Sunday, December 18, 2011

பதிவர் சந்திப்புக்கு போகாத பதிவன்...!!!

ஒரு ஊர்ல வேலையே செய்ய மாய்ச்சப்படும் ஒரு சோம்பேறி இருந்தான், வேலைக்கு போனாலும் வேலைசெய்யாமல் மக்கர் பண்ணுவான், ஆனாலும் வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற வீட்டின் நிபந்தம் காரணமாக என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்தான்.

ஒருநாள் திடீர்னு ஒரு யோசனை தோன்றவே, காட்டில் வேலை செய்யும் இடத்துக்கு போனவன், ஐயோ புலி வருது புலி வருது எல்லாரும் ஒடுங்க என சொல்லி ஓடவே மற்றவர்களும் அவன் பின்னால் பயந்து ஓடினார்கள்.


அடுத்த நாளும் புலி வருதுன்னு சொல்லி ஓடினான் மற்றவர்களும் பயந்து ஓடினார்கள், இப்படியே தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள்...

ஒருநாள் நிஜமாகவே புலி வந்தே விட்டது, இவன் கத்திக்கொண்டே ஓடவும் மற்றவர்கள் இவனுக்கு தினமும் இதே பொழப்பா போச்சுன்னு கண்டுக்கலை உண்மையாகவே புலி புலின்னு கத்தியும் காப்பாற்றுவார் இல்லாமல் செத்துப்போனான்.

நீதி : உழைச்சி சாப்பிடனும்...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கேரளாவில் செட்டில் ஆகியிருக்கும் என் அக்காள் ஒருவருக்கு போன் பண்ணினேன் முந்தய நாள், அங்கே ஏதும் பிரச்சினை உண்டா என்று கேட்பதுக்கு...

நான் : ஹலோ அக்கா எப்பிடி இருக்கே....

மறுமுனை : நான் அக்கா இல்லை, அவள் மாப்பிளை பேசுறேன்..


நான் : மச்சான் நான் துபாயில் இருந்து பேசுறேன் [[பஹ்ரைன்னா சிலருக்கு தெரியாது]] 

மச்சான் : ஏன் நீ இங்கே வந்து பேசமாட்டியா..?

அவ்வ்வ்வ்வ் இனி துபாய்ல இருந்து பேசுறேன்னு சொல்லுவே சொல்லுவே....
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று ஈரோட்டில் பதிவர் சந்திப்பு அமர்களமாக நடந்து முடிந்து நேற்றைக்கே பதிவுகள் போட்டு கொண்டு இருக்கிறார்கள், முதல் பதிவு போட்டவர் பதிவர் சாதாரணமானவள்"னு நினைக்கிறேன், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், சிபி நிறைய பேருடைய உண்மையான போட்டோக்களை போட்டு அவர்களை காட்டி கொடுத்து விட்டான் ஹி ஹி...!


நேற்று காலையில் இருந்தே நாய்நக்ஸ்'நக்கீரன் சாட்டில் தொடர்பில் இருந்தார், இவர் மேடையில் போயி இப்போ நாஞ்சில்மனோ உங்க கூட பேசப்போறார்னு எனக்கு போனைப்போட [[மாறி வேற யாருக்கோ லைன் போயிருச்சி போல சத்தியமா எனக்கு போனே வரலை வந்துருந்தா நானே பேசியிருப்பேன் கண்டிப்பாக]] 

வலது ஓரத்தில் இருப்பவர்தான் "நாய்நக்ஸ்"நக்கீரன்.

மூன்று முறை முயன்றும் [[முப்பது ரூபாய் காலி'ன்னு இப்போவும் அழுதுட்டு இருக்கார் ஹி ஹி]] நான் லைனில் இல்லை, பின்னே லைன்ல கோளாறுன்னா நான் என்னய்யா பண்ணுவேன்..?

