Thursday, October 4, 2012

கட்டபொம்மன் ஃபாலோ அப் அண்ட் பதிவர்கள் கும்மி...!


கட்டபொம்மன் வரலாறு ஃபாலோ அப்......

கட்டபொம்மனை எட்டப்பன் மட்டுமே காட்டிக் கொடுக்கவில்லை, பணத்துக்கும், சுகத்துக்கும் [[பயந்தும்]] ஆசைப்பட்டு ஏனைய பாளையக்காரர்கள் கூடிச் சேர்ந்தே கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்துள்ளார்கள்...!


கட்டபொம்மன் எங்கேயும் போயி கொள்ளை அடிக்க  வேண்டிய அவசியம் இருக்கவில்லை, இருதிருக்கவும் வாய்ப்பில்லை ஆனால், கட்டபொம்மன் பேரை களங்கப்படுத்தவும், தனது ஆதாயத்துக்காகவும் கொள்ளைக்காரர்களை தூண்டிவிட்டு போக்கிரித் தனமாக [[முள்ளநரி.... குள்ள நரிதான்]] வெள்ளைக்காரர்களும், உள்ளூர் கொள்ளையர்களும்தான்....!

ஏற்கனவே காசி, செம்புலிங்கம், "சீவலப்பேரி"பாண்டி, துரை சிங்கம்  போன்றோர்களின் பெயரை பயன்படுத்தி கொள்ளையடித்தவர்களை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.
கட்டபொம்மனை ஒரு குறிப்பிட்ட சில நபர்களே மோசமாக சித்தரித்து வருவதாக நான் படித்தவரையில் புரியத் தோனுகிறது, கட்டபொம்மனிடம் ஜாதி வேறுபாடுகள் இல்லவே இல்லை என்பதை அவன் படை தளபதிகளின் பெயர்களைப் பார்த்தாலே நன்றாக புரிகிறது, ஒவ்வொரு ஜாதியினரையும் மிகவும் மதித்துள்ளதாக புரிகிறது.

கடைசியாக என் கணிப்புபடி [[நான் படித்தவரை]] சொல்லவேண்டுமானால், எட்டப்பன் கட்டபொம்மனை காட்டிக் கொடுக்கவில்லை, உளவு சொன்னான் என்றே சொல்லலாம், இதில் எட்டப்பன் மட்டும் இல்லை ஏனைய பாளையக்காரர்களும் சிலர் உளவு சொன்னவர்கள்தான்.

எக்காரணம் கொண்டும் அந்நியன் நம் நாட்டை ஆள்வது எட்டப்பனுக்கோ அவனைச் சார்ந்தவர்களுக்கோ உள்ளூர ஆசை இருக்க சான்ஸே இல்லை என்பதும், மனதில் கண்டிப்பாக வெள்ளையனுக்கு வஞ்சம் வைத்து ஏதாவது ஒரு வகையில் வெள்ளையர்களை பழி தீர்த்திருப்பார்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.

இறுதியாக...

தன் நாட்டில் தஞ்சம் புகுந்த கட்டபொம்மனை நேரடியாக காட்டிக்கொடுத்து........கட்டிக்கொடுத்தது வீரமிகு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான்"தான், இது சரித்திரம் கூறும் உண்மை....!

எட்டப்பன் பெயரை இம்புட்டும் கறைபடிய வைத்தது வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமாவும் அதில் நடித்த சிறந்த நடிகர் வி கே ராமசாமி அவர்களின் நடிப்புத் திறமையும்தான், புதுக்கோட்டை தொண்டைமான் வேடத்தில் சிறந்த ஒரு நடிகரை [[எட்டப்பன் கேரக்டர் போல பில்டப் கொடுத்து]] நடிக்க வைத்திருந்தால், தொண்டைமான் சங்கதியும் சந்தி சிரித்திருக்கும் என்பதே உண்மை...!

