சவேரா கார் விரைவாக சீறிக்கொண்டிருந்தது நெடுஞ்சாலையில், திடீரென திவானந்தாவுக்கு ஒரு போன், ஆஹா அந்த லைனில் வந்தவருடன் ஒரு த்தூ ச்சே ச்சீ பாஷை பேசினார் பாருங்கள் விஜயன் ஜெர்க்காகி என் மீது வந்து விழ, விஜயன் கண்ணில் தண்ணியா கொட்டுட்டு இருந்தது...
எப்போ எங்கே கூப்பிட்டாலும் திவானந்தாவை பார்க்க உடனே கிளம்பி வருவாராம் அம்புட்டு அன்பாம், விஜயன் திவானந்தாவை ஏற இறங்க பார்த்தார் வெறியாக.....
அழப்புடாது நான் எப்பிடி ஜம்முன்னு உக்காந்து இருக்கேன் பாருங்க [[ஆனா கால் மட்டும் ஏன் இப்பிடி ஆடுது]] என ஆறுதல் கூறினேன், யோவ் எதுக்குய்யா பச்சை பிள்ளைங்களை இப்பிடி பயமுறுத்துறீங்க...?
அப்புறம்தான் ஆபீசர் விளக்கம் சொன்னார், போன் பண்ணியது திவானந்தா சுவாமிகளின் கேர்ள் ஃபிரண்டாம் அதுவும் டாக்டராம்[[அவ்வ்வ்வ்வ்வ்]] இப்போதான் விஜயன் நிமிர்ந்து உட்கார்ந்து சுவாரஸ்யமாக கேட்க தொடங்கினார் [[அலையுரதை பாருங்க]]
இதை கேட்டுகொண்டிருந்த சுதனுக்கும், சண்முகபாண்டிக்கும் கடுப்புதான் ஆனால் வெளியே காட்டி கொள்ளவில்லை [[ஹி ஹி ]] ஏன்னா ரெண்டும் பச்சை பிள்ளைங்க கல்யாணம் ஆகாத பிள்ளைங்க....!!!
போகும் வழியில் எல்லாம் மின்சாரம் போக்கு காட்டி கொண்டிருந்தது கொய்யால இந்த மின்வெட்டை கண்டு பிடிச்சவனை என்ன செய்யலாம் ராஸ்கல், மாட்டுக்கு பதிலா இவனை பூட்டி நிலத்தை உழவைக்க வேண்டும் [[அது வீராசாமியா இருந்தாலும் சரி நாறசாமியா இருந்தாலும் சரி]]
கார் இருளில் ஒளிக்கதிரை வீசி சறுக்கியது, அப்புறமா என்னை வெட்டுங்கடா வெட்டுங்கடா'ன்னு ஒரு பலி ஆடு கதருச்சு இல்லையா..? அதை எல்லாருமா சேர்ந்து வெட்டி [[ 499 ]] வெட்டி பொங்க வச்சு மகிழ்ந்தோம்....
ஆபீசர் ஒவ்வொரு இடமாக சொல்லிட்டே வந்தார் அவர் சொந்த ஊர் வரவும் அவரது வீட்டை காட்டினார் ஆனால் இருட்டில் தெரியவில்லை, நாளை பகலில் வரும்போது பார்க்கலாம் ஆபீசர் என்றேன்...
அப்புறம் பாவநாச நாதர் கோவிலை காட்டி தந்தார், பாவநாசம் என ஏன் பெயர் வந்தது என்றதுக்கு, பாவத்தை நாசமாக்கி விமோசனம் பெரும் ஸ்தலம் என்பதால் அப்பெயர் வரக்காரணம் என்றார்...
மகிழ்சியாக கடந்து போயி ஃபாரஸ்ட் எல்லையை அடைந்து, செக்போஸ்டில் வந்து கார் நின்றது, செக்போஸ்ட் பூட்டி இருக்க அங்கே செக்யூரிட்டிகள் நின்று கொண்டிருக்க, ஆபீசர் கண்ணை காட்டியதும் கார் டிரைவர் இறங்கி போயி இன்னார் வந்திருப்பதாக சொல்ல சொன்னார்...
டிரைவருக்கு பயிற்சி பத்தாது போலன்னு தெரிஞ்சதும், சுதனை அனுப்பினார் ஆபீசர், உள்ளே போயி செக்யூரிட்டியை நாலு அப்பு அப்பினாறான்னு தெரியவில்லை செக்போஸ்ட் தானாக திறந்தது, ஆபீசர் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டார், சுதன் சொன்னார் அண்ணே அது புதுசா வந்துருக்குற செக்யூரிட்டி அதான் நம்மை யாருன்னு தெரியலைன்னு சொன்னார்.
