Tuesday, May 27, 2014

வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு இந்தியனின் அவலம் !

நேற்று இரவு பத்தரை மணி இருக்கும் நானும் பரோக்கோ அம்மிணியும் டியூட்டில இருந்தோம், சும்மா தமாஷ் பேசிட்டே விளையாடிகிட்டு [[டேய் டேய்]] இருந்தோம் அன்றைய தினத்தின் சீரியஸ் மேட்டர் தெரியாமல்...
நான் ஆபீஸ் உள்ளே இருந்தேன்..."மனோஜ்... யாருன்னு தெரியல வந்து பாரு"
வெளியே வந்தேன் அவன் தனது அடையாள அட்டையை காட்டினான், lmra [[

Labour Market Regulatory Authority]] செக்கிங் என்றான், " ஓகே உன் அடையாள அட்டையை காண்பி என்றான், அம்மிணி அட்டையும் கொடு என்றான், பத்து செக்கண்டுக்குள்ளே இருபது முப்பது சிஐடி மற்றும் யுனிபார்ம் அணிந்த போலீஸ் மற்றும் சிவில் டிரெஸ்சில் அதிகாரிகள்...


நாம யாரு [[காலு கடகட]] அந்த அடையாள அட்டையைதான் அன்னிக்கே டிஸ்கோ'ல தொலச்சிட்டோமே [[அதெல்லாம் மேட்டர் இல்ல]]

"என்னிடத்தில் அடையாள அட்டையின் காப்பி'தான் இருக்கு அடையாள அட்டை இன்னும் எனக்கு கிடைக்கலை [[உண்மைதான் நான் தொலைத்தது பழையது]] தரவா ?"

"எஸ் நோ பிராப்ளம் குடு"

ரெய்டு வந்தவர்கள் ஹோட்டலின் நாலா  பக்கமும் செக்கிங் செய்து ஸ்டாப் ஆட்களை பிடித்து ரிஷப்சனில் கொண்டு வந்து அவர்கள் தம் அடையாள அட்டையை வைத்து விசா இருக்கிறதா இல்லையா என செக் செய்ய...

என்னுது மாத்திரம் ஒரிஜினல் இல்லாமல் ஜெராக்ஸ் காப்பி, அப்பவே எனக்கு டவுட்டு ஆக ஆரம்பிச்சிருச்சு, ஒவ்வொரு அடையாள அட்டைகளா சரி பார்த்து திருப்பி கொடுக்க ஆரம்பித்தார்கள்...
நடுவுல நாலைந்து போலீஸ் இடுப்பிலும் கையிலுமா கைவிலங்குகள் வச்சிகிட்டு பயமுறுத்திகிட்டே அங்கிட்டும் இங்கிட்டுமாக உலவ...பயம் இன்னும் கூடிருச்சு !

அட்டையை எல்லாருக்கும் குடுத்துகிட்டு வயர்லெஸ்சில் ஒருத்த மாத்திரம் விசா இல்லாமல் இருக்கான் என்று சொல்ல...பதில் தூக்கிட்டு வா...நான்கு அதிகாரிகள் பேப்பரில் அரபியில் என்னவெல்லாமோ எழுத துவங்க, அம்மிணி கீழே என் கையை கோர்த்து பிடிச்சுட்டு அழ ஆரம்பிக்க...[[அதுவே அரபிகளுக்கு கடுப்பாகிருச்சு]]

"உன் விசா காலாவதி ஆனது உனக்கு தெரியுமா ?" அதிகாரி

"என் விசா காலாவதி ஆகலைன்னு உனக்கு தெரியுமா ?"

"சிஸ்டத்தில் என்ன காட்டுதுன்னு பார் ?"

"அது உங்க சிஸ்டத்தின் தகராறு, என் பாஸ்போர்ட்'ல டிசம்பர் வரை விசா இருக்கு"

மறுபடியும் மேலதிகாரியை தொடர்பு கொள்கிறான் வாக்கிடாக்கியில்...

