Saturday, August 11, 2012

தமிழன் பீனிக்ஸ் பறவைக்கு ஒப்பானவன்...!


தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே
குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. 


இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

நன்றி : தமிழாசான் பதிவேடு [[http://tamilaasan.blogspot.com/2012/07/blog-post_25.html]]
--------------------------------------------------

வரலாறு.......வரலாறு என பீத்திக் கொண்டிருந்தவர்களுக்கு விழுந்துச்சுய்யா சரியான வரலாற்று ஆப்பு...! மாநாடு நடத்துறாங்களாம் மாநாடு...!

இதை தமிழக மக்களும் விரும்பவில்லை, உலக தமிழர்களும் விரும்பவில்லை என்பதை சமூக வலைதளங்கள் மூலமாக கண்கூடாக காணமுடிகிறது, சில சிங்கிடிகள் சிங்கி அடித்தாலும், அதை அறுவருப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள்...!

ஏன் இதை மனசாட்சி உள்ள கழக கண்மணிகளே ஆதரிக்கவில்லை, தலைமைக்கு பயந்து தன் கடமையை கடனுக்காக செய்கிறார்கள் என்பது கண்கூடாகவே தெரிகிறது, எதுக்குய்யா இந்த ஆளுக்கு இந்த மாநாடு என்றே கேட்கிறார்கள்...!

டெசோ என்றால் என்ன என்றே தெரியாத வட இந்திய தலைவர்கள் வருகிறார்களாம் எதுக்கு...? இன்னும் மிச்சம் இருக்கும் தமிழனை கொல்லவா..? 

நீ வாயைப் பொத்திக் கொண்டு இருந்தாலே தமிழர்கள் நல்லா இருப்பார்கள், தமிழன் தமிழன் என்று வலிய போயி சொறிந்தால், எந்த மொழிக் காரனுக்கும் கோவம் வருமா வராதா...?

தமிழன் தமிழன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி, ஆசியாவிலேயே பெயர் சொல்லும் பணக்கார லிஸ்டில் உங்கள் குடும்பமும் வந்தாச்சே இன்னுமா அடங்கலை...?

இந்த மாநாடு நடக்காமல் போனதற்கு சமூக வலைத்தளங்களும் முக்கிய காரணமாக இருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது, ஆனந்தவிகடன் பேட்டியில் கனிமொழியிடம் கேட்க்கப்பட்ட கேள்வி, "சமூக வலைத்தளங்கள் திமுக"வை அதிகமாக காயப்படுத்துகிறதே கவனிக்கிறீர்களா?"......."ஆம் கவனிக்கிறோம்" பதிலை பார்த்தீர்களா?

"கல்லை கட்டி காட்டில் விட்டால் அந்த கல்லை மெத்தயாக்கிக் கொள்ளும் வன்மை உண்டு தமிழனுக்கு" என்பது வரலாறு சொல்லும் பாடம், இவர் "இப்போ" மாநாடு நடத்திதான் தமிழனை காக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை இல்லை இல்லை....வாய் பேசாமல் இருந்தாலே இவர் தமிழனுக்கு செய்யும் உதவியாக இருக்கும்...!


இனி மாநாடை அறிவாலயத்தில் நடத்துங்க, இல்லை கோபாலபுரத்தில் நடத்துங்க, இல்லை சி ஐ டி காலனியில் நடத்துங்க....இது வரலாற்றில் உங்களுக்கு மற்றுமொரு மாறாத கரும்புள்ளி என்பதை மறக்கவேண்டாம், வரலாறு உள்ளவரை கட்டபொம்மன் சரித்திரத்தில் எட்டப்பன் எப்படி நினைவு கூறப்படுகிறானோ, அப்படியே நீங்களும் நினைவு கூறப்படுவீர்கள் இது சத்தியம், எந்த சல்ஜாப்பும் இனி எடுபடாது...!


ஈழத்"தமிழன்" பீனிக்ஸ் பறவை போன்றவன், உலகமே எதிர்த்தாலும் இறுதி வெற்றி அவனுக்கே, இதை எவனாலும் மாற்ற முடியாது, உங்கள் கரிசனை அரசியலை சாக்கடையை விட கேவலமாக நினைக்கிறோம். போ........போ.........போய்யா...
..!!

டிஸ்கி : ரொம்ப திட்டனும் போல இருந்தது, நாகரீகம் கருதி இதோடு முடிக்கிறேன்....!
------------------------------------


நண்பன் நேசன் [[தனிமரம்]] அவர்களின் "மலையகத்தில் முகம் தொலைந்தவன்" பதிவுகள் அனைத்தும் மின்னூலாக இன்று வெளிவரும் விழா நடக்கிறது, விழாவுக்கு மங்கள விளக்கேற்றலுக்கு எனக்கும் அழைப்பு அனுப்பியமைக்கு நன்றிகள்.....!


விழா நிகழ்ச்சிகள் சிறப்புற வாழ்த்தி விளக்கேற்றுகிறேன்...


விழா நிகழ்ச்சிகள் யாவும் பேஸ்புக் "இன்னும் என்ன தோழா...[[https://www.facebook.
com/groups/120226648034596/]]" என்ற குழுமத்தில் வந்து கொண்டிருக்கும், வாருங்கள் யாவரும் வாழ்த்துவோம் மங்களமாக.....!

உங்கள் பயணம் மென்மேலும் உயர்ந்து தொடர வாழ்த்துகிறேன், வாழ்க என் உயிர் தேன்தமிழ்.....வளர்க தமிழ் இமயத்தை விட உயரமாக....!

