Thursday, August 9, 2012

பதிவர்கள் சக பதிவர்களை சந்திக்க கூச்சப்படுவது ஏன்...?!

பிளாக்"கிலும், பேஸ்புக்"கிலும் பிரபலமா இருக்காங்களே இவர்கள் பெ.......ரி......ய.......ஆட்களாக பெரும் பணக்காரர்களாக, நாலும் தெரிந்தவர்களாக, ஊரில் உள்ள பெ....ரி....ய....மனிதர்களோடு தொடர்பும் நட்பும் உள்ளவர்களாக இருப்பார்களோ என்று, தனக்குத்தானே கற்பனை செய்து கொண்டு, நேரில் பார்க்க முடிந்தும், பார்க்காமல் பயந்து அல்லது கூச்சப்பட்டு ஒதுங்குகிற பல நண்பர்களை கண்கூடாக பார்க்கும் போது, மனதில் வேதனைதான் வருகிறது...!!!



பதிவுலகில் நான் முதன்முதலில் சந்தித்த நபர் நம்ம "கலியுகம்"தினேஷ், பஹ்ரைனில் இருக்கிறார்னு தெரிஞ்சதும் [[அவர் பிளாக்கில் போன் நம்பர் வச்சிருந்தார்]] போன் செய்தேன், அண்ணே நாம நேரில் ஒருநாள் சந்திப்போம்னு பேசிக்கிட்டோம், ஆனால் திடீரென ஒருநாள் நேரில் வந்து தன் நட்பை அடையாளப்படுத்தி சென்றார்...! [[அப்புறம் நாங்கள் அடித்த கும்மாளம்தான் எல்லாருக்கும் தெரியுமே ஹி ஹி]]

அடுத்து நண்பன் ரவிகுமார், சாட்டிங்கில் வந்து பின்பு போன் செய்து, ஒருநாள் ஹோட்டலில் சந்தித்து, பின்பு அவர் வீட்டிற்க்கே என்னை அழைத்து சென்று, அவர் நண்பர்களுக்கும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார், அதுவும் பிளாக் நண்பர்களுக்குத் தெரியும்.

இன்னும் நிறைய நண்பர்கள் பஹ்ரைனில் இருந்து கொண்டு பதிவு எழுதுகிறார்கள், சார் உங்களை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறதுன்னு சாட்தான் பண்ணுறாங்க, நான் போன் நம்பர் கொடுத்தாலும் அவர்கள் போன் பேசுவதே இல்லை, அவர்களும் தன் நம்பர் தராமல் ஒதுங்குகிறார்கள், நான் கண்டுக்குறதும் இல்லை...!

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வலது கரம் போன்றவரும், அவரின் இணைய தளத்தின் பொறுப்பாளருமான ஒரு நண்பர் இங்கே இருக்கிறார், அவர் கூட சாட்டிங்க்லதான் பேசுவார்....! இன்னும் நிறைய பேருங்க இருக்காங்க....!

ஏன் இந்த தயக்கம், நடுக்கம்னு எனக்கு இன்னும் புரியவே இல்லை, ஒருவேளை பணம் கேட்டுருவாயிங்கன்னு பயப்படுறாங்களோ...? இல்லை நம்மை பற்றி ஏடாகூடமா எழுதிப்புடுவாங்களோனு பயப்படுறாங்களோ என்னமோ?

தூரத்தில் இருந்து பார்த்தால் கடல் பெருசா தெரியுமாம், கடலுக்குள்ளே யாத்திரை போனால்தான் தெரியும் அதன் சுகம்னு நண்பன் அடிக்கடி சொல்வான், அப்படிதான் இவங்களும்னு நினைக்கிறேன்....!

எனக்கும் முதலில் பதிவர்களை எழுத்தில் பார்க்கும் போது அப்படிதான் இருந்தது, நெல்லை பதிவர் சந்திப்பில் அதற்கு நல்ல விடையும் கிடைத்தது, எல்லாமே நம்மை போலதான் அங்கே, இங்கே ஏற்ற தாழ்வு இல்லை, அலைவரிசை ஒத்து போகிறதா ஓகே கைகொடு நட்புக்கு, ஒத்து போகலையா விலகாமல் கொஞ்சம் கேப் விட்டு ஒதுங்கி நில், என புரிந்து கொண்டேன்...!

