Monday, June 13, 2011

மும்பை ஏர்போர்ட்

நான் மும்பை சர்வதேச ஏர்போர்டில் வேலை செய்து கொண்டிருந்த நேரம். நம்ம வைகோ'வின் தம்பி முறையில் ஒருவர்தான் ஏர்போர்ட் மேனேஜரா மும்பை ஏர்போர்ட்டை கலக்கிட்டு இருந்தார். பெயர் நியாபகம் இல்லை [[கோபால் மூர்த்தி'ன்னு நினைக்கிறேன் ]] அங்கே ரெண்டாவது மாடியில்தான் நான் வேலை செய்து கொண்டிருந்தேன்.

ஒரு நாள் நானும் நண்பன் சண்முகமும் [இவன் இப்போ எங்கே இருக்கான்னே தெரியலை] வேலைக்கு போக லிஃப்ட் வர காத்திருந்தோம் கிரவுண்ட் ஃப்ளோரில், சற்று தாமதம் ஆகியது அதே நேரம் ஒரு வாட்ட சாட்டமாக ஒரு நீக்ரோ வந்து அவரும் லிஃப்ட்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தார் எங்க கூட, லிஃப்ட் வந்தது மூணு பேரும் ஏறிக்கொண்டோம்.

என் நண்பன் சற்று குறும்புக்காரன், அவன் நீக்ரோவின் உடம்பு விறைப்பை கண்டுவியந்தவனாக  நீக்ரோவின் கையை லேசாக அமுக்கி பார்த்து விட்டு என்னிடம் சொன்னான், என்னா தண்டிலே இவன் கையின்னு, அவ்வளவுதான் நம்ம நீக்ரோ அண்ணாச்சி அவர் ரெண்டு கையையும் மடக்கி காட்டிட்டு சொன்னார் "இப்ப என்ன செய்யணும்"ன்னு, அதுவும் பச்சை தமிழில்........

எங்க ரெண்டு பேருக்கும் குலை நடுங்கி போச்சு, அதற்குள் பர்ஸ்ட் ஃப்ளோர் வர செக்கன்ட்  ஃப்ளோர் போகவேண்டிய நாங்க பர்ஸ்ட் ஃப்ளோர்லையே அலறியடித்து வெளியேறி டிப்பாச்சர் ஏரியாவுக்கு வந்து சிரி சிரி என சிரித்தோம் காரணம் நம்ம நீக்ரோ தமிழ் பேசியது!!! 

நாங்க சிரிப்பதை பார்த்த பிரயாணிகள் எங்களை விநோதமாய் பார்க்க அருகில் இருந்த போலீஸ் அண்ணாச்சி [அவருக்கு எங்களை தெரியும்] எங்களை துரத்த நாங்க படி வழியா ஏறி மேலே ஓடினோம், அங்கே போயும் சிரிப்பு அடங்கலை.....

கொஞ்சம் ஆசுவாச படுத்திட்டு அப்புறமாதான் ரோசிச்சொம் இவனுக்கு தமிழ் எப்பிடி தெரிஞ்சதுன்னு.... மக்கா அவனை பாத்து கேட்டே ஆகணும்னு ரெடி ஆனோம் அந்த நீக்ரோ கையில இருந்த ஏர் டிக்கெட் கே எல் எம் ஏர்வேஸ்.. ஓடினோம் அந்த போர்டிங் கார்ட் வாங்குற இடத்துக்கு. 

ஆளைக்காணோம் அங்கும் இங்குமாக அலைந்து அண்ணாச்சிய கண்டே பிடிச்சுட்டோம்!!
    
ஒரு பேங்க் கவுண்டர் பக்கம் உள்ள சேரில் அமர்ந்துருந்தார் அமைதியாக... அந்த சேர் மூன்று பேர் அமர கூடிய இருக்கை ஆகும். நாங்களும் மெதுவாக அவர் அருகில் போனோம்.... நல்லா ஜாலியான மனுஷன் போல அவரே கேட்டார், நீங்க தமிழா'ன்னு, பதில் சொல்லாம[ஆச்சரியத்தில்]மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சோம்.... 

அவர் ஓ சாரின்னுட்டு புக் படிக்க ஆரம்பிச்சார்... பிறகு நாங்க ஆமாம்  நாங்க தமிழ்தான் என சொல்ல...சாதாரண நல விசாரிப்புகள்...நடந்தது தமிழில்.....!!! 

