Wednesday, May 30, 2012

ஒரு வேஷ்டி கேட்டதுக்கு இம்புட்டு அக்கப்போரா....?



அதிகாலையில் எங்க [[மும்பையில்]] குருவிகளில் பாடல்களும் குயில்களின் கானங்களும் காக்கைகளின் இறைச்சலுமாக மனரஞ்சிதமான காலையாக இருக்கும். இப்போ சுத்தி சுத்தி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும், பில்டிங்கா வந்ததில் இருந்து இவைகளை வல்லுசா கானவே இப்போது, ஆனால் தெரு நாய்கள் பெருகிவிட்டது, அவைகளுக்குள் எல்லையையும் பிரித்து வைத்து உள்ளது, இவைகளின் அலறலில்தான் அவனவன் எழும்புகிறான் [[கடியும் வாங்குறான்]] எங்க ஏரியாவில்....!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்மாளு மாநகராட்சி தேர்தலில் [[சிவசேனா]] ஜெயிச்சதும் எங்க ஏரியாவில் சுத்தமாக கொசு இல்லை, நிம்மதியாக உறங்க முடிகிறது, மாநகராட்சிகாரங்க இப்போ எல்லாம் வீட்டுக்குள்ளே வந்து மருந்தடிக்கிறாங்க, இல்லன்னா தெருவுல மருந்தடிச்சு கொசுவை வீட்டுக்குள் அனுப்புவாங்க....!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------

பிள்ளைகள் கம்பியூட்டரை ஆபரேட் பண்ணும் போது கவனமாக வாட்ச் பண்ணனும்ன்னு சொன்னேன் வீட்டம்மாகிட்டே, தப்பா புரிஞ்சிகிட்டாளோ என்னமோ பயபுள்ளை என்னை கடுமையா வாட்ச் பண்ணுது.[[ச்சே என்ன உலகமோ போங்க]]
-------------------------------------------------------------------------------------------------------------------------------

காலையிலே சீக்கிரம் [[ஆறு மணிக்கு]] எழும்ப சொல்லி பக்கத்து வீட்டுக்காரி தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, விட்டா கதவை உடைச்சி வீட்டுக்குள்ளே புகுந்து என்னையும் வீட்டம்மாவையும் விழுந்து கடிச்சிருவாளோன்னு பயமா இருக்கு [[எல்லாம் ஒரு பாசம்தான்]] ஆனாலும் நான் எட்டு மணிக்குதான் எழும்புவேன் ஹி ஹி...!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------

நாகர்கோவில் போயி விஜயனிடம் எனக்கு ஒரு வேஷ்டி வேணும் வெளிநாடு கொண்டு போகன்னு சொன்னதும் சாவியை எடுத்துகொண்டு ஓடி வந்தார், ஆஹா ஏற்கனவே இவர் சைக்கிள் சிட்டிகுள்ளே படுபயங்கரமா ஓடும், இப்போ என்ன நடக்கபோகுதொன்னு நடுங்கிட்டு பின்னாடியே நானும் ஓடினேன், அப்பாடா சைக்கிள் இல்லை ஸ்கார்பியோ கார் அடடடா தப்பிச்சென்னு ஏறி உக்காந்தேன்.


பயபுள்ளை நேரே நெல்லையில கூட்டிட்டு போயி நம்ம ஆபீசர் முன்னாடி நிப்பாட்டிருச்சு, ஆஹா விஜயன் பலமா நம் சொம்பை நசுக்க பிளான் பண்ணியாச்சு ஒரு வேஷ்டி வாங்கனும்னு சொன்னதுக்கா இம்புட்டு பெட்ரோல்[!] போட்டு, இம்புட்டு தூரம் கொண்டு வரணும்னு மனசுக்குள் அழுதேன்.


ஆபீசர் கோபமாக ஒரு முறைச்சல் காட்ட, விஜயன் காதை பிடிச்சுட்டு குந்த வச்சி உக்காந்துட்டாரு, என் கால்கள் கட கடவென நடுங்கியதை பார்த்து ஆபீசர் சிரிக்கவே விஜயனும் நானும் நார்மல் ஆனோம்.

வேஷ்டி வேணுமா வாங்க ஒரு கடைக்கு போவோம், ஏற்கனவே பத்து வேஷ்டி ஆர்டர் பண்ணியிருக்கேன் எனக்கு, உங்களுக்கு ஒன்னு இருக்கான்னு கேட்டு பார்ப்போம் வண்டியை எடுங்க போலாம்னார். அந்த கடைக்கு போனதும் கடை உரிமையாளர் எழும்பி பாவியாக ச்சே ச்சீ பவ்யமாக எழும்பி நின்றார் ஆபீசரை பார்த்து.