எனது பதிவுலக வாழ்க்கையில் இப்போது எனக்கு உலகமெல்லாம் நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள், காசோ பணமோ தேவையில்லை நல்ல நட்புக்கு இல்லையா...? அப்படி நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்று இருக்கிறேன்...!

ஊருக்கு போனால் கன்னியாகுமரி, நாகர்கோவில் தியேட்டர்கள் இதைவிட்டால் ஒன்னுமே எனக்குத் தெரியாது, ஆனால் இப்போ எந்த இடம் போகனும்னு ஆசைப்பட்டாலும் நண்பன் விஜயன் வந்து கூட்டிச் செல்கிறார், திருநெல்வேலிக்கு என் மனைவியின் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போவதோடு சரி, ஆனால் இப்போது நெல்லை சீமைக்கு போகாமல் மும்பை திரும்ப முடியாத அளவுக்கு நம்ம ஆபிசரின் பாசமும், கவுசல்யா, அவர் கணவர் ஜோதிராஜ், ரூபினோ மேடம், திவானந்தா சுவாமிகள், இம்சை அரசன் பாபு என இவர்கள் அன்பு கட்டி போட்டு வைத்துள்ளது...!

விக்கியுலகம் அண்ணனே வியட்னாமில் இருந்து நெல்லை வந்து அன்பை காட்டி செல்லுமிடமாக பதிவர்கள் நட்பு விரிந்துள்ளது என்பதை நினைக்கும் போது மனம் உவகை கொள்கிறது, மெட்ராஸ் பவன் சிவகுமார் மற்றும் சென்னை நண்பர்களைதான் சந்திக்க முடியாமல் தவித்து வருகிறேன், அதற்கும் ஒருநாள் வராமலா போய்விடும் கண்டிப்பாக என் நண்பர்களை அங்கே சென்று சந்திப்பேன்...!
[[ஈரோடு வழியாக ரயிலில் எப்போது வந்தாலும், என்னை சந்திக்க வரும் எங்க பெரியண்ணன்]]

இப்படி பம்மி பதுங்கி ஒளிய என்ன அவசியம் நண்பர்களே....? கூட்டை விட்டு வெளியே வாருங்கள், இப்போது காலம் மாறிவிட்டது பதிவுலகில், மாவட்ட வாரியாக பதிவர்கள் சங்கங்கள் ஆரம்பித்து வருகிறார்கள், சந்திக்கிறார்கள், வரும்காலம் நம் கையில் மறக்க வேண்டாம்...!!!

இறுதியாக......

போட்டோவில் பதிவர்களை பார்த்து மிரளாதீர்கள்.....போட்டோவில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.....! சிங்கம் மாதிரி போட்டோவில் இருக்குறவிங்க பூனை மாதிரி வந்து நிப்பாங்க பாருங்க உங்களுக்கே ஆச்சர்யமாக [[சிரிப்பாக]] இருக்கும்...! [[எவம்லேய் அங்கே கல்லை தூக்கி குறி பாக்குறது...?]]

"எல்லாருமே நம்மை போல பாடுகளும் கஷ்டங்களும் உள்ள மனுஷர்கள்தான்ய்யா" புரியும்னு நினைக்கிறேன்.

டிஸ்கி : படங்கள் எல்லாம் நீங்கள் ஏற்கனவே பார்த்ததுதான், இருந்தாலும் இது புதியவர்களுக்கான மலரும் நினைவுகள்...!
-----------------------------------------------------------------------

ஸ்பெஷல் டிஸ்கி : சென்னை பதிவர்கள் சந்திப்பு வரும் 26/08/2012 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்சி அடைகிறேன்...!

63 comments:

  1. அருவாளை தூக்கிட்டு அலைஞ்ச யார்தான் பயப்படாமல் இருப்ப்பா

    ReplyDelete
  2. எனக்கும் எல்லா பதிவாளர்களையும் சந்திக்க ஆசை. ஆனால் இந்தியா வரும் போது டைம்கிடைப்பது இல்லை. நிச்சயம் நெக்ஸ்ட் டைம் வரும் போது அதற்கென நேரம் ஒதுக்கி சந்திப்பது என முடிவு செய்துள்ளேன். அடுத்தாக போனில் பேசுவது என்றால் எனக்கு ஒத்துவாராது. இந்தியாவில் உள்ள எனது குடும்பத்தினருடன் 6 மாதத்திற்கு ஒரு தடவை பேசினாலே மிக அதிசயம். என்னை பொறுத்தவரை எல்லோரையும் நம்புவேன். ஒரு தடவை நேரில் பேசிப்பழகினால் ஆட்களை ப்ரிந்து கொள்வேன். மற்றவர்கள் மாதிரி என்னிடம் அலட்டல்கள் ஏதும் கிடையாது மிக எளிமையான மனிதன் நான்..அடுத்த மாதம் அமெரிக்காவில் வேறு ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண் பதிவாளர் எனது வீட்டிற்கு வரலாமா என்று கேட்டு மெயில் அனுப்பி உள்ளார். நானும் சரி என்று சொல்லியுள்ளேன் அதுதான் நான் சந்திக்க போகும் முதல் பதிவாளர் என நினைக்கிறேன்

    ReplyDelete
  3. ///சிங்கம் மாதிரி போட்டோவில் இருக்குறவிங்க பூனை மாதிரி வந்து நிப்பாங்க பாருங்க ///
    அப்ப பூனைமாதிரி இருப்பவங்க சிங்கம் மாதிரி இருப்பாங்காளா? ஆமாம் என்றால் யாரெல்லாம் பூனைமாதிரி இருப்பாங்க என்று ஒரு லிஸ்ட் ரெடி பண்ணுங்க

    ReplyDelete
  4. சென்னையில் நான் இருக்கும் பொழுது யாருமே கூப்பிடவில்லையே... நாடு விட்டு நாடு வந்த பிறகு கூப்புடுறிங்களே.. அனைவரையும் சந்திக்கனும் என்ற ஆசை தான்.. ஒரு சிலரை மட்டுமே சந்திக்க வாய்ப்பு கிடைத்தது..

    ReplyDelete
  5. Some people are like that. You can't change them. I knew some people they don't want you or friendship nearby. But when you are far away they will talk nicely.

    ReplyDelete
  6. //
    நேரில் பார்க்க முடிந்தும், பார்க்காமல் பயந்து அல்லது கூச்சப்பட்டு ஒதுங்குகிற பல நண்பர்களை கண்கூடாக பார்க்கும் போது, மனதில் வேதனைதான் வருகிறது...!!!
    ///

    அட விடுங்கண்ணே அவங்களுக்கு உங்களை நேரில் பார்க்க குடுத்து வைக்கலைன்னு நினைச்சுக்குங்க! ஆமா ஒரு சந்தேகம் இந்த லிஸ்ட்ல நான் கிடையாதுல :)

    (உங்களை அண்ணன் கூப்பிடலாம்ல; தக்காளி ஓவரா போறானேன்னு நினைக்காதீங்க ஹி ஹி ஹி!)

    ReplyDelete
  7. //
    இன்னும் நிறைய நண்பர்கள் பஹ்ரைனில் இருந்து கொண்டு பதிவு எழுதுகிறார்கள்
    //

    நீங்க இங்க இருக்கிறது மட்டும் தான் எனக்கு தெரியும் வேற யாருன்னே இருக்காங்க!

    ReplyDelete
  8. உங்க பேச்சை கேட்டு தமிழகம் வந்து பதிவாளர்களை சந்தித்து எனக்கு அடி உதை எல்லாம கிடைத்தால் யார் பொறுப்பு ஏற்பது. காரணம் நான் இப்பொது போடும் பதிவில் ஒவ்வொரு ஊர்காரர்களையும் கிண்டல் அடித்து வருகிறேன் இது வரை சென்னை கடலூர் திருபத்தூர் மற்றும் எங்கள் ஊரான மதுரையில் உள்ள அனைவரும் இப்போட்து எனக்கு எதிராக அருவாளை தீட்டி வருவதாக செய்தி வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா கலைஞர் விசயகாந்த் காமடி கட்சிதலைவர் ராமதாஸ் எல்லோரும் என்னை தீர்த்து கட்ட போவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது காரணம் நான் அவர்களையும் நான் கிண்டல் செய்கிறேனாம்.