ஆக இப்பிடி இருக்கும் போதே பதிவர் மாணவன் போன் வந்துருக்கு, நாஞ்சில்மனோ போன் என ஸ்பீக்கர்ல போனைப்போட, ஹலோ மனோ பேசுங்க, ஹலோ நான் மாணவன் பேசுறேன்னு அவர் கத்த இவர் மனோ என்று கேட்க ஒரே கலபரமாகி நக்கீரன் அண்ணன் செமையா மாட்டி இருக்கார்...!!![[ஸாரி அண்ணே]]


அப்புறமா சாட்டுல வந்து ஒரே அழுகை, ம்ம்ம் சரி அண்ணனுக்கு போனை போட்டுருவோம் ரொம்ப பீலிங்கா இருக்காறேன்னு போனை போட்டேன், எம்புட்டு அழனுமோ அம்புட்டு அழுது திட்டி தீர்த்துவிட்டார்...


காலையிலேயே சிபிக்கு போனைபோட்டேன் [[மீட்டிங் நடந்துட்டு இருக்கும்போது]] ஹலோ டேய் அண்ணே....[[போனை ஆன் பண்ணிட்டு அவன் வெளியே ஓடுன வேகம் இருக்கே ஹி ஹி, டேய் மூதேவி நான்தான் போன் பண்ணுறேன்னு தெரிஞ்சும், போனை ஆன் பண்ணாமல் ஓடவேண்டியதுதானே, அம்புட்டு பயம் ஹி ஹி]]


போனில் எந்தெந்த பதிவர்கள் வந்திருக்கிறார்கள்னு லிஸ்ட் தந்தான் மேற்கொண்டு அவனை கொல்ல மனசில்லாமல், கோமாளி"செல்வாவுக்கு போனைபோட்டேன், அவன் ஆள் பயங்கர உஷார் ஆளாச்சே போனை சைலன்ட்ல வச்சிட்டு தூங்கிட்டானாம்.


ஆக நான் போகாமலேயே என்னைப்பற்றி பேசவைத்த அண்ணன் நக்கீரனுக்கு நன்றி, அப்பிடியே ஒரு டீ குடிச்சுட்டு பிளாக்கர் ரீடரை பார்த்தால் சிபி'யின் பதிவு போட்டோக்களுடன் சுட சுட வந்துருக்கு, கூடவே இன்னும் இரண்டுபேர் போட்டுருந்தாங்க, நான் நேரில் கலந்து கொண்டது போல இருந்தது மனதுக்குள் ஒரு குடும்ப விழாவை மிஸ் பண்ணிட்ட பீலிங்கா இருக்கு....!!!


போட்டோ எல்லாம் சிபி அண்ணன் பிளாக்ல சுட்டது, எல்லார் போட்டோவும் பார்த்தாச்சு இன்னும் ஒரே ஒரு நாதாரி மட்டும் மாட்டாமல் இருக்கிறான் விக்கி என்ற தக்காளி, ராஸ்கல் நீ மாட்டாமலா போவே பாத்துக்குறேன்டா.


-------------------------------------------------------------------------------------------------------


veedu said...
பதிவுலக சந்திப்பில் விக்கியையும்,நிருபனையும் சந்திக்கமுடியாத ஏக்கம் எனக்கு இருந்தது...போன்ல மனோ பேசறார்ன்னு சொன்னதும் அருவா....அருவான்னு கை தட்டினோம்...அது வேற மனோன்னு தெரிஞ்சதும் புஸ்ஸுன்னு போச்சு....மனோ நீங்க மிஸ் பன்னிட்டிங்க...





சம்பத் குமார் said...




@ மனோ அண்ணாச்சி நக்கீரன் அண்ணா போன்ல கூப்பிட்ட போது ஏன் பேசல....?

நீங்க லைன்ல இருக்கிறதா செல்போன loudspeeaker ல போட்டு மேடையில இருந்த மைக் முன்னாடி வச்சிக்கிட்டு உங்களுக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டிருந்தார்

பாவம் அவரு ரொம்ப அனுபவிச்சுட்டார்..

[[சிபி'யின் பதிவர் சந்திப்பு போஸ்டில் நண்பர்களின் கமெண்ட்ஸ்]]


டிஸ்கி : ஸாரி மக்கா, அடுத்தமுறை லீவில் வரும்போது கண்டிப்பா உங்க எல்லோரையும் சந்திக்க வருவேன்.

83 comments:

  1. ஹன்சிகா இட்லி... குஸ்பு அவுட் ஆப் பேசன்... ஹி ஹி

    ReplyDelete
  2. மேற்கண்ட உணவுகள் ஈரோடு பதிவர் சந்திப்பில் பரிமாறப்பட்டவை.... நைட் என்னா டிபன் என தெரியல..... ஏன்னா நைட் நான் சாப்பிடல... ஹி..ஹி...