மலையில் சவேரா எகிறியது, காட்டு மிருகங்கள் எல்லாம் ரோட்டில் சர்வ சாதாரணமா வந்து நிற்குமாம், நானும் விஜயனும் ஆர்வமாக கார் வெளிச்சத்தை கவனித்து கொண்டிருந்தோம், மயான அமைதி அந்தக்காட்டில், திடீர்னு புலி காருக்குள் பாய்ந்து விடக்கூடாதுன்னு என் கார் கண்ணாடியை கொஞ்சம் யாருக்கும் தெரியாமல் ஏற்றி வைத்து விட்டேன் ஹி ஹி...
கார் ரிசார்ட் உள்ளே கம்பீரமாக புகுந்தது ஆபீசரைப்போல, ஒரே அமைதி அமைதி சற்று சூடாக இருப்பது போல தெரிந்தது ஆனால் நேரம் ஆக ஆக குளிரெடுக்க தொடங்கியது, ரூமில் போயி உடைகளை களைந்துவிட்டு ரிலாக்ஸ் ஆனோம், இரவில் அங்கே ஆட்கள் இருந்தாலும் காட்டு பன்றிகள் தைரியமாக வெளியே வருமாம்...!!!
திடீரென சுதன் கூப்பிட்டார் அதோ ஒரு காட்டுப்பன்றி என நான் ஓடிபோயி பார்த்தேன் உடனே விஜயனை கூப்பிட்டு போட்டோ எடுக்க சொன்னேன், விஜயன் கேமராவோடு ஓடிவர விஜயனை பார்த்ததும் பன்றி ஓடி மறைந்தது[[ஏனோ]]
[[விஜயனை பார்த்தது கண்ணுக்கு தெரியாமல் ஓடிப்போன காட்டுப்பன்றி]]
சுதன் சூப்பரான முறுக்கு, லட்டு, ஆரஞ்சு பழம், திராட்சை என சும்மா டைம்பாஸ்'க்கு சாப்பிட கொண்டு வந்ததையெல்லாம் போட்டு அரைத்தோம், என்னய்யா சுதன் முறுக்கு சூப்பரா இருக்கேன்னு சொன்னதும், அண்ணே இது உங்க ஊர் நாகர்கோவிலில் இருந்து வந்ததுதான் என்றார்...!!!
அந்த அழகான இதமான நேரத்தில் எல்லார் கண்களும் [[ சண்முகபாண்டிதான் ரொம்ப]] தேடியது அந்த 25 இ பி ஃபிகருங்களைதான், திவானந்தா சுவாமிகளை பார்த்த வேகத்தில் எல்லாம் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை போல [[ம்ஹும் நாசமாபோகட்டும் ஃபிகர்களின் சேவை]]
லேசாக மலை காற்று வீச அருமையாக இருந்தது, ஆனாலும் நான் இருக்கும் இடம் எதுன்னு எனக்கு புரியவில்லை விடியும்வரை,.....!,
சப்பாத்தி மட்டும் போதாதுய்யா கீழே போயி ஆப்பம் வாங்கிட்டு வான்னு சுதன் டிரைவரை விரட்ட, ஆப்பம் வந்தது ஆஹா சூப்பரான சிக்கன் கறி!!! செம ருசி, என்னய்யா இம்புட்டு டேஸ்ட்டா இருக்கேன்னு கேட்டதும், அண்ணே இது நம்ம ஹோட்டல்ல [[இவரும் சொந்த ஹோட்டல் வச்சிருக்கார்]] இருந்து ஸ்பெஷலா சின்ன வெங்காயம் போட்டு செய்ததுன்னு அடுத்தநாள் சொன்னார்..[[நன்றி மக்கா]]
ஒய்யார மலை காற்றில் ரிசார்ட் வெளியே வராண்டாவில், சிலு சிலுவென தண்ணீர் ஓடும் நதிக்கரை அருகிலும் ஓங்கி வளர்ந்து நிற்கும் மலைகளின் முகடுகளின் அருகிலும், கல்யானதீர்த்தம் அருவியின் கூரையிலும், அருகில் தெரியும் ஒரு அணையின் பக்கத்திலும், ஒரு மலை தாண்டினால் மாஞ்சோலை எஸ்டேட் பக்கத்திலும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் என்று எனக்கும் விஜயனுக்கும் சத்தியமாக தெரியாது அன்றைய பொழுது விடியும் வரை....!!!
அருவிகளும் மலைகளும் படர்ந்து ஓடும்......
டிஸ்கி : அற்புதமாக போட்டோ எடுத்து தள்ளி இருக்கிறார் விஜயன் எல்லா போட்டோக்களும் அசத்தல், நம்ம ஆபீசரும் போட்டோ எடுத்து இருக்கிறார், ஹி ஹி நானும், எல்லா போட்டோவையும் கலந்து போட்டு காட்டுகிறேன் தொடர்ந்து.....!!!
டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி ஆபீசருக்கும் விஜயனுக்கும்.
செமையா இருக்கு பாஸ்! போட்டோக்களும் சூப்பர். அதிலும் கடைசி போட்டோ சும்மா அள்ளுது!
