Monday, August 6, 2012

ஆக்கங்கெட்ட பிள்ளைகள் இருக்கும் பெற்றோருக்காக....!

நேற்றைய தொடர்ச்சி....

ஊரிலிருந்து என் அப்பா வந்திருந்தார். அவரையும் ஷேருச்சாமியுடன் வாக்கிங் அழைத்து சென்றிருந்தேன். "என்ன வேலை பண்ணுறீங்க?" என்பதில் ஆரம்பித்து, பல விஷயங்களை விசாரித்த சாமி, "ரிட்டயரான பிறகு எப்படி..?" என்றார்.

"ஏதோ குடியிருக்க ஒரு வீட்டைக் கட்டி வச்சிருக்கேன். மத்தபடி, கையில் நயாபைசா கிடையாது. என் பையன் வச்சி காப்பாத்துனாதான் உண்டு!" என்று என்னை நெளிய வைத்தார் அப்பா.

"அதான் சொந்த வீடு இருக்குல்ல....பையன் காப்பாத்தாட்டாலும், வீடு காப்பாத்திடும்.." என்றார் சாமி.


"வீட்டை வித்து பேங்க்ல போட்டுட்டு, அதுல வர்ற வட்டியில பொழப்ப ஓட்டிடலாம்னு சொல்றீங்களா சாமி? வீடு வித்த காசு பேங்க்ல இருக்குன்னா, அதுக்கு ஆயிரம் செலவு வந்து நின்னிடுமே.... இந்தா இவன் கூட அதை வாங்கிக்கிட்டு, ரோட்டுல நிப்பாட்டிடுவானே..!" என்றார் அப்பா.


 "அதெல்லாம் வேணாம், பேசாம ரிவர்ஸ் மார்ட்கேஜ் பண்ணிக்கிட வேண்டியதுதான். நீங்க சொல்ற மாதிரி எந்த பிரச்சினையும் இருக்காது. பேங்க்ல இருந்து மாசா மாசம் தேவையான பணத்தை சாகுற வரைக்கும் வாங்கிக்கலாம்..." என்றார் சாமி.


"மார்ட்கேஜ் கேள்விப்பட்டுருக்கேன். அது என்ன சாமி ரிவர்ஸ் மார்ட்கேஜ்?" என்றான் நண்பன். "அடேய்... ஒய்வு காலத்துல கையிலையும் காசு இல்லாம, பெத்த பிள்ளைங்களும் கைவிட்டுட்டாங்கன்னா என்ன பண்றது? அதுக்குதான் இந்த திட்டம். வீட்டை பேங்க்ல அடமானம் வச்சுட்டா, அவங்க பென்ஷன் மாதிரி ஒரு தொகையை மாசா மாசம் தருவாங்க, தம்பதிங்க ரெண்டு பேரோட காலம் முடியுற வரைக்கும் பணம் தருவாங்க, அதுக்குப் பிறகு வீட்டை வித்து, கொடுத்த பணத்தை பேங்க் எடுத்துகிடும்"

"அப்ப லோன் கொடுக்குறப்ப, வாங்குறவங்க வயசு, வீட்டோட மதிப்பு இதையெல்லாம் கணக்குப்போட்டு பார்த்துதான் லோன் தருவாங்க, இல்லையா?" என்றான் நண்பன்.

"ஆமாம்! அது மட்டுமில்லை, அஞ்சி வருஷத்துக்கு ஒரு தடவை லோனை மார்க்கெட் வேல்யூவை வெச்சு மறுபரிசீலனையும் பண்ணுவாங்க, அதிகபட்சமா இருவது வருஷம் வரைதான் இந்த லோன் கிடைக்கும்.." என்றார் சாமி.

"சரி சாமி, ரிவர்ஸ் மார்ட்கேஜ் சிஸ்டத்துக்கு போயிட்டா...பின்னாடி வீடு நமக்கு வேணும்னா கூட கிடைக்காதா? வாங்கின தொகையை வட்டியோட திருப்பி கட்டுரைதா இருந்தாக்கூட வீட்டைத் திருப்பி தரமாட்டாங்களா?" என்றேன்.


"கவலையை பார்றா! தாராளமா பணத்தை கட்டி, வீட்டைத் திருப்பி வாங்கிக்கலாம், லோன் வாங்குனவங்கதான் திருப்பிக் கட்டணும்னு இல்லை, அவங்க காலத்துக்கப்புறம் வாரிசுகள் கூட லோனை திருப்பி கட்டிட்டு வீட்டைத் திருப்பிக்கலாம்..." என்றார் சாமி.