இல்லை அவனை தூக்கு என்றே பதில் வருகிறது.
இவ வேற என் கைய பிடிச்சிகிட்டே சுத்தி வருது, தட்டவும் முடியல மொத்த போலீசும் எங்கள் முன்பில் [[அவளை பயங்காட்டினானுகளோ]] "

"இப்போ நான் என்ன செய்ய சொல்லு ? மேலிட உத்தரவு உன்னை கைது செய்கிறேன் இந்த எல்லா பேப்பர்களிலும் ஒப்பிடு "

"நோ நான் ஒப்பிட முடியாது எங்கள் ஹோட்டல் ஜெனரல் மானேஜரின் உத்தரவு எனக்கு வேண்டும், கூப்பிடுகிறேன் அவர் முன்னிலையில் ஒப்பிடுகிறேன்"

"நாங்கள் போலீஸ்...நாங்கள் சொன்னால் சொன்னதை நீ கேட்க வேண்டும் [[இந்தியாவுக்கு கிடச்ச கவுரவம் இதுதான், இதே அரபிகள் என்றால் இப்படி [அரபி நாடுகள்] பேச மாட்டார்கள் !]]"

"என்ன வேணாலும் செய்துக்கோ நான் ஒப்பிட முடியாது"

"சரி உன் ஆபீஸ் கதவை திற"

அம்மிணி அரபியில் பயங்கரமாக ரூல்ஸ் பேச ஆரம்பித்து விட்டாள்..."பொம்பளைங்க இருக்கும் இடத்தில் போலீஸ் உள்ளே வரக்கூடாது" என்று கத்த போலீஸ் சற்று பின் வாங்கினாலும் என்னை விடுறதாக இல்லை...

"மிஸ்டர் துரைராஜ் மனாசே [[நாந்தேன்]] நீ வெளியே வா"

"மனோஜ் நீ வெளியே போகாதே"ன்னு இவள் என்னை பிடித்து வைத்துவிட்டு முதலாளிக்கு போன் செய்ய [[முதலாளி மற்றும் ஜி எம் எல்லாருக்கும் இதற்கிடையில் ரகசிய தகவல் கொடுத்து விட்டேன்]] முதலாளி என்ன சொல்லிருப்பார்ன்னும் எனக்கு தெரியும்]] என்னை இவள் வெளியே விடவே இல்லை.

அந்த சூழ்நிலையில் [[யுத்தகளம் போல இருந்துச்சு]] என்ன செய்ய ? அவளை தள்ளிவிட்டு நானே வெளியே வரவும் கையில் விலங்கு பூட்ட விலங்கை கையருகே கொண்டு வரவும், போலீசின் வயர்லஸ் அலறவும் "டோன்ட் டச் டூ ஹிம்" ஒரு அதிகாரி விலங்கு போலீசை தள்ளி விட்டான்.

"காட் வித் யூ மேன் தப்பித்து விட்டாய்"

"என்னை படைச்சவன் என் கூடவே இருக்கான்னு எனக்கு தெரியும் ஆனால் நீ வ்ராங்காக வந்திருக்கிறாய், உன் சிஸ்டத்தை சரியாக செக் செய்" என்றேன்...தோல்வியின் முறைப்பில் சென்றான் அதிகாரி...
போலீஸ் போனதும் மொத்த முதலாளி மற்றும் மானேஜர்கள் வந்து விட்டார்கள், "ஏம்யா போலீஸ்தானே கடைசியில வரும் இங்கே நீங்க கடைசியா வந்துருக்கீங்க"ன்னு சொன்னதும் முதலாளி சிரிச்ச சிரிப்பு இருக்கே அவ்வவ்...

இதோ இப்பவும் நேற்று நடந்த சம்பவம் மற்றும் என் முகபாவனையை கிண்டல் செய்து கொண்டிருக்கிறாள் அம்மிணி...அம்மே....

