Tuesday, June 3, 2014

ஆஆ....கோச்சடையான் ரஜினியா இது !

 ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சினிமா, இப்போ வரும் சினிமாக்களை பார்ப்பதை விட நம்ம பதிவர்களின் [[சினிமா பிரியர்கள்]] எழுத்தையும் அதாம்ய்யா விமர்சனம், அவர்கள் தம் குண நலன்களை வைத்தே ஒரு யூகத்தில் கணிப்பது உண்டு, இருந்தாலும் சினிமா பார்க்கும் ஆவல் என்னமோ குறைந்து விட்டது அதற்கு இந்த கோச்சடையானும் அடக்கம்...!
இந்த படத்தை வலுக்கட்டாயமா பார்க்க காரணம் எனது சோம்பேறி தூக்கம் காரணம், "டேய் அளவுக்கதிகமா தினமும் [[பனிரெண்டு மணி நேரம் அவ்வவ்]] தூங்காதே அப்புறம் ரோட்டுல எங்கேயாவது கிறுகிறுத்து விழப் போறே" என்ற நண்பனின் அட்வைஸ் படி, என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சப்போ, சினிமா நியாபகம் வர, இணையதளத்தில் தேடினேன் தமிழ் படம் ஏதாவது ஓடுதான்னு பார்த்தால், ஆஆ கோச்சடையான் அல் ஹம்ரா தியேட்டரில் ஓடிட்டு இருக்கு..!



கோச்சடயான் விமர்சனங்கள் பல தரப்பில் இருந்தும் சரியாக ஒரே கண்ணோட்டத்தில் வரவே இல்லை பலரும் பல விதத்தில் பிடிச்சிருக்கு பிடிக்க வில்லை, சிலர் குழைந்தைகள் மிகவும் ரசிக்கிறார்கள் [[இல்லவே இல்லை]] என்றே எழுதி வருகிறார்கள் !
நான் தியேட்டருக்கு மதியம் [[நூன்]] பனிரெண்டு மணிக்கு போனேன், மொத்தம் நான்கே நான்குபேர் மட்டும் தியேட்டரில் என்னையும் சேர்த்து [[!]] 

தீபிகா படுகோனை எம்புட்டு கேவலப் படுத்தணுமோ அம்புட்டு பண்ணிட்டாங்க ?

சரத்குமார் சும்மா லுலாலிக்கா வந்துட்டு போறார்...! [[படம் முழுக்க சில இடங்கள் தவிர்த்து ரஜினியின் மேனரிசம் சரத்குமார் மாதிரியே இருக்கு]]


அருமையான நடிகர் நாகேசையும் கேவலப் படுத்தி இருக்காயிங்க ?


பிளஸ் 



கோச்சடையான் அண்ணாச்சி வந்ததும் எனக்கு தூக்கம் வர ஆரம்பிச்சி தூங்கி தூங்கி அப்புறம் கொஞ்சம் கதையில் சூடு பிடிக்க தூக்கம் கலைந்தது, எதிரிகளையும் மன்னிப்பது என்ற கொள்கை எனக்கு பிடிக்க நிமிர்ந்து அமர்ந்தேன் !
எதிரிகளை மன்னிப்பது என்று அப்பா சொல்லி இருந்தாலும் அதை மீறி ராணா ரணகளம் ஆடுகிறார் [[ம்ம்ம் கதைக்கும் தேவைதான் வேற வழி ?]] எல்லா நடிகர்களின் முக பாவனைகள் ஒரே மாதிரிதான் இருக்கிறது, கோபத்திலும், சிரிப்பிலும் ஒரே முக பாவனை [[ஒ கார்ட்டூன் இல்லையா]]



ஒன்னுமே இல்லை படத்தில்....

சரி படத்தை தூக்கி [[கொஞ்சம்]] நிறுத்தி இருப்பது ?

முதலில் ஏ ஆர் ரஹ்மானின் துள்ளல் இசை, வேற யாரும் இந்த இடத்தில் நினைத்து பார்க்கவே முடியாது !




ரஜினியின் இளமையான வாய்ஸ் !

எங்க அண்ணன் கே எஸ் ரவிக்குமாரின் கதை வசனம் !

ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு !

எல்லாப் பாடல்களும் எனக்கு பிடித்திருந்தது !

ஷோபனா கேரக்டர் கொஞ்சம் டச்சிங் டச்சிங் !



நாசர்..... வாஆஆஆஆவ்......சூப்பரு.!

கடைசியாகவும் முதலாகவும் நான் ரசித்தது "எதிரிகளை மன்னிப்பது" மட்டுமே...

அல்லாமல் இது குழந்தைகளுக்கான படமே அல்ல...கண்டிப்பாக அவர்கள் தூங்கி இருப்பார்கள், இது வந்து ரஜினி வாய்ஸ் தெரிந்தவர்கள் அந்த குரலுக்காக, ரஹ்மானின் இசைக்காக பார்க்கலாம்.


