படத்தின் முதல் ஆரம்பத்திலேயே ஆறுதலான விஷயம் என்னான்னா, "அல்டிமேட் ஸ்டார்" "தல" கொலை;ன்னு ஸ்பெஷல் எபெக்ட்டு குடுக்காமல் அஜித்குமார்'ன்னு பெயர் போட்டதுமே கொஞ்சம் மனசுக்கு நிம்மதியாக இருந்தது....!
துவக்கம் அஜித்தின் பன்ச் டைலாக்கோடு ஆரம்பிக்கும் படம், கடைசியில் யுவனின் டான் டான் பாட்டு வரை சீரியஸ் சீரியஸ் சீரியஸ்....!!??
நாயகன் இலங்கையில் இருந்து அகதியாக இந்தியா வரப்போகிறார் என்பதை, ஆரம்ப யுத்த சூழ்நிலையே புரிய வைக்கிறது, இங்கே வந்ததும், அகதிமுகாமில் குழந்தையின் பாலுக்காக முத்து என்பவனை நாயகன் கொடுக்கும் அடியும், அந்த அகதிகளின் கஷ்டங்களையும் சிம்பிளாக பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறார் டைரக்டர்...!
அங்கே சில நண்பர்கள் கிடைக்க, நாயகன் தடம் மாறுகிறார், வைரத்தை கடத்தி கொண்டு போகும் போது போலீஸ் அத்தனை பேரையும் போட்டு தள்ளிவிட்டு போறது சரிதான் ஆனால் அகதி முகாமில் இருந்து கடத்தல் செய்கிறார்கள், போலீஸை கொலை செய்கிறார்கள், தமிழக போலீஸ் இவர்களை தேடவே இல்லை கடைசிவரை....!
நாயகன், இளவரசை சந்திக்கும் இடம் சற்றே சற்று கல கல'ன்னு சொல்லமுடியாதுன்னும் சொல்லமுடியாது, "வண்டியை பொறத்தால கொண்டு போங்க நான் பின்னாடி வாரேன்"ன்னு இளவரசு நெல்லை பாஷையில் சொன்னதும், அஜித் ஜெர்க்காகி என்ன என்று புரியாமல் முழிக்கிற இடம் ஓகே....!
சென்னையில் போயி அக்காவை சந்திக்கும் இடத்தில் நாயகனின் கைத்துப்பாக்கி தவறி கீழே விழ, "நீ இன்னும் திருந்தலையா அங்கேதான் [[இலங்கையில்]] இப்படி இருந்தே இங்கேயுமா...?" என்று அக்காள் கோபப்படும்போதே நாயகன் இயக்கத்தில் இருந்தவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் டைரக்டர்...!
அங்கேயே ஓமனகுட்டியின் காதல் ஆ ஆ ஆரம்பம் ஆ ஆ ஆகிறது, அடுத்தடுத்து தாதாக்களை போட்டு தள்ளிவிட்டு சும்மா தெனாவட்டா போகிறார் ஹீரோ, ஏன் கேக்க யாருமே இல்லையா...? இல்லை பில்லா த பாஸ்"ன்னு டைரக்டர் விட்டுட்டாரா...?
[[மும்பையில் பில்லா 2 சூட்டிங் எங்களுக்கு பின்னாடி நடக்கிறது, அஜித்தும் அவர் நண்பரும் ஒரு டிரக்கில் தப்பித்து வருவார்கள், நேவிக்காரர்களை போட்டு தள்ளிவிட்டு அஜித் வரும் இடம்தான் இது]]
சுமக்ளிங் பிசினஸ்'க்கும் "உட்கார்ந்து வேலை செய்பவனுக்கும் உயிரைக்கொடுத்து வேலை செய்பவனுக்கும் வித்தியாசம் இருக்கு”ன்னு சொல்ற டயலாக்கும் என்ன அர்த்தத்தில் சொல்றாருன்னு புரியலை, இருந்தாலும் ரசிக்கலாம்.
[[மும்பை சூட்டிங் ஸ்போட்]]
எங்கேயும் எப்போதும் ரத்தம் ரத்தம் ரத்தம், எடுத்ததும் பிடித்ததும் டப்பு டப்புன்னு சுட்டு தள்ளுறாங்கோ, கத்தி கடப்பாறையா இறங்குது....இதுக்கிடையில் இன்டர்நேஷனல் டான் பொரோஷியாவில் இருந்து வருகிறார் நாயகனும் அங்கே போயி டீல் பேசுறார்.
திடீர்னு ஒரு மொழிபெயர்ப்பாளரை கொல்லுவதற்கு என்றே ரஹ்மான் [[பொரிஷியா]] வந்து காணாமல் போகிறார். அவர் வந்ததும் ஏதோ திருப்புமுனை வரப்போகுதுன்னு பார்த்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆளை கானவே இல்லை அப்புறம்...?
