி கழிச்சு பாருங்க நான் சொல்றது சரியான்னு ?

ரகசியத்தை சொல்லிப்புட்டேனோ ஆபீசர் அவ்வ்வ்வ்....

12 comments:

  1. பட விமர்சனமும்
    சுருக்கமாக ஒரு ராஜ ரகசியம்
    சொல்லிப்போனவிதமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அட...! சிம்பிள் விமர்சனம் சூப்பர்...!

    ரகசியம் போச்சி..!

    ReplyDelete
  3. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    என்பக்கம் கவிதையாக
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை???

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. போலீஸ் மேட்டர் சூப்பர்ணே.

    ReplyDelete
  5. ரகசியமாய் ஒரு ரகசியம் சொல்லியமைக்கு நன்றின்னே! கும்கி இவ்ளோ நாள் கழித்தா பார்த்தீர்கள்!

    ReplyDelete
  6. சூப்பர் ரகசியம்... கும்கி இப்பத்தான் பாத்தீங்களா? பாடல்கள் அனைத்துமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்....

    ReplyDelete
  7. பட விமர்சனம் அருமை...
    கொசு மருந்தடித்தல் என்பது பத்திரிக்கையில் குற்றவாளியை நெருங்கிவிட்டோம்... இன்னும் இரண்டு நாளில் பிடித்து விடுவோம் என்பதுதான்... அதையும் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா....

    ReplyDelete
  8. நச்சென்றிருந்த விமர்சனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  9. தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி

    ReplyDelete
  10. மனோ நலமா?///விமர்சனம் நன்று!கொசு மருந்தடித்தலும்.................!

    ReplyDelete
  11. மனோ நலமா?///விமர்சனம் நன்று!கொசு மருந்தடித்தலும்.................!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!