இன்னும் எனக்கு புரியாத ஒரு விஷயம், அதென்ன சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்புறம் கணவர் பெயர், முதலாமவர் கனிமொழி கருணாநிதி அப்புறம் கணவர் பெயர் ? ஏம்யா ஏம்யா ஏம் ? தெரிஞ்சவிங்க சொல்லுங்க பிளீஸ்.



என்னை பொறுத்த வரை கோச்சடையான் "நொண்டி குதிரை"

யப்பா தொடரும்ன்னு ஒரு ரஜினி வந்தாரு பாருங்க, அப்போ எடுத்ததுதான் ஓட்டம் ரூம் வந்து சேரும் வரை சத்தியமா திரும்பியே பார்க்கலை !

16 comments:

  1. சரியான விமர்சனம் மக்களே...
    படம் பார்த்துவிட்டு என் மனதில் ஓடியவற்றை
    அப்படியே எழுதி இருக்கீங்க..
    ===========
    இப்பல்லாம் அப்பா,கணவர் பெயரை சேர்த்து சேர்த்து எழுதுவது
    பாஷன் ஆயிடுச்சி....
    ஏன்?! அப்பா பெயரை வாழ்நாள் முழுதும் போட்டுக்கலாமே...
    இடையில் வரும் ஒரு நபருக்காக பெற்றவரின் பெயரை
    இழக்க வேண்டாம்...
    ==========
    என்னது?!! கனிமொழிக்கு கல்யாணம் ஆயிடுச்சா?????

    ReplyDelete
  2. பாக்கனும்னு நினைச்சேன்.நல்ல காலம் பாக்கல தப்பிக்க வஹ்ச்சதுக்கு நன்றி

    ReplyDelete
  3. எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. மனோ நான் இன்னமும் செல்விகாளிமுத்து என்று அப்பா பெயரைச் சேர்த்துதான் எழுதுவேன்?ஏன் என்ன தவறு?பெயர் வச்சது அப்பாதானே?கணவர் இடையில்வந்தவர்..அதான் அவர் கட்டிய தாலியைச் சுமந்துகொண்டு திரிகிறோமே?

    ReplyDelete
    Replies
    1. தந்தையா...? கணவரா...? ஒரு பதிவு போட்டு விடுவோம்...!

      Delete
    2. dd க்கு ஒரு பதிவு தேறிடுச்சு போலேயே.. ;-)

      Delete
  5. குழந்தைகளுக்காக ஒருமுறை பார்க்கலாம் - ஆனால் அவர்களை சமாதானம் செய்ய வேண்டும்...!

    ReplyDelete
  6. இந்த படத்த தியேட்டர் போயி பார்க்கும் எண்ணம் இன்னும் வரல... உங்க விமர்சனங்கள வாசித்தே, படம் மொக்கைன்னு மைன்டுல ஓயக்ஸ் ஆயிருச்சு..

    ReplyDelete
  7. புட்டு புட்டு வச்சிட்டீங்க அண்ணே!

    ReplyDelete
  8. கலக்கீட்டீங்க போங்க! நான் இன்னும் பார்க்கலை!

    ReplyDelete
  9. என்னது நாலே பேரா? எப்படி அவனுகளுக்கு கட்டுபடியாகுது? நம்மூர்னாலாவது அல்லக்கை மன்றங்கள் காசு கொடுத்து ஓட்டுதுன்னு சொல்லலாம்... அங்க எப்படி?

    ReplyDelete
    Replies
    1. இதைதான் விஜயனும் கேட்டாரு, வேலை நாளானதால் யாரும் வரலை போல ஒருவேளை ஈவ்னிங் ஷோ மற்றும் இரவு ஷோ பார்க்க ஆள்கள் வந்துருக்குமோ என்னமோ ?

      Delete
  10. ஆஹா நான் இன்னும் பார்க்க வில்லை ஓட்டம் தான் எடுக்கணுமா கல்லு அருவாள் வேண்டாமா!ஹீ

    ReplyDelete
  11. வேலை நாட்களில் தில்லி திரையரங்குகளிலும் இதே நிலை தான் - அது என்ன படமாக இருந்தாலும், யார் நடித்த படமாக இருந்தாலும்.... சனி ஞாயிறில் கொஞ்சம் கூட்டம் இருக்கும்.

    நல்ல விமர்சனம். இது வரை படம் பார்க்கலை!

    ReplyDelete
  12. Our visyam pudhusaa vandha adha nakkal pannradhukune our koottam alaiyudhu,hollywoodla 1000 mistakes oda padam eduthalum kurai solla maatinga,namma aal pudhu muyarchi edutha mattam thattiye kaanaama poga vachuduvinga....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!