    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...

    ReplyDelete
  3. அண்ணே அடுத்த சந்திப்பி வேலூரில வைக்க சொல்லுங்க. நானும் கலந்துப்பேன்

    ReplyDelete
  4. சென்னையைத் தவிர வேறெங்கு வைத்தாலும் நான் ஆப்செண்ட்தான்!கலக்கலா எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  5. நீங்க போயிருந்தால் சிபி இப்படி கண்ணை பறிகும் கலரில் சட்டையும், கூக்லிங்க் கிளாசுமா இருந்து எங்க கண்ணு நொள்ளையாக்காம பார்த்துக்கிட்டு இருப்பீங்க

    ReplyDelete
  6. //ஸாரி மக்கா, அடுத்தமுறை லீவில் வரும்போது கண்டிப்பா உங்க எல்லோரையும் சந்திக்க வருவேன்.//

    வாங்க அண்ணாச்சி...அடுத்து சென்னைல ஜனவரில இளம் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யுறதா ஆருர் செந்தில் சொல்லிருக்காரு..

    அப்ப கண்டிப்பா நாம மீட் பண்ணுவோம்

    ReplyDelete
  7. சிபி டைட் டீஷர்ட், டைட் பேன்ட் போட்டு இன் செய்து கூலிங் கிளாஸ் போட்டு செம கலக்கலா இருந்தாரு.... ஆனா அடிக்கடி கூலிங்கிளாஸ் இருந்தா தான் தான் ஆபீஸ் ஆட்களுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியுதுன்னு என்கிட்டே மட்டும் அந்த கூலிங்கிளாஸ் ரகசியத்தை சொன்னார்.....

    அப்புறம் ஏன் போட்டோ எடுக்கும் போது கூலிங்கிளாஸ் மாட்டிக்கறிங்க அப்படின்னு கேட்டா சிரிப்பு மட்டுமே பதிலா வந்துச்சு.... ஹி...ஹி...

    ReplyDelete
  8. எல்லா டிஸ்சும் தமிழ்வாசிக்கா

    ReplyDelete
  9. நல்லா சாப்பிட்டாச்சா சங்கமத்துல..

    ReplyDelete
  10. தமிழ்வாசி பிரகாஷ் said...
    மேற்கண்ட உணவுகள் ஈரோடு பதிவர் சந்திப்பில் பரிமாறப்பட்டவை.... நைட் என்னா டிபன் என தெரியல..... ஏன்னா நைட் நான் சாப்பிடல... ஹி..ஹி..//

    சிபி ஒன்னையும் விட்டு வச்சிருக்க மாட்டானே...?

    ReplyDelete
  11. ராஜி said...
    அண்ணே அடுத்த சந்திப்பி வேலூரில வைக்க சொல்லுங்க. நானும் கலந்துப்பேன்//

    ஹா ஹா ஹா ஹா அடப்பாவி தங்கச்சி வேலூர்ல இருக்குறது நீங்க மட்டும்தானே அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  12. சென்னை பித்தன் said...
    சென்னையைத் தவிர வேறெங்கு வைத்தாலும் நான் ஆப்செண்ட்தான்!கலக்கலா எழுதியிருக்கீங்க!//

    அதான் சென்னை பித்தன்னு பேரை வச்சிருக்கீன்களோ தல..?

    ReplyDelete
  13. ராஜி said...
    நீங்க போயிருந்தால் சிபி இப்படி கண்ணை பறிகும் கலரில் சட்டையும், கூக்லிங்க் கிளாசுமா இருந்து எங்க கண்ணு நொள்ளையாக்காம பார்த்துக்கிட்டு இருப்பீங்க//

    ராஸ்கல் தப்பிச்சிட்டான் தங்கச்சி, கையில அம்புடாமலா இருக்கப்போறான் பாத்துக்குறேன்...

    ReplyDelete
  14. மனசாட்சி said...
    எல்லா டிஸ்சும் தமிழ்வாசிக்கா///

    அங்க பரிமாறப்பட்டது நீங்க தெரிஞ்சுகனும்ல... எல்லாமே எனக்கு மட்டும் இல்லை....