பிறகுதான் கேட்டோம் உங்களுக்கு தமிழ் எப்பிடி தெரியும்னு....அவர் சொன்னார் மதுரை உசிலம்பட்டி அரசியல்வாதி  [பெயர் மறந்துடிச்சு] ஒருவரின்  அக்காவுக்கு பாடிகார்டா இருந்தாராம்!!!! இவர் மட்டும் இல்லையாம் இன்னும் மூணு பேர் வேலை செய்யுறாங்கன்னு சொன்னார்....

இன்னும் நிறைய பேசினார்.
அவர் அழகிய தமிழில் பேசியது அருமையாக இருந்தது....ம்ஹும் எந்த நாட்டுகாரனா இருந்தா என்ன அவர்கள் தமிழ் பேசினால், 
என் உயிர் தமிழ் மணக்கவே செய்கிறது இல்லையா...கடைசிவரை அவருடன் இருந்து வழி அனுப்பினோம்.


டிஸ்கி : டியூட்டிக்கு போயி மேனேஜர்ட்ட வாங்கி கட்டினது வேற [லேட்] விஷயம்..

டிஸ்கி : இது ஒரு மீள்பதிவு.
டிஸ்கி : எலேய் சிபி, அண்ணன் ரயில் பயணத்தில் இருந்துட்டு இருக்கேம்லெய் அதான் ஒரு மீள்பதிவு போட்டு இருக்கேன் ம்ஹும்...[[விக்கி அண்ணன் வாழ்க]]

டிஸ்கி : புது லேப்டாப்ல படம் எடுக்க லேட்டாவுது ஹி ஹி ஹி அதான் படம் போடலை....!

டிஸ்கி : தலைப்பை பார்த்து புதுசா எதோ எழுதி இருக்கான்னு நெனச்சி உள்ளே வந்தீங்கன்னா ஹி ஹி சாரி, அடுத்து எழுதுறேன், நான் மும்பை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும் ஏர்போர்ட் எப்பிடி அலறுச்சின்னு ஹா ஹா ஹா ஹா....

132 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. யார்லே அது டிபன் சாப்பிடும்போது அருவா கொண்டுவர்றது?

  ReplyDelete
 3. கொத்து பரோட்டா

  ReplyDelete
 4. அப்பாடா காலையில வயிறு நிரம்பிட்டு.
  மிக்க சந்தோசம்.

  ReplyDelete
 5. லாலி பாப்பா? அப்ப மிட்டாய்

  ReplyDelete
 6. அண்ணே கருண் அண்ணே அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.......

  ReplyDelete
 7. MANO நாஞ்சில் மனோ said...

  அண்ணே கருண் அண்ணே அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.......// உங்களுக்கு ஜாங்கிரி ..

  ReplyDelete
 8. அடபாவிகளா நீங்கெல்லாம் காலையில பல்லு தேச்சீங்களா இல்லையா...?

  ReplyDelete
 9. சூரியன் எப் எம்

  ReplyDelete
 10. ஏலே மக்கா இதெல்லாம் பதிவர் சந்திப்புக்கு வரும்போது வாங்கிட்டு வரணும்.. சரியா?

  ReplyDelete
 11. ஆப்பிரிக்கச் சகோதரன் பேசிய தமிழ் கேட்டு, சிரி சிரி எனச் சிரித்த நம்ம சகோவின் அனுபவப் பகிர்விற்கு நன்றி..

  ReplyDelete
 12. டேய் மனோ.. உன்னை மாப்ளை கருணும், பிரகாஷூம் நல்லா பழி வாங்கிட்டாங்கடா..

  ReplyDelete
 13. enna nadakuthu enga?????avvvvvv

  ReplyDelete
 14. சி.பி.செந்தில்குமார் said...
  டேய் மனோ.. உன்னை மாப்ளை கருணும், பிரகாஷூம் நல்லா பழி வாங்கிட்டாங்கடா..//  dey மூதேவி அதை நீ சொல்லி vera kaadduruyaa.....

  ReplyDelete
 15. சிங்கம் களம் இறங்கிடிச்சி...

  ReplyDelete
 16. மலரும் நினைவுகள் எப்போதும் சுகமாய் இருக்கும்

  ReplyDelete
 17. நான் தான் ஏழாவது ஒட்டு ........

