Sunday, October 20, 2013

தமிழுக்கு அன்பென்ற பெயரும் உண்டு....!

கேரக்டர்....

பத்து வருஷம் முன்னாடி நான் வேலை பார்த்த ஹோட்டலில் அக்கவுன்ட் டிப்பார்ட்மென்ட் இன்சார்ஜ் ஆக வேலைக்கு சேர்ந்த செல்வி அக்காள், கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர்...

எங்கள் ஹோட்டல் மலையாளி மேனேஜ்மென்ட் என்பதால் மலையாளிகள்தான் அதிகம்...

தன்னோடு மலையாளம் பேசுபவர்கள் எல்லாரோடும் இவர் தமிழில்தான் பேசுவார், எத்தனைபேர்கள் சொல்லியும், தமிழ் பேச்சை விடவே இல்லை கடைசிவரை....
ஒருநாள் கேட்டே விட்டேன் "அக்கா நீங்க ஏன் மலையாளத்தில் பேசவே மாட்டேன் என்கிறீர்கள் ?"

"மனோ.....நம்ம தமிழுக்கு என்ன எதுல குறைச்சல், யாம் கேட்கும், பேசும் மொழியில் தமிழைப்போல தித்திப்பு எனக்கு எதிலுமே இல்லை" என்றார்கள், வாயடைத்துப் போனேன்.

அப்புறம்தான் தெரிஞ்சிது அக்காவுக்கு மலையாளம் எழுத படிக்க பேசவும் நல்லாவே தெரியும்னு...! [[ஊருக்கு போனபோது செல்வி அக்கா வீட்டுக்கு போயிருந்தேன், அவங்க அம்மா ஒரு தமிழ் டீச்சர்...!]]

நான் மலையாளம் எழுதி படிக்கும்போதுதான் உணர்ந்தேன் மலையாளம் சில எழுத்துகள் தவிர்த்து எல்லாமே தமிழாகவே இருக்கிறது, என்ன கொஞ்சம் சுழிகள் மாறி இருக்கிறது அம்புட்டுதான்....! [[அதாம்ப்பா ஜிலேபி'ன்னு சொல்றீங்க]]
அதே போல என் சொந்த அக்கா கல்யாணம் கட்டி மும்பை வந்தபோது, ஹிந்தி எழுத வாசிக்க பேச கற்று கொண்டாலும், யார் கூடையும் கூச்சமே இல்லாமல் தமிழில்தான் பேசுவாள்...

"அக்கா ஹிந்தி'காரங்கிட்டே தமிழ்ல பேசாதே"ன்னு சொன்னதுக்கு எங்க அக்காவும் மேலே செல்வி அக்காள் சொன்ன அதே பதிலைத்தான் சொன்னாள்.....என்ன....... காய்கறி கடையில இருந்த வட இந்தியர்கள்  எல்லாருக்கும்  காய்கறிகளுக்கு தமிழ் பெயரை கற்று கொடுத்துவிட்டாள்...!
படிக்கும் காலங்களில்...தமிழ் டீச்சர்கள் பலரும்....தமிழ் கற்று தரும்போது கோபப்படுவது கிடையாது அன்பாகவே கண்டித்து இருக்கிறார்கள்...!

காரணம் அறிந்தபோது மலைத்துப்போனேன்...

ஆம் தமிழ் மீது மாணவர்களுக்கு வெறுப்பு வந்துவிடக் கூடாது என்றே கவனமாக இருந்திருக்கிறார்கள், இன்னும் இருக்கிறார்கள்....!


22 comments:

 1. அந்த அக்காவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது .

  ReplyDelete
 2. முடிந்தவரை தமிழில் பேசுங்கள் என்று பாடம் சொல்லி விட்டார்கள் செல்வி அக்காவும் , தங்கள் அக்காவும். அவர்களுக்கு பாராட்டுக்கள். தமிழ் பேச வாய்ப்பு இருக்கும் சூழலிலும் வேறு மொழியில் பேசும் தமிழர்கள் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்....