    ReplyDelete
  15. சம்பத் குமார் said...
    //ஸாரி மக்கா, அடுத்தமுறை லீவில் வரும்போது கண்டிப்பா உங்க எல்லோரையும் சந்திக்க வருவேன்.//

    வாங்க அண்ணாச்சி...அடுத்து சென்னைல ஜனவரில இளம் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யுறதா ஆருர் செந்தில் சொல்லிருக்காரு..

    அப்ப கண்டிப்பா நாம மீட் பண்ணுவோம்//

    வரமுடியாது மக்கா, லீவு தரமாட்டான் அரபி....ஆனால் கண்டிப்பா போன்ல பேசுறேன் ஸ்பீக்கர்ல போட்டு மைக்ல வச்சிருங்க, என்கிட்டே முதலில் சொல்லிட்டு செய்யுங்க சரியா...

    ReplyDelete
  16. தமிழ்வாசி பிரகாஷ் said...
    சிபி டைட் டீஷர்ட், டைட் பேன்ட் போட்டு இன் செய்து கூலிங் கிளாஸ் போட்டு செம கலக்கலா இருந்தாரு.... ஆனா அடிக்கடி கூலிங்கிளாஸ் இருந்தா தான் தான் ஆபீஸ் ஆட்களுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியுதுன்னு என்கிட்டே மட்டும் அந்த கூலிங்கிளாஸ் ரகசியத்தை சொன்னார்.....

    அப்புறம் ஏன் போட்டோ எடுக்கும் போது கூலிங்கிளாஸ் மாட்டிக்கறிங்க அப்படின்னு கேட்டா சிரிப்பு மட்டுமே பதிலா வந்துச்சு.... ஹி...ஹி...//

    யோவ் அவனுக்கு பகல் கண் நோய் இருக்கு தெரியாதா...?

    ReplyDelete
  17. மனசாட்சி said...
    எல்லா டிஸ்சும் தமிழ்வாசிக்கா//

    ஹா ஹா ஹா ஹா சாப்பாட்டு ராமன் சிபி மட்டுமே ஹி ஹி...

    ReplyDelete
  18. மனசாட்சி said...
    நல்லா சாப்பிட்டாச்சா சங்கமத்துல..//

    சாப்பாடு அரேஞ்ச் பண்ணுனவிங்களை பாராட்டுகிறேன்...!!!

    ReplyDelete
  19. வெளங்காதவன் said...
    :-)//

    ஹா ஹா ஹா ஹா..

    ReplyDelete
  20. தமிழ்வாசி பிரகாஷ் said...
    மனசாட்சி said...
    எல்லா டிஸ்சும் தமிழ்வாசிக்கா///

    அங்க பரிமாறப்பட்டது நீங்க தெரிஞ்சுகனும்ல... எல்லாமே எனக்கு மட்டும் இல்லை....//

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  21. MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி பிரகாஷ் said...
    சிபி டைட் டீஷர்ட், டைட் பேன்ட் போட்டு இன் செய்து கூலிங் கிளாஸ் போட்டு செம கலக்கலா இருந்தாரு.... ஆனா அடிக்கடி கூலிங்கிளாஸ் இருந்தா தான் தான் ஆபீஸ் ஆட்களுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியுதுன்னு என்கிட்டே மட்டும் அந்த கூலிங்கிளாஸ் ரகசியத்தை சொன்னார்.....

    அப்புறம் ஏன் போட்டோ எடுக்கும் போது கூலிங்கிளாஸ் மாட்டிக்கறிங்க அப்படின்னு கேட்டா சிரிப்பு மட்டுமே பதிலா வந்துச்சு.... ஹி...ஹி...//

    யோவ் அவனுக்கு பகல் கண் நோய் இருக்கு தெரியாதா...?///

    மக்கா பானையை இப்படி போட்டு ஒடச்சுடிங்களே......

    ReplyDelete
  22. ஜமாய்சுட்டாங்க போல...ஏன்யா பாவம் நக்கீரர் ஏன் இப்படி பல்ப்பு கொடுத்தே...ரொம்ப நாள் பகையோ...ஹிஹி கொளுத்தி போட்டாச்சி!

