Sunday, March 11, 2012

பயணங்கள் முடிவதில்லை பார்ட் மூன்று...!!!

கூடல்பாலாவையும் விஜயனையும் சந்திக்க சற்று பதட்டத்தொடுதான் ஊரில் இருந்து நண்பன் ராஜகுமாரையும் கூப்பிட்டுட்டு கிளம்பினேன். காரணம் அணுமின் நிலைய போராட்டத்தை கடுமையாக எதிர்க்கும் விஜயனும், அணுமின் நிலைய போராட்ட களத்தில் உயிரையும் துச்சமாக நினைத்து போராடும் கூடல்பாலா'வின் சந்திப்புதான் என்னை கலவரப்படுத்தியது...!!!



நான் நாகர்கோவில் வந்து சேரும் முன்னரே கூடல்பாலா உமன் காலேஜ் பக்கம் இருப்பதாக போன் செய்தார், சரி அங்கேயே நில்லுங்கள் நான் இன்னும் பத்து நிமிஷத்தில் வந்து விடுவேன்னு சொன்னதும் ஓகே சொன்னார்.


நான் விஜயன் கடை முன்பு இறங்கி நிற்கவும், சரியாக [[கண்ணாடி மகிமை]] வந்து கைகுலுக்கினார் கூடல்பாலா, சரி வாங்க விஜயன் ஆபீசுக்கு போவோம்னு கூட்டிட்டு போனேன் [[நெஞ்சம் லப்டப்]]


மேலே போனால் விஜயன் இல்லை, ஆஹா ஆளு எஸ்கேப் ஆகிட்டாரோன்னு அவர் பி ஏ'கிட்டே சொல்லி போனை போட சொன்னேன், போனை போட்ட [[கீழே இல்லை]] பெண், அண்ணே நீங்க இருங்க இப்போ வந்துருவேன்னு சொல்றான்னு சொல்ல, நாங்க பேசிட்டே இருந்தோம்.


கீழே எனக்காக காத்திருக்கும் நண்பனின் நினைவு வரவும் அவனுக்கு ஒரு பாட்டில் தண்ணீர் [[ஸ்ஸ்ஸ்ஸ் எவம்லேய் அது]] வாங்கி குடுக்க கீழே இறங்கி வந்து அவனுக்கு தண்ணீரை வாங்கி குடுத்துட்டு வரவும் கீழே இருக்கும் இளநீர் கடையில் விஜயன் இளநி வாங்கிட்டு இருந்தார்.


அப்படியே எனக்கும் ஒரு இளநி வாங்கி தந்தவர், கூடல்பாலாவுக்கும், ராஜகுமாருக்கும் வாங்கி கொடுத்தார், கூடல்பாலாவுடன் எங்கள் சந்திப்பு தொடர்ந்தது [[ நான் படபடப்புடன்]]


உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டமையால், உண்ணாவிரதம் முடிந்ததும் ஹெவியாக சாப்பிட்டதுதான் வயிற்றில் பிரச்சினை என்று சொன்னார்,  கூடல்பாலாவுக்கு வயிற்று புண் இன்னும் சரியாக வில்லை என்றும் சொன்னார், மனசுக்கு கவலையாக இருந்தது எனக்கும் விஜயனுக்கும், விஜயன் சொல்லி சொல்லி வருத்தப்பட்டார் என்னுடன்.


பேச்சு அணுமின் நிலையம் பக்கம் திரும்பியது, கூடல்பாலா அங்கே நடக்கும் பிரச்சினைகள் பற்றி விலாவரியாக விவரிக்க தொடங்கினார், சில பல கேள்விகளை விஜயன் யதார்த்தமாக கேட்க எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னார் கூடல்பாலா.


அங்கிருந்தே உதயகுமாருக்கு போனை போட்ட கூடல்பாலா, அவர் முதலமைச்சரை சந்தித்து விட்டு இன்று காலைதான் ஊருக்கு வந்து தூங்கிட்டு இருப்பதாக சொன்னார்.


