Sunday, July 22, 2012

குடி குடும்பத்தையும் கெடுக்கும்....!

எழுதனுமா வேண்டாமா.......இல்ல.....எழுதனுமா வேண்டாமான்னு பலநாட்கள் நான் யோசிச்சு யோசுச்சு, எழுதிருவோம்னே மனசாட்சி சொன்னதால் இவைகளை சொல்கிறேன் உங்களுக்கும் கண்டிப்பாக இந்த அனுபவங்கள் இருக்கலாம் அதை பின்னூட்டத்தில் பகிரலாம்.....இதனால ஒருத்தன் திருந்தினாலும் அது இந்த பதிவுக்கு வெற்றிதான்.[[இது வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கும், உள்நாட்டில் குடும்பத்தை பிரிந்து வேலை விஷயமாக வெளி மாநிலங்களில் இருப்பவர்களுக்கும்]]

ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன்.....

சிலகாலங்களுக்கு முன்பு [[பஹ்ரைன்]] என்னோடு ஒரு நண்பன் ரூமில் தங்கி இருந்தான்.....பகலில் வேலைக்கு போகும் போதும் இடையில் கிடைக்கும் சாப்பாட்டு நேரத்திலும் ஆபீசியல் விஷயம் இல்லாமல் வேறு யாருக்கும் அவன் போன் பண்ணி நான் பார்த்ததில்லை....!


ரொம்ப டீசண்டாக இருப்பான், எல்லாரிடமும் நல்லா பேசி பழகுவான்.....ஆனால் டியூட்டி முடிந்து ரூம் வந்ததும் அவனுக்கு சரக்கு வேணும், நான் ஹோட்டலில் முக்கியமான பொறுப்பில் இருப்பதால் சரக்கு ஃபிரியாக ரூமுக்கே வந்து விடும் என்பதால் அவனுக்கு செலவு இல்லாமல் போனது, ரூம் வந்ததும் துணிகளை மாற்றி கொண்டு உடனே சரக்கடிப்பான்....டேய் மெதுவா குடிய்யா எல்லாமே உனக்குத்தானே இருக்கு பைய்ய குடின்னு சொன்னாலும் சர்ர்ர்ர்ர் என குடித்து விட்டு செல்போனை கையில் எடுத்து கொண்டு வெளியே போய்விடுவான்.

இது தொடர்கதையாக இருக்கவே ஒருநாள் இவனை பின் தொடர்ந்து போனேன் ஸாரி முதலில் ஒரு பெங்காலி பையனை அனுப்பினேன்...அவனும் போய்விட்டு வந்து சொன்னான் பாய் அவன் என்னமோ சத்தமாக போனில் பேசுகிறான் ஊருக்கு போன் பேசுகிறான்னு நினைக்கிறேன் என்று சொல்லவும், நானும் விட்டு விட்டேன்.

பின்னும் பலநாட்கள் இது தொடர்ந்தது, என்னன்னா இவன் போன் பேசிட்டு ரூம் வந்ததும் அவன் போன் அலறும் மறுபடியும் வெளியே போவான்...வருவான்.....மறுபடியும் போன் அலறும்....... வெளியே போவான் வருவான்.....சிலநேரங்களில் போனை சைலண்ட் செய்து கட் பண்ணுவான்....ஆக எனக்கு தூங்க முடியாது...!

நடுராத்திரியும், அதிகாலையிலும் போன் வந்து கொண்டே இருக்கும்.....இவன் மட்டையாகி இருப்பான்....! அடுத்தநாள் பகலில் ஒரு சத்தமும் இருக்காது, அப்படியே போன் வந்தாலும் இவன் எடுக்காமல் கட் பண்ணுவதை பார்த்து இருக்கிறேன்.

அப்படிதான் ஒரு நாள் [[ஓணம் திருநாள்னு நினைக்கிறேன்]] சரக்கடித்துவிட்டு வெளியே கிளம்பினவனை மடக்கி பேசி என்னோடு அமரவைத்து மங்களம் பாடினேன்.....மூனு பெக் உள்ளே போனதும், என்னோடு பெசிக்கொண்டிருந்தவன் திடீரென போனை எடுத்தான்...!