    ReplyDelete
  23. தலைப்பு

    //பதிவர் சந்திப்புக்கு போகாத பதிவன்//

    இப்படி கூடவா

    ReplyDelete
  24. விக்கியுலகம் said...
    ஜமாய்சுட்டாங்க போல...ஏன்யா பாவம் நக்கீரர் ஏன் இப்படி பல்ப்பு கொடுத்தே...ரொம்ப நாள் பகையோ...ஹிஹி கொளுத்தி போட்டாச்சி!///

    ஆகா... வேலையை ஆரம்பிச்சுட்டார்...

    ReplyDelete
  25. வணக்கம் அண்ணே,
    சௌக்கியமா?

    என்னா நடக்குது இங்கே..
    நம்ம தமிழ்வாசி மச்சி
    சந்திப்பில தான் சாப்பிட்ட அயிட்டங்களை ஒவ்வொன்னா அவிழ்த்து விடுறாரே!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  26. ராஜி said...
    அண்ணே அடுத்த சந்திப்பி வேலூரில வைக்க சொல்லுங்க. நானும் கலந்துப்பேன்//

    ஏன் அக்கா, நம்ம எல்லோரையும் புடிச்சி ஜெயிலுக்கு போட்டு அடி வாங்கி கொடுக்கவா?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  27. செல்லவில்லை என்றாலும் பகிர்ந்து கொண்டீர்களே..

    ReplyDelete
  28. அண்ணே இந்தப் புலிக் கதை மாதிரி நம்ம ஊரில செத்தான் செத்தான் என்று ஒருத்தர் காமெடிக்கு கூவி கடைசியில செத்தானா ஆகிட்டாருன்னு சொல்லுவாங்க.

    ReplyDelete
  29. துபாயில இருந்து பேசி பல்பு வாங்கிட்டீங்களா..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  30. துபாயில இருந்து பேசி பல்பு வாங்கிட்டீங்களா..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  31. சந்திப்பிற்கு நானும் அடுத்த வருஷம் வாரேன்! எல்லோரும் சேர்ந்து ஜமாய்ப்போம்!

    சிபி அண்ணை ஏன் கண்ணாடி போடுறார் என்பதற்கான விளக்கம் ஜாக்கி அண்ணர் கூட நிற்இற போட்டோவை பார்க்கும் போதே தெரியுது!
    கொர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  32. மனோ உங்களை சந்திக்கமுடியாத ஏக்கம்
    பதிவாய் வாங்க...கருத்த சொல்லுங்க...

    நம்ம வலையில் பதிவர் சந்திப்பு அனுபவம்

    நல்ல நண்பர்களை தந்த ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு

    ReplyDelete
  33. தமிழ்வாசி பிரகாஷ் said...
    MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி பிரகாஷ் said...
    சிபி டைட் டீஷர்ட், டைட் பேன்ட் போட்டு இன் செய்து கூலிங் கிளாஸ் போட்டு செம கலக்கலா இருந்தாரு.... ஆனா அடிக்கடி கூலிங்கிளாஸ் இருந்தா தான் தான் ஆபீஸ் ஆட்களுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியுதுன்னு என்கிட்டே மட்டும் அந்த கூலிங்கிளாஸ் ரகசியத்தை சொன்னார்.....

    அப்புறம் ஏன் போட்டோ எடுக்கும் போது கூலிங்கிளாஸ் மாட்டிக்கறிங்க அப்படின்னு கேட்டா சிரிப்பு மட்டுமே பதிலா வந்துச்சு.... ஹி...ஹி...//

    யோவ் அவனுக்கு பகல் கண் நோய் இருக்கு தெரியாதா...?///

    மக்கா பானையை இப்படி போட்டு ஒடச்சுடிங்களே....//

    பின்னே, வீட்டுக்கு நடுவுல வந்து நின்னுகிட்டு இருட்டா இருக்குன்னு சொல்றானே ராஸ்கல்...

    ReplyDelete
  34. விக்கியுலகம் said...
    ஜமாய்சுட்டாங்க போல...ஏன்யா பாவம் நக்கீரர் ஏன் இப்படி பல்ப்பு கொடுத்தே...ரொம்ப நாள் பகையோ...ஹிஹி கொளுத்தி போட்டாச்சி!//

    எலேய் அவர் அதுக்கெல்லாம் கவலை படலை முப்பது ரூபா போச்சேன்னு அழுறார் ஹி ஹி...