சரி உதயகுமார் முதல்வர் சந்திப்பு என்னாச்சுன்னு கேட்டோம் [[பத்திரிக்கைகளின் செய்தி ஏற்கனவே வந்தாலும்]] "ஆகட்டும் பார்க்கலாம்" என்று பொறுப்பாக [[!!!]] பதில் சொன்ன அம்மா'வின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு [[முடியல]]


கூடல்பாலா'வை பார்க்கும் போது பரம சாதுவாக தெரிகிறார், ஆனால் தெளிவாக தீர்க்கமாக பேசுகிறார், பேச்சில் போராட்டத்தின் வைராக்கியம் நன்றாகவே தெரிகிறது....!!!


அண்ணே அப்படியே போராட்டக்காரர்களை அரசாங்கம் பொய் கேசில் கைது செய்தாலும் மக்கள் போராட்டம் தொடரும் என்று சொன்னார்...!!!


அப்படியே அமர்ந்து போட்டோக்கள் எடுக்க துவங்கினோம் [[காரியத்துல கண்ணா இருப்போம்ல]] இதற்கிடையில் எனது லேப்டாப்பை ஒப்பன் செய்யவும், ஆபிசரின் ஒரு பதிவு மெயிலில் இருக்க, படித்து கமெண்ட்ஸ் போட்டுட்டேன், இதை கவனித்த ஆபீசருக்கு பலமான டவுட்டு வந்துருச்சு எங்கே நான் வீட்டை விட்டு இன்னும் கிளம்பலையோன்னு நினைச்சவர்....


உடனே போன் பண்ணிட்டார் நான் போனை விஜயன் கையில் கொடுத்துட்டேன் [[ஹா ஹா ஹா ஹா]] பேசிய விஜயன் ஆமாம் நாங்கள் நாகர்கோவிலில்தான் இருக்கோம் இதோ கிளம்பிட்டோம்னு சார்'னு சொல்றார்.


அடுத்து அணுமின் நிலையத்துக்கு எதிராக பால்குடம் ஏந்திய போராட்டம் இந்து முறைப்படி நடக்க இருப்பதாக சொன்னார் பாலா, அந்த போராட்டத்தின் போட்டோக்கள் எனக்கு மெயில் பண்ணி தந்தார், போராட்டத்தின் வீரியத்தை அதில் காண முடிந்தது...!!!


என்னதான் எதிர் எதிர் துருவங்களா பாலாவும் விஜயனும் இருந்தாலும், நட்பு என்பது "அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்பதை நேரில் பார்த்தேன் அன்று....!!! 

மீட்டிங் முடிந்து கீழே நிற்கும் நண்பன் ராஜகுமாரிடமும் சற்று பேசிவிட்டு செல்லுங்கள் என்று கூடல்பாலாவுக்கும், விஜயனுக்கும் கோரிக்கை வைத்தேன்.


கீழே வந்து அவனிடமும் சற்று நேரம் பேசிவிட்டு புறப்பட்ட கூடல்பாலாவை, அவர் போகவேண்டிய நாகராஜா கோவில் பக்கம் விஜயனே பைக்கில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தார்.

நண்பன் ராஜகுமாரையும் ஊருக்கு போகச்சொல்லி விட்டு, விஜயன் வந்ததும் திருநெல்வேலி கிளம்ப ஆயத்தமானோம், நேரம் பனிரெண்டரை மணி ஆனபடியால் சாப்புட்டுட்டே கிளம்புவோம்னு அந்த பிரபல மெஸ்'சுக்கு போயி சாப்பிட்டோம் ஆஹா அருமையான சாப்பாடு அதே ருசியுடன் [[நன்றி மக்கா]]

அடுத்தநாள் ஆபீசர் மகள் பிருந்தா'வுக்கு பிறந்தநாள் என்பதாலும், ஆபிசரின் மருமகன் இவர்கள் வீட்டுக்கு வருவதாக இருப்பதாலும் ஒரே நாள் புரோகிராமாக மாறி போனது.....!


