Wednesday, August 8, 2012

அந்த வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடு...!

பேஸ்புக் சாட்டிங்....

"ஹாய் மனோ சித்தப்பா எப்பிடி இருக்கீங்க?"

"நலமே, நீங்க எப்பிடி இருக்கீங்க...?"

"என்னாது நீங்களா...? நான் உங்க மகள் மனோ சித்தப்பா, நல்லா இருக்கேன், மோசஸ் எப்பிடி இருக்கான், பாப்பா எப்படி இருக்கிறாள், சித்தி எப்பிடி இருக்காங்க...?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க....ஆமா நீ யாரு...?"

"போங்க மனோ சித்தப்பா, என் பிராஃபில்ல போட்டோ பார்த்த பிறகுமா என்னை தெரியலை...?"

"ம்ம்ம்ம்ம்ம் தெரியலையே'ம்மா நீ யாரு...?"

"போங்க மனோ சித்தப்பா நான் உங்க கூடக் கா...."

சாட்டிங் ஆஃப் லைன் போயிருச்சு....

எப்பா, கொஞ்ச நாளைக்கு முன்னால இப்பிடி நடந்து கொல்லோ கொல்லுன்னு கொன்னாயிங்க, இப்போ மறுபடியும் ஆரம்பிச்சிருக்கு, சித்தப்பா'ன்னு சொன்னால் பரவாயில்லை, மனோ"சித்தப்பா'ன்னா கண்டிப்பா நெருங்கிய சொந்தமும் என் கைக்குள் வளர்ந்த பிள்ளையாகதான் இருக்கும், பெயரை மாற்றி வைத்துள்ளாள்.

ஸ்கூல் போட்டோ நிறைய பேஸ்புக்ல போட்டாலும் அதில் நம்ம மூஞ்சி இவள் மட்டுமே நிற்கிறாள், பக்கத்துல நிக்குறவிங்களை வச்சி இவளை அடையாளம் காண இயலவில்லை, எல்லாமே வட இந்திய பிள்ளைகள்...!

இப்பிடித்தான் போன தடவை ஊருக்கு போன போது, ஒரு பங்ஷனில் வச்சி பிடித்து கொண்டார்கள் பிள்ளைகள், அன்னைக்கு சாட்டிங்க்ல என்னை தெரியாதுன்னு சொன்னீங்களே இப்போ சொல்லுங்க நான் யாருன்னு...? என வந்து அப்பிக் கொண்டார்கள் சொந்தம் பந்தம் குழைந்தைகள்....!

இப்பிடி இவர்களை கண்டு பிடிப்பதற்கே வீட்டம்மாவுக்கு போன் போட்டு கண்டு பிடிச்சதும் உண்டு, குழந்தைகள் எல்லாம் இப்போ வளர்ந்ததும் எனக்கு கண்டுபிடிக்க இயலவில்லை. 

ஒரு சர்ச் புரோகிராமுக்கு [[மும்பை]] போனேன், உள்ளே நுழையவும் சத்தமா ஒரு பையன் குரல் கேக்குது "ஹே நாஞ்சில்மனோ வந்தாச்சு"......ஆக இவிங்க நம்மளை பலமாதான் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க...!

சரி போகட்டும் நமக்கு பல்பு வாங்குறது புதுசா என்ன....? என் அக்காமார்கள் பொண்ணுகளுக்கு போன் பண்ணி இது யாருன்னு கேட்டா சொல்லிருவாங்க [[ஆனாலும் அவங்க பிரண்ட்ஸ் பாலோவர்லயும் இந்த பிள்ளை இல்லை]] பார்ப்போம் பல்பு எரியுதா, இல்லை பாக்கெட்டுகுள்ளே வச்சிருந்துட்டு ஊர் போகும் போது வாங்கி காட்டணுமான்னு...?

கொஞ்சநாள் அமைதியா இருந்தாங்க இப்போ ஆரம்பிச்சிட்டாங்க, மனோ சூதானமா இருய்யா....
--------------------------------------------------------------------

படித்ததில் சிரித்தது....

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் போய்ப் பார்த்து, மருந்து ,
ஊசி எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்
கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய அறிவுள்ள மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல விலங்கு மருத்துவர் கிட்ட
போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்கு
சரியான மருத்துவம் கொடுக்க முடியும்’னாள்.