வடை ஊழியர் ஸாரி கடை ஊழியர் உள்ளே ஓடிப்போயி ஆபிசரின் பத்து வேஷ்டிகளை கொண்டு வந்தார், எல்லாமே தங்க சரிகை பட்டை தரித்தவை, ஸ்பெஷலாக ஆர்டர் செய்து பண்ணப்பட்டது என்பதை புரிந்து கொண்டோம், அப்புறம் கடை முதலாளி காதில் என்னமோ சொன்னார் ஆபீசர்.

கொஞ்சநேரத்தில் முதலாளி மெரூன் கலர் சரிகை பட்டை வைத்த ஒரு வேஷ்டியை கொண்டு ஆபீசர் கையில் கொடுத்து விட்டு இன்னொரு பொருளையும் அதன் மீது வைத்து கொடுத்ததை ஆபீசர் எனக்கு தரவும், திரும்பி பார்த்த விஜயன் அந்த பொருளை பார்த்ததும், நெல்லை ஜங்க்சனில் குய்யோ முய்யோ என்று தலைதெறிக்க இறங்கி ஓடினார். ஆமாம் அந்த பொருளின் பெயர் "பெல்ட்", மனோ என் கண்ணையே உன்கிட்டே ஒப்படைக்கிறேன் அதில் நான் ரத்தகரையைதான் பார்க்கவேண்டும் என்று ஆபீசர் கோபமாக சொல்லவும்........

அய்யோன்னு அலறினேன், என்னப்பா ஆச்சு, தண்ணி வேணுமா, இல்லை மோர் எடுத்து தரட்டுமா ஏதும் கனவு கினவு கண்டீங்களா என்று என் வீட்டம்மா கேட்கவும்தான் தெரிஞ்சது அய்....."கனவு" [[யப்பா இப்பெல்லாம் ஆபீசர் கனவுலையும் வந்து மிரட்டுறாருய்யா]]
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விக்கி உலகம் விக்கிக்கு இன்னைக்கு கல்யாண நாள் வாருங்கள் நண்பர்களே அவனையும், அவன் குடும்பத்தையும் வாழ்த்துவோம்....!!! [[இன்னைக்கு அவன் பதிவுக்கு ஒரு தலைப்பு வச்சிருக்கான் பாருங்க, எனக்கு கண்ணெல்லாம் தண்ணியா ஊத்துது]]

23 comments:

  1. வாழ்த்த வயதில்லை
    இருந்தாலும் வாழ்த்துகிறோம்
    வாழ்க வளமுடன்

    அண்ணன் வழக்கம் போல கலக்கிவிட்டார் போஸ்ட் படம் எல்லாம் சூப்பர்..

    ReplyDelete
  2. எனக்கு புடிச்சது வேட்டி கனவுதான்....ஆனா சென்சார் செய்யப்பட்டு இருக்கு ஹிஹி!..........

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அண்ணே...நல்லா யோசிச்சி பாரு அந்த தலைப்புக்கு அர்த்தம் புரியும் ஹிஹி!

    ReplyDelete
  3. சதா நண்பர்களின் நினைவு ,கனவாக வந்துவிட்டது,கலக்கல் மனோ!

    ReplyDelete
  4. Siva sankar said...
    வாழ்த்த வயதில்லை
    இருந்தாலும் வாழ்த்துகிறோம்
    வாழ்க வளமுடன்

    அண்ணன் வழக்கம் போல கலக்கிவிட்டார் போஸ்ட் படம் எல்லாம் சூப்பர்..//

    நன்றி சிவா...

    ReplyDelete
  5. விக்கியுலகம் said...
    எனக்கு புடிச்சது வேட்டி கனவுதான்....ஆனா சென்சார் செய்யப்பட்டு இருக்கு ஹிஹி!..........

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அண்ணே...நல்லா யோசிச்சி பாரு அந்த தலைப்புக்கு அர்த்தம் புரியும் ஹிஹி!//

    அதான் கனவு காணுங்கள்ன்னு கலாம் சொன்னாரோ....???

    யோசிக்க இதுல என்னய்யா இருக்கு...?