இனி......நெல்லை பதிவர்கள் சந்திப்பும்,  தொடர்ந்து பாவநாசம் பயணம் பற்றியும் சொல்றேன்.......

யாத்திரை படரும்......

ஸ்பெஷல் டிஸ்கி : பால்குடம் ஏந்திய போராட்டம் கூடல்பாலா எனக்கு மெயில் அனுப்பிய போட்டோக்கள்தான் மேலே நீங்கள் பார்த்தது...!

43 comments:

  1. அடேய், ரிட்டர்ன் போறப்ப ஈரோடு வராம போய்ட்டியே, கூட யாரைதள்ளிட்டு வந்தே ங்க்கொய்யால, உண்மையை சொல்லிடு

    ReplyDelete
  2. கொள்கை வேறு நட்பு வேறு என்று நிரூபித்து விட்டது இந்த சந்திப்பு

    ReplyDelete
  3. மக்கா சௌக்கியமா?

    ReplyDelete
  4. படரட்டும்...படர்வோமில.

    ReplyDelete
  5. நெஞ்சில் லப்டப்
    நாஞ்சில் அண்ணன் லாப் டாப்

    என்று கமன்ட் அடிக்கலாம் என்று பார்த்தேன்...

    உண்மையான போராளிகளை காணும் பொழுது அந்த போராளிக்கு மரியாதை செய்த உங்கள் நண்பர் உயர்ந்து நிற்கிறார் என்று தான் கூற தோன்றுகிறது...

    இன்குலாப் ஜிந்தாபாத்
    இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் said...
    மொத வெட்டு//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...
    அடேய், ரிட்டர்ன் போறப்ப ஈரோடு வராம போய்ட்டியே, கூட யாரைதள்ளிட்டு வந்தே ங்க்கொய்யால, உண்மையை சொல்லிடு//

    எப்பிடிடா இப்பிடியெல்லாம் கண்டு பிடிக்குற அனுபவமா என்ன ஹி ஹி.

    ReplyDelete
  8. பாலா said...
    கொள்கை வேறு நட்பு வேறு என்று நிரூபித்து விட்டது இந்த சந்திப்பு//

    உண்மையும் சத்தியமும்...!!!

    ReplyDelete
  9. மனசாட்சி said...
    மக்கா சௌக்கியமா?//

    நலம் நலமறிய ஆவல்...

    ReplyDelete
  10. மனசாட்சி said...
    படரட்டும்...படர்வோமில.//

    நன்றிய்யா....

    ReplyDelete
  11. வணக்கம் மக்களே
    நலமா?

    இருவேறு குணம் கொண்ட
    பண்புகளின் நட்பு உள்ளங்களை
    உணர்த்தியமை அழகு...

    பயணம் தொடரட்டும்...

    ReplyDelete
  12. நெஞ்சில் லப்டப்
    நாஞ்சில் அண்ணன் லாப் டாப்

    என்று கமன்ட் அடிக்கலாம் என்று பார்த்தேன்...

    உண்மையான போராளிகளை காணும் பொழுது அந்த போராளிக்கு மரியாதை செய்த உங்கள் நண்பர் உயர்ந்து நிற்கிறார் என்று தான் கூற தோன்றுகிறது...

    இன்குலாப் ஜிந்தாபாத்
    இன்குலாப் ஜிந்தாபாத்//

    சரியாக சொன்னீர்கள் நண்பா...

    ReplyDelete
  13. மகேந்திரன் said...
    வணக்கம் மக்களே
    நலமா?

    இருவேறு குணம் கொண்ட
    பண்புகளின் நட்பு உள்ளங்களை
    உணர்த்தியமை அழகு...

    பயணம் தொடரட்டும்...//

    மிக்க நன்றி மக்கா....

    ReplyDelete
  14. //இளநீர் கடையில் இளநி வாங்கிட்டு இருந்தார்.//

    என்னது... இளநீர் கடைல இளநி விப்பாங்களா? சொல்லவே இல்ல.