18 comments:

  1. நீ வாயைப் பொத்திக் கொண்டு இருந்தாலே தமிழர்கள் நல்லா இருப்பார்கள், தமிழன் தமிழன் என்று வலிய போயி சொறிந்தால், எந்த மொழிக் காரனுக்கும் கோவம் வருமா வராதா...? அனல் பொங்கும் விவாதம் கலக்கல்!...
    தொடர வாழ்த்துக்கள் சகோ
    நண்பன் நேசன் [[தனிமரம்]] அவர்களின் "மலையகத்தில் முகம் தொலைந்தவன்" பதிவுகள் அனைத்தும் மின்னூலாக இன்று வெளிவரும் விழா நடக்கிறது,

    மென்மேலும் வளம்பெற என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. வயசான காலத்துல எப்படி எல்லாம் கஷ்ட படறார் மனுஷன்..இதுக்கு போய் சேர்ந்து இருக்கலாம்....

    ReplyDelete
  3. /// ஈழத்"தமிழன்" பீனிக்ஸ் பறவை போன்றவன், உலகமே எதிர்த்தாலும் இறுதி வெற்றி அவனுக்கே, இதை எவனாலும் மாற்ற முடியாது ///

    இதை விட என்ன வேண்டும்...?

    சிறப்பான பகிர்வு... மிக்க நன்றி...

    நல்லதொரு (Facebook) குரூப் அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  4. விழா சிறப்புற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் மக்களே..
    லெமூரியா கண்டம் தொட்டு
    உலகை ஆண்டு வந்த தமிழினம்
    தன் சுவடுகளை உலகெங்கும் பதித்த
    வரலாறும் அருமை...
    பெருமையாகவும் இருக்கிறது..
    ஆனால் தமிழன் இந்தப் பெருமையிலேயே
    வாழ்ந்துவிடுகிறான்...
    தங்கத் தமிழினை நம் உயிர்த் தமிழினை...
    அடுத்த தலைமுறையினர்களும் இதே
    நிலைக்கு பெருமையுடன் கொண்டுசெல்ல
    எத்தநிக்க் வேண்டும்...

    அன்பு சகோதரர் நேசன் அவர்களின் மின்னூல்
    வெளியீட்டு விழாவிற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. //?"......."ஆம் கவனிக்கிறோம்" //

    மக்கா இதுக்கு என்ன அர்த்தம் - ஒருவேளை ஆட்டோ அனுப்பி கவனிப்பான்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. இதுக்கு ஆதரவு இல்லன்னு தெரிஞ்சும் ஏன்தான் நடத்தராறோ.திருந்தமாட்டார் இவரு.

    ReplyDelete
  8. Kadumaiyana saadala. Varalatru kurippu athisayam

    Valthukkal

    ReplyDelete
  9. நல்ல பதிவு...

    மனோ..
    நீயும் கொஞ்சம் உணர்ச்சி வசப்படாம
    இரேன்...

    ReplyDelete
  10. அன்றைய தினம் குமுறிக்கிடந்த எங்கள் கூட்டத்திலே வேற்றுமை விளைத்து ஆற்றலை செலுத்தி கைப்பூட்டி பட்டியிலடைத்து வஞ்சகத்தாருடன் இன்முக நட்புடன் கூடி எம் இனத்தை அழித்தவன் உன்னை மிதியாது விட்டு வைத்தது குற்றம் தான்

    வலையுலகம் பக்கம் வந்து பல நாட்கள் ஆகின்றன .....

    ReplyDelete
  11. அரசியலில் இறுதிக்காலம் தடுமாற்றத்தில் கருணாநிதி பாவம் !ம்ம்

    ReplyDelete
  12. மின்நூல் வெளியீட்டுக்கு அண்ணாச்சியின் அன்புப்பகிர்வுக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் கனிந்த நன்றிகள் பல

    ReplyDelete
  13. குமரிக்கண்டம் பற்றிய விபரங்கள் அருமை. இதுகுறித்து இன்னும் மேலதிகமான நவீன ஆரய்ச்சிகள் தேவை. பார்ப்போம் இதையும் வெளிநாட்டுக்காரங்கதான் வந்து செய்யனுமான்னு......!

    ReplyDelete
  14. தமிழினம் பற்றிய தகவலும்! வசைபாடலும் அருமை! சும்மா வரிஞ்சி கட்டிகிட்டு வசை பாடினாலும் பெருசுக்கு உரைக்காது!

    இன்று என் தளத்தில்
    இதோ ஒரு நிமிஷம்!
    மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
    http://thalirssb.blospot.in

    ReplyDelete
  15. இந்த ஆள் பேசாமலிருந்தாலே போதும்.சும்மாவே இருக்குதில்லையே இந்த மனுசன் !

    ReplyDelete
  16. இப்போது இருக்கிற வரலாறுகளை விட திரித்துக் கூறபட வரலாறே அதிகம்/

    ReplyDelete
  17. நீ வாயைப் பொத்திக் கொண்டு இருந்தாலே தமிழர்கள் நல்லா இருப்பார்கள், தமிழன் தமிழன் என்று வலிய போயி சொறிந்தால், எந்த மொழிக் காரனுக்கும் கோவம் வருமா வராதா...?

    வணக்கம் மனோசார்.நல்ல சாட்டையடிப்பதிவு.இது எல்லாதையும் அந்த ஆள நேர பாத்து திட்டிறதா நினைச்சுதா பாத்தன்.அருமை சொந்தமே!இங்கு பேசவேண்டிய நாட்களில் விரதம் கபத்து விட்டு இப்போ காற்றோடு பேசப்போகிறாராமோ.....?

    திருந்தமாட்டாங்கய்யா எட்டப்பன் பிள்ளைகள்..!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!