Wednesday, March 2, 2016

அம்மா"ன்னா அம்மா"தாம்லேய்...!!!

"உடம்பெல்லாம் சேத்துப்புண்ணா இருக்குலேய் தம்பி...வாயேன் ஆஸ்பத்திரி போயிட்டு வருவோம்"

"போம்மா அங்கே போனா ஊசி போடுவாங்க நான் வரமாட்டேன்"

"டாக்டர்கிட்டே அம்மா சொல்லுதேன் ஊசி வேண்டாம்ன்னு வா மக்ளே "

"நீ போ நான் வரமாட்டேன்"

மிரட்டினாலும் மசியவில்லை, ஓடி பிடிக்க வந்தாலும் சிட்டாக பறந்து விடுவேன், ஆஸ்பத்திரி பக்கம் வந்தும் அம்மாவுக்கு டிமிக்கி குடுத்து ஓட்டம்.

ஒருநாள்...

"எலேய் தம்பி...பூலாங்குளத்துல [[எங்க ஊர் குளம்]] போயி குளிச்சிட்டு வருவோம் உன் சேக்காளிங்களை கூட்டிட்டு வா..."

சந்தோஷமாக குளத்துக்கு குளிக்கப்போனேன், குளத்துக்குள்ளே அம்மா என்னைப் பிடிச்சி வச்சிகிட்டு அம்மா பக்கத்துலேயே நின்னு குளி என்ன மக்ளே, பிள்ளைக்கு நீச்சல் தெரியாதுல்லா, அம்மா உன்னை பிடிச்சுக்குவேனாம், நீ அம்மா கூட விளையாடுவியாம் சரியா..."

"அம்மா...மீன் கடிக்குதும்மா...கடிக்குதும்மா..."

"அது உன்கூட விளையாடுது மக்ளே ஒன்னும் செய்யாது, நீ அம்மாகூட விளையாடு..." என்று இறுக்கி பிடித்துக்கொள்ள, நான் அலற...கொஞ்சம் நேரத்துக்குப் பிறகு...

"சரி மக்ளே நீ கரைக்கு போயிரு"

கரைக்கு வந்து பார்த்தா...உடம்பெல்லாம் ரத்த விளாறு.... "நீயெல்லாம்  அம்மாவாடீ..."ன்னு திட்டிகிட்டு வந்துட்டேன்.

ரெண்டே நாள்ல மொத்த சேத்துப் புண்ணும் ஆறிப்போச்சு...

"அம்மா அம்மா புண்ணெல்லாம் ஆறிப்போச்சு பாரு ?"

''புண்ணு ஆறனும்ன்னு ஆஸ்பத்திரி கூப்பிட்டா, ராஸ்கோலு விளையாட்டா காட்டுனே ? அதான் குளத்துக்கு கூட்டிட்டுப்போயி வைத்தியம் செஞ்சேன்"


எந்தவிதமான புண்கள் இருந்தாலும், குளத்து மீன் ஆற்று மீன்கள் கடித்தால் குணமாகிவிடும் என்பது நம்ம அம்மாக்களுக்கு தெரிஞ்சிருக்கு, நம்ம பொண்டாட்டிக்கு ??

அம்மா"ன்னா அம்மா"தாம்லேய்...!!!


7 comments:

  1. அம்மான்னா சும்மாயில்ல மனோ...

    ReplyDelete
  2. உண்மைதான் ஆற்றுமீன்கள் சில நோய் தீர்க்கும் இயல்பு கொண்டவை! ஆனால் இன்று யார் ஆற்றுப்பக்கம் குளத்துக்கு என போறாங்க[[

    ReplyDelete
  3. அம்மான்னு சொன்னது சரி
    அது எதுக்கு பொண்டாட்டியை இழுக்குறீங்க
    அவங்க நம்ம பிள்ளைகளுக்கு அம்மாதானே
    நீரிருக்கிற குளமிருக்கிற ஊரில்
    நாம் அவங்களுடன் இருந்தால்
    அவங்களும் நம்ம அம்மாமாதிரிதான் செய்திருப்பாங்க
    பழைய நினைவுகளை கிளறிப் போன
    அருமையான பதிவு
    பகிர்வுக்குவாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அம்மான்னு சொன்னது சரி
    அது எதுக்கு பொண்டாட்டியை இழுக்குறீங்க
    அவங்க நம்ம பிள்ளைகளுக்கு அம்மாதானே
    நீரிருக்கிற குளமிருக்கிற ஊரில்
    நாம் அவங்களுடன் இருந்தால்
    அவங்களும் நம்ம அம்மாமாதிரிதான் செய்திருப்பாங்க
    பழைய நினைவுகளை கிளறிப் போன
    அருமையான பதிவு
    பகிர்வுக்குவாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அம்மான்னா சும்மாவா...

    இப்போது நீர்நிலைகளில் நீரே இல்லையா மக்கா!

    ReplyDelete
  6. பொண்டாட்டி பக்கத்தில் இல்லை என்றதும் அவர்களை வம்பு இழுக்க தோணுதோ?????லீவு கிடைக்கும் மனைவியை பார்க்க போய்தானே ஆகனும்....ஜாக்கிரதை.... இது எழுதிவிட்டு நீங்க மறந்து போயிரலாம் ஆனால அவங்க இதையெல்லாம் கணக்கு வைச்சு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்துவிடுவார்கள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!