Monday, August 18, 2014

பாசம் என்பது யாதெனில்...!

நானும் நண்பனும், நண்பனின் அண்ணனும் என் அண்ணனும்...
ஒரு நன்னாளில் [[அப்போ]] ராத்திரி சரக்கு வாங்கி வந்து பாழடைந்த பங்களாவில் வெள்ளாவி ஆரம்பிக்க...ஆரம்பம் முதலே அந்த அண்ணன் தம்பிங்கதான் பேசிட்டே இருந்தாங்க, இவன் அவனை புகழ்றான் அவன் இவனை புகழ்றான்...

எங்க அண்ணன் எனக்கு கண்ணை காட்டிட்டானா...ஆட்டம் முடியுற வரைக்கும் பாசத்தை பொழிஞ்சுட்டு போனாங்க...

அடுத்தநாள் மத்தியானம் நாகர்கோவில்ல போயி ஒரு சினிமா பார்த்துட்டு பைக்கில் வரும் வழியில் வடக்கு தாமரை குளம் பக்கமாக பைக்கில் வந்த நண்பனின் அண்ணன்காரன் என்னை நிறுத்தும் படி சைகை காட்டினான்,

மண்டை வாயிலெல்லாம் ரத்த காயம்...

"அவனெல்லாம் ஒரு மனுஷனாடே ?"

"யாருண்ணே ?"

"ஒங் கூட்டுகாரன், [[தம்பி]] நேற்று ராத்திரியே அவன் பொண்டாட்டிகிட்டே போட்டு குடுத்துட்டான், அவ வந்து என் பொண்டாட்டி கூட மல்லுக்கு நிக்கா ?"

"சரி என்னத்த போட்டு குடுத்தான் ?"

"ட்வ்க்ப்வ்க்ட்ப் எஹெஹ் எப்ஜ்வேர் ஜெப்ப்கே"

"ஓகே ஓகே திட்டாதீங்க..."

"அவனை கொல்லாம விட மாட்டேன் போயி சொல்லிரு" போயிட்டார்.
சரி அண்ணன்காரனுக்கே இப்பிடி மண்டை வீங்கி இருக்கே தம்பிகாரனை போயி பார்ப்போம்ன்னு போனா...அங்கேயும் செம் பிளட்...மண்டை வீங்கி காயங்களுடன்..அவனிடம் கேட்டாலும் அண்ணன்காரன் சொன்ன அதே டையலாக்..."அவன் ஒரு மனுஷனாடே ?"

கடைசிவரை ரெண்டு பயபுள்ளையும் உண்மையை சொல்லல.

எங்க அண்ணன்கிட்டே வந்து கேட்டேன் என்னாச்சுன்னு "சின்னவன் அவன் பொண்டாட்டிகிட்டே எங்க அண்ணன் உங்க குடும்பத்தை "..." இப்டி திட்டினான்னு சொல்ல, காலையிலேயே பொண்டாட்டியும் பொண்டாட்டியும் சேலையை கிழிச்சு, இவனுகளையும் கட்டி உருள வச்சிட்டாங்க..."

"மரியாதையா நீ மும்பைக்கு பெட்டியை கட்டு போலீஸ் கீலிஸ் வந்துச்சுன்னா வெளிநாட்டு காரன்னு உன்னை பிடிச்சு வச்சு காசை புடுங்க போறானுக"

எனக்கு அண்ணனும் நண்பனும் எங்க அண்ணன்தான், சுள்ளான் மாதிரிதான் இருப்பான் ஆனாலும் பக்கத்துல நிக்க பயமா இருக்கும், படார் படார்ன்னு அடிச்சிருவான், இப்பவும்...

கல்யாணம் கட்டி குழந்தை பிறந்து குழந்தை சைக்கிள் படிச்சிட்டு இருக்கும் போது [[மும்பையில் இருந்து ஊர் போனபோது]] ஒரு சண்டையை விலக்கு பிடிக்க போனபோது, "எலேய் போவாத போவாத"ன்னு சொல்லியும் கேக்காம போனதுக்கு...

எங்க மாமியார் மனைவி முன்னிலையில் எனக்கு அடி விழுந்துச்சு பாருங்க, ரெண்டு பேரும் மிரண்டு போயிட்டாங்க, இம்புட்டுக்கும் மும்பைல நம்ம ஏரியாவையே அடங்க வச்ச இவனான்னு இப்பவும் சொல்வாங்க ஹி ஹி...

என்னமோ அண்ணன் அடிச்சா எனக்கு வலிக்கிறதே இல்லை, சின்ன பிள்ளையில இருந்து பழக்கமாகிருச்சு, சின்ன பிள்ளையில எங்கே போனாலும் என் கையை பிடிச்சுதான் கூட்டிட்டு போவான், என்னைவிட மூன்று வருஷம் மூத்தவன்.

ஆனால் எங்க அக்காவை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது, விவரம் தெரியும் வரையில், அவனுக்கும் மூத்தவள் அக்கா..அக்காவை என்னை தொடவே விடமாட்டன், அடிதான்...!

எப்பவும் அண்ணன் கூடவே இருக்கணும் போல இருக்கு, ஒரு கவலை இல்லாமல் அவன் கூட இருக்கலாம்...

ஐ மிஸ் யூ அண்ணே...

8 comments:

  1. இந்த சின்ன பதிவுலையே ஒரு கே.எஸ் ரவிக்குமார் படம் பார்த்த பீல் அண்ணே..! :)

    ReplyDelete
    Replies
    1. அட ஆமால்ல ஹா ஹா ஹா ஹா...

      ஒரு காதலையும் சேர்த்தாச்சுன்னா ஒரு சினிமா ரெடி...இதுக்கு எதுக்குய்யா மூணு மாசம் ரோசிக்கணும் செங்கோவி ?

      Delete
  2. வணக்கம்
    பாச உறவைப்பற்றி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஆவி சொன்னாப்புலதான்

    ஆஹா மக்கா நம்மூரா...நாரோயில்ல எந்தப் பக்கம்? சாமித்தோப்பு பக்கம்மா, சுசீந்திரம் பக்கமா....நம்மளும் நாரோயில்ல...அதான்... ....

    ReplyDelete
  4. பாசமுள்ள நினைவுகளின் சிறப்பே தனிதான்! நன்றி!

    ReplyDelete
  5. பாசக்கார அண்ணா நெகிழ்ச்சியான பகிர்வு.

    ReplyDelete
  6. நெகிழ்ச்சியான பதிவு நண்பரே

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!