"அப்ப என் பையன் கையை எதிர்பார்த்து நான் வாழவேண்டியது இல்ல.... அப்படிதானே சாமி?" என்றார் அப்பா.


"நீங்க மட்டுமில்ல... நல்ல மதிப்புல சொந்த வீடு வச்சிருக்குற எந்த அப்பா அம்மாவும் 'நடுத்தெருவுல பசங்க நிருத்திடுவாங்களோ'னு பயப்பட வேண்டியதில்லை" என்று சொல்லி விடை பெற்றார் சாமி.

டிஸ்கி : ம்ம்ம்ம் இனி தைரியமாக இருங்க போதுமா....நோ டென்ஷன் நோ ஃபீலிங்ஸ், ஜாலியா இருங்க...

டிஸ்கி : ஷேருச்சாமி என்கிற பெயரில் ஜூனியர் விகடனில் [[தொடரில்]] டாக்டர் எஸ். கார்த்திகேயன் எழுதியது.

நன்றி : ஜூனியர் விகடன் 12/05/2010

"பெற்றோரை போற்றுவோம், வாழவைப்போம், அவர்கள் சாபம் இல்லாவிட்டாலும், மேலே இருப்பவனின் சாபம் விடவே விடாமல் தொடரும் ஜாக்கிரதை..."!

17 comments:

  1. உரையாடல் மூலம் நல்ல பல யோசனைகள்... நன்றி...

    ReplyDelete
  2. படங்கள் மனதைத் தொடுகிறது மனோ.வயோதிபமும் பாதுகாப்பும் நினைத்தாலே ஒரு பயம் வருகிறது.ஆனாலும் வருங்காலப் பெற்றோர்கள் கொஞ்சம் உஷார்தான் !

    ReplyDelete
  3. Good one. Elderly people do not have to worry about anything.

    ReplyDelete
  4. முதுமை என்பது
    இன்றோடு முற்றுப்புள்ளியாய்
    போவது அல்ல..
    அது ஒரு தொடர்புள்ளி...
    அடுத்தடுத்த தலைமுறையினரும்
    சந்திக்க வேண்டிய கட்டாயம்...
    அமுதம் குடித்து
    மார்க்கண்டேயனாய்
    வாழப்பிறந்தவர்கள் அல்ல நாம்
    வாழ்வின் எல்லா பருவ நிலைகளையும்
    ஆக்கிரமிக்கப் பிறந்தவர்கள்..
    இன்றைய முதுமையை ஆதரித்தால்
    நாளைய நம் முதுமை
    கடையேறும்
    இல்லையேல்
    கடைத்தெருவுக்கு வந்துவிடும்....

    அருமையான கதையை இங்கே
    பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
  5. ஒ அப்படியா சரிங்க

    ReplyDelete
  6. சர்தாம்பா...

    ReplyDelete
  7. "பெற்றோரை போற்றுவோம், வாழவைப்போம்,// கண்டிப்பா நண்பா...

    ReplyDelete
  8. இன்றைய காலகட்டத்தில் தேவையான ஆலோசனையே.
    பகிர்வுக்கு நன்றி
    நானும் வீடு பற்றி;நீங்களும் வீடு பற்றி!

    ReplyDelete
  9. அருமையான கதையை
    பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  10. சிறப்பான ஆலோசனை! பகிர்வு அருமை! நன்றி!
    இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

    ReplyDelete
  11. முதியவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள
    பகிர்வு .தொடர வாழ்த்துக்கள் சகோ .
    "பெற்றோரை போற்றுவோம், வாழவைப்போம், அவர்கள் சாபம் இல்லாவிட்டாலும், மேலே இருப்பவனின் சாபம் விடவே விடாமல் தொடரும் ஜாக்கிரதை..."!
    மிக சரியாகச் சொன்னீர்கள் சகோ அருமை!...

    ReplyDelete
  12. பெற்றோரை போற்றுவோம்
    பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  13. பயனுள்ள பகிர்வு. நன்றி மனோ.

    ReplyDelete
  14. இன்றைய மகன்கள் நாளைய தந்தை, நினைவில் நிறுத்தினால், நிச்சயம் நம்பிக்கைகள் தளராது.

    ReplyDelete
  15. கேள்விப்படாத விடயத்தை சஞ்சிகையில் இருந்து பதிவாக்கி பகிர்ந்ததுக்கு நன்றி மூத்தவர்களை பராமரிக்க வேண்டியது நம் கடமை!

    ReplyDelete
  16. இன்றைய காலகட்டத்தில் தேவையான ஆலோசனை. பயனுள்ள பகிர்வு

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!