    பதிவாள்ர்களை சந்திக்க மாறு வேஷத்தில்தான் செல்ல வேண்டும் இந்தியா வருவதற்கு முன் கமலஹாசனை சந்தித்து மாறு வேஷம் எப்படி போடுவது என்ரு கேட்டு வர வேண்டும்....ஹூம்ம்ம்ம்ம்ம்ம் பதிவாளாரா இருப்பதில் எவ்வளவு கஷ்டமப்பா

    ReplyDelete
  9. //
    எல்லாருமே நம்மை போல பாடுகளும் கஷ்டங்களும் உள்ள மனுஷர்கள்தான்ய்யா" புரியும்னு நினைக்கிறேன்
    ///

    உண்மைன்னே! சிலருக்கு நிறைய; சிலருக்கு கொஞ்சமா :))

    ReplyDelete
  10. ///
    Avargal Unmaigal said...
    அருவாளை தூக்கிட்டு அலைஞ்ச யார்தான் பயப்படாமல் இருப்ப்பா
    ///

    ஹி ஹி ஹி! மனோ அண்ணே விரப்பா ரவுடியா சுத்திக்கிட்டு இருந்தாலும் அவர் ஒரு குழந்தை மாதிரி (சிரிப்பு ரவுடி) ஹி ஹி ஹி!

    BTW,சென்னை பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்! அலுவல் காரணமாக வர இயலாமைக்கு வருந்துகிறேன்!

    நேசங்களுடன்,
    வரலாற்று சுவடுகள்

    ReplyDelete
  11. Avargal Unmaigal said...
    அருவாளை தூக்கிட்டு அலைஞ்ச யார்தான் பயப்படாமல் இருப்ப்பா//

    எலேய் யாருலேய் அங்கே....

    ReplyDelete
  12. வரலாற்று சுவடுகள் said...
    //
    நேரில் பார்க்க முடிந்தும், பார்க்காமல் பயந்து அல்லது கூச்சப்பட்டு ஒதுங்குகிற பல நண்பர்களை கண்கூடாக பார்க்கும் போது, மனதில் வேதனைதான் வருகிறது...!!!
    ///

    அட விடுங்கண்ணே அவங்களுக்கு உங்களை நேரில் பார்க்க குடுத்து வைக்கலைன்னு நினைச்சுக்குங்க! ஆமா ஒரு சந்தேகம் இந்த லிஸ்ட்ல நான் கிடையாதுல :)

    (உங்களை அண்ணன் கூப்பிடலாம்ல; தக்காளி ஓவரா போறானேன்னு நினைக்காதீங்க ஹி ஹி ஹி!)//

    லிஸ்ட்ல சீக்கிரம் வர சான்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன் ஹி ஹி...

    தாராளமா அண்ணன்'னு வாய் நிறைய கூப்புடுய்யா.

    ReplyDelete
  13. Avargal Unmaigal said...
    ///சிங்கம் மாதிரி போட்டோவில் இருக்குறவிங்க பூனை மாதிரி வந்து நிப்பாங்க பாருங்க ///
    அப்ப பூனைமாதிரி இருப்பவங்க சிங்கம் மாதிரி இருப்பாங்காளா? ஆமாம் என்றால் யாரெல்லாம் பூனைமாதிரி இருப்பாங்க என்று ஒரு லிஸ்ட் ரெடி பண்ணுங்க//

    லிஸ்ட் ரெடி பண்ணிட்டு என்னால அடி வாங்க முடியாது மதுர....

    ReplyDelete
  14. சிநேகிதி said...
    சென்னையில் நான் இருக்கும் பொழுது யாருமே கூப்பிடவில்லையே... நாடு விட்டு நாடு வந்த பிறகு கூப்புடுறிங்களே.. அனைவரையும் சந்திக்கனும் என்ற ஆசை தான்.. ஒரு சிலரை மட்டுமே சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.//

    ஊருக்கு வரும்போது ஒருநாள் பதிவர்களுக்கு ஒதுக்குங்கப்பா...

    ReplyDelete
  15. vanathy said...
    Some people are like that. You can't change them. I knew some people they don't want you or friendship nearby. But when you are far away they will talk nicely.//

    ஆம் இப்படியும் சிலர் இருக்கிறார்கள்தான்...!

    ReplyDelete
  16. வரலாற்று சுவடுகள் said...
    //
    இன்னும் நிறைய நண்பர்கள் பஹ்ரைனில் இருந்து கொண்டு பதிவு எழுதுகிறார்கள்
    //

    நீங்க இங்க இருக்கிறது மட்டும் தான் எனக்கு தெரியும் வேற யாருன்னே இருக்காங்க!//

    நேரில் பார்க்கும்போது சொல்லுறேன் தம்பி பொறு.