ReplyDeleteகலக்குறீங்க! :-)
யோவ் காட்டுப்பன்றி எதிர்பார்த்தது உம்மைத்தான்.... ஆள் மாறிவிட்டதால் என்னை பார்த்து ஏமாற்றமடைந்து ஓடிவிட்டது. உமக்கும் அதுக்கும் ஏதோ பழைய டீலிங் பாக்கி இருக்கு போல...
ReplyDeleteயோவ் மனோ நிறைய போட்டோ மிஸ் ஆவுதே..... நீர் “உற்சாகமா” போஸ் கொடுத்த ஒன்றையும் காணோம்....?????
ReplyDeleteபாருய்யா..பாப்பா ஷார்ட்ஸ் எல்லாம் போட்டுருக்கு.
ReplyDelete//ரூமில் போயி உடைகளை களைந்துவிட்டு ரிலாக்ஸ் ஆனோம், இரவில் அங்கே ஆட்கள் இருந்தாலும் காட்டு பன்றிகள் தைரியமாக வெளியே வருமாம்...!!!//
ReplyDeleteஉடைகளை களைந்து விட்டு நின்ற பிறகு காட்டுப்பன்றிகள் வெளியே வருமா? மகா மோசமான அனிமல்சா இருக்கும் போல..!!
//அருவிகளும் மலைகளும் படர்ந்து ஓடும்......//
ReplyDeleteமலை ஓடுமா?
//நானும், எல்லா போட்டோவையும் கலந்து போட்டு காட்டுகிறேன் தொடர்ந்து.....!!!//
ReplyDeleteதொடர்ந்தா?? என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை...!!
இனிய அனுபவம்!அழகிய படங்கள்.!
ReplyDeleteஇந்த வயசுல கேர்ள் ஃப்ரெண்டா? அண்ணிக்கிட்ட சொல்லவா அண்ணா?!
ReplyDeleteமனோ நீ உருப்பிடவே மாட்டே....
ReplyDeleteகொலையா கொல்லுரானே....
இன்னும் எதனை பதிவு தேத்துவே????
அண்ணே வணக்கம் ..
ReplyDeleteசெம என்ஜாய்மென்ட் போல ..
கலக்குங்க ..
இந்த பதிவுகளையெல்லாம் ஒரு புக்கா போட்டு வைடா..எதிர்க்கால மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படும் ஹெஹெ!
ReplyDeleteநெறைய விஷயங்கள் சென்சார் பன்னிட்டியே..ஏன் வீட்டு காரம்மா மைண்ட்ல வந்து போனாங்க போல ஹிஹி@
ReplyDelete499
ReplyDeleteசார் முக்கியமான மேட்டர விட்டுட்டீங்க சார்......
ReplyDelete////கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteயோவ் மனோ நிறைய போட்டோ மிஸ் ஆவுதே..... நீர் “உற்சாகமா” போஸ் கொடுத்த ஒன்றையும் காணோம்....?????///////
அண்ணன் எப்பவுமே ”உற்சாகம்”தானே, அதை வேற தனியா போட்டோ எடுக்கனுமா?
////சுதன் சூப்பரான முறுக்கு, லட்டு, ஆரஞ்சு பழம், திராட்சை என சும்மா டைம்பாஸ்'க்கு சாப்பிட கொண்டு வந்ததையெல்லாம் போட்டு அரைத்தோம், என்னய்யா சுதன் முறுக்கு சூப்பரா இருக்கேன்னு சொன்னதும், //////
ReplyDeleteஎல்லாரும் நல்லா கேட்டுக்குங்கோ, அண்ணன் முறுக்கு சாப்பிட்டிருக்காராம் முறுக்கு.....
////// ! சிவகுமார் ! said...
ReplyDeleteபாருய்யா..பாப்பா ஷார்ட்ஸ் எல்லாம் போட்டுருக்கு.///////
யோவ் பீப்பா மாதிரி இருக்காரு, அவரைப் போயி பாப்பான்னு சொல்லி இருக்கீங்க? இதுல ஏதாவது ஊழல் கீழல் நடந்திருக்கா?
///// FOOD NELLAI said...
ReplyDeleteஅப்புறம் நீங்க அந்த ரூம்ல ஆவிகிட்ட பேசுனதை சொல்லவே இல்லை!//////
ஆபீசர், அவரு அதை ஆவின்னா சொன்னாரு.....?
//////விக்கியுலகம் said...
ReplyDeleteஇந்த பதிவுகளையெல்லாம் ஒரு புக்கா போட்டு வைடா..எதிர்க்கால மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படும் ஹெஹெ!//////
விட்டா தஞ்சாவூர் கல்வெட்டுலயும் செதுக்கி வைக்க சொல்லுவாங்க போல?
காட்டு பன்னி படத்துல தெரியவே இல்லையே சாமீய்!
ReplyDeleteமனோ பாவநாசம் நாதர் கோயில் எல்லாம் பார்த்தீங்களா நானும் போய் இருக்கின்றேன் மக்கா தொடருங்கள் பயணம் தொடர்கின்றேன்!
ReplyDelete