இரவில் தலையணை மட்டுமே
அறிந்த கண்ணீர் இன்று
பகலில் குமுறலாக
வெளியரங்கம் ஆயிற்றே...!
தனிமை சில நேரம் சுகம்
சில நேரம் கொடுமை
இதை உணர்வது
தலையணை மட்டுமே...!
உறவுகளை பிரிந்து
அனாதையான நாடோடிகளின்
வாழ்க்கை துணையும்
தலையணை மட்டுமே.....!
-----------------------------------------
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றாலும் இப்படிதான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களின் நிலைமை பரிதாபமாக இருந்தாலும், நாளைய வெற்றி உனக்கே....!
----------------------------------------
சித்திரத்தில் சத்திரம் வரையலாம், சத்திரத்தில் சித்திரம் வரைய முடியாது...! [[சத்திரக்காரன் பிச்சிபுடுவான் பிச்சி]]
----------------------------------------
மதுரைக்கு வழி வாயில் இருக்கு.....
அப்போ வாயிக்கு வழி மதுரையில் இருக்குதா...?
-----------------------------------------
கும்பகர்ணனை யாராவது நேரில் பார்த்துண்டா....? ஆனால்....... நானும் ஆபீசரும், விஜயனும், கவுசல்யா ஜோதிராஜ், ஜோதிராஜ், திவானந்தா சுவாமிகள், ரூபினோ மேடம் எல்லாரும் பார்த்து இருக்கிறோம்....!
முகமூடி கொள்ளைக்காரன் இல்லை இது, நம்ம ஆபீசர்தான் கேரளாவுக்கு கோழிகளை கடத்துபவர்களை விரட்டி பிடிக்க போயிட்டு இருக்கார்.
-----------------------------------------
நம்ம ஆபீசர் அவருடைய செல்போனை யாரிடம் பேச கொடுத்தாலும் துடைத்துதான் கொடுப்பார், அந்த நல்ல பழக்கம் அவருடன் இருந்த எங்கள் எல்லாருக்குமே தொத்திகிச்சு...!!!
----------------------------------------
ராத்திரி சரக்கடித்து விட்டு வந்த நண்பன், "மனோஜ் நான் இப்பவே சாம்பார் வைக்கப்போறேன்"
"யோவ் அதான் கறி கூட்டு எல்லாம் இருக்கே போயி சாப்புட்டு தூங்கு"
"இல்லை நான் இப்பவே "ஸ்ஸ்ஸ்சாம்பார்" வைக்கப்போறேன்"
"எப்பிடியும் நாசமாப்போ நான் தூங்கப்போறேன்"
அடுத்தநாள் காலையில் அவன் வேலைக்கு போக.....மத்தியானம் சாப்பாட்டுக்கு "அந்த" சாம்பாரை சூடு பண்ணி வச்சுட்டு குளித்துவிட்டு [[இப்போ குளியல் நேரம் மத்தியானம் ஆகிருச்சு]]
அடுத்தநாள் காலையில் அவன் வேலைக்கு போக.....மத்தியானம் சாப்பாட்டுக்கு "அந்த" சாம்பாரை சூடு பண்ணி வச்சுட்டு குளித்துவிட்டு [[இப்போ குளியல் நேரம் மத்தியானம் ஆகிருச்சு]]
பிளேட்டில் சாதம், கத்தரிக்காய் கூட்டு, தயிரும் எடுத்து வைத்து விட்டு சாம்பாரை ஊற்றினேன்......காய்கறிகளும் அது கூட என்னமோ ரவுண்டா நீளமா கிடப்பதை பார்த்தேன், என்னடா சாம்பார்ல என்னமோ புதுசா போட்டுருக்கானேன்னு பார்த்தால்.....கொய்யால அது "ஆட்டு குடல்" அவ்வ்வ்வ்வ்.....ஒடுலேய் மனோ ஓடு....! [[டேய் பிக்காளி, சரக்கடிச்சா கண்ணுமாடா தெரியலை உஎஜ்ப்ஹ்ஞ்ஸ்ட்க்க்ஜ்ஸ்க்ஷ்ந்ஸ்ந்;கன்சல்...]]