என்னது விலங்கு மருத்துவர்கிட்டேயா? உனக்கென்ன மூளை
கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே
கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்
மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ரெண்டு வாய்
தின்னுட்டு , பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி அலுவலகத்துக்குப்
போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே
வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் அலுவலகம்
விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பேருந்துல அடைஞ்சு வீட்டுக்கு
வர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி
இரவு சாப்பாட்டை ‘லபக் லபக்'’னு முழுங்கிட்டு, எருமை மாடு
மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனித மருத்துவர் எப்படிங்க
குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே
ஒரு கால்நடை மருத்துவரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்
சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு
வச்சாளாம் மனைவி..!
---------------------------------------------------

தற்கொலைகொலை இரண்டுக்கும் என்ன
வித்தியாசம்
?….

உங்க முகத்தை நீங்க கண்ணாடியில் பார்த்தால் அது தற்கொலை..
உங்க போட்டோவை என்கிட்ட கொடுத்து பார்க்க சொல்றது கொலை…

[[நாசமாபோச்சு போங்க]]
-------------------------------------------------------------

புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!

[[கல்யாணம் ஆகாத வெட்டி பிளாக்கர்ஸ் ஜாக்கிரதை]]
-----------------------------------------------------

நீதிபதி : உனது கடைசி ஆசை என்ன ? 

பக்கி : சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்.

[[செத்தான்டா வண்டு முருகன்]]

18 comments:

  1. அருமை அருமை
    உங்கள் பதிவுக்குள் வந்து போனாலே
    கவலைகள் காணாமல் போய்
    சந்தோஷம் மன்மெல்லாம் அப்பிக்கொள்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல நகைச்சுவை அதுவும் மனைவி மிருகவைத்தியரிடம்  போகச்சொன்னதில் இருக்கும் நிலையை என்ன சொல்வது !ம்ம்ம்

    ReplyDelete
  3. ஒரு மனுசனுக்குள்ள இவ்ளோ மிருகங்கள் ஒளிஞ்சிட்டிருக்கா....தாங்கமுடியுமா சாமி !

    நாசமாப் போச்சு..ஹிஹிஹி !

    கொலை...தற்கொலை........!

    ReplyDelete
  4. எந்த வீட்டம்மாவும் அவங்க வீட்டுக்காரரை மனுசனா மதிச்சதா சரித்திரம் இல்ல.வண்டலூர் zoo தான் ஞாபகம் வரும் போல இருக்கு.
    இன்றைய காலை சிரிச்சிக்கிட்டே தொடங்குது நன்றி.

    ReplyDelete
  5. மனிதர்கள் பலவிதம்
    ஒவ்வொருவரும் ஒருவிதம்..
    ரசித்து படித்தேன் மக்களே..

    ReplyDelete
  6. அனைத்தும் கலக்கல்...
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  7. ஒரு பல்பு பண்னையே வசிருகிங்க போல ..?

    ReplyDelete
  8. எல்லாத்தையும் முழுசா படிச்சேன்..சிரிச்சேன்..

    ReplyDelete
  9. பிரபாகரனுக்குத்தான் சீக்கிரம் டும்டும் நடக்க போகுது! பசங்களை பயமுறுத்தினீங்க.....உங்க டவுசர்ல எல்லாரும் சேர்ந்து அருவாளை வச்சி தைச்சு புடுவோம்...!பீகேர்புல்!

    ReplyDelete
  10. உறுப்புடியா பதிவு போடுறீங்க....

    அப்படி வாங்க வழிக்கு....

    ReplyDelete
  11. நீ நடத்துய்யா...

    ReplyDelete
  12. சிறப்பான பகிர்வு! வாழ்த்துக்கள்!
    இன்று என் தளத்தில்
    ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  13. மனிதர்களை வர்ணிக்கும்போது எத்தனை மிருகங்கள் எம் வார்த்தையில் இடம் பெறுமோ அத்தனை மிருகங்களையும்
    மிக அழகான கோர்வையாய் கோர்த்து வழங்கிய நகைச்சுவையும் ஏனைய நகைச்சுவைகளும் அருமையாக இருந்தது!...தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  14. மனோ சார், ஒங்க பக்ரைன் அனுபங்களை எழுதுங்க சார், ரொம்ப அருமையா எழுதுரிங்க.

    ReplyDelete
  15. பரவாயில்லை கொஞ்சம் ரசிக்கறமாதிரிதான் இருக்கு இன்னும் மெருகேற்ற முயற்சிக்கவும்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!