என் முன்னிலையில் ஊருக்கு போன் பண்ணினான், மனைவின்னு நினைக்கிறேன் பாவிமகன் எம்புட்டு கெட்ட வார்த்தையில் திட்டனுமோ அம்புட்டு போட்டு திட்டுகிறான், அவள் குடும்பம் இதை கேட்கும் பட்சத்தில் தூக்கு போட்டுதான் செத்து இருக்கும் அம்புட்டு திட்டு....!

டேய் நல்ல நாளும் அதுவுமா ஏண்டா இப்பிடி பேசுறேன்னு கேட்டதுக்கு, நீ சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாதுன்னுட்டு வெளியே [[ரூம் பக்கத்தில்]] நின்னு திட்டிட்டு இருந்தான். 

எல்லாநாளும் வெளியே போன் பண்ண போனவனுக்கு குளிர் விட்டுபோச்சு, அதிலிருந்து தைரியமாக ரூமில் இருந்தே போன் பேச ஆரம்பித்து திட்டி கொண்டிருந்தான்......இவன் அம்மாவையும் அப்பாவையும் தம்பியையும் கூட விடாமல் ஏசிட்டு இருந்தான்.

உதாரணம் : இவன் : ஹலோ என்ன பண்ணிட்டு இருக்கே...? [[யோவ் சுகநலம் விசாரிக்கப்புடாதா..?]]

மனைவி : சாப்புட்டுட்டு இருக்கேன்.

இவன் : ஏண்டி என்னைவிட உனக்கு சாப்பாடுதான் முக்கியமா.....?  தே.............மவளே.......அப்பிடியே வெளியே வந்து என்னோடு பேசுடி....௩௯துக்[இவன்[ஓயஜிஎஜோவ்ன்ப்;க்ஜ்ன்கேம்;ல.....[[பாவம் சாப்பாட்டை விட்டுட்டு வெளியே வந்துருக்கும் போல]]


இவன் : ஹ்க்வ்ன்வுஹோரிஜ்கிஎரோத்;பசப்.....என்னை சாப்புட்டியான்னு கேட்டியாடி நீ.......ஜ்வ்ட்விவொவ்வ்வ்வ்ப்வ்ஜ்வொஇவ் என் சம்பாத்தியத்தைதானடி திங்குறே க்ன்ஜ்ப்வ்ன்ச்ட்ன்வ்ன்ப்வ்க்'ல்க்வ்.....

எதிமுனையில் அழுகை சத்தம்.......

இவன் : அம்மாகிட்டே குடுடி க்ன்ஜ்த்வ்வ்ஜ்ட்ப்வ்து'வ்ப்ட்வ் மவளே....

அம்மா : நல்லா இருக்கியாப்பா...?

இவன் : ட்ச்ப்ஜ்ன்த்வ்ஜ்ன்;ஜ்ச்ன்வ்ச்ன்வ்க்ச்வ்ஸ் மக்களே நீ எப்பிடி பட்டவள்னு எனக்கு தெரியாதா ஜ்ப்ம்வ்ச்ல்வ்ன்சல்வ்ச்வ்ன்....போனை உன் மாப்பிளைகிட்டே [[அப்பா]] குடு......


அப்பா : [[பயத்துடன்]] சுகமா இருக்கியாப்பா....?

இவன் : பட்டி கழிவ............மோனே.........நீ மட்டுமாடா தண்ணி அடிப்பே கொய்யால நானும் அடிப்பேண்டா ஜ்ஹொஇவ௮௬௯ய்தெர்கொஇ.....