-------------------------------------------------------------
ஹை ஹை ஹை ஹை டாஸ்மாக்கை மூடப்போறாங்களாம், வெட்டி பிளாக்கர்ஸ் என்னமோ சைலண்டா பிளான் பண்ணிட்டு இருக்குறதா பன்னிகுட்டி மீது தலைவைத்து உறங்கும் "பன்னிகுட்டி"ராம்சாமியின் ரகசிய தகவல் அறிக்கை [[எளவுதுறை ச்சே உளவுத்துறை]] கசிந்து உருகி உள்ளது...!
------------------------------------------------------------
அடிக்கடி என் பிளாக்கை ஹேக் செய்பவன் யார்....?
மனசாட்சி : டேய் நாதாரி...... நீயே பாஸ்வேர்டை மறந்துட்டு எங்களை டார்ச்சர் பண்ணுறியா...? எகிப்து மந்திரவாதியை கூட்டிட்டு வந்து அந்த மொராக்கோ பார்ட்டிக்கு சூனியம் வச்சிருவேன் ஜாக்கிரதை.
[[நான் என்ன சொன்னேன், இவரு என்னா சொல்லுதாரு..? பிரியல]]
-------------------------------------------------------------
போட்டோகிராஃப் எக்ஸ்பிஷனுக்கு சென்னை போன விஜயன், மூன்று நாளாக மயக்கம்.......? பின்னே "கிழக்கே போகும் ரயில்" ராதிகாவை பார்த்தே ஆவேன்னுட்டு இப்போ போயி மேக்கப் இல்லாமல் பார்த்தால் சும்மாவா..?!
[[வாய்யா வா....... நீரு சென்னைக்கு வராமலா போவீரு, அன்னிக்கு மேக்கப் இல்லாத சுகன்யாவை காட்டி என்ன பண்ணுறேன் பாரு - மெட்ராஸ்பவன் சபதம்.
------------------------------------------------------------
சந்துல சிந்தும், சிந்துல சந்தும் பாடிட்டு இருந்தவன் எல்லாம் வந்து பேஸ்புக்கை நாறடிச்சாச்சு, இனி என்னவெல்லாம் நடக்கப்போகுதோ...? இங்கே இருந்துட்டு ஒபாமாவுக்கு சவால் விடுறாயிங்கப்பூ....!
-----------------------------------------------------------
சசிகலா தன் கணவரோடு கோலாலம்பூர் சுற்று பயணம்.....!
யோவ்....நான் சொன்னது நடிகை சசிகலாவை...ச்சே நம்மாளுங்க முழுசா படிக்காமலேயே உடனே மேலே மோட்டுவளையை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களே...?!
யோவ்....நான் சொன்னது நடிகை சசிகலாவை...ச்சே நம்மாளுங்க முழுசா படிக்காமலேயே உடனே மேலே மோட்டுவளையை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களே...?!
-----------------------------------------------------------
என் நண்பன் ஒருத்தன் போனில்.....
"நேற்று நல்லா சரக்கடிச்சிட்டு வந்தேன் மக்கா"
"டேய் நேற்றுதான் உனக்கு லீவு இல்லையே...வீட்டில சம்மதிச்சாங்களா..?"
"ஆமாடா...... ஒரு முக்கிய [[நல்லா முக்கு முக்கு]] மீட்டிங் இருந்துச்சு, வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க ஆனால்...?"
"என்ன ஆனால் சொல்லு..?"
"சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேம்டா....வீட்டம்மா சாப்புட்டியாய்யா"னு கேட்டாப்புல இருந்துச்சு, அப்புறமா அழகா அணைச்சு பிடிச்சு பெட்ல கொண்டு போயி படுக்க வச்சாங்க, பெட் கொஞ்சம் தொட்டில் மாதிரி இருக்காப்ல தெரிஞ்சுது, ஆங்...... சரக்கடிச்சதுனால அப்பிடி இருக்குன்னு நினைச்சிட்டே தூங்கிட்டேன்........காலையில எழும்பி பார்த்தா......... டேய்.... நான் "பாத்டப்புல" கிடக்கேண்டா....மண்டையெல்லாம் வீங்கி போயி இருக்கு, உடம்பெல்லாம் வலிக்குது....வீட்டம்மா லேசா கள்ள சிரிப்பு சிரிச்சுட்டு இருக்கா எனக்கு ஒன்னுமே பிரியல மக்கா....?! [[ஹா ஹா ஹா ஹா செத்தான்டா சேகரு]]
தலையனை சொல்லும் சுமை ம்ம் அருமை கவிதை !
ReplyDeleteவெற்றியின் தத்துவம் சொல்லும் அண்ணாச்சி வாழ்க!:))
ReplyDeleteபன்னிப்படம் சூப்பர் அண்ணாச்சி!