    ReplyDelete
  17. எலேய் மதுர, கமல்ஹாசனை பார்க்கப் போனாலுமே மாறுவேஷம் போட்டுட்டுதான் போகணும் ஜாக்கிரதை.

    ReplyDelete
  18. வரலாற்று சுவடுகள் said...
    //
    எல்லாருமே நம்மை போல பாடுகளும் கஷ்டங்களும் உள்ள மனுஷர்கள்தான்ய்யா" புரியும்னு நினைக்கிறேன்
    ///

    உண்மைன்னே! சிலருக்கு நிறைய; சிலருக்கு கொஞ்சமா :))//

    அதனால பெருசா கற்பனைகளை வளர்த்துக்கக் கூடாது.

    ReplyDelete
  19. வரலாற்று சுவடுகள் said...
    ///
    Avargal Unmaigal said...
    அருவாளை தூக்கிட்டு அலைஞ்ச யார்தான் பயப்படாமல் இருப்ப்பா
    ///

    ஹி ஹி ஹி! மனோ அண்ணே விரப்பா ரவுடியா சுத்திக்கிட்டு இருந்தாலும் அவர் ஒரு குழந்தை மாதிரி (சிரிப்பு ரவுடி) ஹி ஹி ஹி!//

    ச்சே எம்புட்டுதான் விறைப்பு காட்டுனாலும் கடைசியா கண்டுபிடிச்சிருதாங்களே...பயிர்ச்சி போதாதோ....

    ReplyDelete
  20. வரலாற்று சுவடுகள் said...
    ///
    ஹி ஹி ஹி! மனோ அண்ணே விரப்பா ரவுடியா சுத்திக்கிட்டு இருந்தாலும் அவர் ஒரு குழந்தை மாதிரி (சிரிப்பு ரவுடி) ஹி ஹி ஹி!//

    MANO நாஞ்சில் மனோ said...

    ச்சே எம்புட்டுதான் விறைப்பு காட்டுனாலும் கடைசியா கண்டுபிடிச்சிருதாங்களே...பயிர்ச்சி போதாதோ....
    ///

    உங்களுக்கு பிஞ்சு மூஞ்சி-னே அதான் சுலபமா கண்டு புடிச்சிர்றோம் ஹி ஹி ஹி!

    ReplyDelete
  21. அருமையாக பதிவுலக நட்புகள் குறித்து
    பதிவு செய்துள்ளீர்கள்
    மன்ச் சொடக்கெடுத்துப்போகும் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ///
    vanathy said...
    Some people are like that. You can't change them. I knew some people they don't want you or friendship nearby. But when you are far away they will talk nicely.
    ///

    வேறொரு விதமாகவும் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்!

    குசேலர் தனது உயிர் நண்பனான கிருஷ்ணரை சந்திக்க தவிர்த்த கதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

    குசேலர் தனது நண்பன் கிருஷ்ணரை சந்திக்க தவிர்த்த காரணம் இருவருக்குள்ளும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள்! கிருஷ்ணர் ஒரு அரசர்.., குசேலரோ ஒரு வேலை உணவிற்கும் திண்டாடும் சாதாரண அந்தணர்!

    இருப்பினும் தன்னை சந்திக்க வந்த குசேலரை ஓடிச்சென்று அழைத்து வந்தார் கிருஷ்ணர்!

    பணம்.. பதவி.. உயர்ந்தவன்.. தாழ்ந்தவன் என்ற எந்தவித வேறுபாட்டுடனும் கிருஷ்ணர்.. குசேலரை பார்க்கவில்லை! தன் நண்பன் என்ற ஒரே எண்ணம தான் கிருஷ்ணர் நெஞ்சில் இருந்தது!

    அந்த உயர்ந்த பண்பு இன்று நம்மில் பலருக்கு இல்லை என்பதால்..., தான் நிராகரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பிறரை சந்திப்பதை தவிர்க்கிறார்கள் என்று கூட பொருள் கொள்ளலாம்!

    இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் குறிப்பிட்டேனே தவிர நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை சகோ! புரிதலுக்கு நன்றி!

    நேசங்களுடன்,
    வரலாற்று சுவடுகள்!

    ReplyDelete
  23. /// சென்னை நண்பர்களைதான் சந்திக்க முடியாமல் தவித்து வருகிறேன், அதற்கும் ஒருநாள் வராமலா போய்விடும் கண்டிப்பாக என் நண்பர்களை அங்கே சென்று சந்திப்பேன்...! ///

    26/08/2012 அன்று சென்னை போகவில்லையா ?