நாயகனை சந்தேகப்படும் பாகிஸ்தான் [[அப்படிதானே அப்பாஸி...?]] வில்லனையும் நம்மாளு போட்டு தள்ளுறார். அப்படியே தன்னை தாக்கி காட்டிகொடுத்த நண்பனையும் "ஆயிரம் எதிரிங்க இருக்கலாம் ஒரு துரோகி இருக்கக்கூடாது"ன்னு போட்டு தள்ளுகிறார்.
அப்புறம் என்ன, "திஸ் சி எம் இஸ் நாட் ஃபோர் சேல்"ன்னு சொன்ன கோவா முதல்வரையும் போட்டு தள்ளுகிறார்கள் ஹீரோவின் ஆட்கள், அப்புறம் நாயகன் கைது செய்யப்படுகிறார், கேஸ் கோர்ட் போகிறது அங்கே கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் [[ஐயோ]] ஜட்ஜ் மிரட்டப்பட்டு ஹீரோ விடுதலை ஆகிறார்.
யப்பா ஓமனகுட்டியை கழுத்தை அறுத்து கொல்கிறார்கள், [[இன்னொரு கதாநாயகியும் கழுத்து அறுக்கப்படுகிறது, சக்ரி அண்ணனுக்கு என்ன கோபமோ]] படம் ஆரம்பத்தில் முதலில் சொன்ன பன்ச் டயலாக்குடன் மறுபடியும் ஆரம்பிக்குதுன்னு பார்த்தால் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....!
கடைசியா பொரோஷியா வில்லனின் திட்டத்தை தகர்த்து அவரின் ஆயுத கிடங்கையும், அவர் ஆயுதங்களையும் அழித்து, ஹெலிகாப்டரில் வில்லனை கொல்வதோடு முடியும்னு பார்த்தால்............அஜித் சொல்கிறார் "இல்லை இனிதான் ஆரம்பம்"ன்னு........யுவன் வந்து டான் டான் டான்"ன்னு சொல்ல ஸாரி பாட படம் சுபம் ஆகிறது.
* பன்ச் டயலாக் நம்ம டாகுட்டர் போல பேசுவதை தவிர்த்திருக்கிறார் அஜித், அதை பாராட்டலாம், படத்தில் வள வள பேச்சுகள் இல்லை.
* போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்! ஜெயிச்சுட்டா போராளி!” வாவ் இந்த இடத்தில் அஜித்தின் கேஷுவலான நடிப்பு இருக்கே......... டாகுட்டர் பிச்சைதான் எடுக்கணும்...!
* "அகதிகள்தான் அனாதை இல்லை" என்று சொல்லி போலீஸை அஜித் போட்டு புறட்டும் இடத்தில் அவர் தொப்பை அநியாயமாக குலுங்குகிறது பாவம்.
* படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் “தம் அடிக்கும்" அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய விசயம் கூட.
* “என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா” இது இந்த படத்துக்கும் பொருந்தவில்லை, அஜித்தின் நிஜ வாழ்க்கைக்கும் பொருந்த வில்லை. உ ம் : நம்பர் ஒன் : உலக சினிமா வரலாற்றில் நாயகன் என்னைக்கும் திருந்தியே வாழ ஆசைப்பட்டு போலீசில் சரண்டர் ஆவார். உ ம் : நம்பர் டூ : மண்ணை கவ்வுன அஜித்தின் படமெல்லாம் இவர்....... தானே செதுக்கியதா...? லாஜிக் டுக்கு டுக்கு.
* “நண்பனா இருக்க தகுதி தேவையில்ல எதிரியா இருக்க தகுதி வேணும்!” இது இது அஜித்தின் உண்மையான முகம் இதை நான் மனசார பாராட்டுகிறேன், இது இவரின் சினிமா வாழ்க்கைக்கும் பொருந்தும், நிஜ வாழ்க்கைக்கும் மிகப்பொருந்தும்.
* யுவன் சங்கர் ராஜாவின் இசை துள்ளல், ஆனால் பாடல்கள் ஒன்றுமே ஒட்டவில்லை, தொப்பிள்கள்தான் ஒட்டியது...!
* அஜித்தின் நடிப்பு அசத்தல், அவர் நடிப்புக்கு கொஞ்சம் தீனி கொடுத்தால் நல்லா இருக்கும், இப்படியே பில்லா ரூட்டில் போனால் துப்பாக்கி வெடிக்காது, இவரின் சினிமா மாஸ் வெடிச்சுரும் என்பதே உண்மை.
* அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் இருந்தாலும், செய்ததையே திரும்ப திரும்ப செய்தால்....?
