Sunday, May 11, 2014

அனுபவங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் !

வேலை மட்டுமே செய்தாலே போதும் என்று இருந்து விடாதீர்கள், ஏதாவது பிடித்த இசை பயிலுங்கள், அப்புறம் பாருங்கள் உங்களுக்கு உத்தியோக உயர்வும், உற்சாகமும் மனதில் அள்ளிக் கொண்டு வரும், அதற்கு நான் கியாரண்டியும், என் அனுபவமும் கூட...!


சாதாரண வெயிட்டராக ஆரம்பித்த வாழ்க்கை, என்னை இன்று ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலின் மேனேஜராக்கியது அந்த இசை பயிலல்தான் !

நான் பயின்றது கேசியோ என்னப்படும் கீபோர்டு பிளே...என் மகனுக்கும் ஈசியாக கற்று கொடுத்து விட்டேன் எங்கள் சர்ச்சில் அவன்தான் இப்போது கீபோர்டு பிளேயர், மகளுக்கு விரல் நீளம் இன்னும் பத்தவில்லை இனிதான் அவளுக்கும் கற்று கொடுக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------

120 தினார் [[இருபதாயிரம் ரூபாய் கிட்ட இருக்கும்]] கொடுத்து புதிதாக ஒரு மொபைல் வாங்கினான் பங்களாதேஷ் பெங்காலி ஒருத்தன், ஒருநாள் மேல் சட்டை பாக்கட்டில் போனை வைத்திருந்தவன் பாத்ரூமில் குனியும்போது போன் தண்ணிக்குள் விழுந்து விட, கலவரமானவன்.....

போனை எடுத்துக்கொண்டு போயி மைக்ரோ ஓவனில் வைத்து சூடாக்க, திறந்து பார்த்தபோது அது உருகிபோயி இருக்க...என்னை கூட்டிட்டு போயி காட்டினான் பாருங்க...

நான் அவன் கையைப் பிடித்து என் கண்களில் ஒற்றிக் கொண்டு "கீப் இட் அப் நீ எங்கியோ போயிட்டே, உன் அறிவுக்கு நீ எங்கேயோ இருக்க வேண்டியவன்" என்று சொல்லி அவன் கால் சுண்டு விரலை பிடித்து வணங்க...

அவன் "ங்கே...." நானும் "ங்கே..." 

ஏண்டா எனக்குன்னே வாறீங்க ?
------------------------------------------------------------------------------------------------------


பத்து வருஷம் முன்பு [[மும்பையில்]] புதிதாக வந்த [[வாங்கின]] கேனடிக் ஹோண்டாவை எடுத்துட்டு பந்தாவா புது சட்டை போட்டு கூலிங்கிளாஸ் வச்சிட்டு பந்தா பண்ண ரோட்டுல போயிட்டு இருந்தேன்...

அந்த நேரம் பார்த்து டவுசர் போடாத காக்கா ஒன்னு ஆயி பண்ணிருச்சு என்மேல, பைக்கை நிறுத்தி, காக்காவை திட்டிக்கிட்டே துடச்சிட்டு இருந்தேன்...

திடீர்ன்னு அங்கே வந்த போலீஸ் லைசன்ஸ் இத்தியாதிகளை கேட்க...எல்லாம் இருந்துச்சு லைசன்ஸ் தவிர...

பணம் கொடுத்து தப்பலாம்ன்னா...பந்தா பண்ண வந்த வேகத்தில், பர்சும் எடுக்க மறக்க...

சாவியை புடுங்கிட்டு கேவலமா அனுப்புச்சு போலீஸ்....வீட்டுக்கு போயி விஷயத்தை சொன்னதும் வீட்டம்மா தரையில உருண்டு உருண்டு சிரிக்குது...ஸ்ஸ்ஸ் அபா...
-----------------------------------------------------------------------------------------------
புத்தாண்டு [[விஷூ]] அன்று மலையாளி நண்பர்கள் வற்புறுத்தி விருந்துக்கு அழைக்க, அன்றைக்கு எனக்கு லீவாக இருந்ததால் நானும் சென்றிருந்தேன்.
பூஜையோடு ஆரம்பம் ஆனது கச்சேரி, இதுல விஷேசம் என்னன்னா சாமிக்கு பூஜை செய்தது சானாவாஸ் என்னும் முஸ்லீம் நண்பன்...!


காய்கறி சலாட் மற்றும் ஃப்ரூட் சலாடுகளும், சிக்கன் சோசேஜ் வறுத்தது, காய்கறிகளுடன் முட்டை அடித்து கலக்கி வறுவல் செய்தும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, ஒருத்தன் [[நண்பன்தான்]] நகத்தை அடிக்கடி கடித்துக் கொண்டிருக்க...