  ReplyDelete
 4. நமக்கு நம் தாய்மொழியில் கிண்டல் கேலி பேசி சிரிப்பதற்கு ஈடு இணை ஏதும் கிடையாது.

  ReplyDelete
 5. உண்மை.. தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள் நிறைய பேர்கள் உள்ளார்கள் என்பதை சமீபத்தில் நேரிடையாகவே புதுக் கோட்டை பள்ளி ஒன்றில் கண்டேன்...

  ReplyDelete
 6. செல்வி அக்காளும் சரி, உங்க அக்காவும் சரி தமிழ் மீது கொண்ட பற்று கேட்கும்போதே பெருமையாய் இருக்கிறது.

  ReplyDelete
 7. இச்சுவை அறிந்தோர்
  எச்சுவையும் நுகரார்.....

  ReplyDelete
 8. அருமை... உங்க அக்கா மற்றும் செல்வி அக்கா போன்றவர்கள் தான் நம் மொழியை மறைமுகமாக வாழ வைத்துக் கொண்டுள்ளார்கள்

  ReplyDelete
 9. செல்வி அக்காவை போல எல்லாரும் இருந்துட்டா!? நம் தாய் மொழி என்றென்றும் உயிர் வாழும்.

  ReplyDelete
 10. தமிழ்மொழியின் பெருமை உணர்ந்தவர்கள் .இருவருக்கும் என்
  இனிய வாழ்த்துக்களோடு உங்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்
  சகோதரா .

  ReplyDelete
 11. தமிழிற்குப் பெருமை அண்ணா...

  ReplyDelete
 12. செல்வி என்றாலே அங்கே தமிழ் தாண்டவம் ஆடுமோ..ஹிஹிஹி

  ReplyDelete
 13. இந்த மாதிரி மனிதர்கள் இருக்கும்வரை டமில் வாழும்!

  ReplyDelete
 14. இது போன்ற கட்டுரைகள் நிச்சயம் தமிழை வளர்க்க உதவும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. மற்ற மொழி கலப்பு இல்லாமல் தூய்மையாய் தமிழ் பேசுபவரின் பேச்சுக்களை கேட்டாலே போதும் தமிழ் எத்தனை இனிமை என்று.. ! சமீபத்தில் தூப்புக்காரி நாவல் எழுதிய மலர்வதி அவர்களுடன் அலைபேசியில் பேசும் போது வட்டார தமிழில் அத்தனை அழகாக பேசினார்.. ! அழகு தமிழை உணரும் போது நாமும் அழகாக பேசுவோமில்லையா..!

  ReplyDelete
 16. இன்னமும் நான் இங்கு மலையாளிகளின் உணவகங்களுக்கு சென்றால் சுத்தமாக தமிழில்தான் பேசுவேன். அவர்களும் மலையாளத்தில் தான் பேசுவார்கள். அவர்களுக்கு தமிழும் நமக்கு மலையாளமும் எளிதாக பிடிபடும் என்பது உண்மை.

  ReplyDelete
 17. // இந்த மாதிரி மனிதர்கள் இருக்கும்வரை டமில் வாழும்! //
  -------------------------------------------------செங்கோவி

  அந்த ஆத்தா ஊருக்கு போனாலும் போனது இதுக்கு ரொம்பதான் வெடச்சிகிட்டு நிக்குது. அய்யனாருதா காப்பாத்தனும்.

  ReplyDelete
 18. இனிது! இனிது! தமிழ் இனிது!

  ReplyDelete
 19. ரெண்டு அக்காக்களையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது...
  தமிழ் இனிமையானது அண்ணா...

  ReplyDelete
 20. இவர் போன்றவர்களால்தான் தமிழ் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. போற்றப்பட வேண்டியவர்கள்

  ReplyDelete
 21. நானும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது தமிழ் உபாத்தியாயினியாகத் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு கோபம் வரும் மனோ சார் ...எப்போதென்றால் என் நாட்டைப் பற்றியும் , என் மொழியைப் பற்றியும் எவரும் ஏளனமாகப் பேசினால்..............

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!