    ReplyDelete
  35. மனசாட்சி said...
    தலைப்பு

    //பதிவர் சந்திப்புக்கு போகாத பதிவன்//

    இப்படி கூடவா//

    நாங்களும் ரோசிப்போமில்ல...

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. தமிழ்வாசி பிரகாஷ் said...
    விக்கியுலகம் said...
    ஜமாய்சுட்டாங்க போல...ஏன்யா பாவம் நக்கீரர் ஏன் இப்படி பல்ப்பு கொடுத்தே...ரொம்ப நாள் பகையோ...ஹிஹி கொளுத்தி போட்டாச்சி!///

    ஆகா... வேலையை ஆரம்பிச்சுட்டார்...//

    அவனுக்கு சண்டை போடலைன்னா உறக்கம் வராதுங்க விடுங்க, இவனை மறுபடியும் பாகிஸ்தான் எல்லையில கொண்டு போயி விட்டுருவோம்...

    ReplyDelete
  38. அட மனோ அண்ணே அருமையான ஒரு சந்திப்பை மிஸ் பண்ணீட்டிங்க போல அடுத்த முறை கலந்து கொள்ளுங்க...

    எங்க நாட்டில எல்லாம் பதிவர் சந்திப்பு என்றால் என்ன என்று கேட்டும் நிலை ஒரு சிலர் தங்களுக்குள்ளே சந்திப்பைவைத்து பதிவர் சந்திப்பு என்பார்கள்

    ஆனால் உங்கள் ஊரில் உள்ள பதிவர்கள் பதிவுலகில் வைத்திருக்கும் ஆர்வம் இதன் மூலம் தெரிகின்றது.
    வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  39. நிரூபன் said...
    வணக்கம் அண்ணே,
    சௌக்கியமா?

    என்னா நடக்குது இங்கே..
    நம்ம தமிழ்வாசி மச்சி
    சந்திப்பில தான் சாப்பிட்ட அயிட்டங்களை ஒவ்வொன்னா அவிழ்த்து விடுறாரே!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    நம்மை பொறாமைப்பட வைக்கிறாராம் அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  40. நிரூபன் said...
    ராஜி said...
    அண்ணே அடுத்த சந்திப்பி வேலூரில வைக்க சொல்லுங்க. நானும் கலந்துப்பேன்//

    ஏன் அக்கா, நம்ம எல்லோரையும் புடிச்சி ஜெயிலுக்கு போட்டு அடி வாங்கி கொடுக்கவா?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    ஆத்தாடி இப்பிடி ஒரு ஆங்கிள் இருக்கா, எனக்கு தோணவே இல்லையே...!!!

    ReplyDelete
  41. மதுமதி said...
    செல்லவில்லை என்றாலும் பகிர்ந்து கொண்டீர்களே..//

    ஹா ஹா ஹா ஹா அதே....

    ReplyDelete
  42. நிரூபன் said...
    அண்ணே இந்தப் புலிக் கதை மாதிரி நம்ம ஊரில செத்தான் செத்தான் என்று ஒருத்தர் காமெடிக்கு கூவி கடைசியில செத்தானா ஆகிட்டாருன்னு சொல்லுவாங்க.//

    இந்த கதை எனக்கு என் அப்பா சொன்னது...!!!

    ReplyDelete
  43. நிரூபன் said...
    துபாயில இருந்து பேசி பல்பு வாங்கிட்டீங்களா..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    செம காமெடி அது சிரிப்பா சிரிச்சுட்டு இருக்கேன் இப்பவும்...!!!

    ReplyDelete
  44. நிரூபன் said...
    சந்திப்பிற்கு நானும் அடுத்த வருஷம் வாரேன்! எல்லோரும் சேர்ந்து ஜமாய்ப்போம்!

    சிபி அண்ணை ஏன் கண்ணாடி போடுறார் என்பதற்கான விளக்கம் ஜாக்கி அண்ணர் கூட நிற்இற போட்டோவை பார்க்கும் போதே தெரியுது!
    கொர்ர்ர்ர்ர்ர்ர்//

    ஹா ஹா ஹ ஹா ஹா ஹா...