கடைசியாக : நான் பில்லா 2 படம் பார்த்த தியேட்டரின் மொத்தம் சீட் பால்கனியும் சேர்த்து 410, அதில் கீழே இருந்தவர்கள் முப்பது பேர், பால்கனியில் ஐந்தே பேர். இடைவேளைக்கு பிறகு படத்தை ரசிக்காமல் நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள் பொறுமை இழந்து...!
படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு குடும்பத்தலைவன் தன் மனைவியிடம் சொன்னதை கேட்டேன், "எம்மா தப்பி தவறிகூட உன் அக்காவை இந்த படத்துக்கு வரசொல்லிராதே"
மனைவி : "என்னங்க இப்பிடி இருக்கு அஜித் படம் ச்சே"
கணவன் : வா சரவணபவனில் சாப்பிட்டுட்டு போவோம்.
மனைவி : அடபோங்கப்பா எனக்கு தலைவலிக்குது, உடனே வீட்டுக்கு போயி ரெஸ்ட் எடுக்கணும்.
நானும் இந்த பேச்சை "ரசித்து" கொண்டே அவர்கள் பின்னால் வந்தேன்......ஆக என் ஒன்னரை தினாரும் நேரமும் வேஸ்டா இருந்தாலும், ஒரு நல்ல மனசுல்ல ஹீரோவுக்காக தப்பில்லை என்றே தோனியது எனக்கு.
பஹ்ரைன் அல்ஹம்ரா தியேட்டரில் படம் பார்த்தேன்.
டிஸ்கி : பில்லா 2 மும்பையில் சூட்டிங் நடந்தபோது நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒரு பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்காக.
http://nanjilmano.blogspot.com/2012/03/blog-post_26.html
ஓவராலா பிடிச்சிருக்கு மக்கா உங்க விமர்சனம் நா பார்த்த கோணத்தில் 90% தாங்களும் பயணம் செய்துள்ளீர்கள்
ReplyDeleteஅஜித் நல்லா நடிச்சா டாகுடர் ஏன் பிச்சை எடுக்கனும்.....?
ReplyDeleteமனோ உங்க பார்வையில் விமர்சனம் நல்லாயிருக்கு எதார்த்தமான வரிகளில்!
ReplyDeleteபடம் பார்க்கலாமா ? வேண்டாமா ?
ReplyDeleteஅண்ணனும் விமர்சனம் எழுதிட்டாரே....?
ReplyDelete//// "என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteபடம் பார்க்கலாமா ? வேண்டாமா ?/////
போய் பாருங்க, ஒரு பதிவாவது தேறும்ல?
/////யுவன் சங்கர் ராஜாவின் இசை துள்ளல், ஆனால் பாடல்கள் ஒன்றுமே ஒட்டவில்லை, தொப்பிள்கள்தான் ஒட்டியது...!//////
ReplyDeleteபார்ரா.......? அதான் நல்லா பாத்தாச்சுல்ல, அப்புறம் என்ன இசை வேண்டி இருக்கு?
மக்கா....
ReplyDeleteவிமர்சனம் கல கல டைப்பில் பதிவு பண்ணியிருகிங்க.
பொதுவாக எல்லோர் விமர்சனமும் பார்த்தால், இயக்குனரிடமே குறை உள்ளதாக சொல்லியிருக்காங்க....
கொடுத்ததை நிறைவாகவே அஜித் செய்திருப்பதாக தெரிகிறது!
ஏன் பாஸ்? அஜித் நல்லா இருந்தா அதுக்கு டாக்டர எதுக்கு இழுக்குறீங்க பாஸ்? அவர் இப்போ நல்ல படங்கள்ல நடிக்கிறார்ல?
ReplyDeleteதலதான் இன்னும் காமெடி பண்ணிட்டே இருக்கு! :-)
/////ஜீ... said...
ReplyDeleteஏன் பாஸ்? அஜித் நல்லா இருந்தா அதுக்கு டாக்டர எதுக்கு இழுக்குறீங்க பாஸ்? அவர் இப்போ நல்ல படங்கள்ல நடிக்கிறார்ல?
தலதான் இன்னும் காமெடி பண்ணிட்டே இருக்கு! :-)////////
என்னது டாகுடர் நல்ல படத்துல நடிக்கிறாரா?
:)) அப்படியா செய்தி !ம்ம்ம் விமர்சனம் ரசித்தேன்!
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////ஜீ... said...
ஏன் பாஸ்? அஜித் நல்லா இருந்தா அதுக்கு டாக்டர எதுக்கு இழுக்குறீங்க பாஸ்? அவர் இப்போ நல்ல படங்கள்ல நடிக்கிறார்ல?
