Sunday, October 7, 2012

கைப்பிள்ளையைக் கூட சிரிக்க வைக்கும் அமெரிக்கா...!

திடீரென எங்கள் ஹோட்டலில் இன்டர் நெட் கனெக்ஷன் கட்டாகி விட்டது, கெஸ்ட்கள் புகார் மேல் புகார் கொடுக்க, டெக்னீஷியன்கள் வந்து செக் பண்ணினார்கள். இருந்தும் நெட் ஒப்பன் ஆகவில்லை, சம்பந்தப்பட்ட சேட்டிலைட் ஆளுகளையும் வரவழைச்சு செக் செய்தும் லைன் ஒப்பன் ஆகலை.
 [[தலையை பிடிச்சி தண்ணிக்குள்ளே முக்குங்கய்யா]]

சின்ன மேனேஜர்ல இருந்து எல்லா பெரிய டேமேஜர்களுக்கும் விஷயம் தெரிய ஆரம்பிச்சதும் ஹோட்டல்ல ஒரே பரபரப்பு [[பின்னே நெட் இல்லைன்னா ஆபீஸ் தவிச்சு போகுமே]] அந்த டெக்னீசியன கூப்புடு, இந்த டெக்னீசியன கூப்புடுன்னு ஒரே பரபர.....
[[இதுக்குதாம்டா நீங்க லாயக்கு ஹா ஹா ஹா ஹா]]

கடைசியில முதலாளிக்கும் விஷயம் தெரிஞ்சி போக, கடுப்பாகி எல்லாருக்கும் செமையா டோஸ் விழுந்துட்டு இருந்துச்சு, இதுக்கிடையில் ஸ்பெஷல் டெக்னீசியன் ஆச்சர்யமாக சொன்னது, என் வாழ்க்கையில இப்பிடி ஒப்பன் ஆகாமல் இருப்பதை பார்ப்பது இதுவே முதல் முறைன்னு அலற....

எல்லாருமே பயங்கர டென்ஷனில் இருக்கும் போது, ஒரு அமெரிக்கன் [[ரூம் கெஸ்ட்]] தன் லேப்டாப்பை ரிஷப்சனுக்கு கொண்டு வந்து நெட் ஒப்பன் ஆகவில்லை எனவே அதன் பாஸ்வேர்டு என்னான்னு சொல்லு என்று லேப்டாப்பை ரிஷப்சனில் வைத்து சற்று அங்கிட்டும் இங்கிட்டுமாக ஆட்டிக் கொண்டிருந்தான். 
[[இது அழகாதாம்ய்யா இருக்கு...!]]

நெட் பிரச்சினை இருப்பதாகவும், அதன் வேலைதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி அவனை அனுப்பின எனக்கு, கொஞ்ச நேரம் கழிந்ததும் மண்டையில் "லைட்" அடிக்க ஆரம்பிச்சது, உடனே போன் பண்ணி மேட்டரை முதலாளிக்கு சொன்னேன், அந்த டென்ஷன்ல சிரித்து விட்டார். சரி எல்லாரிடமும் "சேட்டிலைட்" பிராப்ளம்னு மட்டும் சொல்லிரு என்றார்....
[[விஜயன் போட்டோ எடுக்குறார்னு நினைக்கிறேன், போஸ் குடுக்குறாயிங்க போஸ் ஹி ஹி]]

ஜி எம்மிடமும் சொல்லி அவர் பதட்டத்தையும் தணிக்க, எல்லா கெஸ்ட் ரூமுக்கும் போன் பண்ணி நெட் தற்காலிகமாக கிடைக்காது என்று சொல்ல சொன்னோம்.

சரி என்னா மேட்டர்...?  என்ன நடந்தது...?

அன்று காலையில் எட்டு பேர் கொண்ட அமெரிக்கன் நேவி குழு ஒன்று ரூமெடுத்து தங்கி இருந்தார்கள், அல்லாமலும் லேப்டாப் கொண்டு வந்து ரிஷப்சனில் ஆட்டிட்டு போனானே, அப்பத்தான் எனக்கு மேட்டர் புரிந்தது. அதாவது இந்த அமெரிக்கன் மிலிட்டரி [[நேவி]] காரனுக எங்கே போனாலும் [[ஆபீசியல்]] தங்கினாலும் முதலில் அந்த இடத்தில் உள்ள நெட் ஒர்க் கனெக்ஷனை முடக்குவார்கள், இவர்கள் ரகசியங்கள் [[ராணுவ]] வெளியே தெரியாமல் இருக்க....!
[[ப்பூப்பூப்]]

அந்த கருவிக்கு ஜாமர் என்று பெயர், அடுத்து லேப்டாப்பை கொண்டு வந்தானே அவன் ரகசிய கேமரா மூலம் ஹோட்டலை அளவெடுத்துட்டு போகவும், நெட் ஒர்க் அவனுக கையையும் மீறி போயிருக்கா என்பதை கணிக்கவுமே அனுப்பப் பட்டவன் என்பதை புரிந்து கொண்டுதான் முதலாளிக்கு மேட்டரை சொன்னேன். [[ஆமாமா உடனே சம்பளத்தை கூட்டிறப்போறான் போய்யா]]

