உண்மையாக
மனசுக்கு பட்டதை ஓப்பனாக சொல்வது என்னுடைய மனசு, அதனாலேயே பல
துன்பங்களையும் அனுபவிச்சிருக்கேன், உதாரணம் மும்பையில் ஒரு தாதாவை வாய்
நாறுதுன்னு சொன்னதில் இருந்து என்ன நடந்திருக்கும்னு உங்க யூகத்துக்கே
விட்டுருதேன்...
பாகிஸ்தான்....
தொன்னூறு சதவீதம் இந்தியர்கள் வெறுக்கும் ஒரு நாடு...
அந்த நாட்டின் வரலாறு என்ன ?
அவர்கள் யார் ?
அவர்கள் தம் அன்பு என்ன அவர்கள் தம் பண்பு என்ன ?
கலாச்சாரம் ? மனம் கொண்டது மாளிகை அதற்குள் போவது மனிதம் இல்லை..!
நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது என்ன அவர்களைப் பற்றி ?
வரலாறு பாடத்தில் நம் தலைமுறைகளுக்கு என்ன சொல்லப்படுகிறது ?
அசோகர்
ரோட்டுல மரம் நட்டார்ன்னு தெரியும், எதுக்கு நட்டார்ன்னு தெரியாது, அசோகர்
சக்கரவர்த்தின்னு தெரியும், எதுக்கு சக்கரவர்த்தின்னு தெரியாது ! அவர்
எந்த நாடு முதல் எந்த நாடு வரை ஆண்டார்ன்னு உங்க பிள்ளைங்ககிட்டே கேளுங்க ?
எனக்கு
பாகிஸ்தான் நண்பர்களை ரொம்ப பிடிக்கும், என்ன பந்தமோ புரியலை என்னை
பார்த்ததும் அவர்களுக்கும் பிடித்து விடும், என் கூட மலையாளி தமிழ் மற்றும்
இந்திய நண்பர்கள் இருந்தால் பாகிஸ்தானியை கண்டதும் சைடில் ஒதுங்குவது
உண்டு, அவன் அவர்களை மைண்ட் செய்யாமல் என்னை வந்து கட்டி பிடிப்பதும் உண்டு...!
"மும்பைல
பாம் வச்சா முதல்ல எனக்கு சொல்லிருய்யா ஏர்போர்ட் மற்றும் ஐந்து நட்சத்திர
ஹோட்டல்களை தாண்டிதான் என் பிள்ளைங்க ஸ்கூல் போகணும்" என்று நான் ஜாலியாக
சொல்வதை ஏற்று சிரிக்கும் பாகிஸ்தானி நண்பர்கள், மற்ற இந்தியர்கள் இப்படி
சொன்னால் அடி நிச்சயம் !
பாகிஸ்தான் ஆண்கள்
மட்டுமில்ல....பத்து வருஷம் முன்னாடி பாகிஸ்தான் முஜ்ரா என்னப்படும் நடன
அழகி ஷக்கீனா என் உயிர் தோழியாக இருந்தாள், அன்புன்னா அப்பிடி ஒரு அன்பு,
மனோஜ் என்று பெயரை உச்சரிக்கும் போதே உருகி விடுவாள் !
சரி அதெல்லாம் போகட்டும் விஷயத்திற்கு வருவோம்.....
முந்தாநாத்து
நான் டியூட்டியில இல்லை, எங்க ஸ்டாஃப் எல்லார்கிட்டேயும் டேமேஜர்
சொல்வது...... கெஸ்ட் இஸ் ஆல் வேய்ஸ் ரைட்.....நான் சொல்வது...லெப்ட்டு
ரைட்டு பார்த்து நட...அடிச்சம்ன்னா திருப்பி அடி, அடி வாங்கிட்டு என்
முன்னாடி வராதே குடுத்துட்டு வான்னு சொல்றது நம்ம நாட்டாமை மனசு...!