    ReplyDelete
  15. இன்னும் தொடரும்......................................................................மா....!

    ReplyDelete
  16. கூடல் பாலா அவர்களின் முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

    ReplyDelete
  17. //இனி......நெல்லை பதிவர்கள் சந்திப்பும், தொடர்ந்து பாவநாசம் பயணம் பற்றியும் சொல்றேன்.......

    யாத்திரை படரும்.//

    வேணாம்னு சொன்னாலும் விடவா போறீங்க? மனசுல நித்யானந்தான்னு நெனப்பு..'யாத்திரை'யாம்ல!!

    ReplyDelete
  18. Mano...intha....
    Thodar (thollai)....
    Innumaa irukkaaaaaaaaaaa.....

    Ippa ennathaan
    solla vara....
    Mudivai seikkiram
    sollu......

    Unakku phone...
    Panna...en nanbargal....
    Waiting......

    Kadici warning....

    ReplyDelete
  19. பெரிய பெரிய ஆளுங்களை சந்திக்குற பிஸியில இந்த தங்காச்சியை மறந்துட்டீங்க போல.

    ReplyDelete
  20. மனோ னு ஒருத்தர் போன் பண்றேன்னு சொன்னார் .. அவர பாத்தா நாபகபடுத்துங்க

    ReplyDelete
  21. பயணங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  22. நல்லாப் பொழுது போகுது போல!தொடருங்கள்!

    ReplyDelete
  23. \\\நான் விஜயன் கடை முன்பு இறங்கி நிற்கவும், சரியாக [[கண்ணாடி மகிமை]] வந்து கைகுலுக்கினார் கூடல்பாலா\\\ லேப் டாப் மனோங்கிறத கூலிங் கிளாஸ் மனோன்னு மாத்திடலாமோ ..ஹி..ஹி..

    ReplyDelete
  24. மதுரை????????????
    என்னாச்சு??????????

    ReplyDelete
  25. MANO ANNA IS RETURN

    BE CARE FULL..

    ReplyDelete
  26. வணக்கம் பாஸ்
    எப்படி சுகம்?

    உங்கள் பயண அனுபவம் சிறப்பாக இருக்கு பல விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது தொடருங்கள்

    ReplyDelete
  27. சிவகுமார் ! said...
    //இளநீர் கடையில் இளநி வாங்கிட்டு இருந்தார்.//

    என்னது... இளநீர் கடைல இளநி விப்பாங்களா? சொல்லவே இல்ல.//

    ஸ்ஸ்ஸ்ஸ் அபா, விஜயன் பிளீஸ் ஒரு போவாண்டோமா பிளீஸ்....

    ReplyDelete
  28. விக்கியுலகம் said...
    இன்னும் தொடரும்........//

    என்ன தொடரும்....?

    ReplyDelete
  29. சிவகுமார் ! said...
    கூடல் பாலா அவர்களின் முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.//

    உண்மை வெல்ல வேண்டும்னு சொல்றீங்க ரைட்டு மக்கா...

    ReplyDelete
  30. சிவகுமார் ! said...
    //இனி......நெல்லை பதிவர்கள் சந்திப்பும், தொடர்ந்து பாவநாசம் பயணம் பற்றியும் சொல்றேன்.......

    யாத்திரை படரும்.//

    வேணாம்னு சொன்னாலும் விடவா போறீங்க? மனசுல நித்யானந்தான்னு நெனப்பு..'யாத்திரை'யாம்ல!!//

    எலேய் கூட திவானந்தா சாமியே இருக்கும் போது, நித்யானந்தா எல்லாம் ஜுஜிபி மக்கா, வழியை விடுங்க காற்று வரட்டும் [[சாரு நிவேதா வாழ்க ஹி ஹி]]

    ReplyDelete
  31. NAAI-NAKKS said...
    Mano...intha....
    Thodar (thollai)....
    Innumaa irukkaaaaaaaaaaa.....