    ReplyDelete
  45. veedu said...
    மனோ உங்களை சந்திக்கமுடியாத ஏக்கம்
    பதிவாய் வாங்க...கருத்த சொல்லுங்க...

    நம்ம வலையில் பதிவர் சந்திப்பு அனுபவம்//

    நான் அப்பவே படிச்சேன், ஆனால் கமெண்ட்ஸ் போட முடியலை பயங்கர ஸ்லோவா இருக்கு...?

    ReplyDelete
  46. K.s.s.Rajh said...
    அட மனோ அண்ணே அருமையான ஒரு சந்திப்பை மிஸ் பண்ணீட்டிங்க போல அடுத்த முறை கலந்து கொள்ளுங்க...

    எங்க நாட்டில எல்லாம் பதிவர் சந்திப்பு என்றால் என்ன என்று கேட்டும் நிலை ஒரு சிலர் தங்களுக்குள்ளே சந்திப்பைவைத்து பதிவர் சந்திப்பு என்பார்கள்

    ஆனால் உங்கள் ஊரில் உள்ள பதிவர்கள் பதிவுலகில் வைத்திருக்கும் ஆர்வம் இதன் மூலம் தெரிகின்றது.
    வாழ்த்துக்கள் பாஸ்//

    வெளிநாட்டுல இருக்குற நாம நினைச்ச நேரத்துக்கு போகமுடியாதே மக்கா...

    மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  47. விக்கி தக்காளி ஃபோட்டோ என் கிட்டே இருக்கு பப்ளிஷ் பண்ணிடலாமா? ஹி ஹி

    ReplyDelete
  48. @சி.பி.செந்தில்குமார்

    நானும் கேட்டேன் அவன்கிட்டே, உன்கிட்டே அவன் போட்டோ இருக்குன்னு, அதுக்கு அவன் நீ பொய் சொல்லுறேன்னு சொல்லிட்டான் போடாங்...

    ReplyDelete
  49. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ரைட்டு.//

    வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. வணக்கம் மனோ.!
    பதிவர் சந்திப்பை நேர்ல பார்த்த போல் இருந்துச்சு.. நீங்க மட்டும் நேர்ல போய் இருந்தா பத்து பதிவு தேத்தியிருப்பீங்க.. ஹிஹிஹி...

    ReplyDelete
  52. நீங்க பதிவர் சந்திப்புக்கு போகாமலேயே அந்த விழாவப்பற்றி அழகாக தொகுத்து கொடுத்துட்டீங்க..

    ReplyDelete
  53. காட்டான் said...
    வணக்கம் மனோ.!
    பதிவர் சந்திப்பை நேர்ல பார்த்த போல் இருந்துச்சு.. நீங்க மட்டும் நேர்ல போய் இருந்தா பத்து பதிவு தேத்தியிருப்பீங்க.. ஹிஹிஹி..//

    நாம யாரு, அமெரிக்காவுல போயி பதிவர் சந்திப்பு நடத்திய ஆளாச்சே...

    ReplyDelete
  54. RAMVI said...
    நீங்க பதிவர் சந்திப்புக்கு போகாமலேயே அந்த விழாவப்பற்றி அழகாக தொகுத்து கொடுத்துட்டீங்க..//

    ஹா ஹ ஹா ஹா ஹா...

    ReplyDelete
  55. பதிவர் சந்திப்புக்கு போகாமையே பதிவா.. ஆனாலும் சுவாரஸ்யமா இருக்கு..

    ReplyDelete
  56. வேடந்தாங்கல் - கருன் *! said...
    பதிவர் சந்திப்புக்கு போகாமையே பதிவா.. ஆனாலும் சுவாரஸ்யமா இருக்கு..//

    வாத்தி, அமெரிக்காவுக்கு போகாமலேயே அங்கே பதிவர் சந்திப்பு நடத்துனது மறந்து போச்சாக்கும்..?

    ReplyDelete
  57. மனோ..இனி தூர இடங்களுக்குப் போன் பேச எடுக்கிறப்பல்லாம் இந்தப் பதிவு ஞாபகம் வந்து சிரிக்கப்போறேன் !

