வலைப்பதிவுகளில் அழகான தரமான எழுத்து நடையில் எழுதி வந்த சில கன்னியாகுமரி மாவட்டம் பதிவர்கள் [[தமிழ் தெரிந்த மலையாளிகள் ]] எழுதுவதை சுத்தமாக நிறுத்திவிட்டார்கள்...!?
நான் பதிவுலகம் வந்த புதிதில்,மிகவும் பிரபலமாக இருந்த பதிவர் ஒருவரை சிலர் "நீ மலையாளி நாயர்தானே" என்று கிண்டலும் கோபமுமாக கமெண்டியதால், வெறுத்து போயி கிளம்பி விட்டார்கள்.
அவர்களின் தமிழ் எழுத்துகளுக்கு நான் ரசிகனாக இருந்தேன், கவிதைகள் புரியும் விதத்தில் அழகாக புனைவார்கள், சாடல் கோபம் கிண்டல் காதல் கல்யாணம் என்று வெரைட்டியாக நகைச்சுவை கலந்து எழுதி வந்தார்கள், வாசிக்க வாசிக்க ரசனையாக இருக்கும்...!
நம்மாளுகளுக்கு ஒருத்தன் நல்லா இருந்தாலே அவன் பூர்வீகத்தை தோண்டி [[நோண்டி]] பார்க்கும் குணம் எங்கிருந்து வந்துச்சோ தெரியல...!
தமிழை விரும்பிப் படித்து எழுதும் மற்ற மாநில நண்பர்களை எனக்கு மிகவும் பிடிக்கும், காரணம் எனக்கு மலையாளம் கற்று தந்த மலையாளி நண்பன் மோகன்சி, நான் மலையாளம் படிக்க ஆர்வமாக இருந்தேனோ இல்லையோ ஆனால் அவன் மிகவும் ஆர்வமாக மலையாளம் எழுத வாசிக்க கற்று தந்தான்.
அவர்கள் மொழியை நான் படிப்பதை அவர்கள் பெருமையாகவே கருதுகிறார்கள், எங்கே போனாலும், மலையாளிகள் அவர்கள் மொழியில் பேசுகிறார்கள், மராட்டியர்களும் அப்படியே....!
இந்தமுறை நான் ஊர்[[மும்பை]] போனபோது, எங்கள் ஏரியா கீரைத் தோட்டத்தில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து போனதையடுத்து, போலீஸ் விசாரனை ஆரம்பம் ஆனது, கீரைத்தொட்டத்தில் எங்கள் நண்பர்களே அதிகமாக அங்கே கொட்டம் அடிப்பதால், நண்பர்கள் மீது போலீஸ் பார்வைவிழ....
நண்பன் கிருஷ்ணா போலீஸ் இன்ஸ்பெக்டருடன் மராட்டியில் பேசி விஷயத்தை அவர்களுக்கு புரியவைத்ததுடன், சம்பந்தம் இல்லாத எங்கள் நண்பர்களையும் விசாரணையில் இருந்து காப்பாற்றினான்.
இவன் பேசிய மராட்டியை ரசித்த போலீஸ்காரர்களுக்கு அது பெருமையாக இருந்தது, ஒரு தமிழன் அழகாக மராட்டி பேசுகிறானே என்ற ஒரே காரணத்துக்காகவே எங்கள் நண்பர்களை போலீஸ் சுற்றி வளைக்காமல் விட்டது என்றே நான் மனதில் நினைத்துக்கொள்வேன்.
ஆம் அவர்கள் மொழியை அடுத்தவர்கள் பேசுவது அவர்களுக்குப் பெருமையாகவே இருக்கிறது.
இனி ஒருவாரத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம் சொல்றேன் பாருங்க....
எங்க ஹோட்டல் ரிசர்வேஷனை செக் பண்ணும்போது, சென்னையில் இருந்து சுப்பிரமணி அய்யர் என்ற பெயரில் ஒருவர் வருவதாக பார்த்தேன்...