நேற்று மிகவும் மனதை வலிக்க செய்த நாள், இந்தியன் என்பதற்காக வெட்கபட்ட நாள் என்றும் சொல்லலாம் பின்னே விசா இருந்தும் இல்லை என்று சொன்னால் ? வாழ்க இந்தியன் எம்பஸி மற்றும் அம்பாசிடர் !!!!!!!!

19 comments:

  1. நாமதான் ஜாக்கிரதையாக இருக்கணும் பேப்பர்கள் தொலைந்து போனால் முதலில் போலிஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு உடனே புதிய பேப்பருக்கு ஏற்பாடு செய்யனும் ஊரில் குடும்பம் இருப்பதை எபோதும் நினைவில் கொள்ளவும்

    ReplyDelete
  2. இந்த சம்பவத்தை பாடமாக எடுத்துக்கொண்டு, இனி எச்சரிக்கையாக இருங்கள்.
    எல்லா பேப்பர்களையும் ஒரிஜினலாக வைத்து இருங்கள்.

    தக்க சமயத்தில் உதவிய, இறைவனுக்கு நன்றி.

    ReplyDelete
  3. சிஸ்டம்லாம் இங்கதான் அரைகுறையா இருக்குதுன்னா அங்கயுமா? தேவுடா!

    ReplyDelete
    Replies
    1. என்னது தேவ[கௌ]டாவா...அந்த ஆளுதான் ஓடிபூட்டாரே.

      Delete
  4. முதலில் படித்தவுடனே தவித்துப் போனேன்! கடவுளுக்கு நன்றி!

    ReplyDelete
  5. முதலில் படித்தவுடனே தவித்துப் போனேன்! கடவுளுக்கு நன்றி!

    ReplyDelete
  6. முதலில் படித்தவுடனே தவித்துப் போனேன்! கடவுளுக்கு நன்றி!

    ReplyDelete
  7. எமிரட்ஸ் (துபாய்) தவிர மற்ற நாடுகளில் எல்லாம் இந்த கிறுக்குத்தனம் தான்.

    ReplyDelete
  8. கணினி அங்கேயும், நம்மூர்போல்தான் இருக்கிறதா
    நிகழ்வுக்கு வருந்துகிறேன் நண்பரே

    ReplyDelete
  9. கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் இருந்துள்ளது....
    தங்கள் இதை புது அரசாங்கத்திற்கு தெரிவித்து பாருங்களேன், இவர்கள் எதாவது செய்வார்கள் என நம்புகிறேன்...

    ReplyDelete
  10. எச்சரிக்கையாக இருக்க தெரிய வேண்டியவர்களுக்கு நல்லபதிவு
    Killergee
    www.Killergee.blogspot.com

    ReplyDelete
  11. ஒரிஜினலை உடனே வாங்குங்கண்ணே.

    ReplyDelete
  12. எப்போது என்ன தொல்லை வரும் என்று சொல்ல முடிவதில்லை.ஜாக்கிரதையாகத் தான் இருக்கவேண்டும். அவதிப் பட்டதைக் கூட நகைச்சுவையுடன் கூற உங்களால்தான் முடியும்

    ReplyDelete
  13. ஜாக்கிரதை மனோ. பல இடங்களில் இது போன்ற தொல்லைகள். விசா, பாஸ்போர்ட் போன்ற உங்கள் அனைத்து காகிதங்களையும் சரியாக வைத்துக் கொள்வது நல்லது.

    ReplyDelete
  14. புது அட்டைய வாங்கி வைங்கண்ணே.....

    ReplyDelete
  15. ஆசியா என்றாலே இளக்காரம் பல இடத்தில்! என்றாலும் மாமியார் வீடுவரை போகும் நிலையைத்தராத பாதுகாத்த அந்த அம்மணி வாழ்க! அரபி என்றாலும் அவளும் ஒரு அடைக்கலமாதா!

    ReplyDelete
  16. ஒளிவட்டம் மனோ. கைவிட மாட்டான் அவன்.பைபிள் படிக்கிறிங்கதானே..பின்னே விடுவாரா ஆண்டவர்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!