எதிர்முனை போனை கட்டாக்க....இவன் தொடர்ந்து போன் அடிக்க அங்கே யாரும் போனை எடுக்காமல் ஆத்திரம் ஆகிறான்......பக்கத்து வீட்டுக்கு போனை அடித்து போனை அவன் பொண்டாட்டிக்கு கொடுக்க சொல்லி.....திட்டோ திட்டுன்னு திட்டுகிறான்......![[ஊரே சிரிச்சிருக்கும்]]

எனக்கோ ஒன்னும் புரியலை......கோவம் வேற வந்துகிட்டே இருக்கு, இது பலநாட்கள் தொடர்ந்தது நான் எவ்வளவோ சொல்லியும் இவன் கேட்கவே இல்லை.....சரக்கடிச்சதும்தானே இவன் போன் பண்ணுகிறான்னு தெரிஞ்சதும் சரக்கு ஒன்னும் ரூமில் வராமல் நான் தடை செய்தேன், ஆனாலும் வெளியில் இருந்து காசு கொடுத்து வாங்கி சரக்கடிக்க ஆரம்பித்தான்.


ஒருநாள் அவன் மனைவி வீட்டைவிட்டு விட்டு உன் குழந்தையையும் நீயே வைத்துகொள் என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டுக்கு ஓடியே விட்டாள்...ஆனாலும் இவன் தன்னுடைய அம்மாவுக்கு போன் பண்ணி டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தான் தினமும், மனைவி வீட்டில் விஷயம் தெரிந்து போனை குளோஸ் பண்ணி வைத்து விட்டார்கள்.

அடுத்து ஒருநாள் இவன் தம்பிக்கு போன் பண்ணுவதை கவனித்தேன்....

இவன் : ஹலோ தம்பியா...? டேய் நீ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே சிங்கப்பூர்ல இருந்து அஞ்சே வருஷத்துல கோடி கணக்குல பணம் உனக்கு எப்பிடி வந்ததுன்னு எனக்கு தெரியும்டி.....ந்ட்ன்வ்கட்ம்க்ட்ன்ப்க்ட்ப்ம்ப்ள்ட்ம்'ப்க்ல்ட்ச்ல்க்ப் களவாண்ட பணம்தானே அது...? நான் இப்பவே போலீஸ்ல சொல்லப்போறேன் பாக்குறியா...?


தம்பி : போடா உன்னால் ஆனதை பாத்துக்கோ இனி மறுபடியும் எனக்கு போன் செய்தே ந;சவ'க்வ்னத்வாடக்ஜ்வல்ச்ன்வக்ன்வ் கொன்னேபுடுவேன்...

இவன் : டேய் நாயப்பயலே நீ மட்டும்தான் தண்ணி அடிப்பியா கொய்யால நானும் குடிச்சிருக்கேண்டா நாயே....

தம்பி : நாய்பயலே [[பச்சை பச்சையா திட்டிக்கிறாங்க]] இருடா உன்கூட பேசணும்னா அரை பாட்டல் அடிச்சாதான் முடியும் இரு....[[போய் பாட்டலில் இருந்து கிளாசில் சரக்கு ஊற்றப்படுகிறது...குடித்து முடித்துவிட்டு]] ஆங் இப்போள் பறைடா பட்டி.....

இவன் : ௯௬௭ய்த்வ்க்ஸ்ட்வ்ப்ம்  ன்ல்க்ச்ட்ன்ப்க்ச்ட்வ்......இருடா நீ மட்டும்தான் வீட்டில் வாங்கி வைத்து [[ஸ்டாக்]] குடிப்பியா கொய்யால நானும் வச்சிருக்கேன் இருடா [[இவனும் கிளாசில் சரக்கை ஊற்றி குடிக்கிறான்]] 

அய்யோ அய்யோ என்னா சத்தம் என்னா சத்தம்......பொறுக்க முடியாமல் சத்தம் போட்டேன். போனை கட் பண்ணினான் ஆனாலும் தம்பியின் போன் இரவு முழுவதும் அலறிக்கொண்டே இருந்தது, இவன் வழக்கம் போல மட்டை....!


இப்படி இருக்க ஒருநாள் என் நண்பர்கள் என்னை பார்க்க வந்ததால் ஒளித்து வைத்திருந்த சரக்கை எல்லாம் கொண்டு வந்து வைத்து நண்பர்களை எந்த பிராண்ட் வேணுமோ எடுத்து சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு இவனையும் சாப்பிட சொன்னேன் [[என் போதாத காலம்]]

நண்பர்களோடு ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போதே இவனையும் பேச்சுக்கு இழுத்து இவன் போன் பண்ணாமல் பார்த்து கொண்டாலும், மூனு பெக் உள்ளே போனதும் போனை அடித்தே விட்டான் ஊருக்கு........!

