Monday, June 16, 2014

நம்மை ரசிக்கும் ரசனை மிகுந்த சில ரசிக நண்பர்கள் !


ஆயிரம் தினார் [[ஒன்னரை லட்சம் ரூபாய்]] நஷ்ட ஈடு கிடைத்திருக்கிறது பாகிஸ்தான் நண்பனுக்கு, இன்னும் கூடுதல் கிடைக்க வாய்ப்பு இருந்தும் ஒரு அரபி நம்மளை இளக்காரமாக பார்த்து இது போதும் என்றே பேச்சை நிப்பாட்டினான் !

நான் மூவாயிரம் தினார் எதிர் பார்த்தேன் !

சென்ற பதிவின் தொடர்ச்சி.
---------------------------------------------------------------------------------------------------




ஞா ங இப்பவும் எழுத தெரியாத நண்பன், படிக்கும்போது மிரட்டலோடு என் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பான், நான்தான் எழுதி கொடுப்பேன்....மக்குன்னா மக்கு அப்பிடி ஒரு மக்கு, சாப்பாடுன்னா அடிச்சிபிடிச்சு சாப்புடுவான், மொத்த வாத்தியார்களும் தங்கள் தங்கள் வீட்டு கோபத்தை தாங்கிய உடம்பு !

இவன் உருப்படமாட்டான்னு எழுதியே வச்சிட்டோம் ?

இப்போ அவன் எங்க ஊருக்கு ஹீரோ !

ஆம் அவன் மனைவி எங்க ஊருக்கு வார்டு மெம்பர் !

இந்த தடவை லீவுக்கு ஊருக்கு வந்த பொது, அம்மாவுக்கு சீனி, அரிசி [[நல்ல அரிசி]] வாங்கி குடுக்க நானும் ராஜகுமாரும் ரேஷன் கடைக்கு போனபோது அவன் அங்கே நின்று ரேஷன் கடை ஆளை பார்த்து சொன்னான் "அண்ணே இவன் என் பால்ய சிநேகிதன் பார்த்து போடுங்க" அவ்வ்வ்வ்....

அவன் மனைவியை இன்னும் நான் பார்க்க வில்லை [[என்னை தெரியும் என்று ராஜகுமாரிடம் சொன்னாளாம் கூடுதல் விசாரிக்க வில்லை [[மூன்றே நாள்தான் ஊரில் இருந்தேன்]] அடுத்தமுறை போயி பார்த்தே ஆகவேண்டும்]]

பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும், அழகாக இவனை செதுக்கி இருக்கிறாள் !

சில பெண்மை அழகில்லாத ஆண்மையை அழகாக்கி விடுகிறதை நிறைய இடங்களில் காண்கிறேன், மனைவியாக மட்டும் இல்லை தோழி, மற்றும் அக்காள் தங்கைகள்...!

[[ஆஆ...அதுக்குள்ளே ரெண்டு வருஷம் ஆகிருச்சா ? ஆபீசர், சுதன் மற்றும் நான், மலரும் நினைவுகள்...!]]

சில ஆண்களும்...ஒரு முறை ஊருக்கு போயி விஜயனை பார்த்துவிட்டு பக்கத்தில் துணிக்கடையில் வேலை செய்யும் நண்பனையும் பார்க்க போனபோது, எனக்காக ரெண்டு சட்டை செலக்ட் செய்து தந்தார் விஜயன்.

அத்தான் ஆஹா சூப்பர் செலக்ஷன் என்று சொல்ல, இது விஜயன் செலக்ஷன் என்று சொன்னேன் "அதானே பார்த்தேன்"னு உறுமிகிட்டு போச்சு சீவலப்பேரி...

சரி பஹ்ரைன் வரை இந்த ரெண்டு சட்டயும் வருமான்னு சந்தேகமா இருந்துச்சு என் மகன் பார்த்த பார்வையில்...

வெளிநாடு வந்துதான் கவனித்தேன் அந்த ரெண்டு சட்டையும் மிஸ்ஸிங் அவ்வ்வ்வ்....

[[அந்த ஒரு சட்டை]]\

ஒரு சட்டை என் குடும்பமும் விஜயன் குடும்பமும் பத்மநாதபுரம் அரண்மனை மற்றும் திற்பரப்பு அருவிக்கு போகும் போது போட்டுருப்பேன் பதிவு போட்டுருக்கேன், இன்னொன்னு நம்ம ஆபீசர் மகள் பிருந்தா கல்யாணம் அன்று காலையில் போட்டிருப்பேன் !

[[ஆபீசர் மகள் கல்யாண நாள் அன்று கல்யாண மண்டபத்துக்கு வெளியே வேடந்தாங்கல் கருண் நான் சிபி அண்ணன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், அந்த இன்னொரு சட்டை]]

எல்லாரும் பாராட்டிய செலக்ஷன், இனி ஊர் போனால் விஜயனைதான் தூக்கிட்டு போகணும் துணி வாங்க, என்னையே அழகாக போட்டோ எடுத்து மிகவும் சொல்லி ரசிப்பார் நண்பர்களிடம்...!

10 comments:

  1. சிவப்பு சட்டை சரியாக தெரியவில்லை.. ப்ளு சூப்பரா இருக்கு உங்களுக்கு..!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ரொம்ப பிடிச்சுது புளூதான் விஜயனுக்கு ரொம்ப பிடிச்சது அந்த மெரூன் கலர் சட்டைதான் !

      Delete
  2. அடுத்த முறை நானும் வருவோமில்லே...!

    ReplyDelete
  3. எந்த கலர் டிரெஸ் போட்டாலும் அழகா இருக்கீங்க....

    ReplyDelete
  4. ஏய் கட்டம் போட்ட சட்டை ......!

    ReplyDelete
  5. எங்க சிபி அண்ணனை கண்ணாடி இல்லாமல் போட்டோ பிடித்ததை வன்மையாக கண்டிக்கிறேனுங்கோ

    ReplyDelete
  6. வணக்கம்
    நண்பர்களுடன் கூடி வாழ்வது ஒரு தனிச் சுகந்தான்... சிலபேர் நண்பர்களை மறந்திடுவார்கள் ஆனால் நீங்கள் மறக்காமல் நினைவு படித்தியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அது ஒரு நிலாக்காலம் போல நினைவுகள் அருமை!

    ReplyDelete
  8. அடடா பழைய கூட்டத்தை ஒரே படத்தில் பார்க்க சந்தோசமாக இருக்குண்ணே

    ReplyDelete
  9. பாகிஸ்தானி நண்பருக்கும் ஆயிரம் தினார் நஷ்ட ஈடு கிடைத்தது - மகிழ்ச்சி.... பங்கு யாருக்கும் தரலையே.....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!