    ReplyDelete
  58. வணக்கம் மக்களே,
    உங்களைப் போல சந்திப்புக்கு நானும் போகலை.
    ஆனா இதுபோன்ற பதிவுகள் போய்வந்த திருப்தியை கொடுக்குது..

    ReplyDelete
  59. பதிவர் சந்திப்புக்கு போகாமலே பதிவு சுவராஸ்யமா இருக்குங்க...

    ReplyDelete
  60. உங்க மச்சானையும் பதிவு எழுத வர சொல்லுங்க அண்ணே..ஹி ஹி ஹி..

    ReplyDelete
  61. ஆமாண்ணே நானும் நேத்துதான் சிபி அண்ணே வலைல எல்லா பயபக்கிக மோகத்தையும் பாத்தேன்..:)

    ReplyDelete
  62. ஹேமா said...
    மனோ..இனி தூர இடங்களுக்குப் போன் பேச எடுக்கிறப்பல்லாம் இந்தப் பதிவு ஞாபகம் வந்து சிரிக்கப்போறேன் !//

    பாருங்களேன் என்னா அநியாயம் பன்னுராங்கன்னு ஹி ஹி...

    ReplyDelete
  63. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    பகிர்வுக்கு நன்றி.//

    வாங்க வாங்க...

    ReplyDelete
  64. மகேந்திரன் said...
    வணக்கம் மக்களே,
    உங்களைப் போல சந்திப்புக்கு நானும் போகலை.
    ஆனா இதுபோன்ற பதிவுகள் போய்வந்த திருப்தியை கொடுக்குது..//

    ஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி...

    ReplyDelete
  65. S.Menaga said...
    பதிவர் சந்திப்புக்கு போகாமலே பதிவு சுவராஸ்யமா இருக்குங்க...//

    ஹா ஹா ஹா ஹா நன்றி, என்ன பாப்பா போட்டோவை மாத்தியாச்சா..?

    ReplyDelete
  66. மயிலன் said...
    உங்க மச்சானையும் பதிவு எழுத வர சொல்லுங்க அண்ணே..ஹி ஹி ஹி..//

    ஏன் அவர் என்னை மட்டும் கொன்னது போதாதா..? உங்களையும் சேர்த்து கொல்லனுமாக்கும் ஹி ஹி..

    ReplyDelete
  67. மயிலன் said...
    ஆமாண்ணே நானும் நேத்துதான் சிபி அண்ணே வலைல எல்லா பயபக்கிக மோகத்தையும் பாத்தேன்..:)//

    முகத்தை பார்த்தீங்களா மோகத்தை பார்த்தீங்களா சரியா சொல்லுங்கய்யா ஹி ஹி...

    ReplyDelete
  68. புலிக்கதை ஒன்னும் டச்சிங்கா இல்லை, அங்கிள். கேரளா அக்கா நலம் தானே? சொல்ல வந்த கதையை பாதியிலை விடப்படாது ஓக்கை.

    பதிவர் சந்திப்பா? எத்தனை தடவை தான் சந்திப்பார்கள்??????

    ReplyDelete
  69. எனக்கும் இந்த மாதிரி சந்திப்புகளில் கலந்து கொள்ள ஆசைதான். என்ன செய்ய சூழ்நிலை தடுகிறது



    இன்று.

    காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25

    ReplyDelete
  70. vanathy said...
    புலிக்கதை ஒன்னும் டச்சிங்கா இல்லை, அங்கிள். கேரளா அக்கா நலம் தானே? சொல்ல வந்த கதையை பாதியிலை விடப்படாது ஓக்கை.///

    அக்கா நலமா இருக்காங்க, மச்சான் நான்னு தெரியாமல் லோக்கல் கால்'ன்னு நினச்சி கிண்டல் பண்ணி இருக்கார் ஹி ஹி...

    பதிவர் சந்திப்பா? எத்தனை தடவை தான் சந்திப்பார்கள்??????//

    ஒரு தடவை நீங்களும் சந்திப்புக்கு வந்து பாருங்களேன் சூப்பரா இருக்கும், கொஞ்சநாள் என்ன காலம் பூரா மறக்கவே மறக்காது தேனாய் இனிக்கும்!!!

    ReplyDelete
  71. சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க .

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!