    ReplyDelete
  24. சரியாகச் சொல்லப்பட்ட மனோ'தத்துவப் பதிவு..!

    ஒவ்வொரு மனதிலும் ஈகோ இருக்கிறது. அது முகமூடி அணிந்துள்ளது! அதைக் கிழிப்பதற்கு அவரால் முடிவதில்லை..வேறொருவர் அண்மை வேண்டப்படுகிறது!

    ReplyDelete
  25. மிகச்சரியான ஒரு கணிப்பு பாஸ் பல பதிவர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள்

    ReplyDelete
  26. சரியாகச் சொன்னீர்கள் தோழரே.. பதிவர் சந்திப்பிற்கான அழைப்பிதழை தாங்கள் வெளியிட்டதில் மகிழ்ச்சி..

    ReplyDelete
  27. மக்களே..
    அடுத்து நீங்கள் வரும்போது
    நெல்லைப் பதிவர்கள் சந்திப்புக்கு
    ஏற்பாடு செய்யுங்கள்..
    மனதில் உள்ள ஆசை..

    ReplyDelete
  28. // இம்சை அரசன் பாபு என இவர்கள் அன்பு கட்டி போட்டு வைத்துள்ளது...!//

    அண்ணே வணக்கம் .......
    கட்டி போட்டு முன்னாடி வைக்கோல் ,புண்ணாக்கு எல்லாம் வச்சும் ..கட்ட அவுத்துகிட்டு பஹ்ரைன் ஓடி போய்டீங்களே ..

    ReplyDelete
  29. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
  30. நல்ல பகிர்வு தோழரே...சகோ.தினேஷ்..மட்டும்தான் அடையாளம் தெரியுது.:)

    ReplyDelete
  31. சென்னைக்கு வந்தால் நக்கீரன் உங்களுக்கு ஸ்பெஷல் உம்மா தர காத்திருக்கிறார்.

    ReplyDelete
  32. உங்களை நான் இன்னும் சந்திக்கலை மனோ அண்ணே

    ReplyDelete
  33. இருந்தாலும் தன்னடக்கம் கொஞ்சம் சாஸ்திதான்யா உமக்கு. வாசப்படி தாண்டினாலே வீச்சருவாவ முதுகுல சொருகிகிட்டுதான் கெளம்புவாருன்னு இம்சை சொன்னாப்ல... பாபு-னு பேர்வச்சிருக்குறவன் பொஇசொல்ல மாட்டான்யா....

    உங்களை சந்திக்கும் ஆவலுடன், சென்னை வ்ரும்போது,....

    ReplyDelete
  34. அணமையில் ஒரு சினிமா படம் பார்த்தேன். அதில் வரும் கதாநாயகன் குழுவாக புகைப்படம் எடுக்கும் போது, நண்பனை அருகில் வந்து நிற்கச்சொல்வார், அதற்கு அந்த நண்பர், எம்மேலே உனக்குத்தான் எவ்வளவு பாசம். எங்கே போனாலும் நான் உன் பக்கத்திலேயே இருக்கனும் என்று நினைக்கிறாயே, எனக்கு புல்லரிக்கிறது மச்சான், என்பார். அதற்கு அந்த ஹீரோ, ஒரு விஷயம் சொல்வார், அதுதான் நகைச்சுவை. அப்படித்தான் இருக்கின்றது பதிவர்களைப்பற்றிய உங்களின் இறுதி கருத்து. சிங்கம் புலி என. நீங்க பரம சாது :))

    பதிவை ரசித்தேன். நல்ல மனசு மனோ உங்களுக்கு, வாழ்க. நானும் ஒரு நாள் சந்திப்பேன் உங்களை, நிச்சயமாக..

    ReplyDelete
  35. @வரலாற்றுச்சுவடுகள்... தம்பி பிண்றீங்க. அருமையான குட்டிக்கதை.

    ReplyDelete
  36. சிங்கம் மாதிரி போட்டோவில் இருக்குறவிங்க பூனை மாதிரி வந்து நிப்பாங்க பாருங்க உங்களுக்கே ஆச்சர்யமாக [[சிரிப்பாக]] இருக்கும்...!/////////////////////////////////// [[எவம்லேய் அங்கே கல்லை தூக்கி குறி பாக்குறது...?]]/////////////////

    வேறயாரு நாந்தான் .............

    ReplyDelete
  37. Boss. You are right.I am planning to attend the 26th meet. We shall meet.
    My number is 9380008869 and I stay in Chennai.
    I follow your page for a year but became a follower officially only now. Good luck
    regards
    Shankar
    PS I only read no writing.hehehe

    ReplyDelete
  38. என்னைப்பொருத்தவரை வலைப்பூ தந்த பெரிய வருமானமே இந்த நட்புதான்!இதற்கு ஈடு இணையுண்டா மனோ?

    ReplyDelete
  39. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சொந்தமே!!பதிவுலகம் இவ்வளவு விசாலமா??இங்கு ஒரு புள்ளியாய் நானும் இருக்கிறேன் என்பதலி; பூரித்துக்கொள்கிறேன்.மிக்க மிக்க மிக்க நன்றி இப்பதிவிற்காய்.

    ReplyDelete
  40. இம்சைஅரசன் பாபு.. said...
    // இம்சை அரசன் பாபு என இவர்கள் அன்பு கட்டி போட்டு வைத்துள்ளது...!//

    அண்ணே வணக்கம் .......
    கட்டி போட்டு முன்னாடி வைக்கோல் ,புண்ணாக்கு எல்லாம் வச்சும் ..கட்ட அவுத்துகிட்டு பஹ்ரைன் ஓடி போய்டீங்களே ..//

    நீங்க குடும்ப பிசியாக இருந்ததால் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண மனம் வரவில்லை....ஆனால் நெல்லை வைத்தபோது உங்களைப் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டோம்.

    ReplyDelete
  41. திண்டுக்கல் தனபாலன் said...
    /// சென்னை நண்பர்களைதான் சந்திக்க முடியாமல் தவித்து வருகிறேன், அதற்கும் ஒருநாள் வராமலா போய்விடும் கண்டிப்பாக என் நண்பர்களை அங்கே சென்று சந்திப்பேன்...! ///

    26/08/2012 அன்று சென்னை போகவில்லையா ?//

    நான் பஹ்ரைன் வந்து இரண்டு மாதம்தான் ஆகுது மக்கா.

    ReplyDelete
  42. Kayathri said...
    நல்ல பகிர்வு தோழரே...சகோ.தினேஷ்..மட்டும்தான் அடையாளம் தெரியுது.:)//

    தயங்காமல் சென்னை பதிவர் சந்திப்புக்கு போங்கள், அங்கே எல்லாரையுமே பார்க்கலாம், மனதுக்கும் ரொம்ப இதமாக இருக்கும்.

    ReplyDelete
  43. Shankar said...
    Boss. You are right.I am planning to attend the 26th meet. We shall meet.
    My number is 9380008869 and I stay in Chennai.
    I follow your page for a year but became a follower officially only now. Good luck
    regards
    Shankar
    PS I only read no writing.hehehe//

    கண்டிப்பாக போயி கலந்து கொள்ளுங்கள் நண்பரே....

    அதற்கு முன்பாக "கவிஞர்"மதுமதிக்கோ, சென்னை பித்தனுக்கோ தகவல் சொல்லி விடுங்கள், அவர்கள் மேலே கமெண்ட்ஸ் போட்டுள்ளார்கள், அவர்கள் பெயரை கிளிக் செய்யுங்க எல்லா விபரங்களும் அங்கே இருக்கிறது.

    ReplyDelete
  44. ஆஹா... பஹ்ரைன் சென்றது தெரியாது... நன்றி...
    ஊர் பக்கம் வரும் போது, எங்க ஊருக்கு வாங்க...

    ReplyDelete
  45. திண்டுக்கல் வழியாதானே எப்பவும் ஊர் வருவேன் [[மும்பை நாகர்கோவில் ரயிலில்]] கண்டிப்பாக சந்திக்கிறேன் மக்கா.

    ReplyDelete
  46. கைபேசி எண் : 9944345233
    கைபேசி எண், என் தளத்திலும் குறிப்பிட்டுள்ளேன் (Profile)
    நன்றி சந்திப்போம்...

    ReplyDelete
  47. மக்கா....

    பதிவர்களின் மனசுல இருக்கறத பதிவா கொட்டிப்புட்டிங்க...

    ஆமா? சிங்கம் பூனையானாலும், பூனை சிங்கமானாலும் சில பதிவர்களின் அட்டகாசம் உங்க மொபைலில் படமா புடிச்சு போடரிங்களே மக்கா... அதான்யா ஓடி ஒளியறாங்க போல....ஹி..ஹி....

    ReplyDelete
  48. சென்னை பதிவர் விழாவில் தாங்கள் கலந்து கொள்ள முடியாமல் போகிற வருத்தம் தான் உங்களை பதிவெழுத தூண்டியுள்ளது...

    ஹி..ஹி...

    ReplyDelete
  49. மக்கா
    நல்லா
    சொன்னீங்க

    ReplyDelete
  50. மக்கா
    நல்லா
    சொன்னீங்க

    ReplyDelete
  51. தலைப்புல இப்படி ஒரு கேள்வி

    //பதிவர்கள் சக பதிவர்களை சந்திக்க கூச்சப்படுவது ஏன்...?! //

    பதிவின் முடிவில் கருத்து பொட்டிக்கு மேல இப்படி பயமுறுத்துனா

    //கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...//

    அப்புறம் எப்பூடி நேரில் பாய்ப்பாங்க..அதன் பயப்புடுறான்களோ என்னவோ

    ReplyDelete
  52. என்னைப் போலகூச்சசுபாவம் உள்ளவர்களா இருப்பாங்களோ? நல்ல அலசல்!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  53. ஓகே மனோ...இது பதிவு ....
    :-)))))

    ReplyDelete
  54. உண்மை அண்ணே...

    //சிங்கம் மாதிரி போட்டோவில் இருக்குறவிங்க பூனை மாதிரி வந்து நிப்பாங்க பாருங்க உங்களுக்கே ஆச்சர்யமாக [[சிரிப்பாக]] இருக்கும்...!//

    அண்ணே அப்போ பூனை மாதிரி போட்டோவில் இருக்குறவிங்க சிங்கம் மாதிரி வந்து நிப்பாங்களா அண்ணா..

    ReplyDelete
  55. நாம் மூகம் மூடாமல் எல்லாருடணும் சேர்ந்து பழகணும் என்பதே என் ஆர்வம் ஆனால் துரதிஸ்ரம் சென்னைப்பதிவாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை என்றாவது ஒருநாள் எல்லாரையும் சந்திப்போம்!! அருமையான பகிர்வு அண்ணாச்சி!

    ReplyDelete
  56. **தூரத்தில் இருந்து பார்த்தால் கடல் பெருசா தெரியுமாம், கடலுக்குள்ளே யாத்திரை போனால்தான் தெரியும்**

    என்னைப்போலக் கூச்சப்படும் உறவுகளைக்கூடக் கட்டியிழுக்கிறமாதிரி அருமையா சொல்லியிருக்கிறீன்க மனோ !

    ReplyDelete
  57. நட்புக்கோர் இலக்கணம் நம்ம மனோ.

    ReplyDelete
  58. மனதில் தோன்றிய உணர்வுகள் எழுத்துக்களில் அருமையாய் உருப்பெற்றுள்ளது.

    ReplyDelete
  59. //சென்னை நண்பர்களைதான் சந்திக்க முடியாமல் தவித்து வருகிறேன், அதற்கும் ஒருநாள் வராமலா போய்விடும் கண்டிப்பாக என் நண்பர்களை அங்கே சென்று சந்திப்பேன்...!//
    அங்கதான் அருவாளோட சில நடிகர்கள் உங்களுக்காக காத்திட்டு இருக்காங்களே, அதனாலதான் சென்னை செல்ல தயங்குகிறீர்கள் என்ற விபரத்தை சிவாவிடம் நான் சொல்லமாட்டேன்.

    ReplyDelete
  60. நெல்லைப்பதிவர் சந்திப்பில் ஆரம்பித்த பல நட்பு வட்டம் இன்று உலகளவில் பரந்து விரிந்து பரவியுள்ளது. உடலால் நீங்கள் பஹ்ரைனிலும், விக்கி வியட்நாமிலும் இருந்தாலும், உள்ளத்தால் நெல்லை வாசத்தில் இருப்பது அறிவேன்.

    ReplyDelete
  61. ஐயா வணக்கம்
    நல்ல பதிவு
    உங்களை பார்க்க போலிஸ் மாதிரி இருக்கு . அப்படி ஒரு ஸ்மார்ட் பார்வை . பக்கத்தில வர நாங்க பயப்புடுவம் தானே

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!