Sunday, January 3, 2021
ஆட்டோ சங்கர் 2
By வரலாறு சுரேஷ்
ஆட்டோ சங்கர்
நாள் 2
நாளுக்கு நாள் ஆட்டோ தொழில் போரடித்த நிலையில் சாராயம் கடத்துவதில் ஈடுபட்டான். தமக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால் அதனைக் கொண்டு சாராய வியாபாரிகளிடம் நட்பு வளர்த்து கொண்டான். திருவான்மியூரில் இருந்து கோவளம் கடற்கரைக்கு சாராயம் கடத்தினால் கிடைக்கும் வருமானம், பல மடங்கு அதிகம் இருந்ததால் அந்த தொழிலையே பிரதான தொழிலாக மேற்கொண்டான். இருபத்து நான்கு மணி நேரமும் கையில் பணம் புரண்டதால் முழு குடிகாரனாக மாறியிருந்த சங்கருக்கு நாளடைவில் பெண்கள் சமாச்சாரமும், அதனைத் தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழில் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தான் சங்கர். முக்கிய பிரமுகர்களுக்கு பெண்களை அனுப்பும் போது, அவர்களுக்கு தெரியாமலேயே அதனை வீடியோ எடுத்து கிடைக்கும் சமயத்தில் அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டான். ஆட்டோ தொழிலை நிறுத்திய பின்னரும் இவனுடைய அடையாளமாக இருந்தது ஆட்டோ எனும் அடைமொழி. அந்த பெயரை கேட்டால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு ஒரு உருவம் மனதுக்குள் வந்து போகும் அளவுக்கு தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருந்தான் சங்கர். ஆகவேதான் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பெரிய புள்ளிகள், காவல் அதிகாரிகளை கவனித்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கொண்டான் . இது போதாதென்று ஏழை குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டுவது உள்ளிட்ட சில நல்ல காரியங்களையும் செய்து கொண்டிருந்ததால், அந்த சமயத்தில் காணாமல் போன மூன்று பேர் குறித்து ஆட்டோ சங்கரிடம் விசாரிக்க போலீசார் யோசித்தனர்.
ஒரு வழியாக சங்கரை நெருங்கிய போலீசார், காணாமல் போன மூவரும் கடைசியாக உங்கள் வீட்டுக்குத்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் சொல் என்கிறார்கள். அதற்கு ஆட்டோ சங்கர், "அப்படியா? எனக்கு தெரியாதே.. அப்படி யாரும் இங்கு வரவில்லையே" என்று கொஞ்சமும் பதட்டமில்லாமல் கூறி வைத்தான். ஆனால், போலிஸாருக்கு சந்தேகம் என்னவோ ஆட்டோ சங்கரின் மேல்தான்....
நாளை...
Subscribe to:
Post Comments (Atom)
கொலை விடாது துரத்தும் பாவச்செயல் என்ற ஆன்றோர் வாக்கு போல!
ReplyDelete