செக்கியூரிட்டி
பாகிஸ்தானி, மூனாவது மாடி டிஸ்கோவில் களவாண்ட ஒரு அரபியை லிஃப்டில் போட்டு
சாத்த...லிஃப்ட் கீழே வரவும், ரிஷப்சனில் அடி நடக்க...அரபிக்கு நல்லா அடி
குடுத்துருக்கான்...[[கேமராவில் பார்த்தேன்]]
பரஸ்பரம் அடி...
அப்பிடியே
விட்டாலும் ஓகே....இதுலதான் நம்ம ஆளு ரெண்டுபேர் உள்ளே புகுந்தது, அதுவும்
மலையாளி...... சொல்லவா வேணும் ? இன்னும் மற்ற அரபி செக்கியூரிட்டிகள்,
பற்றி கூலராக மலையாளிகள்...... செய்ததை கேமராவில் பார்த்து ஆடிப்போனேன்...!
சண்டை என்பது யாதெனில்...
நண்பன் தப்பே செய்திருந்தாலும் அவனை அடித்தவனை ஏன்னு கேக்காமல் அடித்து நொறுக்குவது என் நண்பர்கள் பாலிஸி...! அதே போல வேலை செய்யும் இடத்திலும் அந்நியன் தாக்கும் போது அவனை தூக்கிப்போட்டு மிதிப்பது தப்பில்லை ஆனால்...
இந்த இரண்டு மலையாளி நண்பர்களும் செய்தது என்ன தெரியுமா ?
பாகிஸ்தான் நண்பனை கட்டியாக பிடித்து வைத்து அரபிக்கு முன்பாக நிப்பாட்ட....பீஸ்
பீஸ் ஆகிவிட்டான், மூக்கில் நாலஞ்சி குத்து பொன்னாசி உடைந்து மூக்கு
பெயர்ந்து போனது, ரத்தம் வந்தபின்தான் இவர்கள் பிடியை விட்டார்கள்...!
பத்தே நிமிஷத்தில் நடந்து முடிந்து போலீஸ் கேஸும் ஆகிவிட...அரபி இப்போ ஜெயிலில்...
அடுத்தநாள்
நான் டியூட்டிக்கு வரும்போது என் முன்னிலையில் இவர்கள்
பேசினார்கள்..."அவனே கொறச்சி கூடுதலா இருன்னு, பிடிச்சி கொடுத்தல்லே
மோனே...அவன்ற அடப்பு தெற்றி போயல்லோ ஹா ஹா ஹா ஹா..." [[அவனுக்கு ரொம்ப
அகங்காரம் அதான் பிடிச்சி குடுத்தொம்ல கொய்யால]]
எனக்குள்
இருந்த மிருகம் வெளியே..."ப்ப்ப் எர்க்வெஹ்வ்ர்ஹ் ஜ்ர்க்ர்க் உஎஜெர்ஹ்ஜ்ர்
இஈஹ்ஜெர் ஜவே உவ்வ் உஈரெர்ஜ்ட் ஈஜ்ட்ட்ஜ்ஜ்ற்ற்...."
இதோ இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இப்பவரை அவனுகளை காணவே இல்லை !
ரெண்டுநாள் லீவு முடிந்து [[ட்ரீட்மென்ட்]]
என்னிடத்தில் வந்தவன் சொன்னது, "பரஸ்பரம் சண்டை வந்தால் ஒருத்தன் அவனை
பிடிக்க வேண்டும் இன்னொருத்தன் என்னை பிடிக்க வேண்டும், இவனுக ரெண்டு
பேரும் சண்டை என்னும் பெயரில் என்னை பிடித்து அவனுக்கு வாய்ப்பு
கொடுத்ததின் நோக்கமென்ன மனோஜ் ?" [[என்னிடத்தில் பதில் இல்லை]]
இப்படியும் வன்மமா...? தன் ஜென்ம சுபாவத்தை சில இடங்களில் காட்டும் சில மலையாளிகளை நான் மன்னிப்பதே இல்லை !