    Ippa ennathaan
    solla vara....
    Mudivai seikkiram
    sollu......

    Unakku phone...
    Panna...en nanbargal....
    Waiting......

    Kadici warning....//

    இங்கே பக்கத்துல ஏதாவது மலை இருக்கா இந்த மனுஷனை கீழே பிடிச்சி தள்ளிருவோம்.

    ReplyDelete
  32. ராஜி said...
    பெரிய பெரிய ஆளுங்களை சந்திக்குற பிஸியில இந்த தங்காச்சியை மறந்துட்டீங்க போல.//

    ஒபாமா'வையே சந்திச்சாலும், அல்லது அமெரிக்காவுக்கே ராஜா ஆனாலும் என் தங்கச்சிக்கு நான் என்னைக்கும் அண்ணன்தான்......கொஞ்சம் பிசி'ம்மா மன்னிச்சு.....

    ReplyDelete
  33. என் ராஜபாட்டை"- ராஜா said...
    மனோ னு ஒருத்தர் போன் பண்றேன்னு சொன்னார் .. அவர பாத்தா நாபகபடுத்துங்க//

    ஆஹா சிபி கேட்ட அதே கேள்வியை கேக்குறாரே, ஆபீசர் ஹெல்ப் மீஈஈ........

    ReplyDelete
  34. சென்னை பித்தன் said...
    நல்லாப் பொழுது போகுது போல!தொடருங்கள்!//

    ஒன்னொன்னா நியாபகம் எடுத்து எழுதிட்டு இருக்கேன் தல...

    ReplyDelete
  35. koodal kanna said...
    \\\நான் விஜயன் கடை முன்பு இறங்கி நிற்கவும், சரியாக [[கண்ணாடி மகிமை]] வந்து கைகுலுக்கினார் கூடல்பாலா\\\ லேப் டாப் மனோங்கிறத கூலிங் கிளாஸ் மனோன்னு மாத்திடலாமோ ..ஹி..ஹி..//

    நீங்க என்ன சிபி'க்கு அண்ணனா இல்லை தம்பியா...? ரெண்டு பேரும் ஒரே கோணத்துல யோசிக்குறீங்க அவ்வ்வ்வ்வ் முடியலை....

    ReplyDelete
  36. தமிழ்வாசி பிரகாஷ் said...
    மதுரை????????????
    என்னாச்சு??????????//

    என்ன லொள்ளா
    ? கூப்பிட்டா வரமாட்டீங்க இப்போ சொல்லுங்க...? [[ஹி ஹி மாட்டிவுட்டுட்டேனா]]

    ReplyDelete
  37. siva sankar said...
    MANO ANNA IS RETURN

    BE CARE FULL..//

    அவ்வ்வ்வ்வ் ஆமாம்லேய் ஒடுங்கலேய் ஒடுங்கலேய்...

    ReplyDelete
  38. K.s.s.Rajh said...
    வணக்கம் பாஸ்
    எப்படி சுகம்?

    உங்கள் பயண அனுபவம் சிறப்பாக இருக்கு பல விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது தொடருங்கள்//

    நன்றி ராஜ்....

    ReplyDelete
  39. அன்பரே! நலமா!
    வலை வழி அடிக்கடி சந்திப்போம் எப்படியோ தொடர்பு
    தடை பட்டு விட்டது. வருத்தமே!
    இனியாகிலும் தொடர்வோம்
    வாருங்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. நட்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்வு நிருப்பிக்கின்றது உங்களின் பயண அனுபவம்.கூடல்பாலாவின் கைவண்ணம் போட்டோ அழகு  அவருக்கு சிறப்பு நன்றியைச் சொல்லிவிடுங்க மக்கா!

    ReplyDelete
  41. அண்ணா இளநீர் மட்டுந்தான் குடித்தீங்களா இல்லை அதற்குள் ஏதாவது தனியாக ஹீ ஹீ மனோ எஸ்கேப் ஆகின்றார் தனியாக பல இடங்களில் ஹீ ஹீ.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!