    ReplyDelete
  6. செல்விகாளிமுத்து said...
    சதா நண்பர்களின் நினைவு ,கனவாக வந்துவிட்டது,கலக்கல் மனோ!//

    கனவுல வாறதுதான் வாறாங்க இப்பிடி கொலைவெறியோடவா வருவாங்க ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  7. நீ கண்ட கனவு அருமை நண்பா... கார்ப்பரேஷன் காரங்க கொசு மருந்தடிசசு கொசுவை வீட்டுக்குள்ள விரட்டுவாங்கன்னு சொல்லிருக்கீங்களே... ஹா... ஹா... சிரிச்சு முடியல... சூப்பரப்பு.

    ReplyDelete
  8. //அதிகாலையில் எங்க [[மும்பையில்]] குருவிகளில் பாடல்களும் குயில்களின் கானங்களும் காக்கைகளின் இறைச்சலுமாக மனரஞ்சிதமான காலையாக இருக்கும்.
    //

    இது உலக மகா பொய் .. நீங்க கலையில் எழுந்திரிப்பதே பத்து மணிக்குதானே .. அப்புறம் எப்படி இது தெரியும் ?

    ReplyDelete
  9. /////காலையிலே சீக்கிரம் [[ஆறு மணிக்கு]] எழும்ப சொல்லி பக்கத்து வீட்டுக்காரி தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, ////////

    அண்ணே................................

    ReplyDelete
  10. ////அய்யோன்னு அலறினேன், என்னப்பா ஆச்சு, தண்ணி வேணுமா, இல்லை மோர் எடுத்து தரட்டுமா ஏதும் கனவு கினவு கண்டீங்களா என்று என் வீட்டம்மா கேட்கவும்தான் தெரிஞ்சது அய்....."கனவு" [[யப்பா இப்பெல்லாம் ஆபீசர் கனவுலையும் வந்து மிரட்டுறாருய்யா]]////////////

    யோவ் யோவ்............ மொதல்ல நல்லதா ஒரு பச்ச பெல்ட்டு வாங்கி கட்டுங்கய்யா............

    ReplyDelete
  11. /////// விக்கியுலகம் said...
    எனக்கு புடிச்சது வேட்டி கனவுதான்....ஆனா சென்சார் செய்யப்பட்டு இருக்கு ஹிஹி!....////////////

    அடங்கொன்னியா.......... இது அந்த மேட்டரா?

    ReplyDelete
  12. முதல் படம் சூப்பர். நின்னு போஸ் கொடுக்க வைச்சு எடுத்த மாதிரி இருக்குது.
    நண்பன்னா கனவு விஜயன் மாதிரி இருக்கணும் எள்ளுன்னா எண்ணையா நிக்கிறாரே!!

    ReplyDelete
  13. கலக்கல்.... நண்பர் விக்கிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. எனக்கும் வேட்டி ,சாரம் பிடிக்கும் மனோ அதில் இருக்கும் சுகம் வேறு ஏதும் இல்லை அதுவும் அந்த நாயர் வேட்டியில் எனக்கு  ஒரு ஈர்ப்பு அதிகம் நல்ல படம் அது.கலக்கல் பதிவு மும்பையில் கொசு இல்லை என்பதும் தெரிந்து கொண்டேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  15. விக்கி மாமாம்ஸ்க்கு என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்குகள் சொல்லிவிடுங்கோ அண்ணாச்சி!

    ReplyDelete
  16. ஒரு வேஷ்டி கேட்டதுக்கு இம்புட்டு அக்கப்போரா....?
    ////////////////////////////////
    நல்ல வேளை மனோ கட்டியிருக்கிற வேஷ்டிய நீங்க கேட்கலை!

    ReplyDelete
  17. Hello, en vettiyai yen uruvitteenga? haa haa haa.

    ReplyDelete
  18. செம கனவு மக்கா.

    வாழ்த்துக்கள் விக்கி மாப்ள.

    ReplyDelete
  19. செம கனவு மக்கா.

    வாழ்த்துக்கள் விக்கி மாப்ள.

    ReplyDelete
  20. பதிவு நன்றாக இருந்தது சார். உங்கள் நாஞ்சில் தமிழ் மிகவும் ரசித்தேன்


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
  21. கண்ட கனவு அருமைவாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. அருமை அதிலும் அந்த வேஷ்டி!!!!!!!!!!!1டூப்பர்

    ReplyDelete
  23. kanavai nanavu pol kaattiya thangal ezhuththuth thiramaikku en vaazhththukkal.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!