இன்னொரு நண்பன் அவனை நகத்தை கடிக்காதே கடிக்காதே என்று சொல்ல, அவனும் மறுபடியும் மறுபடியும் நகத்தை கடித்து துப்ப, ஆவேசமான நண்பன் எழும்பி அவனை விளாசி தள்ளிவிட்டார். [[நகத்தை கடிக்குறவனை நம்ப கூடாதாம், அவன் சிந்தனையே கெட்டதாக இருக்குமாம்]] 

அப்புறம் என்ன...ரெண்டு டீமாக பிரிந்து அடிச்சிகிட்டாங்க, நாட்டாமை நான் கண்ணை மூடிகிட்டு உக்காந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.
சண்டை முடிந்து மறுபடியும் ரெண்டு லார்ஜ் உள்ளே போனதும் அவனவன் உக்காந்து அழ ஆரம்பிச்சிட்டாணுக, ஒருத்தன் கால்ல ஒருத்தான் மாறி மாறி விழுந்து மன்னிப்பு கேட்பதும் கட்டி பிடிப்பதும் அல்லாமல், சம்பந்தமே இல்லாத [[நான்தான் சண்டைக்கே போகலையே]] என் கால்லயும் வந்து விழுந்தானுக.

எனக்குன்னா மண்டையை பிச்சிக்கனும் போல இருக்கவே, ஓடிப்போயி ஒரு செடி தொட்டியை தூக்கி எரிந்து என் கோபத்தைக் காட்ட...அப்புறமாதான் அடங்கினார்கள்.

கொய்யால பார்ட்டி நடத்துற இடத்துல வந்து ஒப்பாரி வச்சிகிட்டு ஏன்ய்யா ஏன் ?

15 comments:

  1. ஒவ்வொரு பகிர்வும் சிரிப்பும் சிந்தனையும் அதுவும் பார்ட்டி என்று கூடிவிட்டு இப்படி ஒவ்வொரு காரணம் கண்டு குட்டிப்பஞ்சாயத்து தொல்லை ஆனந்ததொல்லைதான்!!

    ReplyDelete
  2. ஃபோன் மேட்டர் செம..உங்களுக்குள்ளேயும் ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் இருக்காருன்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சது.

    ReplyDelete
  3. //கொய்யால பார்ட்டி நடத்துற இடத்துல வந்து ஒப்பாரி வச்சிகிட்டு ஏன்ய்யா ஏன் ?// ha..ha..haaa

    ReplyDelete
  4. நல்லவேளை போனை எண்ணைச்சட்டிக்குள்ள போடல........

    ReplyDelete
  5. கீ போர்டு கத்துக்கனும்னு பலவாட்டி ஆரம்பிச்சி, 2-3 மாசத்தோட நிறுத்தி இருக்கேன்...... சுயமா கத்துக்கிறதுக்கு ஏதாவது டெக்னிக்ஸ் இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. ஒருவர் கற்று கொடுக்கும் போது, எவ்வளவு பயிற்சி செய்ய முடியுமோ அவ்வளவு பயிற்சி மேற்கொள்ளனும், நமக்கு வேண்டியவர்களாக இருந்தால் ஆறேழு மாதத்தில் கற்று தந்து விடுவார்கள்.

      நாம் படிக்கும் போது எந்த இடத்தில் கஷ்டமாக இருக்கிறதோ அந்த இடத்தில்தான் அடுத்த ஸ்டெப்பே இருக்கு என்பதை உணர்ந்து கொண்டு பிராக்டீஸ் செய்ய வேண்டும், சிலர் இந்த இந்த இடத்தில்தான் சோர்ந்து விடுகிறார்கள் !

      சித்திரமும் கைப் பழக்கம் இல்லையா ?

      Delete
  6. ஏம்யா அது என்ன கண்ணை மூடிட்டு வேடிக்கை பாக்கிறது? தலை தொங்கிடுச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே.....?

    ReplyDelete
  7. விரல் நீளம் பத்தவில்லை என்றாலும் விரைவில் கற்றுக் கொண்டு விடுவார்கள் - உங்களின் ஆர்வத்துடன்...

    நகத்தை கடிக்குறவன் சிந்தனையே கெட்டதாக இருக்குமாவா...? இது எப்போதிருந்து...?

    ReplyDelete
  8. Yes, the music is a kind of therapy for the mind. Excellent writing....

    ReplyDelete
  9. இசை பயில்வது நல்ல விஷயம்தான். அதுவும் stress நிறைந்த பணியில் இருப்பவர்களுக்கு அது ஒரு நல்ல stress buster. உங்களுடைய அனுபவங்கள் அனைத்துமே ரசிக்கும்படி இருந்தன. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. // போனை எடுத்துக்கொண்டு போயி மைக்ரோ ஓவனில் வைத்து சூடாக்க, திறந்து பார்த்தபோது அது உருகிபோயி இருக்க.//


    சிரிச்சி தாங்கல மச்சான். :))

    ReplyDelete
  11. அந்த உருகிய ஃபோனை ஃபோட்டோ எடுக்கலையா??

    ReplyDelete
  12. ஹஹஹா.. போன் செம்ம காமெடி.. கீபோர்டெல்லாம் வாசிப்பீங்களா. நான் புத்தகம் வாசிக்கரதோட சரி..

    ReplyDelete
  13. ஹாஹாஹா போனை பொன்னுன்னு உருக்கிட்டானா மனோ?

    ReplyDelete
  14. மைக்ரோவேவ் ஓவனில் ஃபோன் வைத்த ஆசாமி பயங்கர புத்திசாலியா இருப்பார் போல இருக்கே....

    அனுபவங்கள் பலவிதம்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!