ReplyDeleteசசிகலா இப்ப நடிப்பது இல்லையே அண்ணாச்சி.அதுகாக்கிச்சட்டை காலம் இல்ல.:))
ReplyDelete//தனிமை சில நேரம் சுகம்
ReplyDeleteசில நேரம் கொடுமை
இதை உணர்வது
தலையணை மட்டுமே...!//
இதை விட தனிமையை அழகா சொல்ல முடியாது.
//சித்திரத்தில் சத்திரம் வரையலாம், சத்திரத்தில் சித்திரம் வரைய முடியாது...! [[சத்திரக்காரன் பிச்சிபுடுவான் பிச்சி]]//
ReplyDelete:)
நல்ல பகிர்வு... ரசித்தேன்.
பிரிவெனும் அரக்கனால்
ReplyDeleteதனித்திருக்கும் மனம்
கூட்டத்தில் இருந்தாலும்
அடர்ந்த காட்டுக்குள் இருப்பது
போலவே உணரும்...
அருமையான கவிதை நண்பரே..
நாம் அனுபவிக்கும் கவிதை...
நக்கலும் நையாண்டியும் அடுத்தடுத்த
ReplyDeleteதுணுக்குகளில் கொடிகட்டிப் பறக்கிறது...
கவிதைகளில் வைரமுத்துவுக்கு போட்டியாக எங்கள் அண்ணன் மனோ
ReplyDeleteகௌண்டமணிக்கு போட்டியாக நக்கல் எல்லாம்
எங்கள் அண்ணன் லேப்டாப் மனோ வாழ்க
எல்லாமே கலக்கல்
arumai
ReplyDeleteதலையணை தனி சுகம் தான்
ReplyDeleteஎதுக்கும் அந்த மொரோக்கா..... டூ ஸ்டேப் பேக்....ஆமா சொல்லிபுட்டேன்
ReplyDeleteசரக்கு அடிச்சிட்டா என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டேன்குதாக்கும்......
ReplyDeleteஇதே மாதிரி எப்பவும் ஜாலியா இருங்க மக்காஸ்...:)
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDeleteமற்றதெல்லாம் பயங்கரமா கலக்கியிருக்கீங்க...
மிக்க நன்றி...
செம காமெடி!
ReplyDeleteசெமையா லந்து கொடுத்திருக்கீஙக மனோ... சத்திரத்துல சித்திரம்..? மண்டையக் காப்பாத்த ஹெல்மட் போடலாம். ஹெல்மட்டைக் காப்பாத்த மண்டையப் போட முடியுமா... நாங்களும் சொல்வோம்ல... ஹா... ஹா...
ReplyDeleteதலையணை சொல்லும் சோகம் புரிகிறது.அனைத்தும் கலக்கல்.வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteமயங்காதிரு என் மனமே..!!!!
கலக்கல் மனோ
ReplyDeleteகேட்டுப்பார்த்தால் எத்தனை கதைகள் சொல்லும் தனிமைக்குத் துணையாய் அருகில் அணைட்த்திருக்கும் தலையணைகள் !
ReplyDeleteகுடல் சாம்பார்...சிரிச்சிட்டேன்.இப்படியெல்லாம் நடக்குமா....!
அந்த வீட்டம்மா சிரிக்கிறதுக்கு எனக்கு அர்த்தம் புரியல மனோ !
தலையணைக் கவிதை மனசை எதோ செய்தது. மற்றவை கலக்கல்...
ReplyDeleteஜாலி என்றால் மனோ அண்ணாதான் என்பதை நிரூபிக்கும் மற்றும் ஒரு பதிவு.
ஹேமா said...
ReplyDeleteகேட்டுப்பார்த்தால் எத்தனை கதைகள் சொல்லும் தனிமைக்குத் துணையாய் அருகில் அணைட்த்திருக்கும் தலையணைகள் !
குடல் சாம்பார்...சிரிச்சிட்டேன்.இப்படியெல்லாம் நடக்குமா....!
அந்த வீட்டம்மா சிரிக்கிறதுக்கு எனக்கு அர்த்தம் புரியல மனோ !//
ராத்திரி பாத்டப்புல போட்டு இவனை அடிபின்னினது அவங்கதான்...மப்புல சாருக்கு தெரியல ஹா ஹா ஹா ஹா...
interesting!!
ReplyDelete