திட்டோ திட்டு...... அலறல பேச்சு......நெஞ்சில் அடித்து அடித்து சபதம் வேறு....... எகிறு எகிறுவென எகிறினான்....நண்பர்கள் மிரண்டு விட்டார்கள். அவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ஊருக்கு திட்டோ திட்டுன்னு திட்டிகிட்டே வெளியே போய் விட்டான்....நண்பர்களும் வேதனையோடு போனார்கள்....எப்பிடிடா இவன்கூட தங்கி இருக்கேன்னு ஆச்சர்யப்பட்டுட்டே போனார்கள்.

அவன் வரும்வரை காத்திருந்தேன், வந்தான்.....நாலு அப்பு அப்பினேன், காலில் விழுந்தான் ஆனாலும் மனசு கேட்கவில்லை...உன்னிடம் எத்தனை நாள் சொல்லி இருக்கேன் ௮௯௮௬த௯௩-ய்த௨து௩௦திதி௩ தண்ணி அடிச்சுட்டு ஊருக்கு போன் பேசாதேன்னு கேட்டியா கொய்யால இப்பவே ரூமை காலி பண்ணு இல்லைன்னா உன்னை கொன்னே போட்டுருவேன்னு கத்தி விட்டு...போன் பண்ண வேண்டியவிங்களுக்கு [[மேலிடம்]] செய்தி சொல்லி உடனே செக்யூரிட்டி வந்து அவனை வேறு இடத்திற்கு மாற்றினார்கள்...! [[எம்புட்டுதான் பொறுக்க முடியும் எனக்கும் காலையில் டியூட்டி போகனுமா வேண்டாமா]]

கொஞ்சநாள் கழித்து வேறே கம்பெனிக்கு போனவன் அதும் பிடிக்காமல் ஊர் போய்விட்டான், அநேகம் நாள் கழித்து அவன் ஊர்காரன் ஒருவனை கண்டபோது இவனை பற்றி விசாரித்தேன், இவன் இப்போது ஊரில் பஸ்சில் கண்டக்டராக [[அரசு பஸ் இல்லை]] வேலை செய்வதாகவும் [[இவன் அக்கவுண்டன்ட்]] மனைவி இவனை பிரிந்து வேறு கல்யாணம் கட்டி கொண்டதாகவும்...ஊரில் நாயை விட கேவலமாக திரிவதாகவும் சொன்னான், அன்று இரவு துக்கத்தில் எனக்கு தூக்கமே வரவில்லை...!


தப்போ ரைட்டோ எனக்கு தெரியாது....இப்போ அல்ல......... எப்போதுமே என் நண்பர்களுக்கு நான் சொல்வது, வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் தண்ணி அடித்து விட்டு ஊருக்கு போன் பேசாதீர்கள் என்பதே....நண்பர்களாக நம்மை புரிந்து கொள்பவனா இருந்தா பரவாயில்லை...ஆனால் சொந்த பந்தங்களுக்கு போன் பண்ணவே கூடாதுன்னு சொல்வேன் காரணம், நாம் இங்கே கஷ்டப்பட்டு உழைக்கிறோம் அது யாருக்கு நம் குடும்பத்துக்குதானே...?

நான்தான் உழைத்து உங்களுக்கு சாப்பாடு போடுகிறேன் என்ற திமிர் வரும்போது, தண்ணி வேற உச்சத்தில் இருக்கும் வேளையில் அவர்கள் நல்லபடியாக பேசினாலும் உனக்கு வேறுமாதிரி தெரியும் ஸோ வார்த்தைகள் தடிக்கும் ஆனால் அடுத்தநாள் நீ மறந்து போவாய்.....நீ பேசிய வார்த்தைகள் அவர்களை கொல்லும்.....உன் மதிப்பும் போகும் என்பதே....ம்ம்ம்ம் எவன் கேட்கிறான்...?