  ReplyDelete
 18. 111 கமெண்ட்னு பார்த்தா இது நாமத்தின் சிம்பிளால இருக்கு... எங்க அண்ணனை ஏம்பா.. இப்படி சீக்கிரமா பிரபலமாக்குறீங்க... ஹி..ஹி..ஹி... யாரும் பதிவ படிச்சதா தெரியல...!! அண்ணே அலர்ட்டா இருங்க...! ஹி..ஹி..

  ReplyDelete
 19. நம்ம ஊர்ல இப்போ பொறந்த குழந்தை கூட மம்மினுதான் சொல்லுது. நாம்தான் தமிழ் பேசுவதை குறைத்துவிட்டோம், தமிழ் தெரிந்த மற்ற மொழிக்காரர்கள் நம்முடன் அதிலேயே பேசுகிறார்கள்.

  ReplyDelete
 20. ஏன்யா ஊருக்கு வந்து சேந்தியே ஒரு போன் பண்ணியா ராஸ்கல்!

  ReplyDelete
 21. ///இன்னும் நிறைய பேசினார்.
  அவர் அழகிய தமிழில் பேசியது அருமையாக இருந்தது....ம்ஹும் எந்த நாட்டுகாரனா இருந்தா என்ன அவர்கள் தமிழ் பேசினால்,
  என் உயிர் தமிழ் மணக்கவே செய்கிறது இல்லையா/// எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது, ஆனா அழகு தமிழ் பேசியது நீக்குரோ இல்ல வெள்ளைகாரி ...)))

  ReplyDelete
 22. தலைப்பை பார்த்து புதுசா எதோ எழுதி இருக்கான்னு நெனச்சி உள்ளே வந்தீங்கன்னா ஹி ஹி சாரி, அடுத்து எழுதுறேன், நான் மும்பை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும் ஏர்போர்ட் எப்பிடி அலறுச்சின்//
  hahaa எதிர்பார்க்கிறோம் வருக வருக...

  ReplyDelete
 23. கவிதை வீதி # சௌந்தர் said...
  சிங்கம் களம் இறங்கிடிச்சி.///


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

  ReplyDelete
 24. பிரவின்குமார் said...
  111 கமெண்ட்னு பார்த்தா இது நாமத்தின் சிம்பிளால இருக்கு... எங்க அண்ணனை ஏம்பா.. இப்படி சீக்கிரமா பிரபலமாக்குறீங்க... ஹி..ஹி..ஹி... யாரும் பதிவ படிச்சதா தெரியல...!! அண்ணே அலர்ட்டா இருங்க...! ஹி..ஹி.//

  தம்பி அண்ணன் உஷாராகிட்டேன்...

  ReplyDelete
 25. ஐயோ....ஐயோ....சிரிப்பு அடக்க முடில பதிவை விட பின்னூட்டங்கள் !

  ReplyDelete
 26. ஆஃபிரிக்கர்களுக்கு இயல்பாகவே தமிழ் ஈசியாக வருமாம் மனோ! இங்கும் பலர் தமிழ் பேசுவார்கள்! அதிசயமாக இருக்கும்!

  ReplyDelete
 27. உங்க பதிவை விட பின்னூட்டங்களை ரசித்தேன்..

  ReplyDelete
 28. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
  மேலும் விபரம் அறியவும்....
  இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
  எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

  ReplyDelete
 29. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
  மேலும் விபரம் அறியவும்....
  இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
  எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

  ReplyDelete
 30. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

  ReplyDelete
 31. நடத்துங்க நாடகத்தை!

  ReplyDelete
 32. செம காமெடிதான்

  ReplyDelete
 33. ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
  மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

  ReplyDelete
 34. //நாங்க சிரிப்பதை பார்த்த பிரயாணிகள் எங்களை விநோதமாய் பார்க்க அருகில் இருந்த போலீஸ் அண்ணாச்சி [அவருக்கு எங்களை தெரியும்] எங்களை துரத்த நாங்க படி வழியா ஏறி மேலே ஓடினோம், அங்கே போயும் சிரிப்பு அடங்கலை.....//செம காமெடிதான்

  ReplyDelete
 35. உங்க அப்டேட்ஸ் என் டாஷ் போர்டில தெரியுதில்ல பாஸ்! அதான் எப்பவும் லேட்! :-(

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!