Friday, January 13, 2017

சந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 4...!


விஜயனுக்கு போன் செய்து உடனே மும்பை போக ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண சொன்னேன், காரணம், ஜனவரி 2 ஆம் தேதி நான் பஹ்ரைனில் இருந்தாக வேண்டும் இல்லையெனில் விசா கேன்சலாகிவிடும்.....

அவரும் உடனே எந்த ரயில் மும்பைக்கு இருக்கிறது என்று விசாரித்து, குறிப்பிட்ட தேதியில் வெயிட்டிங் லிஸ்ட் 26 இருப்பதாக சொன்னார், ஒருவேளை கன்பார்ம் ஆகவில்லையெனில் கஷ்டம்...பெண் பிள்ளை கூட இருப்பதால் நெடுந்தூரம் பயணத்திற்கு அது உகந்ததல்ல...எனவே போகும் நாள் முன் வரைப் பார்ப்போம் இல்லையெனில் தட்கலில் எடுக்கலாம் என்றதும், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கட்டை விஜயன் புக் பண்ணி வைத்துவிட்டார்.
ஊர் ஹோட்டல் அடுப்பு.

மகளுக்கு நம்ம ஊர் ஹோட்டல்களில் கிடைக்கும் வாழையிலை சாப்பாடு மிகவும் பிடிக்கும் என்பதால், காலையில் எழும்பி மகளையும் அழைத்துக்கொண்டு சாமிதோப்பு போயி ஹோட்டலில் தோசை வாங்கி கொடுத்து சாப்பிட வைக்கும் போது விஜயன் போன், "மனோ உங்க ஊருக்கு எப்படி வரணும் ? நாங்க வழுக்கம்பாறையில் நின்னுட்டு இருக்கோம்"ன்னு சொன்னார், வழி சொல்லிக் கொடுத்து விட்டு...

விஜயனும் ஆபீசரும் வருகிறார்கள் என்று மட்டும் வீட்டில் சொல்லி வைத்தேன்...வீடு கன்னியாகுமரி போகும் பாதையில் ரோட்டின் அருகில் இருப்பதால் நானும் விஜயன், ஆபீசரை எதிர் பார்த்து ரோட்டில் நின்றிருந்தேன்...
நானும் ஆபீசரும், கேசவன் பிள்ளை அவர்களும்...

கூட வந்தது நம்ம இம்சை அரசன் பாபு"வும், கேசவன் பிள்ளை சாரும், இன்ப அதிர்ச்சி...வந்து அமர்ந்து ஆறுதல்கள் சொன்னார்கள்...ரொம்ப நாட்கள் கழித்து பார்த்த சந்தோஷம் எல்லார் முகத்திலும்...போதாததுக்கு அரசியல் பேசி என் வீட்டம்மா, அண்ணன், அண்ணியை குலைநடுங்க வைத்துவிட்டு, அதே ஊரில் நண்பன் ராஜகுமாரையும் அவன் வீட்டில் போயி பார்த்துவிட்டு விடை பெற்று சென்றார்கள்...[மிக்க நன்றிகள் நன்றிகள்...]
விஜயன், கை மட்டும் தெரிவது நம் இம்சை அரசன் பாபு.

அம்மா நட்டு வைத்திருந்த வாழைமரத்தில் ஒன்று குலை விட்டு பழுக்கும் தருவாயில் இருந்தது, அநேக செடிகள் வீட்டின் பின்புறம் வளர்த்து வைத்திருந்தார்கள் அம்மா, வாடாமல்லி, கறிவேப்பிலை, துளசி, இன்னும் பெயர் தெரியாத அநேக செடிகள் அம்மாவை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தன...

அம்மா வளர்த்த பூனை ஒன்று வீட்டை சுற்றி சுற்றி அழுது கொண்டே இருந்தது தினமும், சாப்பாடு வைத்தாலும் சாப்பிடவில்லை...

நாகர்கோவில் எக்ஸ்பிரசில் டிக்கெட் ரெடியானதும், திருநெல்வேலியில் ஒரு தங்கைக்கு குழந்தை பிறந்ததை பார்த்துவிட்டு அப்படியே இரவும் தங்கை வீட்டில் தங்கிவிட்டு, அங்கிருந்தே மும்பைக்கு ரயில் பிடித்துவிடலாம் என்று பிளான் பண்ணி...
நாகர்கோவில் திருநெல்வேலி ரோடு.

ஒருநாள் முன்பாகவே தட்கல் டிக்கெட் பெறவேண்டும் என்ற விதி இருப்பதால்...விஜயனுக்கு போன் செய்து, ரிஸர்வேஷனை கேன்சல் செய்துவிட்டு தட்கலில் கன்பார்ம் பண்ண சொன்னேன்...

அவரும் தயங்காமல்...தட்கல் டிக்கெட் எங்கே கிடைக்கும் என விசாரித்ததில்...நம்ம நண்பர் "கூடல் பாலா" மூலம் ஏற்பாடு செய்து தந்தார், முதலில் விஜயன் ரிசர்வ் செய்த டிக்கெட் கடேசி வரை கன்பார்ம் ஆகாமல்தான் இருந்தது, அலட்ச்சியமாக விட்டிருந்தால் பெரும்பாடு பட்டிருப்போம், அநேகமாயிரம் நன்றிகள் விஜயனுக்கு, கூடல் பாலா"வுக்கும்...[டிக்கெட் காசு வெளிநாடு வந்துதான் அனுப்ப முடிந்தது கூடல் பாலா"வுக்கு, விஜயனுக்கு டிக்கெட் கேன்சல் செய்தமைக்கு காசு வெட்டி இருப்பார்கள்]

அடுத்தநாள் காலையில் குடும்பத்தில் யாவரிடமும் கண்ணீரோடு விடை பெற்று...அம்மாவின் நினைவுகளை மறுபடியும் சுமந்த வண்ணம் திருநெல்வேலி நோக்கி காரில் விரைந்தோம்...

அடுத்த பதிவில் முற்றும்.... 




3 comments:

  1. தொடர்கிறேன் நண்பரே....

    ReplyDelete
  2. அம்மா நட்டு வைத்திருந்த வாழைமரத்தில் ஒன்று குலை விட்டு பழுக்கும் தருவாயில் இருந்தது, அநேக செடிகள் வீட்டின் பின்புறம் வளர்த்து வைத்திருந்தார்கள் அம்மா, வாடாமல்லி, கறிவேப்பிலை, துளசி, இன்னும் பெயர் தெரியாத அநேக செடிகள் அம்மாவை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தன... அம்மா வளர்த்த பூனை ஒன்று வீட்டை சுற்றி சுற்றி அழுது கொண்டே இருந்தது தினமும், சாப்பாடு வைத்தாலும் சாப்பிடவில்லை..//////
    மனோ உங்கள் தாயாரைப் பார்த்தது கூட இல்லை ,ஆனால் இந்த வ்ரிகளைப் படிக்கும்பொழுது கண்கள் பனித்தன.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!