இவன் மட்டுமில்லை இன்னும் அநேகரை நான் பார்த்ததுண்டு, சரக்கடிச்சதும்தான் பொண்டாட்டி ஞாபகம் வரும் இவனுகளுக்கு, அவளை வம்புக்கு இழுத்து திட்டுவதை நான் கண்டு மனம் நொந்து போவதுண்டு....!

இன்னும் சிலர் உண்டு ரெண்டு பெக் அடித்து விட்டு செல்லமா செல்லம் என்று கொஞ்சி விட்டு......... சுதி ஏற ஏற வெறி பிடித்து திட்டுவதையும் பார்த்திருக்கிறேன்...!

வெளிநாட்டில் குடும்பத்தை பிரிந்திருக்கும் நண்பர்களானாலும் சரி குடும்பத்தோடு இருப்பவர்கள் ஆனாலும் சரி, தயவு செய்து தண்ணி அடித்துவிட்டு ஊருக்கு போன் பேசாதீர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------

இன்னுமொரு முக்கியமான விஷயம் சொல்லுகிறேன், குடும்ப பொறுப்புள்ளவர்கள் கவனிக்கவும்...........

ஊரில் தன் மகன் குடித்து விட்டு ஊதாரியாக சண்டை போட்டு கலவரம் பண்ணுகிறான் என்று நினைத்து, வெளிநாடு அனுப்பிவிட்டால் திருந்திவிடுவான் என நினைத்து ஒரு [[அநேக]] தந்தை தன் மகனை பஹ்ரைன் அனுப்பினார் ஆனால் அவனோ........?

ஒருநாள் நான் என் ரூமில் இருந்து டீவி பார்த்து கொண்டிருக்கும்போது வெளியே பலமான சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது......பக்கத்து ரூமில் ஏதோ பார்ட்டி நடக்கிறது என நினைத்தேன். ஆனால் சிரிப்பு பலமாக கேட்கவே வெளியே வந்தேன்....

அங்கே அந்த மகன் தனியாக குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு பலமாக தனியாக சிரித்து கொண்டிருந்தான்......அருகில் சென்ற நான் என்னய்யா என்னாச்சு தனியா உக்காந்து சிரிச்சுட்டு இருக்கேன்னு கேட்டேன்....இன்னும் பலமாக சிரித்தான்.....!

அண்ணே.....என் அப்பன் ரொம்ப நல்லவன் அண்ணே....... ரொம்ப நல்லவன்.......ஏன்னா நான் ஊருல குடிச்சுட்டு ஜாலியா திரிஞ்சேன் அதுக்கு என் அப்பன் தந்த தண்டனையை பாருங்க அண்ணே.....குவாட்டர் குடிச்சுட்டு திரிஞ்ச என்னை பாட்டல் பாட்டலா குடிக்கும் இடத்துக்கு அனுப்பினதும் அல்லாமல் வகை வகையான குட்டிகளை ருசிக்கவும் அனுப்பி இருக்கான் அண்ணே.....போங்க போயி என் ரூமுக்குள்ளே பாருங்க அண்ணே என்றான்.

நானும் அதிர்ச்சியாக ரூமை திறந்து பார்த்தேன்.....ரஷ்யன் அழகிகள் மூன்று பேர் அட்டகாசமாக உள்ளே தண்ணி அடித்து கொண்டிருந்தனர்.....! சின்ன பையன் ச்சே நொந்து போனேன்...!


பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் கொஞ்சமாவது திருந்த வேண்டும் எனில் பஹ்ரைன், துபாய் அனுப்பாதீர்கள், சவூதி அரேபியா அனுப்புங்கள் ஏதாவது பலன் கிடைக்கலாம்...!

21 comments:

  1. சிந்திக்கக்தூண்டும் பதிவு .கட்டுப்பாடு இல்லாத சுதந்திரமும் இப்படி சீரலியவிட்டு விடும் ! 

    ReplyDelete
  2. வெளிநாட்டு வேதனையை சிலநேரங்களில் இப்படியான குடியில் வரும் வார்த்தைகள் மோதலில் தான் முடியும் போல!ம்ம்

    ReplyDelete
  3. Mano, very hard to read. I do not know why some guys behave like this. This guy in your post learned his lesson in a hard way.