[[[[[[[[தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். “படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை” என்று அறிவித்தான் பானர்மேன்.]]]]]] நன்றி : வினவு.காம் 
--------------------------------------------------------------------------------------------
சரி, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவோம் வாங்க......உங்க கண்ணோட்டம் எப்பிடின்னு சொல்லுங்க....

முதலாளிகள் கண்ணோட்டம் வேறே, மானேஜர்கள் கண்ணோட்டம் வேறே, வேலை செய்யும் தொழிலாளிகள் கண்ணோட்டம் வேறே...

வீட்டுத் தலைவன் கண்ணோட்ட,ம் வேறே, வீட்டம்மா கண்ணோட்டம் வேறே....

அப்பப்பன் கண்ணோட்டம் வேறே, அம்மும்மா கண்ணோட்டம் வேறே....

சோனியா பூந்தி கண்ணோட்டம் வேறே, "அம்மா"டி கண்ணோட்டம் வேறே. தாத்தாவின் கண்ணோட்டம் வேறே...

பில்கேட்ஸ் கண்ணோட்டம் வேறே, அம்பானிகள் கண்ணோட்டம் வேறே, டாட்டாவின் [[தாத்தா அல்ல]] கண்ணோட்டம் வேறே, 

சாயாக்கடை நாயர் கண்ணோட்டம் வேறே, மிலிட்டிரி ஓட்டல்காரன் கண்ணோட்டம் வேறே, ஸ்டார் ஹோட்டல்காரன் கண்ணோட்டம் வேறே...

அரசியல்வாதிகள் கண்ணோட்டம் வேறே, பொது மக்கள் கண்ணோட்டம் வேறே....

பிளாக்கர்ஸ் கண்ணோட்டம் வேறே, பேஸ்புக்"கர்ஸ் கண்ணோட்டம் வேறே....

அமெரிக்கா'காரன் கண்ணோட்டம் வேறே, சீனாக்'காரன் கண்ணோட்டம் வேறே....

எம்ஜியார் கண்ணோட்டம் வேறே, எம் ஆர் ராதா கண்ணோட்டம் வேறே, கமல்ஹாசன் கண்ணோட்டம் வேறே....

நயன்தாரா கண்ணோட்டம் வேறே, அசின் கண்ணோட்டம் வேறே....

விஜய் மல்லையா கண்ணோட்டம் வேறே, புரூனே மன்னர் கண்ணோட்டம் வேறே....

ஆனால் ஆனால் ஆனால் ஆனால் ஆனால் ஆனால்..........என்ன ஆனால்.........?

ஒரே அலைவரிசை கொண்ட நண்பர்களின் கண்ணோட்டம் ஒன்றே ஒன்றுதான் அது......

"மக்கா சூப்பர் ஃபிகருடா மச்சி...!" [[ஆபீசர் மன்னிச்சு]]
-----------------------------------------------------------------------------------------------

ஊரில் ஒன்று சேர்ந்த நண்பர்கள் மூவர்.....

விக்கி : டேய் மனோ சிபி'யை முட்டாள் [[ஃபூல்]] முட்டாள்னு அடிக்கடி சொல்றியாமே ஏன்...? பஞ்சாயத்துக்கு வந்துருக்கான் பதில் சொல்லு...?

மனோ : அண்ணே, நான் பதில் சொல்றது இருக்கட்டும் அண்ணே, இங்கே பாருங்க நான் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த "பென்டிரைவை" விசில்"னு நினச்சி வாயில் வச்சி ஊதிகிட்டு இருக்கான் பாருங்க, இந்த பதில் போதுமா அண்ணே...?
விக்கி : மனதுக்குள் ச்சே ஈரோட்டுகாரனுக்கு சப்போட் பண்ணலாம்னு பார்த்தா லைவ்வா கவுத்துப்புட்டானே.....சத்தமாக....அல்லாரும் வூட்டுக்குப் போங்க பஞ்சாயத்து முடிஞ்சி போச்....

மனோ : அண்ணே பஞ்சாயத்து.....