அவரும் வந்தார் கூடவே ஒரு மலையாளி டாக்சிகாரன், என் முன்னிலையில் மலையாளியோடு அழகாக தமிழ் பேசினார், நான் தமிழில் பேசியபோதோ அண்ணாச்சி ஆங்கிலத்தில்தான் பேசினார், நான் எவ்வளவோ அவரைத் தமிழ் பேசவைக்கவேண்டும் என்று நினைத்தேனோ அவ்வளவு ஆங்கிலத்தில் டாக்கினார்...முடியாமல் போடாங்கொய்யா என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
ஸோ ஏன் நம்மாளுங்க இப்படி இருக்கிறார்கள்...? தமிழ் வாழனும் வாழனும் என்று வெறும் காற்றை ஊதினால் இப்படிதான் இருக்கும்.
தமிழ் நல்லா வாழும்டேய் போங்க...
தமிழ் எழுதுவோரை வாழ்த்துவோம், தமிழை நேசிப்பவரை நாமும் நேசிப்போம் அதுவே தமிழனுக்கு அழகு...!
----------------------------------------------------------------------------------------
இந்த வருஷம் சிறந்த எழுத்தாளர், சிந்தனை[!]யாளர், இணையதள போராளி, இணையத் தளபதி, இப்பிடியெல்லாம் விருது தரப்போறதாக தினமலர், குங்குமம், ஆனந்தவிகடன், குமுதம், சிபி, பன்னிகுட்டி, டெரர் குரூப் இன்னும் பலர் அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது [[சரி சரி விடுங்க விடுங்க]]
அவனவன் கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்டுறான்னா நீ கண்ணுக்குள்ளே காலையே விட்டு ஆட்டுறியேன்னு கல்லை தூக்கிறாதீக...
இனி இந்த வருஷம் முழுவதும் பதிவு எழுதவே கூடாதுன்னு தீர்மானம் பண்ணிருக்கேன், அடுத்த வருஷம் எழுதுறேன் போதுமா...? சந்தோஷமா...?
ஆமா ஆமா அடுத்த வருஷத்துக்கு ரெம்ப நாள் இருக்கு, அதுவரை நாங்கெல்லாம் என்ன செய்வது?கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா தலைவா!!!
ReplyDeleteஹி ஹி ஹி ஹி எதோ என்னால முடிஞ்சது இதுதான்....
ReplyDeleteதமிழ் எழுதுவோரை வாழ்த்துவோம், தமிழை நேசிப்பவரை நாமும் நேசிப்போம் அதுவே தமிழனுக்கு அழகு...!////இந்தப்பக்கம் க்டல் தாண்டி இருக்கும் எங்களை கொஞ்சம் நோக்குக!
ReplyDeleteஉங்களை நன்றாகவே நோக்குகிறோம், நேசிக்கிறோம் டீச்சர்...
ReplyDeleteஇந்த வருஷத்தின் சிறந்த எழுத்தாளர், சிந்தனை[!]யாளர், இணையதள போராளி, இணையத் தளபதி நாஞ்சில் மனோ........ ஒரு தரம்..... ரெண்டு தரம்..... மூணு தரம்.......
ReplyDelete//////இனி இந்த வருஷம் முழுவதும் பதிவு எழுதவே கூடாதுன்னு தீர்மானம் பண்ணிருக்கேன், அடுத்த வருஷம் எழுதுறேன் போதுமா...? சந்தோஷமா...? //////
ReplyDeleteநல்ல தீர்மானம், அடுத்தவாரமும் இதே தீர்மானத்த எடுத்தா நல்லது....
'ஐயோ..இனிமே பதிவுலகத்தை யாரு காப்பாத்துவா?'-ன்னு பதறிப் போய் வந்தால்...............நக்கலா?
ReplyDelete'பன்னிக்குட்டி ராமசாமி'....ஆ!..இவரு இன்னும் பதிவுலகத்துல தான் இருக்காரா?
ReplyDeleteஎப்படியோண்ணே, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர் சார்
ReplyDelete/////செங்கோவி said...
