ஒருநாள் நாகர்கோவிலுக்கு போகும் போது, வழுக்கம்பாறைக்கும் சுசீந்திரம் பாலத்திற்கும் நடுவே ஆணை பாலம்ன்னு ஒரு பாலம் வரும், அதை சற்றே கடந்தால்...அம்மி, உரல், சிலைகள் கல்லினால் செய்துகொண்டே விற்பனையும் செய்கிறார்கள்.
அங்கே வீட்டம்மாவுக்கு ஒவ்வொன்றுக்குமாக விளக்கம் கொடுத்தேன்...ஆச்சர்யமாக பார்த்தவள்...படத்திலிருக்கும் சின்ன உரலை கேட்க...நான் மறுத்துவிட்டேன், "நீதான் இதை உபயோகிக்க மாட்டாய்ன்னு எனக்கு தெரியும் அதனால் வேண்டாம்"ன்னு சொல்லிட்டேன்.
முறுமுறுத்துக் கொண்டே வந்தவள்...இல்ல மாமா நான் இதை கண்டிப்பா உபயோகிப்பேன்னு சொல்லிகிட்டே வந்தாள்...
பலநாள் கழித்து அந்த வழியாக வந்தவன், ஆசை பட்டாளேன்னு வாங்கிக்கொண்டு போய் கொடுத்தேன்...
மறுமுறை லீவுக்கு வந்தபோது நான் சொன்ன மாதிரியே பரண்ல கிடந்துச்சு, கையில எடுத்து திட்டிகிட்டே...சமையல் செய்யும் போது, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, வெங்காயத்தையெல்லாம் மிக்சில போட்டு ஆட்டாம இதுல செஞ்சுப்பார் குழம்பு ருசியாக இருக்கும்ன்னு செஞ்சு காட்டி குடுத்தேனா...
அடுத்தமுறை ஊருக்கு வந்தபோது, இஞ்சி, பூண்டு மட்டும் இடிக்க கண்டேன் ஜாமி, ஏதாவச்சும் சொல்லப்போயி அருவாளை தூக்கிருவாங்கன்னு இப்போ பயம் கொஞ்சம் கூடிப்போச்சு.
//ஏதாவச்சும் சொல்லப்போயி அருவாளை தூக்கிருவாங்கன்னு//
ReplyDeleteஎதுக்குயா அருவளா தூக்கிட்டு.
அந்த உரலாலயே மண்டை ல ஒரு இடி.
அப்புறம் ஏதாவது சொல்லணும்னு தோணுமாக்கும்