விக்கி : போடாங் கொய்யால, நான் எங்கேயாவது போயி மலையில இருந்து குதிக்கப்போறேன், பென்டிரைவ்'க்கும் விசிலுக்கும் வித்தியாசம் தெரியாத இவனையும் கொன்னுட்டுதான் போவேன் மலைக்கு....

அப்பாடா எப்பிடியோ ரெண்டு நாதாரிங்க தொல்லை இனி இல்லை ஸ்ஸ்ஸ்ஸ் அபா....

டிஸ்கி : வாழ்க்கையில கொஞ்சம் சீரியசும் வேணும், கொஞ்சம் காமெடியும் வேணும் இல்லையா...? என்னடா சீரியசா பதிவைப் போட்டுட்டு கீழே காமெடி டிராக் ஓடுதேன்னு நினச்சிறப்புடாதுல்ல...


14 comments:

  1. ஓ இப்படி ஒரு விசயம் இருக்கா வரலாற்றுல..

    பென்ட்ரைவ்...மேட்டரு மட்டும் இல்ல...அவன விடறதா இல்ல...ஹிஹி!

    ReplyDelete
  2. அண்ணே வணக்கம் ..
    சில நெருடல்களை நானும் உங்களை போல உணர்ந்தவன் . சில தெளிவான செய்திகளை அறிந்து கொண்டேன் ...

    ReplyDelete
  3. பெண்டிரைவ் ஜோக் நல்லா இருக்கே

    ReplyDelete
  4. பென்டிரைவ் கதை சூப்பர் நண்பரே.... ஹி ஹி....

    வாழ்த்துக்கள்

    http://www.puthiyaulakam.com

    ReplyDelete
  5. மனோ சகோ !!! நலமா
    உங்க கண்ணோட்டத்தை போலவே முன்பு என் அங்கிள் ஒருவர் தொண்டைமான் எட்டப்பன் விஷயம் பற்றி சொன்னார் அப்ப .நான் சீரியசாக எடுக்கலை( உண்மைய சொல்லனும்னா நான் அவரை நம்பவில்லை அப்போ )

    பிறகு இப்ப விளங்குகிறது ..பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. அண்ணே இந்த விசில் மாதிரி எனக்கும் ஒன்னும் வாங்கி அனுப்பி விடவும் .. இல்லையெனில் அஞ்சலி ரசிகர் மன்றம் சார்பில் போராட்டம் நடக்கும் என்பதை அறிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
  7. பென்டிரைவ் : கலக்கல்

    உங்க கண்ணோட்டமே வேறே...!!!

    கண்ணோட்டம் : ரசிக்க வைத்தது... (பல உண்மைகள்...)

    ReplyDelete
  8. எட்டப்பன் வரலாறை இன்னொரு கோணத்துல இருந்து பாத்திருக்கீங்க. இதுல சினிமாவால வேற வரலாறுக்கு பாதிப்பு வந்திருக்குன்னா என்னத்த சொல்றது...!

    ReplyDelete
  9. நயன்தாரா, அசின்னு சேச்சிகள் கண்ணோட்டத்த மட்டும் அலசி இருக்கீங்களே, இது நியாயமாலே?

    ReplyDelete
  10. நல்ல வேள தலைவரு பென் ட்ரைவ வெச்சி வேற எதுவும் பண்ணல......!

    ReplyDelete
  11. பதிவு போடறவங்க கண்ணோட்டம் வேற.அத படிக்கிறவங்க கண்ணோட்டம் வேற.

    ReplyDelete
  12. கட்டபொம்மன் - எட்டப்பன் வரலாற்றைப் படித்த பின்னர் நான் நினைத்த முடிவு...
    அதை அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  13. ஹீ கட்டப்பொம்மன் ஹீ நல்ல கருத்து சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  14. கொஞ்சநாட்களுக்கு முன் பேஸ்புக்கில் சொன்னீங்களே அந்த மேட்டர் இதுதானா பாஸ்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!