ReplyDelete'பன்னிக்குட்டி ராமசாமி'....ஆ!..இவரு இன்னும் பதிவுலகத்துல தான் இருக்காரா?//////
யோவ் யோவ்...... கொஞ்சம் கேப்பாகி போச்சு (எனக்கு மட்டும்தானா?) நாளைக்கு வருசக்கடைசி பெசல் பதிவெல்லாம் போட போறேன்... நானும் பதிவர்தான்யா..... கழட்டி விட்றாதீங்க.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇந்த வருஷத்தின் சிறந்த எழுத்தாளர், சிந்தனை[!]யாளர், இணையதள போராளி, இணையத் தளபதி நாஞ்சில் மனோ........ ஒரு தரம்..... ரெண்டு தரம்..... மூணு தரம்.......//
யோவ் குண்டுகட்டா தூக்கி பேக்கப் பண்ணிராதீங்கய்யா....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////இனி இந்த வருஷம் முழுவதும் பதிவு எழுதவே கூடாதுன்னு தீர்மானம் பண்ணிருக்கேன், அடுத்த வருஷம் எழுதுறேன் போதுமா...? சந்தோஷமா...? //////
நல்ல தீர்மானம், அடுத்தவாரமும் இதே தீர்மானத்த எடுத்தா நல்லது....//
ஓ அவ்வளவு சீக்கிரமா உங்க எல்லாரையும் சீவனோடே விட்டுருவேனா என்னா?
செங்கோவி said...
ReplyDelete'ஐயோ..இனிமே பதிவுலகத்தை யாரு காப்பாத்துவா?'-ன்னு பதறிப் போய் வந்தால்...............நக்கலா?//
ஹா ஹா ஹா ஹா பதிவுலகத்தை காப்பாத்த இனி ஆந்திராவுல இருந்துதான் வரணும்....கமல் தசவாதாரத்துல சொன்னது மாதிரி ஹி ஹி.
செங்கோவி said...
ReplyDelete'பன்னிக்குட்டி ராமசாமி'....ஆ!..இவரு இன்னும் பதிவுலகத்துல தான் இருக்காரா?//
இருக்காராவா....? அண்ணன் பயங்கர பிஸி.....புதுசா மான்கொம்பு லேகியம் பிசினஸ் ஆரம்பிச்சிருக்காராம்.
செங்கோவி said...
ReplyDeleteஎப்படியோண்ணே, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!//
அப்பிடியே உங்களுக்கும் வாழ்த்துகள்....
சக்கர கட்டி said...
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர் சார்//
எதுய்யா நான் அடுத்த வருஷம் வாறதா...?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////செங்கோவி said...
'பன்னிக்குட்டி ராமசாமி'....ஆ!..இவரு இன்னும் பதிவுலகத்துல தான் இருக்காரா?//////
யோவ் யோவ்...... கொஞ்சம் கேப்பாகி போச்சு (எனக்கு மட்டும்தானா?) நாளைக்கு வருசக்கடைசி பெசல் பதிவெல்லாம் போட போறேன்... நானும் பதிவர்தான்யா..... கழட்டி விட்றாதீங்க..//
அய்யோ அய்யூ அய்யோ எவன் தலையெல்லாம் உருளப்போகுதோ தெரியலையே...
சரிங்க
ReplyDeleteஅப்பாடா ....
ReplyDeleteஒரு நாள் ஓராண்டு ஆன கதை நன்றாகவே இருந்தது.
ReplyDelete//தமிழ் எழுதுவோரை வாழ்த்துவோம், தமிழை நேசிப்பவரை நாமும் நேசிப்போம் அதுவே தமிழனுக்கு அழகு...!//
இந்த உணர்வே நம் எல்லோரையும் இணைத்துள்ளது. அது தொடரும்.
நீங்கள் ஓய்வு எடுத்தால் என்னாவது வாசகர்கள் நிலமை அப்புறம் எப்படி இணையப்போராளி பட்டம் எல்லாம் தருவது:)))
ReplyDeleteநோண்டி சிலரை ஏழுதவிடாமல் தடுப்பதில் நம்மவர்கள் ஒரு சாதனையே செய்துவிடுவார்கள் .ம்ம்ம்
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteசெங்கோவி said...
'பன்னிக்குட்டி ராமசாமி'....ஆ!..இவரு இன்னும் பதிவுலகத்துல தான் இருக்காரா?//
இருக்காராவா....? அண்ணன் பயங்கர பிஸி.....புதுசா மான்கொம்பு லேகியம் பிசினஸ் ஆரம்பிச்சிருக்காராம்.
//
வருசக் கடைசீல அண்ணன் நிலைமை 'அப்படி' ஆகிடுச்சா? அதுக்குத்தான் ஒரு ஸ்பெசல் பதிவு போடப்போறாரா..நல்லது!
அண்ணே இப்படியெல்லாம் அவசரப்பட்டு தீர்மாணம் போடக்கூடாது! நல்ல பகிர்வு! நன்றி!
ReplyDeleteஅண்ணாச்சி புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete