Monday, October 21, 2013

காதுக்குள்ளே "கால்" விட்டு ஆட்டிப்புட்டானே ?

ஆன்லைன்ல ட்ராவல் ஏஜென்சியில ரெண்டு நாளைக்கு வேண்டி ரூம் புக் பண்ணிகிட்டு, சவுதியில இருந்து ஒரு வட இந்தியாகாரன் எங்கள் ஹோட்டலுக்கு போன் செய்ய...
புது ட்ரைனி என்னவெல்லாமோ பதில் சொல்லியும் அடங்காதவன்.....ட்ரைனி கடுப்பில் மனோ என்று கத்த...

என்னடான்னு போயி பார்த்தா....

போனை என் கையில் தூக்கி எறியாத குறையாக எறிந்து விட்டு கோவத்துல ஆபீஸ் உள்ளே போயி உட்கார்ந்துடுச்சு...சரி போனில் யார்னு பார்ப்போம் வாருங்க...

"ஹலோ....வணக்கம்ங்க யார் பேசுறது ?"

"நான் இன்னார்....அப்புறம் எனக்கு சில கேள்விகள் கேட்க வேண்டும் ?"

"அதான் நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் அம்மிணி பதில் தந்துச்சே ?"

"இல்லை எனக்கு திருப்தி இல்லை "

"சரி கேளுங்க"

"உங்க ஹோட்டல் எங்கே இருக்கு ?"

"பஹ்ரைன்ல இருக்கு " [[கொஞ்சநேரம் சத்தத்தையே காணோம் கடுப்பாகிட்டானோ ?]]

"ஹலோ உங்க ஹோட்டல் பஹ்ரைன்லதான் இருக்குன்னு எங்களுக்குத் தெரியும் கிண்டல் பண்றியா ? ஏரியா பேர் சொல்லுய்யா ?"

சொன்னேன்....

"சரி ரூம் எத்தனை ஸ்குயர் ஃபீட் ? எத்தனை பெட் ? சோபா வசதி எப்பிடி ? நீச்சல் குளம் ? டிஸ்கோ ? காபி ஸாப் ? பார் ? இவைகள் எத்தனை எத்தனை ?"

"அதான் எங்கள் ஹோட்டல் உள்ளே வெளியே என்னா இருக்குன்னு  நீ புக் பண்ணுன டிராவல் ஏஜன்சி ஆளுங்க போட்டோ அனுப்பி இருப்பாங்களே ?"

இருந்தாலும் பொறுமையா பதில் சொன்னேன்...அப்புறம் கேட்டான் பாருங்க கேள்வி ? அதான் பொண்ணு போனை தூக்கி எறிஞ்சிட்டு ஓடி இருக்கு...

"ஆஸ்பத்திரி எத்தனை தூரத்தில் இருக்கு ? ஆம்புலன்ஸ் கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும் ? தீயணைப்பு நிலையம் எத்தனை தூரத்தில் இருக்கு ? கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும் ? போலீஸ் ஸ்டேஷன் எத்தனை தூரத்தில் இருக்கு ? கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும் ?

டாக்ஸி பிடிக்க எத்தனை தூரம் நடக்கனும் ? கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும் ? பஸ் நிலையம் எத்தனை தூரம் ? [[பஸ்ஸை கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும்னு பயபுள்ள கேக்காம விட்டுருச்சே அவ்வ்வ்வ்]]

லோக்கல் போன் பண்ணா இன்னா சார்ஜ் ? இன்கம்மிங் வந்தா இன்னா சார்ஜ் ? [[அவ்வவ்வ்வ்வ்]] இன்டர் நேஷனல் கால் வந்தா எம்புட்டு, கால் போட்டா எம்புட்டு ? [[அதான் நீ உன் காலை என் காதுக்குள்ளே விட்டு ஆட்டிகிட்டு இருக்கியே ?]]

பெட்ரோல் பங்க் எத்தனை தூரம் ? பார்மஸி எத்தனை தூரம் ?"

ட்ரைனி அம்மிணி போனை கட் பண்ணு மனோ"ன்னு சைகை காட்டியதும் அல்லாமல், போனை பிடிச்சு கீழே இழுத்துகிட்டே இருக்க...

"ஆக்சுவலி சார் இங்கே ரெண்டுநாள் தானே தங்கப் போறீங்க ஏன் இம்புட்டு கேள்வி கேக்குறீங்க ? அதான் எல்லாம் ட்ராவல்ஸ் ஏஜன்சியில சொல்லி இருப்பாங்களே ?"

"இல்லை பொறு பொறு இன்னும் கொஞ்சம் கொஸ்டின் இருக்கு..."

"ஆஆஆஆஆ.....இன்னுமா....?"

"எனக்கு திருப்தி இல்லை உங்க மானேஜர் கூட பேசணும்" அய்யய்யோ...

"நான்தான் சார் அந்த டேமேஜர்..."

"ஆஆஆஆ நீயா...?"

"ஆமா..."

"அப்போ உங்க முதலாளி கூட பேசணும்..."

"ஓகே சார்...முதலாளி அமெரிக்காவுல இருக்கார் அவர் வந்ததும் பேசுங்க என்ன...?"

பொண்ணு போனை புடுங்கி நச்சுன்னு அடிச்சு வச்சிருச்சு, அம்மே...அம்மே...அம்மே"ன்னு கதறவச்சிப்புட்டானே ராஸ்கல்...?
இவன் ரெண்டுநாள் தங்குறதுக்கு இம்புட்டு கேள்வின்னா பர்மனெண்டா வந்தாம்னா பஹ்ரைன் கதி ? இப்பவே கண்ணை கட்டுதே....!

பச்சை பிள்ளைக்கு இப்பிடியெல்லாமா நிலைமை வரனும் ? ம்ஹும்.


14 comments:

  1. கேள்விகள் கேட்பது ரொம்ப நல்லதுன்னு யாராவது அவருக்கு படிச்சுப் படிச்சு சொல்லி இருப்பாங்களோ.....

    விதம் விதமான மனிதர்கள்.....

    ReplyDelete
  2. ஒரு ஜெனரல் நாலேஜுக்கா நாலு கேள்வி கேட்டா விட மாட்டீங்களே? :)

    ReplyDelete
  3. என்னய்யா இது பாண்டியநாட்டுக்கு வந்த சோதனை...
    நிகழும் நிகழ்வுகள்
    நித்தம் குணம் மாறும்
    காணும் மனிதர்களின்
    சித்தம் பலவாறு ...

    ReplyDelete
  4. கேள்வியின் நாயகனோ...? எதற்கும் அரிவாளை தீட்டி வைக்கவும்... ஹிஹி...

    ReplyDelete
  5. அவன் பொண்ணு பார்க்கப் போனப்போ, என்னெல்லாம் கேட்டிருப்பான்?

    ReplyDelete
  6. அது ஒண்ணும் டென்ஷம் ஆக வேண்டியதில்ல!ஏன்னா அவரு வேற மாதிரி யோசிச்சுப்புட்டாரு,அம்புட்டுத்தான்!///'மோச்சுவரி' எங்க இருக்குன்னு கேக்கல?

    ReplyDelete
  7. அப்டித்தா இருக்கணும், வேலையில ஒரு திரில்லிங் வேணாமா? டெய்லி ஒரே மாதிரி இருந்தா கடுப்பாகிடும் எப்படியோ ஒரு மொக்க பதிவுக்கு வழி . இல்ல மனோ ?

    ReplyDelete
  8. அவன் தான் கஸ்டமர்.அவன் உயிர் மேல் அவ்வளவு மரியாதை அதனால் உங்க உயிரை வாங்கியிருக்கான் மனோ.

    ReplyDelete
  9. அட முருகா. வட இந்தியர்களே அப்படித்தானாம். என் கணவரின் அலுவலகத்திற்கு வட இந்தியர்கள் சிலர் OJT வந்து இங்கே உள்ள பணியாளர்களிடம் இப்படித்தான் பல கேள்விகள் கேட்டார்களாம். ஏர்கார்ண்ட்’யில் உள்ள சின்ன சின்ன வயர்களின் பெயர்களையும் அதனின் பயன்பாடுகளையும் குறித்து கேள்வி எழுப்பினார்களாம்.! எஞ்ஜினியரிங் படித்த உங்களுக்குத்தெரியாதா? என்று பதில் கேள்வி கேட்டதற்கு.. தெரியும் ஆனால் உங்களுக்குத்தெரியுமா என்று சோதிக்கத்தான் கேட்டோம் என்றார்களாம். நல்லா டோஸ் கொடுத்தார்களாம் எங்க ஊர் ஆசாமிகள். இப்படியா? படித்த ஏட்டுக்கல்வியைப் பறைசாற்றப் போராடும் குணம் வட இந்தியர்களிடம் அதிகம் உள்ளதாக, அவர்களோடு கொஞ்ச காலம் நட்பு பாராட்டியவர்கள் சொல்கிறார்கள்.

    உங்களின் அனுபவமும் சூப்பர். சிரித்தேன்.

    ReplyDelete
  10. ha ha..பேஸ்புக்ல போட்டு உயிரை வாங்குரீங்க இல்ல அதான் அவன் உங்க உயிரை வாங்கிட்டான் ஹா ஹா...

    ReplyDelete
  11. ஒன்றுமில்லை, அவர் திருவிளையாடல் தருமி அவ்வளவுதான்

    ReplyDelete
  12. ஆஹா நாட்டாமைக்கு வந்த சோதனையை நினைச்சா!ஹீ!

    ReplyDelete
  13. அட தேவுடா! உங்களையே ஒரு பய டென்சன் பண்ணிட்டானா?

    ReplyDelete
  14. பர்மனெண்ட்டா வரவேண்டாம்...
    அவன் பொண்டாட்டி, புள்ளைங்க நிலமையை நினைச்சுப் பாருங்க அண்ணா...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!