தலதான் இன்னும் காமெடி பண்ணிட்டே இருக்கு! :-)////////
என்னது டாகுடர் நல்ல படத்துல நடிக்கிறாரா?// vidunga boss..
mano enakkum padam pidichcha maathiriyum, pidikkaatha maathiriyum irukku.. but ajith kkukaaka paakkalaam. nice review..
ReplyDeleteவித்தியாசமான பார்வை
ReplyDeleteவித்தியாசமான விமர்சனம்
தொடர வாழ்த்துக்கள்
கடைசியா பொரோஷியா வில்லனின் திட்டத்தை தகர்த்து அவரின் ஆயுத கிடங்கையும், அவர் ஆயுதங்களையும் அழித்து, ஹெலிகாப்டரில் வில்லனை கொல்வதோடு முடியும்னு பார்த்தால்............அஜித் சொல்கிறார் "இல்லை இனிதான் ஆரம்பம்"ன்னு........யுவன் வந்து டான் டான் டான்"ன்னு சொல்ல ஸாரி பாட படம் சுபம் ஆகிறது.
ReplyDeleteஇந்த பில்லா 2 ஏற்கனவே வந்த பில்லாவின் முந்தய பகுதி என்பதை மறந்துட்டீங்க நீங்க அப்புறம் நீங்க பார்த்த அதே அல் ஹம்ரா பஹ்ரைன் தியேட்டரில்தான் நானும் பார்த்தேன் அப்படி யாரும் படத்தின் பாதியிலே போகவில்லை. படம் சுமார்தான் ஒத்துக்கிறேன்.
நம்பர் ஒன் : உலக சினிமா வரலாற்றில் நாயகன் என்னைக்கும் திருந்தியே வாழ ஆசைப்பட்டு போலீசில் சரண்டர் ஆவார்.
ReplyDeleteஇந்த வரிகளிலேயே தெரிகின்றது நீங்கள் பில்லா முதற்பகுதி பார்க்கவில்லை என்று. பில்லா முதற்பகுதியில் அஜித் இறக்கும் தருணத்தில் பிரபுவோடு பேசும் வசனத்தை நீங்கள் ஒருமுறை பார்க்க வேண்டும்
இந்த பில்லா 2 ஏற்கனவே வந்த பில்லாவின் முந்தய பகுதி என்பதை மறந்துட்டீங்க நீங்க அப்புறம் நீங்க பார்த்த அதே அல் ஹம்ரா பஹ்ரைன் தியேட்டரில்தான் நானும் பார்த்தேன் அப்படி யாரும் படத்தின் பாதியிலே போகவில்லை. படம் சுமார்தான் ஒத்துக்கிறேன்.//
ReplyDeleteமுந்தைய பகுதின்னு நல்லாவே தெரியும் நண்பா...
படம் சுமாரா இல்லையான்னு எல்லாருக்கும் தெரியும்.
படத்தின் பாதியில் யாரும் எழுந்து போனதாக நான் சொல்லவில்லை, மாறாக தம்மில் முனுமுனுத்து சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.
satheesh said...//
ReplyDeleteஎன்ன நண்பா உங்க அடையாளம் ஒன்னும் இல்லாம வந்துருக்கீங்க...? ஹா ஹா ஹா ஹா நீங்க யாருன்னு எனக்கு தெரியாதா என்ன ஹே ஹே ஹே ஹே...
satheesh kumar said...
ReplyDeleteநம்பர் ஒன் : உலக சினிமா வரலாற்றில் நாயகன் என்னைக்கும் திருந்தியே வாழ ஆசைப்பட்டு போலீசில் சரண்டர் ஆவார்.
இந்த வரிகளிலேயே தெரிகின்றது நீங்கள் பில்லா முதற்பகுதி பார்க்கவில்லை என்று. பில்லா முதற்பகுதியில் அஜித் இறக்கும் தருணத்தில் பிரபுவோடு பேசும் வசனத்தை நீங்கள் ஒருமுறை பார்க்க வேண்டும்//
நீங்கள் பதிவுகளில் வரும் படத்தின் விமர்சனம் படிப்பது உண்டா...?
விமர்சன நகர்வு அருமை...!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!
"நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ணாலும் தப்பே இல்ல "என நல்லவனா வாழ இவன் வேலு பாய் இல்ல, "நாம வாழனுன்னா எத்தன பேர வேணுன்னாலும் கொல்லலாம் " என்று வாழும் பில்லா. கொலைகள் ஓவர் தான்.
ReplyDeleteஒரு டான் இன் வாழ்க்கையில் சந்தானம் காமெடியையும்,குத்து பாட்டையும்,செண்டிமெண்ட் முடிச்சுக்களையும் எதிர் பார்க்கலாமா? முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண்.
யுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை.
அஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு !? சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் படம்.
மனோ பார்வையில் விமர்சனம் நல்லாயிருக்கு
ReplyDelete