இந்த அமெரிக்காகாரனுக இருக்காயிங்களே இவங்க ஒன்னாம் நம்பர் பேடி பயந்தாங்கொள்ளி பசங்க என்பதை நான் பலமுறை நேரில் பார்த்து இருக்கேன், சண்டை வருதோ இல்லையோ எப்பிடி தப்பிச்சி ஓடலாம் என்பதைத்தான் முதலில் கவனித்து வைத்துக் கொல்கிறார்கள் ச்சே ச்சீ கொள்கிறார்கள்...!
[[போஸ் குடுக்குறது நல்லாத்தான் இருக்கு ஆனால் ஆக்ஷன் சரியில்லையே செத்தப்பு ச்சே சித்தப்பு - இந்தியன் நேவி]]

நம்ம ஆளுங்க எப்பிடி...? இந்திய "ரா" அண்ணாச்சிங்க இங்கே முகாமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் இருக்கு, என்னா மேட்டருன்னு தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கு, நம்மாளுங்க ஒரு மேட்டரை சொல்லி திசைதிருப்பிவிட்டு தனி டிராக்ல போற ஆளாச்சே....அதான் என்னா மேட்டர்னு சற்று குழப்பமா இருக்கு....!
-----------------------------------------------------------------------------------------------------

நீ......... பூ....சரி 

நான்...... முள்...சரி  

உனக்கு வலிக்கும்

என்றால் நீ 

என்னை ஏற்றுக்கொள்ளும்

ரகசியம் என்ன...?!!!

[[இன்னைக்கு வியட்னாம்"ல கலவரம் நிச்சயம், மீ எஸ்கேப்....]]

17 comments:

  1. நெட் ஒர்க் பண்ணலைன்னா என்னென்ன கலாட்டா நடக்குது.
    கவிதை சூப்பர்.

    ReplyDelete

  2. ம்ம்ம்ம் இங்கேயும் சேட்டிலைட் பிராப்பளம் .............வாசிச்சு முடிச்சப்புறம் தான் ,,,,,,,,
    இருந்தாலும் அமெரிக்கன் இல்ல அமேரிக்கன் ஆமியின் இரகசியமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறியள் அவரா நீங்க

    ReplyDelete
  3. மனோ அண்ணே நீங்க இந்தியன் சீக்ரெட் சர்விஸில் இருக்க வேண்டியவர்ண்ணே

    ReplyDelete
  4. விட்றா சூனா பானா...அந்த பஞ்சாயத்தை கலைக்கப்பட்ட பாடு...ஸ்ஸ்ஸ் அபா!

    ReplyDelete
  5. neenga inga iruka vendiyavare illana .

    ReplyDelete
  6. It is not that US military were scared or finding an escape route. They continue to strive to stay a few steps ahead of others.

    If this were any sub-continent officials, they would be happy to brag (share?) their secrets to show how important they are over a couple of glasses of Whiskey and a good company.

    ReplyDelete
  7. அதெப்படி மனோ, எந்த பிரச்சனைனாலும், நீங்க “முழுசா” பார்த்திடுறீங்களே சாரி கண்டு பிடிச்சிடுறீங்களே! அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. குஷ்பு, சுகன்யான்னு பாத்துட்டு இருந்த ஆள நேவி, உளவுத்துறைன்னு எப்படி ஆக்கிப்புட்டாங்கய்யா...

    ReplyDelete
  9. பூ, முள்ளு........ வியட்நாம்... எலேய் என்னலே நடக்கு? தக்காளி திருந்திட்டான்னு பேசிக்கிட்டாங்களே?

    ReplyDelete
  10. பூ முள்ளு நடத்துங்கவோய்

    ReplyDelete
  11. மனோ கேப்டன் விஜய்காந்த் நினைவு எனக்கு வராமல் இல்லை.நிச்சயம் சம்பளம் கூட்டிப்பெருக்கித் தரப்படும்!

    ReplyDelete
  12. நல்லாத்தான் கண்டுபிடிக்கறீங்க....

    ReplyDelete
  13. புடிங்கண்ணே.. அந்த ஓட்டு மொத்த அமெரிக்ககாரனுகளையும் புடிச்சு உள்ள போடுங்க ண்ணே... உங்க இடத்துக்கு வந்து உங்க சேட்டிலைட்டயே மொடக்குரான்... படுவா!!

    ReplyDelete
  14. கைபேசியும் வேலை செய்திருக்காதே...?

    கவிதை சூப்பர்...

    ReplyDelete
  15. //இந்த அமெரிக்காகாரனுக இருக்காயிங்களே இவங்க ஒன்னாம் நம்பர் பேடி பயந்தாங்கொள்ளி பசங்க என்பதை நான் பலமுறை நேரில் பார்த்து இருக்கேன், சண்டை வருதோ இல்லையோ எப்பிடி தப்பிச்சி ஓடலாம் என்பதைத்தான் முதலில் கவனித்து வைத்துக் கொல்கிறார்கள் ச்சே ச்சீ கொள்கிறார்கள்...!//

    aha, enne oru arivu. pinna veeram-nu solli PLAN pannaama poyi saaga solriyaa? They don't wanna lose a single officer UNNCESSARILY.

    ReplyDelete
  16. ayya sami unka thalaththukku varumpothe nenachchcen vayiru punnaki pokunnu azhakana nakaisuvai kalantha sereesana nadai parattukal

    enathu kaniniyil thamizhil varavillai athana than thanleesu

    ReplyDelete
  17. நெட் ஏன் கிடைக்கவில்லை என்று எப்படி நம்ம தலைவர் கண்டுபிடிச்சார் பாத்திங்களா, அதுதான்யா தமிழனோட மூளை, இதுக்கு பயந்துதான்யா மலையாளத்தான் நம்மள வெறுக்கிறான். நீங்க பட்டைய கலப்புங்க தலைவரே.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!