இனி மறுபடியும் முதல்லே இருந்து படியுங்க....
இப்போ
அரபி ஜெயில்ல ஒன்னு களவு கேஸ் ரெண்டு இவன் மூக்கில் குத்திய கேஸ், சவூதி
எம்பஸி பேச்சு வார்த்தைக்கு வந்தாலும் [[பணம்தான்]] நான் இன்னும் சம்மதம்
தெரிவிக்கவில்லை காரணம் அடுத்த வாரம் அவனுக்கு மூக்கில் ஆபரேஷன் இருக்கு.
காசு கிடைத்தால் எங்களுக்கும் பங்கு வேண்டும், என்று இப்பவே மலையாளிகள் ரெண்டு பேரும் கொடி பிடிக்க..."மனோஜ் நல்ல டீல்ல பணம் வந்துச்சுன்னா பாதி நீ எடுத்துக்கோ ஓகே ?"
"நீ ரத்தம் சிந்திய காசு எனக்கு எதுக்குடா ? என் பிள்ளைங்களுக்கு அது சாபமாக மாறிவிடும் வேண்டாம்" என்றேன்
"அப்போ இவனுக ? "
என்னிடம் பதிலில்ல, தெரிஞ்சா சொல்லுங்க....
நான் சொல்லவா? கதை சுத்தமாகப்புரியவில்லை. !
ReplyDeleteஆரம்பத்துல அவங்க மேல கொஞ்சம் கடுப்பு இருந்தது, இப்போ அது இல்லை, யாரோ சிலர் செய்ற தப்புக்கு ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் குத்தம் சொல்ல கூடாது...
ReplyDeleteபாவம் அரபி !மலையாளிகள் ஏனோ வன்மத்துடன்!ம்ம்
ReplyDelete//மனோ” தத்துவம்.// ஆபிசர் பின்றீங்க..!
ReplyDeleteநடன அழகி உம்மை மட்டும் கண்டுக்கிட்டதுல தான், அவங்க பாகிஸ்தானையே வெறுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteபாக்கிஸ்தான் என்றால் அனைவரும் மோசமானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார்கள்
ReplyDeleteஉங்களுக்கே உரிய பாணியில் அருமையாக சொல்கிறீர்கள்
அவர்களுக்கு சாபம் உண்டு...!
ReplyDeleteபாக்கிஸ்தான்ல்ல நவாஸ் ஷெரிப் மட்டுந்தான் நல்லவர்...அப்புறம் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி இவங்க அவரவிட ரொம்ப அழகானவங்க...ஹீஹீ....
ReplyDeleteவணக்கம்,மனோஜி!நலமா?///என்னமோ போடா மாதவா!
ReplyDeleteஉங்களுக்கு உரிய எழுத்தில்
ReplyDeleteஅருமை
மனோ உங்க நண்பர்க்கிட்ட சொல்லுங்க..
ReplyDeleteஅவரே எல்லா பணத்தையும் எடுத்துக்க சொல்லி..
மீறி மலையாளிங்க பங்கு கேட்டா.. உங்க கிட்டத்தான் அவங்க உங்க நண்பரை பிடிச்சுக்குடுத்த ஒளிப்பட (video) ஆதாரம் இருக்கே..
அதை வச்சு சும்மா வெருட்டி விடுங்க..
100% நட்ட ஈடு உங்க நண்பருக்கே உரியது
பாதிக்கப்பட்டது அவர் தானே..
வழக்கம்போல் தங்களது பாணியில் தங்களது பதிவு. நன்றி.
ReplyDeleteபாதிக்கப்பட்டது அவர் தானே.... அவருக்கு மட்டுமே நஷ்ட ஈடு..... இதில் இவர்களுக்கெதற்கு பங்கு...
ReplyDelete