    ReplyDelete
  4. உள்நாட்டில் சும்மா சுற்றிக் கொண்டு இருப்பவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் போது அவர்கள் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை அதன் வெளிப்பாடே இது!

    ReplyDelete
  5. மக்கா...
    ஊரில் பிழைக்க சரியானதொரு வாய்ப்பு இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லும் இவர்களைப் போன்றோர் தங்களது நிலையை மறந்து பணம், மது, மாது எனும் போதையில் அடிமையாகி தானும் கேட்டு தனது குடும்பமும் நடுவீதிக்கு கொண்டுவருகிறார்கள்.

    இவர்கள் தாமாக திருந்தினால் தான் உண்டு.

    ReplyDelete
  6. இதைப் பதிவாக்கிக் கொடுத்ததுதான் நல்லது
    வெளி நாட்டில் வேலைபார்க்கும்
    இளசுகளை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது
    தெளிவூட்டும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அண்ணே நீங்க சொன்னா சர்தான்..

    ReplyDelete
  8. இப்பிடிபட்டவர்கள் இருக்கிறார்கள் நூத்துல ஒன்னு..., மீதம் இருக்குற தொண்ணித்து ஒன்பது பேறு சாப்பிடுற காச கூட மிச்சம் பிடிச்சு ஊருக்கு அனுப்புரவங்க தான்!

    அந்த ஒருத்தனும் இந்த பதிவை படிச்சு பார்த்து.... யோசிச்சு பார்த்தான்னா அது உங்க பதிவுக்கு கிடைச்ச வெற்றிதான்! நல்ல பதிவு!

    ReplyDelete
  9. மக்கா சரியா சொன்னீங்க

    ReplyDelete
  10. கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டியது ...

    ReplyDelete
  11. அந்த ரஷ்ய பொண்ணுகளை போட்டோ எடுத்து போட்ட உங்கள உள்ள தள்ளணும்.

    ReplyDelete
  12. அப்போ உள்ளூர்ல இருந்தா குடிக்கலாமா..?ஒரு டவுட்டு...

    ReplyDelete
  13. மனோவுக்கு வெற்றி கிடைக்கட்டும்....

    கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு....

    ReplyDelete
  14. குடி மனிதனை மிருகமாக்கும் என்பதை இதை விட அழுத்தமாக சொல்லிவிட முடியாது.

    ReplyDelete
  15. நல்ல விழிப்புணர்வு பதிவு! நன்றி!

    ReplyDelete
  16. இதை விட மோசமான நண்பர்கள் பல பேர்கள் உள்ளார்கள்.....
    சமீபத்தில் ஒரு நண்பர் (கல்யாணம் ஆகி, ஒரு வருட குழந்தை உண்டு) இநதப் பழக்கத்தினால் இறந்து விட்டார்.
    இவர்களிடம் என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள். மிகவும் முயன்றால் நாம் கெட்டு விடுவோம்...

    உங்களைப் போல் நானும் மூன்று பதிவுகளை எழுதி வைத்து இருந்தேன்.
    இந்த நண்பர் இறந்த பிறகு நாம் என்ன சொன்னாலும், எழுதினாலும் திருந்த மாட்டார்கள்
    என்பதை புரிந்து கொண்டதால், அந்தப் பதிவுகளை வெளியிடவில்லை.
    இது ஒரு மனநோய். தானாக திருந்தினால் தான் உண்டு.

    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
  17. மனதைக் கலக்கிய பகிர்வு. :(

    ReplyDelete
  18. நல்ல பதிவு நண்பரே.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    ReplyDelete
  19. நல்ல படிப்பினை..

    இதனை சிறிது மாற்றி சொல்கிறேன்..

    நண்பர்களே.. தயவு செய்து குடிக்காதீர்கள்..
    அப்படி குடித்தால், வேறு எதுவும் செய்யாதீர்கள்!!

    ReplyDelete
  20. குடி!சபிக்கத்தோன்றும் வார்த்தை.சரியான அறிவுரைகள்.ஆனால் கேட்கவேண்டிய செவிகள் பூட்டிட்டனவே.!:(...வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!